Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீங்கள் சொன்னால் போகிறேன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகளின் 21 வது பிறந்த தினத்துக்குத் தன்னை தான் விரும்பும் மூன்று நாடுகளுக்குக் கூட்டிக்கொண்டு போவீர்களா அம்மா?? செலவும் அதிகம் இல்லை என்றாள். சரி நாம் மற்றவர்கள் போல் ஆடம்பரமாக எதையும் கொண்டாடுவதில்லை. மகளின் சாட்டில் நானும் போய்வரலாம் என்று எண்ணி சரி என்று கூறி இரு மாதங்களுக்கு முன்னர் விமானச்சீட்டுக்களை வாங்கியாகிவிட்டது. மூன்று நாட்கள் ஒரு நாட்டிலும் இரண்டு  நாட்கள் இன்னொரு நாட்டிலும் மூன்றாவதாக சுவிசுக்கும் போவதாக ஏற்பாடு.

நான் பலதடவை சுவிஸ் போயுள்ளேன். என் கடைக்குட்டி போகாதபடியால் கட்டாயம் அங்கும் தான் போகவேண்டும் என்றதனால் சரி மீண்டும் அந்நாட்டின் அழகை இரசிப்போம் என்று காத்துக்கொண்டிருக்க உந்தக் கொரோனா வந்து தடையாய் நிக்குது. டிக்கற் தங்குமிடம் இரண்டும் சேர்த்து £550 தான் இருவருக்கும் முடிகிறது. போனால் போகட்டும். ஒரு ஆறு மாதம் பார்த்துவிட்டுப் போகலாம் என்றால், நீங்கள் பயப்பிடுறியளா??? எனக்குப் பயமில்லை. நீங்கள் சொன்ன வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்கிறாள் மகள்.

நாம் மாஸ்க் போட்டுக்கொள்வோம். எலுமிச்சங்காயில் ஒரு இருபதைக் கொண்டு போவோம். தங்குமிடங்களில் சுடுநீரில் எலுமிச்சை சேர்த்துக் குடிப்போம். இரசப் பவுடர் கொண்டு சென்று அதையும் பயன்படுத்துவோம். மெல்லிய டிஸ்போசல் கையுறை அணிவோம். கொரோனா கிட்டவும் வராது என்கிறாள்.

இளங்கன்று பயமறியாது என்பது சரிதான். ஆனால் எங்காவது எமது நிறத்தைப் பார்த்து 15 நாட்கள் உள்ளே வைத்திருந்துதான் விடுவோம் என்றால் என்ன செய்வது??? ஏதாவது நல்ல வழி சொல்லுங்கள். உங்களுக்குத் புண்ணியமாய்ப்போகும். 😀

  • Replies 72
  • Views 8.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தை சொல்லி, என்னத்தை போயி.... அட போங்க அக்கோய்....

காலைல வேலைக்கு போகேக்க டியூப்பில்... தொண்டையை செரும, நாலு பேர் கிளம்பி அந்த பக்கமா ஓடிப் போய் நிண்டு நாறல் மீனை பூனை பார்த்த மாதிரி பாக்கினம்.

பின்னேரம் வரேக்க, ஒருத்தர், தொண்டையை கிலீயர் பண்ணப் போறன்... வேற வருத்தம் இல்லை எண்டு போட்டு, சாகவாசமாய்... சங்கீத வித்துவான் மாதிரி பீடிகை போட்டு  இருமினார் பாருங்கோ.

உலகமே வெறுத்துப் போச்சுது...

சரி... உங்கண்ட பிளேன் அந்த தேதில பறக்குதாமே..... விசாரித்தியலோ? 

போனாலும் திரும்பி வருகிறமாதிரி நிலைமை இருக்குமோ?

சுகாதார மந்திரிக்கே வருத்தம்.... பேசாமல் பசுமதி சோத்தை வடிச்சு, பருப்பை ஊத்தி சாப்பிட்டு வீட்டுக்குள்ள இருக்கிறது உத்தமம்...

