Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • Popular Post

முற்குறிப்பு: சிலருக்கு வாசிக்கும் போது சங்கடமாக இருக்கலாம்

கதை:

வழக்கமாக ராசுக்குட்டி சுச்சு போகின்றபோது ஒரு பாட்டை விசிலடிச்சுக் கொண்டோ, இல்லை ஊரில சுவரில் எட்டுப் போட்ட காலத்தை நினைச்சுக் கொண்டோ அல்லது விட்டத்தை பார்த்துக் கொண்டோ தான் போவது வழக்கம். ஆனால் அன்றைக்குப் பார்த்து ஏதோ ஒரு நினைவில் போய் கொமர்ட்டில் (commode) நீரில் கலந்தும் கலக்காமலும் விட்ட சுச்சுவை உற்றுப்பார்த்து வினையை தேடிக்கொண்ட கதைதான் இப்ப நான் சொல்லப் போற கதை.

உற்றுப்பார்த்த ராசுக்குட்டிக்கு திடுக்கிட்டுப் போனார். சிவப்பாக ஒன்றிரண்டு துளிகள் சின்னஞ் சிறு வட்டங்களாக மிதந்து கொண்டு இருந்ததை கண்டு வெலவெலத்துப் போனார். ஐயய்யோ சுச்சுவில் இரத்தம் கலந்து வருகின்றதோ என்று ஆடிப்போயிட்டார். வாழ்வே மாயம் படத்தில் கமலஹாசன் இருமின பின் இரத்தம் வெளியேறிய சீனை தன் மனக்கண் முன் கொண்டு வந்து பார்த்தார். இது புற்று நோயாக இருக்குமோ அல்லது வேறு ஏதும் பாரதூரமான பிரச்சனையோ என்று ஒரு கையால பிடிச்சபடியே யோசிச்சுக் கொண்டு இருந்த ராசுக்குட்டியை, "என்னப்பா இவ்வளவு நேரம் என்ன செய்றீஙள்..." என்று கேட்ட மனைவியின் குரல் தான் மீண்டும் தன் நிலைக்கு கொண்டு வந்தது, ஆனாலும் பயம் விடவில்லை ராசுக்குட்டிக்கு.

வீட்டில் நண்பர் குடும்பம் வந்து கதைத்து கொண்டு இருக்கும் போது தான் இது நிகழ்ந்து இருந்தது. ராசுக்குட்டி அவர்களுடன் கதைத்துக் கொண்டு இருந்த விடயத்தை மீண்டும் விட்ட இடத்தில் இருந்து  தொடர்ந்தாலும் மனசில் சிவப்பாக பயம் மிதந்து கொண்டுதான் இருந்தது. எப்படியும் இது என்ன என்று அறியாவிடின் தலை உடனே சுக்கு நூறாக உடைந்து சிதறி விடுமோ என்று உள்ளூர அஞ்சிக் கொண்டு இருந்தார். எப்ப நண்பர் குடும்பம் போகும், எப்ப கூகிள் ஆண்டவரிடம் போய் என்ன விடயம் என்று அறியலாம் என்ற நினைப்பிலேயே இருந்தமையால் சரியாக அவரால் கதைக்க கூட முடியவில்லை.

நண்பர் குடும்பம் அரை மணி நேரம் மேலும் கதைத்து விட்டு போன மறுகணம், ஓடிப் போய் தன் மொபைலில் இணையத்தில் கூகிள் ஆண்டவரை கூப்பிட்டு "blood in the urine" (சிறு நீரில் இரத்தம்) என்று டைப் செய்து தேடு பொறியை தட்டி விட்டார். கூகிள் ஆண்டவரும் வஞ்சகம் இல்லாமல் பின்வருவன ஒன்று காரணமாகவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட விடயங்களோ காரணஙள் என்று பட்டியலிட்டார்:

1. தொற்று - Urinary tract infections
2. சிறு நீர்ப்பையில் கல்லு -A bladder or kidney stone
3. சிறு நீரகத்தில் தொற்று Kidney infections (pyelonephritis).
3. புரஸ்ரேட் பெரிசாவது -Enlarged prostate.
4. புற்றுநோய் - Cancer
5. சீறு நீரக காயங்கள்- Kidney injury

என்று வகை வகையாக பட்டியலிட்டார் கூகிள் ஆண்டவர். 

