Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்புள்ள பரிமளம் அறிவது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 4/21/2019 at 3:58 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என்ன நடக்குது எண்டு ஒண்டுமே புரியுதில்லையே?????🤔🥴

இது கூட புரியாமாலா நீங்கள் அந்த  கச்சை கந்தனுக்கே வெளிச்சம் ரெண்டு பேருக்கும் மாறி மாறி எழுதியிருக்கார் கடிதம்  

  • Replies 294
  • Views 47.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கோ அண்ணா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தபால்கந்தோர்
கரணவாய்
24.06.1983

தம்பி குரு அறிவது!

                                          யான் நலம் வேண்டுவதும் அதுவே.

நான் முன்னர் ஒரு கடிதம் போட்டிருந்தேன் கிடைத்திருக்குமென்று நம்புகின்றேன். நீங்கள் கன நாட்களாக கடிதம் எதுவும் போடவில்லை. ஏன் ஏதும் பிரச்சனையா? வசந்தியிடமும் விசாரித்தேன். அவர் பதிலேதும் சொல்லாமல் சிரித்து விட்டு சென்றார்.

பரிமளத்தையும் குளத்தடியில் கண்டேன். எப்பிடி சுகமாய் இருக்கிறியளோ பிள்ளை எண்டு சுகம் விசாரிச்சன். ஓமண்ணை இப்ப அது மட்டும்தான் குறைச்சல் எண்டு வெடிச்சு விழுந்தா.....நான் அதுக்குப்பிறகு வாயே திறக்கேல்லை.

சிவத்தின்ரை மூத்த பெட்டை  சதாசிவத்தின்ரை பெடியனோடை ஒரு தொடர்பு இருந்ததெண்டு உங்களுக்கு தெரியும் தானே. இப்ப பெட்டை க்கு 7மாதமாம். சதாசிவத்தின்ரை பெடியன் அது தனக்கில்லையெண்டு ஊர்முழுக்க சொல்லிக்கொண்டு திரியிறானாம். பாவம் பெட்டை கலியாணம் கட்டாமல் அவசரப்பட்டுட்டு இப்ப அழுதுகொண்டு திரியுது.

பெட்டிசத்துக்கு மேலை பெட்டிசம் போட்டு தவறணையை வயல்கரைக்கு அங்காலை கொண்டு போட்டாங்கள்.சரியான தூரம். எண்டாலும் வாடிக்கையாளர் எக்கச்சக்கம் எண்டபடியாலை இப்பவும் களைகட்டுது.பெட்டிசம் போட்டது முழுக்க விநாயகத்தான் எண்டது எல்லாருக்கும் தெரியும்.தம்பி நீங்கள் இஞ்சை இருந்திருந்தால் விநாயகத்தானுக்கு கட்டாயம் இருட்டடி விழுந்திருக்கும் எண்டு எனக்கு நல்லவடிவாய் தெரியும்.

வட்டி வீரகத்திக்கு எட்டாவதும் பொம்புளைப்பிள்ளை தான் பிறந்திருக்கு. போனமாதம் தான் வீரகத்தியின்ரை மூத்த பிள்ளைக்கும் பொம்பிளைப்பிள்ளை பிறந்தது.கைலாயபிள்ளையின்ரை பெடியன் கள்ளக்கரண்டு எடுக்கேக்கை கரண்ட் அடிச்சு செத்துப்போனான்.அவனுக்கும் இப்ப 21 வயதாகுது.

பரமானந்தம் வாத்தியார் அங்கை பள்ளிகூடத்திலை ஆரோடையோ சேட்டை விட்டவராம். அவங்கள் அரோ அடி அடியெண்டு அடிச்சுப்போட்டாங்களாம். முகத்திலையும் கையிலையும்   சரியான காயத்தோடை திரியுறார். மனுசி விசாலாச்சி அவர் சைக்கிளாலை விழுந்துதான் காயமெண்டு சொல்லிக்கொண்டு திரியிறாவாம்.ஆனால் ஊர்ச்சனம் முழுக்களுக்கும் உள்ள விசயம் தெரியும்.

