Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோன தடுப்பூசி- பக்கவிளைவுகள் பற்றிய சொந்த அனுபவங்கள்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மணித்தியாலத்திற்கு முன்...   💉 தடுப்பூசி  போட்டு விட்டேன். 
இன்னும்... ஒரு  அசம்பாவிதமும் நடக்கவில்லை. :)

  • Replies 213
  • Views 21.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கள உறவுகள் தாங்கள் போட்டுக்கொண்ட தடுப்பூசியின் பெயர் மற்றும் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் கள உறவுகள் மற்றும் அவர்கள் உறவினர்களின் சொந்த அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொண்டால் பல்வேறு நாடுகளில் இருக்கும் யாழ்கள வாசகர்களுக்கு உதவியாக இருக்கும்..

* எனது தாயார் வயது அறுபதுக்கு மேல்.. நீரிழிவு நோயாளி.. நேற்றைக்கு முதல் நாள் சீனாவின் சினோபாம் தடுப்பூசி முதலாவது டோஸ் போட்டுக்கொண்டார்.. இன்றுடன் மூன்று நாட்கள் ஆகிவிட்டது.. ஊசி போட்ட அன்று கையில் லேசான வலி இருப்பதாக கூறினார்.. இப்பொழுது அதுவும் இல்லை.. இதைத்தவிர வேறு எந்த மாற்றமும் இல்லை என்று கூறினார்.. இரண்டாவது டோஸ் எப்ப என்பது கோத்தபாயாவுக்குத்தான் வெளிச்சம்.. வடிவேலு சொன்னது போல வரும்போது தருகிறேன் கதைதான்..

* அயல் வீட்டுக்காரர்.. வயது எழுபதுக்கு மேல்.. எனது தாயார் ஊசிபோட்ட அன்றுதான் சினோபாம் தடுப்பூசி போட்டவர்.. அன்று இரவு நெஞ்சு வலி என்று வைத்தியசாலை போய் அடுத்தநாள் வீடு வந்துவிட்டார்.. அநேகமாக பயத்தில் நெஞ்சு வலி வந்திருக்கலாம் என்பது எனது ஊகம்..

* எனது மனைவி கடந்த முதலாம் திகதியும் எனது சகோரன் மூன்றாம் திகதியும் நான் நேத்தைக்கும் பைசர் தடுப்பூசி முதலாவது டோஸ் போட்டுக்கொண்டோம்... ஊசி போட்டு வெளிய வந்து பலமணி நேரமாகியும் ஊசி போட்ட கையில் எந்த நோவும் இல்லை ஆனால் அன்று இரவு கையை அசைக்ககூட முடியவில்லை.. அடுதநாளும் வலி இருந்தது.. தம்பிக்கு மட்டும் ஊசிபோட்ட அன்று லேசான காய்ச்சல் இருந்தது.. மற்றும்படி இதுவரை எந்த வித்தியாசமும் உடலில் இல்லை.. வேலைக்கும் போனோம்..

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

எவருக்கும் பக்க விளைவுகள் இல்லாமல் இருப்பது சந்தோசம் புலவரே.

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் ஊசி போட்டு சில மணி நேரங்கள் கடந்ததாயிற்று..இந்தா நான் யாழில் உட்கார்ந்து இருக்கிறேனே.👋😄 

  • கருத்துக்கள உறவுகள்

நான் மொடேர்னா பெப்ரவரியில் போட்டுக் கொண்டேன். முதல் டோஸ்: கையில் வலி அடுத்த நாள் வந்து 24 மணிநேரத்தில் போய் விட்டது. இரண்டாவது டோஸ்: ஊசி போட்டு சரியாக ஆறு மணிநேரத்தில் லேசான காய்ச்சல், உடல் முழுவதும் வலி, இரவு தூக்கமின்மை, தலைவலி என்பவற்றுடன் பக்க விளைவு வந்தது. ஊசி போட்டதில் இருந்து 36 மணி நேரத்தில் ஒரு சுவிட்சைத் தட்டி விட்டது மாதிரி எல்லா உபாதைகளும் மறைந்தன. 