அவ்வளவு தான் ராசுக்குட்டி ஆடிப் போயிட்டார். அவர் மனக் கண் முன் மனைவியும் பிள்ளைகளும் பரதேசி கோலத்தில் நிற்பது போலவும், ஹீமோ தெரபி எடுத்து தலை முடி எல்லாம் உதிர்ந்து வயக்கெட்டுப் போய் தான் படுக்கையில் கிடப்பது போலவும், நண்பர்கள் எல்லாம் கண் ஓரத்தில் கண்ணீர் வழிய தான் வளர்த்தப்பட்டு இருக்கும் பெட்டியை சுற்றி ஒரு வட்டம் போட்டு நடப்பது போலவும் காட்சிகள் வழியத் தொடங்கி விட்டன ராசுக்குட்டிக்கு. 

முதல் வேலையாக உடனடியாக உயில் எழுதி வைக்க வேண்டும் என நினைத்தார். பின் அப்படி உயில் எழுதும் அளவுக்கு ஒரு சொத்தும் இல்லையே என அங்கலாய்த்தார். சொத்து கித்து சேர்த்து வைக்காமல் குடும்பத்தை நடுத்தெருவில் விடப்போகின்றேனே என தழுதழுத்தார். ஆயுள் காப்புறுதியில் கிடைக்கும் சில இலட்சங்கள் குடும்பத்துக்கு போதுமாக இருக்குமா என கணக்குப் போட்டார். தான் செத்த பின் எப்படியும் மறுமணம் செய்து கொள் என்று மனிசியிடம் சத்தியம் வாங்க வேண்டும் என உறுதி பூண்டார். புரண்டு புரண்டு படுத்தார், நடுக் கட்டிலில் எழும்பி இருந்து தன்னை தொட்டுப் பார்த்து எல்லாம் சரியாக இருக்குதோ என்று செக் பண்ணினார். இறுதியில் அடுத்த நாள் எழும்பியவுடன் குடும்ப மருத்துவருக்கு போன் போட்டு விடயத்தை சொல்லி உடனடியாக மருத்துவம் செய்ய தொடங்க வேண்டும் என்று நினைத்தார். எந்த நோயும் ஆரம்பத்தில் கண்டு பிடிக்கப்பட்டால் அதில் இருந்து பிழைக்கலாம் என எங்கோ வாசித்ததை பல தரம் மீள மனக்கண் முன் கொண்டு வந்து வாசித்தார். அப்படி நினைத்தது கொஞ்சம் மனசுக்கு ஆறுதல் கொடுக்க படுக்க போனார். நித்திரையானார்.  தான் செத்துப் போன பின் நண்பர்கள் எல்லாம் பியர் அடிச்சு அதைக் கொண்டாடுகின்றனர் என கனவு ஒன்றைக் கண்டு திடுக்கிட்டு எழும்பினார். உலகமே இப்படித்தான் போலியானது என்று கவலைப்பட்டார். சுருண்டு படுத்தார்.

அடுத்த நாள் மருத்துவரிடம் கதைக்க, மருத்துவர் இவர் சொல்வதை பெரிசாக கணக்கெடுக்கவில்லை போலிருந்தது. கொரனா காலத்தின் முதல் மாதம் என்பதால், மருத்துவர் கடும் யோசனையின் பின் இவர் கொடுத்த ஆக்கினையால "சரி வா வந்து சிறுனீரில் ஒரு டெஸ்ட் எடு... அதுக்குப் பிறகு பார்ப்பம் ": என்று சொல்லிய அடுத்த அரை மணி நேரத்தில் கிளினிக்கு போய் விட்டார்.

சிறு நீர் டெஸ்ட் செய்தார், 10 நிமிடங்களில் அதன் ரிசல்ட்ஸ் வந்தது.

(தொடரும்....)