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நண்பரின் மகனுக்கு சென்னையில்  இம்மாதம் 28 ௮ம் திகதி திருமணம் , எம்மிருவருக்கும் டிக்கெட் முன்னரே புக் பண்ணி , நேற்று e-விசாவும் எடுத்து முடிய , இப்ப காலையில வருகுது இந்த நியூஸ் ...

https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/all-tourist-visas-suspends-till-april-15th-to-prevent-coronavirus-spread-govt/articleshow/74582547.cms

எல்லா விசிட்டர்ஸ் விசாவும் நாளை 13  இலிருந்து ஏப்ரல் 15  வரை சஸ்பெண்டட்  …

ஏர் லைனுக்கு கேட்டிருக்கிறன், காசைத் திருப்பித் தருவானோ எண்டு... ...  

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

... ஏதாவது நல்ல வழி சொல்லுங்கள். உங்களுக்குத் புண்ணியமாய்ப்போகும். 😀

images?q=tbn:ANd9GcStoj6wOtG5w7mRQsglBIp

"தாயி, எந்தெந்த ஊருக்கு நீங்க போகணும்னு விருப்பபட்டீர்களென சொல்லுங்க.. வெத்திலையில மை தடவி அந்த ஊர்களை காட்டுறேன்..!" spec3.gif

"கொரானா தாயி, வூட்டுலேயே உட்கார்ந்து யூடூபில பாருங்க..!"   take-care.gif

  • கருத்துக்கள உறவுகள்

https://www.cnn.com/2020/03/11/politics/donald-trump-coronavirus-statement/index.html

சுகமாக இருந்தால் எப்போதும் போகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் இங்கிருக்கும் கடைகளுக்கே போவதில்லை ...

அச்ச படும் சங்கதிக்கு அச்சபட வேண்டும் என்று 
சொல்லி இருக்கார் நம்ம வள்ளுவர் 

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்ச பார் பிள்ளை இவளவுபெயரும் இப்டிச் சொல்லினம் இதுக்குப் பிறகும் போகனுமா என்டு பிள்ளைக்கு காட்ட அக்காத்தை பிளான் பண்ணுறா.மக்காளை புரிந்து கொண்டு பதில்களைப் போடுங்கோ.😆😂

  • கருத்துக்கள உறவுகள்

ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்ய வேண்டிய பயணம், நாலுபேரிடம் நல்லா விசாரித்து செய்யவும்.நாங்கள் முகமூடி போட்டுகொண்டு போனாலும் கொரோனா முகமூடி போடாமல்தான் திரியுதாம்....!   🤔

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு மாதங்களுக்கு முன் இருந்த சூழல் இப்போ இல்லை. ஏன் இரண்டு வாரங்களுக்கு முன் இருந்த சூழல் இப்போ இல்லை.

திடீர் திடீர் என்று விமான சேவை நிறுவனங்கள் சேவைகளை நிறுத்துகின்றன. நாடுகள் நுழைவாயில்களை மூடுகின்றன..  நாடுகள் பிரயாணத் தடை போடுகின்றன.. நாடுகள்.. 14 நாடுகளுக்கு உள்ளிருப்பு நடைமுறை போடுகின்றன.

இந்த நிலையில்.. பிரயாணங்கள் செளகரியமாக அமையாது. இந்தச் சவால்களை சந்திக்க முடியும்.. கொரானாவை எதிர்கொள்ள முடியும் என்றால்.. நீங்கள் திட்டமிட்டப்படி.. தொடரலாம். இல்லை என்றால் தவிர்க்கலாம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

என்னத்தை சொல்லி, என்னத்தை போயி.... அட போங்க அக்கோய்....

காலைல வேலைக்கு போகேக்க டியூப்பில்... தொண்டையை செரும, நாலு பேர் கிளம்பி அந்த பக்கமா ஓடிப் போய் நிண்டு நாறல் மீனை பூனை பார்த்த மாதிரி பாக்கினம்.

