Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் நோக்கி வந்த பீப்பாய்களின் பின்னணி… 240 அடி உயரத்திற்கு அமையவுள்ள கோபுரங்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
tank-696x459.jpg
 
யாழ்ப்பாணத்தை நோக்கி பச்சை நிறத்தில் நீளமாக பீப்பாய்கள் வருகிறது, ஆபத்து.. ஆபத்து என கடந்த இரண்டு தினங்களாக சமூக ஊடகங்கள் பற்றியெரிகிறது.

யாழ்ப்பாணத்தை சீரழிக்க இரகசிய திட்டம் என அனேகமாக எல்லா இணையத்தளங்களும் அது பற்றி செய்தி வெளியிட்டு விட்டன. ஆனால், அந்த பச்சை பீப்பாய்கள் எப்படி சீரழிக்கப் போகிறது என்பது பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை. பச்சைச் சட்டை போட்டால் அடிப்போம் பாணியில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

அந்த பச்சைப் பீப்பாய்கள் எதற்காக கொண்டு வரப்பட்டுள்ளன என்பதை அறிய தமிழ்பக்க செய்தியாளர்கள் இன்று அந்த பகுதிக்கு சென்றனர்.

IMG-2d0bf92da19d9e48e72f7b2d07f9bbfd-V-3அந்த பீப்பாய் வடிவ உருளைகள் யாழ்ப்பாணம் மறவன்புலோ பகுதியில் அமைக்கப்படும் காற்றாலை மின்உற்பத்தி திட்டத்திற்காக கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த பகுதியில் எல்.எம்.எல் என்ற தனியார் நிறுவனம் காற்றாலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றபோதும், அதை கணக்கிலெடுக்காமல் காற்றாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

IMG-9387d3b0775bad750f90302f65977f06-V-3இந்த நிலையில், இன்று (11) நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அந்த பகுதிக்கு விஜயம் செய்து நிலைமையை பார்வையிட்டிருந்தார். சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் வாமதேவனும் அங்கு சென்றிருந்தார். திட்டம் குறித்து, அதன் சாதக பாதகங்கள் குறித்தும் நிறுவன பொறியியலாளர்களிடம் விளக்கம் கேட்டிருந்தார். தமது திட்டம் குறித்து நிறுவனத்தினர் அவருக்கு விளக்கமளித்திருந்தனர்.

IMG-d23d18ae4b31d5c8e77319d85b1d2acd-V-3அந்த சர்ச்சை நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், 24 பீப்பாய்கள் அங்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

அந்த உருளை வடிவ பீப்பாய்களை நிறுவி, அதன் மேலேயே காற்றாடிகள் அமைக்கப்படவுள்ளன. ஒவ்வொரு பீப்பாயும் 80 அடி நீளமானது. ஒன்றின் மேல் ஒன்றாக 3 பீப்பாய்கள் அமைக்கப்பட்டு, அதன் மேலேயே காற்றாடி அமைக்கப்படவுள்ளது.

IMG-f3685c8d57eaf1ad7860f319488e0787-V-33 பீப்பாய்களை நிறுவும்போது, 240 அடி உயரமாகி விடும். அதன் மேல் 10 அடியில் கம்பமொன்று பொருத்தி- 250 அடி உயரத்திலேயே காற்றாடிகள் பொருத்தப்படும். காற்றாடி விசிறிகள் ஒவ்வொன்றும் 200 மீற்றர் அடி நீளமானவையாக இருக்கும். தரையிலிருந்து 400 அடிக்கு சற்று மேல் வரை காற்றாடி விசிறிகள் சுழலும்.

IMG-a021cb8f427597e912315607df463e7c-V-18 காற்றாடிகளின் மூலமாக 20 மெகா வோட்ஸ் மின்சாரத்தை அந்த நிறுவனம் உற்பத்தி செய்து, தேசிய மின் கட்டமைப்பிற்கு விற்பனை செய்யவுள்ளது. ஒவ்வொரு யுனிட்டும் 12.75 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும். அதை அரசு 23 ரூபாவிற்கு பொதுமக்களிற்கு விற்பனை செய்யும்.

