Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘கஞ்சா வளர்ப்போம் – கடன் தொல்லையை தீர்ப்போம்’ என அரசாங்கத்திற்கு டயானா கமகே ஆலோசனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘கஞ்சா வளர்ப்போம் – கடன் தொல்லையை தீர்ப்போம்’என அரசாங்கத்திற்கு டயானா கமகே ஆலோசனை

‘கஞ்சா வளர்ப்போம் – கடன் தொல்லையை தீர்ப்போம்’ என அரசாங்கத்திற்கு டயானா கமகே ஆலோசனை

கஞ்சா செய்கையில் ஈடுபட்டு அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக் கொள்ளத் தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “2025 ஆம் ஆண்டளவில் கஞ்சாவுக்கான உலக சந்தை மதிப்பு $8.6 பில்லியன் முதல் $10.5 பில்லியன் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் பெரும்பாலான மருந்துவ பயிர்களை முறையாக பயிரிட்டு, ஏற்றுமதி செய்து, அந்நியச் செலாவணியைப் பெற முடியும். நாம் சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்ல வேண்டியதில்லை.

யாரிடமும் கடன் வாங்க வேண்டிய அவசியமில்லை. தேயிலை, இறப்பர், தெங்கு போன்றவற்றுக்கு கடந்த காலங்களில் சர்வதேச அரங்கில் காணப்பட்ட கிராக்கி தற்பொழுது கிடையாது.

கஞ்சா செய்கையில் ஈடுபட்டு அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக் கொள்ளத் தேவையில்லை.

இயற்கை வளங்களை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் நாட்டுக்கு பாரிய பொருளாதார நலன்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2021/1250573

  • கருத்துக்கள உறவுகள்

விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் முழிக்கினம். இதில இவா வேற ......

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, satan said:

விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் முழிக்கினம். இதில இவா வேற ......

மாற்றுப் பயிரா பயிரிட சொல்றாவோ என்னவோ?!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தமிழ் சிறி said:

கஞ்சா வளர்ப்போம் – கடன் தொல்லையை தீர்ப்போம்’ என அரசாங்கத்திற்கு டயானா கமகே ஆலோசனை

‘கஞ்சா வளர்ப்போம் – கடன் தொல்லையை தீர்ப்போம்’என அரசாங்கத்திற்கு டயானா கமகே ஆலோசனை

டயானாவுக்கு உடம்பு முழுக்க மூளை...😎

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, குமாரசாமி said:

‘கஞ்சா வளர்ப்போம் – கடன் தொல்லையை தீர்ப்போம்’என அரசாங்கத்திற்கு டயானா கமகே ஆலோசனை

டயானாவுக்கு உடம்பு முழுக்க மூளை...😎

அப்ப  கனக்க மூளை இருக்கும் போல.😄

  • கருத்துக்கள உறவுகள்

அவ சொல்கிற ஆலோசனை உங்களுக்கு இப்ப புரியாது, அது புரிய சில வருடங்கள் எடுக்கும்.....கனடாவுக்கே சமீபத்தில்தான் புரிஞ்சிருக்கு.....அரசாங்கம் சாராயத் தொழிற்சாலையை செய்வதுபோல் கஞ்சா,ஹொக்ரெய்ன், அபின் எல்லாவற்றையும் தயாரிக்கலாம்.....அவற்றில் சொக்கிலேட்டுகள் செய்து உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பும் கொடுத்து சங்கக்கடைகள் மூலம் மக்களுக்கும் விநியோகிக்கலாம்.....தக்கன பிழைக்கும் என்ற விதிக்கேற்ப பலவீனமானவர்கள் பரலோகம் போனாலும் ஆரோக்கியமானவர்கள் மட்டும் நாட்டில் வாழ்வார்கள்......காடு போல ......!  🤔

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் கஞ்சாவை சட்ட ரீதியில் பயிரிட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டம் அவர்களிடம் ஏற்கனவேயுண்டு. மிக  விரைவில் அது சட்டமாக்கப்படலாம். 

அதற்கான முன்னோட்டம்தான் இது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

10 minutes ago, Kapithan said:

இலங்கையில் கஞ்சாவை சட்ட ரீதியில் பயிரிட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டம் அவர்களிடம் ஏற்கனவேயுண்டு. மிக  விரைவில் அது சட்டமாக்கப்படலாம். 

அதற்கான முன்னோட்டம்தான் இது.

ஆப்கானிஸ்தானை வெல்ல முடியுமோ?