ஆறுமுகத்தார்ரை கடைசிக்கு லண்டன் மாப்பிளையை பேசி வைச்சிருக்கினம். சீதனம் எக்கச்சக்கம் எண்டு கேள்விப்பட்டன். லண்டன் மாப்பிளை எடுக்கிறது கஸ்டம் தானே. போனவருசம் தான் மாப்பிளை லண்டனுக்கு போனவராம். நல்ல இடத்திலை வேலை செய்யிறார் எண்டு கேள்விப்பட்டன்.

வேறு விடயங்கள் இல்லை.  உங்களிடமிருந்து எனக்கு ஒரு உதவி வேண்டும்.கேட்பது சரியோ பிழையோ தெரியவில்லை.நீங்கள் குறை நினைக்க மாட்டீர்கள் என நினைக்கின்றேன். எனக்கு கொஞ்ச பண உதவி வேண்டும்.பனங்காட்டுக்கு பக்கத்திலை  இன்னொரு வீடு கட்டினனான் உங்களுக்கு தெரியும் தானே. வீடு ஒரளவுக்கு கடவுளே எண்டு கட்டி முடியுது. கையோடை கையாய் கிணறும் கட்டி விட்டால் நல்லது .அதுக்கு கொஞ்சம் பண உதவி செய்தால் நன்றிக்கடனோடை இருப்பேன்.கட்டாயமில்லை. முடிந்தால் உதவி செய்யுங்கோ குரு.இல்லையென்றாலும் சாந்தோசம்.

இத்துடன் முடிக்கின்றேன்.பதி கடிதம் போட மறக்க வேண்டாம்.
இப்படிக்கு
ஏகாம்பரம்

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, குமாரசாமி said:

நீண்ட நாட் களின் பின்னர் உங்களின் கடிதம் கண்டு மிகவும் மகிழ்ச்சி.

தொடருங்கள்....! 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

எனக்கு கொஞ்ச பண உதவி வேண்டும்.பனங்காட்டுக்கு பக்கத்திலை  இன்னொரு வீடு கட்டினனான் உங்களுக்கு தெரியும் தானே. வீடு ஒரளவுக்கு கடவுளே எண்டு கட்டி முடியுது. கையோடை கையாய் கிணறும் கட்டி விட்டால் நல்லது .அதுக்கு கொஞ்சம் பண உதவி செய்தால் நன்றிக்கடனோடை இருப்பேன்.கட்டாயமில்லை. முடிந்தால் உதவி செய்யுங்கோ குரு.இல்லையென்றாலும் சாந்தோசம்.

இதோட ஏகாம்பரத்தார்ரை தொடர்பும் சரி.
ஊர் வம்பு பேசிறதில பொம்பிளைகளை வென்றிடுவார் போல இருக்கு.

சரி பரிமளம் ஆன்ரி எப்ப தான் வரப் போறா?
விமானநிலையத்துக்கு போய் கூட்டிக் கொண்டரவெல்லோ வேணும்.

வேற யாரும் வரப் போறீங்களோ?
வாறதென்றால் இப்பவே பெயருகளைத் தாங்கோ.
வான் புடிக்க வேணுமோ இல்லை பஸ் புடிக்க வேணுமோ என்று முதலே ஒழுங்குகள் செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இதோட ஏகாம்பரத்தார்ரை தொடர்பும் சரி.
ஊர் வம்பு பேசிறதில பொம்பிளைகளை வென்றிடுவார் போல இருக்கு.

ஏகாம்பரம் விவரமான ஆள்தான், சந்தடி சாக்கில் லோன் போட்டுவிட்டார்..

கு.சா இனி பரிமளம், வசந்தி, ஏகாம்பரம் ஆகியோருக்கு செலவழிக்க ரெண்டு மூனு வேலை பார்க்க வேண்டியதிருக்கும்போல இருக்கே..? 😵

2 hours ago, ஈழப்பிரியன் said:

சரி பரிமளம் ஆன்ரி எப்ப தான் வரப் போறா?
விமானநிலையத்துக்கு போய் கூட்டிக் கொண்டரவெல்லோ வேணும்.

