Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்புள்ள பரிமளம் அறிவது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்ட அண்ணா, அண்ணி பரிமளத்தை தவிர வேறு ஒரு பொண்ணையும் ஏறெடுத்து பார்க்க மாட்டார் 

 

  • Replies 294
  • Views 47.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

என்ட அண்ணா, அண்ணி பரிமளத்தை தவிர வேறு ஒரு பொண்ணையும் ஏறெடுத்து பார்க்க மாட்டார் 

 

பெண் ஆ பொண் ஆ.....

என்ன அக்கோய் இன்றைக்கு அடிக்கடி றோல் ஆகிறது......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 4/6/2019 at 9:32 PM, ரதி said:

ஊர்க் கொசிப்😂 எல்லாம் கடிதம் மூலம் கேக்கிற பழக்கம் இருந்திருக்கு 
 

அந்தக்காலத்திலை வேலிக்காலை கதைக்கிறதை விட கடிதங்களிலை தான் அந்தமாதிரி சுவாரசியமான கொசிப்புகள் இருக்கும்..🤣

On 4/6/2019 at 5:26 AM, ஈழப்பிரியன் said:

இதோட காச்சல் நின்று வயித்தால அடிக்க தொடங்கியிருக்குமே?

வசந்தியின் எண்ணமும் தலைகீழாகியிருக்குமே?

அதென்ன வசந்தியின் எண்ணம்? அப்பிடியென்ன கெட்டதை சொல்லிப்போட்டன்?:grin:

On 4/6/2019 at 5:52 AM, ராசவன்னியன் said:

தடுமாறும் கு.சா பற்றி மிகச் சரியான அவதானிப்பும்,  அவரின் துரோக(?)  சிந்தனைக்கு ஏற்றாற்போல் பரிமளத்தின் எதிர்வினையும், கோபமும் மிக நியாயமானதுதான்..! 😋

 

என்ரை உதவிமனப்பான்மையை புரிஞ்சு கொள்ளுறீங்களே இல்லையப்பா 😃

On 4/10/2019 at 1:29 AM, நிலாமதி said:

பரிமளம் அண்ணியை நேர காலத்துக்கு கூப்பிடுற வேலையை பாருங்கோ   அண்ணே 

போட்ட கடிதங்களுக்கு பதில் போடாட்டில் என்னெண்டு கூப்பிடுறதாம்......😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 4/10/2019 at 4:05 AM, தனிக்காட்டு ராஜா said:

வெட்டுனா அந்த தல எனக்கு  என்று சொல்லி போடுவம் 

அதை வைச்சு என்ன செய்யப்போறீங்க சார்? :grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 4/10/2019 at 5:38 AM, ராசவன்னியன் said:

Kv-5.png

'பரிமளம் அம்மணி' படிச்ச கரணவாய் ஸ்கூலு இதுதானா..? :innocent:

சிறிய கிராமமானாலும் பரவாயில்லை, துணிச்சலான பெண்மணியாகத்தான் வளர்த்திருக்கு..! :)

சா...பழசையெல்லாம் ஞாபகப்படுத்தி கொன்னுட்டீங்க.....ஒரு நாளைக்கு ஆயிரம் தடவை போய் வந்த றோட்டு எல்லோ....😁

Vadivelu in disguise to charm girls - Aaru erosnow, tamil, kollywood, movie, indian, films, Aaru, Aru, Aaru movie, Aru movie, Aaru tamil movie, hd, Vadivelu, scene, scenes, comedy, humour, jilla GIF

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

துர்க்கை அம்மன் துணை.

கச்சேரி
யாழ்ப்பாணம்
06.06.1983

அன்புள்ள குரு அறிவது!

                                                    நான் நற்சுகம்.அது போல் நீங்களும் சுகமாயிருக்க துர்க்கை அம்மனை வேண்டுகின்றேன்.

உங்கள் கடிதங்கள் கிடைத்தன. இரண்டு போட்டோக்களையும் பார்த்தேன்.

யார் அந்த வெள்ளைக்காரி? மற்றப்போட்டோவில் நிக்கிறது யார்?  சிலோன் ஆளோ?