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு நல்ல யோசனை தான். இலங்கை மொனராகலை, தனமல்வில எனும் இடத்தில் வளரும் கஞ்சா செடி உலக தரம் வாய்ந்தது( சிலோன் தேயிலை போல்),  பல்கலைகழகத்தில் படிக்கும் போது சுகர்ந்த அனுபவம்  உண்டு. அநேக  மேற்குலக நாடுகள் கஞ்சா பாவனையை சட்ட பூர்வமாக ஆக்கி உள்ளார்கள், அவர்களுக்கு ஏற்றுமதி செய்து அந்நிய செலாவணியை பெறமுடியும்.

24 minutes ago, ஏராளன் said:

ஆப்கானிஸ்தானை வெல்ல முடியுமோ?

ஆப்கானிஸ்தானில் விளைவது அபின் , அது ஒரு தடை செய்யப்பட்ட போதைப் பொருள் ஆகும் 
 
Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, zuma said:

இது ஒரு நல்ல யோசனை தான். இலங்கை மொனராகலை, தனமல்வில எனும் இடத்தில் வளரும் கஞ்சா செடி உலக தரம் வாய்ந்தது( சிலோன் தேயிலை போல்),  பல்கலைகழகத்தில் படிக்கும் போது சுகர்ந்த அனுபவம்  உண்டு. அநேக  மேற்குலக நாடுகள் கஞ்சா பாவனையை சட்ட பூர்வமாக ஆக்கி உள்ளது, அவர்களுக்கு ஏற்றுமதி செய்து அந்நிய செலாவணியை பெறமுடியும்.

ஆப்கானிஸ்தானில் விளைவது அபின் , அது ஒரு தடை செய்யப்பட்ட போதைப் பொருள் ஆகும் 
 
கஞ்சா தடை செய்யப்பட்ட போதைப் பொருள் இல்லையோ?!🤔
காவல்துறை ஏன் கைது செய்கிறது?🤭

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

கஞ்சா தடை செய்யப்பட்ட போதைப் பொருள் இல்லையோ?!🤔
காவல்துறை ஏன் கைது செய்கிறது?🤭

இலங்கையில் கஞ்சா ஆங்கிலேயர் காலத்தில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளது, ஆனால் ஆங்கிலேயர்கள் தமது நாடுகளில் தடை யை நீக்கி உள்ளார்கள். 

12 minutes ago, ஏராளன் said:

கஞ்சா தடை செய்யப்பட்ட போதைப் பொருள் இல்லையோ?!🤔
காவல்துறை ஏன் கைது செய்கிறது?🤭

இலங்கையில் கஞ்சா தடை செய்யப்பட்ட பயிர் என்பதால் கைது செய்கின்றார்கள். கனடாவில் இப்படித்தான் இருந்தது. ஆனால் தடையை நீக்கி சட்டபூர்வமாக்கி இப்பொழுது மதுக்கடைகள் போன்று பல இடங்களில் விற்கின்றார்கள். எதிர்காலத்தில் மது அருந்துவதைப் போன்று கஞ்சா அடிப்பதும் சாதாரணமான விடயமாகி விடும். 
அல்கஹோலால் உடலுக்கு நேரும் தீமையை விட கஞ்சாவினால் ஏற்படும் தீமைகள் குறைவு என்று சொல்கின்றனர். அத்துடன், மது அருந்தியவர்களால் இழைக்கப்படும் வன்முறைகள் மற்றும் பாலியல் அத்துமீறல்களை விட கஞ்சாவினால் குறைவு என்றும் சொல்கின்றனர். கஞ்சாவையும் அபின் போன்ற மோசமான போதைப் பொருட்களையும் ஒரே தராசில் வைத்து பார்க்க கூடாதாம்.

எனக்கு தனிப்பட்ட ரீதியில் கஞ்சாவை சட்டபூர்வமாக்கியதில் உடன்பாடில்லை. தற்போதைய லிபரல் அரசு மீதும் ருடோ மீதும் வெறுப்பு வரவழைத்ததில் கஞ்சாவை சட்டபூர்வமாக்கியது தான் முதன்மை காரணம் (ஆனால் இப்படி சட்டபூர்வமாக்கும் வேலையை முதலில் தொடங்கியது இன்றைய எதிர்க்கட்சியான கொன்சர்வேட்டிவ்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, நிழலி said:

அல்கஹோலால் உடலுக்கு நேரும் தீமையை விட கஞ்சாவினால் ஏற்படும் தீமைகள் குறைவு என்று சொல்கின்றனர். அத்துடன், மது அருந்தியவர்களால் இழைக்கப்படும் வன்முறைகள் மற்றும் பாலியல் அத்துமீறல்களை விட கஞ்சாவினால் குறைவு என்றும் சொல்கின்றனர்.

