Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தடைகளை தகர்த்து ஆரம்பம் ஆகியது பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை மாபெரும் பேரணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நிழலி said:

டக்கிளஸ், கருணா,பிள்ளையான், அங்கஜன் போன்றோருக்கு இருக்கும் அதே பிரச்சனை தான் இவருக்கும். மக்கள் சுதந்திரம், விடுதலை பற்றி தன்னுணர்வு கொண்டு போராடினால் இவர்களுக்கான இடம் அரசியலில் இல்லாமல் போய்விடும். முக்கியமாக பிள்ளையான், கருணா, இவர் போன்றோரின் அடிப்படை அரசியலே பிரதேசவாதமும், முஸ்லிம் தமிழ் உறவுகளுக்கிடையிலான பிளவும் தான். அது சீர் செய்யப்பட்டால் இவர்களுக்கு அரசியல் செய்ய வெளி கிடைக்காது.

முள்ளிவாய்க்கால் படத்தில் விக்கியரைப் பார்த்தேன் தமிழ்வின்னில்.நான்நினைக்கிறன் உடல்நிலை காரணமாக அவர் காரில் வந்தவர் என்று

  • Replies 107
  • Views 7.7k
  • Created
  • Last Reply
23 minutes ago, ரஞ்சித் said:

அது சரி, இவையளுக்கு என்ன பெயர்? தேசிக்காய்கள் எண்டு சொல்லலாமோ? அல்லது வேறு ஏதாச்சும் பெயர் இருக்குதோ? உதெல்லாம் சும்மா. புலம்பெயர் தேசிக்காய்களின்ர பணத்தில ஊர்சுற்றுர காவாலிகள் செய்யிற தேவையில்லாத வேலை .

உதால ஒரு பிரியோசனமும் இல்லை. எங்களுக்கு சீனக் காரன் இருக்கிறான். இந்தியாவை அழிச்சுப்போடுவான். நாங்கள் எங்கட சரித்திரத் தலைவர்களான பிள்ளையானின்ர தலைமையிலையும், கருணாவின்ர தலைமையிலையும் இன்னும் அதிகம் அதிகமாக எங்கட எஜமானின்ர காலை .....குவோம். 

ரஞ்சித், இவ்வாறான போராட்டங்களை எவருமே எதிர்க்கவில்லை. இதை போன்ற எல்ரோரையுமே இணைத்த கட்சி/ இயக்க சார்பற்ற  மக்கள் போராட்டங்கள் காலம் கடந்தாவது இப்போது  ஆரம்பிக்கபட்டது அனைவருக்கும் மகிழ்ச்சியே. 

பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இணைந்து நிற்பதும் ஆரோக்கியமான விடயம்.  இலங்கை அரசால் எந்த முத்திரையும் குத்த முடியாமல் இருப்பது இந்த போராட்டத்தின் பலம். கடந்த 40 வருடங்களில் இப்படியான அனைத்து தரப்பினரையும் இணைத்த மக்கள் போராட்டங்கள் நடைபெறவில்லை.  எமது கடந்த கால தவறுகளை மக்கள் சற்றே உணர தொடங்கியிருப்பதன் அறிகுறி இது. 

ஆகவே கருத்து வேறுபாறுகளை கடந்து அனைவரும் இதனை வரவேற்போம்

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, tulpen said:

ரஞ்சித், இவ்வாறான போராட்டங்களை எவருமே எதிர்க்கவில்லை. இதை போன்ற எல்ரோரையுமே இணைத்த கட்சி/ இயக்க சார்பற்ற  மக்கள் போராட்டங்கள் காலம் கடந்தாவது இப்போது  ஆரம்பிக்கபட்டது அனைவருக்கும் மகிழ்ச்சியே. 

பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இணைந்து நிற்பதும் ஆரோக்கியமான விடயம்.  இலங்கை அரசால் எந்த முத்திரையும் குத்த முடியாமல் இருப்பது இந்த போராட்டத்தின் பலம். கடந்த 40 வருடங்களில் இப்படியான அனைத்து தரப்பினரையும் இணைத்த மக்கள் போராட்டங்கள் நடைபெறவில்லை.  எமது கடந்த கால தவறுகளை மக்கள் சற்றே உணர தொடங்கியிருப்பதன் அறிகுறி இது. 

ஆகவே கருத்து வேறுபாறுகளை கடந்து அனைவரும் இதனை வரவேற்போம்

துல்பேன்,

இப்போராட்டம் எதற்காக நடத்தப்படுகிறது என்பது தெரியாதவன் அல்ல நான். 

தமிழர் தாயகம் என்பதனை வரையறுக்கின்ற, அதன் மீதான தமிழரின் உரிமையினை வலியுறுத்துகின்ற, தென் தமிழீழத்தின் எல்லையான பொத்துவிலில் இருந்து வட தமிழீழத்தின் பொலிகண்டிவரை மக்கள் எழுச்சியுடன் நடைபெறும் இந்தப் போராட்டம் காலத்தின் கட்டாயத் தேவை. இதில் தமிழ் பேசும் மக்கள் இன, மத, கட்சி பேதமின்றி கலந்துகொள்ளவேண்டும், அப்படித்தான் நடந்தும் இருக்கிறது.

எமது சக்திக்கு அப்பாற்பட்ட இன்னொரு சக்தியின் ஆதரவு இப்போராட்டத்திற்குக் கிடைத்திருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம், ஆனால் இப்போராட்டம் நடத்தப்படும் அரசியல் சூழ்நிலை மிக மிகப் பொறுத்தமானது என்பதுதான் எனது எண்ணம். நிச்சயம் சரியான நேரத்தில், தருணம் உணர்ந்து, சரியானவர்கள் அனைவரையும் இணைத்து நடத்தப்படும் உண்மையான மக்கள் எழுச்சியாகவே இதனைப் பார்க்கிறேன். 

இப்போராட்டத்தின் எண்ணம் ஈடேறவேண்டும் உண்மையிலேயே விரும்புகிறேன்.

ஆனால், நான் முதல் எழுதிய கருத்து இப்போராட்டத்தை இங்கு சிலர் எப்படி பார்க்கிறார்கள், எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதனைக் காட்டவே.

"இப்போராட்டம் வெற்றியடையாது, விடுப்புப் பார்க்கச் சேர்ந்த சனத்தை போராட்டத்திற்கு வந்த சனம் எண்டு காட்டீனம், இதனால ஒரு பிரியோசனமும் இல்லை, மக்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் தமது பகுதிக்கு வரக்கூடாது என்று தடுக்கிறார்கள், இந்தப் போராட்டத்தினைக் காட்டிலும் அங்கஜனின் போராட்டத்திற்குத்தான் சனம் அதிகம்"..........இவ்வாறு பல எதிர்மறையான கருத்துக்கள்.

தமது புதிய அரசியல்த் தலைமைகள், அவர்களின் அரசியல் நிலைப்பாடுகள், தமிழர்களின் அபிலாஷைகளுக்கெதிராக அரசுடன் அவர்களின் தலைவர்களின் சமரசம் ஆகியவற்றினால் கட்டுண்டு தமிழர்களின் எழுச்சிமிகு போராட்டமொன்றினை எப்படியாவது தோல்வியடையச் செய்துவிடவேண்டும், அல்லது புறக்கணிக்கவேண்டும் என்கிற ரீதியிலான கருத்துக்கள் குறைந்தது மூவரால் இங்கே முன்வைக்கப்பட்டன. அதனை விமர்சித்தே அப்படி எழுதினேன். 

  • கருத்துக்கள உறவுகள்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி – பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

 
Pottuvil-to-Polikandi-Rally-Starting-Pol
 71 Views

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணி கிளிநொச்சி பேருந்து நிலையம் சந்தியில் இருந்து பொலிகண்டி நோக்கி இன்று காலை ஆரம்பமானது.

