Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால்... ஆயுதம் ஏந்தி போராட்டம்: இரா. சம்பந்தன் எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

TNA warns to restore of Arms Struggle for Tamil Eelam

ஈழத் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால்... ஆயுதம் ஏந்தி போராட்டம்: இரா. சம்பந்தன் எச்சரிக்கை

ஈழத் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் ஆயுதம் ஏந்தி போராடுவது பற்றி சிந்திப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இலங்கை தமிழக அரசு கட்சியின் 16-வது மாநாட்டில் இரா. சம்பந்தன் பேசியதாவது: ஈழத் தமிழர்கள் உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கவுரவமாகவும் சுயமரியாதையுடனும் வாழ்வதற்காக தந்தை செல்வா தமிழரசு கட்சியை தொடங்கினார். 70 ஆண்டுகளுக்குப் பின்னரும் எமது பிரச்சனை தீர்க்கப்படாமல் இருக்கிறது.

இலங்கை விடுதலை பெறுவதற்கு முன்னரே ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு கண்டிருக்க முடியும். அதிகபட்சமாக கூட்டாட்சி அடிப்படையிலாவது பிரச்சனைகளை தீர்க்க கோரிக்கைகளை முன்வைத்தோம். 13-வது அதிகாரப் பகிர்வின் மூலம் வடக்கு கிழக்கு இணைந்த குறைந்தபட்ச சுயாட்சி கிடைத்தது.

தற்போது அதுவும் இல்லை என்றாகிவிட்டது. கடந்த காலங்களில் இது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் எற்படவில்லை. வடமாகாணத்தில் பல்வேறு இனத்தவரின் குடியேற்றம் நடைப்றுகிறது. இதற்கு நாம் விரைவில் முடிவு காண வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகளைப் போல ஆயுதம் ஏந்தி போராடினால்தான் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என நினைக்கிறோம். ஆயுத பலம் இல்லாத தமிழர்களது பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படாமல் கைவிட நீங்கள் நினைத்தால் அது தவறான முடிவாகிவிடும்.

அப்படி நீங்கள் நினைத்தால் நாங்கள் ஆயுதம் ஏந்தி போராடுவது பற்றி சிந்திக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதை பரிசீலிக்க வேண்டிய சூழல் வந்துவிடும். இவ்வாறு இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

Read more at: https://tamil.oneindia.com/news/srilanka/tna-warns-to-restore-of-arms-struggle-for-tamil-eelam-355642.html

  • Replies 112
  • Views 10.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மறுபடியும் இரத்தப் பொட்டா..? :rolleyes:

முதல்ல அங்கே 'போராட மக்களுக்கு விருப்பமிருக்கா' என இவருக்கு தெரியுமா..?

பாவமப்பா மக்கள், சிந்தித்து வாழ விடுங்களேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ராசவன்னியன் said:

மறுபடியும் இரத்தப் பொட்டா..? :rolleyes:

முதல்ல அங்கே 'போராட மக்களுக்கு விருப்பமிருக்கா' என இவருக்கு தெரியுமா..?

பாவமப்பா மக்கள், சிந்தித்து வாழ விடுங்களேன்.

Image may contain: 3 people, people standing

தன்னுடைய... குடையை கூட,  தூக்க முடியாதவர்தான்... ஆயுதம் தூக்கப் போகிறாராம். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

ஐயையோ ஓடுங்கோ! எல்லோரும் தப்பிச்சு ஓடுங்கோ!

  • கருத்துக்கள உறவுகள்

பெரும் உயிர்தியாகம் செய்து இனத்துக்காக மண்ணுக்காகப் போராடியவர்களையும் பயங்கரவாதிகள் என்று சொல்லி அழித்துவிட்டு.. இன்று இவர்கள் வாயால் வடை சுடுகிறார்கள்.