  • கருத்துக்கள உறவுகள்
On 05/06/2021 at 22:06, Justin said:

இன்றைய அளவில்  ஏன் இந்த ஊசியை போட்டேன் என்று இருக்கிறது.😌

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

இன்றைய அளவில்  ஏன் இந்த ஊசியை போட்டேன் என்று இருக்கிறது.😌

ஆம், பக்க விளைவுகள் சில பேருக்கு அப்படித் தான் இருக்கும். ஆனால் தடுப்பூசி எடுத்துக் கொண்டோருக்குக் கிடைக்கும் பாதுகாப்பை நினைத்துப் பார்த்தால் பக்க விளைவைத் தாங்கிக் கொள்ளலாம். 48 மணி நேரம் தாண்டி உபாதைகள் இருந்தால் மருத்துவருடன் பேசுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கோசான் யஸ்றின் யாயினி உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.. எதிர்காலத்தில் எதிர்கொள்ளும் விளைவுகளையும் தொடர்ந்து எழுதுங்கள்..

இந்த யாழ்களத்தில் ஊசிபோட்டுக்கொண்டவர்கள் பலர் இருந்தும் மேலே எழுதியவர்களை தவிர வேறு யாருக்கும் நம் தமிழ் சொந்தங்களை தடுப்பூசி பற்றிய நம்பகத்தன்மை வாய்ந்த சொந்த அனுபவங்கள் சென்றுசேர்வதை விரும்பவில்லை போலும்..😢😢

  • கருத்துக்கள உறவுகள்

June 3  ராசவன்னியனின் பதிவில் எழுதிய எனது அனுபவம்

எனக்கும் கையில் போட்ட இடத்தில் லேசான நோ நேற்று இருந்தது. இப்போ லேசாக கூடியது போல் இருக்கிறது
பாலபத்ர ஓணாண்டி, திகதி உங்களுக்கு கிடைத்ததே அதிஷ்டம் பயப்பிடாம போடுங்கோ. எனக்கு 22 திகதி இரண்டாவதுவது தடுப்பூசி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

கோசான் யஸ்றின் யாயினி உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.. எதிர்காலத்தில் எதிர்கொள்ளும் விளைவுகளையும் தொடர்ந்து எழுதுங்கள்..

இந்த யாழ்களத்தில் ஊசிபோட்டுக்கொண்டவர்கள் பலர் இருந்தும் மேலே எழுதியவர்களை தவிர வேறு யாருக்கும் நம் தமிழ் சொந்தங்களை தடுப்பூசி பற்றிய நம்பகத்தன்மை வாய்ந்த சொந்த அனுபவங்கள் சென்றுசேர்வதை விரும்பவில்லை போலும்..😢😢

எனக்கு பக்க விளைவுகள் 14 நாட்களுக்கு பின் கொஞ்சம் கூட இருந்தது. காரணம் நான்  கொரோனாவுக்கு மட்டும் தடுப்பு நிவாரணிகள் பாவிப்பவன் அல்ல. நான் எனக்கு நடப்பதை எழுத அது தமக்கும் நடக்கலாம் என வாசிப்பவர்கள் நினைக்கக்கூடாது என்பதாலேயே பல விடயங்களை தவிர்த்து விட்டேன்.

நான் இந்த ஊசியை எடுப்பதே இல்லை என உறுதியாக இருந்தேன். எங்கள் வீட்டில் அம்மா அப்பா கணவர் என எல்லோரும் போட்டுக் கொண்டார்கள். இரண்டாவது ஊசிக்கு மட்டும் லேசான உடல்வலி இருந்தது. எல்லோரும் பைசர் ஊசிதான் போட்டார்கள். எனக்கு Flu shots எடுத்தாலே நான்கு நாட்களிற்கு உடல்வலி காய்ச்சல் இருக்கும். அதனால் இதை எடுப்பதை தவிர்த்து வந்தேன்.ஆனால் எல்லோரும் வீட்டில் போட்டுக் கொள்ளும்படி கட்டாயப்படுத்தியதால் இரண்டு மாதங்களிற்கு முன் இரண்டு ஊசியும் போட்டு முடித்துவிட்டேன்.அதிசயமாக எனக்கு எந்த மாற்றமும் ஏற்படவில்லை. காய்ச்சலும் வரவில்லை. உடம்பு வலியும் இல்லை. ஆனால் நான் வைத்தியர் சொன்ன அறிவுரையை அப்படியே கடைப்பிடித்தேன். அதாவது ஊசிபோடுவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன் 16 ounce தண்ணி குடிக்கும்படி கூறினார்கள். அதேபோல் ஊசி போட்டபின்னும் அதிகளவான தண்ணி உணவுகளை எடுத்துக் கொள்ளும்படி கூறினார்கள். கூடவே எட்டு மணித்தியாலத்திற்கு பின் ஊசி போட்ட கையை நன்றாக அசைக்கும்படி கூறினார்கள். நான் இவை எல்லாவற்றையும் முறையாக கடைப்பிடித்தேன். மூன்று நாட்கள் என்னால் முடிந்த அளவு தண்ணீர் குடித்தேன்.அதனாலோ என்னவோ எனக்கு எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. கடவுளிற்கு நன்றி. யாருக்காவது இது பயன்படும் என்பதால் இதை பகிர்ந்திருக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 7/6/2021 at 19:01, யாயினி said:

இன்றைய அளவில்  ஏன் இந்த ஊசியை போட்டேன் என்று இருக்கிறது.😌

யாயினியின்... சுகத்தை அறிய, ஆவலாக உள்ளோம்.

சென்ற வெள்ளிக்கிழமை(04.06.21) முதலாவது தடுப்பூசியை (Biontech) போட்டுக் கொண்டேன்.
இரண்டு நாட்கள்... ஊசி குற்றிய  கையில், சாதுவான நோ இருந்தது.
அதன் பின்... ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. 
மனைவிக்கும் அதே போல் இருந்து, பின் வழமைக்கு திரும்பி விட்டது. 

மனைவி... தனது தமிழ்நாட்டு நண்பியிடம்,  தனக்கு கைநோகுது என்று... 
சும்மா கதைக்கும் போது.   சொல்ல,
அன்றுமாலை... இட்டலியும், சட்னியும், சாம்பாரும்  கொண்டு வந்து தந்தார்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

நான் இரண்டு ஊசியும் போட்டு விட்டேன். முதலாவது அஷ்ட்ராசெனிக்கா போட்டவுடன் மூன்றுநாட்கள் காய்ச்சல் மற்றும் தடிமன் இருந்தது வேறு பெரிதாக பக்க விளைவுகள் இல்லை. இதனால் இரண்டாவதும் அஷ்ட்ராசெனிக்கா தான் போட்டார்கள். போட்டுமுடிந்து வந்த உடனேயே பனடோல் ஒன்று போட்டேன்,எந்த பக்கவிளைவும் இல்லை.

நான் Pfizer இன் முதலாவது தடுப்பூசி 3 வாரங்களுக்கு முன்னர் போட்டுக் கொண்டேன். மிக இலேசான - கையை மேலே தூக்கினால் மட்டுமே - வலி இருந்தது. அதுவும் அடுத்த நாள், 24 மணி நேரத்தின் பின்னர் போய் விட்டது. மனைவிக்கு கை வலி மட்டும் இரண்டு நாட்கள் அதிகமாக இருந்து மூன்றாம் நாளில் இருந்து படிப்படியாக போய் விட்டது.

மகன் 15+ வயது - கை நோ மட்டும் 24 மணித்தியாலங்கள் இருந்தது.

எம்மில் எவருக்கும் காச்சலோ அல்லது வேறு எந்த பக்க விளைவுகளோ இருக்கவில்லை. 

அம்மாவுக்கு 75 வயது. கொழும்பில் அஸ்ராசெனிக்கா தடுப்பூசியை மார்ச் மாதம் அளவில் போட்டுக் கொண்டவர். அவருக்கு இலேசான காச்சலும் கை வலியும் இரண்டு நாட்கள் இருந்த  பின் படிப்படியாக போய் விட்டது.

என உறவுகள், நண்பர்கள் மற்றும் சக வேலையாட்கள் எவருக்கும் கை வலியைத் தவிர குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய எந்த பெரிய பின் விளைவுகளும் எதுவும் ஏற்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

கோசான் யஸ்றின் யாயினி உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.. எதிர்காலத்தில் எதிர்கொள்ளும் விளைவுகளையும் தொடர்ந்து எழுதுங்கள்..