 

 

Video Player
 
00:00
 
03:03

 

மதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் உட்பட்ட மக்கள் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர்.

தகாத செய்கைகளை விரலால் காட்டி போராட்டத்தை எச்சரிக்கும்  இராணுவம்

1-6-1.jpg

பாதிக்கப்பட்ட மக்களும்,  மக்கள் பிரதிநிதிகளும் சர்வதேச விசாரணையை  கோருகின்றார்கள்.

May be an image of child, standing and outdoors

காவல்துரையினரின் தடைகளைத் தாண்டி…

May be an image of 1 person, standing and outdoors

 

https://www.ilakku.org/?p=41604

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, உடையார் said:

தகாத செய்கைகளை விரலால் காட்டி போராட்டத்தை எச்சரிக்கும்  இராணுவம்

இந்தச் சிங்களப் பெளத்த பேரினவாதியின் கண்களில் தெரியும் குரூரமே அவனது நோக்கத்தினைக் காட்டிவிடுகிறது. இனவாத மிருகங்கள் !

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/pagetamil/videos/702970103727391

வல்வெட்டித்துறை தீருவில் நோக்கி #P2P 

 

பொலிகண்டியை அடைந்தது பேரணி

https://www.facebook.com/pagetamil/videos/858954134938649

 

https://www.facebook.com/pagetamil/videos/240786947603062

Edited by Ahasthiyan

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம்..தமிழினத்தின் எழுச்சிகளுக்கும் ஆதாரமான தாய் மண். பொத்துவிலில் தொடங்கிய பேரணி பொலிகண்டியில் முடியும் வேளையில் ஊலகத்திற்கு ஒரு காத்திரமான வரலாற்றுச் செய்தியைச் சொல்ல வேண்டும்.தமிழர்கள் உலகத்தில் ஒர் தவிர்க்கப்பட முடியாத இனம்.அவர்கள் பட்ட வலிகள்.வேதனைகள் அனைத்திற்குமான நீதியைப் பெற்றுத்தரவும்.உலகப்பந்தில் தமிழர்களுக்கான இருப்பைத் தக்க வைக்கவும் உலகின் செவிப்பறைகளில் ஓங்கி ஒலிக்கட்டும்.
மக்கள் புரட்சி வெடிக்கட்டும்!

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Ahasthiyan said:

https://www.facebook.com/pagetamil/videos/702970103727391

வல்வெட்டித்துறை தீருவில் நோக்கி #P2P 

 

பொலிகண்டியை அடைந்தது பேரணி

https://www.facebook.com/pagetamil/videos/858954134938649

 

https://www.facebook.com/pagetamil/videos/240786947603062

பல அணிகளாக பிரிந்து ஒவ்வோர் இடங்களுக்கு போய்க்கொண்டிருக்கினம்
ஒரு அணி கம்பர்மலையில் உள்ள சங்கர் அண்னையின் சமாதி இருந்த இடத்தில் வைத்து வல்வையர்களால் மலர் தூவி வரவேற்கப்பட்டன.

  • கருத்துக்கள உறவுகள்
On 3/2/2021 at 08:46, கிருபன் said:

தடைகளை தகர்த்து ஆரம்பம் ஆகியது பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை மாபெரும் பேரணி

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kavi arunasalam said:

spacer.png

சிந்திக்க வைக்கும்... அழகிய கருத்தோவியம். 👍🏼

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உறவுகளே கனவருடங்களுக்கு பின்னர் மனதில் பெரும் ஆறுதல். 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பொத்துவில்- பொலிகண்டி... நாள் 5: ஒன்றாக தொடங்கிய பேரணி இரண்டாக முடிந்தது: கடைசியில் வெடித்தது மோதல் (LIVE)

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை எழுச்சி பேரணி நேரலை

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை என்ற பெயரில் ஒற்றுமையாக தொடங்கிய பேரணி, சர்ச்சையுடன் இரண்டு இடங்களில் முடிகிறது.