 

  • கருத்துக்கள உறவுகள்

ராசுக்குட்டி வொட்காவை மறந்தால் எல்லாம் சரியாகி விடும் என்று பட்சி சொல்கிறது. 

எதுக்கும் சிறுநீர் றிசல்ட் வரட்டும் 😀

  • கருத்துக்கள உறவுகள்

யாழுக்குள் நிறையவிடையங்களுக்காக நான் தான் அதிகம் சங்கடபபடுவது... ஆனால் இப்போ வேலை என்று வெளிக்கிட்டதும் நிறைய விடையங்களை சாதரணமாக எடுத்துக கொண்டு காலத்தை நகர்த்த வேண்டிய சூழ்நிலை கைதி ஆகி விட்டேன்... கொஞ்சம் தடுமாறினாலும் வேலைக்கு ஆப்பு வைத்து விடுவார்கள்.🤔

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் தொடர்கின்றோம்....."ராசுக்குட்டியின் மனைவி மறுமணம் செய்கிறாவா இல்லையா" இதுதான் இப்ப எனது பிரச்சினை.......!   😂

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களுக்கு அங்கங்கே பிரச்சினை. இவருக்கு அங்கேயே பிரச்சினை. 

எனக்கு தெரிந்த அண்ணர் ஒருத்தர் கொலண்டில் இருக்கிறார். அவர்களுக்கும் இப்படி இதோ ஆள் முடிஞ்சுது என்று இங்கிருந்து எல்லாம் எல்லோரும் ஓடிப்போனார்கள். 10 வருசமாச்சு. அந்நாள் இப்பவும் அந்த மாதிரி இருக்கு.

தொடருங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

அவ்வளவு தான் ராசுக்குட்டி ஆடிப் போயிட்டார். அவர் மனக் கண் முன் மனைவியும் பிள்ளைகளும் பரதேசி கோலத்தில் நிற்பது போலவும்,

அப்பாக்களுக்கு தான் இறக்கப் போகிறேன் என்பதை விட குடும்பம் நடுத்தெருவுக்கு வந்திடுமே என்று தான் கவலைப்படுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ராசுக்குட்டிக்கு வந்த சோதனை!!!!    Infection ஆக இருக்கும் அல்லது எதுவும் இல்லை என்பார்கள். 
 
அற்ககோலை கொஞ்ச நாளைக்கு  விடுங்கள். செவ்விளநீர் குடியுங்கள். எல்லாம் சரியாகி விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

ராசுக்குட்டிக்கு நல்ல ரிசல்ட் வர வேண்டுமென மனதார வேண்டுகிறேன். தொடருங்கள் நிழலி.

  • கருத்துக்கள உறவுகள்

10 நிமிடங்களில் அதன் ரிசல்ட்ஸ் வந்தது.  

 

தொடருங்கோ   

  • தொடங்கியவர்

பின்னூட்டம் இட்டும் பச்சைப் புள்ளிகள் தந்தும் ஊக்குவிக்கும் அனைத்து உறவுகளுக்கும் நன்றி.

ராசுக்குட்டி பட்டபாடு நாலு ஐந்து பந்திகளில் அடக்க முடியாது. இன்னும் வரும்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, நிழலி said:

மனக் கண் முன் மனைவியும் பிள்ளைகளும் பரதேசி கோலத்தில் நிற்பது போலவும், ஹீமோ தெரபி எடுத்து தலை முடி எல்லாம் உதிர்ந்து வயக்கெட்டுப் போய் தான் படுக்கையில் கிடப்பது போலவும், நண்பர்கள் எல்லாம் கண் ஓரத்தில் கண்ணீர் வழிய தான் வளர்த்தப்பட்டு இருக்கும் பெட்டியை சுற்றி ஒரு வட்டம் போட்டு நடப்பது போலவும் காட்சிகள் வழியத் தொடங்கி விட்டன ராசுக்குட்டிக்கு. 

