Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைய முன்வரவேண்டும் - யாழ். கட்டளைத் தளபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண மாவட்டத்தினை அபிவிருத்தி செய்வதற்கு தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைய முன்வரவேண்டும் என யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத்பண்டார தெரிவித்துள்ளார்.

இராணுவத்திற்கு  இளைஞர் யுவதிகளை இணைக்கும் தேசிய ரீதியான வேலைத்திட்டத்தில் யாழ் மாவட்டத்தில் இளைஞர்களை இராணுவத்தில்  இணைப்பது தொடர்பாக விளக்கம் அளிக்கும் விசேட கூட்டம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை,  யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டத்தில் யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார, யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் , மேலதிக அரசாங்க அதிபர், காணி எஸ்.முரளிதரன், யாழ்.மாவட்ட பிரதேச செயலர்கள் மற்றும் பிரதேச இராணுவ பிரிவுகளின் தளபதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

spacer.png

நிகழ்வில் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி உரையாற்றுகையில்,

இராணுவத்திற்கு  இளைஞர் யுவதிகளை இணைக்கும் தேசிய ரீதியான வேலைத்திட்டத்தில் யாழ் மாவட்டத்தில் இளைஞர்களை இராணுவத்தில்  இணைப்பது தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காகவே நாம்  கூடியுள்ளோம்.

குறிப்பாக 90 இராணுவ வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன அதனை ஆளுநர் மற்றும் அரச அதிபருடன்  கலந்துரையாடி அதனடிப்படையிலே இன்று பிரதேச செயலர்களுக்கு  குறித்த ஆட்சேர்ப்பு தொடர்பான விடயங்களை விளக்குவதற்காகவே கூட்டத்தில் அனைவரும் ஒன்று கூடியுள்ளோம்.

குறிப்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த ஒரு சிலரே தற்போது இராணுவத்தில் இணைந்து கடமை ஆற்றி வருகின்றார்கள். ஆனால் இராணுவத்தில் இலங்கையில் எந்த பாகத்தில் இருந்தும் யாரும் இணைந்து கடமை ஆற்ற முடியும் அதற்கு தடையில்லை அது தொடர்பாக எமது இராணுவ தளபதியும் ஒத்துழைப்பு வழங்குகிறார்.

தற்போது உள்ள கொவிட்-19 நிலைமையின் காரணமாக பல இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாது அங்கேயும் இங்கேயும் செல்வதை காணக்கூடியதாக உள்ளது. சில இளைஞர்கள் கொவிட்-19 நிலைமை காரணமாக தனியார் துறைகளில்  வேலைசெய்தவர்கள்  வேலை இழந்து தவிப்பதை காணக்கூடியதாக உள்ளது.

நாம் அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு கோரிக்கையினை விடுக்க விரும்புகின்றேன் நல்ல ஒரு சந்தர்ப்பத்தினை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ஏனைய வேலை வாய்ப்புகளை விட இந்த இராணுவ வேலை வாய்ப்பானது மிகவும் விசேடமான ஒரு வேலை வாய்ப்பாகும் குறிப்பாக ஓய்வூதிய திட்டம் மற்றும் ஏனைய வசதி வாய்ப்புகள் ஏனைய அரச வேலைகளுடன் ஒப்பிடும்போது மிகவும் சிறந்ததாக காணப்படுகின்றது.

இராணுவத்தில் இணைவதன் மூலம் நீங்கள் உங்கள் எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ள முடியும். குறிப்பாக யாழ் மாவட்ட  விவசாய துறை சார்ந்த வெற்றிடங்களுக்கும் இணையுமாறு நான் கோரிக்கை விடுக்கின்றேன்.

ஏனெனில் யாழ் குடாநாட்டில் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கு இளைஞர்களின் ஒத்துழைப்பு அவசியமாகும்.  அத்துடன்  மேசன் தச்சு மின் இணைப்பாளர் போன்றவற்றுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

குறித்த வேலைகளில் இணைவதன் மூலம் எமது யாழ்ப்பாண குடாநாட்டினை மேலும் விருத்தி அடையச் செய்ய முடியும்.

கிராம அலுவலர்கள் தங்களுடைய கிராமங்களுக்குச் சென்று குறித்த இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு தொடர்பான விடயங்களை மக்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும் அவ்வாறு விளங்கபடுத்துவதன் மூலமே இளைஞர் யுவதிகளுக்கு சரியான புரிதல் ஏற்படும்.