விமான நிலையத்திலிருந்து பரிமளம்-கு.சா மணமக்களை அழைத்துச் செல்ல வாகனம் தயாராக உள்ளதெனக் கேள்வி.

w20oxc.jpg

2 hours ago, ஈழப்பிரியன் said:

வேற யாரும் வரப் போறீங்களோ?
வாறதென்றால் இப்பவே பெயருகளைத் தாங்கோ.
வான் புடிக்க வேணுமோ இல்லை பஸ் புடிக்க வேணுமோ என்று முதலே ஒழுங்குகள் செய்ய வேண்டும்.

ராசவன்னியன் குடும்பத்தார் - துபாய்.😍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 4/13/2019 at 5:25 AM, நீர்வேலியான் said:

வெளிநாட்டுக்கு வெளிக்கிட்டாபிறகு, இதுவரை அண்ணி பரிமளத்துக்கு ரெண்டு கடித்தம்தான் எழுதினீங்கள், ஆனால் வசந்திக்கு  மூன்று நாலு எழுதிபோட்டீன்கள்🤔🤔🤔  

தம்பியர் நல்லாய்த்தான் கணக்கு வைச்சிருக்கிறார்....😃

On 4/13/2019 at 5:43 AM, மல்லிகை வாசம் said:

இப்ப அண்ணை முருகனைத் துணைக்கு அழைச்சிட்டார். 😀

விளங்குது... விளங்குது...

திரிஷா இல்லேன்னா நயன்தாரா! 🤣

மல்லிகை வாசம்! நான் நல்லவன். இதுக்குமேலை என்னாலை என்னைப்பற்றி விளங்கப்படுத்தேலாது 🤣

On 4/12/2019 at 10:20 AM, சுவைப்பிரியன் said:

சிங்கன் நான் இருந்த இடத்திக்கு பக்கத்தில தான் இருந்திருக்கிறார்.

நீங்கள்  முந்தி இருந்த பக்கத்து இடம் எண்டால்??????

என்னை உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்...
நாங்கள் கொஞ்சம் நெருங்கி வந்திட்டம் என்ன? :grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 4/13/2019 at 8:26 AM, suvy said:

சின்னண்ணிக்கு நாலு கடிதம் போட்டால் தப்பா.......!  😐

அதுதானே.....சனங்கள் ஒரு மனச்சாட்சியில்லாமல் கேள்விக்குமேலை கேள்வி கேக்கினம்....ð

On 4/13/2019 at 9:04 AM, ஏராளன் said:

கடை இப்ப நான் தான் நடத்திறன் என்று பந்தாவை பாருங்கோவன்! கனடாவில துணை இல்லை பக்கத்து நாடுகள் என்றால் அண்ணர் ஓடி போவாராம் எல்லே! கடைசியா ஜேர்மனிக்கே வர சொல்லி வெற்றிலை பாக்கு வைச்சு கூப்பிடுறார்.
இதெல்லாம் அவவுக்கு தெரிஞ்சால் அவ சொன்னதை செய்தாலும் செய்வா?!

நான் எழுதினது முழுக்கலைலையும் சொன்னனெண்டால் மயங்கி விழுந்து போவியள்...😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 4/11/2019 at 6:49 PM, Sasi_varnam said:

குசா அண்ணர் ...என்னய்யா இப்படி எழுதுகிறீர்கள்?
மண்டையில் இருந்து யோசித்து எழுதுகிறீர்களா? இல்லை ஏற்கனே நீங்கள் உண்மையில் எழுதிய கடிதத்தின் நகலை இங்கே எழுதி கலாய்க்கிறீர்களா?
எது எப்படியோ, அருமை...இதை ஒரு குட்டி புத்தகமாக கூட வெளியிடலாம் , அவ்வளவு இனிமை.
இதை வாசிக்க செங்கை ஆழியனின் "ஆச்சி பயணம் போகிறாள்" மனதில் வந்து போகிறது.
👌

எல்லாம் வாழ்ந்த சூழ்நிலைகளின் பிரதிபலிப்பு..