இது தான் பல குடும்பஸ்தர்களிடம் இருக்கும் பெரிய பயம். சாதுவாக தோள் மூட்டில் அல்லது இடப்பக்கம் ஏதாவது சுளுக்கு ,வலிகள்,நோவுகள் வந்தால் சிந்தனைகள் மனைவி பிள்ளைகளை நோக்கியே இருக்கும். கற்பனைகள் யமலோகம் வரைக்கும் சென்று விடும். மரணம் என்பது மனிதனுக்கு நிச்சயிக்கப்பட்ட ஒன்றுதான். ஆனால்  கடமைகள் முடிந்த பின் மரணத்தை நான் வரவேற்பேன்.

ஒரு சிறிய செய்தி. பீற்றூட் கறி சாப்பிட்டவர்கள் ஐயோ யூரினிலை இரத்தம் என அலறியடித்துக்கொண்டு அவசர சிகிச்சை நிலையங்களுக்கு  ஓடியவர்களும் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

இது தான் பல குடும்பஸ்தர்களிடம் இருக்கும் பெரிய பயம். சாதுவாக தோள் மூட்டில் அல்லது இடப்பக்கம் ஏதாவது சுளுக்கு ,வலிகள்,நோவுகள் வந்தால் சிந்தனைகள் மனைவி பிள்ளைகளை நோக்கியே இருக்கும். கற்பனைகள் யமலோகம் வரைக்கும் சென்று விடும். மரணம் என்பது மனிதனுக்கு நிச்சயிக்கப்பட்ட ஒன்றுதான். ஆனால்  கடமைகள் முடிந்த பின் மரணத்தை நான் வரவேற்பேன்.

ஒரு சிறிய செய்தி. பீற்றூட் கறி சாப்பிட்டவர்கள் ஐயோ யூரினிலை இரத்தம் என அலறியடித்துக்கொண்டு அவசர சிகிச்சை நிலையங்களுக்கு  ஓடியவர்களும் உண்டு.

நான்பீற்றூட் சாப்பிட்டாலும் இப்படி வரலாம் என்று சொல்ல நினைத்தேன் தாத்தா.. பின் ஏன் என்று விட்டுட்டேன்.போக போக பார்க்கலாம்.. 

Edited by யாயினி

  • தொடங்கியவர்

பகுதி 2:

 

சிறு நீர் தொற்று என்று தான் முடிவு வரும், டொக்டர் அன்ரி பயோடிக் பத்து தருவார், அதை தவறாமல் எடுப்பன், பார்மசியில் மருந்து தரும் போது வார இறுதியில் பிரண்டி அடிச்சால் அன்ரி பயோடிக் பிரச்சனை கொடுக்குமா என்றும் கேட்க வேண்டும், பத்து நாட்களில் எல்லாம் சரியாகி விடும், மீண்டும் கும்மாளம் அடிக்கலாம் என்று மனக்கணக்குகள் நிறைய போட்டு கொண்டு "ரிசட்ல் என்ன டொக்டர்" என்று ராசுக்குட்டி கேட்டார்.

"ஒரு தொற்றும் இல்லை... எல்லாம் கிளியராக இருக்கு" என்று டொக்டர் கொஞ்சம் யோசனையுடன் சொல்ல ராசுக்குட்டி மீண்டும் சுருண்டு போனார். தொற்று என்றால் சிம்பிளா எல்லாம் முடிஞ்சிடும், பெரிய பிரச்சனை ஒன்றும் இல்லை என்று நிம்மதியாக இருக்கலாம் என்ற எண்ணமும் தவிடு பொடியாகி விட்டது.

ஒருவேளை உந்த கிளினிக்கில் உடனே செக் பண்ணி சொல்வது பிழையாகுமோ தெரியாது என்று விட்டு, "அப்ப ஏன் டொக்டர் அப்படி வந்தது " என்று கேட்க," எதுக்கும் ஒருக்கால்  இதற்கென்று இருக்கும் ஒரு Lab இற்கு போய் Urinalysis எனும் இன்னும் கொஞ்சம் ஆழமான செக்கப் ஒன்று செய்து பார்ப்பம் சொல்லி ஒரு சீட்டில் எழுதி தர அடுத்த நாளே காலைமை எழும்பி lab இற்கு ஓடிப் போய் - 12 மணித்தியாலம் எதுவும் சாப்பிடாமல் போய்- எடுத்து கொடுக்க, ரிசல்ட்ஸ் வர நாலு நாளாகும். கொரனா காலம் என்பதால் இன்னும் கொஞ்ச நாட்கள் கூட எடுக்கும் என்று சொல்லி அனுப்பி விட்டனர்.