ஒரு தூரநோக்கற்ற அரசியல் வியாதிகள் இவர்கள். இவர்களின் குறுகிய சிந்தனையை சிலர் சாணக்கியம் என்று சொல்லி... சிங்களவன் நினைத்ததை செய்ய அவனுக்கு வசதி செய்து கொடுத்தது தான் மிச்சம்.

இவர்கள் ஆயுதம் எல்லாம் தூக்க வேண்டாம்... விடுதலைப்புலிகளை அழித்ததும் தீர்வு என்று சொன்ன சர்வதேச நாடுகளிடம் போய் அதை கேட்டு வாக்கிக் கொள்ளலாமே. குறிப்பாக ஹிந்தியா.. மற்றும்.. இணைத்தலைமை நாடுகள். 

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் எனக்குச் சந்தோசமாக இருக்கு வெளிநாட்டுக்கு எனது உறவுகளில சிலரை இழுத்துவிடவேணும் என்ன செய்யலாம் என யோசிச்சுக்கொண்டிருந்தனான். எப்ப பார்த்தாலும் ஊரில இருந்து வைப்பரில அடிச்சபடி இருக்கினம். இங்க கூப்பிட்டு விட்டா ஏஜன்சிக்காரனுக்குக் கட்டிய காசை கூப்பிட்டவயளிட்ட அறவிடமுதல் புடிச்செல்லெ அனுப்புறாங்கள்.

சம்பந்தன் ஐயா அடிபாட்டைத் தொடங்கினால் துணிஞ்சு முதலிடலாம்.  அவையள் வருகிற நேரமாப்பார்த்து ஒரு சீட்டைத் தொடங்கி கழிவு கூடினாலும் பறுவாயில்லை எடுத்துப்போட்டு வாறவயளிட்டைப் பொறுப்பித்துவிடலாம்.

இஞ்சேருமப்பா உமக்குத் தெரிஞ்சவயளிட்டை விசாரியும் நம்பிக்கையானவர்கள் யாராவது கிட்டடியில சீட்டுத்தொடங்கினமோ எண்டு.

இந்தியாவை முழுமையாக நம்புறம் எனச்சொல்லும்போதே இன்னுமொரு முள்ளிவாய்க்காலுக்கு இந்தியா திட்டம் போடுது என யோசிச்சனான்.

எழுந்து நடக்க முடியாதாம் ஆனால் ஏழெட்டுப் பொண்டாட்டி கேக்கிறார் என்பதுபோல் சம்பந்தரை தூக்கிச் சுமந்துகொண்டு திரியேக்கையும் பார்ரா அவற்றை வீரத்தை.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு யாழ் கள வாசிகள் எவராவது நடைமுறைச் சாத்தியமான , ஆக்கபூர்வமான குறுகிய , மற்றும் நீண்டகால தீர்வுத திட்டங்கள் வைத்திருக்கிறார்களா. 

இருப்பின் பகிர்ந்து  கொண்டால் செயல் படுத்தும் திறன் கொண்ட எவருக்காவது பயன் படக் கூடுமே !!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

பெரும் உயிர்தியாகம் செய்து இனத்துக்காக மண்ணுக்காகப் போராடியவர்களையும் பயங்கரவாதிகள் என்று சொல்லி அழித்துவிட்டு.. இன்று இவர்கள் வாயால் வடை சுடுகிறார்கள்.

ஒரு தூரநோக்கற்ற அரசியல் வியாதிகள் இவர்கள். இவர்களின் குறுகிய சிந்தனையை சிலர் சாணக்கியம் என்று சொல்லி... சிங்களவன் நினைத்ததை செய்ய அவனுக்கு வசதி செய்து கொடுத்தது தான் மிச்சம்.

இவர்கள் ஆயுதம் எல்லாம் தூக்க வேண்டாம்... விடுதலைப்புலிகளை அழித்ததும் தீர்வு என்று சொன்ன சர்வதேச நாடுகளிடம் போய் அதை கேட்டு வாக்கிக் கொள்ளலாமே. குறிப்பாக ஹிந்தியா.. மற்றும்.. இணைத்தலைமை நாடுகள். 

