Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருச்சி அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை: விடியவிடிய நடக்கும் மீட்பு பணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருச்சி அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை: விடியவிடிய நடக்கும் மீட்பு பணி

 

தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இரண்டு வயது குழந்தையை மீட்கும் பணி இரவிரவாக இடம்பெற்று வருகிறது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டி கிராமத்தில் நேற்று மாலை 5.40 மணிக்கு சுஜித் என்ற இரண்டு வயது குழந்தை தெரியாமல் தவறி விழுந்துள்ளான்.

sujith434413-1572059705.jpg

இந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை தொடர்ந்து 14 மணி நேரமாக மீட்புப் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், 27 அடியில் இருந்த சுஜித், 68 அடி ஆழத்திற்கு சென்று இருந்த நிலையில் தற்போது 70 அடிக்கு சென்று விட்டான்.

EHvjHbbUcAAUMfU.jpg

மூச்சுவிடுவதில் சிரமம் இருக்கக்கூடாது என்பதற்காக ஒட்சிசன் தொடர்ந்த செலுத்தப்பட்டு வருகிறது. குழந்தையை எப்படியாவது மீட்க வேண்டும் என்று உலக மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

gallerye_19401357_2397057.jpg

இன்னொரு பக்கம் டுவிட்டரில் சுஜித் ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

எனினும் மற்றொரு பக்கம், குழந்தையை இன்னுமா மீட்க முடியவில்லை என்ற கொந்தளிப்பு எழுந்துள்ளது. 

அதேபோல பொதுமக்கள் தரப்பில் இருந்தும் குமுறல்கள் வெளிப்பட்டு வருகின்றன. 70 அடி ஆழத்தில் விழுந்த குழந்தையை மீட்க முடியாதா.. நம்மிடம் வசதி இல்லையா.. சாதாரண மக்களின் துயர் போக்கும் அறிவியல் நம்மிடம் இல்லையா.. ஆழ்கடலில் விழுந்த விமானத்தை தேடும் அறிவியல் இருக்கும்போது, 70 அடி ஆழத்தில் விழுந்த குழந்தையை மீட்க அறிவியல் இல்லையா.. என்ன டெக்னாலஜி இது? என்று டுவிட்டரில் கடுமையானஅதிருப்திகளையும், ஆவேசமான பதிவுகளையும் பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அரசுத் தரப்பில் அத்தனை விதமான ஒத்துழைப்பும், உதவிகளும் நேற்று மாலை முதல் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

https://www.virakesari.lk/article/67606

  • Replies 52
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Image result for robotic arm to reach deep holes

சந்திரனுக்கு செயற்கை ரோபோ அனுப்பும் நாட்டிடம் இந்தக் குழந்தையை உடனடியாக மீட்கும் இலகு தொழில்நுட்பம் இல்லையா?

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 இரண்டாயிரம் அடி ஆழத்தில் இருந்து நாட்டின் வளத்தை சுரண்ட (ஹைட்ரோ கார்பன்)ஆயுதங்கள் இருக்கும்  அந்த நாட்டில்...

 70 அடி ஆழத்தில் விழுந்த பச்சை பாலகனை மீட்க எதும் இல்லை அந்த நாட்டில்  ???????? 

ஏழைமக்களை புறந்தள்ளிவிட்டு கனவிலையும் வல்லரசு நினைப்பு.
பாலகன் சுகமாக காப்பாற்றப்படவேண்டும் என இறைவனை வேண்டுகின்றேன்.

பிரான்ஸ்காரன்  செய்த அதி சக்தி வாய்ந்த  ரபேஃல் விமானங்களையே எலுமிச்சை காப்பாற்றும் போது இப்படியான மக்களின்  அவலங்களை  தீர்ப்பதற்காக விரைந்து செயற்பட இந்தியர்கள் எலுமிச்சை போன்ற அதி உயர் தொழில் நுட்பத்தை பாவிக்காதது ஏன்? 

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்ககாரன் பென்னாம் பெரிய கப்பலையே champagne ஐ நம்பி கடலில் விடுறான்..

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, MEERA said:

அமெரிக்ககாரன் பென்னாம் பெரிய கப்பலையே champagne ஐ நம்பி கடலில் விடுறான்..

அதுதான் கப்பல் தள்ளாடுது மீரா.....!

பிள்ளை நலமாக மீண்டுவர வேண்டும்......!    

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்: மீட்புப் பணிகளின் நிலவரம் என்ன?

சிக்கிய குழந்தையின் கை Image captionகண்காணிப்பு கேமரா எடுத்த புகைப்படம் - சிக்கிய குழந்தையின் கைகள்

மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றில் விழந்த குழந்தையை மீட்கும் முயற்சியில் மத்திய - மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். முதலில் 26 அடி ஆழத்தில் இருந்த குழந்தை, சுமார் 68 அடி ஆழத்திற்கு இறங்கிவிட்டதால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

திருச்சி மாவடடம் மணப்பாறைக்கு அருகில் உள்ள நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பிரிட்டோ ஆரோக்கியராஜ். இவரது மனைவி கலாராணி. இவர்களுக்கு சுஜித் வில்சன் என்ற இரண்டு வயது மகன் இருக்கிறார்.

கட்டடத் தொழிலாளராக வேலை பார்த்துவரும் பிரிட்டோ, தனது வீட்டின் அருகில் உள்ள தனது வயல்காட்டில் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பாக ஆள்துளை கிணறு ஒன்றைத் தோண்டியுள்ளார். ஆனால், அந்தக் கிணற்றில் தண்ணீர் வராததால், அதனை இப்போது பயன்படுத்துவதில்லை. அந்த ஆழ்துளைக் கிணற்றைச் சுற்றி தற்போது விவசாயம் பார்த்துவருகிறார் பிரிட்டோ.

தாயோடு இருக்கும் குழந்தைதான் இப்போது ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ளது. Image captionதாயோடு இருக்கும் குழந்தைதான் இப்போது ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ளது.

இந்தக் ஆழ்துளைக் குழாய் கைவிடப்பட்டிருந்த நிலையில், மண் விழுந்து மூடியிருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக பெய்த மழையில் அந்த மண் உள்வாங்கியது. இந்த நிலையில், வயல்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சுஜித் வெள்ளிக்கிழமையன்று மாலை ஐந்தரை மணியளவில் எதிர்பாராத விதமாக அந்தக் குழாய்க்குள் விழுந்தான்.

இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, மீட்புப் பணிகள் துவங்கின. குழந்தைக்கு மூச்சுத் திணறாமல் இருப்பதற்காக குழாய் மூலம் ஆக்ஸிஜன் அனுப்பப்பட்டது. இம்மாதிரி ஆழ்குழாய் கிணற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுவரும் சேலம், மதுரை, நாமக்கல் ஆகிய இடங்களைச் சேர்ந்த மீட்பு குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

பிறகு கயிறு மூலம் சுருக்கைப் போல மாட்டி, குழந்தையை மேலே இழுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், குழந்தையின் கைகள் சரியாகச் சிக்கவில்லை. இதனிடையே மண் மேலும் சரிந்ததால், 28 அடியில் இருந்த குழந்தை இன்னும் ஆழத்துக்கு சென்றது. தற்போது குழந்தை கிட்டத்தட்ட 65 அடி முதல் 70 அடி ஆழத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீட்பு பணிகள் தீவிரம்

இதற்கிடையில் ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகிலேயே பொக்லைன் எந்திரத்தின் மூலம் பள்ளம் தோண்டி, குழந்தையை மீட்கும் முயற்சிகள் துவங்கின. ஆனால் சுமார் 12 அடி ஆழத்திலேயே பாறை குறுக்கிட்டது.

பாறையை உடைக்கும் முயற்சியில் பெரும் சத்தம் ஏற்பட்டதால், அந்த முயற்சி கைவிடப்பட்டது. குழந்தை பயந்துவிடாமல் இருப்பதற்காக அவரது பெற்றோரும், உறவினர்களும் ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் இருந்தவாறு பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருந்தனர்.

காலை ஐந்து முப்பது மணிவரை குழந்தையிடமிருந்து அழுகுரலோ, முனகல் சத்தமோ கேட்டுவந்த நிலையில், தற்போது குழந்தை ஆழத்திற்கு சென்றுவிட்டதால் சத்தம் ஏதும் இல்லை. தற்போது குழந்தை 4 அங்குல அகலமுள்ள குழியில் சிக்கி உள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

குழந்தை மீட்கப்பட்டால், உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கு அருகிலேயே ஆம்புலன்ஸ் வாகனமும் மருத்துவர்களும் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், குழந்தையை மீட்கும் முயற்சிகளுக்காக அரக்கோணத்தில் இருந்து தேசியப் பேரிடர் மேலாண்மைக் குழுவினர் அங்கு வந்துள்ளனர். மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழுவினர் ஏற்கனவே அங்கு முகாமிட்டுள்ளனர்.

அருகில் குழி தோண்டி மீட்பு முயற்சி

அவ்வப்போது பெய்துவரும் மழையும் மீட்ப்புப் பணிகளில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

"குழந்தையை மீட்பதற்காக 7-க்கும் மேற்பட்ட குழுவினர், எல்லோருமே அங்கீகரிக்கப்பட்ட குழுவினர் - தீவிர முயற்சிகளில் ஈடுபட்டனர். ஆனால், அதில் வெற்றி இதுவரை கிடைக்கவில்லை. தொடர்ந்து முயற்சி நடந்துவருகிறது" என அப்பகுதியில் முகாமிட்டுள்ள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார்.

https://www.bbc.com/tamil/india-50192250

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை: அம்மா ஏன் இன்னும் வரல என்பதே குழந்தையின் கவலையாக இருக்கும்'

child borewellபடத்தின் காப்புரிமைPIXELFUSION3D / GETTY IMAGES

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டரை வயது குழந்தை சுஜித் வின்செனை மீட்பதற்கு இதுவரை எடுத்த முயற்சிகள் வெற்றிகரமாக அமையவில்லை.

இரவு முழுவதும் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காததால், இப்போது தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் அங்கு வரவழைக்கப்பட்டு சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மண்சரிவால் குழந்தை மேலும் ஆழத்துக்கு சென்றது கவலையடைய வைக்கும் செய்தியாக உள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில், இதற்கு முன்பு ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தைகளை தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் வெற்றிகரமாக மீட்டுள்ளனர். இப்போதைய முயற்சியும் வெற்றியில் முடிந்து சிறுவன் சுஜித் மீட்கப்படுவான் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்நிலையில், ஆழ்துளை கிணற்றில் சிக்கிக்கொண்ட ஒரு குழந்தையின் மனநிலை எப்படியிரும், மீட்கப்பட்டபின் அக்குழந்தை அனுபவித்த விபத்துக்கு பிந்தைய அதிர்ச்சியில் இருந்து வெளிக்கொண்டுவர என்ன செய்ய வேண்டும் என்று குழந்தைகள் நல மருத்துவரும், CHES அமைப்பின் நிறுவனருமான பி. மனோராமா பிபிசி தமிழின் மரிய மைக்கேல் உடன் பேசினார்.

அவர் தெரிவித்த கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.

காப்பாற்ற அம்மா, அப்பா வரமாட்டார்களா - பயமும், ஏக்கமும்

திடீரென இவ்வாறு ஒரு குழந்தை ஓர் ஆழ்துளை கிணற்றில் விழும்போது, எங்கே போய் சேரும், என்ன நடந்தது, யார் செய்த தவறு, என்ன நடக்கும், என்று எதுவும் அதற்கு புரியாது என்கிறார் மனோரமா.

ஆழ்துறை கிணறு என்கிறபோது, உள்ளே போகப்போக அதிக இருட்டாக இருக்கும். இந்த வயதில் இருக்கிற குழந்தைகளுக்கு இருட்டை கண்டால் பயமிருக்கும். நம்மை காப்பாற்றி விடுவார்களா, தான் கத்துவது வெளியே இருப்பவர்களுக்கு கேட்கிறதா என்ற ஏக்கம் இருக்கும்.

சின்ன குழந்தைகள் அம்மா, அப்பாவிடம் ஏதாவது கேட்டால் அதற்கு ஒரு பதில் கொடுக்க வேண்டுமென நாங்கள் (மருத்துவர்கள்) சொல்வோம். இல்லாவிட்டால் அந்த குழந்தையின் மனம் அதிக ஏமாற்றமடையும்.

ஆள்துளை கிணற்றில் விழுந்த குழந்தைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

எனவே, இவ்வாறு அகப்பட்டிருக்கும் குழந்தை கூச்சலிட்டு கூப்பிட்டும், யாரும் பதில் கொடுக்கவில்லை, அருகில் வரவில்லை என்றால் பயம் அதிகமாகிவிடும்.

நம்மை யாராவது காப்பாற்ற வருவார்களா, வரமாட்டார்களா என்ற எண்ணம் வர வாய்ப்புள்ளது.

ஏழு வயதிற்கு கீழுள்ள குழந்தைகளுக்கு தனக்கு மரணம் நிகழும் என்பது போன்றெல்லாம் சிந்திக்க தெரியாது என்பதால், இந்த குழந்தை மரணம் பற்றி சிந்திக்காது.

கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

முடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil

இருட்டு, அப்பா மற்றும் அம்மா இல்லை என்பதால் இனம் புரியாத பயம்தான் குழந்தையில் மனதில் தலைதூக்கியிருக்கும் என்று விவரித்தார் மருத்துவர் மனோரமா.