IMG-d7474563d1c3aa9d418cd0a46ff4e9c9-V-3ஏற்கனவே பளையில் 16 காற்றாடிகள் அமைக்கப்பட்டு இன்னொரு தனியார் நிறுவனம் மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறது. அதிலிருந்து 19 மெகா வோட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

IMG-f17560c3f34f598b2b24b07162b5e816-V-3

காற்றாலை மின் உற்பத்தியால் பாதிப்புக்கள் உள்ளதா இல்லையா என்ற சர்ச்சைகள், பிரதேச மக்களின் எதிர்ப்பின் மத்தியில் இந்த திட்டம் நடந்து வருகிறது.

IMG-62f974eff48c06aca6fda5b04a24bb63-V-3

அங்கு பார்வையிட்ட பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்தபோது, “இந்த திட்டத்தை நாம் எதிர்க்கவில்லை. ஆனால், இந்த திட்டம் குறித்து மக்களிடம் அச்சம் உள்ளது. அதை இதுவரை நிறுவனமோ, அரசாங்கமோ நிவர்த்தி செய்யப்படவில்லை. மக்களின் அச்சம் நீக்கப்பட வேண்டும்.

அனைத்து அனுமதிகளும் கொழும்பில் பெறப்பட்டுள்ளது. இப்படியான திட்டங்கள் மேற்கொள்ளும்போது, வருமானத்தின் 15 வீதம் அந்த பகுதி உள்ளூராட்சிமன்றத்திற்கு வழங்கப்பட வேண்டும். ஆனால் பளை காற்றாலை நிறுவனத்தினால் 2 வீதமான வருமானமே வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனம், இந்த பகுதி மக்களிற்கு என்ன செய்யப் போகிறது என்பதை இதுவரை தெளிவுபடுத்தவில்லை. குறைந்த விலையான காணிகள் அதிக விலைக்கு நிறுவனம் கொள்வனவு செய்துள்ளது. பாதைகள் அடைக்கப்பட்டுள்ளது. காற்றாலையால் ஏதாவது பக்க விளைவுகள் உள்ளதா போன்ற சந்தேகங்கள் மக்களிடம் உள்ளது. இவைதான் மக்களை அச்சப்படுத்தியுள்ளது. இவை தொடர்பில் நிறுவனம் வெளிப்படை தன்மையுடன் செயற்பட வேண்டும்“ என்றார்.

https://www.pagetamil.com/93218/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, பெருமாள் said:

அதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றபோதும், அதை கணக்கிலெடுக்காமல் காற்றாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

கப்பல் பார்த்த சேவகர்கள் இந்த தமிழ் பேஜ் கூட்டம் ஆக்கும் அந்த பகுதி மக்கள் ஏன் எதிர்ப்பு தெவிக்கினம் என்பது பற்றி விளக்கம் இல்லை .

வரவேற்க வேண்டிய திட்டம் வயல் வெளிகளை  தவிர்த்து வடகிழக்கில் இந்த காற்றாலைகள் அமைவது நல்லது. 

  • கருத்துக்கள உறவுகள்

452.jpgc12abad1b51af3f82dfcaf012cbbfc05.jpg

தமிழ் நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆரல்வாய் மொழி பகுதியில் 2400 ஏக்கர் பரப்பளவில் இம்மாதிரி காற்றாலைகள் நிறுவப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டம் கயத்தார் அருகிலும் இம்மாதிரி காற்றாலைகள் உள்ளன.

Edited by ராசவன்னியன்

பறவைகளிற்கு சிறு ஆபத்து என்பதை தவிர, இதனால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி யாருக்கும் மேலதிகமாகத் தெரியுமா? காற்றின் திசையை இது மாற்றிவிடுமா?