70 களில் இருந்து இலங்கை தமிழர் பிரச்சினையின் நடுவே இருந்து வளர்ந்தவன் என்ற முறையில் , எனக்கு புரியாமல் இருக்கும்  "தவிபு களின் அழிவில் சம்பந்தனின் பங்கு " என்னவென்று அறியத் தருவீர்களா ….

  • கருத்துக்கள உறவுகள்

பழசுக்கு சிங்களவன் கொடுக்க வெளிக்கிட்ட  கொழும்பு வீடு கிடைப்பதில் சிக்கல் போல் உள்ளது அதுதான் இப்படி பாஞ்சு விட்டத்துக்கு  எகிறுக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

சாமானியன்

த வி பு வின் அழிவில் சம்பந்தனின் பங்கைப்பற்றி அறியவேண்டுமெனில் ஏக்க ராஜய எனும் சொல்லை வைத்து ஒரு அகராதியையே உருவாக்கியிருக்கும் சுமந்திரனிடம் போய் கேழுங்கள்.

சம்பந்தன் இப்போ என்ன சொல்ல வருகிறார் என்றால் த வி புக்கள் அழிந்துவிட்டினம் அடுத்து தமிழர்கள் அனைவரையும் அழிக்காமல் சுடலைக்குப் போகமாட்டன் என்று சொல்லுறார்.

காரணம் இந்தியா அவரைச் சும்மா இருக்க விடாது மீண்டும் ஒரு முள்ளிவாய்காலை உருவாக்கக் கருவியாகப் பயன்படுத்தும். 

தமிழர்களுக்கான தீர்வையோ உரிமையையோ அன்றேல் தனிநாட்டையோ அடையவேண்டுமெனில் 

நீங்கள் போயிட்டு வாங்கோ இதுவரை செய்த துரோகத்துக்கு எல்லாம் மிக்க நன்றி எதிர்காலத்தில் எம்மீதான துரோகத்துக்கு உங்களுக்கு நாம் இடம்கொடோம் போய் வராதையுங்கோ என இந்தியாவுக்கு எல்லோரும் சொன்னாலே போதும் அனைத்தும் நல்லவிதமாக நடக்கும்.

ஒன்றில் சிங்களவன் முற்றிலுமாக எம்மை அழிப்பான் இல்லையேன் அவன் ஒரு இணக்கத்துக்கு வருவான். தமிழர் விரோததேசம் இந்தியா இருக்கும்வரை அதனை நம்பும்வரை பல முள்ளிவாய்க்கால்களை நாம் சந்திக்கவேண்டிவரும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

TNA warns to restore of Arms Struggle for Tamil Eelam

ஈழத் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால்... ஆயுதம் ஏந்தி போராட்டம்: இரா. சம்பந்தன் எச்சரிக்கை

ஈழத் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் ஆயுதம் ஏந்தி போராடுவது பற்றி சிந்திப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இலங்கை தமிழக அரசு கட்சியின் 16-வது மாநாட்டில் இரா. சம்பந்தன் பேசியதாவது: ஈழத் தமிழர்கள் உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கவுரவமாகவும் சுயமரியாதையுடனும் வாழ்வதற்காக தந்தை செல்வா தமிழரசு கட்சியை தொடங்கினார். 70 ஆண்டுகளுக்குப் பின்னரும் எமது பிரச்சனை தீர்க்கப்படாமல் இருக்கிறது.

இலங்கை விடுதலை பெறுவதற்கு முன்னரே ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு கண்டிருக்க முடியும். அதிகபட்சமாக கூட்டாட்சி அடிப்படையிலாவது பிரச்சனைகளை தீர்க்க கோரிக்கைகளை முன்வைத்தோம். 13-வது அதிகாரப் பகிர்வின் மூலம் வடக்கு கிழக்கு இணைந்த குறைந்தபட்ச சுயாட்சி கிடைத்தது.

