Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாணக்கியன் மற்றும் சுமந்திரனுக்கு எதிராக கனடாவில் பாரிய ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kapithan said:

அடக் கடவுளே, 

பார்ரா சாணக்கியன்ர நிலைமைய, சுமந்திரனோட போனதெல்லாம் ஒரு குற்றமாடா..?

🤦🏼‍♂️

அது… ஆடா? மாடா?… என்று உறுதியாக தெரியவில்லை. 😂

ஆனால்… குற்றம், குற்றம்தான்… கபிதன் சார். 🤣

  • Replies 469
  • Views 32.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

படம் எடுத்தால்... ஆயுசு குறைஞ்சு போயிடும் என்று, 
நம்ம ஆட்கள்... அந்த கனடா பாராளுமன்ற உறுப்பினருக்கு சொல்லிக் கொடுத்திருப்பார்களோ. :grin:

கோசான்... எனக்கு, சில காலத்துக்கு முன்பு வரை... 
சாணக்கியன் மீது,  சிறந்த அரசியல்வாதி என்று... கொஞ்ச நம்பிக்கை இருந்தது.
அந்தாள்.. சுமந்திரனுடன் சேர்ந்து கனடா போனபின்,
நடந்த கூத்துகளை பார்க்க...
"பன்றியுடன் சேர்ந்த, பசுக் கன்றின் நிலைமைக்கு"  வந்திட்டார்.  🤣

உண்மை. நானும் இவரது நாடாளுமன்ற உரை மற்றும் பொத்துவில் - பொலிகண்டி போராட்ட முனைப்பு என்பவற்றைப் பார்த்து தமிழருக்குத் தலைமை தாங்கும் ஒரு இளைய தலைவர் உருவாகிவருகிறார் என்று எண்ணியிருக்க இப்படியாகீட்டாரே. 

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, தமிழ் சிறி said:

அது… ஆடா? மாடா?… என்று உறுதியாக தெரியவில்லை. 😂

ஆனால்… குற்றம், குற்றம்தான்… கபிதன் சார். 🤣

கனடா குழப்பத்தில்,  டிப்ளோமர்றிக் பாஸ்போட்டில் வந்த சுமந்திரனைப் பார்த்து, பாஸ்போட்டே இல்லாமல் கனடாவுக்கு வந்த ஒரு குண்டர்(ர்..மரியாதை, மரியாதை..🤪) சொல்கிறார் " நி இனிமேல் கனடாப் பக்கம் வரக்கூடாது"" என்று.

