Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆணுக்குப் பெண் தாலி கட்டுதல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

புதிய சிந்தனையில் நாங்கள் தமிழர்கள்🥺

இன்றைய தினம் இலங்கை காசுக்கு தங்கத்தின் விலை 76150 ரூபா  

அந்தக்காலத்தில் பெண்ணுக்கு தாலி வேலி என்பார்கள் இப்ப ஆணுக்கு வேலி 

உந்த நெருப்பு விலையிலையும் சனம் நகைநட்டுகள் வாங்குதுகள் தானே.எங்காலையப்பா காசு?

  • Replies 59
  • Views 7.6k
  • Created
  • Last Reply
காலம் காலமாக மூட நம்பிக்கைகளில் கட்டமைக்கப்பட்டுள்ள ஒரு சமூகத்தில், பழைய கலாசாரம், பண்பாடு என்று குண்டுச் சட்டிக்குள் குதிரை ஒடுபவர்களுக்கு, தாலி ஆண்,பெண் சமத்துவத்திற்கு எதிரானது என்ற புரிதலில் உள்ள இடர் இயற்கையானது...
 
ஆண், பெண் இருவரும் அணியலாம் அன்றேல் இருவரும் அணியாது விடலாம். அதுவே சமத்துவம், அதுவே மாக்ஸுயம்.
 
மனித வரலாறு என்பதே ஒப்புக்கொண்ட பழைய ஒழுங்குகளை உடைத்துக் கொண்டு காட்டாறாக பாய்வதே....

ஆணுக்கு தாலி கட்டுவது  ஒரு கட்டத்தில ஆணால் வரவேற்கத் தக்க விசயமாக மாறும். ஆணின் வயது ஏத்தனையோ அத்தனை பவுணில் தாலிகட்டுதல் அவசியம். அதற்கான செலவு பெண்வீட்டாருடையது.  விவகாரத்து ஏற்படும் பட்சத்தில் ஆணிடம் இருந்து திரும்பப் தாலியை பெறக் கூடாது.  இவ்வாறான விதிகளோடு இவை வரவேற்கப்படும். 

இந்த ஆரம்பங்கள் எல்லாம்  நாளை பொல்லு கொடுத்து அடிவாங்கும் கதையாக மாறும்.  சம உரிமை என்ற பெயரில் பெண்ணையும் பெண் வீட்டாரையும் நெருக்கடிக்குள் தள்ளும். தாலி வரதட்சணை எல்லாம்  ஆணாதிக்கத்தின் சுரண்டல். இது அதுக்கு போனஸ் போன்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

உந்த நெருப்பு விலையிலையும் சனம் நகைநட்டுகள் வாங்குதுகள் தானே.எங்காலையப்பா காசு?

எல்லாம்  அங்க இருந்து பாஸ் ஆவதுதானே அண்ண நான் பணத்தை சொல்லல ஏன் பணமும் தான் தற்போது வெளிநாட்டில் பல பவுண்ட்கள் கட்டப்படுவதால் தான் இங்கும் பெண் பல பவுண்களில் தாலி கட்டப்படுகிறது நாளில் ஈழத்தில் இந்த முறையும் வரலாம் .

சிலருக்கு இந்த தாலி பிரச்சினையால் கல்யாணமே நின்று விட்டது கல்யாணம் முடிந்தும் தாலி பிரச்சினை நடந்து கொண்டும் இருக்கிறது புதுமையென நினைத்து  கண்ட கருமத்தையெல்லம் திணித்து தின்ன வைக்க முடியாது 

பிரபாகரன் எங்கள் தலைவர் மதிவதனி அம்மையாருக்கு தாலி கட்டியதால் தான் அவர் மனைவியானார் மாறாக பிரபா அண்ணைக்கு தாலி கட்டிருந்தால்??