எம்.ஏ.சுமந்திரன் தரப்பு ஆலடியிலும், சிவில் மற்றும் மத தலைவர்கள் ஊறணியிலும் போராட்டத்தை முடிக்கிறார்கள்.

பொலிகண்டியில் இரண்டு தரப்பிற்குமிடையில் பெரும் களேபரம் ஏற்பட்டது. இது பற்றிய மேலதிக விபரங்கள் பின்னர் விரிவாக இணைக்கப்படும்.

https://www.pagetamil.com/171576/

20 minutes ago, பெருமாள் said:

No photo description available.

இந்த நினைவு கல்  நடுவதுக்கும் பிரச்சனை கிளப்பியுள்ளார் சுமத்திரன் .

எங்கடை தலைவிதி .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

வல்வையில் .

  • கருத்துக்கள உறவுகள்

இறுதித் தருணத்தில் இடம்பெற்ற சதி ! பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம் இலக்கை அடைந்தது.

அடக்கப்படும் சிறுபான்மை இனத்தின் போராட்ட வடிவங்கள் மாறினாலும் போராட்டம் தொடரும் என்ற செய்தியை பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பிரகடனம் உணர்த்தியுள்ளது.

வடக்கு - கிழக்கு சிவில் சமூக அமைப்புகளின் குறியகால ஏற்பாட்டில் இந்த பேரணி ஒழுங்கமைக்கப்பட்டது. அதற்கு தமிழ் தேசிய அரசியல் கட்சிகள், தமிழ், முஸ்லிம் பொது அமைப்புகளின் ஒத்துழைப்பு வழங்கின.

தமிழர் தாயகம் முழுவதும் பேரணியை நடத்த ஏற்பாடாகிய போது பொலிஸார் நீதிமன்றத் தடை உத்தரவுகளைப் பெற்று தடுக்க முயன்றனர்.

 

இதேவேளை, பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்தின் இறுதியில் நினைவுக் கல்லொன்றை நாட்ட திட்டமிட்டிருந்த நிலையில் குறித்த கல் சதிமுயற்சியால் அங்கிருந்து எடுத்துச் செல்லபட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சை வழி பேரணி பல தடைகளையும் உடைத்து தனது இலக்கான பொலிகண்டியை இன்று மாலை 6.40 மணிக்கு சென்றடைந்தது.

வடக்கு - கிழக்கு சிவில் சமூக அமைப்புகளின் குறியகால ஏற்பாட்டில் இந்த பேரணி ஒழுங்கமைக்கப்பட்டது. அதற்கு தமிழ் தேசிய அரசியல் கட்சிகள், தமிழ், முஸ்லிம் பொது அமைப்புகளின் ஒத்துழைப்பு வழங்கின.

 

தமிழர் தாயகம் முழுவதும் பேரணியை நடத்த ஏற்பாடாகிய போது பொலிஸார் நீதிமன்றத் தடை உத்தரவுகளைப் பெற்று தடுக்க முயன்றனர்.

spacer.png

எனினும் திட்டமிட்டபடி கடந்த 3 ஆம் திகதி புதன்கிழமை அம்பாறை பொத்துவிலில் கொட்டும் மழையில் பேரணி ஆரம்பமாகி, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி ஊடாக இன்று யாழ்ப்பாணத்தை சென்றடைந்தது.

பேரணிக்கு அனைவரும் தமது ஒத்துழைப்பை வழங்கி எந்தவொரு குழப்பநிலைகளும் ஏற்படாது இடம்பெற்றது.  இந்து, கிறிஸ்தவ மதகுருமார்கள் முன்னின்று பேரணியை நடத்தினர்.