காலக் கொடுமை சரவணா, காலக் கொடுமை.   🤦🏼‍♂️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
காலத்தின் தேவையறிந்து காய்களை நகர்த்துகின்ற நாகரீகம்தான் அதியுச்ச அரசியல் இராஐதந்திரமாகும். இந்த காலத்தின் தேவைதான் ஒருகாலத்தில் ஆயுதபோராட்டமாக தமிழினத்திற்கு தேவைப்பட்டது.அன்றைய காலம் பேச்சுவார்த்தைகளுக்கு அப்பால் ஏதோ ஒன்று தேவைப்பட்டது. அதனை ஆயுதபோராட்டமாக மாற்றியமைத்தமை என்பது அன்றைய அரசியல் சாணக்கியங்களில் முக்கியத்துவமான ஒன்றேதான்.
அத்தனை தமிழினமும் ஒரு குடையின் கீழ்வந்தது. பெரும் புனித தியாகங்களின் பின்னணியில் ஈழத்தமிழினம் என்பதற்கு மாபெரும் அடையாளங்களும் கிடைத்தது.
காலஓட்டத்தில் நடைபெற்ற பல துரதிஷ்ரங்களினால் காலத்தின் தேவை என அறியப்பட்ட ஆயுதப்போராட்டம் ஒரு முடிவிற்கு வருகின்றது.
ஆனால் அது பெரும் தியாகங்களினால் ஆனது.
பெரும் கௌரவத்திற்குரியது.
அதியுச்ச யுத்ததருமங்களுக்கு உட்பட்டு இருந்த புனிதமானது.
நாங்களும் எங்கள் சிறுவயதுமுதல் ஊறிப்போன ஒரு விடயம் தான் அது.
ஆனால் காலத்தின் தேவையறிந்து ஆயுதப்போராட்டங்களின் நோக்கங்களான தமிழினத்திற்கான கௌரவம் மற்றும் அடையாளத்தை வேறுபாதைகளினூடாகவே பெற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயம் தமிழினத்திற்கு வருகின்றது.
அந்த வேறுபாதை என்பது இராஐதந்திரம் சட்டம் மற்றும் கல்வி.
ஏனெனில்
தற்கால இலங்கை அரசாங்கத்தின் பிடிகளின் கீழ் இனியொரு போராட்டவடிவத்தை உருவாக்குவதோ உணர்ச்சி அரசியல் பேசி ஒன்றினைக்க முனைவதோ முற்றிலும் முட்டாள்த்தனமான ஒன்று.
ஆக தற்சமயம் தேவைப்படுவதெல்லாம் கல்வி மற்றும் சட்டஅறிவின் ஆழங்களைப்பயன்படுத்தி எமக்கான உரிமைகளை பெறுவது மாத்திரமே.
அதாவது சட்டத்தின் கீழ் மும்மொழிகளினூடாக இலங்கை அரசாங்க வட்டத்தினுள் தவிர்க்க முடியாத சக்தியாக உருவாகுவதும் அதனூடாக எமது இனத்திற்கான உரிமைக்காய்களை நகர்த்துவதுமே ஆகும்.
கல்வி மற்றும் விளையாட்டு என்பவற்றினூடாக இலங்கை நிர்வாக சேவைகளினுள் கால்தடம் பதிப்பதும் அங்கே எம்மை அடையாளப்படுத்துவதுமே தற்காலத்தில் நாம் செய்யக்கூடிய ஒன்று.
அத்துடன் அதுவே அந்த மாபெரும் தியாகங்களின் நோக்கங்களை அடையகூடிய வழிமுறைகளுமாகும்.
பாதை எவ்வாறு இருந்தாலும் நோக்கம் ஒன்றாக இருந்தால் அது சரியானதே.
ஆயுதபோராட்டநோக்கங்களை இராஐதந்திர வழிகளினூடாக அடைய முயற்சிப்பது என்பது தற்கால காலத்தின் தேவை என்பதுடன் அந்த போராட்டத்திற்கான பெரும் கொளரவுமே ஆகும்.
இவ்வாறு காலத்தின் தேவைகருதி இராஐதந்திர வழிகளில் சட்டஅறிவினூடாக செல்லும் பாதையை உணர்வின் பிடிகளுக்குள் உட்பட்டு தூரோகமென நினைப்பதும் அதனை எதிர்ப்பதும் பெரும் முட்டாள்த்தனமானதுடன் அவர்களின் காலத்திற்கேற்ற போராட்டங்களிற்கு நீங்கள் செய்யும் அவமரியாதையுமாகும்.
புலம்பெயர் தமிழ்சமூகம் எமக்கு பெரும் பலம் தரும் ஒன்றுதான். அப்பலத்தை சட்டரீதியில் மற்றும் உங்கள் அரசினூடாக இலங்கைக்கு கொடுக்கும் நெருக்கடிகளினாலே எங்கள் அடையாளங்களைப் பெற்றுக்கொள்ளமுடியும் .
இதனை உணராது உணர்ச்சிஅரசியலிற்கு உட்பட்டால்
நாமே இரண்டுபிரிவுகளாக பிரிந்து மேலும் மேலும் பிந்தங்கிச்செல்வோம் என்பதே உண்மை.
உலகின் அதியுச்ச கௌரவத்திற்கும் பண்பாட்டிற்கும் உரிய இனம் எம்மினம் என்பதை மீண்டும் நினைவில் கொள்க.
 
முகநூலில் வந்தது....

Ist möglicherweise ein Schwarz-Weiß-Bild von 1 Person

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

கனடா குழப்பத்தில்,  டிப்ளோமர்றிக் பாஸ்போட்டில் வந்த சுமந்திரனைப் பார்த்து, பாஸ்போட்டே இல்லாமல் கனடாவுக்கு வந்த ஒரு குண்டர்(ர்..மரியாதை, மரியாதை..🤪) சொல்கிறார் " நி இனிமேல் கனடாப் பக்கம் வரக்கூடாது"" என்று.

காலக் கொடுமை சரவணா, காலக் கொடுமை.   🤦🏼‍♂️

அது ஒரு பக்கம் கிடக்கட்டும்.

இன்று புதன்கிழமை… சுமந்திரனை, கனடா முஸ்லீம்கள் சந்திக்க இருப்பதாக… சொன்னீர்கள்.

சந்திப்பு முடிஞ்சுதா… இல்லாட்டி அங்கும், அவமானமா? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

கனடா குழப்பத்தில்,  டிப்ளோமர்றிக் பாஸ்போட்டில் வந்த சுமந்திரனைப் பார்த்து, பாஸ்போட்டே இல்லாமல் கனடாவுக்கு வந்த ஒரு குண்டர்(ர்..மரியாதை, மரியாதை..🤪) சொல்கிறார் " நி இனிமேல் கனடாப் பக்கம் வரக்கூடாது"" என்று.