தற்போது அதுவும் இல்லை என்றாகிவிட்டது. கடந்த காலங்களில் இது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் எற்படவில்லை. வடமாகாணத்தில் பல்வேறு இனத்தவரின் குடியேற்றம் நடைப்றுகிறது. இதற்கு நாம் விரைவில் முடிவு காண வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகளைப் போல ஆயுதம் ஏந்தி போராடினால்தான் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என நினைக்கிறோம். ஆயுத பலம் இல்லாத தமிழர்களது பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படாமல் கைவிட நீங்கள் நினைத்தால் அது தவறான முடிவாகிவிடும்.

அப்படி நீங்கள் நினைத்தால் நாங்கள் ஆயுதம் ஏந்தி போராடுவது பற்றி சிந்திக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதை பரிசீலிக்க வேண்டிய சூழல் வந்துவிடும். இவ்வாறு இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

Read more at: https://tamil.oneindia.com/news/srilanka/tna-warns-to-restore-of-arms-struggle-for-tamil-eelam-355642.html

  எனக்கு வாயில  வருகுது

யாழுக்கும்  அதில்  உடன்பாடிருந்தாலும்

இங்கு அதை யாழ் களம் அதை  அனுமதிக்காது😡😡

2 hours ago, விசுகு said:

  எனக்கு வாயில  வருகுது

யாழுக்கும்  அதில்  உடன்பாடிருந்தாலும்

இங்கு அதை யாழ் களம் அதை  அனுமதிக்காது😡😡

இங்கும் அதே தான்

10 hours ago, தமிழ் சிறி said:

ஈழத் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால்... ஆயுதம் ஏந்தி போராட்டம்: இரா. சம்பந்தன் எச்சரிக்கை

இவர் எந்த ஆயுதத்தை சொல்றார் என்டு முதல்ல கண்டுபிடிக்கோனும்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆரும் தடுக்கபடாது .. 👍

65780649_446099542835773_513889948600893

  • கருத்துக்கள உறவுகள்

7 hours ago, சாமானியன் said:

70 களில் இருந்து இலங்கை தமிழர் பிரச்சினையின் நடுவே இருந்து வளர்ந்தவன் என்ற முறையில் , எனக்கு புரியாமல் இருக்கும்  "தவிபு களின் அழிவில் சம்பந்தனின் பங்கு " என்னவென்று அறியத் தருவீர்களா ….

உங்களுக்கு இண்டைக்குக் காலம் சரியில்லை! 😎

6 hours ago, Elugnajiru said:

சாமானியன்

த வி பு வின் அழிவில் சம்பந்தனின் பங்கைப்பற்றி அறியவேண்டுமெனில் ஏக்க ராஜய எனும் சொல்லை வைத்து ஒரு அகராதியையே உருவாக்கியிருக்கும் சுமந்திரனிடம் போய் கேழுங்கள்.

சம்பந்தன் இப்போ என்ன சொல்ல வருகிறார் என்றால் த வி புக்கள் அழிந்துவிட்டினம் அடுத்து தமிழர்கள் அனைவரையும் அழிக்காமல் சுடலைக்குப் போகமாட்டன் என்று சொல்லுறார்.

காரணம் இந்தியா அவரைச் சும்மா இருக்க விடாது மீண்டும் ஒரு முள்ளிவாய்காலை உருவாக்கக் கருவியாகப் பயன்படுத்தும். 

தமிழர்களுக்கான தீர்வையோ உரிமையையோ அன்றேல் தனிநாட்டையோ அடையவேண்டுமெனில் 

நீங்கள் போயிட்டு வாங்கோ இதுவரை செய்த துரோகத்துக்கு எல்லாம் மிக்க நன்றி எதிர்காலத்தில் எம்மீதான துரோகத்துக்கு உங்களுக்கு நாம் இடம்கொடோம் போய் வராதையுங்கோ என இந்தியாவுக்கு எல்லோரும் சொன்னாலே போதும் அனைத்தும் நல்லவிதமாக நடக்கும்.

