Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் போராளிகளை இணைத்து பயங்கரவாதத்தை தலைதூக்கச் செய்ய புலம்பெயர் தரப்பு முயற்சி- பாதுகாப்புச் செயலாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

அதிகமான வியாபாரிகள் சிங்களவரும், கொழும்பில் இருந்து வந்தவர்களுமே. யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் தமிழர், வியாபாரிகள் ஏன் சிங்களத்தில் கதைக்கிறார்கள்? சிங்களத்தை திணிக்கிறார்களா? ஒருகாலத்தில் கொம்பிலிருந்து விரட்டப்பட்டோம் இப்ப நாடுமுழுவதும் தன்னோடது என்று எங்கள் வீட்டுக்குள்ளேயே வந்திருந்து எங்களை விரட்டுறான். ஒரு உறவு பதித்திருந்தார்; எங்களுக்கு சிங்களம் தெரியும், அவர்களுக்கு தமிழ் தெரியும், எங்களுக்குள் பாரபட்ஷம் இல்லை, இது போதும் என்பது போல் இருந்தது. அவர்கருத்து தமிழ் உணர்வு இல்லை. எங்கள் உரிமைகள் பறிபோகிறது தெரியவில்லை. சாதாரண சிங்கள மக்களுக்கு எப்படி புரியும்? அவர்களுக்கு பொய்யான கதைகளையே பரப்புகிறார்கள். தமிழர், சிங்களவர்களாக மாறுவதற்கு பொருளாதாரத்தோடு தமிழ் பற்றிய உணர்வு இல்லாமை, சுற்றி வர என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளாமையும் காரணம். பொதுவாக பெரும்பாலானோர்; சிங்களம் படித்தால் பிரச்சனை முடிந்து விட்டது என்கிற முடிவிக்கே வந்து விட்டார்கள். இது ரொம்ப ஆபத்தானது. ஏன் ஒரு பொது மொழி ஆங்கிலத்தை ஊக்குவிக்கக்கூடாது?

கடற்படை தரைப்படை காவல் நிற்க, கடல் வளத்தை கொள்ளையடிக்கின்றான், இனி இலங்கையில் பல தமிழ் பிச்சைகாரர்களை காணலாம்

  • Replies 152
  • Views 13.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, உடையார் said:

கடற்படை தரைப்படை காவல் நிற்க, கடல் வளத்தை கொள்ளையடிக்கின்றான், இனி இலங்கையில் பல தமிழ் பிச்சைகாரர்களை காணலாம்

 தமிழருக்கு: தொழில் செய்ய சிங்களம் தெரியவில்லை, தொழிலும் தெரியவில்லை. அதனால் சிங்களவன் வருகிறான் நல்ல முன்னேற்றம். முதலில் தமிழர் சிங்களம் படித்துவிட்டு, சிங்கள பிரதேசத்துக்கு போய் தொழில் செய்யலாம் இலங்கையனாக.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

அங்கு அரசியல் மொழி எல்லோருக்கும் பொதுவானது. குடிபெயர்ந்தோர் அந்நாட்டு மொழியை கற்றுத்தான் ஆகவேண்டும்.

தமிழர் பிரதேசங்களில் உள்ள வேலை வாய்ப்பை, சிங்களவரைக் கொண்டு நிரப்புவதற்கு இது ஒரு தந்திரம், பயிற்சி அளிக்கிறார்கள். எம்மவர் வேலை வாய்ப்பு இன்றி அவதிப்படும்போது, ஏன் சிங்களவர் தமிழ் பேசிக்கொண்டு இங்கு வரவேண்டும்? சரி தமிழருக்கு சிங்கள மாநிலங்களில் வேலை வாய்ப்பு அளிக்கப்படுகிறதா? சிங்களவர் தமிழ் கதைக்கிறார்கள், என்று புளுகித் தள்ளும் நாம் அதன் பின்னால் இருக்கிற தந்திரோபாயத்தை ஏற்றுக்கொள்ளாமல் ஏமாந்து விடுகிறோம், அல்லது சேர்ந்து ஆதரித்தால் நமக்கு பிரச்னை இல்லாமல் நம் முதலீடுகளை செய்யலாம் என்கிற எதிர்பார்ப்பா?

தமிழன் ரொம்ப நல்லவனப்பா 
எப்படி புரட்டி புரட்டி போட்டு அடித்தாலும் 
தங்குவான் ! 
அதுகூட பெருசில்லை அடிக்க அடிக்க அடிக்கிற எமக்கே 
வக்காலத்துவாங்க வாங்க கூட ஒரு கூட்டம் வரும். 

தமிழ் தெரிந்த தமிழனுக்கு தமிழ் பிரதேசத்த்தில் வேலை இல்லை 
சிங்களவன் வந்து தமிழில் பேசுகிறானாம் அப்படியே மெய்  சிலிர்த்து நிற்கிறார்கள் 

இது தமிழில் எழுதி வேறு வாதம் செய்யவேண்டுமா?? 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

கற்பகதரு,

இரெண்டு விடயங்களை அவதானியுங்கள்.

1. பிரிந்து போகும் உரிமையுள்ள வெளியக சுய உரிமை. பிரிந்து போகும் உரிமையற்ற உள்ளக சுய உரிமை என சுய உரிமை இருவகைபடும். கொசோவோ கோரி, இறுதியில் அடைந்தது முதலாம் வகை. வேறுபட்ட நிலைகளில் அவுஸ்ரேலியா, இந்திய, அமெரிக்க மாகாணங்கள், ஏன் அந்தமான் நிக்கோபர் தீவு, அமேசன் காட்டு பழங்குடிகள் அனுபவிப்பது உள்ளக சுய உரிமை. இந்த பழங்குடிகள் வாழும் இடத்தில் பிரேசில் அல்லது இந்திய சட்டம் செல்லாது. அங்கே ஒரு 12 வயது குழந்தை பாலியல் உறவில் ஈடுபடுவது வழக்கமாயின் - அதுவே, அவர்களின் உள்ளக சட்டத்தின் அடிப்படையில் ஏற்று கொள்ளப்படும். அவர்களது காணி, பொலீஸ் சகல அதிகாரமும் அவர்கள் வசமே இருக்கும். ஆனால் பிரிந்து போக முடியாது.

