Jump to content

யாழ். பல்கலையில் இரவோடு இரவாக இடித்து அழிக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவிடம்! பதற்றமான சூழல்..

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

யாழ். பல்கலைக்கழக துணை வேந்தராக  இவர், வந்த போது... 
யாழ். களமே...  எவ்வளவு பெருமைப் பட்டது.

அதுகும்... எங்கள்,  கிருபன் ஜீ   அவர்களின், இளவயது  நண்பராம்.

எதிர்பார்ப்புகள்  எல்லாம்... ஒரு, கனவாகி போனதே....    

இவரில் ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்பாக எனக்கு எதிர்பார்ப்பு குறைவு என்று சாரப்பட எழுதியதற்கு என்னை சைவ சமயத்தின் எதிரி என்கின்ற ரீதியில் பலர் என்னை வைதிருந்தனர். ...ம். அப்போது எழுதிய எனது கருத்து பலருக்கு புரியவில்லை.

இந்த ஒரு சம்பவத்தின் பின்னணியை அறியாமல் துணை வேந்தரை  தீர்ப்பிடவும் முடியாது. கொஞ்சம் நிதானித்தால் உண்மை நிலை வெளித் தெரியலாம். 🙂

Link to comment
Share on other sites

  • Replies 132
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Kapithan said:

இவரில் ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்பாக எனக்கு எதிர்பார்ப்பு குறைவு என்று சாரப்பட எழுதியதற்கு என்னை சைவ சமயத்தின் எதிரி என்கின்ற ரீதியில் பலர் என்னை வைதிருந்தனர். ...ம். அப்போது எழுதிய எனது கருத்து பலருக்கு புரியவில்லை.

இந்த ஒரு சம்பவத்தின் பின்னணியை அறியாமல் துணை வேந்தரை  தீர்ப்பிடவும் முடியாது. கொஞ்சம் நிதானித்தால் உண்மை நிலை வெளித் தெரியலாம். 🙂

கபிதன், எனக்கு...  கிறிஸ்த மக்களுக்கும், சைவ மக்களுக்கும்..
வேறுபாடு பார்த்து, பழக்கமேயில்லை.
தமிழரில் இருவரும்.... ஒரே ஆட்கள் என்று தான் நினைப்பவன்.   

நீங்கள், கூறிய படி...
//இந்த ஒரு சம்பவத்தின் பின்னணியை அறியாமல் துணை வேந்தரை  தீர்ப்பிடவும் முடியாது.//
என்பதனை  ஏற்றுக் கொள்கின்றேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

யாழ். பல்கலைக்கழக துணை வேந்தராக  இவர், வந்த போது... 
யாழ். களமே...  எவ்வளவு பெருமைப் பட்டது.

அதுகும்... எங்கள்,  கிருபன் ஜீ   அவர்களின், இளவயது  நண்பராம்

சிங்கள அதிகாரவர்க்கம் சொல்வதை செயல்படுத்தும் அடிமை நிலைமைதான் பல்கலைக்கழகத்திலும் உள்ளது. ஈபிடிபியின் கோடீஸ்வரன் ருசாங்கன் போன்றவர்கள் பேரவை உறுப்பினராக இருந்து குடைச்சல்கள் கொடுப்பதனால், தமிழ்த் தேசிய உணர்வைப் பிரதிபலிக்கும் செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. நிமிர்ந்து நிற்காமல் பணிந்துபோவது மிகவும் கவலையாகத்தான் உள்ளது.

தமிழ்சிறி அண்ணா,

துணைவேந்தர் எமது ஊரவர். அவர் ஸ்கொட்லண்டில் இருந்து PhD முடித்துவந்தபோது நாங்கள் காற்சட்டை போட்ட தவ்வல்கள்! அவர் எங்களுடன் பழகும்போது எங்கள் வயதுக்கு இறங்கிப் பழகினார். ஆனால் பல்கலைக்கழகத்தில் கறாராக இருந்தார். 

அந்தக் கறார்க்குணம் முள்ளிவாய்க்கால் தூபி இடிப்பதை தடுக்க பாவிக்கப்படவில்லை☹️

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிப்பு – பல்வேறு தரப்புகளின் தொடர் அழுத்தமே காரணம்…

January 8, 2021

srisatkunarahaj.jpg

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இன்றிரவு (08.01.21) இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடிப்பதற்கான தீர்மானத்தினை யாழ்.பல்கலைக்கழக நிர்வாகமே மேற்கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா உறுதிப்படுத்தி உள்ளார். 