இந்த யாழ்களத்தில் ஊசிபோட்டுக்கொண்டவர்கள் பலர் இருந்தும் மேலே எழுதியவர்களை தவிர வேறு யாருக்கும் நம் தமிழ் சொந்தங்களை தடுப்பூசி பற்றிய நம்பகத்தன்மை வாய்ந்த சொந்த அனுபவங்கள் சென்றுசேர்வதை விரும்பவில்லை போலும்..😢😢

11 minutes ago, சுவைப்பிரியன் said:

நன்றி சுவை, ஒன்றாக இணைப்பதற்கு இந்த திரியை நான் தேடிக் கொண்டு இருந்தேன்.

. 1வது ஊசி மெல்லிய கை வலி வீட்டில் தும்பு கட்டையால் வீடு கூட்ட குறைந்து விட்டது.( ஊசி போட்ட உடன் வேலைக்கு செய்பவர்களுக்கு வலி தெரியவில்லை என்றார்கள்.) 

Edited by appan

  • கருத்துக்கள உறவுகள்

பக்க விளைவுகள் ஒவ்வொருத்தருடைய உடல் நிலையையும் பொறுத்ததோ தெரியாது.. எப்படி சொல்வது....அதிக பட்ச உடல் வலி.தலையிடி.காச்சல் என்று வந்தது...

எனக்கு ஏதாவது வருத்தம் வரும் என்று தெரியும் ..ஆனால் இப்படி நிறையவே வரும் என்று தெரியாமல் போயிற்று..

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, யாயினி said:

பக்க விளைவுகள் ஒவ்வொருத்தருடைய உடல் நிலையையும் பொறுத்ததோ தெரியாது.. எப்படி சொல்வது....அதிக பட்ச உடல் வலி.தலையிடி.காச்சல் என்று வந்தது...

எனக்கு ஏதாவது வருத்தம் வரும் என்று தெரியும் ..ஆனால் இப்படி நிறையவே வரும் என்று தெரியாமல் போயிற்று..

யாயினி, எனக்கும் தான். அமெரிக்காவில் "லொறி மோதியது போல இருந்தது (like hit by a truck)" என்று குறிப்பிடுவர்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

எனக்கு பக்க விளைவுகள் 14 நாட்களுக்கு பின் கொஞ்சம் கூட இருந்தது. காரணம் நான்  கொரோனாவுக்கு மட்டும் தடுப்பு நிவாரணிகள் பாவிப்பவன் அல்ல. நான் எனக்கு நடப்பதை எழுத அது தமக்கும் நடக்கலாம் என வாசிப்பவர்கள் நினைக்கக்கூடாது என்பதாலேயே பல விடயங்களை தவிர்த்து விட்டேன்.

சாமிகளே, கேட்கும் கேள்விகளுக்கு 'எனது பதில் சங்கப்படத்தும் அதனால் தவிர்கிறேன்' என்பதை சொல்லிவிட்டு செய்யணும்.. கிணத்துல போட்ட கல்லு மாதிரி கம்முன்னு இருக்கப்படாது..😜

  • கருத்துக்கள உறவுகள்

இன்று நான் இரண்டாவது சினோபார்ம்(ஹயத்) தடுப்பூசி போட்டுக்கொண்டேன்.
தடுப்பூசி போடும் முன், ரத்த அழுத்தத்தையும், இதயத்துடிப்பையும் சோதித்தார்கள்.

இரத்த அழுத்தம் 150, இதயத்துடிப்பு 70 என காட்டியது. 🤔(முதலாவது தடுப்பூசியின்போது இரத்த அழுத்தம் 140, இதயத்துடிப்பு 65 என காட்டியது.)

இன்று ஊசி இரண்டாவது போட்டுக்கொண்ட பின்,  கையை அசைக்கும்போது லேசாக வலி இருக்கிறது. மற்றபடி பக்க விளைவுகள் எதுவும் இதுவரை இல்லை.

கைப்பேசி பயன்பாடுகளில் (அல்கோசன்,யுஏஇ கோவிட்19),  தடுப்பூசி போட்டுக்கொண்டதன் சான்றிதழ்களை அமீரக அரசின் முத்திரையோடு உடனுக்குடன் தரவேற்றம் செய்துகொடுக்கிறார்கள். இதனால் மற்ற அலுவலகங்கள், தொழிற்சாலைகள், பயணங்களுக்கு செல்லும் அனுமதிக்கு இவை உபயோகமாக உள்ளன.