பொலிஸாரின் தடைகளும் சில விசமிகளின் கல்லெறி, ஆணிகளைத் தூவி வீதிகளில் தடை ஏற்படுத்தப்பட்ட போதும் மக்கள் எழுச்சியால் அவை பயனற்றுப் போய்விட்டன.

பல்லாயிரக் கணக்கான மக்கள் தமது வாழ்வுரிமைக்கும் போரின் பின்னரும் தொடரும் அடக்குமுறைக்கும் எதிராக கிளந்தெழுந்தனர்.

spacer.png

அதனால் தனது இலக்கை பேரணி அடைந்தது. குறுகிய நாள் அழைப்பில் மக்கள் தமது பேராதரவை வழங்கி ஆட்சியாளர்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் தமது வாழ்வுரிமையை ஒரே குரலில் வலியுறுத்தியுள்ளனர்.

அடக்கப்படும் சிறுபான்மை இனத்தின் போராட்ட வடிவங்கள் மாறினாலும் போராட்டம் தொடரும் என்ற செய்தியை பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பிரகடனம் உணர்த்தியுள்ளது.

தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள் உட்பட இலங்கை முழுவதும் திட்டமிட்டு நடாத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வட, கிழக்கு தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள், சமய ஒன்றியங்கள் இணைந்து அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைகளை நடைமுறை படுத்த கோரியும், மலையக தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்தக் கோரியும் முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கைகளை மதிக்கக் கோரியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

spacer.png

இறுதித் தருணத்தில் இடம்பெற்ற சதி ! பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம் இலக்கை அடைந்தது | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

பல தடைகளை உடைத்து இலக்கை அடைந்தது பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சை வழிப் பேரணி

பல தடைகளை உடைத்து ஐந்தாம் நாளான இன்று தனது இலக்கை அடைந்தது பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சை வழிப் பேரணி.

 

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சை வழி பேரணியைத் தடுக்க யாழ். மந்திகை மடத்தடியில் வீதி மறியல் செய்து பொலிஸார் தடை ஏற்படுத்திய போதும் மக்கள் எழுச்சி பேரணி அதனை உடைத்து முன்னேறி இன்று மாலை தனது இலக்கான பொலிகண்டியை அடைந்தது.

 

 

பருத்தித்துறை நோக்கிப் பயணிக்கும் பேரணியை மந்திகை மடத்தடியில் வீதியின் குறுக்கே நின்று பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவை வைத்து தடுக்க முயன்றனர்.  

spacer.png

 

பேரணியில் கலந்துகொண்டோலை பதிவு செய்தே அனுமதிக்க முடியும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். எனினும் பெரும் திரளான மக்கள் எதிர்ப்பை வெளியிட்டதால் பொலிஸார் குறித்த இடத்தில் இருந்து விலகிச்சென்றனர். 

spacer.png

 

பருத்தித்துறை செல்லும் பேரணி அங்கிருந்து வல்வெட்டித்துறை சென்று பொலிகண்டி என்ற இலக்கை இன்று மாலை சென்றடைந்தது.

spacer.png

அங்கு பேரணியில் பங்கேற்கும் பல்லாயிரக் கணக்கானோர் ஒரே குரலில் வாழ்வுரிமையை வலியுறுத்தி சர்வதேசத்திடம் நீதி கோரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல தடைகளை உடைத்து இலக்கை அடைந்தது பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சை வழிப் பேரணி | Virakesari.lk

பெரும் படையுடன் மாபெரும் வரலாற்று போராட்டம் நிறைவு!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான ஐந்து நாள் மாபெரும் போராட்ட பேரணியின் நினைவு கல் ஊறணியில் இன்று (7) 7.00 மணிக்கு நாட்டப்பட்டது.

அங்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு இந்த நினைவு கல் நாட்டப்பட்டது.

அத்துடன் பேரணியின் நினைவாக குறித்த பகுதியில் மரக்கன்றும் நடப்பட்டுள்ளது.