  • கருத்துக்கள உறவுகள்

காற்றாலை தனியார் உடமையாக அமைவதுதான் இங்கு அடிப்படைச் சிக்கல். மாகாணசபையின் பங்கும் பங்குபற்றுதலாம் இல்லாமல் மாகாண மக்களுக்கு பங்கு விற்க்காமலும்  இத்தகைய முதலீடுகள் வரவேற்க்கப் படலாமா?. பொருளாதார மற்றும் கேந்திர  முக்கியத்துவம் வாய்ந்த, சமாந்திரமான   1. மறவன்புலவு-கேரதீவு, 2.அரியாலை-பூம்புகார், 3.கல்முனை (கட்டைக்காடு) பூனகரி நிலத் தொடர்களில்  வாய்ந்த சமாந்தரமான மூன்று  நிலத் தொடர்கள்   இடம் ஆக்கரமிக்கப் படுவதை சிங்கள குடியேற்றங்களுக்கு அத்திவாரமாவதை ஏற்க்கக்கூடாது. இத்தகைய முடிவுகள்  மாகாண சபை தேர்தல்வரை பின்போடபடவேண்டுமென தமிழர் கூட்டமைப்பு தீர்க்கமாக சொல்லவேண்டிய தருணமிது. என் கோரிக்கையை யாராவது சம்பந்தர் ஐயாவின் உடனடிக் கவனத்துக்குக் கொண்டுவார வேண்டுகிறேன்.  

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, நிழலி said:

பறவைகளிற்கு சிறு ஆபத்து என்பதை தவிர, இதனால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி யாருக்கும் மேலதிகமாகத் தெரியுமா? காற்றின் திசையை இது மாற்றிவிடுமா?

பறவைகள் மரிக்கும் ஆபத்துகள் போக கீழேயுள்ளவைகளும் நிகழலாம்..

  • காற்றாலை நிறுவியவுடன் அதன் இறக்கைகள் (பிளேடுகள்) சுற்றும்பொழுது ஏற்படும் ஒருவித ஒலியை தொடர்ந்து கேட்டால் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது.
  • இது எப்படி என்றால் உயர்மின் அழுத்த கோபுரங்களுக்கு மிக அருகில் சென்றால் ஒருவித "ஹும்ம்ம்" என்ற 'க்ரோனா' ஒலியை கேட்டிருப்பீர்கள். அதையே தொடர்ந்து கேட்டால் நமக்கு ஒருவித மன நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆகவேதான் இம்மாதிரி மின்சாரம் செல்லும் இடங்களுக்கருகே மனிதர்கள் வசிப்பதை தவிர்த்துவிடுவார்கள்.

  • மேலும் காற்றாலையின் இறக்கைகளின் நுனி, அதிக வேகத்தில் சுழலும்போது உடைந்தால் ஏற்படும் சிதறல்கள்- கூர்மையாக சிதறும் பட்சத்தில், அருகில் மனிதர்கள் வசித்தால், இச்சிதறல்கள் தாக்கி கடும் காயங்கள் ஏற்பட வாய்ப்பும் உள்ளது.
  • கருத்துக்கள உறவுகள்

அனல் மின் நிலையங்கள் என்றானுகள் இப்ப காற்றாலை மின் நிலையங்களா ஒரே குழப்பமா இருக்கு 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அனல் மின் நிலையங்கள் என்றானுகள் இப்ப காற்றாலை மின் நிலையங்களா ஒரே குழப்பமா இருக்கு 

மேற்கத்திய நாடுகள் பிரான்ஸ் போன்றவை மற்றய சக்தி பிறப்பாக்கிகளை விட காற்றாலைகள் மூலம் பெறப்படும் மின்சாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன வன்னியர் சொல்வது போல் வடகிழக்கில் மக்கள் அற்ற வெளிகளில் அமைக்கப்படுவதால் சத்தம் போன்ற பயம்கள் தேவையற்ற ஒன்று அனல் மின் மூலம் வெளி விடப்படும் காபனீர் ஓட்ஸைட் போன்ற தொல்லைகள் காற்றாலைகளில் இல்லை 

32 minutes ago, ராசவன்னியன் said:

மேலும் காற்றாலையின் இறக்கைகளின் நுனி, அதிக வேகத்தில் சுழலும்போது உடைந்தால் ஏற்படும் சிதறல்கள்- கூர்மையாக சிதறும் பட்சத்தில், அருகில் மனிதர்கள் வசித்தால், இச்சிதறல்கள் தாக்கி கடும் காயங்கள் ஏற்பட வாய்ப்பும் உள்ளது.

இந்தியாவில் உள்ள முறை எனக்கு தெரியாது இங்கு ஒரு வரையறைக்கு மேல் பலமான காத்து வீசினால்   தானாகவே அதன் இயக்கம் நிறுத்துகின்ற முறை உள்ளது .