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பாதுகாப்புத் தரப்பு உட்பட்ட பல்வேறு தரப்புக்களால் தொடர்ந்தும் முன்வைக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே இந்த முடிவுக்கு செல்ல நேர்ந்ததாக அவர் தெரிவித்தார். 

குறித்த தூபி சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதால் அதனை அகற்றுவதற்கான தொடர்ச்சியான அழுத்தம் தம்மீது பிரயோகிக்கப்பட்டதாக தெரிவித்த அவர், பல்கலைக்கழக நிர்வாகம் இவ்வாறான ஒரு முடிவை எடுக்காவிட்டிருந்தால் வேறு தரப்புக்கள் உள் நுழைந்து அதனை அகற்றியிருக்கக்கூடும். 

அவ்வாறு நடைபெறுவது பல்கலைக்கழகத்திற்கு அழகல்ல என்பதனால், தாம் இவ்வாறான ஒரு நடவடிக்கையை முன்னெடுத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்த்துள்ளார்.

https://globaltamilnews.net/2021/155382/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

தகவல்களுக்கு... நன்றி, கிருபன் ஜீ.
என்ன செய்வது, அவரும் ஒரு அரச உத்தியோகத்தர் தானே...
அரசு போடும் நெருக்கடிகளுக்கு, மத்தியில் தான்... 
அவரும், பணியாற்ற வேண்டி வரும். 

இல்லையேல்...  அவரின், இடத்துக்கு, வேறு ஒருவர் நியமிக்கப் படுவார்.

பாவம்... மனுசன், எவ்வளவு வேதனைப் பட்டுக் கொண்டு இருப்பார், 
என்பதனை.. உணர்ந்து, கொள்கின்றேன்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இந்த நினைவுத்தூபிகள் சிங்களத்தின் கொடுமைகளை பறைசாற்றி நிற்பதுடன், தமிழர்களின் மாறாத வேதனையையும் நினைவு படுத்திக்கொண்டே இருக்கும். அவர்களின் சுதந்திரம், நினைவு, ஆற்றல், வாழ்விடம், கலாச்சாரம் எல்லாவற்றையும் பறித்து, மூலையில் முடக்க, தனக்கு தலையாட்டும் தமிழர்களை பிடித்து வந்து, பதவியளித்து, அவர்கள் கொண்டே காரியம் சாதித்து, இன்னொரு முள்ளிவாய்க்காலை வலிந்து திணித்து, இருக்கும் தமிழரையும் ஒட்டுமொத்தமாக அழிக்க முனைகிறது சிங்களம். எமது தூபிகளை அழிக்க  முதல், ஆனையிறவில் உள்ள தூபிகளை அழித்திருக்க வேண்டும். நாட்டில் உள்ள கொலை, கொள்ளைக்காரர் விடுதலை, ஆனால் தமிழ் அரசியலகைதிகள் விடயத்தில் பல்வேறு சோடனைகள். இதெல்லாம் ஜெனீவா தொடருக்கான அச்சுறுத்தல் தொடரும். இவர்களோடு உள்நாட்டுக்குள் பேசிதீர்வாம். நம் விலைபோனதுகளை என்ன சொல்வது? புதுசு புதுசாய் கிளம்புதுகள், நம்மையும் நமது செயற்பாடுகளையும் குறை சொல்லிக்கொண்டு, நமது தலைமைகள் என்று வீராப்பு பேசிக்கொண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

தகவல்களுக்கு... நன்றி, கிருபன் ஜீ.
என்ன செய்வது, அவரும் ஒரு அரச உத்தியோகத்தர் தானே...
அரசு போடும் நெருக்கடிகளுக்கு, மத்தியில் தான்... 
அவரும், பணியாற்ற வேண்டி வரும். 

இல்லையேல்...  அவரின், இடத்துக்கு, வேறு ஒருவர் நியமிக்கப் படுவார்.

பாவம்... மனுசன், எவ்வளவு வேதனைப் பட்டுக் கொண்டு இருப்பார், 
என்பதனை.. உணர்ந்து, கொள்கின்றேன்.  

தமிழ்த் தேசியத்தின் ஊற்றுமுகமாக இருந்த இடம் தேசிய நீக்கம் செய்யப்பட்டு காயடிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. அதற்கு துணைபோகின்றவர்களுக்கு, துணைவேந்தர் உட்பட, கண்டணங்களைப் பதிவுசெய்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

தமிழ்த் தேசியத்தின் ஊற்றுமுகமாக இருந்த இடம் தேசிய நீக்கம் செய்யப்பட்டு காயடிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. அதற்கு துணைபோகின்றவர்களுக்கு, துணைவேந்தர் உட்பட, கண்டணங்களைப் பதிவுசெய்கின்றேன்.

