Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பில்லேடனுக்கு சிலை வைக்க முடியாது; அதுபோல் திலீபனை நினைவேந்த முடியாது – கூறுகிறார் ஊடக அமைச்சர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரான திலீபனை நினைவு கூருவதற்கு அனுமதியளிக்க முடியாது.”

இவ்வாறு வெகுசன ஊடக அமைச்சர் ஹெஹெலிய ரம்புக்வெல இன்று (02) யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்துள்ளார். மேலும்,

“பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவரை நினைவு கூருவது நிரந்தர சமாதானத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகையனால் அத்தகைய நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒசாமா பில்லேடன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்பதால் கொல்லப்பட்டிருக்கின்றார். அவருக்கு அமெரிக்காவில் சிலை வைக்க முடியாது. அது போலவே பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவராகவே திலீபனும் காணப்படுகின்றார். ஆகையினால் அவருக்கு சிலை வைக்கவோ நினைவு கூரவோ முடியாது.” – என்றார்.https://newuthayan.com/பில்லேடனுக்கு-சிலை-வைக்க/

  • கருத்துக்கள உறவுகள்

ஹெஹெலிய ரம்புக்வெல.... கிறுக்குப் பயல். 
முன்பு அமைச்சராக  இருந்த போது, 
தனது மகனைப் பார்க்க... அவுஸ்திரேலியா சென்று, அங்கு தண்ணியடித்து... வெறியில்,
சாமம் இரண்டு மணிக்கு...  பல்கனியில் இருந்து, கீழே விழுந்து எலும்பு முறிந்து இருந்த ஆள்.
அதனைக்  கேள்விப் பட்ட மகிந்த,  இவரை சில காலம் ஒதுக்கி வைத்திருந்தார்.

பிறகு... இப்ப, யாழ்ப்பாணம் வந்து.. பனங்கள்ளை குடித்து விட்டு, 
உளறுவதை எல்லாம், நாம்.. கணக்கில் எடுக்கப் படாது.

7 hours ago, தமிழ் சிறி said:

தனது மகனைப் பார்க்க... அவுஸ்திரேலியா சென்று, அங்கு தண்ணியடித்து... வெறியில்,
சாமம் இரண்டு மணிக்கு...  பல்கனியில் இருந்து, கீழே விழுந்து எலும்பு முறிந்து இருந்த ஆள்.

விழுந்து முறிந்தது மட்டுமல்ல தமிழ்  சிறி இவர் ஹோட்டலுக்கு எதிராக  நஷ்ட ஈடு கேட்டு வழக்குப்போட்டு காசும் எடுத்தவர்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, puthalvan said:

விழுந்து முறிந்தது மட்டுமல்ல தமிழ்  சிறி இவர் ஹோட்டலுக்கு எதிராக  நஷ்ட ஈடு கேட்டு வழக்குப்போட்டு காசும் எடுத்தவர்.

அட... இந்த விசயத்தை, இப்பதான் கேள்விப் படுகின்றேன்.
சிங்கள வெறிக்குட்டி... அமைச்சர்   எல்லாம், யாழ்ப்பாணத்துக்கு வந்து,
எமக்கு... "ரியூஷன்" எடுப்பதை பார்க்க... கடுப்பு வருகுது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அட... இந்த விசயத்தை, இப்பதான் கேள்விப் படுகின்றேன்.
சிங்கள வெறிக்குட்டி... அமைச்சர்   எல்லாம், யாழ்ப்பாணத்துக்கு வந்து,
எமக்கு... "ரியூஷன்" எடுப்பதை பார்க்க... கடுப்பு வருகுது. 

அதுங்க பிழைப்பு அப்பிடி.  ஊளையிட்டு தங்கள் ஊழல்களை மறைக்கபாக்குதுகள்.கோத்தாவே கணக்கெடுக்க மாட்டார் உவரை.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பிழம்பு said:

“தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரான திலீபனை நினைவு கூருவதற்கு அனுமதியளிக்க முடியாது.”

