Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கைலாசாவில் தொழில் தொடங்க 3மாவட்டங்களுக்கு முன்னுரிமை- நித்தியானந்தா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Nithyanantha.jpg

கைலாசாவில் தொழில் தொடங்க 3மாவட்டங்களுக்கு முன்னுரிமை- நித்தியானந்தா

மதுரை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்ட மக்கள் கைலாசாவில் தொழில் தொடங்க முன்னுரிமை அளிக்கப்படும் என நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.

பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட நித்தியானந்தாவை கைது செய்யுமாறு நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று, கைலாசா என்ற தனித்தீவை உருவாக்கியுள்ளதாக அறிவித்தார்.

எனினும் குறித்த கைலாசா என்ற தனித்தீவு எந்த இடத்தில் இருக்கின்றது என சரியான தகவல் தெரியாமல் பொலிஸார் நித்தியானந்தாவை தேடி வருகின்றனர்.

இதனிடையே  கைலாசா எனும் தனிநாட்டின் பிரதமர் தான்தான் என தெரிவித்தார். பின்னர், தனிக்கொடி, கடவுச்சீட்டு ஆகியவற்றை உருவாக்கியுள்ளதுடன் கைலாசா நாட்டுக்கான ரிசர்வ் வங்கியும் தொடங்கப்பட்டதாக அறிவித்தார்.

மேலும், கைலாசா நாட்டுக்கான நாணயங்களையும் விநாயகர் சதுர்த்தியன்று அவர்  வெளியிட்டுள்ளார். அதற்கு தமிழில் பொற்காசு என பெயர் வைத்துள்ளார்.

இந்நிலையில் 56 இந்து நாடுகளுடன் மட்டுமே தான் வர்த்தகம் செய்ய விரும்புவதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் தனது நாட்டிற்கு வருகை தரும் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், மதுரை ஆகிய 3 மாவட்ட மக்களுக்கு தொழில் தொடங்குவதற்கு முன்னுரிமை  அளிக்கப்படும் என  நித்யானந்தா தற்போது அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/கைலாசாவில்-தொழில்-தொடங்க/

  • கருத்துக்கள உறவுகள்

ஆள் குடுக்கிற அலுப்பில, விரைவில் உள்ளுக்கு போகப்போகின்றார்,😂

பணம் எப்படியெல்லாம் சேர்கின்றது 🤔

  • கருத்துக்கள உறவுகள்

நான் கூட பிறந்த ஊர மறந்து விடுவாரோ பயந்து போய்ட்ன்..👍

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நான் கூட பிறந்த ஊர மறந்து விடுவாரோ பயந்து போய்ட்ன்..👍

தோழர் என்ன தொழில்வாய்ப்பு வைத்திருக்கிறார் என்று எண்ணும்போது?
எனக்கும் ஒரு மதுரை பிறப்பு  சான்றிதழ் வேணும் .... கொஞ்சம் ஒழுங்கு பண்ணித்தாருங்கள்.

அவ்வளவு பக்தைகளும் இருக்கும் கைலாசாவில் 
தொழில்வாய்ப்பு எனும்போதே உடம்பு கூசுது 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Maruthankerny said:

தோழர் என்ன தொழில்வாய்ப்பு வைத்திருக்கிறார் என்று எண்ணும்போது?
எனக்கும் ஒரு மதுரை பிறப்பு  சான்றிதழ் வேணும் .... கொஞ்சம் ஒழுங்கு பண்ணித்தாருங்கள்.

அவ்வளவு பக்தைகளும் இருக்கும் கைலாசாவில் 
தொழில்வாய்ப்பு எனும்போதே உடம்பு கூசுது 

10:40 to 12:34

அவயள் பக்தி பாடல் போட விடுவினம் .. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் தாங்காது அலுப்பு தட்டிவிடும் தோழர்..😊

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Maruthankerny said:

தோழர் என்ன தொழில்வாய்ப்பு வைத்திருக்கிறார் என்று எண்ணும்போது?
எனக்கும் ஒரு மதுரை பிறப்பு  சான்றிதழ் வேணும் .... கொஞ்சம் ஒழுங்கு பண்ணித்தாருங்கள்.