சசி வர்ணம்! வரவிற்கும் கருத்திற்கும் நன்றிகள்.

On 4/13/2019 at 2:19 PM, ராசவன்னியன் said:

பரிமளத்தின் கொண்ணர் இவரை சாத்தியதில் தப்பே இல்லை..!

முன்ஸ்ரருக்கு வந்து இன்னமும் நாலு சாத்து சாத்த வேணும்..:)

manathai thirudi vittai vadivelu comedy manathai, thirudi, vittai, vadivelu, comedy GIF

:grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 4/13/2019 at 6:15 PM, ஏராளன் said:

அது மனைவியா? துணைவியா? தோழியா?

  என்ன கோதாரியெண்டாலும்...... பொதுவாய் சொல்லப்போனால் தேத்தண்ணி வைக்க காப்புக் கை  அவசியம் ராசா........😎

 பியோன் ஏகாம்பரம் தரகர் வேலைக்கு கூலிகேட்கிறார் போல

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா மாட்டினார் ஏகாம்பரத்திட்டை😀

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை
நாட்டு பிரச்சினையை தீர்க்கிறதில மும்முரமாக இருந்தபடியால் இங்கை கொஞ்ச நாளா பார்க்கேலை. ஏகாம்பரம் ஒரு அப்பாவி ஆள் என்று நினைச்சேன், சைக்கிள் கேப்பில்  கிடாய் வெட்டுறார். அவர் உதவி இல்லாமல் நீங்கள் அங்கை தொடர்புகொள்ள ஏலாது என்று அவருக்கு விளங்கி விட்டது,  வந்த வரைக்கும் லாபம் என்று விட்டு பார்க்கிறார்.  

  • கருத்துக்கள உறவுகள்

                            Image associée

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, suvy said:

                            Image associée

இன்னும் முழுசாய் வெளியில வரவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, சுவைப்பிரியன் said:

இன்னும் முழுசாய் வெளியில வரவில்லை.

நான் இன்னும் தபாலை காணவில்லை என்றுதான் தபால் பெட்டியை திறந்தேன் சுவை......!  😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிள்ளையாரும் 
துர்க்கை அம்மனும் துணை.

கரணவாய் மத்தி 
கரணவாய்  
30.06.1983

அன்புள்ள ஆசை அத்தான் அறிவது!

                                                                           நான் இங்கு நல்ல சுகம். அது போல் நீங்களும் சுகமாக இருப்பீர்கள் என நம்புகின்றேன்.

உங்கள் பல கடிதங்கள் கிடைத்தது. பதில் எழுத என் உள்மனம் இடங்கொடுக்கவில்லை.

அத்தான்!  நீங்கள் ஏன் அவர்களுடன் நின்று தோளின் மேல் கைபோட்டுக்கொண்டு போட்டோ எடுத்தனீங்கள்?  அந்த உரிமை எப்படி உங்களுக்கு வந்தது? உங்கள் மீது என் மூச்சு மட்டுமே படவேண்டும். நீங்கள் எனக்கு மட்டுமே சொந்தம்.அப்படியிருக்கும் போது நீங்கள் அந்த வெள்ளைக்காரியின் படத்தை  எனக்கு அனுப்பி எதிர்காலம் என்று ஒரு சொல்லு எழுதியிருந்தீர்கள். அது என் இதயத்தை முள்ளாக குத்தி விட்டது. அதிலிருந்து நான் இன்னும் மீளவேயில்லை.

உங்களுக்கு விசா பிரச்சனையாயின் திரும்பி இங்கே வாருங்கள் நான் வேலைக்கு போய் உங்களை கடவுள் போல் வைத்திருப்பேன். அத்தான் நீங்கள் குடிப்பது போல் ஒரு போட்டோவும் அனுப்பியிருந்தீர்கள். அது என்ன சாராயமா? கெட்ட பழக்கமெல்லாம் பழக வேண்டாம் அத்தான். சொண்டு கூட கறுத்துப்போய் இருக்கு. சிகரெட்டும் பத்துறியளோ? தனிய இருந்து எல்லா ஊத்தைப்பழக்கங்களையும் பழகிறியள் போலை இருக்கு.