இவ்வாறு வெகுசன ஊடக அமைச்சர் ஹெஹெலிய ரம்புக்வெல இன்று (02) யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்துள்ளார். மேலும்,

“பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவரை நினைவு கூருவது நிரந்தர சமாதானத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகையனால் அத்தகைய நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒசாமா பில்லேடன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்பதால் கொல்லப்பட்டிருக்கின்றார். அவருக்கு அமெரிக்காவில் சிலை வைக்க முடியாது. அது போலவே பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவராகவே திலீபனும் காணப்படுகின்றார். ஆகையினால் அவருக்கு சிலை வைக்கவோ நினைவு கூரவோ முடியாது.” – என்றார்.https://newuthayan.com/பில்லேடனுக்கு-சிலை-வைக்க/

இப்படிக் கதைப்பதை எப்படி யாழ்ப்பாண ஊடகவியலாளரகள் பார்த்துக்கொண்டு நின்றார்கள்?

எப்படிதைரியம் வந்தது சிங்களவனுக்கு?

ஓ.... சுமந்திரனே கதைத்துவிட்டு தைரியமாக உலாவமுடியுமென்றால் தனக்கு ஒரு மிரச்சனையும் வராது என்று எண்ணம்தான்

6 hours ago, தமிழ் சிறி said:

அட... இந்த விசயத்தை, இப்பதான் கேள்விப் படுகின்றேன்.
சிங்கள வெறிக்குட்டி... அமைச்சர்   எல்லாம், யாழ்ப்பாணத்துக்கு வந்து,
எமக்கு... "ரியூஷன்" எடுப்பதை பார்க்க... கடுப்பு வருகுது. 

தமிழ் சிறி நான் அடுத்து சொல்லும் விஷயம் உங்களுக்கு இன்னும் கொஞ்சம் கடுப்பேத்தும்.  வழக்கு நடந்துகொண்டிருந்த அதேநேரம் தான் அமைச்சராக இருந்தவேளையில் நடந்த விபத்தாக காரணம் காட்டி இவர் ஜனாதிபதி நிதியில் இருந்து 20மில்லியன் ரூபா எடுத்தவர். இந்த விடயம் பின்னர் விசாரணையும் செய்யப்பட்டது. உண்மையில் இப்படி ப்பட்டவர்கள் தான் ஸ்ரீலங்காவுக்கு அமைச்சராக இருக்க தகுதியானவர்கள்!

இவருடைய மகன் இவரை வெண்டவர். ஒரு செய்தியின் படி பிரிட்டிஷ் விமான கதவை மலசலகூட கதவு என்று நினைத்து திறக்க முயன்றவர். அதுவும் 35,000 அடி உயரத்தில். அதோடு தந்தையார் கதவு ஓடைக்குளால் இன்னொரு அறையை பார்க்கவெளிக்கிட்டு தான் விழுந்ததாக இந்த கட்டுரையில் பிரஸ்தாபித்துள்ளனர். இதோ செய்தி: http://www.gbdigest.com/2013/08/breaking-news.html

மற்ற செய்தியின் மூலங்கள்.

https://www.timeslanka.com/2012/11/20/minister-rambukwella-takes-melbourne-hotel-to-court/

https://colombogazette.com/2016/06/14/fcid-grills-keheliya-on-funds-obtained-after-australia-accident/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ragaa said:

எப்படிதைரியம் வந்தது சிங்களவனுக்கு?

ஓ.... சுமந்திரனே கதைத்துவிட்டு தைரியமாக உலாவமுடியுமென்றால் தனக்கு ஒரு மிரச்சனையும் வராது என்று எண்ணம்தான்.

உங்களால் என்ன செய்ய முடியும்? யாழ் களத்தில் எழுத முடியும் - அவ்வளவுதான் உங்களால் முடிந்தது என்பது அவர்களுக்கும் தெரியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திலீபனை நினைவுகூர அனுமதிக்க முடியாது என்றபோது இரு முகங்களில் தவழும் சந்தோசம்.

a30LSKix?format=jpg&name=small

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கற்பகதரு said:

உங்களால் என்ன செய்ய முடியும்? யாழ் களத்தில் எழுத முடியும் - அவ்வளவுதான் உங்களால் முடிந்தது என்பது அவர்களுக்கும் தெரியும்.