எனவே கிராம சேவையாளர்கள் இந்த விடயத்தினை கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும் இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.

தற்போதுள்ள கொரோனா நிலைமையினை கட்டுப்படுத்துவதற்கு மாவட்டத்தில் உள்ள அனைவரும் இணைந்து செயல்படுகின்றார்கள் குறிப்பாக அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர்கள் சுகாதாரப் பிரிவினர் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் இணைந்து கொரோனாவினை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறோம்.

அதேபோல நான் இன்னும் ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகின்றேன்  இராணுவ ஆட்சேர்ப்பு தொடர்பாக என்னுடன் தொலைபேசியில் பலர் உரையாடுகிறார்கள் அவர்களும் குறித்த விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தங்களை இராணுவத்தில் இணைத்துக் கொள்ள முடியும்.

நான் இராணுவத்தில் இணைந்த போது எனக்கு வழிகாட்டியாக இருந்தவர் ஒரு கப்டன் தர  தமிழ் அதிகாரி மகேந்திரன் எனப்படும் ஒருவர் எனவே இதனை எல்லாம் நீங்கள் உதாரணமாக கொண்டு நாம் எமது நாட்டினை அபிவிருத்தி செய்வதற்கும் கட்டியெழுப்புவதற்கு நாம் முன்னுதாரணமாக செயற்பட வேண்டும்.

உதாரணமாக ஒரு விடயத்தைக் குறிப்பிட விரும்புகின்றேன் 1982 ஆம் ஆண்டு நான் உயர்தர பரீட்சை எழுதும் சுற்றாடல் பாடத்தில் போது இலங்கை அபிவிருத்தி அடைந்துவரும் நாடு எனவே பரிட்சை எழுதி இருந்தேன். அதேபோல் எனது மகன் 2012 ஆம் ஆண்டு பரீட்சை எழுதும் போதும் இலங்கையை அபிவிருத்தி அடைந்து வரும் நாடு என்று எழுதியிருந்தார்.

இவ்வாறே  எமது எதிர்கால சந்ததியினரையும் அபிவிருத்தி  அடைந்து வரும் நாடு என எழுத அனுமதிக்க போகிறோமா இல்லையா என்பதை நாமே தீர்மானிக்க வேண்டும்.

ஏனைய நாடுகளைப் போல எமது நாட்டையும் அபிவிருத்தி செய்வதற்கு நாம் அனைவரும் முன்வர வேண்டும்.  மேலும் கடந்த 30 ஆண்டு யுத்தத்தின் காரணமாக நாம் அனுபவித்ததை நாம் இனி மறப்போம் கடந்த சித்தத்தை மறைந்து நாம் எதிர்காலத்தில் ஏனைய நாடுகளைப் போல எமது நாட்டையும் முன்னேற்றுவதற்கு நாம் அனைவரும்  முயற்சிக்க வேண்டும்.

அத்துடன் இந்த கொரோனா நிலைமையினை கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரப் பிரிவினர் மற்றும் அனைத்து அரசு ஊழியர்கள் பொதுமக்கள் இணைந்து செயற்படுவதன்  மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.

ஏனைய பிரதேசங்களை போல அல்லாது யாழ்  குடாநாட்டில் கொரோனா நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது அதற்கு இராணுவத்தினரும் ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள்.

அத்தோடு ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையிலும் ஒரு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கின்றது அதற்கு அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சு மற்றும் இராணுவம் இதற்கு உறுதுணை வழங்கி வருகின்றது.

அதேபோல  பொதுமக்கள் மற்றும் கல்வித்துறை சார்ந்தோர் மற்றும் ஏனைய துறையினர் அதற்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றார்கள் எனவே எமது நாட்டினை அபிவிருத்தி நோக்கிய செயற்படுவதற்கு அனைவரும் முன்வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் உரையாற்றிய யாழ் மாவட்ட  அரசாங்க அதிபர் க.மகேசன்,

இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த ஒரு சந்தர்ப்பமாக இந்த சந்தர்ப்பம் காணப்படுகின்றது. எனவே பிரதேச மட்டங்களில் கிராம சேவகர்கள் குறித்த ஆட்சேர்ப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு விளக்கம் அளிப்பதன் ஊடாக இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்ள முடியும்.