அண்ணாவும் வெளிநாடு போகப்போறன் என சொன்னார்.அண்ணா உங்கடை ஐயாவோடை அக்கா பரிமளம் சம்பந்தமாய் ஏதோ பிரச்சனைப்பட்டவராம்.என்ன பிரச்சனையெண்டு எனக்கு தெரியாது.எனக்கு சொல்லவும் மாட்டினம். அக்காவுக்கு புன்னாலைகட்டுவனிலையிருந்து ஒரு கலியாண பேச்சுக்கால் வந்தது. நல்ல இடமெண்டு புரோக்கர் சொன்னவராம். நேற்று கலியாணபேச்சு முடிவு கேக்க புறோக்கர் வந்தவர். புரோக்கரை கண்டவுடனை அக்கா  யாருக்கும் தெரியாமல் கடியன் கறுவலை அவிட்டுவிட்டா....அது அவர்ரை காலை கடிச்சுப்போட்டுது.ஐயா ஒரு மாதிரி புரோக்கரை சமாளிச்சு அனுப்பிப்போட்டார்.

எனக்கு கனடா அல்லது லண்டன் போகத்தான் விருப்பம்.இங்கேயும் கனடா லண்டனுக்குத்தான் நல்ல மதிப்பு.ஏஜன்சியும் அந்த இரண்டு நாட்டுக்குத்தான் கூட காசு கேட்கின்றார்கள்.முடியாவிட்டால் முதலில் ஜேர்மனிக்காவது வரலாம் என்றிருக்கின்றேன்.

இந்த வெளிநாடு விசயமாக நான் இன்னும் வீட்டில் கதைக்கவில்லை. அம்மாவுடன் முதலில் கதைத்தால் எல்லாம் சரிவரும் என நினைக்கின்றேன்.அம்மா ஓம் என்று சொன்னால் வீட்டில் ஒருவரும் மறுபேச்சு பேசமாட்டார்கள் என்பது உங்களுக்கு தெரிந்தது தானே.

உங்கள் பதில் கடிதம் கண்டு வெளிநாடு போவது பற்றி வீட்டில் கதைக்கலாம் என்றிருக்கின்றேன்.

அக்காவுக்கு ஒரு கடிதம் போடவும்.

வைரவர் கோவில் மடை நடந்தது.உங்கடை ஐயாதான் முன்னுக்கு நின்று செய்தவராம்.இந்தமுறை பலி குடுக்கக்கூடாதெண்டு ஆரோ வந்து சொன்னவையாம்.அதாலை இனிமேல் பலி குடுக்க மாட்டினமாம்.நல்ல விசயம் தானே.

வேறு புதினமில்லை. இத்துடன் முடிக்கின்றேன். பதில் கடிதம் போடவும்
இப்படிக்கு
அன்பு வசந்தி

  • கருத்துக்கள உறவுகள்

"முந்தி வந்த செவியை பிந்தி வந்த கொம்பு" மறைத்த மாதிரி குருவின்ர காதலிக்கு கடிதம் போடச்சொல்லி இந்த வசந் தீ   பத்த வைக்குது.......!   👍

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாளுக்கு ஏனிந்த வேலை!, வெள்ளைக்காறியோட நிக்கிற படத்தை அனுப்பியிருக்கு. அவாக்கு தெரிஞ்சால் அதோ கதி தான்!

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ஏராளன் said:

இந்தாளுக்கு ஏனிந்த வேலை!, வெள்ளைக்காறியோட நிக்கிற படத்தை அனுப்பியிருக்கு. அவாக்கு தெரிஞ்சால் அதோ கதி தான்!

எவவுக்கு??? வெள்ளைக்காறிக்கோ??😀

  • கருத்துக்கள உறவுகள்
On 4/14/2019 at 10:06 AM, குமாரசாமி said:

புரோக்கரை கண்டவுடனை அக்கா  யாருக்கும் தெரியாமல் கடியன் கறுவலை அவிட்டுவிட்டா.

வெளிநாட்டு கடுவனை மடக்க ஊர்கடுவனை அவிட்டுவிட்டிருக்கினம்
 

  • கருத்துக்கள உறவுகள்

கரணவாய்

'கரணவாய் அத்தானை'க் காணாத பரிமளத்தின் நாச்சிமார் கோவிலடியில் தேடல்..! :unsure:

 

 

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
On 4/13/2019 at 8:06 PM, குமாரசாமி said:

இந்த வெளிநாடு விசயமாக நான் இன்னும் வீட்டில் கதைக்கவில்லை. அம்மாவுடன் முதலில் கதைத்தால் எல்லாம் சரிவரும் என நினைக்கின்றேன்.அம்மா ஓம் என்று சொன்னால் வீட்டில் ஒருவரும் மறுபேச்சு பேசமாட்டார்கள் என்பது உங்களுக்கு தெரிந்தது தானே.

