Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறக்க முடியாத... இலங்கை, இனிப்புகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொம்மை விசுக்கோத்து..👌

b70e49_2b2a0e89471b4ec0944dee650043a68e~

  • Replies 130
  • Views 16.4k
  • Created
  • Last Reply

எனக்கு பிடிச்ச குளுக்கரசா, தும்பு முட்டாய், நைஸ் என்று எல்லாவற்றையும் ஏனையவர்கள் சொல்லி விட்டீர்கள் - ஒன்றைத் தவிர என்று நினைக்கின்றேன். 

அது ஸ்ரார் ரொபி. 

குருணாகலில் இருக்கும் போது வீட்டின் காணியின் முடிவில் இருக்கும் ஒரு சிங்கள மொழி பேசும் பர்கர் இன பெண்மணியின் கடை இருந்தது. மாலு பாண் இல் இருந்து எல்லா வகையான சிற்றுண்டிகள். மற்றும் டொபிகள் விற்பார். அவர் கடையில் அனேகமாக ஒவ்வொரு நாளும் வாங்கி சாப்பிட்டு வள்ர்ந்த உடம்பு இது.

காணொளி சிங்களத்தில் உள்ளது. அதன் இறுதியில் ஸ்ரார் டொபியை காட்டுவார்கள்.

Edited by நிழலி
காணொளி இரு தடவை பதிந்து விட்டது

இதே போன்று முந்திரிப் பருப்பு போட்ட கண்டோஸ் சொக்கலேட் இனையும் மறக்க ஏலாது. இங்கு வந்த பின் லின்ட் போன்ற சொக்கலேட் கள் வாங்கி சாப்பிட்டாலும் இந்த சொக்கலேட் இன் சுவையை விட அவை சுவை குறைந்தவையாகவே தெரியும். ஒவ்வொரு முறையும் ஊருக்கு போகும் போது மறக்காமல் வாங்கிச் சாப்பிடுவது இது.

1559102092CashewM.png

80 களின் முடிவிலும் 90 களின் ஆரம்பத்திலும் நான் க.பொ.த சாதாரண பரீட்சை செய்த காலத்திலும் ஊரில் திடீர் என்று பிரபலமான ஜூஸ் பக்கற்றுகளையும் மறக்க முடியாது. நல்ல வெயில் காலத்தில் பாண்டியந்தாழ்வு பேக்கரியிலும் நவரட்ணம் கடையிலும் அன்னாசி ஜூஸ் இனை சின்ன பைக்கற்றுக்குள் ஊற்றி Freeze  பண்ணி விற்பார்கள். அதை வாங்கி சைக்கிளை மிதிச்சுக் கொண்டு வரும் போது ஒரு கையில் இது எப்பவும் இருக்கும்.

இங்கு இதை Popsicle bag என்ற பெயரில் விற்கின்றார்கள். வாங்கி குளிர்சாதனப் பெட்டியின் Freezer இல் வைத்து பிள்ளைகள் குடிப்பர். இங்கு அனேகமானவை செயற்கை சுவையூட்டிகள் (Artificial flavor) போட்டு வருவதால் கூடியவரைக்கும் பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுப்பது இல்லை.

printed-popsicle-bag-500x500.jpg

  • கருத்துக்கள உறவுகள்

Down Memory Lane: Bulto, Hoonu Beti And Other Sweets From Bygone Days

எள்ளுருண்டை, கச்சான் அல்வா, மற்றும் இந்த சின்ன பிஸ்கட் மேலே பூப்போல் இனிப்பு இருக்கும் இவையெல்லாம் மறக்க முடியுமா........!  😇

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நமக்கு பினாட்டும் பனங்காய் பணியாரமும் தான் மறக்க ஏலாத சிலோன் இனிப்பு...😎

  • கருத்துக்கள உறவுகள்

சைக்கிளுக்குப் பின் பெரிய பெட்டியில் பேக்கறி தயாரிப்புகளை கொன்டு திரிந்து வற்ப்பார்கள்.அதில் சீனி பனிஸ் எனக்கு ரொம்ப பிடித்ததில் ஒன்று.