அவ்வளவு பக்தைகளும் இருக்கும் கைலாசாவில் 
தொழில்வாய்ப்பு எனும்போதே உடம்பு கூசுது 

தம்பி ஏன் இந்த வீபரீத ஆசை? போனால் படுகுழிதான் மீண்டு வர ஏலாது😀

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Maruthankerny said:

அவ்வளவு பக்தைகளும் இருக்கும் கைலாசாவில் 
தொழில்வாய்ப்பு எனும்போதே உடம்பு கூசுது 

பக்தைகளுக்கு உடல் மசாஜ் சென்டர்  திறந்து நடத்துவமா....தோழரே

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, putthan said:

பக்தைகளுக்கு உடல் மசாஜ் சென்டர்  திறந்து நடத்துவமா....தோழரே

அதெல்லாம் அரசர் பார்த்துக்கொள்ளுவார்......நீங்கள் அரசருக்குத்தான் மசாஜ் செய்யவேண்டி இருக்கும், சம்மதமா......!  😎

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இப்படியே கதைச்சுக் கொன்டு இருங்கோ.நான் இப்ப ஏர்போட்டில் நிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

private-number-caller-1.jpg

சில வாரங்களுக்கு முன்னரே ஒரு "பிரைவேட் எண்"லிருந்து அழைப்பு வந்தது..! 🤔

என்னவென்று விசாரித்தால்,

'கைலாசா'வில் மின்சார வசதி கட்டமைப்புகளை (Electrical Network Infrastructure) சடுதியில் ஏற்படுத்தி தர நீங்கள் முன்வரவேண்டும், இங்கு புதிதாக ஏற்படுத்திவரும் மின்சார துறைக்கு நீங்கள்  தலைமை தாங்கவேண்டும், நீங்கள் வல்லவர், நல்லவர்' என அன்பான வற்புறுத்தல்கள்.. 🤗

அழைத்தவர் ஒரு பெண் பொறியாளார், அதுவும் மின் பொறியாளர்..!! :)

இந்த அரிய சந்தர்ப்பத்தை தவற விடுவேனா..?

கைலாசா நாட்டின் 'ஹெலிபேடில்' நான் இறங்கி நிற்கிறேன்..இப்போ..! 🥰

அவசரக் குறிப்பு:

தமிழர்களுக்கு மட்டுமே 'கைலாசா மின்சார துறை'யில் வேலை வாய்ப்பு வழங்கப்படும்..!

2iBt.gif     powerlines-generators.jpg  

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

ஐயையோ! வன்னியர் ஒரு பூட்டப் பிள்ளையைக் கூடக் காணாது கைலாசம் போகப் போகிறாரா...? கடவுளே.!!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Paanch said:

ஐயையோ! வன்னியர் ஒரு பூட்டப் பிள்ளையைக் கூடக் காணாது கைலாசம் போகப் போகிறாரா...? கடவுளே.!!

நீங்கள் வேற.....அவர் இப்பவே கைலாசாவில்  வாரிசுகள்  உருவாக்கப் போகிறார் போல ......!  😁

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் அலம்பறைகள் எவ்வாறு எவ்வித பிரச்னைகளும் இல்லாமல் தாங்கப்படுகின்றன என்று ஒரு இந்திய நண்பரிடம் விசாரித்தேன்.

இவர் ஏதோ ஒரு சக்தி கொண்டவர் என்ற பயத்தினை கர்நாடக,  தமிழக அரசியல் வாதிகள் மத்தியில் உருவாக்கி விட்டார்.

இவரை தொட்டவர்கள் ஏதோ ஒருவகை சிக்கலுக்கு ஆளாகின்றனர் என்று உணர்கின்றனர்.

இவரை முதலில் கைது செய்த எடியூரப்பா பதவி இழந்தார். 

அவருக்கு பின் பதவிக்கு வந்த சீத்தாராமையாவின் குடும்பத்தில், (மகன் என்று நிணைக்கிறேன்) ஓர் துர் மரணம்.

எடியூரப்பா சாமியார் காலில் விழுந்து மன்னிப்பை கோரி அவர் ஆசீர்வாதத்தினால், பகீரதப் பிரயத்தனத்துடன் பதவிக்கு மீண்டும் இப்போது வந்துள்ளனர்.

ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க முயல, சிறைக்கு போனார்... பின்னர் இறந்தார்.

சாமியார் வேற தானே கடவுள் என்கிறார்.

காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையோ தெரியவில்லை. இந்த பயம் அவரை கைதாகாமல் வெளியே இருக்க வைக்க, எடியூரப்பா பிஜேபி என்பதாலும் மத்திய அரசும் கண்டுகொள்ளாமல் , போவதால் அவரும் கைலாச என்று அலம்பரை பண்ணுகிறார்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, சுவைப்பிரியன் said:

நீங்கள் இப்படியே கதைச்சுக் கொன்டு இருங்கோ.நான் இப்ப ஏர்போட்டில் நிக்கிறேன்.