2. இந்தியவை பொறுத்தவரை -நாடு உருவாகும் போதும் அம்பேத்கர் அரசியலமைப்பை எழுதும் போதும் இந்தியாவை ஒரு யூனியன் “கூட்டு” என்பதாகவே கட்டமைக்கிறார். State list, தனியே மாநிலங்கள் மட்டும் உரிமை உள்ள விடயங்கள் (காணி - சில விடயங்கள் தவிர, பொலிஸ்) central list - கூட்டு அரசு மட்டும் உரிமை செலுத்தும் விடயங்கள் (பாதுகாப்பு, அயலக துறை, ரயில்வே) மற்றும் concurrent list இரு அரசுகளுக்கும் உரிமை உள்ள விடயங்கள் ( கல்வி, சுகாதாரம், துறைமுகம்) என அதிகாரங்களையும் அரசியலமைப்பு தெளிவாக வகை செய்கிறது. ஆனால் பிரிந்து போகும் உரிமை பற்றி முதலாம் அரசியலமைப்பு மெளனமாக இருந்தது. சுதந்திரத்துக்கு பின் மாநிலங்களிலும் மத்தியிலும் காங்கிரசே ஆட்சியில் இருந்ததாலும், இந்தி/மலையாள லாபியின் கபட நகர்வுகளாலும் யூனியன் என்ற பதம் தவிர்க்கப்பட்டு - மைய அரசு அல்லது மத்திய அரசு என்ற பதம் உள்ளே வருகிறது. கூடவே ஸ்டேட் லிஸ்டில் இருந்த கல்வி கொன்கொரெண்ட் லிஸ்டுக்கு போகிறது. இந்த காலத்திலே திராவிட நாடு கொள்கை எழுந்து, பின் பிரிவினையை முடக்கும் சட்டம் வந்து - திராவிட நாட்டு கொள்கையை அண்ணா மாநில சுயாட்சி (பாதுகாப்பு, அயலக உறவு தவிர மிகுதி எல்லாம் மாநிலத்துக்கே) கொள்கையாக மாற்றினார்.

இந்திய தமிழர்களுக்கும் இந்திய சட்டப்படி வெளியக சுயநிர்ணய உரிமை மறுக்கப்பட்டதை ஏற்றுக்கொள்கிறீர்கள். இலங்கையில் இப்போது இடம்பெறுவது உள்ளக சுயநிர்ணய உரிமைக்கான முயற்சிகள். கூட்டமைப்பும்,  கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இதை தெளிவாக சொல்கிறார்கள். விக்னேஸ்வரன் இதை சொல்லவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இதை எழுதுவதா இல்லையா.. வீணாக ஏன் தேவையற்ற விவாதங்களுக்கு போகவேண்டும் என நினைத்தாலும்.. எழுதாமல் இருக்கமுடியவில்லை அதனால் எழுதுகிறேன்..

இங்கே அவரவருக்கு கிடைத்த தனிப்பட்ட அனுபவங்களை வைத்து சிங்களவர்கள் தமிழ் கதைக்கிறார்கள்.. வியந்து போய்விட்டோம், வரவேற்கதக்க மாற்றம் என கூறுகிறார்கள்.. ஆனால் எனக்கும், நான் அறிந்த பலருக்கும் எதிர்மறையான அனுபவமே உள்ளது.. நாங்கள் இலங்கையில் இருந்த காலம் தொடங்கி இப்பொழுது வரை கொழும்பிலும் சில சிங்கள கிராமப்புறங்களுக்கும் சென்றபோதும்,  கடந்த வருடமும், இதை எனது தனிப்பட்ட விஷயம் சம்பந்தமாக அனுபவிக்கநேரிட்டது, அத்தோடு ஊரில் இருக்கும் எனது தந்தை அடிக்கடி கூறும் விடயம், “ சிறுக சிறுக எல்லா இடங்களிலும் சிங்களவர்களே வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். சிங்களம் தெரியாமல் ஒரு வேலையும் செய்யமுடியாதிருக்கிறது” என்று.. ஏனெனில் அவருக்கு, அவரது தொழில் சம்பந்தமாக வரும் சில முக்கிய கடிதங்கள் சிங்களத்திலேயே வருகிறது.. சிங்களவர்களே முக்கிய பதவிகளிலும் இருக்கிறார்கள்.. ஆகையால் எங்களது தனிப்பட்ட அனுபவங்களை வைத்து பொதுவான ஒரு பிரச்சனைக்கான தீர்வாக கூறலாமா? தெரியவில்லை

இரண்டாவது, இங்கே யாரும் இன்னொரு மொழியை கற்கவேண்டாம் எனக்கூறவில்லை,இலங்கையில் தமிழும் ஒரு மொழி என அங்கீகரிக்கப்பட்ட நிலையில் இன்னொரு மொழியான சிங்களத்தை கற்க எவ்வாறு கட்டாயப்படுத்தப்பட்டார்கள், அதனால் உருவான பிரச்சனைகள். இப்பொழுது எவ்வாறு, எத்தகைய வழிகளில் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள், அதனால் என்ன பிரச்சனைகள்  என பொருள்படத்தான் எழுதியுள்ளார்கள். ஆகையால் வீணாக புலம்பெயர்ந்தவர்கள், ஊரில் உள்ளவர்கள் எனபிரிக்காமல் இருந்தால் நல்லது என நினைக்கிறேன்.
நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

தமிழ் தேசியம் என்றால் என்ன

தேசியம் என்பதற்கு பின்வரும் காரணிகள் இன்றி அமையாதன:

1. தனித்துவமான மொழி, வரலாறு, கலை கலாசாரம், பண்பாட்டியல்

2. பாரம்பரிய வாழிடம்

3. தம்மை தாமே தேசியமாக உணர்தல் (subjective)

4. வெளியார் நம்மை தேசியமாக அங்கீகரித்தல் (objective).

இங்கே தமிழ் தேசியம் என்பது ஒன்றுதான், அது உலகெங்கும் உள்ள தமிழர் யாவருக்கும் பொருந்தும். எமது பாரம்பரிய வாழிடம்கள் தமிழ் நாடும், இலங்கையின் வட கிழக்கும்.