  • கருத்துக்கள உறவுகள்

கோவில் திருவிழாக்காலங்களில்,,திருவெம்பாவை போன்ற  திருவிழாக்களில் நீண்ட கண்ணாடியால் ஆனா மேசை போன்று ஒன்றினுள் பலவித மான கலர்களில் மிக்ச்சர் போன்று இருக்கும் ஆனால் இனிப்பாக இருக்கும் ,,பல நிறங்களில் சிறு சிறு பெட்டிக்குள் வைத்திருப்பார்கள்,,அத்துடன் தொதலும் இருக்கும் ,இரண்டு ரூபா கொடுத்தா எல்லாத்துலயும் கொஞ்சம் கொஞ்சம் போட்டு தருவார்
ஆனால் மிக்ச்சர் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

அது ஸ்ரார் ரொபி. 

சிவப்பு உறையில் சுற்றி வருவது  பால் சுவையிலும் வெள்ளை உறையில் சுற்றி வருவது  தோடம்பழ சுவையிலும் இருக்கும். ஆகா  நினைத்தாலே நாவூறுகிறது!

அத்துடன் மில்க் டொபீ, புளுட்டோ போல tissue பேப்பரில் சுற்றி வரும் எள்ளுப்பா toffee, இப்படி பல!!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அன்புத்தம்பி said:

கோவில் திருவிழாக்காலங்களில்,,திருவெம்பாவை போன்ற  திருவிழாக்களில் நீண்ட கண்ணாடியால் ஆனா மேசை போன்று ஒன்றினுள் பலவித மான கலர்களில் மிக்ச்சர் போன்று இருக்கும் ஆனால் இனிப்பாக இருக்கும் ,,பல நிறங்களில் சிறு சிறு பெட்டிக்குள் வைத்திருப்பார்கள்,,அத்துடன் தொதலும் இருக்கும் ,இரண்டு ரூபா கொடுத்தா எல்லாத்துலயும் கொஞ்சம் கொஞ்சம் போட்டு தருவார்
ஆனால் மிக்ச்சர் இல்லை

அது பூந்தி

1 hour ago, சுவைப்பிரியன் said:

சைக்கிளுக்குப் பின் பெரிய பெட்டியில் பேக்கறி தயாரிப்புகளை கொன்டு திரிந்து வற்ப்பார்கள்.அதில் சீனி பனிஸ் எனக்கு ரொம்ப பிடித்ததில் ஒன்று.

இங்கும் மாதத்தில் ஒரு தரமாவது சீனி பணிஸ் அல்லது சங்கிலி பணிஸ் வாங்கி சாப்பிடுவதுண்டு. ஸ்கார்புரோவில் குவாலிட்டி பேக்கரி என்று ஒரு பிரபலமான தமிழ் ஆட்களின் பேக்கரி இருக்கு. அங்கு ஊரில் சாப்பிட்ட எல்லவிதமான பணிஸ்களும் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

புளூட்டோ ரொபியை .... நான் வாங்கி சாப்பிட்ட காலங்களில், பத்து சதம்.
அதன் லேபிளில்... "குணசேன" என்று சிங்களப்  பெயர்,  இருந்த நினைவு. 

நீங்கள் கூறுவது அளவில் மிகவும் சிறியது. 50 சதத்துக்கு வாங்குவது அளவில் பெரிது.

புளூட்டோ தவிர..

கச்சான் அல்வா, கோக்கனட் ரொபி, மாஸ்மலோ, ஜுஜூபி, கறுவா, பினாட்டு, பெப்பமின்ட், சுவிங்கம், மோல்டீஸ் இப்படி பல... 

  • கருத்துக்கள உறவுகள்

Dodol - Wikiwand

புளூட்டோ ரொபி

Milady Toffees Confectionery candy Daintee Sweets Super Choco mint Soft  Centers | eBay

மைலேடி ரொபி. 

Daintee Limited - Leading Confectionery Company in Sri Lanka, Top Ranked  Food Company in Sri Lanka, Number one Sweets & Toffee Company in Sri Lanka 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, புங்கையூரன் said:

எல்லாரும் எனக்குத் தெரிஞ்ச எல்லா இனிப்புக்களையும் எழுதிப் போட்டினம்!

கடைசியா ஒண்டை மட்டும் எனக்காக விட்டு வைச்சிருக்கினம் போல கிடக்குது!