தமிழ்த் தேசியத்தின் ஊற்றுமுகம் விளங்குகின்றது,
அதில்...  "தேசிய நீக்கம்"  என்று நீங்கள், எதனை  குறிப்பிடுகின்றீர்கள்,
என்று உண்மையில், என்னால்...  விளங்கிக் கொள்ள முடியவில்லை.

தயவு செய்து, "தேசிய நீக்கத்தின்" அர்த்தம் என்ன என்று சொல்லுங்களேன்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது இனத்தில் படித்தவர்கள் தான் அதிகம்.. சிங்கள பெளத்திற்கு விலை போகின்றனர்.

இராமநாதன்கள் காலத்தில் இருந்து..

நீலன் திருச்செல்வம்..

சுமந்திரன்..

சுரேன் ராகவன்..

இப்ப உந்த பேராசிரியர்..

என்று இந்தப் பட்டியல் மிக நீண்டது.

இதனால் தான் என்னவோ.. இவர்களில் பலரை நோக்கி துப்பாகிகள் பேச வேண்டி ஏற்பட்டிருக்கலாம்... போர் காலங்களில்.

என்ன எப்பவுமே மனிதரில் ஒரு கூட்டம்.. ஆக்கிரமிப்பு எஜமானர்களின் பக்கம் நின்று தம்மை வாழ வைக்க நிற்கிறது என்பது.. ஜேசு காலத்திற்கு முன்பிருந்தே நிகழ்கிறது.

இதை எல்லாம் கடந்து ஒரு இனத்தின் விடுதலையை உறுதி செய்வதென்பது கடினமான காரியம் தான். காலம் அதனை உறுதி செய்ய உழைப்பது ஒன்றே இன்றுள்ள இனத் தேவை. அதனைப் புரிந்து கொள்பவர்கள் ஒன்றுபட்டு உழைத்தால் நன்மை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, கிருபன் said:

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பாதுகாப்புத் தரப்பு உட்பட்ட பல்வேறு தரப்புக்களால் தொடர்ந்தும் முன்வைக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே இந்த முடிவுக்கு செல்ல நேர்ந்ததாக அவர் தெரிவித்தார்.

புதுசாய் முளைத்திருக்கும் காளானை விட்டுவிட்டீர்களே?  ஏன் அதை அரசியற் தலைவர்களுக்கோ, ஏனையோருக்கோ வெளிப்படுத்தவில்லை? அரசியற் கட்சிகள் தங்களுக்குள் அடிபடுவதையும், ஒருவருக்கொருவர் குழிபறிப்பதையும், அரசை சர்வதேசப் பிடியிலிருந்து காப்பாற்றும் முயற்சியையும்  தவிர வேறெதையும் செய்திருக்க மாட்டார்கள், ஆனாலும் வேறுவழிகளும் உண்டு என்பது தெரியாமற் போனது ஏன் துணை வேந்தருக்கு? 

Link to comment
Share on other sites

1 hour ago, கிருபன் said:

சிங்கள அதிகாரவர்க்கம் சொல்வதை செயல்படுத்தும் அடிமை நிலைமைதான் பல்கலைக்கழகத்திலும் உள்ளது. ஈபிடிபியின் கோடீஸ்வரன் ருசாங்கன் போன்றவர்கள் பேரவை உறுப்பினராக இருந்து குடைச்சல்கள் கொடுப்பதனால், தமிழ்த் தேசிய உணர்வைப் பிரதிபலிக்கும் செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. நிமிர்ந்து நிற்காமல் பணிந்துபோவது மிகவும் கவலையாகத்தான் உள்ளது.

தமிழ்சிறி அண்ணா,

துணைவேந்தர் எமது ஊரவர். அவர் ஸ்கொட்லண்டில் இருந்து PhD முடித்துவந்தபோது நாங்கள் காற்சட்டை போட்ட தவ்வல்கள்! அவர் எங்களுடன் பழகும்போது எங்கள் வயதுக்கு இறங்கிப் பழகினார். ஆனால் பல்கலைக்கழகத்தில் கறாராக இருந்தார். 