அதாவது தமிழ்நாடு, இலங்கையின் வடகிழக்கு பாரம்பரிய வாழிடத்தில் பெரும்பான்மையாகவும், வரலாற்று தொடர்சியாகவும், இந்த வாழிடத்துக்கு வெளியேயும் வாழும் தனித்துவ மொழி, வரலாறு, கலை கலாச்சார, பண்பாட்டியலை கொண்ட ஒரு தேசிய இனம் நாம்.

சரியான விளக்கம் கோஷான். இந்தப் புரிதல்கூட இல்லாமலா 30-40 வருடம் போராட்டம் நடந்தது?

நிலாந்தனின் இன்றைய கட்டுரையில் இருந்து..

Quote

தேசியம் எனப்படுவது ஒரு மக்கள் கூட்டத்தை திரள் ஆக்குவது. பொதுவாக ஒரு மக்கள் கூட்டத்தை பின்வரும் அம்சங்கள் திரள் ஆக்குவதுண்டு. இனம், மொழி, நிலம், பொதுப் பண்பாடு, பொதுப் பொருளாதாரம் இவைதவிர அடக்குமுறை போன்றனவும் ஒரு மக்கள் கூட்டத்தை திரள் ஆக்கும்.

இந்த அடிப்படையில் பார்த்தால் நிலம் அதாவது தாயகம் இது ஒரு மக்கள் கூட்டத்தைத் திரள் ஆக்கும் அடிப்படை அம்சங்களில் ஒன்று. தமிழ் நோக்கு நிலையில் இருந்து பார்த்தால் தாயகம் எனப்படுவது வடக்கு கிழக்கு இணைந்த வரலாற்று தொடர்ச்சி மிக்க ஒரு நிலப்பரப்பு. எனவே ஈழத்தமிழர்கள் தாயகம் என்று கூறும்பொழுது அது பிரயோகத்தில் வடக்கு கிழக்கு இணைப்பையே குறிக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

எனக்கு இதை எழுதுவதா இல்லையா.. வீணாக ஏன் தேவையற்ற விவாதங்களுக்கு போகவேண்டும் என நினைத்தாலும்.. எழுதாமல் இருக்கமுடியவில்லை அதனால் எழுதுகிறேன்..

இங்கே அவரவருக்கு கிடைத்த தனிப்பட்ட அனுபவங்களை வைத்து சிங்களவர்கள் தமிழ் கதைக்கிறார்கள்.. வியந்து போய்விட்டோம், வரவேற்கதக்க மாற்றம் என கூறுகிறார்கள்.. ஆனால் எனக்கும், நான் அறிந்த பலருக்கும் எதிர்மறையான அனுபவமே உள்ளது.. நாங்கள் இலங்கையில் இருந்த காலம் தொடங்கி இப்பொழுது வரை கொழும்பிலும் சில சிங்கள கிராமப்புறங்களுக்கும் சென்றபோதும்,  கடந்த வருடமும், இதை எனது தனிப்பட்ட விஷயம் சம்பந்தமாக அனுபவிக்கநேரிட்டது, அத்தோடு ஊரில் இருக்கும் எனது தந்தை அடிக்கடி கூறும் விடயம், “ சிறுக சிறுக எல்லா இடங்களிலும் சிங்களவர்களே வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். சிங்களம் தெரியாமல் ஒரு வேலையும் செய்யமுடியாதிருக்கிறது” என்று.. ஏனெனில் அவருக்கு, அவரது தொழில் சம்பந்தமாக வரும் சில முக்கிய கடிதங்கள் சிங்களத்திலேயே வருகிறது.. சிங்களவர்களே முக்கிய பதவிகளிலும் இருக்கிறார்கள்.. ஆகையால் எங்களது தனிப்பட்ட அனுபவங்களை வைத்து பொதுவான ஒரு பிரச்சனைக்கான தீர்வாக கூறலாமா? தெரியவில்லை

இரண்டாவது, இங்கே யாரும் இன்னொரு மொழியை கற்கவேண்டாம் எனக்கூறவில்லை,இலங்கையில் தமிழும் ஒரு மொழி என அங்கீகரிக்கப்பட்ட நிலையில் இன்னொரு மொழியான சிங்களத்தை கற்க எவ்வாறு கட்டாயப்படுத்தப்பட்டார்கள், அதனால் உருவான பிரச்சனைகள். இப்பொழுது எவ்வாறு, எத்தகைய வழிகளில் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள், அதனால் என்ன பிரச்சனைகள்  என பொருள்படத்தான் எழுதியுள்ளார்கள். ஆகையால் வீணாக புலம்பெயர்ந்தவர்கள், ஊரில் உள்ளவர்கள் எனபிரிக்காமல் இருந்தால் நல்லது என நினைக்கிறேன்.
நன்றி. 

சிங்களவர்கள் தமிழர் பகுதியில் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள் .உண்மை ...காரணம் என்ன /
அவர்கள் உஙகள மாதிரி தமிழ் படிக்க மாட்டோம் என்று அடம் பிடிக்கவில்லை.
அடுத்தது யாழில் கூலி வேலைக்கு தட்டுப்பாடு ...வேலைக்கு ஆட்களை பிடித்தாலும் அதிக கூலி கேட்பது...வேலையில் மரியாதை இல்லை .
சிங்களவர்கள் அப்படியில்லை...தொழிலை  கடவுளாய் நினைத்து செய்கிறார்கள் ...காரணம் வறுமை ....தமிழ்ப் பகுதியில் வெளிநாட்டு காசு ...அவர்களுக்கு வேலையை பற்றிய அக்கறை இல்லை...எல்லாத்திலும் விதி விலக்கணவர்களும் உண்டு 
தமிழர் வைத்தியயர் ,இஞ்சினியர் என்று படித்தாலும் பொதுவான இலகுவான துறையைத் தான் இவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்...[உ+ ம்] வைத்தியர்களுக்குள்ளேயே பல பிரிவுகள் இருக்கு ...ஆனால் தமிழாக்கள் படிப்பது பொதுவான மருத்துவம் ...பல சிறப்பு மருத்துவத்திற்கு கட்டாயம் சிங்களவர் அல்லது முஸ்லீம்கள் வர வேண்டி இருக்குது ....கஸ்ட பட்ட தமிழ்ப் பகுதிகளுக்கே தமிழர் போய் வேலை செய்ய விருப்பமில்லை ...ஆனால் சிங்களவர்கள் ஓம் என்று சொல்லி பணி புரிய வருகிறார்கள் ...ஆகவே இங்கே இருந்து கொண்டு எல்லா இடமும் சிங்களவன் புகுந்திட்டான் என்று கத்துவது சுத்த மடத்தனம் .
ஏற்கனவே மேலே எழுதியது தான் ...தமிழர்கள் மட்டும் சிங்களம் படிக்க வேண்டும் என்று  கட்டாயப்படுத்தப்படவில்லை ...சிங்களவர்களும் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் ...ஒரு மொழி பேசுபவர்களை மட்டும் கட்டாயப்படுத்தினால் மட்டும் தான் அது இனவாதம்.
புலம்பெயர்ந்தவர்கள் வருடத்திற்கு ஓர் ,இரு தடவை ஊருக்கு போய்ட்டு குறைந்தது ஒரு மாசம் நின்று போட்டு வந்து இலங்கையில் எங்கை பார்த்தாலும் சிங்களமாயிருக்கு என்று புலம்புவது வீண் வேலை
 