"இன்னும் அம்மா ஏன் வரல, அப்பா ஏன் வர"

இரண்டரை வயது குழந்தையின் மனதில் "இன்னும் அம்மா ஏன் வரல, அப்பா ஏன் வரல," என்பது மட்டும்தான் இருக்கும்.

கிணறு Image captionகோப்புப்படம்

"ஏதோ பண்ணுறாங்க. பேசுறதெல்லாம் கேட்குது. ஆனால், ஏதோ முயற்சி பண்ணுறாங்க, நாம சேர வேண்டிய இடத்திற்கு இன்னும் போய் சேரல," எனபதெல்லாம் குழந்தைக்கு தோணலாம் என்கிறார் அவர்.

ஆனால், "இவ்வளவு நேரம் ஆயிருச்சி. இதுக்கப்புறம் தோத்துருவாங்களா," என்று எண்ண இன்னும் கொஞ்சம் மனப்பக்குவம் வேண்டும்.

எனவே, முயற்சிகள் தோல்வி அடைகின்றன என்பதை உணர ஆரம்பிக்கும் பயம் அதிகரிக்கும் என்கிறார் மருத்துவர் மனோரமா.

கருவிகள் அம்மா, அப்பா சொல்லி வருகிறதா? வேற்றுகிரகத்தில் இருந்து வருதா?

மேலே இந்த குழந்தையை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகளின்போது, வண்டி சத்தம், சத்தம் கேட்குமா என்று கேட்போது, சுற்றி என்ன நடக்கிறது என்றே குழந்தைக்கு தெரியாது என்கிறார் மனோரமா.

உள்ளே வருகிற கருவிகள் நம்ம அப்பா, அம்மா சொல்லி உள்ள வருகின்றனவா, அல்லது வேற்றுகிரகத்தில் இருந்து வருதா, அல்லது வேறுயாராவது ஏதாவது செய்கிறார்களோ என்கிற கலக்கமும், பயமும் இந்த குழந்தைக்கு மிகவும் அதிகமாகும். இதனால், நம்பிக்கையைவிட அச்சம்தான் அதிகமாகும் என்கிறார் மருத்துவர் மனோரமா.

மீட்கப்பட்ட பின் தாயை பிரியாமல்...

இந்த குழந்தை மீட்கப்பட்ட பின்னர், அதற்கு பல பாதிப்புகள் ஏற்படும் என்று மனோரமா தெரிவித்தார்.

மீட்கப்பட்ட பின்னர், பல நாட்கள் அம்மாவை விட்டு இந்த குழந்தை பிரியவே பிரியாது. இருட்டை கண்டு பயம் ஏற்படும் என்பதால், இரவில் விளக்கை அணைத்துவிட்டால் அச்சப்பட தொடங்கிவிடும்.

கடந்து செல்க யூடியூப் பதிவு 2 இவரது BBC News Tamil
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

முடிவு யூடியூப் பதிவின் 2 இவரது BBC News Tamil

புதிதாக யாராவது வந்தாலோ அல்லது ஏதோ ஒன்று வந்தால்கூட பயம் ஏற்படும்.

மனநல ஆலோசனை மற்றும் ஆற்றுப்படுத்துதல்

இதற்கு எல்லாம் தொடர் மனநல ஆலோசனை (கவுன்சிலிங்) கொடுக்கப்பட வேண்டும்.

எதிர்காலத்தில் வேறு ஏதாவது குழந்தை விழுந்து விட்டதாக படிக்கும்போது கூட, இந்த குழந்தைக்கு இந்த எண்ணங்கள் திரும்ப வருவதற்கு வாயப்புண்டு.

இந்த குழந்தைக்கு கொடுக்கப்படும் கவுன்சிலிங் எந்த அளவுக்கு செயல்திறன் மிக்கதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பலன் கிடைக்கும்.

மனநல ஆலோசனைபடத்தின் காப்புரிமைBASSITTART / GETTY IMAGES

குறிப்பாக, அம்மா வந்துருவாங்க என்கிற உறுதியைதான் வழங்க முடியும். அம்மாவிடம் சேர்த்துவிட வேண்டும் என்பதுதான் அந்த குழந்தைக்கு தீர்வு.

இந்த குழந்தையின் நிலையில், கவுன்சிலிங் அல்லது ஆற்றுப்படுத்துதல் என்பதெல்லாம் அம்மா இருக்கணும், அம்மாவ பார்கணும், அம்மாகிட்ட போய் சேரணும் என்பது மட்டுமே.

உட்கார வைத்து பேசி, உன்னைப் பாதுகாக்க நாங்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்று சொன்னாலும் அந்த குழந்தைக்கு புரிய போவதில்லை.

விவரம் தெரியவரும்போது, கஷ்டப்பட்டாலும் உன்னை காப்பாற்றி விடுவோம் என்று என்ற நம்பிக்கையை குழந்தைக்கு கொடுக்கலாம்.

ஆபத்து மிக்க அல்லது விபத்து நடக்க வாய்ப்புள்ள இடங்களுக்கு தனியாக செல்வது, அங்கெ தனியாக விளையாடுவது போன்றவற்றை குழந்தைகளிடம் அறிவுறுத்த வேண்டும். இது மாதிரியானவற்றில் இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் உள்ளது என்பதை எல்லாம் புரியும்படி எடுத்து சொல்ல வேண்டும் என்கிறார் மருத்துவர் மனோரமா.

https://www.bbc.com/tamil/india-50192526

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் உதவியை கேட்டிருந்தால் இலகுவாக மீட்டுருக்கலாம் சீனாவில் 100 அடி ஆழத்தில் இருந்த குழந்தை இலகுவாக மீட்கப்படுகிறது இந்தியாவில்  அழிக்கும் ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்டாலும் காப்பாற்றும் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படுவதில்லை . அப்படி சீனாவிடம் கேட்டால் தங்கள் தரம் குறைந்து விடும் என்ற கெளரவ குறைச்சல் ஆனால் கடன்கள் மட்டும் உலக நாட்டிடன் கேட்டு வாங்குவாங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

சுஜித் வில்சனை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழு தீவிர முயற்சி - விரிவான தகவல்கள்

சுஜித் வில்சனை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழு தீவிர முயற்சி - விரிவான தகவல்கள்படத்தின் காப்புரிமைFACEBOOK

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: குழந்தையை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழு தீவிர முயற்சி

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நவீன கேமரா பொருத்திய கருவியை பயன்படுத்தி மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் பிரிட்டோ. கட்டிட தொழிலாளியான இவர் வீட்டின் அருகே விவசாயமும் செய்து வந்தார். இவருடைய மனைவி கலாமேரி. இவர்களுடைய மகன்கள் புனித் ரோசன் (வயது 4), சுஜித் வில்சன் (வயது 2).

பிரிட்டோ தனது வீட்டு உபயோகத்திற்கான தண்ணீர் தேவைக்காக, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டின் அருகே ஆழ்துளை கிணறு அமைத்திருந்தார். சுமார் 400 அடி ஆழத்திற்கு அந்த ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது.