 
 

பின்னர் பொலிகண்டியை சென்றடைந்த பேரணி பெருமளவு மக்களுடன் பரந்த இடத்தில் குழுமியதை தொடர்ந்து உரை நிகழ்வுகள் இடம்பெற்று போராட்டம் முடிவுறுத்தப்பட்டது.20210207_184429-300x139.jpg30a86cad-0def-4039-9718-66de476b2798-300IMG-5870-300x225.jpgIMG-5869-300x225.jpgIMG-5868-300x225.jpgIMG-5858-300x225.jpgFB_IMG_1612707777730-300x225.jpgFB_IMG_1612707775462-300x141.jpgFB_IMG_1612707746056-300x225.jpgPottuvil-to-Polikandi-Rally-in-PolikandiPottuvil-to-Polikandi-Rally-in-PolikandiPottuvil-to-Polikandi-Rally-in-PolikandiPottuvil-to-Polikandi-Rally-in-PolikandiFB_IMG_1612704390025-300x225.jpgIMG-20210207-WA0037-300x225.jpgIMG-20210207-WA0038-300x225.jpgIMG-20210207-WA0034-300x225.jpgIMG-20210207-WA0035-300x225.jpgIMG-20210207-WA0036-300x225.jpgIMG-20210207-WA0032-300x225.jpgIMG-20210207-WA0033-300x225.jpgIMG-20210207-WA0031-300x225.jpgIMG-20210207-WA0030-1-300x225.jpgIMG-20210207-WA0026-300x225.jpgIMG-20210207-WA0027-300x225.jpgIMG-20210207-WA0025-1-300x225.jpgIMG-20210207-WA0022-300x225.jpgIMG-20210207-WA0024-300x225.jpgIMG-20210207-WA0021-300x225.jpgIMG-20210207-WA0020-1-300x225.jpgFB_IMG_1612700533625-300x169.jpgFB_IMG_1612700521611-300x169.jpgIMG_20210207_174124-300x169.jpgIMG_20210207_174123-300x169.jpgIMG_20210207_174115-300x169.jpgIMG_20210207_174111-300x169.jpgIMG_20210207_174109-300x200.jpgIMG_20210207_173638-300x200.jpgFB_IMG_1612696295562-300x225.jpgIMG-20210207-WA0019-300x169.jpgIMG-20210207-WA0018-300x169.jpgIMG-20210207-WA0017-300x169.jpgIMG-20210207-WA0016-225x300.jpg

நன்றி: உதயன் 

  • கருத்துக்கள உறவுகள்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை - இலங்கை தமிழர்களின் 'அகிம்சை போராட்டம்' நிறைவடைந்தது.

நிமிடங்களுக்கு முன்னர்
இலங்கை தமிழர்களின் 'அகிம்சை போராட்டம்' நிறைவடைந்தது

பட மூலாதாரம்,SHANGARY

இலங்கை தமிழர்களின் உரிமைகளை கோரும் நோக்குடன் நடத்தப்பட்ட பாரிய போராட்ட பேரணி, இன்றுடன் (பிப்ரவரி 07) நிறைவடைந்தது.

கிழக்கு மாகாணத்தின் பொத்துவில் முதல் வடக்கு மாகாணத்தின் பொலிகண்டி வரை தமிழர்களின் உரிமைகளை கோரி இந்த போராட்டம் நடத்தப்பட்டிருந்தது.

பொத்துவில் பகுதியில் கடந்த 3ம் தேதி இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

பொத்துவில் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம், கிழக்கு மாகாணம் முழுவதும் பயணித்து, பின்னரான காலத்தில் வடக்கு மாகாணத்தில் நிறைவடைந்திருந்தது.

தமிழர்களினால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தில், ஆரம்ப நாள் முதலே முஸ்லிம்களும் இணைந்துகொண்டிருந்தனர்.