அந்தக் கறார்க்குணம் முள்ளிவாய்க்கால் தூபி இடிப்பதை தடுக்க பாவிக்கப்படவில்லை☹️

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிப்பு – பல்வேறு தரப்புகளின் தொடர் அழுத்தமே காரணம்…

January 8, 2021

srisatkunarahaj.jpg

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இன்றிரவு (08.01.21) இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடிப்பதற்கான தீர்மானத்தினை யாழ்.பல்கலைக்கழக நிர்வாகமே மேற்கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா உறுதிப்படுத்தி உள்ளார். 

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பாதுகாப்புத் தரப்பு உட்பட்ட பல்வேறு தரப்புக்களால் தொடர்ந்தும் முன்வைக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே இந்த முடிவுக்கு செல்ல நேர்ந்ததாக அவர் தெரிவித்தார். 

குறித்த தூபி சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதால் அதனை அகற்றுவதற்கான தொடர்ச்சியான அழுத்தம் தம்மீது பிரயோகிக்கப்பட்டதாக தெரிவித்த அவர், பல்கலைக்கழக நிர்வாகம் இவ்வாறான ஒரு முடிவை எடுக்காவிட்டிருந்தால் வேறு தரப்புக்கள் உள் நுழைந்து அதனை அகற்றியிருக்கக்கூடும். 

அவ்வாறு நடைபெறுவது பல்கலைக்கழகத்திற்கு அழகல்ல என்பதனால், தாம் இவ்வாறான ஒரு நடவடிக்கையை முன்னெடுத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்த்துள்ளார்.

https://globaltamilnews.net/2021/155382/

நொண்டி சாட்டு, உதைத்தான் சொல்லுகின்றது கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது மக்களை அழித்தார்கள், எமக்காகப் போராடியவர்களை அழித்தார்கள், அவர்களின் துயிலும் இல்லங்களை இயந்திரம் கொண்டு உழுதார்கள், எம்மினத்தில் அழிக்கப்பட்டவர்களுக்கான நினைவுகளைச் செய்வதைத் தடுத்தார்கள், இன்று நினைவுகளுக்கான வழிபாட்டுத் தலங்களையும், வடிகால்களையும் இடித்து தரைமட்டமாக்குகிறார்கள்.

எமக்கென்று ஒரு நாடு இருந்தது, எமக்கென்று ஒரு பலம் இருந்தது, எதிரி நினைக்கக் கூட முடியாதளவிற்கு எமது மண் காக்கப்பட்டு இருந்தது.

எமது பலத்தை நாமே துரோகத்தாலும், கனவான் தனத்தாலும் எதிரியோடு சேர்ந்து நின்று அழித்தோம்.

இன்று பாதுகாப்பற்ற மந்தையாக ஓநாய்களுக்குள் திறந்து விடப்பட்டிருக்கிறோம்.

என்ன செய்யும் இந்த இனம் இனி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

தமிழ்த் தேசியத்தின் ஊற்றுமுகம் விளங்குகின்றது,
அதில்...  "தேசிய நீக்கம்"  என்று நீங்கள், எதனை  குறிப்பிடுகின்றீர்கள்,
என்று உண்மையில், என்னால்...  விளங்கிக் கொள்ள முடியவில்லை.

தயவு செய்து, "தேசிய நீக்கத்தின்" அர்த்தம் என்ன என்று சொல்லுங்களேன்.   

தமிழர்கள் தங்களை ஒரு தேசியமாக இருப்பதை நலிவடையச் செய்ய தேசிய நீக்கம் செய்யும் செயல்பாடுகளைத்தான் குறிப்பிட்டேன். அபிவிருத்தி என்ற பெயரில் சிங்களம் முழு அரசியல் அதிகாரங்களையும் தமது கைக்குள் வைத்துக்கொண்டு கொடுக்கும் சில சலுகைகளுக்கு அடிபணிந்து போகும் கையாலாகாத நிலையில் அரசியல் அமைப்புக்களும், அறிவுசீவிகளும், அரசபணியாளர்களும் உள்ளனர். எதிர்ப்புணர்வை இயல்பாகக் காட்டக்கூடிய இளையோர் சமூகம் நுகர்வுக் கலாச்சாரத்தில் மூழ்கியுள்ளது. சமூகவலை ஊடகங்களில் ஓரிருநாள் சலசலப்பைக் காட்டி அடங்கிவிடுவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ இரண்டு அரசும் சேர்ந்து  சகுனித்தனம்  செய்கின்றனர் வழமைபோல் உணர்ச்சி அரசியலில் இலகுவாக பற்றக்கூடிய இடம் பல்கலைக்கழகம் அதுவும் இவ்வளவு நாளும்  எந்த பிரச்சனையும் இன்றி இருந்த இடத்தை இடித்து பிரச்சனையை  வேணுமென்றே உருவாக்குகிறார்கள் .