ராசுக்குட்டி தான் ஒரு பெரிய இரும்பு மனிசன், எதுக்கும் கலங்காதவன் என்ற ஒரு பில்டப்பை மனிசிக்கும், பிள்ளைகளுக்கும், நெருங்கிய நண்பர்களுக்கும்  கட்டி வைத்திருந்தவர். (ஆனாலும் மனிசிக்கு தெரியும் இது இரும்பு மனிசன் இல்லை, எல்லாம் சும்மா வெறும் பில்டப்பு  என்று, ஆனாலும் நம்பினமாதிரி பாவனை செய்வதை உண்மை என்று தான் ராசுக்குட்டி நம்பிக் கொண்டு இருந்தவர்.). தான் இப்படி வருத்தத்துக்கு பயந்ததை வெளியே காட்டினால் தான் கட்டின பில்டப்பு உடைந்து விடும் என்று "இது எல்லாம் எனக்கு ஜுஜுப்பி என்ற மாதிரி முகத்தை வைச்சுக் கொண்டு நடந்து திரிந்தாலும் முகம் என்னவோ பேயறைந்த மாதிரி இருந்ததை மனிசி கவனிக்க தவறவில்லை.

இதில வேற "உங்களுக்கு ஒன்றும் இல்லை....சும்மா உந்த கூகிளை பார்த்து பயப்பட வேண்டாம் " என்று மனிசி சொல்லி தன்  பாட்டுக்கு சந்தோசமாக இருந்ததை பார்த்து ராசுக்குட்டிக்கு விசர் ஏறிக் கொண்டு இருந்தது. 

அடுத்த எட்டு நாட்களிலும், ஒவ்வொரு நாளும் கூகிளை நோண்டுவதும் அதில் சொல்லப்பட்டு இருக்கும் அறிகுறிகள் எல்லாம் தனக்கும் இருக்கு என்று கற்பனை பண்ணுவதும், குடும்ப வைத்தியருக்கு போன் அடிப்பதுமாக இருந்தார்.

இரண்டு வகையானவர்கள் உள்ளனர். ஒன்று வைத்தியர் சொல்லுவதைக் கேட்டு பயப்படுகின்றவர்கள். மற்றது, வைத்தியரையே பயப்பட வைப்பவர்கள். இதில் ராசுக்குட்டி இரண்டாம் வகை என்று இவ்வளத்தையும் வாசிக்கும் உங்களுக்கும் புரிந்து இருக்கும். அறப்படிச்ச குணம் உள்ளவர்ளுக்கு வைத்தியம் பார்க்கும் வைத்தியர்கள் ஒரு வகையில் பாவம் செய்வதர்கள் போலும்.

சரியாக எட்டாவது நாள், குடும்ப வைத்தியர் தொலைபேசியில் அழைத்து Urinalysis சிலும் ஒன்றும் வரவில்லை...எல்லாம் சரியாக இருக்குது என்று சொல்ல, "இனி என்ன செய்வது டொக்டர்... ஏன் அப்ப அண்டைக்கு இரத்தம் வந்தது " என்று குடல் உடைந்து கேட்க வைத்தியரும் "ஒரு ஸ்பெசலிஸ்ட் இடம் உன்னை அனுப்புறன், அவர் இன்னும் கொஞ்சம் அதிகமாக டெஸ்ட் செய்யச் சொல்லுவார்" என்று அனுப்பி வைத்தார். அப்பொயிண்ட்மெண்ட் உடனே கிடைக்குமா டொக்டர் என்று கேட்க.. "இல்லை நாளேடுக்கும்... உன்னை மாதிரி கனக்க பேர் காத்திருப்பர் என்பதால் மூன்று மாதமாவது எடுக்கும்" என்று சொல்ல ராசுக்குட்டி மனசுக்குள் போட்ட சின்ன அலறலை அவர் கவனிக்கவில்லை.