வீட்டுக்கு வீடு அம்மாள் ஆட்சி போல இருக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சன்னதியான் துணை

சிமோனா ஸ்ராச 24
முன்ஸ்ரர்
15.06.1983

என்ரை செல்லம் பரிமளம் அறிவது.

                                                                       நான் நல்ல சுகம். அதுபோல் நீங்களும் சுகமாயிருக்கு சன்னதியானை வேண்டுறன்.

எப்படியப்பா இருக்கிறீர்?💖

நான் இவ்வளவு கடிதம் போட்டும் ஏன் ஒரு பதில் கடிதம் கூட போடேல்லை.

அப்படி நான் என்ன பாவம் செய்தனான்.💔

ஒரு படம்  அதுவும் சும்மா பகிடிக்கு அனுப்பினனான். நான் அடுப்புக்கு முன்னாலை நிக்கேக்கை முதலாளி கமராவோடை வந்து என்னை    போட்டோ எடுக்கப்போறன் எண்டான் அந்தநேரம் பாத்து அவளும் ஓடிவந்து நிண்டாள்.அந்த போட்டோவைத்தான் உங்களுக்கு அனுப்பினனான். விசாபிரச்சனைக்கு தீர்வு எண்டு சும்மா ஒரு பகிடிக்கு  போட்டோவுக்கு பின்பக்கத்திலை எழுதினன். அதைப்போய் இவ்வளவு நாளும் தூக்கிப்பிடிச்சுக்கொண்டு திரியுறீர்.💐

இஞ்சை பாருமப்பா எங்கடை லவ் எவ்வளவு கால பழசு? உம்மை விட்டுட்டு நான் அங்காலை இஞ்சாலை மாறுவனே? நீங்களும் கொப்பரை மாதிரி  கிறுக்கு பிடிச்ச ஆள் எண்டு எனக்கு தெரியும். ஆனால் இந்தளவுக்கு நான் எதிர் பாக்கேல்லை.

நான் இஞ்சை வெளிக்கிடுறதுக்கு முதல் நாள் பின்னேரப்பார்  நானும் நீங்களும் துரவுப்புட்டிக்கு பின்னால நிண்டு கதைச்சதையெல்லாம் மறந்து போனியள் போலை கிடக்கு.உங்களோடை அந்த பின்நேர தருணத்தை நான் ஒவ்வொருநாளும் நினைத்து வாடுறன் தெரியுமே💞

உண்மையிலையே நீர் ஈவு இரக்கம் இல்லாத கல்நெஞ்சுக்காரியப்பா.

கந்தசாமி கோயில் திருவிழா இப்ப நடக்குமெண்டு நினைக்கிறன். போனவருசத்துக்கு அதுக்கு முதல் வருச வேட்டைத்திருவிழா ஞாபகமிருக்கோ..அதுதான் அந்த கச்சான் சுருள்.....😻

பின் பனங்காணியுக்கை கொண்டுவந்து தந்த கொழுக்கட்டை இப்பவும் என்ரை வாயிலை இனிச்சுக்கொண்டேயிருக்கு.  ❣️ கடியன் என்ன செய்யிறான்? அவன் இல்லாட்டில் எங்கடை சந்திப்புகள் பெரிய சோலியளிலை முடிஞ்சிருக்கும். 🐕  இருந்தாலும்  ஒருக்கால் கொண்ணரோடை கடியன் போகேக்கை கடியன் என்னைப்பாத்து வாலாட்டினது கொண்ணருக்கு இனி இல்லையெண்ட அவமானம். அதுக்குப்பிறகுதானே கொண்ணர் என்னை நோட் பண்ண வெளிக்கிட்டவர்.

சரி செல்லம்.கோவங்களை மறந்து இனியாவது கடிதம் போடுமப்பா....

.இஸ் லீப டிஸ்.💖

நான் இப்ப நல்லாய் ஜேர்மன் பாசை கதைப்பன். wie geht es dir mein schatz 💌

இத்துடன்
முடிக்கிறன்
அன்பு அத்தான் 💓

 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

ஒரு படம்  அதுவும் சும்மா பகிடிக்கு அனுப்பினனான். நான் அடுப்புக்கு முன்னாலை நிக்கேக்கை முதலாளி கமராவோடை வந்து என்னை    போட்டோ எடுக்கப்போறன் எண்டான் அந்தநேரம் பாத்து அவளும் ஓடிவந்து நிண்டாள்.அந்த போட்டோவைத்தான் உங்களுக்கு அனுப்பினனான். விசாபிரச்சனைக்கு தீர்வு எண்டு சும்மா ஒரு பகிடிக்கு  போட்டோவுக்கு பின்பக்கத்திலை எழுதினன். அதைப்போய் இவ்வளவு நாளும் தூக்கிப்பிடிச்சுக்கொண்டு திரியுறீர்.💐