அப்ப கடைசியில் ஒப்புகொண்டாச்சு போல சிங்களவனும் சுமந்திரனும் ஒரெமாதிரிதான் நடக்கிறார்கள் என்று நன்றி கற்பகம்🙏

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

திலீபனை நினைவுகூர அனுமதிக்க முடியாது என்றபோது இரு முகங்களில் தவழும் சந்தோசம்.

a30LSKix?format=jpg&name=small

கெஹெலியவுக்கு இருமருங்கிலும் அமர்ந்திருப்பது அங்கஜனும் வியாழேந்திரனும் தானே? அடிமைகளின் விசுவாசம் முகத்தில் அப்படியே பளிச்சென்று தெரிகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ragaa said:

அப்ப கடைசியில் ஒப்புகொண்டாச்சு போல சிங்களவனும் சுமந்திரனும் ஒரெமாதிரிதான் நடக்கிறார்கள் என்று நன்றி கற்பகம்🙏

நீங்களும் அவர்கள் போல தானே நடக்கிறீர்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, puthalvan said:

விழுந்து முறிந்தது மட்டுமல்ல தமிழ்  சிறி இவர் ஹோட்டலுக்கு எதிராக  நஷ்ட ஈடு கேட்டு வழக்குப்போட்டு காசும் எடுத்தவர்.

அவரில் பிழை என்றால் அந்த ஹொட்டல் எப்படி அவருக்கு காசு கொடுத்தது ? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

அவரில் பிழை என்றால் அந்த ஹொட்டல் எப்படி அவருக்கு காசு கொடுத்தது ? 

இது Hotel இன்R esponsibilities என்கின்ற வரையறைக்குள் வரும் என்று நினைக்கிறேன்.🤔

எங்கே லாயர் வண்டு முருகனைக் காணோம். 

லாயர் வண்டு முருகன்.. வண்டு முருகன்... வண்டு முருகன்..... 

😜

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ரதி said:

அவரில் பிழை என்றால் அந்த ஹொட்டல் எப்படி அவருக்கு காசு கொடுத்தது ? 

சுத்துமாத்து தெரியாத தங்கச்சி.... 🙃

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Kapithan said:

இது Hotel இன்R esponsibilities என்கின்ற வரையறைக்குள் வரும் என்று நினைக்கிறேன்.🤔

எங்கே லாயர் வண்டு முருகனைக் காணோம். 

லாயர் வண்டு முருகன்.. வண்டு முருகன்... வண்டு முருகன்..... 

😜

நல்ல விசயங்களுக்கு அவர் வரார் எண்டு சொல்லுறதை விட அவர் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார் 😎

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதம் தூக்கியோரை தெற்கில் நினைவு கூற முடியமென்றால் ஏன், வடக்கில் முடியாது? மனோ

1970/80 களில் இலங்கை அரசுக்கும், இராணுவத்துக்கும் எதிராக ஆயுதம் தூக்கிய, ஜேவிபியின் தேசப்பிரேமி இயக்க போராளிகள் இன்று தெற்கில் பகிரங்கமாக நினைவுகூறப்படும் போது, அதே வரப்பிரசாதம் வடக்கில் தமிழருக்கு இல்லை? இதனால், இந்த அஈசாங்கம் இப்போது அடிக்கடி சொல்லும், “ஒரே நாடு-ஒரே சட்டம்” என்ற கொள்கை ஒரு கேலி-கூத்தாக தெரிகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்பி, தனது டுவீடர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்குபவர்களை அரசாங்கம் தனது கணிப்பீட்டின்படி “பயங்கரவாதிகள்” என்கிறது. அப்படியானால், 1970ம் , 80ம் ஆண்டு களில் இலங்கை அரசுக்கும், ராணுவத்துக்கும் எதிராக ஆயுதம் தூக்கிய ஜேவிபியின் தேசப்பிரேமி இயக்க போராளிகள், “சிங்கள பயங்கரவாதிகள்கள்” ஆவர். இவர்கள் வருடாவருடம், தெற்கில் பகிரங்கமாக நினைவுகூறப்படுகிறார்கள்.

ஆனால், அதே வரப்பிரசாதம், தமிழர்களுக்கு இல்லை. “தமிழ் பயங்கரவாதிகளை” என்ற தமிழ் ஆயுததாரிகளை மட்டுமல்ல, பலவேளைகளில் மரணித்த சாதாரண மக்களையே பகிரங்கமாக நினைவு கூற, தமிழர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

இது இந்நாட்டில் நீண்ட நாளாக நடந்து வரும் ஒரு இரட்டை நிலைப்பாடு கொண்ட பாரபட்ச கொள்கை ஆகும். இதற்கு இடையில் இன்று இந்த அரசு, மேலும் ஒரு கொள்கையை பற்றி பேசி வருகிறது. அதுதான், “ஒரே நாடு-ஒரே சட்டம்” என்ற கொள்கை ஆகும். இது இந்நிலைமையை இன்னமும் கேலி-கூத்தாக மாற்றி உள்ளது.