பின்னேரம் வரேக்க, ஒருத்தர், தொண்டையை கிலீயர் பண்ணப் போறன்... வேற வருத்தம் இல்லை எண்டு போட்டு, சாகவாசமாய்... சங்கீத வித்துவான் மாதிரி பீடிகை போட்டு  இருமினார் பாருங்கோ.

உலகமே வெறுத்துப் போச்சுது...

சரி... உங்கண்ட பிளேன் அந்த தேதில பறக்குதாமே..... விசாரித்தியலோ? 

போனாலும் திரும்பி வருகிறமாதிரி நிலைமை இருக்குமோ?

சுகாதார மந்திரிக்கே வருத்தம்.... பேசாமல் பசுமதி சோத்தை வடிச்சு, பருப்பை ஊத்தி சாப்பிட்டு வீட்டுக்குள்ள இருக்கிறது உத்தமம்...

என் விமானம் பறக்குது. விமானத்தை அல்லது விமானநிலையத்தை மூடினால் நான் தப்பலாம்.

6 hours ago, சாமானியன் said:

நண்பரின் மகனுக்கு சென்னையில்  இம்மாதம் 28 ௮ம் திகதி திருமணம் , எம்மிருவருக்கும் டிக்கெட் முன்னரே புக் பண்ணி , நேற்று e-விசாவும் எடுத்து முடிய , இப்ப காலையில வருகுது இந்த நியூஸ் ...

https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/all-tourist-visas-suspends-till-april-15th-to-prevent-coronavirus-spread-govt/articleshow/74582547.cms

எல்லா விசிட்டர்ஸ் விசாவும் நாளை 13  இலிருந்து ஏப்ரல் 15  வரை சஸ்பெண்டட்  …

ஏர் லைனுக்கு கேட்டிருக்கிறன், காசைத் திருப்பித் தருவானோ எண்டு... ...  

இது ஐரோப்பா பயணம் என்றதால் விசா பிரச்சனையும் இல்லை.

கட்டாயம் உங்களுக்குக் காசைத் திருப்பித் தருவார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

நான் இங்கிருக்கும் கடைகளுக்கே போவதில்லை ...

அச்ச படும் சங்கதிக்கு அச்சபட வேண்டும் என்று 
சொல்லி இருக்கார் நம்ம வள்ளுவர் 

அப்ப பொருட்களை எல்லாம் ஏற்கனவே வாங்கி அடுக்கிவிடீர்களா ???

3 hours ago, சுவைப்பிரியன் said:

இஞ்ச பார் பிள்ளை இவளவுபெயரும் இப்டிச் சொல்லினம் இதுக்குப் பிறகும் போகனுமா என்டு பிள்ளைக்கு காட்ட அக்காத்தை பிளான் பண்ணுறா.மக்காளை புரிந்து கொண்டு பதில்களைப் போடுங்கோ.😆😂

கற்பூ........ரம் 😃

1 hour ago, suvy said:

ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்ய வேண்டிய பயணம், நாலுபேரிடம் நல்லா விசாரித்து செய்யவும்.நாங்கள் முகமூடி போட்டுகொண்டு போனாலும் கொரோனா முகமூடி போடாமல்தான் திரியுதாம்....!   🤔

நாலுபேரிட்டைக்  கேட்கிறதுக்குத்தான் இந்தப் பதிவு அண்ணா.

33 minutes ago, nedukkalapoovan said:

இரண்டு மாதங்களுக்கு முன் இருந்த சூழல் இப்போ இல்லை. ஏன் இரண்டு வாரங்களுக்கு முன் இருந்த சூழல் இப்போ இல்லை.

திடீர் திடீர் என்று விமான சேவை நிறுவனங்கள் சேவைகளை நிறுத்துகின்றன. நாடுகள் நுழைவாயில்களை மூடுகின்றன..  நாடுகள் பிரயாணத் தடை போடுகின்றன.. நாடுகள்.. 14 நாடுகளுக்கு உள்ளிருப்பு நடைமுறை போடுகின்றன.