காலக் கொடுமை சரவணா, காலக் கொடுமை.   🤦🏼‍♂️

எனக்கு அந்த வீடியோவைப் பார்க்க மிகுந்த மனவருத்தமாக இருந்தது. சுமந்திரன் ஐயாவின் அரசியல் பிடிக்கவில்லை தான், ஆனால் முரண்பாடுகளை கோபங்களை இவ்வாறு வெளிப்படுத்த தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

விடுதலைப்புலிகளின் போராட்டத்திலிருந்து                                      1....இலங்கையில் பேச்சுவார்த்தை மூலமே அல்லது ஆயுதப்போராட்டத்தின் மூலமே ஒரு தீர்வுவைப் பெற்றுக் கொள்ள முடியாது என்பதை நீங்கள் கற்றுக் கொள்ளவில்லையா.  ?

எனவே தயவுசெய்து போராடியது பிழை என்று சொல்லாதீங்கள் இப்படிப்பட்ட இலங்கை  தமிழன்  இருக்கும் வரை இலங்கை தமிழனுக்கு விடுதலை கிடையாது  

ஆயுதப்போராட்டம் என்று ஒன்று தொடங்கியபின்தான் சர்வதேசமோ ஏன்  ஸ்ரீலங்கா அரசாங்கமே தமிழ் தரப்புடன் பேச்சுவார்த்தை என்ற ஒன்றை தொடங்கியது என்பது சிலருக்கு புரிவதேயில்லை. எவ்வளவோ பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டபோதும் சர்வதேசமும் ஸ்ரீலங்கா அரசும் முன்வைத்த தீர்வுதான் என்ன என்பதை இந்த புத்திஜீவிகளை கூறச்சொல்லுங்கள் பார்க்கலாம்?

  • கருத்துக்கள உறவுகள்

***

சுமந்திரனுக்கு பாடியது என்ன தாலாட்டோ..🤣

இந்த கும்பலுக்கெதிராக உலகம் முழுவதும் தமிழர்களிடையே எதிர்ப்புக் கிழம்பியவுடன், சுருதி மாறுது கண்டியளோ.... இதுதான் மலிவு அரசியல்.

****

🤦🏼‍♂️

இனி சாதிச் சண்டைக்கும் வேலிச் சண்டைக்கும் புலிக்கொடியை பிடிக்க வேண்டியதுதான் மிச்சம்...

சனநாயக நாடுகளில் இருந்துகொண்டு இன்னொருவனை பேச விடாமல் அடிச்சுத் துரத்துவதை கண்டிக்க துணிவில்லை. 

***

Edited by நியானி
மேற்கோளும் சில வரிகளும் நீக்கப்பட்டுள்ளன

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Eppothum Thamizhan said:

ஆயுதப்போராட்டம் என்று ஒன்று தொடங்கியபின்தான் சர்வதேசமோ ஏன்  ஸ்ரீலங்கா அரசாங்கமே தமிழ் தரப்புடன் பேச்சுவார்த்தை என்ற ஒன்றை தொடங்கியது என்பது சிலருக்கு புரிவதேயில்லை. எவ்வளவோ பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டபோதும் சர்வதேசமும் ஸ்ரீலங்கா அரசும் முன்வைத்த தீர்வுதான் என்ன என்பதை இந்த புத்திஜீவிகளை கூறச்சொல்லுங்கள் பார்க்கலாம்?

தீர்வும் ஆயுதமுனையில் முள்ளிவாய்க்காலில் கிடைத்ததே? ஆயுதப்போராட்டத்தக்கு தகுந்த தீர்வுதானே?

****

Edited by நியானி
மேற்கோளும் பதிலும் நீக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

12 வருசமா யாழிலை ஒரே பெயரிலை இருக்கிறன்...பதிவுகளையும் செக் பண்ணுங்கோ..

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, கற்பகதரு said:

தீர்வும் ஆயுதமுனையில் முள்ளிவாய்க்காலில் கிடைத்ததே? ஆயுதப்போராட்டத்தக்கு தகுந்த தீர்வுதானே?

****

இப்படி குரூரமாக சிந்திப்பீர்கள் என நான் நினைக்கவில்லை.
வேறு தெரிவுகள் இல்லாதபோது  தான் தமிழ் இளைஞர்கள் ஆயுதத்தை தூக்க வேண்டி வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

இவர்களது பயண ஏற்பாடும், travel agenda வும் அமெரிக்க அரசால் ஒழுங்குபடுத்தப்பட்டது. சாணக்கியன் கூட இறுதியில் உள்ளே கொண்டுவரப்பட்டவர்தான். 

தற்போதைய ஏற்பாடுகள் அனைத்தும் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை. அந்த அட்டவணைப்படியே சகல நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இதில் எம்மவர்களால் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என நான் நம்பவில்லை.

இருக்கலாம் கற்பிதன். பாராளுமன்றின் உள்ளே ஒரு போட்டோ கூடவா எடுக்கவில்லை?