காலைச்சாப்பாடாய் என்ன சாப்பாடு சாப்பிடுறியள் அத்தான். காலைச்சாப்பாடு முக்கியம் அத்தான். ஏனெண்டால் நீங்கள் 11,12 மணிக்குத்தான் நித்திரயாலை எழும்புவன் என எழுதியிருந்தீங்கள்.8 மணிக்கு எழும்பி தேத்தண்ணி குடிச்சு சாப்பிட்டுட்டு பிறகு நித்திரை கொள்ளலாம் தானே அத்தான். உடம்பை கவனியுங்கோ. வெள்ளைக்காரியளோடை உங்களுக்கு தொடர்சல் வேண்டாம்.கடியன் கந்தையாவின்ரை மகளை கண்டனீங்களோ? அவள் இஞ்சையே சரியில்லாதவள். நீங்கள் கவனமாய் இருக்க வேணும் அத்தான்.

பிள்ளையார் கோயில் குருபூசைக்கு நானும் வசந்தியும் போனனாங்கள். உங்கடை அம்மாவும் வந்திருந்தவ. ஐயர் திருநீறு தரேக்கை உங்கடை அம்மா வாங்கி என்ரை நெற்றியிலை பூசி விட்டவ.இதை டிப்போவின்ரை மனுசி சரசுவதி ஒரு மாதிரி பார்த்தார். இதை கண்ட உங்கடை அம்மா என்ரை பிள்ளை நல்லாய் இருக்கோணும் நல்லாய் இருக்கோணும் எண்டு என்ரை சொக்கிலையும் கழுத்திலையும் திருநீறு பூசிவிட்டவா.

அத்தான் நீங்கள் கோட் சூட் போட்டு ஒரு போட்டு எடுத்து அனுப்புங்கோ. என்ரை குஞ்சு அத்தானுக்கு ஒரு குறையும் வரக்கூடாதெண்டு எங்கடை மருதடி வைரவரை ஒவ்வொரு நாளும் கும்புடுவன்.

இனி நான் தொடர்ந்து கடிதம் போடுவேன். கவனம் வெள்ளைக்காரியள். விசா பிரச்சனை எண்டால் இஞ்சை வாங்கோ.நான் உங்களை என்ரை மடியிலை பிள்ளை போலை வைச்சு பாப்பன்.

நீங்கள் இனிமேல் எங்கடை வீட்டுக்கே கடிதம் போடுங்கோ அத்தான்.   ஏகாம்பரம் ஐயாவிட்டை அனுப்ப வேண்டாம்.அவர் பின்னேர வெறியிலை   எங்கடை ஐயாவிட்டையும் உங்கடை ஐயாவிட்டையும் எல்லாத்தையும் சொல்லுறார் போலை இருக்கு.

வேறு என்ன அத்தான் பதில் கடிதம் போடுங்கோ. போட்டு மறக்க வேண்டாம்.

அத்தான் எனக்கு உங்களை நினைக்கும் போதெல்லாம் பல்லு கூசும். உங்களுக்கு????

இத்துடன் முடிக்கின்றேன் அத்தான்
அன்பு
பரிமளம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

வேறு என்ன அத்தான் பதில் கடிதம் போடுங்கோ. போட்டு மறக்க வேண்டாம்.

வரிக்கு வரி அத்தான் அத்தான்

அத்தானும் நான் தானே சட்டைப் பொத்தானும் நீ தானே.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

... உங்களுக்கு விசா பிரச்சனையாயின் திரும்பி இங்கே வாருங்கள் நான் வேலைக்கு போய் உங்களை கடவுள் போல் வைத்திருப்பேன். அத்தான் நீங்கள் குடிப்பது போல் ஒரு போட்டோவும் அனுப்பியிருந்தீர்கள். அது என்ன சாராயமா? கெட்ட பழக்கமெல்லாம் பழக வேண்டாம் அத்தான். சொண்டு கூட கறுத்துப்போய் இருக்கு. சிகரெட்டும் பத்துறியளோ? தனிய இருந்து எல்லா ஊத்தைப்பழக்கங்களையும் பழகிறியள் போலை இருக்கு.