Link to comment
Share on other sites

நாட்டிலுள்ள சிறுபான்மை இனமக்களை ஏதோ ஒரு கொதிநிலையில் வைத்தபடியே தம் ஆட்சியைக் கொண்டு செல்வது என்பதில் இந்த அரசு கில்லாடி.இப்படியே இனத்துக்குள் எதிர்ப்புகளை உருவாக்கி,பிரித்து,அழித்து விடுதல் அவர்களின் நிகழ்ச்சி நிரல்.அடையாளங்களை அழித்துவிட்டால்,அவர்கள் விரும்பியபடி வரலாறுகளை படைத்துவிடலாம்தானே.இன்னும் என்னென்ன நடக்க இருக்கிறதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

எனக்கென்னவோ இரண்டு அரசும் சேர்ந்து  சகுனித்தனம்  செய்கின்றனர் வழமைபோல் உணர்ச்சி அரசியலில் இலகுவாக பற்றக்கூடிய இடம் பல்கலைக்கழகம் அதுவும் இவ்வளவு நாளும்  எந்த பிரச்சனையும் இன்றி இருந்த இடத்தை இடித்து பிரச்சனையை  வேணுமென்றே உருவாக்குகிறார்கள் .

அதுவும் இரவோடிரவாக அவசரஅவசரமாக இடிப்புக்கு என்ன தேவை?  காலையில்   துணைவேந்தர் சொல்லும் விளக்கமும் விநோதமாயுள்ளது?  மக்களின் உணர்வை ஆர்வக்கோளாறு என்கிறார். இவருக்கு இன உணர்வு, இழப்பின் வலி இல்லையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, satan said:

அதுவும் இரவோடிரவாக அவசரஅவசரமாக இடிப்புக்கு என்ன தேவை?  காலையில்   துணைவேந்தர் சொல்லும் விளக்கமும் விநோதமாயுள்ளது?  மக்களின் உணர்வை ஆர்வக்கோளாறு என்கிறார். இவருக்கு இன உணர்வு, இழப்பின் வலி இல்லையோ?

கொஞ்சம் பொறுப்பம்  இப்பதானே அவர்களுக்கு விடிகாலை 8 மணி கொமெடித்தனமாய் அறிக்கை விடுவார் அனால் இந்த இரவுக்குள் இரண்டு மாணவரை கைது பண்ணியிருக்கினம் எங்கு யார் என்று சொல்ல மறுகிறார்களாம் .

வலி இருப்பவன் இப்படி நடந்து கொண்டு இருக்கமாட்டான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சோகமான ஒரு விடயம்! என்றாலும், ஒரு துணைவேந்தருக்கு இருக்கும் பொறுப்பையும் கட்டுப் பாடுகளையும் மறந்து விட்டுப் பேச இயலாது!

அவர் அகற்றா விட்டால் அவரை நீக்கி விடும் அதிகாரம் கோத்தாவுக்கு இருக்கிறது! அடுத்து செனட் தெரிவு செய்யாத ஒரு சிங்களவரை கோத்தா நியமித்தால் நிலை என்ன? செனற் தேர்வு செய்யாத ரட்னஜீவன் ஹூலை மகிந்த தெரிவு செய்தது நினைவிருக்கிறதல்லவா?

Lose a battle & win the war என்று நகர்வோம்!
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை இடித்தது காட்டுமிராண்டித்தனம்-வ. கௌதமன் கடும் கண்டனம்.

1-60.jpg
 16 Views

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுதூபி, இலங்கை அரசாங்கத்தால் இடித்தழிக்கப்பட்டதற்கு தனது கண்டனத்தை வெளியிட்டுள்ள  தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளர் வ.கெளதமன்,

“உலகம் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை. மனித குலத்தால் தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகளையும் ரசாயனக் குண்டுகளையும் வீசி இரக்கமற்ற முறையில் இலங்கை அதிகார வர்க்கம் எம் தமிழர்களை பச்சை படுகொலை செய்தது.