 அவர் தமிழருக்கு விடுதலை பெற்றுக்கொடுக்கலாம் என நினைத்து  ஒரு போராட்டத்தையே ஆரம்பித்திருந்தார் இந்த தாலி கட்டும் போராட்டம் எந்த மாற்றத்தையும் நிகழ்த்த போவதில்லை

இதையும் கட்டாமல் கல்யாணம் கட்டுவது சிறந்தது நாம் வெள்ளைகாரன் ரேஞ்சிக்கு மாறிட்டு வருகிறோம் தமிழர்கள் இல்லையென்பதை நிருபிக்கும் காலம் நடந்து வருகிறது 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போகிற போக்கைப் பார்த்தால் இந்த திரியும் தடை செய்வதற்கான அம்சங்களை கொண்டிருக்குமோ என ஒரு சந்தேகம் .. என்ன இருந்தாலும் பண்பாடு என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு விடயத்திற்கெதிராக எவ்வாறு கருத்தடை ( I mean கருத்தாட ) முடியும் ….

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, suvy said:

என்னுடைய ஆதங்கம்  எல்லாம் தாலி கட்டுவதோடு மட்டும் இல்லாமல் அந்தப் பட்டுசேலை ரவிக்கை எல்லாம் அவருக்கு குடுத்து , மாறாக அந்தப் பெண்ணும் பட்டுவேட்டியும் பட்டுசட்டையும் அணிந்து தாலி காட்டினால்  செமையாய் இருந்திருக்கும். சமூகம் இன்னும் நிறைய முன்னேற இடமிருக்கு.......தாலி கழுத்தென்ன இடுப்பென்ன எங்க காட்டினாலும் அது பாட்டுக்கு தொங்கப்போகுது.....!   🤔

போற போக்கிலே, ஆண்கள்..  உடன் கட்டை ஏறுகிற  நிகழ்வுகளும், விரைவில் நடக்கும் போல் இருக்கு. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, smiling, closeup

இந்த அண்ணை.... மூன்று தாலி கட்டியிருப்பதை  பார்க்க, வயித்தெரிச்சலாக இருக்கு. :grin:

Sad Blackish GIF - Sad Blackish AnthonyAnderson GIFs

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: Santhulaki Eelapriyan

நாங்களும்....  60´ம் கலியாணத்துக்கு,   தாலி கட்டுவம். 🤩

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, சண்டமாருதன் said:

ஆணுக்கு தாலி கட்டுவது  ஒரு கட்டத்தில ஆணால் வரவேற்கத் தக்க விசயமாக மாறும். ஆணின் வயது ஏத்தனையோ அத்தனை பவுணில் தாலிகட்டுதல் அவசியம். அதற்கான செலவு பெண்வீட்டாருடையது.  விவகாரத்து ஏற்படும் பட்சத்தில் ஆணிடம் இருந்து திரும்பப் தாலியை பெறக் கூடாது.  இவ்வாறான விதிகளோடு இவை வரவேற்கப்படும். 

இந்த ஆரம்பங்கள் எல்லாம்  நாளை பொல்லு கொடுத்து அடிவாங்கும் கதையாக மாறும்.  சம உரிமை என்ற பெயரில் பெண்ணையும் பெண் வீட்டாரையும் நெருக்கடிக்குள் தள்ளும். தாலி வரதட்சணை எல்லாம்  ஆணாதிக்கத்தின் சுரண்டல். இது அதுக்கு போனஸ் போன்றது. 

ஒரு காலத்தில் மெட்டி அணியும் பழக்கம் ஆண்களுக்குரியதாக இருந்தது. இன்று அதை பெண்கள் தங்கள் அணிகலனாக சுவீகரித்துக்கொண்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

போங்கப்பா எல்லாம் ஒரு முதலீ டு தான் 😀..பணம் இருப்பவன் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறான் .. ஒரு குழுவில் இருப்பவர்களெல்லோரும் அமைதியாக இருப்பார்கள்.ஒருவன் தன்னைக்   காடட துள்ளிக்கொண்டு இருப்பான் அது போலத்தான். இதுவும். புரடசி என்று தங்களை  அறிமுகப்படுத்துகிறார்கள்  . 