காலைச்சாப்பாடாய் என்ன சாப்பாடு சாப்பிடுறியள் அத்தான். காலைச்சாப்பாடு முக்கியம் அத்தான். ஏனெண்டால் நீங்கள் 11,12 மணிக்குத்தான் நித்திரயாலை எழும்புவன் என எழுதியிருந்தீங்கள்.8 மணிக்கு எழும்பி தேத்தண்ணி குடிச்சு சாப்பிட்டுட்டு பிறகு நித்திரை கொள்ளலாம் தானே அத்தான். உடம்பை கவனியுங்கோ..

...

அத்தான் நீங்கள் கோட் சூட் போட்டு ஒரு போட்டு எடுத்து அனுப்புங்கோ. என்ரை குஞ்சு அத்தானுக்கு ஒரு குறையும் வரக்கூடாதெண்டு எங்கடை மருதடி வைரவரை ஒவ்வொரு நாளும் கும்புடுவன்.

...

இனி நான் தொடர்ந்து கடிதம் போடுவேன். கவனம் வெள்ளைக்காரியள். விசா பிரச்சனை எண்டால் இஞ்சை வாங்கோ.நான் உங்களை என்ரை மடியிலை பிள்ளை போலை வைச்சு பாப்பன்.

...

அன்பு
பரிமளம்

யம்மாடி, பரிமளம் அம்மணிக்கு எக்ஸ்-ரே கண்ணு போல இருக்கே..! உதடுகள் கறுப்பாகிப்போனதைக்கூட ஊடுவி பிடிக்கிறாரே..! vil-hooo.gif

முன்ஸ்ரரில் கலியாணம் கட்டாத காளை, 'அப்படி இப்படி' என திரிந்தால், கு.சா அவர்களின் தோலை உரித்து உப்புக்கண்டமே போட்டுவிடுவார்களோ..? vil-marre.gif

இந்தா மாதிரி 'கேரிங் வைஃப்' அமைய கொடுத்து வைத்திருக்கோணும், கு.சா.. !அதைவிட்டுப்போட்டு எங்கோ அலையுறாரே..! 😡

அம்மணி ரொம்ப நல்ல பெண்மணியானாலும் கொஞ்சம் பொஸசிவ் டைப் தான்..! ஆனால் இம்மாதிரி அலைபாயுற ஆட்களுக்கு கடிவாளம் போட, இப்படிப்பட்ட பெண்மணியைத்தான் இயற்கை  துணையாக அமைக்கும்.

இறைவனின் டிசைன் அப்படி..!

வெல்டன் அம்மணி..  vil-applause2.gif

Edited by ராசவன்னியன்

"உங்களுக்கு விசா பிரச்சனையாயின் திரும்பி இங்கே வாருங்கள் நான் வேலைக்கு போய் உங்களை கடவுள் போல் வைத்திருப்பேன்"

                    இதைவிட வேறு என்னவேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

பிள்ளையாரும் 
துர்க்கை அம்மனும் துணை.

கரணவாய் மத்தி 
கரணவாய்  
30.06.1983

அன்புள்ள ஆசை அத்தான் அறிவது!

பிள்ளையார் கோயில் குருபூசைக்கு நானும் வசந்தியும் போனனாங்கள். உங்கடை அம்மாவும் வந்திருந்தவ. ஐயர் திருநீறு தரேக்கை உங்கடை அம்மா வாங்கி என்ரை நெற்றியிலை பூசி விட்டவ.இதை டிப்போவின்ரை மனுசி சரசுவதி ஒரு மாதிரி பார்த்தார். இதை கண்ட உங்கடை அம்மா என்ரை பிள்ளை நல்லாய் இருக்கோணும் நல்லாய் இருக்கோணும் எண்டு என்ரை சொக்கிலையும் கழுத்திலையும் திருநீறு பூசிவிட்டவா.