இவர்களை அமெரிக்கா கூப்பிட்டு, மிச்ச எல்லா இடமும் போக சொல்லி இருக்கலாம். மறுக்கவில்லை. அமெரிக்கா போன தமிழ் எம்பியை இந்திய தூதுவர் சந்திப்பது மிக முக்கியமானது. அதே போல் தமிழர்களில் ஒரு கடும்போக்காளர் (புலம்பெயர் வீரக்குட்டிகள்) பகுதி ஏற்காத விடயத்தை மென்போக்காளர்(கூட்டமைப்பு)+அமெரிக்கா+ இந்தியா சேர்ந்து உருவாக்குகிறோம். இது ஒரு மிதவாத தீர்வு என்பதாக இலங்கையை நெருக்க அண்மைய கனேடிய சண்டை பயன்படலாம் என்பதும் மறுப்பதற்கு இல்லை.

ஆகவே உங்கள் நிலைப்பாடு எனக்கு புரிகிறது.

2013-15 காலத்து கோஷான் உங்கள் நிலைபாட்டையே எடுத்திருப்பார். ஆனால் 2015-21 கால சுமந்திரனின் போக்கு - அவதானமாக இருக்க சொல்கிறது.

4 hours ago, zuma said:

நாம் எந்த அரசியல்வாதியையும் முழுமையாக நம்பக் கூடாது, அவர்களுடைய செயற்ப்பாடுகள், கொள்கைகள் பற்றி தர்க்க ரீதியாகவும்,  சனநாயக ரீதியாகவும்   கேள்விகள்  எழுப்பப்படல் வேண்டும். 

அருமையான கருத்து.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

கனடா குழப்பத்தில்,  டிப்ளோமர்றிக் பாஸ்போட்டில் வந்த சுமந்திரனைப் பார்த்து, பாஸ்போட்டே இல்லாமல் கனடாவுக்கு வந்த ஒரு குண்டர்(ர்..மரியாதை, மரியாதை..🤪) சொல்கிறார் " நி இனிமேல் கனடாப் பக்கம் வரக்கூடாது"" என்று.

காலக் கொடுமை சரவணா, காலக் கொடுமை.   🤦🏼‍♂️

1 hour ago, ஏராளன் said:

எனக்கு அந்த வீடியோவைப் பார்க்க மிகுந்த மனவருத்தமாக இருந்தது. சுமந்திரன் ஐயாவின் அரசியல் பிடிக்கவில்லை தான், ஆனால் முரண்பாடுகளை கோபங்களை இவ்வாறு வெளிப்படுத்த தேவையில்லை.

ஓ…அந்த நபர் திருவாளர் குண்டர் அவர்களா? பேஷ், பேஷ்.

அவர் பேசிய தோரணையை பார்த்து நான் கனேடியன் இமிகிரேசன் ஆபிசார் என்றல்லவா நினைத்தேன்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

இருக்கலாம் கற்பிதன். பாராளுமன்றின் உள்ளே ஒரு போட்டோ கூடவா எடுக்கவில்லை?

இவர்களை அமெரிக்கா கூப்பிட்டு, மிச்ச எல்லா இடமும் போக சொல்லி இருக்கலாம். மறுக்கவில்லை. அமெரிக்கா போன தமிழ் எம்பியை இந்திய தூதுவர் சந்திப்பது மிக முக்கியமானது. அதே போல் தமிழர்களில் ஒரு கடும்போக்காளர் (புலம்பெயர் வீரக்குட்டிகள்) பகுதி ஏற்காத விடயத்தை மென்போக்காளர்(கூட்டமைப்பு)+அமெரிக்கா+ இந்தியா சேர்ந்து உருவாக்குகிறோம். இது ஒரு மிதவாத தீர்வு என்பதாக இலங்கையை நெருக்க அண்மைய கனேடிய சண்டை பயன்படலாம் என்பதும் மறுப்பதற்கு இல்லை.

ஆகவே உங்கள் நிலைப்பாடு எனக்கு புரிகிறது.

2013-15 காலத்து கோஷான் உங்கள் நிலைபாட்டையே எடுத்திருப்பார். ஆனால் 2015-21 கால சுமந்திரனின் போக்கு - அவதானமாக இருக்க சொல்கிறது.

அருமையான கருத்து.

சுமந்திரன் ஒரு அரசியல்வாதி. அவரின் ஆயுதப் போராட்டம் தொடர்பான கருத்துக்கள் வேதனையையும், கோபத்தையும் உண்டுபண்ணுபவை. கண்டிக்கப்பட வேண்டியவை. அதில் மாற்றுக் கருத்து எனக்கில்லை. 

வலிகளையும் தியாகங்களையும் கூடவே இருந்து அனுபவித்தவன் என்கின்ற வகையில் அங்குள்ள எமது மக்களுக்கு பற்றிப்பிடிக்க ஒரு நூல் கிடைத்தாலும் அதனை ஆதரிப்பேன். 

