Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் தமிழர் கலாசாரத்துடன் திறக்கப்படும் பிரமாண்ட வளைவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் தமிழர் கலாசாரத்துடன் திறக்கப்படும் பிரமாண்ட வளைவு

நல்லூரான் செம்மணி வளைவு எதிர்வரும் 14 ஆம் திகதி பொங்கல் தினத்தன்று நண்பகல் 12 மணியளவில் திறந்து வைக்கப்படவுள்ளது.

நல்லூர் கந்தனின் அடியவர்களின் வேண்டுகளுக்கு அமைய நல்லூர் முருகன் தண்ணீர் பந்தல் சபையினரின் முயற்சியால் இந்நத வளைவு செம்மணி வீதியில் புதிதாக, பிரமாண்டமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

யாழ். மக்களின் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களின் புனித வாழ்க்கை நெறியான கந்தபுராண கலாசாரத்தின் அடையாளங்கள் பல இந்த வளைவில் வனப்புற பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த வளைவு அமைக்க முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், நிதியொதுக்கீடுகளை பெற்றுக்கொடுத்ததோடு, தனது சொந்த நிதி உதவிகளையும் வழங்கியிருந்தார்.

2019 ஆண்டு ஓகஸ்ட் மாதம் குறித்த வளைவுக்கான அடிக்கல் முன்னாள் இராஜாங்க அமைச்சர் நாட்டி வைத்து வளைவின் கட்டுமாண பணிகளை ஆரம்பித்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

https://www.ibctamil.com/srilanka/80/157466?ref=imp-news

  • Replies 120
  • Views 12.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அப்போ யாழ் வரவு அம்போதான்... 😀

Quote

யாழ். மக்களின் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களின் புனித வாழ்க்கை நெறியான கந்தபுராண கலாசாரத்தின் அடையாளங்கள்

 

இதென்ன புதுசா இருக்கு 😀

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட சனம் கோயிலுக்கு செலவு செய்யிறதெண்டால் ஒண்டையும் யோசியாதுகள்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

யாழில் தமிழர் கலாசாரத்துடன் திறக்கப்படும் பிரமாண்ட வளைவு

நல்லவேளை அங்கே இருப்பதால் தமிழர் கலாச்சாரம் என்டு தைரியமா போட முடிகிறது..

Screenshot-2021-01-06-23-01-36-749-org-m

இங்கன இருந்தால் திராவிட கலாச்சாரம் என்டு கம்பு சுத்த ஒரு குரூப் கிளம்பி இருக்கும் ..☺️..😊

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

யாழ்பாணத்தின் பாரம்பரிய  அடையாளமான “யாழ்” எங்கே? பழைய வளைவின வடிவம் மிக  அழகாக இருந்தது. புதிதாக செய்யப் போய் கெடுத்து வைத்திருக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில பார்க்கிறதுபோல் இருக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 மிகவும் அழகாக இருக்கின்றது.

எடுத்ததெற்கெல்லாம் பரந்து பட்டு யோசித்தால் பிச்சை எடுத்தாலும் வாழமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

இந்த வளைவு செம்மணி வீதியில் புதிதாக, பிரமாண்டமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

சிலருக்கு யாழ் வரவேற்கிறது வளைவுக்கும் இதற்கும் வித்தியாசம் தெரியவில்லை.

யாழ் வரவேற்கிறது வளைவு.. யாழ் - கண்டி வீதியில் யாழ் நோக்கிய பாதையில்.. நாவற்குழியை தாண்டி உள்ளது.

இது யாழ் நோக்கிய பாதையில் செம்மணி வீதியில் உள்ளது. செம்மணி வீதி தான் நல்லூரை யாழ் - கண்டி வீதியில் இணைக்கிறது.

இந்த வளைவால்.. அந்த வளைவுக்கு எந்த சேதாரமும் வராது.

ஆனால் நாவற்குழியில்.. புத்தரின் வளைவு ஒன்று நிச்சயம் கிளம்பும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, nedukkalapoovan said:

ஆனால் நாவற்குழியில்.. புத்தரின் வளைவு ஒன்று நிச்சயம் கிளம்பும். 

புத்தரின் வளைவு வரவில்லையே தவிர மற்றும் படி புத்தர் சிலை தாராளமாக எல்லா இடங்களிலும் உண்டு.அந்த மதத்துக்குரியவர்கள் அந்த இடத்தில் இல்லாவிடினும்... அதை பற்றியெல்லாம் நாம் கணக்கெடுக்க மாட்டோம்.

ஆனால் நுழைவாயிலில் கோபுரங்கள் வந்திருக்கெல்லோ அதுதான் நமக்கு இடைஞ்சல்...:cool:

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, nedukkalapoovan said:

சிலருக்கு யாழ் வரவேற்கிறது வளைவுக்கும் இதற்கும் வித்தியாசம் தெரியவில்லை.