உந்த கனடவில் எல்லாத்துக்கு லைனில் தான் நிற்க வேண்டும். ஜஸ்ரின் ருடோவாக இருந்தாலும் சரி, ராசுக்குட்டியாக இருந்தாலும் சரி, வரிசையில் தான் நிற்க வேண்டும். ஊரில் என்றால் காசு கூடக் கொடுத்து உடனே எல்லா பரிசோசதனைகளையும் செய்து பார்க்கலாம்...ஆனால் கனடாவில் நாளெடுக்கும். ராசுக்குட்டியின் நேரம் கொரனா காலமாக வந்து சேர்ந்ததால் காத்திருப்பு நீளுமோ என்று பயந்து போயிருக்கும் போது மூன்றாம் நாளே ஸ்பெசலிஸ்ட் இடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. 

"முதலில் அல்ரா சவுண்ட் எடுத்துப் பார்ப்பம். சிறு நீரகத்தில் கல் என்றால் அது காட்டிக் கொடுக்கும். அனேகமாக உனக்கு அதுதான் பிரச்சனை என்று சந்தேகின்றேன் என்று கூறி மூன்று நாட்களில் அல்றா சவுண்ட் இற்கு அனுப்பி வைத்தார்.

இக்காலப்பகுதியில் கொரனா கூத்துக்காட்டிக் கொண்டு இருந்தது. ஒவ்வொரு Lab உம் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வைத்து இருந்தனர். ராசுக்குட்டி மூன்றாம் நாள் உள்ளே போகும் போது அங்கிருந்தவர்கள் உடல் முழுதும் மூடிய ஆடையுடன் இருந்ததை பார்த்து லைட்டாக பயந்து விட்டார். அந்தப் பயத்தில் அரண்டு இருந்தவர். அவர்கள் அவரை மேலாடையை மட்டும் கழட்டி படுங்கோ என்று சொல்லியதை சரியாக காதில் வாங்காமல், முழு ஆடைகளையும் களைந்து விட்டு படுத்துக் கிடக்க, வந்த நேர்ஸ் தன் தலையில் அடித்து, உன்னை கீழே கழட்ட சொல்லவில்லையே என்று அலுத்துக் கொண்டு கீழாடையை போடச் சொன்னார்.

பாவம் மனுசி ஆர் முகத்தில் அன்று முழிச்சதோ தெரியவில்லை.

- தொடரும்;


 

  • கருத்துக்கள உறவுகள்

பகுதி இரண்டு ஏற்கனவே  உள்ளதை மாத்தி எழுதி உள்ளதை போல் ஒரு நெருடல் .

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, நிழலி said:

 அவர்கள் அவரை மேலாடையை மட்டும் கழட்டி படுங்கோ என்று சொல்லியதை சரியாக காதில் வாங்காமல், முழு ஆடைகளையும் களைந்து விட்டு படுத்துக் கிடக்க, வந்த நேர்ஸ் தன் தலையில் அடித்து, உன்னை கீழே கழட்ட சொல்லவில்லையே என்று அலுத்துக் கொண்டு கீழாடையை போடச் சொன்னார்.

பாவம் மனுசி ஆர் முகத்தில் அன்று முழிச்சதோ தெரியவில்லை.

ராசுக் குட்டிக்கு... தன்ரை, தம்பியை... ஊர் முழுக்க காட்ட வேண்டும் என்று, ஆசை வந்திட்டுது போலை கிடக்கு. 😁

பாவம்... நேர்ஸ்.... அதைப் பார்த்து  சரியாய் பயந்து போயிருக்கும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

அனேகமாக ஒன்றில் போட்டுக் கொள்வது அல்லது கழட்டுவது இது இரண்டும் கண்டிப்பாக இவரது எழுத்துகளில் எப்போதும் வந்து விடும்..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

பாவம் மனுசி ஆர் முகத்தில் அன்று முழிச்சதோ தெரியவில்லை.