அந்த  நூல் சுமந்திரன் ஊடாக வந்தாலென்ன, சாணக்கியன் ஊடாக வெந்தாலென் அல்லது வேறு யார் கொண்டுவந்தாலென்ன, அதனை நான் வரவேற்பேன்.

அந்த நூலைப்  பற்றிப்பிடிப்பதுதான் தற்போதைய சூழலில் விவேகமான செயல்.

1 hour ago, தமிழ் சிறி said:

அது ஒரு பக்கம் கிடக்கட்டும்.

இன்று புதன்கிழமை… சுமந்திரனை, கனடா முஸ்லீம்கள் சந்திக்க இருப்பதாக… சொன்னீர்கள்.

சந்திப்பு முடிஞ்சுதா… இல்லாட்டி அங்கும், அவமானமா? 🤣

ஆக உங்களுக்கு சுமந்திரன் அவமானப்படுத்தப்படல் வேண்டும். அது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். 

🥺

1 hour ago, Kapithan said:

கனடா குழப்பத்தில்,  டிப்ளோமர்றிக் பாஸ்போட்டில் வந்த சுமந்திரனைப் பார்த்து, பாஸ்போட்டே இல்லாமல் கனடாவுக்கு வந்த ஒரு குண்டர்(ர்..மரியாதை, மரியாதை..🤪) சொல்கிறார் " நி இனிமேல் கனடாப் பக்கம் வரக்கூடாது"" என்று.

காலக் கொடுமை சரவணா, காலக் கொடுமை.   🤦🏼‍♂️

இதே வீரத் திருமகன் இந்தக் கோடை விடுமுறைக்கு அங்கு போய் எல்லோருக்கும் முன் கைகட்டி பம்மிக் கொண்டு நின்றுவிட்டு மறுபடி கனடா வந்து தனது வீர தீரங்களைக் காட்டுவார் என்பதை எண்ணிப் பார்த்தால் இன்னும் கொடுமை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

எனக்கு அந்த வீடியோவைப் பார்க்க மிகுந்த மனவருத்தமாக இருந்தது. சுமந்திரன் ஐயாவின் அரசியல் பிடிக்கவில்லை தான், ஆனால் முரண்பாடுகளை கோபங்களை இவ்வாறு வெளிப்படுத்த தேவையில்லை.

வணக்கம் ஏராளன்.

சுமந்திரனின் சந்தர்ப்பவாத அரசியலை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நான் ஆதரிக்கவில்லை. 

ஆனால் அவரை எதிர்ப்பதற்கு மதவாதிகள் அவரின் அரசியலை போர்வையாகப் போட்டுக்கொள்கிறார்கள். 

இவர்களின் இந்த போலித்தனத்தைத்தான் நான் கடுமையாக எதிர்க்கிறேன். 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Kapithan said:

ஆக உங்களுக்கு சுமந்திரன் அவமானப்படுத்தப்படல் வேண்டும். அது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். 

🥺

கபிதன் சார்… எனது முதல் கேள்விக்கு, இன்னும் பதில் வரவில்லை.

நீங்கள்தான்… இன்று,  சுமந்திரன் கனடாவில் முஸ்லீம்களை சந்திக்கின்றார் என்று சொன்னனீங்கள். அதற்கான பதிலை எதிர் பார்க்கின்றேன். 🙂

  • கருத்துக்கள உறவுகள்

கனடா வாழ் இலங்கை முஸ்லிம்களுடன் விசேட சந்திப்பு

https://fb.watch/9u0W1xgiN8/

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:

கபிதன் சார்… எனது முதல் கேள்விக்கு, இன்னும் பதில் வரவில்லை.

நீங்கள்தான்… இன்று,  சுமந்திரன் கனடாவில் முஸ்லீம்களை சந்திக்கின்றார் என்று சொன்னனீங்கள். அதற்கான பதிலை எதிர் பார்க்கின்றேன். 🙂

சிறிது நேரம் பொறுங்கள் 

சந்திப்பு நேரம் காலை 7.30 -9.30

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, பெருமாள் said:

நான் சொன்னன் என்று எழுதுகிறீர்கள் எழுதியதை கவனித்தா  இப்படி எழுதுகிறீர்கள் ? முடிந்தால் நிரூபிக்கவும் .

அதுசரி சுமத்திரன்  லண்டன் வந்தால் சேதாரமுமின்றி திரும்பமாட்டார் என்று நேற்று பிறந்த பிள்ளைக்கும் தெரிந்த விடயம் உங்களுக்கு தெரியவில்லையே ?