யாழ் வரவேற்கிறது வளைவு.. யாழ் - கண்டி வீதியில் யாழ் நோக்கிய பாதையில்.. நாவற்குழியை தாண்டி உள்ளது.

இது யாழ் நோக்கிய பாதையில் செம்மணி வீதியில் உள்ளது. செம்மணி வீதி தான் நல்லூரை யாழ் - கண்டி வீதியில் இணைக்கிறது.

இந்த வளைவால்.. அந்த வளைவுக்கு எந்த சேதாரமும் வராது.

ஆனால் நாவற்குழியில்.. புத்தரின் வளைவு ஒன்று நிச்சயம் கிளம்பும். 

உங்களுக்குத்தான் இந்த வளைவின் சூட்சுமம் புரியவில்லை. 

இந்தக் கேள்வியுடன் தொடங்குகிறேன்.

1) யாழ் வரவுக்கும் இந்த செம்மணி வளைவிற்கும் இடையிலான தூரம் என்ன.?

பதிலைத் தாருங்கள்,  மிகுதி ...

  • கருத்துக்கள உறவுகள்


இரண்டாணது வளைவா? இனி இப்படியே வளைவுகள் கட்டி கொண்டிருக்க போகிறார்கள்  வளைவு கலாச்சாரம் தான்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

உங்களுக்குத்தான் இந்த வளைவின் சூட்சுமம் புரியவில்லை. 

இந்தக் கேள்வியுடன் தொடங்குகிறேன்.

1) யாழ் வரவுக்கும் இந்த செம்மணி வளைவிற்கும் இடையிலான தூரம் என்ன.?

பதிலைத் தாருங்கள்,  மிகுதி ...

இது நல்லூர் பிரதேச சபைக்குள் வருகிறது.

அது யாழ் மாநகருக்குள் வருகிறது.

இது நல்லூர் - செம்மணி வீதியில் வருகிறது.

அது யாழ் - கண்டி வீதில் வருகிறது.

அது மாநகர சபை/ நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமானது.

இது நல்லூர் மக்களுக்குச் சொந்தமானது. 

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nedukkalapoovan said:

இது நல்லூர் பிரதேச சபைக்குள் வருகிறது..

இது நல்லூர் - செம்மணி வீதியில் வருகிறது.

இது நல்லூர் மக்களுக்குச் சொந்தமானது. 

ஆனால் கந்தபுராண கலாச்சார வளைவைக் கட்டிக்கொடுத்தவர் காரைநகரைச் சேர்ந்தவர் என்பதால் தீவுப்பகுதி மக்களுக்கும் வளைவில் பங்குரிமை உள்ளது😜

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, nedukkalapoovan said:

இது நல்லூர் பிரதேச சபைக்குள் வருகிறது.

அது யாழ் மாநகருக்குள் வருகிறது.

இது நல்லூர் - செம்மணி வீதியில் வருகிறது.

அது யாழ் - கண்டி வீதில் வருகிறது.

அது மாநகர சபை/ நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமானது.

இது நல்லூர் மக்களுக்குச் சொந்தமானது. 

என்னுடைய கேள்விக்கு நேரடியாகப் பதில் தாருங்கள். ********போன்று(🤣) சளாப்பல்   பதில் தராதீர்கள். 

இரண்டுக்கும் இடையிலான இடைவெளி என்ன.. ?

இப்படியொரு தேவை ஏன் வந்தது. ?

😂

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kapithan said:

என்னுடைய கேள்விக்கு நேரடியாகப் பதில் தாருங்கள். ******போன்று(🤣) சளாப்பல்   பதில் தராதீர்கள். 

இரண்டுக்கும் இடையிலான இடைவெளி என்ன.. ?

இப்படியொரு தேவை ஏன் வந்தது. ?

😂

நல்லூரை அண்டி இந்த வளைவே இப்ப வந்திருக்குது. இதனை வரவேற்கிறேன்.

அது மாநகரை அண்டி வருகிறது... அதையும் வரவேற்கிறேன்.

இந்த வளைவு வாறதால என்ன பிரச்சனை தங்களுக்கு..???!

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nedukkalapoovan said:

நல்லூரை அண்டி இந்த வளைவே இப்ப வந்திருக்குது. இதனை வரவேற்கிறேன்.

அது மாநகரை அண்டி வருகிறது... அதையும் வரவேற்கிறேன்.

இந்த வளைவு வாறதால என்ன பிரச்சனை தங்களுக்கு..???!

உங்களால் நேர்படப் பேச முடியாதா.? 

எனது கேள்விக்குப் பதிலைத் தாருங்கள்.

(எனக்கு என்ன பிரச்சனை என்று இறுதியில் கூறுகிறேன்)

 

 

4 hours ago, Kapithan said:

உங்களுக்குத்தான் இந்த வளைவின் சூட்சுமம் புரியவில்லை. 

இந்தக் கேள்வியுடன் தொடங்குகிறேன்.

1) யாழ் வரவுக்கும் இந்த செம்மணி வளைவிற்கும் இடையிலான தூரம் என்ன.?