நேர்ஸ் (மனசுக்குள் இத்துணூண்டை வச்சுக்கொண்டு இவன் பண்ணுற அலப்பறை இருக்கே)😄

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

அவர்கள் அவரை மேலாடையை மட்டும் கழட்டி படுங்கோ என்று சொல்லியதை சரியாக காதில் வாங்காமல், முழு ஆடைகளையும் களைந்து விட்டு படுத்துக் கிடக்க, வந்த நேர்ஸ் தன் தலையில் அடித்து, உன்னை கீழே கழட்ட சொல்லவில்லையே என்று அலுத்துக் கொண்டு கீழாடையை போடச் சொன்னார்.

பாவம் மனுசி ஆர் முகத்தில் அன்று முழிச்சதோ தெரியவில்லை.

- தொடரும்;


 

இது கொஞ்சம் ஓவர், இப்படி நடத்திருக்க வாய்ப்பில்லை😄

  • கருத்துக்கள உறவுகள்

வெட்டுக்கிளி ராசுக்குட்டிக்கு கதைக்கா.. பஞ்சம் நல்ல இலகுவான எழுத்து நடை. கொஞ்சம் எழுத்துப பார்த்து பொறாமையாகவும் இருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

ராசுக் குட்டிக்கு... தன்ரை, தம்பியை... ஊர் முழுக்க காட்ட வேண்டும் என்று, ஆசை வந்திட்டுது போலை கிடக்கு. 😁

பாவம்... நேர்ஸ்.... அதைப் பார்த்து  சரியாய் பயந்து போயிருக்கும். 🤣

சிறிதம்பி! உந்தவிசயத்திலை ஈழப்பிரியனையும்  என்னையும் கேட்டால் இன்னும் கனக்க சொல்லுவம். ஏனெண்டால் நாங்கள்  கடவுளையே பாத்திட்டு வந்த ஆக்கள்.
தம்பிக்கு பக்கத்தாலை  ஓட்டை போட்டு கடவுளின் அழகையே பார்தவர்கள்.😁

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

இக்காலப்பகுதியில் கொரனா கூத்துக்காட்டிக் கொண்டு இருந்தது. ஒவ்வொரு Lab உம் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வைத்து இருந்தனர். ராசுக்குட்டி மூன்றாம் நாள் உள்ளே போகும் போது அங்கிருந்தவர்கள் உடல் முழுதும் மூடிய ஆடையுடன் இருந்ததை பார்த்து லைட்டாக பயந்து விட்டார். அந்தப் பயத்தில் அரண்டு இருந்தவர். அவர்கள் அவரை மேலாடையை மட்டும் கழட்டி படுங்கோ என்று சொல்லியதை சரியாக காதில் வாங்காமல், முழு ஆடைகளையும் களைந்து விட்டு படுத்துக் கிடக்க, வந்த நேர்ஸ் தன் தலையில் அடித்து, உன்னை கீழே கழட்ட சொல்லவில்லையே என்று அலுத்துக் கொண்டு கீழாடையை போடச் சொன்னார்.

எந்த வைத்தியசாலை என்றாலும் பின் பூட்டுள்ள மாற்று உடை கொடுத்தே போட்டிருக்கும் உடுப்பைக் கழட்டச் சொல்வார்கள்.ராசுக்குட்டி சொல்ல முதலே கழட்டிப் போட்டுது.
 

15 minutes ago, குமாரசாமி said:

சிறிதம்பி! உந்தவிசயத்திலை ஈழப்பிரியனையும்  என்னையும் கேட்டால் இன்னும் கனக்க சொல்லுவம். ஏனெண்டால் நாங்கள்  கடவுளையே பாத்திட்டு வந்த ஆக்கள்.
தம்பிக்கு பக்கத்தாலை  ஓட்டை போட்டு கடவுளின் அழகையே பார்தவர்கள்.😁

சவரக்கத்தியுடன் வந்து நிற்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

எந்த வைத்தியசாலை என்றாலும் பின் பூட்டுள்ள மாற்று உடை கொடுத்தே போட்டிருக்கும் உடுப்பைக் கழட்டச் சொல்வார்கள்.ராசுக்குட்டி சொல்ல முதலே கழட்டிப் போட்டுது.
 