முள்ளிவாய்க்கால் யுத்தம் நடந்து 12 ஆண்டுகள் கடந்தும் கூட நீதி கிடைக்காத நிலையில் உலகத் தமிழினம் போராடிக் கொண்டிருக்கிற இச்சூழலில் எங்களின் யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் கட்டி எழுப்பப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்தை இன அழிப்பாளர் கோத்தபாயா ராஜபக்சேவின் வழிகாட்டுதலின்படி யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சிறீ சற்குணராஜா அவர்களின் தலைமையில் தலைக்கவசம் அணிந்து வந்த இராணுவக் கும்பல் பாதுகாப்பளிக்க இரவோடு இரவாக இடித்து தள்ளியிருப்பது கோழைத்தனத்துடன் கூடிய காட்டுமிராண்டித்தனம். இதனை தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

எப்பொழுதுமே நேர்மையற்ற, அறமற்ற முறையில் இனப்படுகொலை செய்யும் சிங்கள அதிகார வர்க்கத்திற்கு இச்செயல் ஒன்றும் புதிதல்ல. நீங்கள் நினைக்கலாம் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை அழித்துவிட்டால் தமிழர்களின் மனதிலிருக்கும் நினைவு சுவடுகளை அழித்து விடலாம் என்று. வடக்கிலோ கிழக்கிலோ இருக்கின்ற எம் இனத்தின் இளைய தலைமுறை மாணவ செல்வங்களின் மனதிலிருக்கும் வலிமிகுந்த யுத்த வடுக்களை ஒருபோதும் அழிக்க முடியாது. “எழும் சிறுப்பொறி மிகப் பெரும் தீயாய்” என்கிற இயற்கையின் பேருண்மையை உள்வாங்கி ஓர்நாள் அந்த மனங்கள் எரிமலையாய் வெடிக்கும். இதனை அறியாத சிங்கள அதிகாரவர்க்கம் சிறுபிள்ளைத்தனமாக எம் இனவழிப்பின் நினைவுச் சின்னத்தை சிதைத்திருக்கிறது.

ஒன்று மட்டும் உறுதியாக சொல்வோம். எங்கள் நினைவு சின்னங்களையும் எங்களின் கலை, பண்பாடு மற்றும் வரலாற்று பதிவுகளையும், ஏன் எங்களின் வரைபடத்தையும் கூட நீ அழிக்கலாம். நீங்கள் அழிக்க அழிக்கத்தான் எங்களுக்கு சூடும் சொரணையும் வரும் அல்லது கூடும். விரைவில் எங்களுக்கான உறுதியான இறுதி தீர்வை எட்டுவதற்கான திட்டத்தினை உருவாக்க நீங்கள் தொடர்ந்து நடத்துங்கள். உங்களின் அத்துமீறலை தொடர்ந்து கொண்டேயிருங்கள்.

இவ்வுலகின் நீதிமன்றங்களும் மனிதம் காக்க உருவாக்கப்பட்ட ஐநா சபையும் இன்னும் எவ்வளவு காலம்தான் உங்களுக்கு துணை நிற்கும் அல்லது உங்கள் அடக்குமுறைக்கு அரணாக காத்து நிற்கும் என்று நாங்களும் பார்க்கிறோம். தொடர்ந்த இக்கு௹ரங்களை உலகம் கணக்கில் எடுக்கிறதோ இல்லையோ ஐம்பதனாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட எங்கள் தமிழினத்தின் இளைய தலைமுறை நடப்பதனைத்தையும் நெஞ்சத் தகிப்போடு உள்வாங்கிக் கொண்டிருக்கிறது.

வரலாறு கூட சில நேரங்களில் மறைக்கப்படலாம் அறிவியலை ஒரு போதும் மறைக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது. “ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு”எனத் தெரிவித்துள்ளார்.

https://www.ilakku.org/?p=38909

தமிழினத்தின் ஆன்மாவையே அழித்த மிகக் கொடூரச் செயல் – தமிழரசுக் கட்சி கடும் கண்டனம்

mavai-400.png
 2 Views

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்டமை தமிழினத்தின் ஆன்மாவையே அழித்த மிகக் கொடூரமான செயலாகும்.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வெளியிட்டுள்ள கண்டனத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அரசின் மேலிடத்தின் உத்தரவின் பிரகாரம் பல்கலைக்கழக நிர்வாகத்தால் நேற்றிரவு இடித்தழிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரும் இராணுவத்தினரும் பெரும் எண்ணிக்கையில் பல்கலைக் கழக வாயிலில் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு வழங்க இந்த அருவருக்கத்தக்க – ஈனத் தமான – செயல் அரங்கேறியுள்ளது.