44 minutes ago, poet said:

காற்றாலை தனியார் உடமையாக அமைவதுதான் இங்கு அடிப்படைச் சிக்கல். மாகாணசபையின் பங்கும் பங்குபற்றுதலாம் இல்லாமல் மாகாண மக்களுக்கு பங்கு விற்க்காமலும்  இத்தகைய முதலீடுகள் வரவேற்க்கப் படலாமா?. 

உங்கள் கேள்வி நியாயமே அதுக்கு தமிழர் விடயத்தில் நடைப்பிணமாக இருக்கும் சம்பந்தரை ஏன் கூப்பிடுகிறீர்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்

காற்றாலை சூரிய ஒளி மின் உற்பத்திவாய்ப்புகள் மாகாணசபையின் கட்டுப்பாட்டில் அமைவது வரவேற்கப்படவேண்டியதே. தெற்க்கில் இருந்து கொண்டுவராமல் வடகிழக்கு மாகாணத்தில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். அனல் மின் நிலையம் எங்கள் நெய்தலை அழித்துச் சிதைத்துவிடும். அனல்மின் நிலையம் வேண்டாம். 

Edited by poet

" அந்த உருளை வடிவ பீப்பாய்களை நிறுவி, அதன் மேலேயே காற்றாடிகள் அமைக்கப்படவுள்ளன. ஒவ்வொரு பீப்பாயும் 80 அடி நீளமானது. ஒன்றின் மேல் ஒன்றாக 3 பீப்பாய்கள் அமைக்கப்பட்டு, அதன் மேலேயே காற்றாடி அமைக்கப்படவுள்ளது. "

"அந்த பகுதியில் எல்.எம்.எல் என்ற தனியார் நிறுவனம் காற்றாலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது"

இது சீன உளவு அமைப்பு? இந்தியாவிற்கு ஆப்பு வைக்கும் முயற்சி ??😎

  • கருத்துக்கள உறவுகள்

சீனா முதலீடுகள் தொடர்பாக இந்தியா மேற்க்குநாடுகளோடு வடகிழக்கு உங்க ஏரியா தெற்க்கு என் ஏரியா என்கிற மோதலற்ற போகையே இதுவரை கடைப்பிடிக்குது. எல்.எம் காற்றாலைக் கம்பனி கொலண்டில் இருந்து செயல்படும் டென்மார்க் கம்பனியென்கிற வகையில் அஞ்ச வேண்டியதில்லை. சிக்கல் வந்தால் புலம்பெயர் தமிழர்களின் அழுத்தம் வல்ல ஆயுதமாக அமையும் என்பதால் அஞ்சாமல் வரவேற்க்கலாம். இப்பவே LMW மாகாண உள்ளூராட்ச்சி சபைகளின் அனுசரணையுடன் இயங்க வேண்டுமென்கிற புலம்பெயர்ந்த தமிழரின்  அழுத்தம் முக்கியம்.

Edited by poet

5 hours ago, ராசவன்னியன் said:

பறவைகள் மரிக்கும் ஆபத்துகள் போக கீழேயுள்ளவைகளும் நிகழலாம்..

  • காற்றாலை நிறுவியவுடன் அதன் இறக்கைகள் (பிளேடுகள்) சுற்றும்பொழுது ஏற்படும் ஒருவித ஒலியை தொடர்ந்து கேட்டால் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது.
  • இது எப்படி என்றால் உயர்மின் அழுத்த கோபுரங்களுக்கு மிக அருகில் சென்றால் ஒருவித "ஹும்ம்ம்" என்ற 'க்ரோனா' ஒலியை கேட்டிருப்பீர்கள். அதையே தொடர்ந்து கேட்டால் நமக்கு ஒருவித மன நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆகவேதான் இம்மாதிரி மின்சாரம் செல்லும் இடங்களுக்கருகே மனிதர்கள் வசிப்பதை தவிர்த்துவிடுவார்கள்.

  • மேலும் காற்றாலையின் இறக்கைகளின் நுனி, அதிக வேகத்தில் சுழலும்போது உடைந்தால் ஏற்படும் சிதறல்கள்- கூர்மையாக சிதறும் பட்சத்தில், அருகில் மனிதர்கள் வசித்தால், இச்சிதறல்கள் தாக்கி கடும் காயங்கள் ஏற்பட வாய்ப்பும் உள்ளது.