ஒரு ஆண்டு வரை அந்த ஆழ்துளை கிணறு பயன்பாட்டில் இருந்தது. பின்னர் தண்ணீர் இல்லாத நிலையில், அந்த ஆழ்துளை கிணறு பயன்பாடின்றி இருந்தது. இதனால் ஆழ்துளை கிணற்றை மூடும் வகையில், மேல்மட்டம் வரை மண்ணை கொட்டியுள்ளனர். தற்போது அந்த பகுதியில் சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அப்பகுதியில் மழை பெய்ததால் ஆழ்துளை கிணற்றை மூடியிருந்த மண் சுமார் 30 அடி ஆழம் வரை கீழே இறங்கியது.

இந்நிலையில், நேற்று முன்தினம் பிரிட்டோ வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் கலாமேரி, சுஜித்வில்சனுடன் இருந்தார். மாலை சுமார் 5.30 மணியளவில் சுஜித்வில்சன் அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அவன் சோளம் சாகுபடி செய்யப்பட்ட பகுதியில் நடந்து சென்றபோது, எதிர்பாராதவிதமாக ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். இதில் மண்ணில் உராய்ந்தபடி சென்று அடிப்பகுதியில் சிக்கினான்.

இதைக்கண்ட கலாமேரி அலறியடித்துக்கொண்டு அங்கு ஓடிச்சென்றார். குழந்தை அடிப்பகுதியில் சிக்கியிருப்பதை கண்டு அவர் சத்தம்போட்டார். இதனால் அக்கம், பக்கத்தினர் அங்கு திரண்டு வந்து பார்த்தனர். மேலும் உடனடியாக இதுபற்றி மணப்பாறை தீயணைப்பு துறையினர், போலீசார் மற்றும் பிரிட்டோவுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வேலைக்கு சென்ற இடத்தில் இருந்து, பிரிட்டோ பதறியடித்துக்கொண்டு அங்கு வந்தார்.

மேலும் மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு குத்தாலிங்கம் மற்றும் போலீசார், மணப்பாறை மற்றும் திருச்சியில் இருந்து தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து வந்து பார்த்து, குழந்தையை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மிகவும் குறுகலான அந்த ஆழ்துளை கிணற்றில், ஆட்கள் யாரும் இறங்க முடியாத நிலையில், கிணற்றின் அருகே குழிதோண்டி குழந்தையை மீட்க முடிவு செய்தனர்.

அதன்படி அங்கு 4 பொக்லைன் எந்திரங்கள் உள்ளிட்ட 5 எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, ஆழ்துளை கிணற்றின் அருகே குழிதோண்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இதற்காக அந்த பகுதியில் மின்விளக்கு வசதி செய்யப்பட்டது.

இதற்கிடையே அங்கு 108 ஆம்புலன்சுகள் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் நிறுத்தப்பட்டன. ஆழ்துளை கிணற்றின் அடிப்பகுதியில் சிக்கியுள்ளதால், குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருக்க ஆழ்துளை கிணற்றுக்குள் சிறிய டியூப் மூலம் ஆக்சிஜன் செலுத்தும் பணியில் மருத்துவக்குழுவினர் ஈடுபட்டனர். மேலும் அந்த குழிக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தி, குழந்தையை கண்காணித்தனர்.

மணப்பாறை அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் முத்துகார்த்திகேயன் தலைமையிலான குழுவினர், ஆழ்துளை கிணற்றில் உள்ள குழந்தைக்கு தொடர்ந்து ஆக்சிஜன் வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர். ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவாகும் காட்சிகளை டி.வி.யில் பார்வையிட்டு, குழந்தையின் நிலையை கண்காணித்தனர். எந்திரங்கள் மூலம் இரவு 8.15 மணியளவில் சுமார் 17 அடி வரை குழி தோண்டப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு கீழே பாறை இருந்ததால், குழிதோண்ட முடியாத நிலை ஏற்பட்டது.

சுஜித் வில்சனை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழு தீவிர முயற்சி - விரிவான தகவல்கள்படத்தின் காப்புரிமைDAILY THANTHI

இந்நிலையில் மதுரையில் இருந்து, ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் நிபுணர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர் இரவு 8.30 மணியளவில் அங்கு வந்தனர். அவர்கள் தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோருடன் சேர்ந்து சுஜித் வில்சனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மணிகண்டன் கண்டுபிடித்துள்ள கருவி மூலம், குழந்தையை மீட்கும் பணி நடைபெற்றது. ஆனால் அந்த கருவி மூலம் மீட்பு பணியை முழுமையாக மேற்கொள்ள முடியவில்லை. இதையடுத்து கணினியால் இயங்கக்கூடிய சுருக்கு கயிறுகள் மூலம் மீட்பு பணி தொடங்கியது. இரவு 11 மணிக்கு மேலாகியும், அந்த பணி தொடர்ந்து நடைபெற்றது. குழாய்களில் கயிறுகளை விட்டு, குழாய்களை பிணைத்து ஆழ்துளை கிணற்றுக்குள் இறக்கி, குழந்தையை மீட்க முயன்றனர்.

ஆனாலும் குழந்தையின் கைகளில் சரியாக கயிற்றை பிணைக்க முடியாததால், மீட்பு பணியில் பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும் மீட்பு பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது. மீண்டும், மீண்டும் கயிறுகளை ஆழ்துளை கிணற்றில் இறக்கி குழந்தையை மீட்க முயன்றும் முடியவில்லை.

அதிகாலை 3.20 மணிக்கு நாமக்கல்லில் இருந்து வெங்கடேசன் தலைமையில் வந்த ஐ.ஐ.டி. குழுவினர் தாங்கள் கொண்டு வந்த நவீன கருவியை ஆழ்துளை கிணற்றுக்குள் அங்குலம் அங்குலமாக இறக்கினார்கள். சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு அந்த கருவி குழந்தை சிக்கி இருந்த இடத்தின் அருகே சென்றது. அப்போது, அங்கு குழந்தை இல்லை. அதில் இருந்து மேலும் 50 அடி, அதாவது 30 அடியில் இருந்து 80 அடிக்கு சென்றது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மீட்பு குழுவினர் அந்த கருவியை மேலும் கீழே இறக்க முயன்றனர். ஆனால் அந்த இடத்தில் இருந்து அதற்கு மேல் குழி குறுகலாக இருந்ததால், அந்த கருவியை கீழே இறக்க முடியவில்லை. இதனால் அந்த கருவியை மேலே எடுத்து அதில் பொருத்தப்பட்டிருந்த கைகளை மாற்றினார்கள். பின்னர் அதிகாலை 3.50 மணிக்கு மாற்று கைகள் பொருத்தி மீண்டும் அந்த கருவி ஆழ்துளை கிணற்றுக்குள் இறக்கப்பட்டது.