அதிலும் வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வேலைவாய்ப்பு பிரச்சினை பாரிய பிரச்சினையாக காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.

தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைய முன்வரவேண்டும் - யாழ். கட்டளைத் தளபதி | Virakesari.lk

  • Replies 70
  • Views 7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் ராணுவத்துக்கு மட்டும் கூவி அழைக்கிறார்கள்?
வேறு வேலை வாய்ப்புகளுக்கு யாழ் இளைஞர்களே வந்து இணையுங்கள் என அழைத்ததாக தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

ஏன் ராணுவத்துக்கு மட்டும் கூவி அழைக்கிறார்கள்?
வேறு வேலை வாய்ப்புகளுக்கு யாழ் இளைஞர்களே வந்து இணையுங்கள் என அழைத்ததாக தெரியவில்லை.

“இராணுவத்தில் இணைவதன் மூலம் நீங்கள் உங்கள் எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ள முடியும். குறிப்பாக யாழ் மாவட்ட  விவசாய துறை சார்ந்த வெற்றிடங்களுக்கும் இணையுமாறு நான் கோரிக்கை விடுக்கின்றேன்.

ஏனெனில் யாழ் குடாநாட்டில் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கு இளைஞர்களின் ஒத்துழைப்பு அவசியமாகும்.  அத்துடன்  மேசன் தச்சு மின் இணைப்பாளர் போன்றவற்றுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.”

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்

எனது கேள்வியின் சாராம்சம் 90 வெற்றிடங்களுக்கு இந்த கூவு கூவுபவர்கள்  சில மாதத்துக்கு முன் ப்ல ஆயிரம் வேலை வெற்றிடங்கள்  வந்த போது  ஒரு கூவலும் இல்லை  ஏன் என்பதே.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

எனது கேள்வியின் சாராம்சம் 90 வெற்றிடங்களுக்கு இந்த கூவு கூவுபவர்கள்  சில மாதத்துக்கு முன் ப்ல ஆயிரம் வேலை வெற்றிடங்கள்  வந்த போது  ஒரு கூவலும் இல்லை  ஏன் என்பதே.

https://np.gov.lk/advertisement/

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே அளவுக்கு அதிகமாக ஐனநாயகத்துக்கு சாவால் விடும் அளவுக்கு இராணுவம் உள்ள நாட்டில் வேறு வேலை வாய்ப்புகளுக்கு ஆட்களை தேர்வு செய்யாமல் எதுக்கு மீண்டும் மீண்டும் இராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு???

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, விசுகு said:

ஏற்கனவே அளவுக்கு அதிகமாக ஐனநாயகத்துக்கு சாவால் விடும் அளவுக்கு இராணுவம் உள்ள நாட்டில் வேறு வேலை வாய்ப்புகளுக்கு ஆட்களை தேர்வு செய்யாமல் எதுக்கு மீண்டும் மீண்டும் இராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு???

ஒருவேளை சீனாகாரனின் நரி வேலையாகவும் இருக்கலாம்.
இந்தியாவுடன் போர் என்று வரும் போது இலங்கை ராணுவத்தையும் சீன ராணுவத்துடன் சேர்த்து அடிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏதாவதொரு வேலையில் சேர்ந்து உழைக்கட்டும் இளைஞர்கள். என்ன இராணுவம் என்றால் கொஞ்சம் முறிச்செடுத்து விடுவார்கள். வெளியே வந்தாலும் ஒரு வேலைத் தீவிரம் இருக்கக் கூடும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
59 minutes ago, விசுகு said:

ஏற்கனவே அளவுக்கு அதிகமாக ஐனநாயகத்துக்கு சாவால் விடும் அளவுக்கு இராணுவம் உள்ள நாட்டில் வேறு வேலை வாய்ப்புகளுக்கு ஆட்களை தேர்வு செய்யாமல் எதுக்கு மீண்டும் மீண்டும் இராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு???

3 hours ago, nunavilan said:

எனது கேள்வியின் சாராம்சம் 90 வெற்றிடங்களுக்கு இந்த கூவு கூவுபவர்கள்  சில மாதத்துக்கு முன் ப்ல ஆயிரம் வேலை வெற்றிடங்கள்  வந்த போது  ஒரு கூவலும் இல்லை  ஏன் என்பதே.