அனல் மின் நிலையத்தால் இதை விட அதிக ஆபத்துகள் உள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

காற்றாலைகள் மீளக்கூடிய சக்திப் பயன்பாட்டின் அடிப்படையிலும்.. இரசாயன மாசுக்களை நேரடியாக வெளியிடாத வகையிலும்.. விரும்பப் படினும்...

காற்றாலைகளின் பாதகங்கள்..

சுற்றுச் சூழலின் இயற்கை தோற்றம்.. அழகு கெடுக்கப்படும்.

காற்றாலைகள் எழுப்பும் ஒலி மாசு விரும்பதக்கதன்று.

பறவைகள் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது.

காற்றாலைகள்.. மின்னல் தாக்கம்.. மற்றும் உராய்வுமிகுதியால் தீப்பற்றி எரியும் வாய்ப்புள்ளது.

காற்றாலைகளை அமைக்க குறிப்பிடத்தக்க அளவு.. இயற்கை சீரழிக்கப்படுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

நான் வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் நிறுவப்பட்டிருந்த தனியார் காற்றாலை ஒன்று நீதிமன்ற உத்தரவின்படி  பலவருடங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. காரணம் காற்றாலைக்கு சில நூறு மீட்டர் தொலைவில் வசித்த ஒரு நபர் அதன் உரிமையாளருக்கு எதிராக ஒரு விசித்திரமான புகாரை நீதிமன்றத்துக்கு அனுப்பியிருந்தார்.

அதாவது கோடைகாலத்தில் வீட்டுக்கு வெளியே அவர் படுத்திருந்து வெயில் காயும்போது காற்றாலையின் இறக்கைகள் சுழன்று சூரிய ஒளியை வெட்டுவதால் ஏற்படும் மின்னல் போன்ற ஒளி அசைவை காணும்போது தனக்கு வலிப்பு நோய் (Epilepsy) ஏற்படுவதாகவும் விசிறிகளின் சத்தத்தை தொடர்ந்து கேட்கும்போது அது  தனக்கு சித்தபிரமையை(Paranoia) உண்டுபண்ணூவதாகவும் அவர் காரணங்களாக குறிப்பிட்டிருந்தார்.

Edited by vanangaamudi

இயற்கை சீரழிக்கப் படாமல் எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தாத ஏதாவது ஒரு மின் உற்பத்தியைக் கூறுங்கள் பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, இணையவன் said:

இயற்கை சீரழிக்கப் படாமல் எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தாத ஏதாவது ஒரு மின் உற்பத்தியைக் கூறுங்கள் பார்க்கலாம்.

மனிதவலுவால் உற்பத்தியாகும் மின்சாரம் இயற்கையை பாதிக்காது.

சைக்கிள் ஓடும்போது டைனமோ மூலம் மின் உற்பத்தி செய்து வெளிச்சம் பாய்ச்சிய நினைவை மீட்டு பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நிறுவும்போது, 240 அடி உயரமாகி விடும். அதன் மேல் 10 அடியில் கம்பமொன்று பொருத்தி- 250 அடி உயரத்திலேயே காற்றாடிகள் பொருத்தப்படும். காற்றாடி விசிறிகள் ஒவ்வொன்றும் 200 மீற்றர் அடி நீளமானவையாக இருக்கும். தரையிலிருந்து 400 அடிக்கு சற்று மேல் வரை காற்றாடி விசிறிகள் சுழலும்.

இந்த கணக்கு பிழைக்குதே....நிலத்தை தோண்டியா விசிறியை சுழல விடுவினம்......ஊடக தர்மம்..

  • கருத்துக்கள உறவுகள்

Ähnliches Foto

சுன்னாகத்தில், மின்சாரம் தயாரிக்க... எண்ணையை பாவித்து விட்டு,
கழிவு எண்ணையை.... நிலத்தில் ஊற்றி, 
அங்குள்ள கிணத்து நீரை குடிக்க விடாமல் பண்ணியதை விட...
காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிப்பது சிறந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, இணையவன் said:

இயற்கை சீரழிக்கப் படாமல் எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தாத ஏதாவது ஒரு மின் உற்பத்தியைக் கூறுங்கள் பார்க்கலாம்.