இஞ்சை ...... கஞ்சா அடிச்சால் பிரசர் கூடாதோ எண்டொருக்கால் ஆரிட்டையும் கேட்டு சொல்லுறியளே? 🤣

  • கருத்துக்கள உறவுகள்

கஞ்சா ஆளை உருக்கிப் போடுமாமே

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, குமாரசாமி said:

இஞ்சை ...... கஞ்சா அடிச்சால் பிரசர் கூடாதோ எண்டொருக்கால் ஆரிட்டையும் கேட்டு சொல்லுறியளே? 🤣

சிவ மூலிகை ஆச்சே ஒரு இழுப்பு இழுக்குறது

35 minutes ago, ஏராளன் said:

கஞ்சா ஆளை உருக்கிப் போடுமாமே

ஓமாமே ஆனாலும் ஓர் புத்துணர்ச்சியாம் உடலுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் எல்லாரையும் நம்பி ஒரு இழுவை இழுத்து பாக்கலாம் என்டு இருக்கிறேன்.

2 hours ago, குமாரசாமி said:

இஞ்சை ...... கஞ்சா அடிச்சால் பிரசர் கூடாதோ எண்டொருக்கால் ஆரிட்டையும் கேட்டு சொல்லுறியளே? 🤣

ஒரு காலத்தில் கொழுப்புத்தான் உடலுக்கு தீங்கானது, சீனி மிக நல்லது என்று அரசும் ஊடகங்களும் சொல்லி, சீனி அதிகமாக தம் உணவில்/ தின்பண்டங்களில் உள்ளது என்று விளம்பரம் செய்து வருமானம் ஈட்டினர். இப்ப சீனி மிகக் கொடியது கொழுப்பு பரவாயில்லை என்று சொல்லி கொழுப்பை மட்டுமே உண்ணும் டயட் முறைகளை கொண்டுவந்து வருமானம் ஈட்டுகின்றனர். 

இதே போன்றது தான் கஞ்சா. அரசும் ஊடகங்களும் இது கொஞ்சம் பரவாயில்லை என்று விற்கின்றனர். நாளைக்கே இதை விட மோசமானது ஒன்றும் இல்லை என்று சொல்லி இன்னொன்றை ஊக்குவிப்பினர். நாங்கள் தான் பகுத்தறிந்து செயல்படல் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்தவரையில், இஸ்லாத்தை தவிர்த்து பல கொடூரமான கொலை, பிற குற்றச் செயல் புரிந்தவர்களின் பின்னணியை வாசித்து தெரிந்து கொண்டதில் அவர்கள் கஞ்சா போன்ற போதைக்கு அடிமையானவர்கள்  என ஆராய்ந்து வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதை பயன்படுத்தியவர்கள் அது இல்லாவிடில் மரணித்தவர்களாகின்றனர். அதை எடுத்தால் கொடியவர்களாகின்றனர். அதையும் விட சம்பந்தப்பட்டவரின் மூளையையும் பாதிக்கிறது என அறிந்தேன். 

  • கருத்துக்கள உறவுகள்

***

புலிகளின் ஆட்சியில் போதைப்பொருள் என்ன மணம் என்று கூடத் தெரியாத ஒரு ஆட்சி தான் இருந்தது.

அனைத்துவித பயங்கரவாதிகளும் சிங்கள நாடாளுமன்றில் இருக்கிறார்கள். அது பயங்கரவாதிகளின் போதைப்பொருள் கடத்தல்காரர்களின்.. பாதாள உலகக் கோஷ்டியின் கோட்டை. அதற்கு தலைவர் கோத்தா. 

Edited by மோகன்
*** - நீக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

சிகரெட் தீமையை சொல்லி பிராசாரம் செய்து கொண்டு அதை விட மோசமான கஞ்சாவை கொண்டுவருவது மோசமான செயல். சிகரெட் புகைப்பவராவது சுயநினைவுடன் இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, satan said:

நான் அறிந்தவரையில், இஸ்லாத்தை தவிர்த்து பல கொடூரமான கொலை, பிற குற்றச் செயல் புரிந்தவர்களின் பின்னணியை வாசித்து தெரிந்து கொண்டதில் அவர்கள் கஞ்சா போன்ற போதைக்கு அடிமையானவர்கள்  என ஆராய்ந்து வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதை பயன்படுத்தியவர்கள் அது இல்லாவிடில் மரணித்தவர்களாகின்றனர். அதை எடுத்தால் கொடியவர்களாகின்றனர். அதையும் விட சம்பந்தப்பட்டவரின் மூளையையும் பாதிக்கிறது என அறிந்தேன். 