பதிலைத் தாருங்கள்,  மிகுதி ...

600m..கொஞ்சம் கூட குறைய வர கூடும் 
இன்னொரு வளைவும் காட்டுகிறார்கள் கோயில் வீதியில், கைலாச பிள்ளையார் கோயில்க்கு அண்மையில், ரியோ ஐஸ் கிரீம் கடை முதலாளி காட்டுகிறாராம் 

https://images.app.goo.gl/v6FWApAjKShodZzP6

மேலே உள்ள இணைப்பில் உகந்தை முருகன் கோயிலில் அமைத்துள்ள வளைவு இணைத்திருக்கிறேன் 

வீதி வளைவிற்கும் கோயில்  வளைவிற்கும்  வித்தியாசம் இருக்கிறது இது கோயில் விளைவினை நினைவூட்டுகிறது 
இதை விட yarl நகர் வரவேற்கிறது  எனும் முன்னைய வளைவு எனக்கு பிடித்திருக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, அபராஜிதன் said:

 

 

600m..கொஞ்சம் கூட குறைய வர கூடும் 
இன்னொரு வளைவும் காட்டுகிறார்கள் கோயில் வீதியில், கைலாச பிள்ளையார் கோயில்க்கு அண்மையில், ரியோ ஐஸ் கிரீம் கடை முதலாளி காட்டுகிறாராம் 

600 Mtr. தொலைவில் யாழ் வரவு இருக்க இப்போது அப்படியொரு தேவை எங்கிருந்து சி வி கே சிவ ஞானத்திற்கு(😜) எங்கிருந்து வந்தது.. ?

இதனூடாக எதனைச் சொல்ல விளைகிறார்கள் நல்லூர் பிரதேச சபையினர்.. ? 

யாழ் வரவின் முன்னைய படங்களை (போருக்கு முன்/பின்) எடுத்துப் பாருங்கள். நல்லூர் பிரதேச சபையினரின் பல்வேறு செய்திகளை அதனூடு நீங்கள் உணரக்கூடியதக இருக்கும். 

☹️

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இராணுவ ட்ரக் போதும்...இது மல்லாந்து கிடக்க...அரசுக்கு ஒரு காரணம் இருக்கும் ..வெறி..அல்லது கட்டுப்பாடு இழந்தது....3 மாதத்தில் இடித்து வீழ்த்தியவர்..தியாகி  அல்லது மந்திரியாவார்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, விளங்க நினைப்பவன் said:


இரண்டாணது வளைவா? இனி இப்படியே வளைவுகள் கட்டி கொண்டிருக்க போகிறார்கள்  வளைவு கலாச்சாரம் தான்

சிங்களம் வடகிழக்கு பகுதிகளிலை மரத்துக்கு மரம் வைரவர் கோவில் மாதிரி புத்தர் சிலையையும் வைச்சு பெரிய பெரிய விகாரைகளையும் கட்டேக்கை வராத ரோசம் மானம் நற்சிந்தனை  வளைவுகள் கட்ட மட்டும் வருகுதாக்கும்...🤪

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தான் இருக்குது,  முதல் முறையாக நடு ரோட்டிலே பூரண கோபுர  கும்ப கலசங்களுடன் இந்து கோவில் ஒன்று கட்டியுள்ளார்கள்.  
நாய் லைட் போஸ்ட்டை கண்டால் காலை உயர்த்திரமாதிரி,புத்த  சிங்களவர் அரச மரத்தை கண்டால் புத்தர் சிலை வைப்பதுமாதிரியும் . உயர்குடி இந்துக்கள் ரோட்டுக்கு, ரோட்டு இப்படி பட்ட வளைவுகள் கட்டி தாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று காட்ட வேண்டும்.

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் காத்தான் குடி நகரை வரவேற்கும் வளைவு மஞ்சந்தொடுவாயில் அமைக்க முனைந்தார் கிஸ்புல்லா அதை தடுத்து காத்தான் குடிக்குள் அமைக்க கடும் அமைக்க வேண்டுமென பல வாதங்கள் நடந்தது இறுதியில் காத்தான் குடி எல்லைக்குள் அமைக்கப்பட்டது .பிள்ளையான் இருந்த காலத்தில்

இது போன்ற பல வளைவுகள் பல ஊரில் அமைந்திருக்கிறது இது யாழில் அமைவதிலும் மகிழ்ச்சி ஒரு குறுப்புவரும் இதை கட்டின காசுக்கு நாலு ஏழை சனத்துக்கு சாப்பாடு கொடுத்து இருக்கலாமென .

விரைவில் காரைதீவிலும் அமைய இருக்கிறது நிந்தவூர் எல்லையில்  என செய்தியில் படித்த நினைவில்     

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு பனை உயரத்துக்கு புத்தர் சிலை  வைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் வளைவு வைப்பதுக்கு எதிர்ப்பு கிளம்புது போல் உள்ளது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.