இந்த நிலையில்.. பிரயாணங்கள் செளகரியமாக அமையாது. இந்தச் சவால்களை சந்திக்க முடியும்.. கொரானாவை எதிர்கொள்ள முடியும் என்றால்.. நீங்கள் திட்டமிட்டப்படி.. தொடரலாம். இல்லை என்றால் தவிர்க்கலாம். 

எங்காவது பிரயாணத்  தடை போட்டால் அங்கேயே நிற்கவேண்டிவரும் என்பதுதான் அதிக பயம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வருத்தங்களுக்கு கண்டபடி பயப்பிடுற ஆக்கள் வீட்டைவிட்டு வெளியிலை போறதை யோசிக்கப்படாது.😎

  • கருத்துக்கள உறவுகள்

பாசமா

உயிரா

தெரிவு  உங்கள்  கையில்..??

(ஆனால்  நாங்க  என்ன  செய்யப்போகின்றோம்  நீங்க  இல்லாமல்  யாழில்  என்று  தான்  யோசனையாகக்கிடக்கு😃)

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குட்டி நாடான சுவிஸ்சில் கொரோனா 867 பேருக்கு வந்துள்ளது 6 பேர் இறந்துள்ளனர். நிலமை நல்லது இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாயம் போங்கோ சுமோ ...கொரோனா வைரசின் தாக்கம் எப்படிப்பட்டது என்பதையும்,அதிலிருந்து எப்படி மீண்டு வந்தீர்கள் என்பதையும்   உங்களை போன்றவர்கள் எழுதினால் சுவாரஸ்யமாய் இருக்கும் 😐

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ரதி said:

கட்டாயம் போங்கோ சுமோ ...கொரோனா வைரசின் தாக்கம் எப்படிப்பட்டது என்பதையும்,அதிலிருந்து எப்படி மீண்டு வந்தீர்கள் என்பதையும்   உங்களை போன்றவர்கள் எழுதினால் சுவாரஸ்யமாய் இருக்கும் 😐

அதிலிருந்து மீண்டு வந்தால்த் தானே எழுதலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ரதி said:

கட்டாயம் போங்கோ சுமோ ...கொரோனா வைரசின் தாக்கம் எப்படிப்பட்டது என்பதையும்,அதிலிருந்து எப்படி மீண்டு வந்தீர்கள் என்பதையும்   உங்களை போன்றவர்கள் எழுதினால் சுவாரஸ்யமாய் இருக்கும் 😐

30 ம் திகதிக்குள் போய் வந்தால்  யாழ் 22 அகவையிலேயே எழுதலாம்.......!  🤔

  • கருத்துக்கள உறவுகள்

பாதிக்கப்படுவது நீங்கள் மாத்திரமல்ல , அப்படிப்பாதிக்கப்பட்டால் உங்களை அறியாமலேயே பலர் பாதிக்கப்படுவதற்கு ஒரு காரணியாகிவிடுவீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னை பொருத்த‌ ம‌ட்டில் இந்த‌ ப‌ய‌ண‌ம் இந்த‌ சூழ் நிலையில் ந‌ல்ல‌தாய் ப‌ட‌ல‌ , ப‌ல‌ நாட்டு அர‌சாங்க‌ம் ம‌க்க‌ள் ந‌ல‌ன் க‌ருதி வீட்டுக்குள் இருக்க‌ சொல்லின‌ம் , பாட‌சாலை வேலை இட‌ங்க‌ள் எல்லாம் ப‌ல‌ நாட்டில் பூட்டியாச்சு , இந்த‌ நேர‌ம் நீங்க‌ள் அய‌ல் நாடுக‌ளுக்கு போவ‌து ச‌ரி இல்லை சுமெ அக்கா , 

பொல்லை குடுத்து அடி வேண்டின‌ க‌தையாய் போய் விடும் கொரோனா உங்க‌ளுக்கும் வ‌ந்தா , 

முடிந்த‌ அள‌வு இந்த‌ ப‌ய‌ண‌த்தை த‌ள்ளி போடுங்கோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

வருத்தங்களுக்கு கண்டபடி பயப்பிடுற ஆக்கள் வீட்டைவிட்டு வெளியிலை போறதை யோசிக்கப்படாது.😎

நாங்கள் பயப்பிடுறது எண்டு உங்களுக்கு யார் சொன்னது ???😀

10 hours ago, விசுகு said:

பாசமா

உயிரா

தெரிவு  உங்கள்  கையில்..??