நான் கைலாசாவுக்கை நிண்டு தேத்தண்ணி ஆத்திக்கொண்டு நிக்கிறன், 😎

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Nathamuni said:

இவரின் அலம்பறைகள் எவ்வாறு எவ்வித பிரச்னைகளும் இல்லாமல் தாங்கப்படுகின்றன என்று ஒரு இந்திய நண்பரிடம் விசாரித்தேன்.

இவர் ஏதோ ஒரு சக்தி கொண்டவர் என்ற பயத்தினை கர்நாடக அரசியல் வாதிகள் மத்தியில் உருவாக்கி விட்டார்.

இவரை தொட்டவர்கள் ஏதோ ஒருவகை சிக்கலுக்கு ஆளாகின்றனர் என்று உணர்கின்றனர்.

இவரை முதலில் கைது செய்த எடியூரப்பா பதவி இழந்தார். மீண்டும் இப்போது வந்துள்ளனர்.

ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க முயல, சிறைக்கு போனார்... பின்னர் இறந்தார்.

காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையோ தெரியவில்லை.

இவர் ஏதோ ஒரு சக்தி கொண்டவர் என்பதில் உண்மையும் இருக்கலாம். நாம் அறிந்தது கை மண் அளவு. அறியாதது பிரபஞ்சங்களையும் தாண்டிய அளவு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, Paanch said:

ஐயையோ! வன்னியர் ஒரு பூட்டப் பிள்ளையைக் கூடக் காணாது கைலாசம் போகப் போகிறாரா...? கடவுளே.!!

2 hours ago, suvy said:

நீங்கள் வேற.....அவர் இப்பவே கைலாசாவில்  வாரிசுகள்  உருவாக்கப் போகிறார் போல ......!  😁

கரண்ட் கனெக்சன் குடுக்கப்போன வன்னியர் அபிசேக ஆராதனையில் கலந்திருப்பாரா? :grin:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

கரண்ட் கனெக்சன் குடுக்கப்போன வன்னியர் அபிசேக ஆராதனையில் கலந்திருப்பாரா?

வன்னியர் கைலாசத்திற்கு வந்து ஆராதனையிலும் கலந்து கரண்ட் கனெக்சனும் கொடுத்துவிட்டார். அவரைக் கண்டதும் ஒன்று என்னமா பளிச்சென்று மண்டபமே ஒளிரப் பிரகாசிக்குது, நம்பமுடியவில்லையா 49 வினாடிகள் அதாவது 1 நிமிடம் 2 வினாடியிவிருந்து 51 வினாடிவரை வீடியோவைப் பாருங்கள்.🤩    

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Paanch said:

சாமிகளே,

'சம்சாரமே மின்சாரம்' என மின்சாரத்தோடு வாழ்ந்து, கைலாசாவிற்கு ஒளியை கொடுக்க முனைந்தால், நீங்கள் தவறுதலாக எடை போடுகிறீர்கள். vil-respire.gifvil2_cligne.gif

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, suvy said:

அதெல்லாம் அரசர் பார்த்துக்கொள்ளுவார்......நீங்கள் அரசருக்குத்தான் மசாஜ் செய்யவேண்டி இருக்கும், சம்மதமா......!  😎

அரசருக்கு ரெஸ்ட் கொடுப்பம் என்றால் விட மாட்டியள் போல....

  • கருத்துக்கள உறவுகள்
On 26/8/2020 at 17:44, putthan said:

பக்தைகளுக்கு உடல் மசாஜ் சென்டர்  திறந்து நடத்துவமா....தோழரே

உங்களுக்கு ரொம்பத்தான் ஆசை !!!

On 27/8/2020 at 05:50, ராசவன்னியன் said:

சாமிகளே,

'சம்சாரமே மின்சாரம்' என மின்சாரத்தோடு வாழ்ந்து, கைலாசாவிற்கு ஒளியை கொடுக்க முனைந்தால், நீங்கள் தவறுதலாக எடை போடுகிறீர்கள். vil-respire.gifvil2_cligne.gif

ராஜவன்னியர், அப்ப அப்ப தேவைப்படும் போது றிமூட் மூலம்  பவர் கட் பண்ணும் தொழில்நுட்ப வசதியை அளித்தால் சன்னியாசிகள் சக்தி வழிபாடு செய்யும் போது வீடியோ  எடுத்து  அவர்களின் பக்தியை குலைக்கும் விஷமிகளின் செயலை ஒழிக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
On 3/9/2020 at 12:26, tulpen said:

ராஜவன்னியர், அப்ப அப்ப தேவைப்படும் போது றிமூட் மூலம்  பவர் கட் பண்ணும் தொழில்நுட்ப வசதியை அளித்தால் சன்னியாசிகள் சக்தி வழிபாடு செய்யும் போது வீடியோ  எடுத்து  அவர்களின் பக்தியை குலைக்கும் விஷமிகளின் செயலை ஒழிக்கலாம். 