திருப்பி திருப்பி சொல்வது உங்கள் காதுகளுக்கு ஏறவில்லை என்றால் ஒதுங்குவதை தவிர வேறு வழியில்லை சிறு  உதாரணம் ஸ்கட்லாண்டு க்கு கோத்தா வருகிறார் போராட்டக்காரர்களும் துல்லியமான தகவல் கிடைத்து கோத்தா தங்கியிருந்த கொட்டல் சுற்றி வளைக்கப்படுது ஒரு பாரிய பஸ்  கொட்டலை நோக்கி விரைகிறது அதைப்பார்த்து ஸ்கட்லான்ட் போலீஸ் பின்னால் திறத்திக்கொண்டு  வருகிறது வந்த பஸ் திருப்பத்தில் நடந்த குளறுபடியால் போராட்டக்காரர்கள் கோத்தாவை அண்மித்து கோஷமெழுப்புவது தவறுகிறது பின்னால் ஓடிவந்த போலீசுக்கு தலை கிறுகிறுகின்றது எப்படி இவர்களுக்கு தகவல் போனது ? நேரடியாகவே போராட்டக்காரர்களிடம் கேட்க சிரித்தபடியே போனில் கோத்தாவின் டிவிட்டர் அப்டேட்களை வெள்ளந்தித்தனமா  காட்டுகின்றனர் . இங்கு கோத்தா விரும்பியது எது என்று நான் உங்களுக்கு சொல்லதேவையில்லை புரிந்து இருக்கும் .

மேல் சொன்னது போல் சும்முக்கு என்ன நடக்கும் என்பது தெரியாமலா இவ்வளவும் நடக்குது என்று நீங்கள்  நம்பினால் இனி சும் பற்றிய திரிகளில் உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடையாது . நான் சொல்லவருவது என்ன என்று ஒன்றுக்கு இரண்டுதடவை படித்து விளங்கிவிட்டு எதிர்கருத்தை வைக்கவும் .

இங்கு நாங்கள் படித்தவர்கள் என்பவர்களால் உணர்ச்சி அரசியல் செய்பவர்களை சமாளிக்க தெரியாமல் அவர்களை திட்டுவது கேவலப்படுத்துவது மட்டுமே நடக்கின்றது முடிந்தால் உங்கள் அறிவை (உண்மையில் எமது படிப்பாளிகளுக்கு பொது அறிவு  அப்படி ஒன்று இருந்தால் 60 வருடத்துக்கு முன்பே  எப்பவோ இந்த பிரச்சனை முடிந்து இருக்கும் ) பிரச்சனையை  தீர்ப்பதில் கருத்துக்கள் வையுங்கள் அது ஆரோக்கியமானது  அதை விட்டு திட்டிகொன்டே இருந்தால் கட்டையிலை  போகுமட்டும் மற்றவரை பார்த்து திட்டிக்கொண்டு இருக்கவேண்டியதுதான் .

பெருமாள், நிரூபிக்க என்ன இருக்கிறது? உங்கள் எழுத்துகளே நிரூபணம், போய் திருப்பி வாசித்து யோசிப்பதை விட்டு விட்டு ஏன் இந்த தேவையற்ற பாரதம்? 

அது நிற்க: இந்த புலம் பெயர் கொடிபிடிக்கும் றௌடிகளுக்கு கோத்தாவை நோக்கி றௌடித் தனம் காட்டும் துணிவு ஏனாம் வரவில்லை? கோத்தாவை விடுங்கள், பிரிட்டனில் பதுங்கிய கருணா ஒரு  இந்துக் கோவிலுக்கு வந்த போது கூட இந்த றௌடிகள் மூச்சும் விடவில்லையாமே? ஏனெனில் , ஹொலிடேக்கு ஊர் போகும் போது பிடிச்சு போட்டு விடுவர் என்ற பயம் தானே, இல்லையா? எல்லா வீரமும் ஒரு கல்லைக் கூட எடுத்து எறிய முடியாத அரசியல் வாதிகளிடம் மட்டும் தான்!- இதுகளை "வீரக் குட்டிகள்" என்று அழைப்பது கூட தமிழில் வீரத்தின் வரைவிலக்கணத்தை மீறிய செயல் என நினைக்கிறேன்! 😂

இந்த கொடிபிடிக்கும் றௌடிகள் பிரச்சினை  சுமந்திரனை தாண்டிய விடயம் - இவர்கள் தமிழர்களின் பிரச்சினையிலோ, தீர்விலோ ஒரு பங்களிப்பும் செய்யா வண்ணம் ஒதுக்கி வைக்கப் படவேண்டிய நச்சுப் பேர்வழிகள்! அமெரிக்காவில் இது கடந்த சில ஆண்டுகளாக வெற்றிகரமாக சாதிக்கப் பட்டிருக்கிறது என நான் கருதுகிறேன்.  