18 hours ago, குமாரசாமி said:

அது சரி மொழியை படிச்சால் தமிழர்ரை பிரச்சனை முடிஞ்சுது.
இன்னும் கொஞ்ச காலத்தாலை ஈழத்தமிழருக்கு பிரச்சனையே இல்லையெண்டு கொடி தூக்கிற ஆக்கள் உங்களைப்போல ஆக்களாய்த்தான் இருக்கும்.

அண்ணா ,எல்லாருக்கும் தமிழீழ கனவு ,கனவாகவே போய் விடும் என்ற பயம் தான் ...அதற்காக நாங்கள் இங்கேயிருந்து கொண்டு பிரச்சனைகளை திணிக்க கூடாது  அல்லது நாங்கள் நினைத்த மாதிரி நடக்க வேண்டும் என்று எதிர் பார்க்க கூடாது ...அந்த மக்களை அவர்கள் விரும்பின மாதிரி வாழ விடுங்கள் ...நீங்கள் எழுதுவது உங்கள் எதிர்பார்ப்பு ....நான் எழுதுவது பிராக்டிகல் 🙂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

சரியான விளக்கம் கோஷான். இந்தப் புரிதல்கூட இல்லாமலா 30-40 வருடம் போராட்டம் நடந்தது?

நிலாந்தனின் இன்றைய கட்டுரையில் இருந்து..

இந்த புரிதலை ஏற்படுதாமலே 40 வருடம் போராடிய எம் மீதுதானே பிழை ?

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

கொழும்பான்,

நீங்கள் கேட்ட கேள்விகளும் இங்கே எழுந்த சில வாதங்களும் தமிழ் தேசியம் என்பது ஏதோ அருவருக்க தக்க கொள்கை அல்லது வட கிழக்குக்கு வெளியே வாழும் தமிழரை விலக்கி அமைவது என்பதாக தொனிப் பட்டதால் இதை எழுதுகிறேன்.

தமிழ் தேசியம் என்றால் என்ன

தேசியம் என்பதற்கு பின்வரும் காரணிகள் இன்றி அமையாதன:

1. தனித்துவமான மொழி, வரலாறு, கலை கலாசாரம், பண்பாட்டியல்

2. பாரம்பரிய வாழிடம்

3. தம்மை தாமே தேசியமாக உணர்தல் (subjective)

4. வெளியார் நம்மை தேசியமாக அங்கீகரித்தல் (objective).

இங்கே தமிழ் தேசியம் என்பது ஒன்றுதான், அது உலகெங்கும் உள்ள தமிழர் யாவருக்கும் பொருந்தும். எமது பாரம்பரிய வாழிடம்கள் தமிழ் நாடும், இலங்கையின் வட கிழக்கும்.

அதாவது தமிழ்நாடு, இலங்கையின் வடகிழக்கு பாரம்பரிய வாழிடத்தில் பெரும்பான்மையாகவும், வரலாற்று தொடர்சியாகவும், இந்த வாழிடத்துக்கு வெளியேயும் வாழும் தனித்துவ மொழி, வரலாறு, கலை கலாச்சார, பண்பாட்டியலை கொண்ட ஒரு தேசிய இனம் நாம்.

இலங்கையின் வட கிழக்கில் நாம் எம்மை ஒர் தேசிய இனமாக உணர்ந்து எமது வாழிடத்தில் சுய நிர்ணயமாக எமது அரசியலை தீர்மானிக்கும் உரிமையை கோருகிறோம் என்பதற்கு வட்டு கோட்டை தீர்மானமும் அதன் பின் வந்த போராட்டமும் தேர்தல்களுமே சாட்சி. மேலும் சாட்சி தேவைபடின் ஒர் சர்வஜன வாக்கெடுப்பை இந்த பகுதியில் நடத்தி பார்க்கலாம்.

எம்மை இவ்வாறு அங்கீகரிக்க கோரி நாம் ஏனையோரை கோருவதே 77இல் இருந்து எமது போராட்டம் (objective recognition). 
 
தமிழ் தேசிய இனமாக எமக்கு தமிழக்கதிலும், இலங்கையின் வட கிழக்கிலும் சுயநிர்ணய உரிமை உள்ளது. இந்தியா இதை அங்கீகரித்து, தமிழகம் தனது சுயநிர்ணயத்தை இந்திய கூட்டாட்ட்சியில் ஒன்று சேர்த்து மாநில சுயாட்சியில் பங்காளியாக, இந்திய யூனியனில் ஒரு அங்கமாக இருக்கிறது.

இலங்கையிலும் எமது சுய நிர்ணயத்தை அங்கீகரித்து, ஒரு கூட்டாட்சி அடிபடையில் (புலிகள் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய கூட்டாட்சி என்றார்கள்) எம்மை அரசில் (கவனிக்க - அரசில், அரசாங்கத்தில் அல்ல) பங்குதாரர் ஆகவேண்டும் என்பதே தமிழ் தேசிய அரசியல்( வட கிழக்கில் அரசாங்கம் எம்மாலே நடத்தபடும், ஆனால் இலங்கை அரசில் நாமும் பங்குதாரர்கள்) .

இப்போ தமிழ் தேசிய அரசியல் என்றால் என்ன என்பது விளங்கியாயிற்று.