அதற்கும் வழி இருக்கிறது.

வளர்ந்த நாடுகளில் ஸ்கேடா(SCADA) என்ற தொழிற் நுட்பத்தின் மூலம் நாட்டிலுள்ள அனைத்து மின்சார கட்டமைப்புகளை ஒருங்கிணைத்து நெறிப்படுத்துகிறார்கள்.

உதாரணமாக, நித்தியானந்த குடியிருக்கும் அல்லது அல்லது நீங்கள் சொன்ன சக்தி வழிபாடின்போது அந்த வீட்டிற்கு மின்சாரம் விநியோகிக்கும் குறிப்பிட்ட மின்சார கம்பிக்கு(Cable Feeder) மின் விநியோகத்தை தொலைதூரத்திலிருக்கும் கட்டுப்பாட்டு அறையிலிருக்கும்(SCADA Master Station) கணணியில் ஒரு பொத்தானை தட்டினால் மின்சாரம் உடனே துண்டிக்கப்பட்டுவிடும்..!

ஆனால் இப்பொழுது இருட்டிலும் தெளிவாக காணொளி பதியும் கருவிகள் வந்துவிட்டனவே..! நீங்கள் சொல்லும் விஷமிகள் அந்தவகை புதிய கருவிகளை பயனபடுத்தினால் ஒன்று செய்ய இயலாது.

  • கருத்துக்கள உறவுகள்

கைலாசா நாட்டில் ஹிந்து பாராளுமன்றம் அமைக்கப்படும் : நித்தியானந்தா வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் அறிவிப்பு.!

full.jpg

கைலாசா: இந்தியாவில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய சுவாமி நித்தியானந்தா க ைலாசா என்ற நாட்டை உருவாக்கி வருகிறார். நாட்டில் தேடப்படும் குற்றவாளி பட்டியலில் உள்ள நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பது எந்த காவல் அமைப்புகளுக்கும் தெரியவில்லை.

இதற்கிடையே நித்தியானந்தா தான் கைலாசா என்ற நாட்டை உருவாக்கி அங்கு வாழ்ந்து வருவதாக அவரே வீடியோ வெளியிட்டார். இது குறித்து நடந்த ஆய்விலும் இந்திய அதிகாரிகள் குறிப்பிடும் வகையில் இதுவரையில் எதையும் கண்டறியவில்லை.

IMG-20200907-140136.jpg

ஓரு ஆண்டுக்கு மேலாக அதிகாரிகள் நித்தியானந்தாவைத் தேடி வரும் (?) நிலையில், செய்திகளுக்குப் பேட்டி அளிப்பது, வீடியோக்கள் வெளியிடுவது, கைலாசா நாடு குறித்து அறிவிப்புகளை வெளியிடுவது உள்ளிட்டவற்றை அவர் வாடிக்கையாக கொண்டிருந்தார்.

கைலாசா நாட்டுக்கென தனி ரிசர்வ் பேங்க், கரன்சிகள் என அதிரடி அறிவிப்பை விநாயகர் சதுர்த்தியன்று நித்தியானந்தா வெளியிட்டார். இந்நிலையில் கைலாசா நாட்டில் பாராளுமன்றம் அமைப்பது தொடர்பாக புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில் கைலாசா நாட்டில் ஹிந்து பாராளுமன்றம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து விரைவில் கைலாசா நாட்டிற்கான பாஸ்போர்ட் குறித்த அறிவிப்பும் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

https://m.dinakaran.com/article/news-detail/615190

  டிஸ்கி :  

வல வல.. கொல கொல.. என்டு பகிடி கதைக்காமல் கைலாச நாடாளுமன்றத்தில் மெம்பர் ஆக வழிய பாருங்கப்பா .!.👍 ☺️..😊

  • கருத்துக்கள உறவுகள்
On 26/8/2020 at 19:35, கற்பகதரு said:

இவர் ஏதோ ஒரு சக்தி கொண்டவர் என்பதில் உண்மையும் இருக்கலாம். நாம் அறிந்தது கை மண் அளவு. அறியாதது பிரபஞ்சங்களையும் தாண்டிய அளவு.

முதலில் நல்ல பச்சை மட்டையால் நாலு சாத்த எல்லாம் சரியாகும் .

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

முதலில் நல்ல பச்சை மட்டையால் நாலு சாத்த எல்லாம் சரியாகும் .

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை, ஏமாற்றிக்கொண்டிருப்பவர்களுக்கு பஞ்சமேது,

இவர் தொட்ட இடம் நல்ல இடம், அதுதான் இன்றுவரை இவரை சூழ ஒரு படை😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.