ம்.நானும் பக்கத்து தோட்டத்து சந்திரனோடை நிண்டு ஒரு படம் அனுப்பினால் தாங்குவியளோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 minutes ago, ஈழப்பிரியன் said:

ம்.நானும் பக்கத்து தோட்டத்து சந்திரனோடை நிண்டு ஒரு படம் அனுப்பினால் தாங்குவியளோ?

வந்துட்டாங்கள்....கத்தி கடப்பாரை...அலவாங்கோடை  கிண்டிக்கிளற  வந்துட்டாங்கள். :grin:

Looking Vadivelu GIF - Looking Vadivelu Thalainagaram GIFs

  • கருத்துக்கள உறவுகள்

பழசெல்லாம் நினைவூட்டியா  இக்கடிதத்தை கண்டதும் கரையாத மனசும் கரைந்துவிடும் விரைவில் பரிமளம் அண்ணி கடிதம்   கிடைக்க வாழ்த்துக்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

...

ஒரு படம்  அதுவும் சும்மா பகிடிக்கு அனுப்பினனான். நான் அடுப்புக்கு முன்னாலை நிக்கேக்கை முதலாளி கமராவோடை வந்து என்னை    போட்டோ எடுக்கப்போறன் எண்டான் அந்தநேரம் பாத்து அவளும் ஓடிவந்து நிண்டாள்.அந்த போட்டோவைத்தான் உங்களுக்கு அனுப்பினனான். விசாபிரச்சனைக்கு தீர்வு எண்டு சும்மா ஒரு பகிடிக்கு  போட்டோவுக்கு பின்பக்கத்திலை எழுதினன். அதைப்போய் இவ்வளவு நாளும் தூக்கிப்பிடிச்சுக்கொண்டு திரியுறீர்.💐

...

( இங்கேதான் உள்ளுறைந்த ஆணாதிக்க சிந்தனை தலை தூக்குகிறது..! vil-down.gif

தான் எப்படியும் இருக்கலாம் ஆனால் பெண்கள் எல்லாவிதத்திலும் சுத்த பத்துமாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கும் ஆண்களின் அப்பட்டமான சுயநல நினைப்பை என்னவென்று சொல்வது..?   vil-bah.gif

கண்டணங்களை தெரிவித்துக்கொள்கிறேன்..! )  vil2_chut.gif

Empfehlung an Parimalam:   all-good.gif

"அம்மாடி பரிமளம், உந்தாள் உமக்கு சரிப்பட்டு வராது கண்டியளோ..?

 கொப்பர் பார்க்கும் பெடியனையே கட்டிக்கொள்ளம்மா..! " 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாள் கனவேலை பாத்திருக்கு! அதைச் சொல்லியே மருட்டி பாக்கிறார்.🤪

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

 

3

 

இஞ்சை பாருமப்பா எங்கடை லவ் எவ்வளவு கால பழசு? உம்மை விட்டுட்டு நான் அங்காலை இஞ்சாலை மாறுவனே? நீங்களும் கொப்பரை மாதிரி  கிறுக்கு பிடிச்ச ஆள் எண்டு எனக்கு தெரியும். ஆனால் இந்தளவுக்கு நான் எதிர் பாக்கேல்லை.

 

 


 

 

Résultat de recherche d'images pour "manorama memes gif"

பரிமளம் மைண்ட் வாய்ஸ் :  என்னையும் பழசு என்று சொல்லுறது போல கிடக்கு. அதாவது பரவாயில்லை, என்ர குடும்பத்தையே கிறுக்கு பிடித்த குடும்பம் என்று சொல்லுறாய். இரு மகனே, வந்து உனக்கு சுடுதண்ணியால ஊத்துறன்.....!   🤬

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சன்னதியான் துணை

சிமோனா ஸ்ராச 24
முன்ஸ்ரர்
15.06.1983

 

அன்புள்ள வசந்தி அறிவது!

                                                      நான் நல்ல சுகம்.நீங்களும் சுகமாயிருக்க எம்பெருமான் முருகனை வேண்டுறன்.

உங்கள் கடிதம் கிடைத்தது.வாசித்து மட்டில்லா மகிழ்ச்சியடைந்தேன்.