நீங்கள் எப்படி தமிழ் தேசியவாதியாக ஆகலாம்?

இப்படி ஆக வேண்டும் என கட்டாயம் ஏதுமில்லை. ஒவ்வொரு தனி தமிழ் மனிதனும் தமிழ் தேசியத்தை ஏற்க வேண்டும் என்ற நிபந்தனை ஏதும் இல்லை. பாரம்பரிய வாழிடத்தில் வாழும் பெரும்பாலனோர் ஏற்றால் போதுமானது. ஆனா தமிழ் தேசியம் வாழிடத்துக்கு உள்ளே வெளியே வாழும் எல்லோருக்குமானது. மேற்சொன்ன தமிழ் தேசியதுக்கான வரைவிலக்கணத்தை நீங்கள் ஏற்றால் நீங்களும் ஒரு தமிழ் தேசியவாதியே. மனோ கணேசன் செய்யும் அரசியல் தமிழ் தேசிய அரசியல் அல்ல. ஆனால் அவர் இந்த கொள்கையை ஏற்கிறார். எனவே அவர் ஒரு தமிழ் தேசியவாதி. புலம் பெயர் வேறு நாட்டின் கடவுசீட்டு கொண்டுள்ள தமிழரும், சீமானும், பேரா ராமசாமியும் இப்படியே.

எப்படி பண்புகளை வளர்துகொள்ளலாம்

நீங்கள் தமிழ் தேசியவாதியாக இருக்கவே வேண்டிய அவசியம் இல்லை, எனும் போது இந்த பண்புகளை நீங்கள் வளர்க வேண்டிய அவசியமும் இல்லை. உளப்பூர்வமாக நீங்களும் மனோவை போல் தமிழ் தேசியத்யில் நம்பிக்கை கொண்டிருந்தால் போதுமானது. இலாவிடிலும் நீங்கள் தமிழர்தான். 100% சகல தமிழர்களும் தமிழ் தேசியவாதிகளாக இருக்க வேண்டியதில்லை.

ஆனால் எமக்கென ஒரு பாரம்பரிய வாழிடம், அங்கே எமது அரசாங்கம் இருக்கும் போது, வாழிடத்துக்கு வெளியே எம்மை “பற தெமிலோ” என்று விரட்டி அடிக்கும் போது உரிமையோடு ஓடிப் போவதற்கு ஒரு இடம் இருக்கும். 

நன்றி கோசான் உங்கள் பதிலுக்கு 
இப்பொழுது விளங்குகின்றது தமிழ்தேசியம் என்றால் என்ன என்பது.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, vasee said:

அனால் வட இந்தியர்கள் மிகவும் மோசம் எடுத்தவுடன் இந்தியில் பேச ஆரம்பித்து வுடுவார்கள் அதில் குறிப்பாக ஒருவர் எனக்கு இந்தி தெரியாது எனக்குத்தமிழ்த்தான் தெரியும் என்றதற்கு தமிழ் மொழி தெரிந்து என்ன இலாபம் என்று திருப்பிக்கேட்டார்.

இலங்கையை சேர்ந்த உங்களிடம் தனது நாட்டு இந்தி தெரியுமா என்று கேட்ட இந்தியரை பற்றி தான் நினைக்கிறேன் 😂
எனது உறவினர் ஒருவர் தமிழ் இசை பிரியர் ரகுமான் இசை கச்சேரிக்கு டிக்கட் வாங்கி போனவர் அங்கே இந்தி பாட்டு தான் அதிகம் என்று ஏமாற்றம் தெரிவிந்தார்.இந்தி பட உலகம் ரகுமானை புறக்கணிப்பதாக யாழ்களத்தில் கவலை தெரித்திருந்தார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
21 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இப்ப யாழ்ப்பானத்தில் வியாபாரிகள் சிங்கள மொழி பேச தொடங்கிவிட்டார்கள் சிங்கள மொழி படிக்க நான் கூட வெறு இடத்திற்கு வேலை  மாற்றம் செய்ய இருக்கிறன் மொழியை படித்தால் பல பிரச்சினைகளை பேசி தீர்க்கலாம் .

ஒரு பொலிஸ் பிடிச்சாலும் அவருடன் பேசக்கூட முடியவில்லை  

நேற்றுத்தான் யாழ்ப்பாணத்திலிருந்து வந்தேன் எந்த மாற்றமும் இல்லை கிராமங்கள் அப்படியே காடுகளாகவும் குடிசைகளாகவும் கையில் காசு இருக்கும் மக்கள் வசதியான வாழ்க்கை மற்றவர்கள் வாழ்க்கை ஓட்டம் 

எங்கு இராணுவ பிரசன்னம் நிறைந்து காணப்படுகிறது  ஆனால் கெடுபிடிகள் இல்லை  

இதைத்தான் நானும் சொல்லுறன்.சண்டை இல்லையே தவிர மற்றதெல்லாம் அப்படியேதான் இருக்கு எண்டு....
பேஸ்புக்கிலை என்ரை பெறாமகன் அங்கஜனுக்கு வாழ்த்து தெரிவிச்சு இருந்தான். ஏனடா எண்டு கேட்டன். இப்போதைக்கு தங்களோடை இருந்து உதவியள் செய்யிற அரசியல் தலைவர் எண்டால் அவர் ஒருத்தர் தானாம்.

தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களிக்கவில்லையே தவிர தமிழ்வேட்பாளர்களுக்குத்தான் வாக்களித்துள்ளார்கள்.எனவே தமிழ்மக்கள் தேசியத்திலிருந்து மாறவில்லை.