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ராசவன்னியன் said:

இன்று நான் இரண்டாவது சினோபார்ம்(ஹயத்) தடுப்பூசி போட்டுக்கொண்டேன்.
தடுப்பூசி போடும் முன், ரத்த அழுத்ததையும், இதயத்துடிப்பையும் சோதித்தார்கள்.

இரத்த ழுத்தம் 150, இதயத்துடிப்பு 70 என காட்டியது. 🤔(முதலாவது தடுப்பூசியின்போது இரத்த அழுத்தம் 140, இதயத்துடிப்பு 65 என காட்டியது.)

இன்று ஊசி இரண்டாவது போட்டுக்கொண்ட பின்,  கையை அசைக்கும்போது லேசாக வலி இருக்கிறது. மற்றபடி பக்க விளைவுகள் எதுவும் இதுவரை இல்லை.

கைப்பேசி பயன்பாடுகளில் (அல்கோசன்,யுஏஇ கோவிட்19),  தடுப்பூசி போட்டுக்கொண்டதன் சான்றிதழ்களை அமீரக அரசின் முத்திரையோடு உடனுக்குடன் தரவேற்றம் செய்துகொடுக்கிறார்கள். இதனால் மற்ற அலுவலகங்கள், தொழிற்சாலைகள், பயணங்களுக்கு செல்லும் அனுமதிக்கு இவை உபயோகமாக உள்ளன.

இருந்தபோதும்

ஒரு சில  நாட்களுக்கு அவதானமாக  இருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

இருந்தபோதும்

ஒரு சில  நாட்களுக்கு அவதானமாக  இருங்கள்

நிச்சயமாக அவதானமாக இருப்பேன். நன்றி விசு.

ஏனோ தெரியவில்லை, இப்பொழுதெல்லாம் இம்மாதிரி உடல்நிலை பற்றிய கவலைகள் வரும்போது பேரப்பிள்ளைகளை பற்றியே யோசனை வருகிறது. (இதை மனைவியிடமும், பிள்ளைகளிடமும் சொன்னால் கோபப் பார்வை தெரிகிறது.) இது எனக்கு மட்டுமா..? இல்லை, எல்லோருக்கும் அப்படித்தான் தோன்றுகிறதா..? என தெரியவில்லை..! 🤔

  • கருத்துக்கள உறவுகள்

நான் இரண்டு ஊசிகளும் போட்டாயிற்று.. அஸ்ராஸெனிக்காதான்..

முதலாவது..

ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா குருதி உறைவில் பிரச்சினை தரும் என்று சொன்னதும் சிலர் பயந்து அதனைப் போடாமல் no show ஆகியதால் எனக்கு ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி போட வாய்ப்பு கிடைத்தது!

போய்க் குத்திவிட்டு வந்தேன். அன்று ஏதும் செய்யவில்லை. 

அவர்கள் தந்த பிரசுரத்தில் இருந்ததில் side effects இல் ஒன்றிரண்டு அடுத்தநாள் வந்தது.

முதலில் உடல் சில்லென்று சில மணிநேரம் குளிர்ந்த மாதிரி இருந்தது. பின்னர் சாடையாக சூடாகவும் அடிச்சுப் போட்ட மாதிரியும் இருந்தது. ஊசி போட்ட இடத்தில் நோ இருந்தது. ஆனால் 24 மணி நேரத்திலேயே எல்லாம் நோமலாகிவிட்டது!

இரண்டாவது..

முதல் சில நாட்கள் நோவைத் தவிர வேறு எதுவும் இல்லை! 4-5 நாட்களுக்குப் பின்னர் ஒருநாள் (ஞாயிறு விடுமுறை நாளில்) நல்ல தலையிடி.. மூளைக்குள் குருதி உறைந்துவிட்டதா என்று யோசனை வந்தது. ஆனால் ஒரு பரசிற்றமோலுடன் தலையிடியும் போய்விட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ராசவன்னியன் said:

இன்று நான் இரண்டாவது சினோபார்ம்(ஹயத்) தடுப்பூசி போட்டுக்கொண்டேன்.

நீங்கள் இப்போது 3வது  தடுப்பூசி போட்டிருக்கிறீர்கள் முதலில் உங்களுக்கு கோவிட் தொற்று  ஏற்பட்டுவிட்டது. இனி கோவிட் உங்களை நெருங்காது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.