நான் அனுப்பின போட்டோவிலை இருக்கிறவ என்னோடை வேலை செய்யிறவ.நல்ல சீவன். என்ன உதவி கேட்டாலும் இல்லையெண்டாமல் உதவி செய்யும்.மற்றப்படத்திலை இருக்கிற பொடியன் சிலோன் பொடியன் தான்.ஊர்காவத்துறை பொடியன்.

கொண்ணர் ஐயாவோடை பிரச்சனைப்பட்டதெல்லாம் கேள்விப்பட்டன்.பரிமளத்தின்ரை பேச்சுக்கால் சறுக்கினதுக்கு நான் தான் காரணமெண்டு முறுகினவராம்.பரிமளம் ஓமெண்டால் கலியாணத்தை செய்து வைக்க வேண்டியது தானே.ஏன் என்ரை ஐயாவோடை கொண்ணர் புடுங்குப்பட வேணும்?

நீங்கள் வெளிநாடு வாறதெண்டால் வீட்டிலை கதைச்சு ஒரு முடிவை எடுங்கோ.நான் எல்லா உதவியும் செய்வன்.ஆனால் என்ரை பெயர் மருந்துக்கும் உங்கினேக்கை அடிபடக்கூடாது. பிறகு கன பிரச்சனை வரும்.உங்களுக்கு கனடாவிலை ஒரு சினேகிதி இருக்கிறமாதிரி கதையை பரவ விடுங்கோ.ஆரும் சந்தேகப்பட மாட்டினம்.இப்ப வாறதெண்டால் பேர்லினுக்கு நேரை வந்து இறங்கலாம்.போடர் இறுக்குவாங்கள் போலை கிடக்கு. சட்டுபுட்டெண்டு முடிவெடுங்கோ.திருப்பியும் சொல்லுறன் என்ரை பெயர் வெளியிலை வரக்கூடாது.பிறகு பெரிய வில்லங்கங்கள் வரும்.

வைரவர்மடை நடந்ததெண்டு  எழுதியிருந்தியள். உவன் சந்திரன் நாலு முழத்தை கட்டிக்கொண்டு அங்கையும் இஞ்சையும் ஓடி பெரிய சேக்கஸ் காட்டியிருப்பானே.அவனுக்கு நான் இல்லாதது.... தான் பெரிய கிங் எண்ட நினைப்பு.  தான் கொஞ்சம் வெள்ளைதோல் எண்டபடியாலை மன்மத குஞ்சு எண்ட நினைப்பு.என்னைப்பற்றி தெரியேல்லை அவருக்கு..

சரி வசந்தி கனக்க எழுதீட்டன் போலை கிடக்கு.வெளிநாட்டுக்கு வாற விசயமாய் ஒரு முடிவெடுங்கோ. நான் இருக்கிறன் ஒண்டுக்கும் கவலைப்பட வேண்டாம்.
பதில் கடிதம் போடுங்கோ.

இப்படிக்கு
அன்புடன்
குரு

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடக்குது எண்டு ஒண்டுமே புரியுதில்லையே?????🤔🥴

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

உவன் சந்திரன் நாலு முழத்தை கட்டிக்கொண்டு அங்கையும் இஞ்சையும் ஓடி பெரிய சேக்கஸ் காட்டியிருப்பானே.அவனுக்கு நான் இல்லாதது.... தான் பெரிய கிங் எண்ட நினைப்பு.  தான் கொஞ்சம் வெள்ளைதோல் எண்டபடியாலை மன்மத குஞ்சு எண்ட நினைப்பு.என்னைப்பற்றி தெரியேல்லை அவருக்கு..

இந்த பயம் எப்போதும் இருக்கணும்.

  • கருத்துக்கள உறவுகள்

வசந்தியை கூப்புடுவதில் தான் மும்முரமாக இருக்கிறியல். 

  • கருத்துக்கள உறவுகள்

பரிமளம் அம்மணி இப்போ எந்த ஊரிலை இருக்கிறார்களோ..? :(

தாய்நாட்டில வேறை கண்ட எடத்துல குண்டு, பெண்டு என சனம் அலறுது.. !  :shocked:

'சவுகிதார்' கு.சா அவர்களே, பரிமளத்திற்கு ஒரு வழி செய்யுங்கோ..! :)

உங்கள் கடிதங்களை தொடருங்கள்.  எங்கே சென்று முடியப்போகிறது என்றறிய ஆவல்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.