இந்த ஆய்வுகளில் சிலவற்றை இங்கே இணையுங்கள் சாத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் கஞ்சா இலையை அரைத்து பாங் எனும் பெயரில் காசியில் இந்திய அரசின் அனுமதியுடன் விற்கிறார்கள் .

2 hours ago, விளங்க நினைப்பவன் said:

சிகரெட் தீமையை சொல்லி பிராசாரம் செய்து கொண்டு அதை விட மோசமான கஞ்சாவை கொண்டுவருவது மோசமான செயல். சிகரெட் புகைப்பவராவது சுயநினைவுடன் இருப்பார்கள்.

நமது நண்பரின் தகப்பன் மொன்றியலில் இப்பவும் இருக்கிறார் தொடர் புகை பிடிப்பாளர் அவரின் மணிசிகாரிக்கு கொரனோ  வந்து அருந்தப்பு அவருக்கு வரவில்லை வயது  89எப்ப பார்த்தாலும் புகையினுள் இருப்பார் யாருக்காவது விளக்கம் தெரிந்தால் சொல்லவும் .

5 hours ago, நிழலி said:

இதே போன்றது தான் கஞ்சா. அரசும் ஊடகங்களும் இது கொஞ்சம் பரவாயில்லை என்று விற்கின்றனர். நாளைக்கே இதை விட மோசமானது ஒன்றும் இல்லை என்று சொல்லி இன்னொன்றை ஊக்குவிப்பினர். நாங்கள் தான் பகுத்தறிந்து செயல்படல் வேண்டும்.

உங்களுக்கு நினைவு இருக்கும் இங்கு யாழில் பணம்காய் என்ற பெயரில் இருந்தவர் வீட்டில் கஞ்சா வளர்ப்பது பற்றி பாடமே எடுத்தவர் யாழில் .

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, zuma said:

இது ஒரு நல்ல யோசனை தான். இலங்கை மொனராகலை, தனமல்வில எனும் இடத்தில் வளரும் கஞ்சா செடி உலக தரம் வாய்ந்தது( சிலோன் தேயிலை போல்),  பல்கலைகழகத்தில் படிக்கும் போது சுகர்ந்த அனுபவம்  உண்டு. அநேக  மேற்குலக நாடுகள் கஞ்சா பாவனையை சட்ட பூர்வமாக ஆக்கி உள்ளார்கள், அவர்களுக்கு ஏற்றுமதி செய்து அந்நிய செலாவணியை பெறமுடியும்.

ஆப்கானிஸ்தானில் விளைவது அபின் , அது ஒரு தடை செய்யப்பட்ட போதைப் பொருள் ஆகும் 
 
பல்கலையில் படிக்கும்போது (பேராதனை)  நானும் ஒருநாள் இப்பிடித்தான் நண்பனனின் ஆக்கினையில் இழு இழு எண்டு இழுத்து கடும் இருமலை விட வேறு ஒண்டும் வராமல் போகுது சனி என்று விட்டது தான்,  பிறகு கிட்டவும் விடேல்லை. 

இடையில கொஞ்ச நாள் ஒளிச்சு சிகரெட் பிடிச்சு மனுஷியிட்டையும் மகள் மாரிட்டயும் ஒண்டாக பிடி பட்டு அதுவும் அம்பேல் --  இப்ப 100% நல்ல பொடியன் ....

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, சுவைப்பிரியன் said:

உங்கள் எல்லாரையும் நம்பி ஒரு இழுவை இழுத்து பாக்கலாம் என்டு இருக்கிறேன்.

காப்பாற்றுவார்கள் என்றா? நம்பிக்கை வீண் போகாது தெய்வமே! துணிந்து இழுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புகைபழக்கம் இருந்த காலத்தில் நண்பர்கள் கூட்டத்தினால் கஞ்சாவும் இழுத்து பழகியிருக்கிறேன்.

கஞ்சா என்பது தனியே புகைப்பதல்ல, சிகரெட்டை உதிர்த்து அதன் தூளுடன் சரிவர கஞ்சாவை கலந்து சுற்றிதான் புகைப்பார்கள்.

சிகரெட் தண்ணி எல்லாம் தொடர்ந்து பாவித்தால் பெரிதாக பசி எடுக்காது, ஆனால் கஞ்சா அப்படியல்ல இழுத்துக்கொண்டு போனால் ஒரு கட்டத்தில் கொலை பசியெடுக்கும்.