  • கருத்துக்கள உறவுகள்
On 9/12/2019 at 1:38 PM, விசுகு said:

நானும்  இது  பற்றி  ஒரு  திரி  போட்டேன்

அதில் தாலி   மற்றும்  திருமணம் சம்பந்தமான  பல  தகவல்கள் இருந்தன

அதற்காகவே  அதை  இங்கு  இணைத்தேன்

அது  ஒரு முகநூல்  பதிவு  என்பதற்காக  மட்டும்   தூக்கி  விட்டார்கள்  போலும்

இந்த மாப்பிள்ளை  ஒரு  யாழ்  கள உறவு

அவரை  நான்  சந்தித்திருக்கின்றேன்

சத்தியமாய் அது நான் இல்லை.😂

  • கருத்துக்கள உறவுகள்

மணமக்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்....

18 hours ago, இரும்பொறை said:
காலம் காலமாக மூட நம்பிக்கைகளில் கட்டமைக்கப்பட்டுள்ள ஒரு சமூகத்தில், பழைய கலாசாரம், பண்பாடு என்று குண்டுச் சட்டிக்குள் குதிரை ஒடுபவர்களுக்கு, தாலி ஆண்,பெண் சமத்துவத்திற்கு எதிரானது என்ற புரிதலில் உள்ள இடர் இயற்கையானது...
 
ஆண், பெண் இருவரும் அணியலாம் அன்றேல் இருவரும் அணியாது விடலாம். அதுவே சமத்துவம், அதுவே மாக்ஸுயம்.
 
மனித வரலாறு என்பதே ஒப்புக்கொண்ட பழைய ஒழுங்குகளை உடைத்துக் கொண்டு காட்டாறாக பாய்வதே....

சிறப்பான கருத்து. மண மக்களுக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இது ஆண் தோற்றத்தில் இருக்கும் பெண்ணாக இருக்கலாம்.. அது பெண் தோற்றத்தில் இருக்கும் ஆணாக இருக்கலாம்.

சும்மா விட்டுத்தள்ளுங்க. பொழுதுபோக்க ஏதாவது ஒன்று செய்தியாக வேண்டும். அதில் ஓசி விளம்பரம் வேறு.

தாலியே கட்டமாட்டம் என்று விளம்பர..  வகுப்பெடுத்தவை எல்லாம் தங்கட கலியாணங்களில் கட்டிக்காட்டினவை.

அப்படியாப்பட்ட சமூகத்தில்.. இதெல்லாம் சகஜமப்பா. 🤣

2 hours ago, nedukkalapoovan said:

இது ஆண் தோற்றத்தில் இருக்கும் பெண்ணாக இருக்கலாம்.. அது பெண் தோற்றத்தில் இருக்கும் ஆணாக இருக்கலாம்.

சும்மா விட்டுத்தள்ளுங்க. பொழுதுபோக்க ஏதாவது ஒன்று செய்தியாக வேண்டும். அதில் ஓசி விளம்பரம் வேறு.

தாலியே கட்டமாட்டம் என்று விளம்பர..  வகுப்பெடுத்தவை எல்லாம் தங்கட கலியாணங்களில் கட்டிக்காட்டினவை.

அப்படியாப்பட்ட சமூகத்தில்.. இதெல்லாம் சகஜமப்பா. 🤣

பெண் வாசனையே வேண்டாம் என்று சொன்ன ஒருவர் கலியாணம் கட்டி யாழுக்கு வருவதை குறைத்ததையும் நாங்கள் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறம்....

ஆள் ஆர் என்று மட்டும் சொல்ல மாட்டேன் 😁

 மணப்பெண் மாப்பிள்ளைக்கு தாலிகட்டிய சம்பவமாக ஊடகங்களில் சித்தரிக்கப்பட்டிருந்தாலும் உண்மையில் நடை பெற்றது மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் தமக்குள் தாலி மாற்றிக்கொண்ட நிகழ்வே என தனிப்பட்ட தகவல்கள் மூலமாக  அறிந்து கொண்டேன். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாப்பிள்ளை யாழ்கள உறவாம்? யாரென்று தெரியவில்லை ஆனாலும், அவர் இதை விளம்பரப்படுத்தி செய்யாத போது, இதை நாமும் ஒரு தனிப்பட்ட விடயமாக கடந்து செல்வதுதானே கண்ணியமான அணுகுமுறை?