90 வெற்றிடத்துக்கு தமிழரை வரச்சொல்லி இந்த காட்டுக்கத்து கத்துறாங்கள்.கக்கூஸ் கழுவவா?

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்திலுள்ள மக்களின் தொகையோடு ஒப்பிடும்போது மூன்றில் ஒரு பகுதி இராணுவம் மக்களின் வாழ்விடங்களையும், விவசாய நிலங்களையும் ஆக்கிரமித்து தேவையில்லாமல்  குடியிருக்கு. போர் முடிவுற்றபடியால் வேலையில்லாமல் இருக்கும் இராணுவம் யாழ்ப்பாணத்தில் அபிவிருத்தி வேலைகளில் ஈடுபடுகிறது என்று விளக்கம் வேறு கொடுத்தார்கள். இதில் மீண்டும் எதற்கு இராணுவ சேர்ப்பு?  ஏதோ பயங்கர பூச்சுத்தல் நடக்குது. இந்தியனுக்கு ஏதாவது மிரட்டல் விடும் செய்தி ....? தன் இராணுவத்தை தென்பகுதிக்கு எடுத்தால் தமிழர் பகுதியில்  அது ஆடிய கோரத்தாண்டவத்தை அங்கு ஆட வெள்ளிக்கிட்டால்  பிறகு இலங்கையே தாங்காது. அதுகளை கட்டி தீனி  போடவும் முடியாது. அதனால் கேட்பாரற்று மேயட்டுமென்று தமிழ்ப்பகுதிகளிலேயே விட்டிருக்கு.

6 hours ago, nunavilan said:

எனது கேள்வியின் சாராம்சம் 90 வெற்றிடங்களுக்கு இந்த கூவு கூவுபவர்கள்  சில மாதத்துக்கு முன் ப்ல ஆயிரம் வேலை வெற்றிடங்கள்  வந்த போது  ஒரு கூவலும் இல்லை  ஏன் என்பதே.

இல்லை. தொலைக்காட்சிகளில் நிறையவே விளம்பரங்கள் செய்தார்கள். சிங்கள தொலைக்காட்சிகளில் கூடுதலாக செய்ததை காணக்கூடியதாக இருந்தது. பத்திரிகைகளிலும் பிரசுரித்துஇருந்தார்கள்.

3 hours ago, Justin said:

ஏதாவதொரு வேலையில் சேர்ந்து உழைக்கட்டும் இளைஞர்கள். என்ன இராணுவம் என்றால் கொஞ்சம் முறிச்செடுத்து விடுவார்கள். வெளியே வந்தாலும் ஒரு வேலைத் தீவிரம் இருக்கக் கூடும். 

நாம் இலங்கையர் என்ற ரீதியில் இலங்கை ராணுவத்தில் இணைவதில் தவறில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

90 வெற்றிடத்துக்கு தமிழரை வரச்சொல்லி இந்த காட்டுக்கத்து கத்துறாங்கள்.கக்கூஸ் கழுவவா?

ஏற்கனவே ராணுவத்தில் இணைந்த தமிழர்களை தோட்ட வேலைகள் செய்விப்பதாக இங்கே எழுதியிருந்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்

சந்தர்ப்பத்திற்கேற்ப சொற்தொடர் பாவிக்கப்படும். வந்தேறுகுடிகள், கள்ளத்தோணி, நாம் இலங்கையர். 

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் உள்ள இலங்கை தமிழர்கள் சிலர் என் மகன் வெளிநாட்டு இராணுவத்தில் பயிற்சி எடுக்கிறான் என்று பெருமை அடித்து படங்களுடன் வலைதளங்களே வெளியிட்டனர். இலங்கை ராணுவத்தில் இலங்கையர் இணைவதில் எத்தனை கேள்விகள்

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விளங்க நினைப்பவன் said:

வெளிநாடுகளில் உள்ள இலங்கை தமிழர்கள் சிலர் என் மகன் வெளிநாட்டு இராணுவத்தில் பயிற்சி எடுக்கிறான் என்று பெருமை அடித்து படங்களுடன் வலைதளங்களே வெளியிட்டனர். இலங்கை ராணுவத்தில் இலங்கையர் இணைவதில் எத்தனை கேள்விகள்

இலங்கை இராணுவம் தமிழ் மக்களுக்கு செய்த அநியாயங்களால் தமிழர்கள்  ஏன் அவர்களுடன் இணைய வேண்டும் என நினைப்பதில் என்ன தவறு?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

இலங்கை இராணுவம் தமிழ் மக்களுக்கு செய்த அநியாயங்களால் தமிழர்கள்  ஏன் அவர்களுடன் இணைய வேண்டும் என நினைப்பதில் என்ன தவறு?