ஆனால் அதுவும் குழந்தை இருந்த இடத்தின் அருகே அதிகாலை 4 மணிக்கு சென்றது. அதற்கு கீழ் மீண்டும் அந்த கருவியை கொண்டு செல்லமுடியவில்லை. இதனால் மீட்பு குழுவினர் செய்வதறியாது திகைத்தனர். அதே நேரம் அந்த நவீன கருவி மூலம் குழந்தை சுஜித் வில்சன் சுவாசிப்பது உறுதி செய்யப்பட்டது.

பின்னர் அந்த கருவியின் விட்டத்தை குறுகலாக்கி ஆழ்துளை கிணற்றுக்குள் இறக்க மீட்பு குழுவினர் முயற்சி மேற்கொண்டனர். இதற்கிடையே அதிகாலை 5 மணிக்கு புதுக்கோட்டையில் இருந்து வீரமணி என்பவர் தலைமையில் ஒரு குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசுவிடம் எப்படி குழந்தையை மீட்கப்போகிறோம் என்று விளக்கினார்கள்.

இதை தொடர்ந்து அவர்கள் குழந்தையை மீட்க நடவடிக்கை மேற்கொண்டனர். காலை 4.30 மணிக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினரின் உதவி கோரப்பட்டது. அவர்கள் உடனடியாக சென்னையில் இருந்து நடுகாட்டுப்பட்டிக்கு புறப்பட்டனர். ஆனாலும் தொடர்ந்து மற்ற குழுவினர் விடிய, விடிய மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து முயற்சித்தும் குழந்தையை மீட்க முடியவில்லை. அமைச்சர்கள் வெல்லமண்டிநடராஜன், விஜயபாஸ்கர், வளர்மதி, கலெக்டர் சிவராசு ஆகியோர் அந்த பகுதியிலேயே முகாமிட்டுள்ளனர்.

2-வது நாளாக நேற்று மீட்பு பணி இடைவெளி இல்லாமல் தொடர்ந்தது. குழந்தை சுஜித் வில்சனை மீட்பதற்காக திருச்சி, மதுரை, நாமக்கல், கோவை, புதுக்கோட்டை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து தனித்தனி குழுவினர் வந்தனர். அவர்கள் தாங்கள் கண்டுபிடித்த கருவி மூலம் குழந்தையை மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் ஒவ்வொரு குழுவினரின் முயற்சியும் பலன் அளிக்கவில்லை.

இதனைத்தொடர்ந்து திரைப்படத்துறையில் சினிமா சண்டை காட்சிகளில் விபத்து ஏற்பட்டால் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடும் குழுவினர், தகவல் அறிந்து சென்னையில் இருந்து நடுக்காட்டுப்பட்டிக்கு வந்தனர். இந்த குழுவினர் தாங்கள் வைத்திருந்த நவீன எந்திரம் மூலம் குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் குழந்தை சுஜித் வில்சனிடம் இருந்து எந்த அசைவும் இல்லை. தொடர்ந்து குழந்தைக்கு ஆக்சிஜன் கொடுக்கும் பணி நடைபெற்று வந்தது.

இதனிடையே மதியம் 12.15 மணி அளவில் மாநில பேரிடர் மீட்பு படையினர் சென்னையில் இருந்து வந்தனர். அதனைத்தொடர்ந்து 12.35 மணி அளவில் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புபடை குழு கமாண்டர் ஆர்.சி.ஓலா தலைமையில் 33 பேர் வந்தனர். இந்த குழுவினர் நவீன கருவிகளை கொண்டு வந்தனர். தேசிய மீட்பு படை குழுவினர் வந்ததும், அவர்களை பணி செய்யவிட்டு, விட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த மற்ற குழுவினரும் மற்றும் தீயணைப்பு துறையினர், காவல்துறையினரும் விலகி கொண்டனர்.

இதைத்தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், மாநில பேரிடர் மீட்பு குழுவினருடன் இணைந்து குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அதிநவீன கேமரா பொருத்திய பிரத்யேக கருவியை ஆழ்துளை கிணற்றுக்குள் விட்டு மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை மத்திய மண்டல துணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன், தென்மண்டல துணை இயக்குனர் சரவணன் தலைமையிலான குழுவினர் வந்துள்ளனர். குழந்தை உயிருடன் மீட்கப்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் ஆம்புலன்ஸ் வாகனத்துடன் மருத்துவ குழுவினர் உள்ளிட்ட குழுவினர் தயார் நிலையில் இருந்தனர்.

https://www.bbc.com/tamil/india-50197972

  • கருத்துக்கள உறவுகள்

அதிக பாறைகள்

சுஜித்தை மீட்க இன்னும் 3 மணி நேரம் ஆகலாம்.. ஏன் இந்த தாமதம்? 3 முக்கிய காரணங்கள்!

சுஜித்தை மீட்க இன்னும் 3 மணி நேரம் ஆகலாம்.. ஏன் இந்த தாமதம்? 3 முக்கிய காரணங்கள்!

சிறுவன் சுஜித்தை மீட்கும் பணிகள், 3 முக்கிய தவிர்க்க முடியாத காரணங்களால் கால தாமதம் அடைந்து வருகிறது.

திருச்சி: சிறுவன் சுஜித்தை மீட்கும் பணிகள், 3 முக்கிய தவிர்க்க முடியாத காரணங்களால் கால தாமதம் அடைந்து வருகிறது.

நேற்று முதல் நாள் மாலை திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த சுஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்துவிட்டார். இவரை மீட்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

இரண்டு ரிக் இயந்திரம் கொண்டு ஆழமாக சுரங்கம் தோண்டி, சுஜித்தை மீட்க ஓஎன்ஜிசி முயன்று வருகிறது. சுஜித்தை மீட்க வேண்டும் என்று தற்போது தமிழகம் மொத்தமும் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் தற்போது மீட்பு பணிகளில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டுள்ளது. ரிக் இயந்திரம் கொண்டு குழி தோண்டும் பகுதியில் நிறைய பாறைகள் இருக்கிறது. இந்த பாறைகள் காரணமாக ரிக் இயந்திரம் எளிதாக குழியை தோண்ட முடியவில்லை.