ஒன்றில் சிங்களவன் முற்றிலுமாக எம்மை அழிப்பான் இல்லையேன் அவன் ஒரு இணக்கத்துக்கு வருவான். தமிழர் விரோததேசம் இந்தியா இருக்கும்வரை அதனை நம்பும்வரை பல முள்ளிவாய்க்கால்களை நாம் சந்திக்கவேண்டிவரும்.

சரி, எங்களுக்குப் பதிலெல்லாம் தெரியாது! அதுக்கு சும் சம் தான் வேண்டும்! கேள்வி மட்டும் தான் நாங்கள் கேட்பம்!

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, சாமானியன் said:

70 களில் இருந்து இலங்கை தமிழர் பிரச்சினையின் நடுவே இருந்து வளர்ந்தவன் என்ற முறையில் , எனக்கு புரியாமல் இருக்கும்  "தவிபு களின் அழிவில் சம்பந்தனின் பங்கு " என்னவென்று அறியத் தருவீர்களா ….
 
இவர்களின் 3 நடவடிக்கைகள் போதுமானது. இவர்களை இனங்காண.. 

1. இறுதிப் போர் காலத்தில் போனை சுவிச் ஆவ் செய்துவிட்டு ஹிந்தியாவில் கிடந்தவர் தான் இவர்.

2. நேற்று வரை விடுதலைப்புலிகளின் தோல்வியை.. பயங்கரவாத அழிப்பாக உச்சரித்தவர் தான் இவர்.

3. தங்களை தாங்களே.. இரத்தக்கறை படியாத சுத்தவான்களாக சிங்களவர்கள் முன் இனங்காட்டிக் கொண்டு.. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் உயிர்ப்போடு இருந்த காலங்களில் அதற்கு எதிரான திட்டங்களில்.. எல்லாம் ஹிந்திய மற்றும் சொறீலங்கா ஆட்சியாளர்களுக்கு துணை போனவர்கள் தான் இவர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, சாமானியன் said:

70 களில் இருந்து இலங்கை தமிழர் பிரச்சினையின் நடுவே இருந்து வளர்ந்தவன் என்ற முறையில் , எனக்கு புரியாமல் இருக்கும்  "தவிபு களின் அழிவில் சம்பந்தனின் பங்கு " என்னவென்று அறியத் தருவீர்களா ….

உங்களைப்போலத்தான்  நானும்  நினைக்கின்றேன்

அவர்  நேரடியாக எதையும் செய்ததாக  தெரியவில்லை

அதனால்  தானோ  என்னமோ 

அவரை  கருணாநிதியைப்போல

 சாணக்கிய  அரசியல்வாதி  என்கிறார்களோ??????????

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ ஒருவர் மு.புத்தகத்தில் எழுதி இருக்கிறார்.அப்படி ஆயுதம் ஏந்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் சம்மந்தரை தான் முதலில் சுடுவாராம் 😉
 
  • கருத்துக்கள உறவுகள்

News2491TNA.jpg

  • கருத்துக்கள உறவுகள்

65830175_2290564614360450_84643760635295

மீண்டும் முதலிலே இருந்தா??