அது தான் பாம்பு இனிப்பு!

யாருக்காவது நினைவிருக்குதோ? 

ஒரு உலக்கையில ஒட்டியிருக்கும்! அதை இழுத்து...இழுத்துத் ( விலைக்கேற்ப) தருவார்கள்!
அனேகமாகத் திருவிழாக்காலங்களில், எமது ஊருக்கு இதுவும் வரும்!

இல்லை அதையும் ஏற்கனவே சுவியண்ணா இணைச்சு போட்டார், பாவம் புங்கையண்ணா நீங்கள்😛 .  

Can you explain your childhood memory of Javvu Mittai/Bombay Mittai? - Quora

எனக்கு சுவியண்ணா இந்த இனிப்பை இணத்தபோது சிரிப்பு வந்ததுக்கு காரணம்  விபரம் அறியா அந்தநாட்களில் இந்த இனிப்பின் பள பளப்பையும் நிறத்தையும் பார்த்து ஆசைப்படாத சிறுவர்களே இருக்க முடியாது, இதை விற்கும் பெரியவர் கையில் ஒட்டாமலிருக்க எச்சியை தொட்டு நீவி நீவி இழுத்து பிச்சு தருவார், இப்போ இப்படி யாரும் செய்தால் சுகாதாரதுறைக்கு அறிவிப்போம், அல்லது ஓரமா போய் நிண்டு வாந்தி எடுப்போம்.

வருமான ஏற்ற தாழ்வைகொண்ட எமது இன மாணவர்கள் மத்தியில் என்போன்ற ஏழை மாணவர்களுக்கு அடிக்கடி வாங்கி சுவைக்ககூடியதாகவிருந்தது உடையார் இணைச்ச பல்லி முட்டாஸ்தான், சுவைத்து கொண்டு போகும்போது முடிவில் சீரகம் இருக்கும்.

இங்கே விடுபட்டு இருந்த ஒன்று மில்க் ரொபி என்று நினைக்கிறேன் ,பள்ளிநாட்களில் இதுவும் பிரபலம்.

download.jpg

அதைவிட பாடசாலை வாயிலில் திருவிழாக்களில்  சைக்கிளில் பூட்டிய பெட்டியிலும் /வானிலும் வைத்து ஐஸ்பழம், ஐஸ் சினோ, ஐஸ் ஷொக்  விற்பார்கள் .

வெயிலுக்கு ஒரு ஐஸ்பழம் அதுவும் அன்னாசி கலந்த ஒன்று குடிச்சால் கண்களிலிருந்து உச்சந்தலைவரை குளிர்ந்துகொண்டு போவது அப்படியே தெரியும். ஐஸ்சினோ ஐஸ் ஷொக் கொஞ்சம் விலைகூடியதா இருந்தாலும் சுவை சொல்லி வேலையே இல்லை. ஆனா ஒண்டு ஐஸ்பழத்தை தவிர மற்ற இரண்டும்  கொஞ்சம் தட்டுப்பட்டாலே மொத்தமா கழண்டு கீழே விழுந்துடும்.

கால ஓட்டத்தில் வெளிநாடு என்று வந்து ஆயிரம் வகையான  சுவையான தரமான விலையுயர்ந்த ஐஸ் வகைகளை சுவைத்தாலும் அந்த பள்ளிகூட வாசலில் வாங்கி சுவைத்த ஐஸ்பழத்தின் சுவையை  நினைவை எந்த காலமும் இவைகளால் நெருங்ககூட முடியாது.

எனக்கென்னவோ இலங்கையில் உள்ள ஐஸ்பழம் ஐஸ்கிறீம் வகைகள், கேக், கண்டோஸ், நெக்ரோ/Portello  போன்றவைதான் இங்குள்ளவற்றவையைவிட சுவை வாய்ந்தவை என்றொரு தோற்றப்பாடு எப்போதும் இருக்கும், 

  • கருத்துக்கள உறவுகள்

இத்தோடு  பள்ளிக்கூட  வாசலில் கடலைக் காரி விற்கும்  நாவல்பழம் ,இலந்தைப்பழம்  அருமையாக பாலைப் பழம்.என்பனவற்றியும் சேர்க்கலாமா?  நாவல் பழம் சாப்பிட்டு  வாயெல்லாம் நாவலாகி  ..ஏச்சு வாங்கியது .. சாப்பிடட பின் நன்றாக நாக்கை கழுவி தப்பித்தவர்களும் உண்டு.  வகுப்பு நேரத்தில்  கள்ள மாங்காய், புளி யங்காய்  புழுக் கொடியல், (விளாம்பழம் அந்த பள்ளிக்கே மணக்கும் ) போன்றவை சாப்பிடட நாட்களும் எனோ ஞாபகத்தில் வந்து போனது .
 
Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

எனக்கென்னவோ இலங்கையில் உள்ள ஐஸ்பழம் ஐஸ்கிறீம் வகைகள், கேக், கண்டோஸ், நெக்ரோ/Portello  போன்றவைதான் இங்குள்ளவற்றவையைவிட சுவை வாய்ந்தவை என்றொரு தோற்றப்பாடு எப்போதும் இருக்கும், 

எனக்கு தெரிந்தவர் ஒருவர் றோஸ் நிற சோடா ஒன்று தான் எப்போதும் கடையில் வாங்குவார். அவர் கோலா வாங்கி நான் கண்டதில்லை. ஒரு நாள் கேட்டேன் உங்களுக்கு இது அவ்வளவு விருப்பமா அவர் சொன்னார் நாங்கள் இலங்கையில் நெக்டோ என்று ஒரு சோடா விரும்பி குடிப்போம் இது கொஞ்சம் நெக்டோ மாதிரி சுவை ஆனால் அது இன்னும் சுவையானது

  • கருத்துக்கள உறவுகள்

கறுவா இனிப்பு எண்டொரு சாமான் யாழ்ப்பாணத்தில முந்தி இருந்தது. சின்ன சின்ன வட்டமா கம்பளிப் பூச்சி சைசில கடும் சிவப்பு நிறத்தில இருக்கும். ஒரு உறைப்புத் தன்மை இருக்கும். 1988 வாக்கில் அம்மா இருக்கும் போது எனக்கும் தங்கச்சிக்கும் வாங்கித் தருவா. அதுக்குப் பிறகு நான் அதை காணக் கிடைக்கேல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

கறுவா இனிப்பு எனக்கும் நினைவு இருக்கு. ஆனால் சுவை மறந்து விட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிலாமதி said:

இத்தோடு  பள்ளிக்கூட  வாசலில் கடலைக் காரி விற்கும்  நாவல்பழம் ,இலந்தைப்பழம்  அருமையாக பாலைப் பழம்.என்பனவற்றியும் சேர்க்கலாமா?  நாவல் பழம் சாப்பிட்டு  வாயெல்லாம் நாவலாகி  ..ஏச்சு வாங்கியது .. சாப்பிடட பின் நன்றாக நாக்கை கழுவி தப்பித்தவர்களும் உண்டு.  வகுப்பு நேரத்தில்  கள்ள மாங்காய், புளி யங்காய்  புழுக் கொடியல், (விளாம்பழம் அந்த பள்ளிக்கே மணக்கும் ) போன்றவை சாப்பிடட நாட்களும் எனோ ஞாபகத்தில் வந்து போனது .
 
இனிப்பு இல்லாவிட்டால் என்ன தின்பண்டம்தானே சேர்க்கலாம். 

எனக்கு பிடித்தது உப்பு நீரில் ஊறவைத்த முழு நெல்லி. இப்பவும் இந்தியன் கடையில் வாங்கி வந்து சாடியில் ஊறவைத்து சாப்பிடுவேன். 

இந்தியன் ஆமி வந்தபின் நிஜாம் பாக்கு, ஏ ஆர் ஆர் பாக்கு எனும் இனிப்பு பாக்குகளும் வந்தன. வீட்டில் வாங்கி தர மாட்டார்கள். ஆனாலும் அண்ணமாரிடம் கெஞ்சினால் ரெண்டு மூண்டு துகள்கள் தருவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கண்டோசையும் மேற் கூறியவற்றுடன் சேர்க்கலாம்.