இதை சிலாகிப்பதில் ஏதும் பொது நலனிருப்பதாக தெரியவில்லை.

பிக்பாசில் மூன்றாம் நபர்களின் தனிமனித விடுப்பு வேண்டாம் என்று கருத்தாடலை தடை செய்யும் நாம், இன்னொரு கள உறவின் தனிப்பட்ட விடயத்தில் மூக்கை நுழைப்பானேன்?

அவர் இதைதான் ஒரு புரட்சியாக செய்வதாயோ அல்லது எல்லோரும் இப்படி செய்யுங்கள் என்றோ கூறவில்லையே?

சொல்லப்போனால் ஏன் இப்படி செய்தார்கள் என்பதற்கு நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஊகம் மட்டுமே சொல்கிறோம்.

அவர்களுக்கு ஒரு காரணம் இருக்கும். அதை அவர்கள் மட்டுமே அறிந்தால் போதும்.

ஊரில் கதைக்க பிரச்சினையா இல்லை. டேப்லாயிட் பத்திரிகைகள் போல தனிமனித வாழகையில் மூக்கை நுழைக்கும், கருத்து சொல்லும் அருவருப்பான பழக்கத்தை முடிந்தளவு தவிர்ப்போம் என்பதே என் வேண்டுகோள். 

  • கருத்துக்கள உறவுகள்

எம்மவர்கள் பலர் இப்போதெல்லாம் புதுமை என்று கூறிக்கொண்டு பல கோமாளித்தனங்களைச் செய்கின்றனர். இதுபோன்ற ஒன்று தான் இதுவும். தாலி கட்டுவது என்பதே விசர் வேலை. இதில் ஆணுக்கும் கட்டுவது ????? சடங்குகள் இன்றி தமிழ்முறைப்படி இவர்கள் திருமணம் செய்திருந்தால் வாழ்த்தலாம், பாராட்டலாம்.

கேரள இனத்தவரின் சடங்குகளில் ஆணும் பெண்ணும் கழுத்துக்கு நகை அணிவிப்பது உண்டு. அதை பார்த்தும் இவர்கள் செய்திருக்கலாம். என்னைப் பொறுத்தவரை தேவையற்ற விடயமும் எம் அங்கலாய்ப்பும்

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

இந்த மாப்பிள்ளை யாழ்கள உறவாம்? யாரென்று தெரியவில்லை

கறுப்பன் என்று ஒரு  காலத்தில் யாழில்  எழுதினார்

சுவிசுக்கு  போயிருந்தபோது   சந்தித்தேன்

கொஞ்சம்  தாயகப்பற்று   அதிகமான  தம்பி

மற்றும்படி  தாலி  கட்டு சம்பந்தமாக  ஏதும்  சொல்வதற்கில்லை😥

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ஊர்க்காவலன் said:

புதுசு கண்ணா புதுசு 😜

9e6871cf4d_album.jpg

bb4d49f3b2_album.jpg

முகநூல் முழுக்க முழுக்க கழுவிக்கொண்டு திரிகிறானுகள் இந்தப்படத்தை வச்சி.  நம்மளும் கண்டுக்காம போயிடுவம் 

எங்கயாச்சும் சாமிக்கு அலகு குத்தி காவடி எடுக்கிறாங்களாயா என்ன அந்தப்பக்கம் போவோம்

28168270-157064148328753-305831787891774

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

முகநூல் முழுக்க முழுக்க கழுவிக்கொண்டு திரிகிறானுகள் இந்தப்படத்தை வச்சி.  நம்மளும் கண்டுக்காம போயிடுவம் 

எங்கயாச்சும் சாமிக்கு அலகு குத்தி காவடி எடுக்கிறாங்களாயா என்ன அந்தப்பக்கம் போவோம்

28168270-157064148328753-305831787891774

வயதுக்கு வந்த இருவர் தம்விருப்பபடி தம் திருமண நாளை கொண்டாடுவதற்கும். கதற கதற பச்சிளம் பிள்ளைகளின் உடலில் கூரிய ஆயுதங்கள பாய்சுவதற்கும் பெரிய வேறுபாடு உண்டு. முதலாமதில் ஒரு. வெகுஜன நலனும் (public interest) இல்லை. இரெண்டாவதில் 100/100 வெகுஜன நலன் இருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, goshan_che said:

வயதுக்கு வந்த இருவர் தம்விருப்பபடி தம் திருமண நாளை கொண்டாடுவதற்கும். கதற கதற பச்சிளம் பிள்ளைகளின் உடலில் கூரிய ஆயுதங்கள பாய்சுவதற்கும் பெரிய வேறுபாடு உண்டு. முதலாமதில் ஒரு. வெகுஜன நலனும் (public interest) இல்லை. இரெண்டாவதில் 100/100 வெகுஜன நலன் இருக்கிறது.

பண்டைக்காலம் தொட்டு பச்சிளம் பெண்குழந்தைகளுக்கு  கதறக்கதற தோடு குத்துகின்றார்களே அது கொடுமையாக தெரியவில்லையா?

பக்தி எனும் பெயரில் குழந்தைகளுக்கு அலகு குத்துவதை நான் ஆதரிப்பவன் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, குமாரசாமி said:

பண்டைக்காலம் தொட்டு பச்சிளம் பெண்குழந்தைகளுக்கு  கதறக்கதற தோடு குத்துகின்றார்களே அது கொடுமையாக தெரியவில்லையா?

பக்தி எனும் பெயரில் குழந்தைகளுக்கு அலகு குத்துவதை நான் ஆதரிப்பவன் அல்ல.

தோடு குத்துவது, ஆபிரிக்காவில் சொண்டில் தட்டை ஒட்டுவது, மா சே க்கு முந்திய சைனாவில் கால் பாதத்தை உடைத்து துணியால் கட்டுவது இப்படி எல்லாமே கொடுமை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

தோடு குத்துவது, ஆபிரிக்காவில் சொண்டில் தட்டை ஒட்டுவது, மா சே க்கு முந்திய சைனாவில் கால் பாதத்தை உடைத்து துணியால் கட்டுவது இப்படி எல்லாமே கொடுமை.

வாழ்க்கை என்பது நகர்ந்து செல்லும் போது.....காலத்துக்குக் காலம்....சில பழக்க வழக்கங்களையும்... தன்னுடன் காவிக்கொண்டு செல்கின்றது...!

அந்தப் பழக்க வழக்கங்கங்களை....இன்னொரு கால கட்டத்தில் நின்று பார்க்கும் போது...அவை முட்டாள் தனமாகத் தோன்றுவது...வழமை தான்!    எனது கருத்தானது....அந்தப் பழக்க வழக்கங்களை.....அந்தக் கால கட்டத்தில் மட்டுமிருந்தே பார்க்க வேண்டும்!

ஆபிரிக்காவில்...சொண்டில் தட்டை ஒட்டுவது....ஒரு ஆணாதிக்க சமுதாய அமைப்பின் முக்கிய அம்சமாகக் கருதப் பட்டது! ஒரு ஆபிரிக்கப் பெண்...அந்த வழக்கத்தைப் கடைப்பிடிக்க மறுத்துப் போராடியிருந்தால்...அவளுக்கு மாப்பிளையே கிடைத்திருக்காது என்பது மட்டுமன்றி......அவள் அந்தக் குழுமத்திலிருந்தே....விவக்கி வைக்கப் பட்டு....மரணித்திருப்பாள்!

அதே போல அந்தக் காலத்து ஜப்பானிலும்....சீனாவிலும்...கால்களைச் சிறிதாக்குவதும் தனது அழகை...ஒரு பெண் அதிகரிப்பதற்காகத் தான்....!அன்னநடை....என்று எமது புலவர்கள் வர்ணிக்கும் அந்த நடை நடப்பதற்க்காகவே....பாதங்கள் சிறிதாக்கப் படுகின்றன!

இவற்றில் உள்ள ஒரு ஆச்சரியம் என்னவெனில்....இவை அனைத்தும் பெண்களாலேயே செய்யப்படுகின்றன என்பது தான்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.