  • கருத்துக்கள உறவுகள்

சம்மந்தனோ,கூட்டமைப்போ ஈழம் பெற்றுத் தரோணும் என்று மக்கள் எதிர் பார்க்கவில்லை...ஆனால் குறைந்த பட்ச உரிமையையாவது பெற்றுக் கொடுக்காமல்,கிடைத்த சின்ன,சின்ன சந்தர்ப்பங்களை சரி வரப் பயன் படுத்தாமல் உ+ம் கிழக்கின் முதலமைச்சர் பதவியை நசீருக்கு தூக்கி கொடுத்தது போன்று பல சந்தர்ப்பங்கள்... 
முஸ்லீம் எம்பிக்கள்,அமைச்சர்களால் தங்கட மக்களுக்கு உரிமைகள்,சலுகைகள் பெற்றுக் கொடுக்க முடியும் என்றால் ஏன் இவர்களால் முடியாது?
மக்களது அடிப்படை உரிமைகள்,மக்கள் சொந்த நிலத்திற்காய் போராடுகிறார்கள்...அதைக் கூட  மீட்டுக் கொடுக்க வக்கில்லை 
மனோ கணேசன் செய்வதை கூட இவர்களால் செய்ய முடியாமல் உள்ளது..
வெட்கமில்லாமல் இன்னும் பதவியில் குந்திக் கொண்டு ...
மக்கள் இவர்களுக்கு வோட் போடுவதன் முக்கிய காரணம் சிங்களவர்களையோ,முஸ்லீம்களையோ பதவிக்கு வர விடக் கூடாது என்பதால் தான் ...
கூட்டமைப்பு இப்படியே காலத்தை கடத்த நினைத்தால் இனி மேல் வட,கிழக்கிலும் சிங்கள கட்சிகள் தான் ஆடசி அமைக்கும் 
 
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, சாமானியன் said:

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு யாழ் கள வாசிகள் எவராவது நடைமுறைச் சாத்தியமான , ஆக்கபூர்வமான குறுகிய , மற்றும் நீண்டகால தீர்வுத திட்டங்கள் வைத்திருக்கிறார்களா. 

இருப்பின் பகிர்ந்து  கொண்டால் செயல் படுத்தும் திறன் கொண்ட எவருக்காவது பயன் படக் கூடுமே !!

நீங்கள் ஒரு மணித்தியாலத்துக்கு முன் தான் கோமாவில் இருந்து எழும்பி உள்ளீர்கள் போல?😝😝

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, சாமானியன் said:

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு யாழ் கள வாசிகள் எவராவது நடைமுறைச் சாத்தியமான , ஆக்கபூர்வமான குறுகிய , மற்றும் நீண்டகால தீர்வுத திட்டங்கள் வைத்திருக்கிறார்களா. 

இருப்பின் பகிர்ந்து  கொண்டால் செயல் படுத்தும் திறன் கொண்ட எவருக்காவது பயன் படக் கூடுமே !!

65265774_2285547171528861_74946125416124

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, சாமானியன் said:

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு யாழ் கள வாசிகள் எவராவது நடைமுறைச் சாத்தியமான , ஆக்கபூர்வமான குறுகிய , மற்றும் நீண்டகால தீர்வுத திட்டங்கள் வைத்திருக்கிறார்களா. 

இருப்பின் பகிர்ந்து  கொண்டால் செயல் படுத்தும் திறன் கொண்ட எவருக்காவது பயன் படக் கூடுமே !!

மன்னிக்க வேண்டும் சாமான்யன்! ஒரு முக்கியமான கேள்வியை அப்பாவித் தனமாகக் கேட்டு விட்ட உங்களுக்கு என்ன ஆகப் போகிறது என்ற காரணத்தை வைத்தே சிரிப்புக் குறி இட்டேன்! மேலே இருக்கும் பதில்கள், குறிப்பாக நுணா இணைத்திருக்கும் செய்திகளில் இருந்தே உங்களுக்குப் புரிந்திருக்கும் தீர்வு பற்றிப் பேசுவதில் யாழில் இருப்போர் எவ்வளவு முன்னேற்றம் கண்டிருக்கிறார்கள் என்று. இவர்கள் கேள்வியின் நாயகர்கள் மட்டுமே, பதில் எல்லாம் எதிர்பார்க்கக் கூடாது! துரோகிப் பட்டம் Trump University degree போல உடனே கிடைக்கும்! 

  • கருத்துக்கள உறவுகள்

மக்காள் ஏன் கொதிக்கிறியள்?