இதனால் ரிக் மிஷின் கொஞ்சம் கொஞ்சமாக திணறித் திணறி குழியை தோண்டி வருகிறது. இந்த பாறைகள் இல்லாமல் இருந்திருந்தால் 1 மணி நேரத்தில் குழி தோண்டி இருக்க முடியும். இதனால் தற்போது கூடுதலாக 4 மணி நேரம் தாமதம் ஆகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஒரே ரிக் இயந்திரம் நீண்ட நேரம் செயலாற்ற முடியாது. அதனால் இன்னொரு ரிக் இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை கொண்டு வர 2 மணி நேரம் தாமதம் ஆகியுள்ளது. இதனால் சுஜித்தை மீட்பதில் சில நிமிடங்கள் தாமதம் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இங்கு தொடர்ந்து குழி தோண்டப்படுவதால் அருகில் சுஜித் இருக்கும் ஆழ்துளை கிணற்றில் அழுத்தம் ஏற்பட்டு, அதிர்வுகள் மூலம் சுஜித் உள்ளே செல்ல வாய்ப்புள்ளது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக பொறுமையாக சுரங்கம் தோண்டும் பணி நடந்து வருகிறது. இதுவும் கால தாமதத்தை ஏற்படுத்தி உள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/trichirappalli/why-rescuing-sujith-from-the-borewell-takes-more-time-366684.html

  • கருத்துக்கள உறவுகள்

 

20191027_101600-428x241.jpg

ஆழ்துளைக் கிணற்றில் சிக்கித் தவிக்கும் குழந்தை – யாழில் பிரார்த்தனை

இந்தியாவின் திருச்சி மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுஜித் உயிருடன் மீள வேண்டுமென யாழில்  மௌனப்பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை உள்ளூராட்சி மன்ற தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு கோப்பாய் கண்ணகை அம்மன் சனசமூக நிலையத்தில் இந்த பிரார்த்தனை இடம்பெற்றது.

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராம அமைப்புக்களின் தலைவர்கள், சனசமூக நிலையத்தலைவர்கள், ஸ்டார் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் என பலரும் ஒன்று கூடி, ஆள்கிணற்றுக்குள் சிக்கியுள்ள சிறுவன் சுஜித் நலமுடன் மீட்கப்படவேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து மௌனப்பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இப்பிரார்த்தனையில் மனித நேயக்கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன. இதில் கருத்துரைத்த வலிகாமம் கிழக்குப் பிதேச சபைத் தவிசாளர், ஒரு சிறுவன் உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கிறான். அச்சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டு இந்த உலகில் வாழவேண்டும். அதற்காக இலங்கையில் இருந்துகொண்டு எமது வேண்டுதல்களை வெளிப்படுத்தி நிற்கின்றோம் என தெரிவித்தார்.

http://athavannews.com/ஆழ்துளைக்-கிணற்றில்-சிக்/

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and text

  • கருத்துக்கள உறவுகள்

நிலவில் நீர், செவ்வாயில் வீடுகள்.. 100 அடியில் உயிர் ஊசலாடுகையில் இதெல்லாம் எதற்கு?.. ஹர்பஜன் சிங்

இந்த நிலையில் தம்பி நீ வந்தாதான் தீபாவளி, உனது தாய்ப்பாலுக்கு வீரம் உண்டு. நீ மீண்டு வா என கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். சுஜித் மீண்டு வர பிரார்த்தனை செய்யும் அனைவரும் விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறி வரும் நிலையில் ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க இன்னும் ஏன் எந்த கருவிகளையும் கண்டுபிடிக்கவில்லை என கேள்வி எழுப்புகின்றனர்.
Harbhajan Turbanator ✔ @harbhajan_singh நிலவில் நீர்,செவ்வாயில் குடியிருப்பு,எதற்காக இத்துணைக் கண்டுபிடிப்புகள்?நூறு அடியில் உயிரொன்று ஊசலாடுகையில் விஞ்ஞானமும் நாமும் எதற்கு.#சுர்ஜித் பூமி தாய் வயிற்றில் கருவாகி இருக்கிறாய்.பிரசவ வலி அந்த தாய்க்கு பதில் உனக்கு பொறுத்துக்கொள் சாமி.விழித்துக்கொள் தேசமே #savesurjeeth


View image on Twitter

https://tamil.oneindia.com/news/mumbai/harbhajan-singh-tweets-that-no-technology-to-rescue-sujith-from-100-feet-depth-366693.html

 

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில் ஏன் ஏழைகள் இவ்வளவு துன்பப்படுகின்றார்கள்? விடைகான முடியாத கேள்விகளில் இதுவும் ஒன்று

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இடையூறான பாறைகள்: சுர்ஜித்தை மீட்க இடைவிடாத போராட்டம்!

84.jpg

ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுர்ஜித்தை மீட்பதற்கான பணிகள் 60 மணி நேரங்கள் கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25) மாலை 5:40 மணியளவில் ஆரோக்கியராஜ் - கலாமேரி தம்பதியரின் மகனான சுர்ஜித் வில்சன் வீட்டின் அருகில் அமைந்திருந்த ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறுதலாக விழுந்துவிட்டார். ஆழ்துளைக் கிணற்றின் 26 அடி ஆழத்தில் இருந்து 100 அடி ஆழத்துக்குக் கீழே சென்றுவிட்ட அவரை மீட்க தொடர் போராட்டம் நடைபெறுகிறது.

 

சிறுவன் சிக்கியிருக்கும் ஆழ்துளைக் கிணற்றுக்கு பக்கவாட்டில் மற்றொரு குழியைத் தோண்டி அதன் வழியாக சுரங்கப்பாதை அமைத்து தீயணைப்பு வீரர்கள் உள்ளே சென்று குழந்தையை மீட்டு வரத் திட்டமிடப்பட்டது. முன்னதாக நேற்று (அக்டோபர் 27) காலை 7 மணிக்கு குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த என்எல்சி நிறுவனத்தின் ரிக் இயந்திரம் 35 அடிகள் வரை தோண்டிய நிலையில் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. தொடர்ந்து ராமநாதபுரத்தில் இருந்து அதிக திறன் கொண்ட புதிய ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டு அதன் மூலம் சிறுவனை மீட்கும் பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது.

சுரங்கப் பாதை அமைப்பதற்கு இடையே பாறைகள் தென்பட்டதால் மீட்புப் பணிகள் தாமதமானது. இடையூறாக இருந்த பாறைகள் உடைக்கப்பட்டு மீண்டும் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. மற்றொரு மிகப் பெரிய சிக்கலாக நடுக்காட்டுப்பட்டியில் மழை பெய்ய ஆரம்பித்தது. ஆனால் மழை நீர் சிறுவன் சிக்கி இருக்கும் குழிக்கு உள்ளே செல்லாதவாறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது.

நடுக்காட்டுப்பட்டிக்கு வந்த தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீட்புப் பணிகள் நடைபெற்றுவரும் இடத்தை நேரில் பார்வையிட்டார். அது மட்டுமின்றி குழந்தையை மீட்க மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும் அவர் கேட்டறிந்து சுர்ஜித்தின் பெற்றோருக்கு நேரில் ஆதரவு கூறினார்.

அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், உதயகுமார் மற்றும் கரூர் எம்.பி.ஜோதிமணி ஆகியோர் சம்பவ இடத்தில் இருந்துகொண்டு மீட்புப் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். குழந்தை மீண்டு வர வேண்டும் என்று தமிழகமே பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளது.