90227023_2491464844450933_59941316963189

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, வாதவூரான் said:

அது பூந்தி

பூந்தி லட்டு செய்ய பாவிப்பார்கள் ,ஆனால் இது மிக்ஸ்சார் மாதிரி கொஞ்சம் கடினமாக கடிபடும்
பல வர்ணங்களில் இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

இனிப்பு இல்லாவிட்டால் என்ன தின்பண்டம்தானே சேர்க்கலாம். 

எனக்கு பிடித்தது உப்பு நீரில் ஊறவைத்த முழு நெல்லி. இப்பவும் இந்தியன் கடையில் வாங்கி வந்து சாடியில் ஊறவைத்து சாப்பிடுவேன். 

இந்தியன் ஆமி வந்தபின் நிஜாம் பாக்கு, ஏ ஆர் ஆர் பாக்கு எனும் இனிப்பு பாக்குகளும் வந்தன. வீட்டில் வாங்கி தர மாட்டார்கள். ஆனாலும் அண்ணமாரிடம் கெஞ்சினால் ரெண்டு மூண்டு துகள்கள் தருவார்கள்.

எனக்கும் முழுநெல்லி மிகவும் பிடிக்கும்.....இப்போதும் நீண்டதூர கார் பயணங்களில்போது ஒரு நெல்லிக்காயை வாங்கி கொடுப்புக்குள் அதக்கி அத்துடன் 70/80 பாடல்களுடன்  நான்கு ஐந்து மணித்தியாலங்கள் நொன் ஸ்ரொப் ட்ரைவிங்தான்.......!  😂

தோலகட்டி நெல்லிகிரஸ்சும் சுப்பராய் இருக்கும்......!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, அன்புத்தம்பி said:

பூந்தி லட்டு செய்ய பாவிப்பார்கள் ,ஆனால் இது மிக்ஸ்சார் மாதிரி கொஞ்சம் கடினமாக கடிபடும்
பல வர்ணங்களில் இருக்கும்

சிவப்பு கலரில் இருக்குமா? பூந்திக்கும், தேன் குழலுக்கும் இடைப்பட்ட பதத்தில்? சாப்பிட்டால் அரிசி மா டேஸ்ட் அடிக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

எனக்கும் முழுநெல்லி மிகவும் பிடிக்கும்.....இப்போதும் நீண்டதூர கார் பயணங்களில்போது ஒரு நெல்லிக்காயை வாங்கி கொடுப்புக்குள் அதக்கி அத்துடன் 70/80 பாடல்களுடன்  நான்கு ஐந்து மணித்தியாலங்கள் நொன் ஸ்ரொப் ட்ரைவிங்தான்.......!  😂

தோலகட்டி நெல்லிகிரஸ்சும் சுப்பராய் இருக்கும்......!

தோலகட்டி நெல்லி இரசம். இதை சொன்னதும் ஒரு பகிடி நியாபகம் வருகுது.

எனக்கு சின்னனில் ஒரு தொலைகாட்டி வாங்கி விடவேண்டும் என்று ஒரே அவா. ஆனால் விலை அதிகம், ஆகவே திருவிழா, பேர்த்டே என்று வீட்டில் தள்ளி போட்டுகொண்டே வந்தார்கள். 

ஒருநாள் கடையடிக்கு போனால் கரும்பலகையில் சோக்கால் எழுதி வைத்திருந்தனர்

“தொலகட்டி 2 ரூபா, இன்றுமட்டுமே”.

வீட்டை ஓடிப்போய் கெஞ்சினால், நம்பாமல் தாங்களே வந்து விசாரித்தார்கள் -கடைக்காரர் எழுத்துப் பிழை விட்டிருந்தாராம்- 🤣

  • கருத்துக்கள உறவுகள்

பாலர் பாடசாலையில் சத்துணவாக பிஸ்கட் தருவார்கள் அதன் மணம் இன்னும் நினைவிலிருக்கு, அதன் சுவையும் தனி,  நண்பர்கள் அள்ளி தருவார்கள், இரண்டு பொக்கட்டிலும் அடைச்சு கொண்டு வந்து வீட்டில் போத்தலில் சேர்ப்பது ஒரு சந்தோஷம்,

யாரிடமாவது அந்த பிஸ்கட் படங்களிருக்கா.?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.