(ஆனால்  நாங்க  என்ன  செய்யப்போகின்றோம்  நீங்க  இல்லாமல்  யாழில்  என்று  தான்  யோசனையாகக்கிடக்கு😃)

நல்ல ஆசைதான். ஆனால் அது மட்டும் இப்போதைக்கு நடக்காது அண்ணா 🤣

3 hours ago, விளங்க நினைப்பவன் said:

ஒரு குட்டி நாடான சுவிஸ்சில் கொரோனா 867 பேருக்கு வந்துள்ளது 6 பேர் இறந்துள்ளனர். நிலமை நல்லது இல்லை.

ஆனால் அங்கிருப்பவர்களைக் கேட்டால் அங்கே எல்லோரும் சாதாரணமாகத் திரிகின்றனர் என்கிறார்கள்.

2 hours ago, ரதி said:

கட்டாயம் போங்கோ சுமோ ...கொரோனா வைரசின் தாக்கம் எப்படிப்பட்டது என்பதையும்,அதிலிருந்து எப்படி மீண்டு வந்தீர்கள் என்பதையும்   உங்களை போன்றவர்கள் எழுதினால் சுவாரஸ்யமாய் இருக்கும் 😐

மகளும் அதைத்தான் சொல்கிறாள். அதுவும் நல்ல ஒரு அனுபவம் தானே அம்மா என்று.

யாழ்கள ஆண் சிங்கங்களே ரதி போன்ற பெண்களுக்கு இருக்கும் துணிவு உங்களுக்கு இல்லை😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

அதிலிருந்து மீண்டு வந்தால்த் தானே எழுதலாம்.

லேசில் யாழ்களத்தைவிட்டு போக மாட்டம் அண்ணா . 😂

1 hour ago, vasee said:

பாதிக்கப்படுவது நீங்கள் மாத்திரமல்ல , அப்படிப்பாதிக்கப்பட்டால் உங்களை அறியாமலேயே பலர் பாதிக்கப்படுவதற்கு ஒரு காரணியாகிவிடுவீர்கள்.

அய்யய்யோ இப்பிடி அபாண்டமாகப் பழிசுமத்துகிறீர்களே  🤣

44 minutes ago, பையன்26 said:

என்னை பொருத்த‌ ம‌ட்டில் இந்த‌ ப‌ய‌ண‌ம் இந்த‌ சூழ் நிலையில் ந‌ல்ல‌தாய் ப‌ட‌ல‌ , ப‌ல‌ நாட்டு அர‌சாங்க‌ம் ம‌க்க‌ள் ந‌ல‌ன் க‌ருதி வீட்டுக்குள் இருக்க‌ சொல்லின‌ம் , பாட‌சாலை வேலை இட‌ங்க‌ள் எல்லாம் ப‌ல‌ நாட்டில் பூட்டியாச்சு , இந்த‌ நேர‌ம் நீங்க‌ள் அய‌ல் நாடுக‌ளுக்கு போவ‌து ச‌ரி இல்லை சுமெ அக்கா , 

பொல்லை குடுத்து அடி வேண்டின‌ க‌தையாய் போய் விடும் கொரோனா உங்க‌ளுக்கும் வ‌ந்தா , 

முடிந்த‌ அள‌வு இந்த‌ ப‌ய‌ண‌த்தை த‌ள்ளி போடுங்கோ

வருவது என்று விதி இருந்தால் வீட்டில் இருந்தாலும் வந்துதானே தீரும்.😃

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நாங்கள் பயப்பிடுறது எண்டு உங்களுக்கு யார் சொன்னது ???😀

நல்ல ஆசைதான். ஆனால் அது மட்டும் இப்போதைக்கு நடக்காது அண்ணா 🤣

ஆனால் அங்கிருப்பவர்களைக் கேட்டால் அங்கே எல்லோரும் சாதாரணமாகத் திரிகின்றனர் என்கிறார்கள்.