தமிழினப் படுகொலையின் அடையாளமாக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி விளங்குகின்றது.இது இடித்து அழிக்கப்பட்டமை தமிழினத்தின் ஆன்மாவையே அழித்த மிகக் கொடூரமான செயலாகும். இந்த அராஜகத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றன” என்றார்.

https://www.ilakku.org/?p=38907

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுத்தூபியை அழிப்பதால் தமிழின உணர்வை அழித்துவிடலாம் எனக் கனவு காணும் சிங்களம் -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

1-59-696x392.jpg
 25 Views

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுதூபி வெள்ளிக்கிழமை இரவு திடீரென்று புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.  

அத்தோடு, இராணுவத்தினரும் பொலிஸாரும் பல்கலை வளாகத்தில் குவிக்கப்பட்டு, எதிர்ப்பை வெளியிட்ட மாணவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இருந்தும் இலங்கை அரசின் அடக்கு முறைகளைக் கண்டித்து மாணவர்கள், பொதுமக்கள் விடியவிடிய அப்பகுதியில் கோசங்களை எழுப்பிய வாறு தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அங்கு சென்றுள்ளார். மேலும் பல அரசியல் செயற்பாட்டாளர்கள் மாணவர்களுக்கு ஆதரவாகவும் நினைவுதூபி இடித்தழிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல்கலை பகுதியில் கூடி வருகின்றனர்.

WhatsApp-Image-2021-01-08-at-6.00.11-PM.

இந்நிலையில், நினைவுதூபி இடித்தழிக்கப்பட்டதற்கு தனது கண்டனத்தை வெளியிட்டுள்ள அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை, நினைவுத்தூபியை அழிப்பதால் தமிழின உணர்வை அழித்துவிடலாம் என சிங்களம் கனவு காணுவதாக குறிப்பிட்டுள்ளது.

அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,

“தமிழின அடையாளங்களை அழிக்கும் சிங்கள அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை தான் இரவோடு இரவாகச் சத்தம் சந்தடி இல்லாமல் யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்மூலமாக்கப்பட்டது. பல்கலைக்கழகத்திற்குள் பொங்குதமிழ் தூபி, மாவீரர் தூபி, முள்ளிவாய்க்கால் தூபி என மூன்று நினைவுத்தூபிகள் உள்ளன.

சிங்களத்தின் அடிவருடியான துணைவேந்தருக்கு பதவிவழங்கிய போது முன்வைக்கப்பட்ட நிபந்தனையின் வெளிப்பாடே முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிப்பு. இன்று விலைபோகும் ஒருசில தமிழர்களை வைத்தே தமிழன அழிப்பைக் கச்சிதமாகச் செய்யும் சிங்கள அரசை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.பொங்குதமிழின் பிறப்பிடமான யாழ் பல்கலைக்கழகம் தமிழ் உணர்வுள்ள பல தலைமுறைகளை அறுவடை செய்த நாற்றுமேடையாகும். அடுத்த தமிழ்த்தலைமுறைகள் தமிழ் உணர்வாளர்களாகத் துளிர்விடக் கூடாது என்பதில் சிங்களம் மிகவும் கவனாமாகச் செயற்படுகின்றது.

கல்வியும், மொழியும், பண்பாடும், நிலமும் எமது இனக்கட்டமைப்பை தாங்கி நிற்கும் தூண்கள். இந்தத் தூண்களைத் தகர்த்துவிட எதிரி முனைகிறான். இனத்தனித்துவத்தை அழிப்பது அவனது நோக்கம்.

 – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் –
வடக்குக் கிழக்கில் தமிழர்களின் அடையாளங்களை அழித்து தனது கலாச்சார எச்சங்களாக மாற்றிவரும் இனவாத சிங்கள அரசு இலங்கைத்தீவில் தமிழர்களின் அடையாளங்களே இருக்கக்கூடாது என்ற வன்மமான சிந்தனையுடன் காய் நகர்த்தி வருகின்றது. தூபிகளையும் நினைவுச்சின்னங்களையும் அழிப்பதால் தமிழரின் விடுதலை வேட்கையையும் தமிழ் உணர்வையும் இல்லாது ஒழித்துவிடலாம் என்று கனவு காணும் சிங்களத்தின் கொட்டத்தை அடக்க மக்கள் புரட்சி வெடிக்கட்டும் பார்த்தீபன் கனவு பலிக்கட்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Link to comment
Share on other sites

The previous VC was sacked because he didn't demolish the monument. I have concrete reasons to believe that one of the pre-conditions for appointment of the new VC by the incumbent President was demolition of this monument.