மணலும் மண்ணுமாக உருவாகிய எம் தாயக இயற்க்கை மிக நொய்ந்தலானது. மிகவும் நொய்ந்த நம் தாயக இயற்கையில் மின்போன்ற தேவைக்கு  கை வைக்கும்போது  அவற்றின் புதுப்பிக்கதக்க Renewable energy ஆற்றலை உறுதிப்படுத்துவது அவசியம்.  இயற்கையை மீழ புதிப்பிக்கும் திட்டங்களில்லாமல் எம் தாய்மண்ணை தொடுவது துரோகச் செயலாகும். 

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே பளை என்ற இடத்தில் 20 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 16 காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளதாமே?

Joule.png

Joule & Beta Wind Power Plant

Year : 2014
Location: Pallay, Jaffna
Capacity: 20 Mw
Turbines: 16
Expected annual generation: 70 MnKWh
 
2 hours ago, alvayan said:

நிறுவும்போது, 240 அடி உயரமாகி விடும். அதன் மேல் 10 அடியில் கம்பமொன்று பொருத்தி- 250 அடி உயரத்திலேயே காற்றாடிகள் பொருத்தப்படும். காற்றாடி விசிறிகள் ஒவ்வொன்றும் 200 மீற்றர் அடி நீளமானவையாக இருக்கும். தரையிலிருந்து 400 அடிக்கு சற்று மேல் வரை காற்றாடி விசிறிகள் சுழலும்.

இந்த கணக்கு பிழைக்குதே....நிலத்தை தோண்டியா விசிறியை சுழல விடுவினம்......ஊடக தர்மம்..

2 hours ago, alvayan said:

நிறுவும்போது, 240 அடி உயரமாகி விடும். அதன் மேல் 10 அடியில் கம்பமொன்று பொருத்தி- 250 அடி உயரத்திலேயே காற்றாடிகள் பொருத்தப்படும். காற்றாடி விசிறிகள் ஒவ்வொன்றும் 200 மீற்றர் அடி நீளமானவையாக இருக்கும். தரையிலிருந்து 400 அடிக்கு சற்று மேல் வரை காற்றாடி விசிறிகள் சுழலும்.

இந்த கணக்கு பிழைக்குதே....நிலத்தை தோண்டியா விசிறியை சுழல விடுவினம்......ஊடக தர்மம்..

இவ்வாறான காற்றாடிகள் மன்னர் மாவடட கரையோரங்களில் நிறைய நிர்மாணிக்கிறார்கள்.

காற்றாடி விசிறிகள் ஒவ்வொன்றும் 200 மீட்டர் அடி (?) என குறிப்பிட்டிருக்கிறார்கள். சுழலும் காற்றாடியை ஒப்பிட்டு பார்க்கும்போது இதன் (ஒரு விசிறியின்)  நீளம் 100 அடியாகவும் , அது சுற்றும் விடடம் 200 அடியாகவும் (அண்ணளவாக) இருக்கவேண்டும்.

இந்த திடடத்தில் ஏதும் குறைபாடுகள் அல்லது மாகாண சபைக்கு / பிரதேச சபைக்கு கிடைக்கும் வருமானங்களில் குறைபாடு இருக்குமா இருந்தால் அதட்கு அந்தந்த சபைகளின் தவறே தவிர சம்பந்தனை குறை சொல்ல முடியாது. அவருக்கு வயது சென்றபடியாலதான் வாலிபர்களை மாகாண சபை, பிரதேச சபைகளுக்கு தலைவர்களாக தெரிவு செய்தார்கள். எனவே அவர்கள்தான் இதட்கு பொறுப்பு கூற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

முன்னம் ஒரு பதிவைப்பார்த்திருந்தேன் புங்குடுதீவில் ஒரு கோவில் மண்டபம் கட்டுகிறார்கள் அம்மண்டபத்தின் ஒவ்வொரு தூண்களும் பல இலட்சம் செலவு என, இதுபோல் குறிக்கட்டுவான் நோக்கிப் பயணம்படும்போது பிரதான வீதியிலிருந்து தூரமாக அமைந்திருக்கும் ஒரு கோவிலுக்கு உள்நுழைவு வளைவொண்றை பிரதான வீதியின் திருப்பத்தில் கட்டுகிறார்கள் அதன் செலவு பலகோடியைத்தொடும் என்பது எனது கணிப்பு.