 

தமிழர்களின் நிலஆக்கிரமிப்பு, வடக்கு மற்றும் கிழக்கு பௌத்த மயமாக்கல், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோர் விவகாரம், முஸ்லிம்களின் உடல்கள் நல்லடக்கம், மலையக மக்களுக்கான ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு உள்ளிட்ட மேலும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழர்கள், முஸ்லிம்கள் இணைந்து நடத்திய இந்த போராட்டம், அகிம்சை வழியில் முன்னெடுக்கப்பட்டதாக போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

இறுதி நாளான இன்று, கிளிநொச்சியில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

முகமாலையூடாக யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்த பேரணியை, பெருந்திரளான மக்கள் ஒன்றிணைந்து வரவேற்றனர்.

இலங்கை தமிழர்களின் 'அகிம்சை போராட்டம்' நிறைவடைந்தது

பட மூலாதாரம்,SHANGARY

வடக்கு - கிழக்கு மாகாண சிவில் அமைப்புக்கள், அரசியல்வாதிகள், சமயத் தலைவர்கள், மாணவர்கள், காணாமல் போனோரின் உறவினர்கள், முஸ்லிம் அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை வலுப்படுத்தியிருந்தனர்.

போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட சந்தர்ப்பம் முதல் பல்வேறு போலீஸ் பிரிவுகளில், இந்த போராட்டத்தை தடுக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவுகள் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தன.

நீதிமன்ற உத்தரவுகளை பல்வேறு சந்தர்ப்பங்களில் போலீஸார் காண்பித்த போதிலும், அதனையும் மீறி, போராட்டக்காரர்கள் தமது இறுதி எல்லையை நோக்கி நகர்ந்திருந்தார்கள்.

அதேவேளை, போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட இடம் முதல் இன்றைய தினம் வரை அனைத்து போலீஸ் பிரிவுகளிலும் போலீஸார் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினர் பகிரங்கமாகவே போராட்டங்களை ஒளிப்பதிவு செய்துக்கொண்டனர்.

மேலும், போராட்ட பேரணிக்கு சென்ற வாகனங்கள் பயணிக்கும் வழிகளில் ஆணிகளை சிலர் வீசியிருந்ததாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் கூறியிருந்தனர்.

இவ்வாறான நிலையிலேயே, இன்றிரவு இந்த போராட்டம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது.

இறுதியாக பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்தின் நினைவாக, யாழ்ப்பாணம் - பொலிகண்டி பகுதியில் நினைவு கல்லொன்றை வைக்க போராட்டக்காரர்கள் திட்டமிட்டிருந்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

எனினும், நினைவுக்கல், சிலரால் சூரையாடப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

பொலிகண்டியில் இன்றிரவு போராட்டக்காரர்கள் மத்தியில் உரை நிகழ்த்திய போதே அவர் இந்த விடயத்தை வெளியிட்டார்.

யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னரான காலத்தில், தமிழர்களின் போராட்டம் மீண்டும் வலுப் பெற்றுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

தற்போது இந்த போராட்ட வடிவம் மாறியுள்ளதாகவும் சாணக்கியன் கூறுகின்றார்.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சை போராட்டமானது, தமிழர்களின் உரிமை போராட்டத்தின் முதல் வெற்றி என நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சாணக்கியன் தெரிவிக்கின்றார்.

அதேபோன்று, தமிழர்களின் உரிமை போராட்டம் வேறு வடிவத்தில் இனி தொடரும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சாணக்கியன் குறிப்பிடுகின்றார்.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை - இலங்கை தமிழர்களின் 'அகிம்சை போராட்டம்' நிறைவடைந்தது - BBC News தமிழ்

 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பிழம்பு said:

தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள் உட்பட இலங்கை முழுவதும் திட்டமிட்டு நடாத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வட, கிழக்கு தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள், சமய ஒன்றியங்கள் இணைந்து அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைகளை நடைமுறை படுத்த கோரியும், மலையக தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்தக் கோரியும் முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கைகளை மதிக்கக் கோரியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