மகளும் அதைத்தான் சொல்கிறாள். அதுவும் நல்ல ஒரு அனுபவம் தானே அம்மா என்று.

யாழ்கள ஆண் சிங்கங்களே ரதி போன்ற பெண்களுக்கு இருக்கும் துணிவு உங்களுக்கு இல்லை😎

இந்த‌ திரியில் எழுதின‌ ஆண்க‌ள் எல்லாரும் வீர‌ம் விளைந்த‌ ம‌ண்ணில் பிற‌ந்த‌ வீர‌ப்புத‌ல்வ‌ர்க‌ளுக்கு ப‌ய‌ம் என்றால் என்ன‌ என்று தெரியாது / விட்டால் ர‌தி அக்காவுக்கு க‌வுர‌ பெய‌ரும் குடுப்பிங்க‌ள் போல‌ வீர‌ம‌ங்கை என்று 😁,

யாழ் தாத்தா மார் அண்ணா மார் உங்க‌ள் மேல் உள்ள‌ அக்க‌றையால் தான் இப்ப‌டி எழுதின‌ம் ம‌ற்ற‌ம் ப‌டி ப‌ய‌ம் என்ற‌ சொல்லுக்கே இட‌ம் இல்லை 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ராசவன்னியன் said:

images?q=tbn:ANd9GcStoj6wOtG5w7mRQsglBIp

"தாயி, எந்தெந்த ஊருக்கு நீங்க போகணும்னு விருப்பபட்டீர்களென சொல்லுங்க.. வெத்திலையில மை தடவி அந்த ஊர்களை காட்டுறேன்..!" spec3.gif

"கொரானா தாயி, வூட்டுலேயே உட்கார்ந்து யூடூபில பாருங்க..!"   take-care.gif

ஒரு இடத்தில இருந்தே வெத்திலையில பாக்கலாமுன்னா லோகத்தையே சுத்திக் காட்டிடுங்களேன்  அண்ணா.

1 minute ago, பையன்26 said:

இந்த‌ திரியில் எழுதின‌ ஆண்க‌ள் எல்லாரும் வீர‌ம் விளைந்த‌ ம‌ண்ணில் பிற‌ந்த‌ வீர‌ப்புத‌ல்வ‌ர்க‌ளுக்கு ப‌ய‌ம் என்றால் என்ன‌ என்று தெரியாது / விட்டால் ர‌தி அக்காவுக்கு க‌வுர‌ பெய‌ரும் குடுப்பிங்க‌ள் போல‌ வீர‌ம‌ங்கை என்று 😁,

யாழ் தாத்தா மார் அண்ணா மார் உங்க‌ள் மேல் உள்ள‌ அக்க‌றையால் தான் இப்ப‌டி எழுதின‌ம் ம‌ற்ற‌ம் ப‌டி ப‌ய‌ம் என்ற‌ சொல்லுக்கே இட‌ம் இல்லை 😁

ரதிக்கு வீரமங்கை என்று கொடுப்பதும் பொருத்தமானது தான் 😀

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய சூழ்நிலையில் தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்ப்பது நல்லது. 

நிலைமை நாளுக்கு நாள் வேகமாக மாற்றம் காண்கின்றது. அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது கடினம் ஆகலாம். போக்குவரத்துக்கள் ஸ்தம்பிதம் அடையலாம். பொருளாதார முடக்கங்கள் நாளாந்த வாழ்வை நிலை குலைய செய்யலாம். 

வியாதியின் நேரடி பாதிப்பு என்பதை விட இதனால் வரக்கூடிய வெளி நெருக்கடிகள், அலைச்சல்கள் அதிகம். 

  • கருத்துக்கள உறவுகள்

34 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அய்யய்யோ இப்பிடி அபாண்டமாகப் பழிசுமத்துகிறீர்களே  🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.