அதாவது, மறைந்த தமது உறவுகளை தமிழர் நினைவு கூறுவது மறுக்கபடுவதும், அதே உரிமை சிங்களவருக்கு வழங்கப்படுவதும், இந்நாட்டில் அரசின் இரட்டை கொள்கையின் அடிப்படையில் கேலி கூத்தாக அமைகிறது. மறுபுறம் தமிழ் மக்களை பொறுத்தவரையில் இது பெரும் சோகமாக அமைகிறது.

இந்த இரட்டை கொள்கை உடன் முடிவுக்கு வரவேண்டும். இதுபற்றி தேசிய கலந்துரையாடல் நடைபெற வேண்டும். இதுபற்றி எவருடன் வேண்டுமென்றாலும், மூன்று மொழிகளிலும் பகிரங்க விவாதம் நடத்த நான் தயார்.

http://www.ilakku.org/ஆயுதம்-தூக்கியோரை-தெற்கி/

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

திலீபனை நினைவுகூர அனுமதிக்க முடியாது என்றபோது இரு முகங்களில் தவழும் சந்தோசம்.

a30LSKix?format=jpg&name=small

வாக்குக் கேட்கும் போது புலிப்பாட்டு... வாக்கு வீழ்ந்த பின்.. சிங்களத்துதிபாடல்.

இவங்களுக்கு வாக்குப் போட்டவங்களுக்கு பிச்சையும் போடக் கூடாது.

பின்லாடன் சொந்த இனத்தின் விடுதலைக்காகப் போராடவில்லை.. அவர்களின் உரிமைக்காகப் போராடவில்லை.. அமெரிக்க ஏவலுக்காகப் பயங்கரவாதம் செய்தார்... எஜமானர்களாலேயே அழிந்தார்.. சிலை வைக்க யாரும் துணியவில்லை.

ஆனால் ஹிந்திய மக்களின் விடுதலைக்காகப் போராடிய பிரித்தானிய பார்வையில் பயங்கரவாதியான.. ஹாந்திக்கு... சிலை உண்டு.  தென்னாபிரிக்க கறுப்பின மக்களின் விடுதலைக்காகப் போராடிய மண்டேலாவுக்கு.. வெள்ளையின அரசின் பார்வையில் கொடிய பயங்கரவாதி.. சிலை உண்டு.

ஏன் சிங்கள அரச பயங்கரவாதத்தை எதிர்த்து இரண்டு பெரும் கிளர்ச்சிகளில் ஈடுபட்ட சிங்கள பெளத்த பேரினவாத அரசுகளுக்கு இன்று முட்டுக்கொடுக்கும்.. விமல் வீரவம்ச என்ற முன்னாள் பயங்கரவாதி வந்த ஜே வி பி கட்சியின் தலைவர் பயங்கரவாதி.. ரோகண விஜயவீரவுக்கும் சிலை உண்டு..

ஏன் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் சமூக உரிமைக்காக உண்ணா நோன்பிருந்து அதுவும் ஆயுதக் கையளிப்பின் பின்.. ஆயுதங்கள் மெளனிக்கப்பட்ட நிலையில்.. போராடி உயிர் நீத்த திலீபனுக்கு தமிழ் மக்கள்.. சிலை வைக்க முடியாது.

ஹாந்தி.. மண்டேலா.. ரோகண விஜயவீரவுக்கு மேலான தகுதி திலீபனுக்கு உண்டு.

அதனை குடிகாரன் சிங்கள பெளத்த பேரினவாத அரச பயங்கரவாதி.. ஹெகலிய ரம்புக்வலவுக்கு விளங்க வைக்க ஏன் அந்த வலதும் இடதும் முயலவில்லை..??! 

Edited by nedukkalapoovan

14 hours ago, ரதி said:

அவரில் பிழை என்றால் அந்த ஹொட்டல் எப்படி அவருக்கு காசு கொடுத்தது ? 