ஆமியின்ரை கெடுபிடி இல்லை அதாலை ஊரிலை ஒரு பிரச்சனையுமில்லை எண்ட லாஜிக்தான் இப்ப இஞ்சை பேமஸ்...😎

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, satan said:

அதிகமான வியாபாரிகள் சிங்களவரும், கொழும்பில் இருந்து வந்தவர்களுமே. யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் தமிழர், வியாபாரிகள் ஏன் சிங்களத்தில் கதைக்கிறார்கள்? சிங்களத்தை திணிக்கிறார்களா? ஒருகாலத்தில் கொம்பிலிருந்து விரட்டப்பட்டோம் இப்ப நாடுமுழுவதும் தன்னோடது என்று எங்கள் வீட்டுக்குள்ளேயே வந்திருந்து எங்களை விரட்டுறான். ஒரு உறவு பதித்திருந்தார்; எங்களுக்கு சிங்களம் தெரியும், அவர்களுக்கு தமிழ் தெரியும், எங்களுக்குள் பாரபட்ஷம் இல்லை, இது போதும் என்பது போல் இருந்தது. அவர்கருத்து தமிழ் உணர்வு இல்லை. எங்கள் உரிமைகள் பறிபோகிறது தெரியவில்லை. சாதாரண சிங்கள மக்களுக்கு எப்படி புரியும்? அவர்களுக்கு பொய்யான கதைகளையே பரப்புகிறார்கள். தமிழர், சிங்களவர்களாக மாறுவதற்கு பொருளாதாரத்தோடு தமிழ் பற்றிய உணர்வு இல்லாமை, சுற்றி வர என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளாமையும் காரணம். பொதுவாக பெரும்பாலானோர்; சிங்களம் படித்தால் பிரச்சனை முடிந்து விட்டது என்கிற முடிவிக்கே வந்து விட்டார்கள். இது ரொம்ப ஆபத்தானது. ஏன் ஒரு பொது மொழி ஆங்கிலத்தை ஊக்குவிக்கக்கூடாது?

ஆங்கிலம் பொது மொழியாக அரச காரியாலங்கள் வைத்தியர்கள் உயர்பதவிகளில் இருப்பவர்கள் பேசுகிறார்கள் ஆனால் சிங்களம் அன்றாடம் தொழில் செய்து பிழைப்பவர்கள் ஆங்கிலம் பேச வாய்ப்பில்லை சிங்களத்தை கற்றுக்கொள்கிறார்கள் தற்போது கிழக்கில் கருவாடு மீன் கொன்டு சென்று அங்கே மரக்கறிகளை வாங்கி வருகிறார்கள் மரக்கறி விற்கும் மாத்தையாவுக்கு ஆங்கிலம் வரவே வராது அவருக்கு ஆங்கிலம் படிக்கவோ படியுங்கள் என்று சொல்லமுடியாது ஆனால் விலைகள் பேரம் பேசல்களை தமிழிலும் சொல்லுவார் 

2 hours ago, குமாரசாமி said:

இதைத்தான் நானும் சொல்லுறன்.சண்டை இல்லையே தவிர மற்றதெல்லாம் அப்படியேதான் இருக்கு எண்டு....
பேஸ்புக்கிலை என்ரை பெறாமகன் அங்கஜனுக்கு வாழ்த்து தெரிவிச்சு இருந்தான். ஏனடா எண்டு கேட்டன். இப்போதைக்கு தங்களோடை இருந்து உதவியள் செய்யிற அரசியல் தலைவர் எண்டால் அவர் ஒருத்தர் தானாம்.

தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களிக்கவில்லையே தவிர தமிழ்வேட்பாளர்களுக்குத்தான் வாக்களித்துள்ளார்கள்.எனவே தமிழ்மக்கள் தேசியத்திலிருந்து மாறவில்லை.

ஆமியின்ரை கெடுபிடி இல்லை அதாலை ஊரிலை ஒரு பிரச்சனையுமில்லை எண்ட லாஜிக்தான் இப்ப இஞ்சை பேமஸ்...😎

அரசு தன் கடமையை செய்யும் 🙂

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, satan said:

அங்கு அரசியல் மொழி எல்லோருக்கும் பொதுவானது. குடிபெயர்ந்தோர் அந்நாட்டு மொழியை கற்றுத்தான் ஆகவேண்டும்.

தமிழர் பிரதேசங்களில் உள்ள வேலை வாய்ப்பை, சிங்களவரைக் கொண்டு நிரப்புவதற்கு இது ஒரு தந்திரம், பயிற்சி அளிக்கிறார்கள். எம்மவர் வேலை வாய்ப்பு இன்றி அவதிப்படும்போது, ஏன் சிங்களவர் தமிழ் பேசிக்கொண்டு இங்கு வரவேண்டும்? சரி தமிழருக்கு சிங்கள மாநிலங்களில் வேலை வாய்ப்பு அளிக்கப்படுகிறதா? சிங்களவர் தமிழ் கதைக்கிறார்கள், என்று புளுகித் தள்ளும் நாம் அதன் பின்னால் இருக்கிற தந்திரோபாயத்தை ஏற்றுக்கொள்ளாமல் ஏமாந்து விடுகிறோம், அல்லது சேர்ந்து ஆதரித்தால் நமக்கு பிரச்னை இல்லாமல் நம் முதலீடுகளை செய்யலாம் என்கிற எதிர்பார்ப்பா?

சாத்தான், தாயக நிலைமையைப் பொறுத்தவரை நீங்கள் எவ்வளவு அறிவின்றி இருக்கிறீர்கள் என்று காட்டும் கேள்வி இது! 

பதில்: ஆம்!. சிங்கள பகுதிகளில் தமிழர்கள் வேலை செய்கிறார்கள். நிபுணத்துவ மட்டத்தில் இருப்போர் இன்று மட்டுமல்ல, யுத்தம் நடந்து கொண்டிருந்த போது கூட தெற்கில் சிங்களப் பகுதிகளில் வேலை பெற்றிருக்கிறார்கள். உண்மையில் வடக்கிற்கு வேலைக்காகச் செல்லும் சிங்கள அதிகாரிகளை விட தெற்கிற்கு வேலை நிமிர்த்தம் சென்ற தமிழர்கள் விகிதாசார ரீதியில் அதிகம். 