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, இணையவன் said:

இதே வீரத் திருமகன் இந்தக் கோடை விடுமுறைக்கு அங்கு போய் எல்லோருக்கும் முன் கைகட்டி பம்மிக் கொண்டு நின்றுவிட்டு மறுபடி கனடா வந்து தனது வீர தீரங்களைக் காட்டுவார் என்பதை எண்ணிப் பார்த்தால் இன்னும் கொடுமை.

நான் நினைக்கல்ல ஆள் அந்த பக்கம் போகுமெண்டு,  கனடா பக்கம் வராத எண்டு அவர் கனேடிய குடிவரவுதுறையின் அங்கீகரிக்கபடாத அதிகாரியாக சுமந்திரனுக்கு எச்சரிக்கை விடுத்தபோது சுமந்திரன் வடிவா அவரை திரும்பி பார்த்துக்கொண்டு போனதாக வீடியோவில் தெரியுது.

சிங்கள புலானாய்வுதுறைக்கு எப்படியும் சுமந்து போட்டு கொடுத்து வீடியோவை அனுப்பியிருக்கும்.

கொரோனா புண்ணியத்தில் மாஸ்க் அரைவாசி முகத்தை மறைச்ச துணிவில எச்சரிக்கை விடுத்திருக்கிறார் எப்படியும் வீட்டுக்குபோய் மனிசியிட்ட பேச்சு வாங்கியிருப்பார்.

முதலில் சொன்னதுதான் தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்தோர் நாட்டுக்கு வரும் எமது பிரதேச அரசியல்வாதிகளை இந்தநாட்டின் அங்கீகரிக்கப்பட்ட முறைப்படி எதிர் கொள்ளுங்கள் அல்லது அவர்களை தேடி எவரும் அந்த பக்கம் போகாமல் தனியே நிண்டு கூவிபோட்டு போக வையுங்கள் அதுவே அவர்களுக்கு பெருத்த அவமானம்.

இதுபோல்தான் முதலில் பிரான்சிலும் ஒரு இளைஞன் மூலமாக ஏதோ ஒரு ஸ்பிரே அடிக்க வைத்தார்கள் , கூட்டத்திற்கு வந்திருந்த பெண்கள் குழந்தைகள்கூட அதனால் பாதிக்கப்பட்டதாக ஒரு செய்தி வந்திருந்தது.

சிங்களவனுக்கு வாலையும் நமக்கு தலையையும் காட்டும் இவர்களுக்கு இப்படி செய்யவேண்டும் என்று கோபம் வருவது நியாயம்தான், அதை மனதோடு வைத்திருக்கவேண்டும், செயலில் காண்பிக்க இறங்கினால் கண்டிப்பாக புலத்தில் பாதிக்கப்படுவது அவர்களல்ல.

இயக்கம் இருந்த காலத்திலேயே புலத்திற்கு வரும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு இப்படி எதிர்ப்பை காண்பிக்கவேண்டும் என்று ஊக்குவித்ததாக நினைவில் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, பெருமாள் said:

அவுஸ் ஒலிநாடாவை பாருங்கள் சும்  குடும்பமா தங்களின் பதில்கள்  கண்டு பயந்து விட்டனர் என்கின்றனர் பொறுப்பான செய்தியாளர் கேள்வி கேட்டதும் முதலில் அவங்களை கலைத்து  விட்டு வா பதில் சொல்கிறேன் என்கின்றனர் கேள்விக்கு பதில் இல்லாதபடியால்தான் அந்த கூட்டமே குழம்பியது . ஜனநாயகம் என்பது என்ன ?

இதென்ன புதுக்கதை விடுறிய பெருமாள்?😂  குடும்பமாக அவர்களை இருத்தி வைத்து முகத்தை மூடிக் கட்டியபடி றௌடிகள் ஒருமையில் விழித்துத் திட்டியதை எல்லோரும் பார்த்தோம்! "அவர்களை அனுப்பி விட்டு வா பதில் சொல்கிறேன்" என்றதும் அது பெரிய ஜனநாயக மீறலாகப் போய் விட்டதோ உங்களுக்கு?

எழுத்தில் இருக்கும் செய்திகளைத் தான் திரித்துப் போடுகிறீர்கள் என்றால், இப்ப காணொளிகளையும் திரிக்க ஆரம்பித்து விட்டீர்களா?  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

கனடா குழப்பத்தில்,  டிப்ளோமர்றிக் பாஸ்போட்டில் வந்த சுமந்திரனைப் பார்த்து, பாஸ்போட்டே இல்லாமல் கனடாவுக்கு வந்த ஒரு குண்டர்(ர்..மரியாதை, மரியாதை..🤪) சொல்கிறார் " நி இனிமேல் கனடாப் பக்கம் வரக்கூடாது"" என்று.