அத்தான் நீங்கள் கோட் சூட் போட்டு ஒரு போட்டு எடுத்து அனுப்புங்கோ. என்ரை குஞ்சு அத்தானுக்கு ஒரு குறையும் வரக்கூடாதெண்டு எங்கடை மருதடி வைரவரை ஒவ்வொரு நாளும் கும்புடுவன்.

அத்தான் எனக்கு உங்களை நினைக்கும் போதெல்லாம் பல்லு கூசும். உங்களுக்கு????

இத்துடன் முடிக்கின்றேன் அத்தான்
அன்பு
பரிமளம்

அம்மா திருநீறை மேலே இழுத்து விட்டிருப்பா இருடி "உனக்கு இனி நாமம்தான்" திருமணத்துக்கு பிறகுதான் மாமியின் மனசு மனிசிக்கு தெரியும்......!

மருதடியில் பிள்ளையாரைத்தான் எல்லாரும் தங்களை சேர்த்து வைக்க சொல்லி கும்பிடுவினம். இவ வைரவரை கும்பிட்டு அவரை மாதிரி போட்டொ எடுத்து அனுப்ப சொல்கிறா.... போட்டொ எப்படி இருக்க வேண்டும் என்று இனி அத்தானுக்கு புரிஞ்சால் சரி......!  👍

இந்நேரம் வசந்தி தன்னுடைய போட்டோவே அனுப்பி இருப்பா.....!  😄

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

அத்தான் எனக்கு உங்களை நினைக்கும் போதெல்லாம் பல்லு கூசும். உங்களுக்கு????

ஏன் பல்லு கூசியிருக்கும்?!
மாங்காய் சாப்பிட்டவையோ!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, ஈழப்பிரியன் said:

வரிக்கு வரி அத்தான் அத்தான்

அத்தானும் நான் தானே சட்டைப் பொத்தானும் நீ தானே.

எரிச்சல்....எரிச்சல்....அவ்வளவும் எரிச்சல்....அவர்ரை வீட்டிலை எப்பாலும் இருந்திட்டுத்தான்  அத்தான்  எண்டு கூப்பிடீனம் போலை கிடக்கு.....😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, ராசவன்னியன் said:

யம்மாடி, பரிமளம் அம்மணிக்கு எக்ஸ்-ரே கண்ணு போல இருக்கே..! உதடுகள் கறுப்பாகிப்போனதைக்கூட ஊடுவி பிடிக்கிறாரே..! vil-hooo.gif

முன்ஸ்ரரில் கலியாணம் கட்டாத காளை, 'அப்படி இப்படி' என திரிந்தால், கு.சா அவர்களின் தோலை உரித்து உப்புக்கண்டமே போட்டுவிடுவார்களோ..? vil-marre.gif

இந்தா மாதிரி 'கேரிங் வைஃப்' அமைய கொடுத்து வைத்திருக்கோணும், கு.சா.. !அதைவிட்டுப்போட்டு எங்கோ அலையுறாரே..! 😡

அம்மணி ரொம்ப நல்ல பெண்மணியானாலும் கொஞ்சம் பொஸசிவ் டைப் தான்..! ஆனால் இம்மாதிரி அலைபாயுற ஆட்களுக்கு கடிவாளம் போட, இப்படிப்பட்ட பெண்மணியைத்தான் இயற்கை  துணையாக அமைக்கும்.

இறைவனின் டிசைன் அப்படி..!

வெல்டன் அம்மணி..  vil-applause2.gif

அடி ஆத்தி! பரிமளத்தின்ரை அண்ணனை விட இந்தாளு ரொம்ப ரொம்ப கறாராய் இருப்பார் போலிருக்கே....😮

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, ஜெகதா துரை said:

"உங்களுக்கு விசா பிரச்சனையாயின் திரும்பி இங்கே வாருங்கள் நான் வேலைக்கு போய் உங்களை கடவுள் போல் வைத்திருப்பேன்"

                    இதைவிட வேறு என்னவேண்டும்?

அவையள் அப்பிடித்தான் சொல்லுவினம்.....அங்கை போனாப்பிறகு மண்வெட்டியை கையிலை தந்து விடுவினம்.....😎

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.