சரி விசையத்துக்கு வருவம்

தற்போதைய சுற்றுச்சூழல் ஆர்வலர்களது கருத்துப்படி காற்றாலைகள் சரியான சுற்றாடல் தொடர்பான ஆராய்வு இல்லாது கண்டமேனிக்கு அமைத்தால் அப்பிரதேசத்தின் உயிர்ச்சூழல் பாதிக்கப்படும் காலப்போக்கில் அவ்விடத்தின் ஈரலிப்புத்தன்மை மற்றும் அப்பகுதியில் வாழக்கூடிய உயிரினங்கள் ஆகியவற்றுக்குப் பாதிப்பு ஏற்படும் என.

நூறு விகிதம் இல்லாதுவிட்டாலும் தற்போது ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடிய வழக்கத்துக்கு மாறான மின்னாறல் தயாரிப்பு என்பது காற்றாலையை விட செலவு குறைந்ததும் சாமானியர்களும் அதில் மிதலீடு செய்யக்கூடியதுமான சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் முறையே.

மீண்டும் புங்குடுதீவுக்கு வருகிறன் 

தற்போது யாழ்குடாநாட்டில் அதிகநிலப்பிரதேசம்  கட்டாந்தரையாக இருப்பதும் எளிதில் வெளியார் எவரும் உள்நுளைய முடியாதபடியான புவியியல் அமைப்பைக் கொண்டிருப்பதும் அதேவேளை இலகுவான போக்குவரத்துக்கான உள்ளகக் கட்டமைப்பை ஓரளவுக்குக் கொண்டிருப்பதும் புங்குடுதீவுதான் அப்பிரதேசத்தில் பரிசோதனை முறையிலாவது நாம் சூரிய ஒளியின் மின் தயாரிக்கும் முறையினை மேற்கொள்ளுவோமாகவிருந்தால் காலப்போக்கில் அது சிறந்த பயனைத் தரும்.

நான் மேலே குறிப்பிட்ட முதல் பந்தியை விரும்பினால மீண்டும் வாசிக்கவும் கொசுறாக.தற்போது கனடாவில் வாழும் பொன் சுந்தரலிங்கம் அவர்களது முயற்சியில் புஙுடுதீவில் ஒரு மண்டபம் கட்டப்பட்டது அதற்கு புலம்பெயர் தேசங்களிலிருந்தே நிதி சேமிக்கப்பட்டது அதற்குக்காசு கொடுத்தவரில் ஒருவர் கூறினார் மண்டபத்தைக் கட்டி விட்டிருக்கினம் மற்றப்படி அங்கினைக்கை ஆடுமாடுகள் வந்து ஒதுங்குதுகள் என.

இப்படியான வீணாப்போன விடையங்களில் நாம் ஈடுபடாமலும் கோயில் மண்டபம் கட்டுறன் தேர் கட்டி தேருக்கு மண்டபமும் கட்டுறன் எனக்கூறு கோடிக்கணக்கில காசை முடக்கி தேரிழுக்க ஆக்கள் இல்லாமல் ஜே பி சி இயந்திரத்தை வைத்து இழுத்து  தெருவில் விடுவதுமாக இராது,

புலம்பெயர்தேசத்தில் வாழும் நம்ம்மவர்கள் ஒருவர் இரண்டு சூரியத்தகடுகளுக்கு காசுகொடுத்து மின்சாரம் தயாரிக்க முற்பட்டால் காலப்போக்கில் யாழ்குடாநாட்டின் மின்சாரத்தேவையில் கணிசமான அளவை புங்குடுதீவு வினியோகிக்கும். 

காற்றாலை என்பது பெரிய பெரிய முதலாளிகளுக்கான முதலீடு. 

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Elugnajiru said:

100  தூண்கள்  ஒவ்வொன்றும் 5  லட்சம்

நுளைவு வாசல்  4 கோடி

கடவுளுக்கு  என்றால் கடன்  எடுத்தாவது  கொடுக்கிறார்கள்

திரும்பி  வட்டியோடு கடவுள்  திருப்பிக்கொடுப்பார்  என்று  நம்புகிறார்கள் போலும்

ஊருக்கு  உதவி  என்று  கேட்டால்  நம்மைக்கண்டாலே  ஓடுகிறார்களே...????

Edited by விசுகு

நல்லது நடக்கட்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.