டக்கெண்டு மேலே எழும்புறமாதிரி இருக்கும், அடிக்கடி சிரிப்பு வரும், கஞ்சா பழக்கத்தில் இருக்கும்போது மது பழக்கம் பெரிதாக கேட்காது.

ஆனால் கஞ்சா அளவுக்கதிகமாக புகைத்தால் நரம்பு மண்டலங்கள் அளவுக்கதிகமாக பாதிக்கப்பட்டு தன்னிலை மறந்து வெட்டு கொத்து, கொலை, சட்டவிரோத செயல்கள் எல்லாம் செய்ய தயங்காது,

அதைதான் தாயகத்தில் சமூகவிரோதிகள் பலர் செய்கிறார்கள் என்று நினைக்கிறேன், கடல்கடந்து வரும் கேரள கஞ்சாவும் இதற்கு ஒரு காரணம் என்று அங்குள்ள சிலர் சொல்ல கேள்வி பட்டிருக்கிறேன்.

கஞ்சாவுக்கு அடிமையானவர்கள் அது கிடைக்காமல் போனால் திருட்டில் இறங்குவார்கள், ஒழுக்கா சாப்பிடா விட்டால் ஓமகுச்சி போல மெலிந்து போவார்கள். திருட்டில் இறங்குவார்கள் கண்டவனிடம் எல்லாம் அடி வாங்குவார்கள். பிளேட் வைச்சிருந்து ஆக்களை கீறுவார்கள்.

உதாரணமாக கொழும்பில் கொடியில் காயபோட்ட சாரம், ஜட்டி பிராவரை  குடு கோஷ்டி என்று சொல்லப்படும் இவர்கள் கஞ்சா வாங்க காசுக்கு இதைகூட திருடுவார்கள்.

பொலிசில் பிடித்துக்கொண்டுபோய் எவ்வளவு அடித்தாலும் அவர்களுக்கு வலிக்காது, தன்னிலை மறக்கும் அளவிற்கு கஞ்சா நரம்புகளை மரத்து போக பண்ணியிருக்கும்.

புற்றுநோயாளிகள் உட்பட்ட சிலருக்கு கஞ்சா மருத்துவ தேவை கருதி பயன்படும் என்று கூறுகிறார்கள், அதனால் சில நாடுகளில் இதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளதாக அறிகிறோம்.

ஐரோப்பாவில் நெதர்லாந்து நாட்டில் மட்டுமே கஞ்சாவிற்கு தடையற்ற வியாபார சுதந்திரம் இருந்தது. அதனால் பிற ஐரோப்பிய நாடுகளிலிருந்து நம்மவர்கள் உட்பட கஞ்சா புகைப்பதற்காக அங்கு போய் வருவார்கள்.

நம்மவர்கள் மீன் வாங்க அருகிலிருக்கும் நாடுகளிலிருந்து ஹொலண்டுக்கு போய் வருவது வழக்கம், வரும்போது மீன் பெட்டிகளுக்கிடையில் கஞ்சாவும் சேர்ந்து ஜேர்மனி பிரான்ஸ் பெல்ஜியம் சுவிசுக்கு வருவதுண்டு, மாட்டுபட்டவர்களில் சிலர் இப்போது நாட்டில் குடும்பம் குழந்தைகளுடன் இருப்பதும் உண்டு

14 hours ago, சாமானியன் said:

இப்பிடித்தான் நண்பனனின் ஆக்கினையில் இழு இழு எண்டு இழுத்து கடும் இருமலை விட வேறு ஒண்டும் வராமல் போகுது சனி என்று விட்டது தான்,  பிறகு கிட்டவும் விடேல்லை. 

கஞ்சா இழுக்கும்போது சிகரட் போல அல்ல, இழுத்தால் 30 வினாடிகளாவது புகையை உள்ளே வைத்திருக்கவேண்டும், இழுத்த உடனே விட்டதால் உங்களுக்கு இருமல் வந்திருக்கலாம்.

நரம்பு மண்டலங்களை பாதிக்கும் எந்த ஒரு பழக்கங்களும் சமுதாயத்துக்கு விரோதமானவை, அந்த தவறை நானும் ஒரு காலத்தில் செய்திருந்தேன் என்பதால் இது பற்றிய சிறிய விளக்கத்தை சொல்ல எனக்கும் தார்மீக கடமை உண்டு என்பதால் இதை பதிவிட்டேன்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.