ரதி, தனது அறையில் இருந்த பல்கனி கதவை திறந்து பல்கனிக்கு போனபொழுது கதவு பின்னால் மூடிக்கொண்டது. கதவில் one-way or exit லாக் (வெளியில் இருந்து திறக்கமுடியாது )என்பதால்  இவர் மறுபடியும் உள்செல்ல முடியவில்லை.எனவே இவர் தனது அறைய அடைய முயறசி செய்த்தபொழுது விபத்து நடைபெற்றது.

எனவே அந்த ஹோட்டல் இந்த கதவு விடயத்தில் தவறிழைத்து விட்டதாக தான் வழக்கு. சட்டத்தின் முன் அவர் போதையில் இருந்தார் என்பதோ அல்லது அவர் ஒரு இனொரு நாட்டில் அமைச்சர் என்பதோ அல்லது ஏன் வெளியில் வந்தார்  என்பதோ பெரிதாக தாக்கம் செலுத்தியிருக்கமாட்டாது. அவர் அமைச்சரோ, ஆட்டுக்குட்டியோ அந்த அந்த ஹோட்டல் அங்கு தங்குமவர்களின் பாதுகாப்பு விடயத்தில் குறைந்தளவு நடவடிக்கைளை எடுத்ததா (Hotel liability: Duty to exercise reasonable care for the safety and security of their patrons) என்பது தான் சட்டவாளர்களின் கேள்வி. வழக்கு முழுமையாக நீதிமன்றம் செல்லமுன் இருதரப்பு சட்டவாளர்களும் ஒரு நாஷ்ட ஈடு தொடையை ஒப்புக்கொண்டு விடயத்தை முடிவுக்கு கொண்டுவந்தாக தான் நான் அறிந்திருந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, puthalvan said:

நன்றி...நீங்கள் சொல்வதன் படி பார்த்தால் ஹொட்டல் மேலும் பிழை இருக்குது அல்லவா ?

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Kapithan said:

இது Hotel இன்R esponsibilities என்கின்ற வரையறைக்குள் வரும் என்று நினைக்கிறேன்.🤔

எங்கே லாயர் வண்டு முருகனைக் காணோம். 

லாயர் வண்டு முருகன்.. வண்டு முருகன்... வண்டு முருகன்..... 

😜

பிந்திய தகவல்களின் படி லாயர் வண்டூஸ் கட்டாய விடுப்பில் இருப்பதால் இந்த வழக்கில் சமூகம் அளிக்க முடியாது இருகிறாதாம்🤣

பிகு: கீழே புதல்வன் மிக தெளிவாக விளக்கியுள்ளார்.

அமைச்சர் பெருமான் போதையில் இருந்தது அவர் விழுந்தமைக்கு ஒரு காரணியாக இருந்தாலும், முக்கிய காரணி கதவை திறக்க முடியாமல் போனதே. தவிரவும் ஒரு அறையில் தங்குபவர் தண்ணி அடிப்பார், அப்படியே பால்கனிக்கும் போவார் என்பதை ஹோட்டல் நிர்வாகம் எதிர்பார்த்திருக்க வேண்டும். ஒரு ஹோட்டல் ரூமை பாவிப்பவர் அந்த அறையை சாதாரணமாக பாவிக்கும் முறைதானே இது. ஆகவே விழுந்தமைக்கும்  ஹோட்டல் நிர்வாகத்தின் அலட்சியத்துக்கும் இடையே ஒரு நிகழ்வு-சங்கிலி ( causative link) உருவாகி இருக்கும். 

விழுந்தமைக்கு அமைச்சரின் செயல்பாடும் ஒரு கூட்டு காரணி எனில், இழப்பீடு அதற்கேற்ப குறைக்கப்படும் (comparative  negligence). 

Edited by goshan_che

திலீபனின் போராட்டத்தை கொச்சைப்படுத்தவில்லை – இப்படி சொல்கிறார் வியாழேந்திரன்

திலீபனின் போராட்டம் ஒரு சமூகத்தின் விடுதலைக்கான போராட்டம் எனவும் அதற்கான கௌரவத்தை கொடுத்துக் கொண்டிருக்கின்றோம் என்றும் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் தெரித்துள்ளார்.