ஒரு ஆர்வக்கோளாறு தான் , ரிசல்ட்டுக்கு 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சாதாரணனுக்குத் தலையிடி வந்தால்....ஒரு பனடோலோடை....அலுவல் முடிஞ்சிரும்!

ஒரு வைத்தியருக்குத் தலையிடி வந்தால்....அப்ப்டியிருக்குமோ அல்லது இப்படியிருக்குமோ எண்டு ..வாரக் கணக்கில  ஆய்வு ஓடும்!

ஊரில் ஒரு வயதானவர் குந்தியிருந்து சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தார்! ஒரு அரை மணித்தியாலமாய்..இருந்த இடத்திலிருந்து எழுந்திருக்கவில்லை! அவருக்கு புறஸ்ரேற்  ஆக இருக்கலாம் என்பது என்பது அனுமானமாக இருந்தது!

அவரிடம் கேட்டேன்! தம்பி கொஞ்சம் சூடு போலக் கிடக்குது! பின்னேரன் கொஞ்சம் பனங் கள்ளடிக்க எல்லாம் சரியாகி விடும்!

ஏனோ இந்தக் கதையை வாசித்த போது...அந்த வயதானவர்....மீண்டும் நினைவில் வந்து போகின்றார்!

தொடருங்கள்,நிழலி..!

  • கருத்துக்கள உறவுகள்

ஊருல சலக்கடுப்பு , உச்சா ,போகும் எரியுது என்றால் கிழவிகள் சொல்லுவார்கள் போய் ஆத்துல நல்லா குளி மணிக்கணக்கில்  அதுக்க்கு பிறகு ஒன்றும் செய்யாது என்று  ஆனால் இப்ப ஒரு சின்ன வருத்தம் வந்தாலும் வரும் மரண பயத்தால் ஆயிரம் வைத்தியருட்ட காட்டி செக் பண்ண வேண்டி இருக்கும் அப்படி காட்டியும் திருப்தி என்பது மனதிற்கு வரவே வராது சிலரின் அனுபவத்தை வைத்து சொல்கிறேன் 

6 hours ago, நந்தன் said:

நேர்ஸ் (மனசுக்குள் இத்துணூண்டை வச்சுக்கொண்டு இவன் பண்ணுற அலப்பறை இருக்கே)😄

விபரமா எழுதுனா நாங்களும் தெரிஞ்சிக்குவமே 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நண்பருக்கு மூலம் தள்ளி வரும் வருத்தம். அவருக்கு அன்று ஏலாமல் போய் விட்டது. வைத்தியரிடம் போக வெட்கம்.அதனால் மனைவியிடம் உனக்கு வருத்தம் என்று சொல்லி மருந்து வாங்கி வா என்று அனுப்பிவிட்டார். அவாவும் இன்னொரு பிள்ளையை(பாஷை கதைப்பதற்கு) கூட்டிக்கொண்டு அங்கு போனார்.உள்ளே போனதும் வைத்தியர் (அவர் ஒரு பெண்) எல்லாம் விசாரித்து விட்டு "நீ பயப்பிடாதை, தேவையென்றால் ஒரு சின்ன சாத்திரசிகிச்சையில் குணமாக்கி விடலாம் என்று விளங்கப்படுத்தி விட்டு, இவவை பெட்டில் படுக்க சொல்லி விட்டு தன் கையில் கிளவ்சை போட்டுகொண்டு பிள்ளையை வெளியே போய் இருக்க சொன்னார். பிறகு அவர் பரிசோதித்து விட்டு அவர்களிடம் எல்லாம் சரியாகத்தான் இருக்கு மறுபடி இப்படி வந்தால் வாங்கோ என்று சொல்லி சில மருந்துகள் எழுதிக் கொடுத்து அனுப்பி விட்டார். அவர்கள் வீட்டுக்கு வந்து அன்றைய பெண்களின்  மீட்டிங்கில் சொல்லி சொல்லி சிரித்தார்கள்......!  😁

 

மேலும் ஒரு அனுபவம் பிறகு.....!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.