காலக் கொடுமை சரவணா, காலக் கொடுமை.   🤦🏼‍♂️

குணடருக்கு அதைச் சொல்ல உரிமையுண்டு  என்னெனில். அப்படி பாஸ்போர்ட் இல்லாமல் வந்த குணடர்களைப்  பார்த்து பேசத் தான் இவர் பாஸ்போர்ட் உடன் வந்தார்   நான் நேரில் பார்த்து..கேட்ட ஒரு சமபவத்தை எழுதுகிறேன்   1977 ஆண்டளவில் என்று நினைககிறேன்  ஒரு பெரிய வயல் வெளியில் தமிழர் விடுதலை கூட்டணியின்  கூட்டம் நடந்தது  மேடை அமைத்து...நிலத்துக்கு சாக்குப். படங்கு விரிந்து அனைத்து வேலைகளையும்  தமிழ். இளைஞர்கள் செய்திருந்தார்கள் கூட்டமுடிவில் கேள்விகளுக்கு பாராளுமன்ற உறுப்பனர்கள் பதில் கூறுவார்கள் ஒரு இளைஞர் என் நணபர். எப்போது...எங்கே...தமிழ்ஈழம். அமைப்பீர்கள். என்று கேட்டார்.  அதற்கு வட்டுக்கோட்டை எம்பி.   திருநாவுக்கரசு  பதில் கூறினார்

ஒரு திருமணம் நடந்து கொண்டிருக்கும்போது ஐயர் ஓம். சுக்கிலாம் சொல்லி கொண்டிருக்கும்போது மணமகன்.  மணப்பெண்ணிடம் எப்போது ...எங்கே..பிள்ளைபபெறுவாய். என்று  கேட்டால்  அதற்கு அவள் என்ன சொல்வாள்   எனனுடன். வந்து படு என்று தானே..கைதட்டல். வானைப்பிளந்தது கேள்வி கேட்டவரின். முகம் ......பேய் அறைந்த மாதிரி போய் விட்டது எப்படி பதில் ?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Eppothum Thamizhan said:

நீங்கள்தானே ஊகத்தில் எழுதும் எல்லாவற்றிற்கும் ஆதாரம் கேட்பீர்கள். பலராலும் பதிவுசெய்யப்பட்ட கருத்துக்கள் அவர்களின் ஊகமே. அது உண்மையாக இருக்கவேண்டிய அவசியமில்லை.

ஏதோ நீங்கள் அமைப்புக்குள் ஊடுருவி ரெக்கி எடுத்த ரேஞ்சுக்கு அடிச்சுவிடுறியள்! தொடருங்கோ, கைதட்டிற கூட்டம் இருக்கும்வரை!!

இதுக்கெல்லாம் ரெக்கி ஏன்? உங்கள் செய்திகள் பார்த்து உள் நிலை புரிந்து கொள்ளும் reasoning இற்கு என்ன ஆயிற்று? பாலசிங்கத்தாருக்கு சமாதான காலத்தின் இறுதிப்பகுதியில் என்ன நடந்தது? அவர் த.செ வை விட மேலேயா , கீழேயா? என்ன தான் கற்றுக் கொண்டீர்கள் அந்த நேர சம்பவங்கள் பற்றி?அதைக் கூட விடுங்கள்.

உள்ளேயே இருந்து புலிகளின் தலைமையை விமர்சனம் செய்து வழி மாற்றி பின்னரும் புலிகளுடன் தொடர்ந்த எவர் பற்றியாவது ஒரு உதாரணம் இருக்கிறதா உங்களிடம்? "அப்படி மாற்ற எதுவும் இருக்காததால், எவரும் சொல்லவில்லை - எனவே உதாரணம் இல்லை" என்று சொல்வீர்கள் போல! 😂

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Justin said:

இதென்ன புதுக்கதை விடுறிய பெருமாள்?😂  குடும்பமாக அவர்களை இருத்தி வைத்து முகத்தை மூடிக் கட்டியபடி றௌடிகள் ஒருமையில் விழித்துத் திட்டியதை எல்லோரும் பார்த்தோம்! "அவர்களை அனுப்பி விட்டு வா பதில் சொல்கிறேன்" என்றதும் அது பெரிய ஜனநாயக மீறலாகப் போய் விட்டதோ உங்களுக்கு?

எழுத்தில் இருக்கும் செய்திகளைத் தான் திரித்துப் போடுகிறீர்கள் என்றால், இப்ப காணொளிகளையும் திரிக்க ஆரம்பித்து விட்டீர்களா?  

சுமத்திரனின் மானத்தை கப்பல் ஏத்த  உங்களை  போல் நாலு பேர் இருந்தால் காணும் .

கீழே உள்ள பதிவில் நேரம் 2.18 லிருந்து பார்க்கவும் .

நேரம் 2.20 ல் சும்மின் கால் நடுங்குவது தெரியுது இப்படி ஒரு பிழைப்பு தேவையா ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.