பல வருடங்களுக்கு முன்பு சிங்களவர்கள் கூட இலங்கை இராணுவத்தால் கொல்லபட்டனர் இதை விபரமாக கற்பகதரு யாழ்களத்தில் தெரிவித்திருந்தார்.இப்போது  சிங்களவர்கள் இராணுவத்தில் இணையவில்லையா?
இலங்கையில் உள்ள தமிழர்கள் இராணுவத்தில் இணைய மாட்டோம் என்று சொல்லவில்லை இணைந்துவிடுவார்களோ என்று வெளிநாடுகளில் உள்ள இலங்கை தமிழர்கள் தான் கவலை கொள்கின்றனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, விளங்க நினைப்பவன் said:

பல வருடங்களுக்கு முன்பு சிங்களவர்கள் கூட இலங்கை இராணுவத்தால் கொல்லபட்டனர் இதை விபரமாக கற்பகதரு யாழ்களத்தில் தெரிவித்திருந்தார்.இப்போது  சிங்களவர்கள் இராணுவத்தில் இணையவில்லையா?
இலங்கையில் உள்ள தமிழர்கள் இராணுவத்தில் இணைய மாட்டோம் என்று சொல்லவில்லை இணைந்துவிடுவார்களோ என்று வெளிநாடுகளில் உள்ள இலங்கை தமிழர்கள் தான் கவலை கொள்கின்றனர்.

சிங்கள  இராணுவம் தமிழர்களை கொன்றதிற்கும் சிங்களவர்களை கொன்றதிற்கும் வித்தியாசம்,வேறுபாடுகள் தெரியாத ஈனத்தமிழன். 😡

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

சிங்கள  இராணுவம் தமிழர்களை கொன்றதிற்கும் சிங்களவர்களை கொன்றதிற்கும் வித்தியாசம்,வேறுபாடுகள் தெரியாத ஈனத்தமிழன்.

இலங்கையில் உள்ள தமிழர்கள் இராணுவத்தில் இணைந்து வேலை பெற்றுவிடுவார்களோ என்று கவலை கொள்ளும் வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை வாழும் ஈனத்தமிழன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கையில் உள்ள தமிழர்கள் இராணுவத்தில் இணைந்து வேலை பெற்றுவிடுவார்களோ என்று கவலை கொள்ளும் வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை வாழும் ஈனத்தமிழன்

முதலில் நான் எழுதியதை ஒழுங்காக வாசியுங்கள்.பதிலளியுங்கள். அதன் பின் இலங்கையில் இருக்கும் உங்களுக்கு   சொகுசு பற்றி பதில் தருகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

பல வருடங்களுக்கு முன்பு சிங்களவர்கள் கூட இலங்கை இராணுவத்தால் கொல்லபட்டனர் இதை விபரமாக கற்பகதரு யாழ்களத்தில் தெரிவித்திருந்தார்.இப்போது  சிங்களவர்கள் இராணுவத்தில் இணையவில்லையா?
இலங்கையில் உள்ள தமிழர்கள் இராணுவத்தில் இணைய மாட்டோம் என்று சொல்லவில்லை இணைந்துவிடுவார்களோ என்று வெளிநாடுகளில் உள்ள இலங்கை தமிழர்கள் தான் கவலை கொள்கின்றனர்.

எந்த சிங்கள மக்கள் மீது சிங்கள அரசால் குண்டு வீசப்பட்டது என்பதை  திகதி வாரியாக பட்டியல் இடுங்கள் பார்க்கலாம்

உங்களுக்கு ஒப்பிடுவதில் கடுமையான பிரச்சனை உள்ளது என ஆழமாக நம்புகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். இளைஞர், யுவதிகள் இராணுவத்தில் இணைவதால் வேலைவாய்ப்பு பிரச்சினை தீரும்: யாழ். அரச அதிபர்

யாழ்ப்பாண மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு தமிழ் இளைஞர்கள் இரா
ணுவத்தில் இணைய முன்வர வேண்டும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அழைப்பு விடுத்துள்ளார்.

jaffna-ga-1-300x225.jpg
இராணுவத்துக்கு இளைஞர்,யுவதிகளைஇணைக்கும் தேசிய ரீதியான வேலைத்திட்டத்
தின் கீழ் யாழ். மாவட்ட இளைஞர்களை இராணுவத்தில் இணைப்பது தொடர்பாக விளக்கமளிக்கும் விசேட கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.