26 அடி ஆழத்தில் இருக்கும் போது கதறி அழுது, அம்மா கலாமேரி பேசுவதற்குப் பதில் அளித்த குழந்தை 100 அடி ஆழத்தில் தற்போது அசைவின்றி காணப்படுகிறான். 600 அடி ஆழம் கொண்ட கிணற்றுக்குள் அவர் மேலும் கீழே சென்றுவிடாமல் இருக்க ஏர்லாக் மூலம் அவரது பிஞ்சுக்கைகள் இறுக்கமாகப் பிடிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவதாக கொண்டு வரப்பட்ட புதிய ரிக் இயந்திரம் மூலம் மூன்று மடங்கு வேகத்தில் குழி தோண்டும் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் ஆக்சிஜன் சிலிண்டரின் உதவியுடன் குழிக்குள் இறங்கி குழந்தையை மீட்க தக்க ஆலோசனைகள் பெற்று கண்ணதாசன், திலீப்குமார், மணிகண்டன் ஆகிய மூன்று வீரர்கள் தயார் நிலையில் காத்திருக்கின்றனர்.

குழந்தை மீட்கப்பட்டவுடன் அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்க அருகிலேயே அனைத்து வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சுர்ஜித் மீட்கப்படுவான் என்ற நம்பிக்கையில் அனைவரும் காத்திருக்கின்றனர்.

 

https://minnambalam.com/k/2019/10/28/84/surjith-rescue-2-years-old-boy-slipped-into-borewell-rig-machine-start-working

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது விடையம் ஒரு நல்ல நெறி முறையிலான அரசும் பத்திரிகைகளும் இணையத்தளங்களும் பொறுப்புடன் செய்திகளை வெளியிடவேண்டும் அக்குழந்தை ஆபத்தில் அகப்பட்டிருக்கும்போதிலும் கண்ணியமான முறையில் அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடவேண்டும் அக்குழந்தையை வைத்துப் பத்திரிகைகள் இணையத்தளங்கள் காசு சம்பாதிப்பது மட்டுமல்ல அரசியல்வாதிகள்கூட இந்த சம்பவத்தை தங்களது அரசியலுக்கான முதலீடாகக் கணித்துச்செயல்படுகிறார்கள். 

குழந்தைகள் உரிமை பாதுகாப்பு சர்வதேச சட்ட நியமனங்களின்படி சிறுவர்கள் ஆபத்தில் இருந்தால் அவர்களது அவ்வேளைய புகைப்படங்கள் எக்காரணம்கொண்டும் வெளியிடக்கூடாது அவரை அடையாளப்படுத்தும் புகைப்படத்தைத்தவிர. ஆனால் இவர்கள் என்ன்செய்கிறார்கள் என்றால் இந்த சம்பவத்தை ஏதோ ஒரு வகையில் தங்களது முதலீடாக ஆக்கப்பார்க்கிறார்கள்.

பொறுக்கிகளும் கையாலாகாதவர்களும் மூட நம்பிக்கைவாதிகளும் இல்லாததை இருக்கு எனப் பெருமை பேசுபவர்களும் நிறைந்ததே இப்போதைய இந்தியா மனிதம் அங்கே மலினப்பட்டுப்போய்விட்டது.

   நான் வாழும்மண்ணில் ஒரு குழந்தைய இடரில் இருந்துகாப்பாற்றமுடியாத நடைமுறை அறிவியலும் விஞ்ஞானமும் எதைச்சாதிக்கப்போகிறது என அண்டவெளியில் சுற்ற செய்மதி அனுப்பும் சிவ,ன் மயில்சாமி அவர்களுடன் சேர்ந்து இந்தியா ஜிந்தாபாத் எனப் பஜனைபாடும் அனைவரும் வெதித்தலைகுனியவேண்டும். மனித மலக்குழியில் மூழ்கி மனிதனே அதைச்சுத்தப்படுத்தும் அவலம் இந்தியாவைத் தவிர எங்கும் நடப்பதில்லை. இதில் தற்பெருமை வேறு.

தொண்ணூறு மணி நேரமாகிறது சிறுவன் குழாய்க்கிணறுக்குள் அகப்பட்டு மருத்துவ உலகம் இன்னமும் நம்புகிறது அவன் உயிருடன் வருகிறான். எனது கணிப்பின்படி எல்லாமே நடந்து முடிந்துவிட்டது .அச்சிறுவனுக்காக எனது பிரார்த்தனைகள்.

Edited by Elugnajiru

உசுரோட வா மகனே - கவிதை வெளியிட்டு வைரமுத்து உருக்கம்

சோளக் கொல்லையில சொல்லாமப் போனவனே

மீளவழி இல்லாம நீளவழி போனவனே

கருக்குழியிலிருந்து கண்தொறந்து வந்ததுபோல்

எருக்குழியிலிருந்து எந்திரிச்சு வந்திரப்பா

ஊர் ஒலகம் காத்திருக்கு உறவாட வா மகனே

ஒரே ஒரு மன்றாட்டு உசுரோட வா மகனே

என்று வைரமுத்து தனது ட்விட்டரில் கவிதை எழுதியுள்ளார். 

சுஜித் மீண்டு வர இலங்கை முள்ளிவாய்க்கால், யாழ்ப்பாணத்தில் சிறப்பு பிரார்த்தனை

சுஜித்

திருச்சி - மணப்பாறை - நடுக்காட்டுப்பட்டி பகுதியில் ஆழ்துளை கிணற்றில் சிக்குண்டுள்ள சுஜித் பாதுகாப்பாக மீண்டு வர வேண்டும் என்ற பிரார்த்தனை இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக இடம்பெற்று வருகின்றது.

இதன்படி, இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்த பகுதியான முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியிலுள்ள முள்ளிவாய்க்கால் தேவாலயத்தில் இன்று விசேட பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.

குறிப்பாக இந்த பகுதியைச் சேர்ந்த பல சிறார்கள் ஒன்று திரண்டு இந்த கூட்டு பிரார்த்தனையை நடத்தியுள்ளனர்.

'சுஜித் மீண்டு எழுந்து வா' என்ற முழக்கமும் பிரார்த்தனைகளில் இடம்பெற்றது.

இதேவேளை, யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியிலும் மக்கள் பிரார்த்தனைகளை நேற்றைய தினம் நடத்தியிருந்தனர்

முள்ளிவாய்க்காலில் பிரார்த்தனை

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில், கோப்பாய் கண்ணகை அம்மன் சனசமூக நிலையத்தில் இந்த பிரார்த்தனை இடம்பெற்றது.

அத்துடன், இலங்கையைச் சேர்ந்த பலரும் சமூக வலைத்தளங்களில் சுஜித்தை பற்றியே கருத்துக்களை பகிர்ந்து வருவது மாத்திரமன்றி, பெரும்பாலான தமிழர்களின் வீடுகளில் தமிழக செய்தி தொலைக்காட்சிகள் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகின்றன.