- Dr. Kumaraguruparan( Former senior lecturer-Faculty of Law. Jaffna university)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nedukkalapoovan said:

திருநீறு பட்டை அடிச்சுக் கொண்டு உந்த புதிய சிங்கள அதிஉச்ச விசுவாசி.. உபவேந்தர் வரும் போதே சொன்னம்.. ரெம்ப வாழ்த்தாதீங்க.. வருத்தப்பட நேரிடும் என்று.

இப்ப அதுபோல ஆச்சே. 

நமக்கு எதிரிங்க துரோகிங்க வடிவில்..  வெளில விட உள்ள அதிகம். அதனால்.. தான் இந்த இனம் ஒரு விடிவே இல்லாமல் இப்படி அகில உலகமும் அடிமையாக் கிடக்குது. 

காலம் இதையும் கடந்து போகும்.

ஆக்கிரமிப்பில் தமிழர்கள் வாழினம் என்பதை அவர்களுக்கு நினைவூட்ட மகிந்த கும்பலாலும் அதன் அடிவருடிகளாலும் மட்டுமே முடியும். 

நானும் இதேயேதான் வேறொரு திரியில் அவர் பதவி ஏற்பதற்கு முதல் சொன்னேன். 

துணைவேந்தர் அரசின் அடிமையோ கைக்கூலியோ  அல்ல. பணிந்து போவதை விடப் பதவி துறந்திருந்தால் இன்று அவர் பக்கம் மாணவர்களும் மக்களும் நின்றிருப்பார்கள். எங்கள் சமூகம் பதவிக்காகவும் பணத்துக்காகவும் விலை போவதில் கைதேர்ந்தவர்கள் என்பதை துணைவேந்தர் ஐயா நிரூபித்துள்ளார்.  

Link to comment
Share on other sites

5 hours ago, Justin said:

இது சோகமான ஒரு விடயம்! என்றாலும், ஒரு துணைவேந்தருக்கு இருக்கும் பொறுப்பையும் கட்டுப் பாடுகளையும் மறந்து விட்டுப் பேச இயலாது!

அவர் அகற்றா விட்டால் அவரை நீக்கி விடும் அதிகாரம் கோத்தாவுக்கு இருக்கிறது! அடுத்து செனட் தெரிவு செய்யாத ஒரு சிங்களவரை கோத்தா நியமித்தால் நிலை என்ன? செனற் தேர்வு செய்யாத ரட்னஜீவன் ஹூலை மகிந்த தெரிவு செய்தது நினைவிருக்கிறதல்லவா?

Lose a battle & win the war என்று நகர்வோம்!
 
நீங்கள் என்ன சொல்ல வருகின்றிர்கள்?. ஒரு சிங்களவர் செய்வதை விட ஒரு தமிழர் செய்வது பரவாயில்லை என்கிறீர்களா?. தற்போதைய துணைவேந்தர் அதிகாரவர்க்கத்துக்கு  முண்டு கொடுத்ததை விட ஒரு கூந்தலும் பிடுங்கவில்லை.ரட்ணஜீவன் ஹூல் ஆயிரம் மடங்கு இவரைவிட மேல்.புலியோ,ஈபிடிப்பியோ, கோத்தபாயவோ நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என நேர் பட சொல்ல்லியுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Kavi arunasalam said:

spacer.png

இதேபோல் தான்.. அம்மையார் ஜெயலலிதா முள்ளிவாய்க்கால் நினைவில்லத்தை இடித்தார். உலகையே விட்டுப் போய்ட்டார்... ஆனால் நினைவில்லம் தான் சொல்ல வேண்டியதைச் சொல்லி நிற்கிறது.

Nedumaran inaugurates Mullivaikkal memorial - The Hindu

முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற சுற்றுச்சுவர் இடிப்பு – eelamview

இன்று இப்படி

முள்ளி வாய்க்கால் முற்றம் அமைக்க சொந்த இடத்தை தானமாக வழங்கிய நடராஜன் ||  Natarajan who donated his own land to set up the mullivaikkal mutram

அதேபோல்..

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம், நீண்ட  போராட்டத்தின் பின் பல்கலைக்கழக மாணவர்களால் உருவாக்கம்.. | Jaffna Breaking  ...

இதுவும் மீளும்....!

ஆனால்.. நினைத்தூபிகளை இடிக்கலாம்.. ஆனால் நினைவுகளை எந்த சிங்களவனாலும் அழிக்க முடியாது. சிங்களக் கூலிகளாலும் அழிக்க முடியாது. அழிக்க நினைத்தவர்கள் அழிந்தது தான் மிச்சம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.