1. சம்பந்தன் ஆயுதம் ஏந்த வேண்டும் எண்டே சொன்னவர். அல்லது ஆயுதம் ஏந்துவோம் எண்டே சொன்னவர். ஆயுதம் ஏந்துவதை பற்றி “சிந்திக்க” வேண்டி “வரலாம்” என்றுதான் சொன்னவர். அதாவது நாங்கள் சிலசமயம் சிந்திப்போமே, நயந்தாராவுடன் ஹனிமூன் போக வேண்டும், தமன்னாவுடன் தள்ளாட வேண்டும், அப்படி, “சிந்திக்க வேண்டி வரலாம்” சிந்திப்போம் கூட இல்லை😂

2. சம்பந்தனுக்குகோ வேறு எந்த அரசியல் வாதிக்கோ, எமக்கான உரிமையை எப்படி பெறுவது என்ற திட்டம், மூலோபாயம் கொஞ்சமும் இல்லை. ஆங்கிலத்தில் சொன்னால் they are clueless. ஆனால் அதை அப்படியே வெளியே சொல்ல முடியுமே? அதனால காலத்துக்கு காலம் இப்படி புருடா விடுறது. தேர்தல் நெருங்க, நெருங்க சுருதி கூடும். இன்னும் சில மாதங்களில் மனிதர் பிரபாகரன் பற்றி உயர்வுநவிழ்சியாக சொல்லுவார் பாருங்க்கோ.

3. ஆனால் இது சம்பந்தர் போல அரசியல்வாதிக்கு மட்டும் இல்லை, இங்கே யாழில் கருத்தெழுதும் நாம் யாவரும் கூட we are all clueless as to how to realize  our aims. None of us have a workable strategy or even any short term tactics that would get us closer to the solution we want. ஆனால் அதை ஒத்து கொள்ளும் பக்குவம் கருத்தாளருக்கும் இல்லை. அதனால்தான், சுமந்திரன் போய் இந்தியாவிடம் கேட்கலாமே, சர்வதேசத்திடம் கேட்கலாமே என சாத்தியமிலாதவற்ரை எழுதுகிறோம். அல்லது 10 வருடங்களுக்கு முன் இறந்து போன பிரபாகரன் 25 வருடத்துக்கு முன் சொன்ன விடயத்தை இப்போ வெட்டி ஒட்டி, இதைதானே நாம்ன்கேட்கிரோம் என்பதாக எழுதுவது.

சம்சும் போய் கேட்டா இந்தியா சொல்லப்போகும் ஒரே பதில் “ஆகட்டும் பார்கலாம்”.

இலங்கையும் இந்தியாவும் ஏதோ வடகிழக்கு இணைந்த தீர்வை லாபாய், லாபாய் என கூவி விப்பதுபோலவும், சம்சும் அதை காலால் தள்ளி விடுவதுபோலவும் போகுது கதை 😂.

சம் சும் வேலைக்காகாத வெறும் பயல்கள்தான், ஆனால் சம்சும் ஆல் ஒரு ஆணியைதானும் பிடுங்க முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அந்தளவுக்கு சம்சும் இடத்தில் எந்த தமிழன், அது நுணாவோ, நெடுக்கோ, சாமானியனோ, ஜஸ்டீனோ, கோசானோ இருந்தாலும் ஒரு ஆணியும் புடுங்க முடியாது என்பதும் உண்மையே.

நாம் முதலில்

1. நாம் எல்லோரும் clueless என்ற பேருண்மையை ஏற்க வேண்டும்

2. அடுத்து நாம் முஸ்லீம்கள் போல் சலுகை அரசியல் செய்யப் போகிரோமா அல்லது தொடர்ந்து உரிமை அரசியல் செய்ய போகிரோமா என்று துணிய வேண்டும்.

இவையிரெண்டும் இலாமல் எடுக்கும் எந்த முயற்சியும் வெறும் வாய்பேச்சு வடை சுடுதலாகவே முடியும்.

ஒன்றில் சம்பந்தனது ஊர்வடை அல்லது உங்களது/எங்களது புலம்பெயர் வடை.

Edited by goshan_che

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.