இலங்கையிலுள்ள தமிழ் பேசும் சமூகம் மாத்திரமன்றி, சிங்களவர்களும் கூட சுஜித் தொடர்பிலான செய்திகளை அதிகளவில் அவதானித்து வருகின்றனர்.

https://www.bbc.com/tamil/sri-lanka-50212466

நயன்தாராவின் “அறம்” படமும் இப்படியான ஆள்துளை கிணற்றில் விழுந்த பிள்ளையை பற்றிய படம்.

அதில் பல முயற்சிகளை மேற்கொண்டு சரிவராமல் இறுதியில் நீண்ட நேரம் மூச்சை அடக்கி வைத்திருக்கும் தன்மையுள்ள சிறுவனை காலில் கட்டி தலைகீழாக உள்ளே விட்டு காப்பாற்றுவது போல் வரும்.

 

Edited by Lara

சிறுவன் சுர்ஜித் உயிரிழப்பு..!

சுஜித் உயிரிழப்பு

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித் உயிரிழப்பு

வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

ஆழ்துளை கிணற்றுக்குள் துர்நாற்றம் வீசுவதாக தகவல்

இரவு 10.30 மணியளவில் ஆழ்துளைக் கிணற்றில் இருந்து அழுகிய வாடை வெளிவந்தது

குழந்தையின் உடல் எந்த நிலையில் உள்ளது என்பதை மருத்துவர்கள் கண்காணிப்பு

https://www.polimernews.com/dnews/86591/சிறுவன்-சுர்ஜித்உயிரிழப்பு..!

  • கருத்துக்கள உறவுகள்

நான்கு நாட்களாக இந்த செய்தியை தேடித் தேடி படித்துக்கொண்டு இருந்தேன் .மீட்பதற்கு  கால தாமதமாகி விட்ட்து என்பது என் கருத்து  தற்போது  அவன் காலமாகிவிட்ட்தாக செய்தி ...அவனது பெற்றோருக்கும்  ஊர் மக்களுக்கும் ஆறாத துயரம். பெற்றோருக்கு தாங்கும் சக்தியை இறைவன் கொடுக்க வேண்டும் . அவனது ஆன்மா அமைதியாய் உறங்கட்டும்   .

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கே ஆஸ்பத்திரியில் வைத்து எவ்வளவு விளையாட்டு காட்டியவங்கள்.

பாவம் ஏழைக் குழந்தைக்கு எப்படி காட்டியிருப்பாங்கள்.

ரொம்பவும் கஸ்டமாக இருக்கிறது.

அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 10/26/2019 at 9:40 AM, nedukkalapoovan said:

Image result for robotic arm to reach deep holes

சந்திரனுக்கு செயற்கை ரோபோ அனுப்பும் நாட்டிடம் இந்தக் குழந்தையை உடனடியாக மீட்கும் இலகு தொழில்நுட்பம் இல்லையா?

 

 

 

கடைசியில் இப்படி தான் மீட்டிருக்கிறார்கள். இதனை ஆரம்பத்திலேயே செய்திருந்தால்.. பிள்ளை உயிர் பிழைத்திருப்பான்.

இந்தப் பிள்ளையின் இறப்புக்கு..

1. கவனயீனமான பெற்றோர்.

2. பயன்படுத்தப்படாத ஆழ்துளைக்கிணறுகளை மூடாது விடுவதும்.. பயன்பாட்டில் உள்ள ஆழ்துளைக்கிணறுகள் பாதுகாப்பான முறையில் அமைக்கப்படுவதை உறுதிப்படுத்தாததும்.. ஆட்சியாளர்களின் தவறு.

3. ஓர் இடர் பணியை விரைந்து செய்யக் கூடிய தொழில்நுட்பங்களை ஆளணியை தயார் நிலையில் வைக்க முடியாத.. மத்திய மாநில அரசுகள்.

4. ஹிந்தியாவின் இயலாமையை மறைத்து விண்வெளியில் முன்வைக்கும் கோடிகளில் ஒரு சில கோடிகளை உள்ளூர் மக்களின் அடிப்படை தேவைகளை பாதுகாப்பான முறையில் செய்து கொடுக்க பயன்படுத்த... வக்கற்ற அரசியல் கட்சிகளும் தலைமைகளும். 

5. தேவையை எதுவோ அதை உயர் தொழில்நுட்பங்களை இராணுவத்தை அனுப்பியாவது.. செய்வதை விடுத்து.. ருவிட்டர்.. பேஸ்புக்கில்.. பிரார்த்திக்கும் நிலையில்.. ஒரு நாட்டின் பிரதமரும் செல்வாக்கு மிக்கவர்களும்.

------------------------

இதில் பாராட்டப்பட வேண்டியவர்கள்..

இந்தச் சம்பவத்தை உலக மயமாக்கி..ஹிந்தியாவின் உண்மை நிலையை உலகுக்கு இனங்காட்டிய மக்கள்.

ஆழ்துளைக் கிணறுகள் குறித்த ஆபத்தை உலகிற்கு இனங்காட்டியவர்கள்.

------------------------

சுர்ஜித்.. இறந்தான் என்பதை விட கொல்லப்பட்டான்.. என்பதே பொருந்தும். 

கண்ணீரஞ்சலி. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, smiling, text

 

இறந்த,  பிஞ்சு பாலகனுக்கு... அஞ்சலிகள்.

இதில் பொதுமக்களின், பொறுப்பற்ற தனத்தையும், கவனிக்க வேண்டும்.
அவர்கள் ஊரில், மூடப் படாத  ஆழ்துளைக் கிணறுகள்  இருந்தால்,
அதனை... கண்காணித்து, சம்பந்தப் பட்டவர்களின் கவனத்திற்கு, 
கொண்டு வர வேண்டியது மட்டுமல்லாமல்.. சட்ட நடவடிக்கையும் எடுத்திருக்க வேண்டும்.

மூடப் படாத கிணறுகளில்... நாய், பூனை, பாம்புகள்  விழுந்து இறந்திருந்தாலும்...
அதே அசுத்த நீரைத் தானே.... குடிக்க பாவிக்க போகின்றோமே...
என்ற அச்ச உணர்வு, இருந்தாலே.... கிணறுகள் எல்லாம்  பாதுகாப்பாக இருக்கும்.   

அந்த கிணறை தோண்டியவர்கள்... அதனை நிலத்திலிருந்து,
இரண்டு அடி  உயரமாக கட்டி இருந்தாலே...  குழந்தையின் இறப்பை தவிர்த்து இருக்கலாம்.

இது, தமிழ் நாட்டில் முதல் முறை நடந்தது அல்ல....
இன்னும்... அவற்றிலிருந்து பாடம் படிக்காதது தான்... மிக வேதனை. 😨

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.