காணாமல் போனவர்களுக்கும்  நீண்டகால தடுப்பில் இருக்கும் அரசியல்கைதிகளுக்கும் யுத்த குற்றமும் மறுபடியும் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்

சமூக வலைத்தளங்களில் இருந்து சில 

பொத்துவிலில் பேரணி ஆரம்பமானபோது தடைகளை உடைத்து முன்னேறுவது என்பது பெரும் போராட்டமாக இருந்தது. இந்த பேரணியில் 500ஆக இருக்கும் மக்கள் தொகை ஆயிரமாக பெருக வேண்டும் என பேரணியின் முதல் நாள் சுமந்திரன் வேண்டுகோள் விடுத்தார்.
 
இரண்டாம் நாள் ஆயிரம் இரண்டாயிரமாக பெருகியது. 7ஆவது நாளான இன்று லட்சக்கணக்காக மக்கள் வெள்ளம் பெருகியிருக்கிறது.
 
இந்த மக்கள் போராட்டத்திற்கு வித்திட்ட அனைவரும் நன்றியும் பாராட்டுக்கும் உரியவர்கள். முக்கியமாக முதல் நீதிமன்ற தடைகள் இருந்த போதிலும் பொலிஸாரின் அடி தடிகள் வன்முறைகள் இருந்த போதிலும் அதை எல்லாம் முறியடித்து முன்னேறி இன்று லட்சக்கணக்கான மக்கள் பேரணியாக உருவெடுக்க வழிவகுத்த அனைவரும் போற்றுதற்கு உரியவர்கள்.
முதல் நாள் பேரணியில் முன்னணியில் இருந்தவர்கள் இன்று மக்களின் பின்னால் இறுதிநாள் வரை செல்கிறார்கள். 7 நாள் அவர்களின் இந்த பயணம் வெற்றி பெற்றிருப்பது மனநிறைவை தந்தாலும் இது போன்று அவர்கள் தொடர்ந்து பயணிக்க வேண்டும்.
 
இளைய தலைமுறைதான் தமிழ் மக்களின் அரசியலுக்கு இனி தலைமை ஏற்க வேண்டும் என்பதையும் இந்த பேரணி உணர்த்தி நிற்கிறது.
  • கருத்துக்கள உறவுகள்

பல்லாயிரக்கணக்கான மக்களின் ஆதரவுடன் வெற்றிபெற்றது எழுச்சிப் பேரணி - வெளியானது இறுதிப்பிரகடனம்.

எமது நீதிக்கான போராட்டத்தினை உலகம் ஏற்கும் திசை நோக்கி, மிகத் தீவிரமாக போராட்ட அரசியலை தமிழ் மக்களாகிய நாம் அணிதிரண்டு நகர்த்த வேண்டும்.

இந்த திடசங்கற்பத்துடன் போராட்டங்களுக்கு அனைவரும் வீரியமாக, ஒருங்கிணைந்த செயல் வடிவம் கொடுக்க வேண்டும் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் பேரணி அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறது என வடக்கு - கிழக்கு சிவில் சமூக அமைப்புகள் வெளியிட்டுள்ள இறுதிப்பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டது.

வடக்கு - கிழக்கில் கட்டமைக்கப்பட்டு முன்னெடுக்கப்படும் இன அழிப்புக்கு எதிராகவும் சிறுபான்மை மக்களின் வாழ்வுரியையும் வலியுறுத்தி பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் பேரணி பல தடைகளை தாண்டி பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்களிப்புடன் சற்றுமுன் பொலிகண்டி செம்மீன் படிப்பகத்தில் நிறைவுற்றது.

அவ்விடத்தில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு, நினைவுக் கல் பதிக்கப்பட்ட இறுதிப்பிரகடனம் வாசிக்கப்பட்டது.

இறுதிப்பிரகடனத்தின் முழுமையான பகுதி இணைக்கப்பட்டுள்ளது,

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/159411?ref=imp-news

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.