 எனது துறையில், தமிழ் பகுதியில் தமிழ் ஆட்கள் வேலை செய்யச் செல்லாததால் தான் சிங்களவர்கள் வேலைக்கு வந்தனர். வரண்ட முருங்கன், காய்ந்த பூனகரி என்று எங்கள் ஆட்கள் போகாமல் விட, கொழும்புச் சிங்களப் பெண்கள் அங்கெல்லாம் அரச விடுதியில் தனியே தங்கியிருந்து வேலை செய்கின்றனர். வேலை என்றால், கையெழுத்து வைத்து விட்டு போய்ப் படுத்து விடுவதல்ல, மக்கள் பாராட்டும் அளவுக்கு வேலை! இதுவும் சிங்கள சதி தானோ உங்களுக்கு சந்தேகம் வரும்! ஆச்சரியமில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

தற்போது சிங்கள பெண்கள் அரசு இடும் காப்பற் வீதிகளில் ஊழியர்( லேபர்) களாக வேலை செய்கிறார்கள் போர் காலங்களில் தமிழர் பகுதிகளில் இருந்தால் ஆபத்து என சிங்கள பகுதிகளில்தான் அதிகமானோர் வேலையும் செய்தார்கள்  எல்லா துறையிலும் 

  • கருத்துக்கள உறவுகள்

83 வெளியேற்றத்துக்கு பின் 89-90 இல் வெள்ளவத்தையின் மீள்தமிழாக்கம்🤣 தொடங்கிய காலத்தில் வெள்ளவத்தை மார்கெட்டுக்கு போனால் சிங்கள வியாபாரிகளும், தமிழ் அன்ரிமாரும் ஒரு வினோத மொழியில் பேசி பொருட்களை வாங்குவதை கண்டவர்களுக்குத்தெரியும், காதலுக்கு கண் இல்லை, வியாபாரத்துக்கு மொழி இல்லை என்பது🤣.

அண்மையில் கல்வி அமைச்சின் செயளாலராக நியமிக்கப்பட்ட ஒருவர், தனது மகனுடன் ஓ எல் தமிழ் பரீட்சை எழுதிய கதையை வாசித்தேன்.

ஒவ்வொரு மட்டத்திலும் இரு மொழிகளையும் பேச, பேச வேறுபாடுகள் காணாமல் போக, இலங்கை எல்லோருக்கும் பொதுவான நாடு என்ற ஒரு நிலை ஒரு காலத்தில் உருவாகவும் கூடும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

83 வெளியேற்றத்துக்கு பின் 89-90 இல் வெள்ளவத்தையின் மீள்தமிழாக்கம்🤣 தொடங்கிய காலத்தில் வெள்ளவத்தை மார்கெட்டுக்கு போனால் சிங்கள வியாபாரிகளும், தமிழ் அன்ரிமாரும் ஒரு வினோத மொழியில் பேசி பொருட்களை வாங்குவதை கண்டவர்களுக்குத்தெரியும், காதலுக்கு கண் இல்லை, வியாபாரத்துக்கு மொழி இல்லை என்பது🤣.

1990 இல் ஆபிரிக்க நாட்டில் உள்ள Togo எனும் நாட்டின் தலைநகர் Lomé இல் மூன்று மாதங்கள் இடையில் நிற்கவேண்டியதாயிற்று. அந்தக் காலத்தில் அவர்களுடன் பேரம்பேசி கரி, தேங்காய், பழப்புளி (ஆம். அதுவும் கிடைத்தது) வாங்கவேண்டும். எங்களுக்குத் தெரிந்த உடைந்த ஆங்கிலத்தில் அவர்கள் பேசும் புறா பிரெஞ்சுடன் (pigeon French) பேரம்பேசி குறைத்துவாங்குவோம். அவர்களும் கண்டபடி ஏதோ சொல்லி/திட்டி நாங்கள் கேட்கும் விலைக்குத் தருவார்கள். இடையிடையே மிரட்ட ஆண்கள் வந்தாலும் பெண்களுடன் பேரம் பேசுவதில்  ஊர் மரக்கறிச் சந்தை அனுபவமும் (மீன் மார்க்கற் அனுபவம் இல்லை) Pettah இல் சிங்களம் தெரியாமலேயே பேரம்பேசிய அனுபவமும் கைகொடுத்தது.😁 

ஆனால் சிங்கள மொழியை தெரிந்துகொள்வது இலகு அல்ல. தென்னிந்திய மொழிகளில் மலையாளம், கன்னடம், தெலுங்கில் பேசுவது முழுமையாக விளங்காவிட்டாலும் என்ன சொல்கின்றார்கள் என்பது புரிந்துவிடும். சிங்களம் தமிழுடன் தொடர்பேயில்லாத மொழி என்பதாலும், சிங்களத்தின் மீது இயல்பான வெறுப்பு இருப்பதாலும் அதைத் தெரிந்துகொள்ள முயன்றதேயில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

இது நல்ல அனுபவமாய் இருக்கிறதே 🤣.

ஓரளவு இளமையாக இருக்கும் போதே சிங்கள பகுதிக்கு வந்ததாலும், பள்ளியில் சிங்கள மாணவர்களோடு விளையாட்டு இதர நிகழ்சியில் சேர வேண்டிய தேவையும் சேர்ந்து கிட்டதட்ட வித்தியாசம் தெரியாத அளவுக்கு அவர்களை போலவே சிங்களம் பேசும் ஆற்றலை பெற கூடியதாக இருந்தது.

எனது தந்தையார், சிங்களத்தையும் யாழ்பாண பாணியிலே கதைப்பார் 🤣. அவரை காண வரும் சிங்கள நண்பர்களுக்கு தேனீர் கொடுத்து விட்டு நான் அடித்தட்டு சிங்களத்தில் உரையாடுவேன். சிலர் என்னை வீட்டில் வேலை செய்யும் சிங்கள பையன் என்று நினைத்து அப்பாவிடம் கதைத்தத்தும் உண்டு😂.

ஆனால் சின்ன வயதிலே ஏற்பட்ட குரோதம் என்னை கடைசிவரை சிங்களத்தை எழுதி வாசிக்க பழக விடவில்லை. பல சந்தர்பங்கள் கிடைத்தும் அதை தட்டி கழித்தேன்.  இப்போ யோசிக்க என்ன மடத்தனம் என்று தோன்றுகிறது.

என் சகோதரி எழுதி வாசிப்பா ஆனால் கதைக்கவிட்டால் தூய சிங்களத்தில் கட்டபொம்மன் ரேஞ்சில் இருக்கும் கதை 🤣

இப்போ வெளிநாடு வந்து பலவருடம் ஆகிவிட்டதாலும் இங்கே என்னை சூழ யாரும் சிங்களம் பேச இல்லை என்பதாலும் ஊருக்கு போய் இறங்கி கதைக்க தொடங்க,போர் காலத்தில் ஊரில் மணெண்ணையில் ஸ்டார்ட் அடிக்கும் ஆட்டோ போல ஆரம்பத்தில் கொஞ்சம் விக்கல் எடுக்கும். ஒரு வாரம் ஆக சரியாகி விடும். ஆனாலும் முன்பு போல் சரளமாக இல்லாமல் ஆங்கில வார்தைகள் இடையில் வந்து விழும்.