அத்துடன், தியாகி திலீபனின் அகிம்சைவழிப் போராட்டத்தை தாங்கள் ஒருபோதும் கொச்சைப்படுத்தியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு இன்று (04) மட்டக்களப்பு – புளியந்தீவில் நடைபெற்ற நிகழ்வை தொடர்ந்து இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்,

“நாங்கள் கடந்த காலங்களில்கூட திலீபனின் அகிம்சைவழிப் போராட்டத்தை கொச்சப்படுத்தியவர்கள் அல்ல. நாங்கள் அதனை மதித்திருக்கின்றோம். இந்த நாட்டிலே இருக்கின்ற தமிழ் மக்கள் ஏனைய சமூகத்துக்கு இணையாக தலைநிமிர்ந்து வாழவேண்டும், யாருக்கும் அடிமையாக இருக்கக் கூடாது என்ற தியாகி திலீபனின் கனவை நனவாக்க நாங்கள் இன்று அரசாங்கத்தோடு இணைந்திருந்து வேலை செய்து கொண்டிருக்கிறோம்.

சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தியாகி திலீபனின் விடயத்தில் நாங்கள் அமைதியாக இருந்தோம் என்பதை குற்றமாகக் கருதுகின்றனர். நாங்கள் வடக்கு கிழக்கில் இடம்பெற்ற கடையடைப்பு போராட்டத்தை குழப்பவில்லை. மறுப்பும் தெரிவிக்கவில்லை” – என்றார்.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் தியாக தீபம் திலீபனை ஒசாமா பில்லேடனுடன் ஒப்பிட்டதுடன், நினைவேந்தலை அனுமதிக்க முடியாது என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல பேசிய போது வியாழேந்திரனும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

https://newuthayan.com/திலீபனின்-போராட்டத்தை-கொ/

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, செண்பகம் said:

யாருக்கும் அடிமையாக இருக்கக் கூடாது என்ற தியாகி திலீபனின் கனவை நனவாக்க நாங்கள் இன்று அரசாங்கத்தோடு இணைந்திருந்து வேலை செய்து கொண்டிருக்கிறோம்.

தியாகி திலீபனின் உணாவிரதத்தையே கொச்சைப் படுத்துகிறவனுடன் சேர்ந்து, அவரின் கனவை நனவாக்கப் போகிறாராம். சிரிப்பதா? அழுவதா? தெரிந்துதான் சொல்கிறாரா? அல்லது கேட்போர் அனைவரும்  முட்டாள்கள் என்று நினைத்து பேசுகிறாரா? ஹெகெலியாவின் பேச்சுக்கும் இவரின் விளக்கத்துக்கும் அதிக வித்தியாசமில்லை. இப்ப விளங்குகிறது, சிங்களவனின் கொக்கரிப்புக்கு பின்னால் இருந்து கொண்டு வினோத விளக்கமளிப்பவர்களை.

  • கருத்துக்கள உறவுகள்

பில்லேடனுக்கு சிலை வைக்க முடியாது; அதுபோல் திலீபனை நினைவேந்த முடியாது

ரிசாத்தின் தம்பியை விடுவிக்கலாம்...ரிசாத்தின் மீதும் பிழையில்லை என்றும் சொல்லலாம்...இது பசிலின் தியரி...இதை விளக்கும் ..**** இது

10 hours ago, alvayan said:

ரிசாத்தின் தம்பியை விடுவிக்கலாம்...ரிசாத்தின் மீதும் பிழையில்லை என்றும் சொல்லலாம்...இது பசிலின் தியரி...இதை விளக்கும் ..**** இது

இதில் என்னவென்றால் கோத்தா வந்தால் தான் வன்னியை இவர்களிடம் இருந்து காப்பாற்றலாம் என்று முக நூல் முழுவதும் பதிவை போட்டவர்களை கண்டால் சிரிப்பாய் வருது.

On 3/10/2020 at 10:20, கற்பகதரு said:

உங்களால் என்ன செய்ய முடியும்? யாழ் களத்தில் எழுத முடியும் - அவ்வளவுதான் உங்களால் முடிந்தது என்பது அவர்களுக்கும் தெரியும்.

அதென்றால் உண்மை தான்.....புலிகளையும் போராட்டத்தையும் தனியாக நின்று ஒடுக்கிய வீரர்கள் தானே ........!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.