இதில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த ஒரு சந்தர்ப்பமாக இந்த வாய்ப்புக் காணப்படுகின்றது.  எனவே பிரதேச மட்டங்களில் கிராமசேவகர்கள் குறித்த ஆள் சேர்ப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு விளக்கமளிப்பதன் ஊடாக இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள முடியும். அதிலும் வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வேலைவாய்ப்புச் சிக்கல் பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது.

இதனால் யாழ்ப்பாண மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைய முன்வர வேண்டும் என்றார்.

யாழ். இளைஞர், யுவதிகள் இராணுவத்தில் இணைவதால் வேலைவாய்ப்பு பிரச்சினை தீரும்: யாழ். அரச அதிபர் – Thinakkural

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிழம்பு said:

யாழ். இளைஞர், யுவதிகள் இராணுவத்தில் இணைவதால் வேலைவாய்ப்பு பிரச்சினை தீரும்: யாழ். அரச அதிபர்

நாட்டையும், மக்களையும் பாதுகாப்பதற்காக. உலகிலுள்ள நாடுகள் தங்களது மக்களை இராணுவத்தில் இணைக்கிறார்கள்.

சிறீலங்காவில் மட்டும் வேலைவாய்ப்புப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக தங்களது மக்களை இராணுவத்தில் இணைக்கிறார்கள்.🤔🤣

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Paanch said:

நாட்டையும், மக்களையும் பாதுகாப்பதற்காக. உலகிலுள்ள நாடுகள் தங்களது மக்களை இராணுவத்தில் இணைக்கிறார்கள்.

சிறீலங்காவில் மட்டும் வேலைவாய்ப்புப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக தங்களது மக்களை இராணுவத்தில் இணைக்கிறார்கள்.🤔🤣

பாஞ்ச், இலங்கை இராணுவத்தில் தமிழர்கள் இணைய வேண்டும் எனக் கூற வரவில்லை, ஆனால் பெரும்பாலான நாடுகளில் யுத்தமில்லை, ஆனால் படைகளுக்கு ஆட்களைச் சேர்த்துக் கொண்டு தான் இருக்கின்றனர், ஏன் என்று நினைக்கிறீர்கள்? 

ஆயுதப் படைகளில் சண்டை, பாதுகாப்பு தவிர்ந்த ஏனைய வேலைகளும் சமாதான காலத்தில் இருக்கின்றன. அமெரிக்காவில் பாரிய அணைக்கட்டுகளைப் பராமரிப்பது இராணுவத்தின் பொறியியல் பிரிவு. அண்மையில் ஒரு இலங்கைப் பாடசாலை அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் கேள்விப்பட்டேன், கடற்படையின், இராணுவத்தின் பொறியியல் பிரிவு தான் அரசாங்கம் கொடுக்கும் கட்டிட நிதியில் ஒப்பந்த அடிப்படையில் கல்வி தொடர்பான கட்டிடங்களைச் சில இடங்களில் கட்டுகிறார்களாம். 

எனவே துவக்குத் தூக்கிக் கொண்டு சண்டைக்குப் போகத் தான் ஆட்களைச் சேர்க்கிறார்கள் என்பது முற்றிலும் சரியல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

ஐயா ஜஸ்ரின்,

இதனால் உள்ளூர் கட்டட ஒப்பந்தக்காரர்கள் & தொழிலாளர்கள் பாதிப்படைய மாட்டார்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, MEERA said:

ஐயா ஜஸ்ரின்,

இதனால் உள்ளூர் கட்டட ஒப்பந்தக்காரர்கள் & தொழிலாளர்கள் பாதிப்படைய மாட்டார்களா? 

அடைவார்கள்.  இது நான் இலங்கைப் படைகளுக்குக் கொடுத்த ஐடியா அல்ல மீரா! 😎

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.