இந்தியாவில் தேசாந்திரியாக அலைந்த போது, டெல்லியில் நின்ற இடத்தின் விலாசத்தை தொலைத்து விட்டு ஒரு மணிநேரமாக ஆங்கிலம் தெரிந்தவரை தேடி அலைந்த அனுபவம் மறக்கமுடியாதது.

மலையாளம் புரிவதில் ஒருபோதும் சிக்கல் வந்ததில்லை. ஆனால் தெலுங்கு கன்னடா ஒரு மண்ணும் விளங்கவில்லை 🤣

வாபஸ், பைசா , ஜரூர், சாயா இதுபோன்ற எல்லாருக்கும் பொதுவான வட சொற்களை தவிர. 

ஆந்திராவில் மட்டும் 6 மாதம் வாழ்ந்தேன். ஆனால் “ஜருகண்டி” “நாகு தெலுகு தெலுசு லேது” இவை மட்டுமே கற்றேன்🤣

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கையை சேர்ந்த உங்களிடம் தனது நாட்டு இந்தி தெரியுமா என்று கேட்ட இந்தியரை பற்றி தான் நினைக்கிறேன் 😂
எனது உறவினர் ஒருவர் தமிழ் இசை பிரியர் ரகுமான் இசை கச்சேரிக்கு டிக்கட் வாங்கி போனவர் அங்கே இந்தி பாட்டு தான் அதிகம் என்று ஏமாற்றம் தெரிவிந்தார்.இந்தி பட உலகம் ரகுமானை புறக்கணிப்பதாக யாழ்களத்தில் கவலை தெரித்திருந்தார்கள்.

அவரது நோக்கம் தமிழை கேலி செய்யவேண்டும் என்பதாகவே நான் உணர்ந்தேன், அவர் அயாட்ஸ் இந்திய உணவக உரிமையாளர், அவருக்கு நியுசிலாந்தில் பல உணவகங்கள் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

ஆனால் சிங்கள மொழியை தெரிந்துகொள்வது இலகு அல்ல. தென்னிந்திய மொழிகளில் மலையாளம், கன்னடம், தெலுங்கில் பேசுவது முழுமையாக விளங்காவிட்டாலும் என்ன சொல்கின்றார்கள் என்பது புரிந்துவிடும். சிங்களம் தமிழுடன் தொடர்பேயில்லாத மொழி என்பதாலும்,

tamil-lession-01-page-03.png

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கும், முன்னாள் போராளிகளும் பல துன்புறுதல்கள் நிகழத்தான் போகுது. அது வெளி வராமல்  வட கிழக்கில்  சிங்கள கட்சியில் நின்று  வென்ற தமிழர்கள், வெறும் கோஷம் என  அடித்து சொல்வார்கள். நாங்களும் சிங்களம் படித்தால் பிரச்சனை தீர்ந்து விடும், என்று கடந்து போய்க்கொண்ட இருப்போம். 

On 21/8/2020 at 22:20, Kapithan said:

அப்படியல்ல வங்காலையான்,

உங்கள் கருத்துக்கள் தேசியத்திற்காக மரணித்த ஆயிரமாயிரம் போராளிகள், மக்களை நையாண்டி செய்வதுபோல் உள்ளது.

அதுதான்..... ஒரு விளம்பரம்ம்ம்ம்ம்..😀

தேசியத்துக்காக ஆயிரமாயிரம் போராளிகள் மரித்தார்கள், அப்பாவி மக்கள் மரித்தார்கள். ஆனாலும் அதன் முடிவு என்ன? யார் பலனடைந்தார்கள்? யார் பலனடைகிறார்கள்? இப்போது யார் அதை வைத்து வியாபாரம் செய்கிறார்கள்? ஆரம்பம் அல்ல முடிவுதான் முக்கியம்.உங்களுக்கு நய்யாண்டியாகத்தான் தெரியும். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கற்பகதரு said:

tamil-lession-01-page-03.png

றவிக்கை என்பது தமிழ் சொல்லாக இருக்காது 
என்று எனக்கொரு சந்தேகம் எப்போதும் இருந்ததுண்டு 
(ஒரு காரண அர்த்தமும் இல்லாமல் இருப்பதால்)

மேலே சிங்கள ற எழுத்தை பார்க்கும்போது 
சந்தேகம் இன்னமும் கூடுகிறது 
 
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கற்பகதரு said:

சிங்களத்தில் பேசினால் ஒரு சில வார்த்தைகளை வைத்து என்ன context என்று அறியமுடியாது. அதனால்தான் சிங்களம் தமிழுடன் தொடர்பே இல்லாத மொழி என்றேன்

9 hours ago, கிருபன் said:

ஆனால் சிங்கள மொழியை தெரிந்துகொள்வது இலகு அல்ல. தென்னிந்திய மொழிகளில் மலையாளம், கன்னடம், தெலுங்கில் பேசுவது முழுமையாக விளங்காவிட்டாலும் என்ன சொல்கின்றார்கள் என்பது புரிந்துவிடும். சிங்களம் தமிழுடன் தொடர்பேயில்லாத மொழி என்பதாலும், சிங்களத்தின் மீது இயல்பான வெறுப்பு இருப்பதாலும் அதைத் தெரிந்துகொள்ள முயன்றதேயில்லை.

சிங்கள மொழி நீங்கள் நினைக்கிற மாதிரி கஷடம் இல்லை. சிங்களத்திலும் தமிழிலும் நிறைய சொற்கள் ஒரேமாதிரியானவை. தென்னிந்தியமொழிகளை விட இலகுவாக கற்றுக்கொள்ளலாம், நீங்கள் விரும்பினால். இப்போது வடகிழக்கு முழுவதும் மக்கள் ஓரளவுக்கு சிங்களம் பேசுகிறார்கள். அவர்கள்மீது சிங்கள திணிப்பு நடக்கவில்லை. இருந்தாலும் மக்கள் அதை விரும்பியோ , விரும்பாமலோ கற்றுக்கொண்டுள்ளார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.