Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கிற்கு செல்கிறார் சீன தூதுவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(ஆர்.ராம்)

இலங்கைக்கான சீன மக்கள் குடியரசன் தூதுவர் கீ சென்ஹொங் இருநாள் விஜயம் மேற்கொண்டு வடமாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். 

இந்த விஜயம் எதிர்வரும் புதன் மற்றும் வியாழக்கிமைகளில் நடைபெறவுள்ளதாக சீன தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. 

58.jpg

குறித்த விஜயத்தின் போது, வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ளதோடு, கடற்றொழிலாளர்களுக்கான ஒருதொகுதி உபகரணங்களை வழங்கும் நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

வடக்கிற்கு செல்கிறார் சீன தூதுவர் | Virakesari.lk

  • Replies 80
  • Views 5.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கிற்குச் செல்வது மட்டல்ல அங்குள்ள மக்களுக்கு உதவியும் செய்கிறார்..

கதை இப்படிப் போகிறது..😂

  • கருத்துக்கள உறவுகள்

ஏதாவது ஒரு தமிழ் கட்சி அவரை சந்திக்க முயற்சித்ததா?

கூடமைப்பு முயற்சித்தால் இந்தியா கடுப்பாகும்.

கஜன் & கஜன் முயற்சிக்கலாமே?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

கஜன் & கஜன் முயற்சிக்கலாமே?

ஏன் இந்தியா கடுப்பாகாதோ..?

  • கருத்துக்கள உறவுகள்

👍..நீங்க கொடுக்குற வரவேற்பில் பக்கத்து வீட்டுக்குக்காரனுக்கு வாந்தியும் - பேதியும் எடுக்கணும்..😊

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, MEERA said:

ஏன் இந்தியா கடுப்பாகாதோ..?

அவர்கள்தான் இந்தியாவோட டு. மேற்கோடும் டு என்று சொல்லிவிட்டார்களே. அவர்கள் மீது இந்தியாவுக்கு கொன்ரோல் இல்லை என்றால்- கடுப்பாகியும் ஒன்றும் செய்ய முடியாது.

ஆகவே அவர்கள் சீனாவை அணுகினால் - இந்தியா கூட்டமைப்புடன் இறங்கி வரக்கூடும்.

அதனால் மக்களுக்கு ஒரு காத்திரமான தீர்வு வர வாய்ப்பு ஏற்படலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சீன தூதர் தங்கள் நிலங்களை பார்வையிட போகின்றார் போல.

  • கருத்துக்கள உறவுகள்

எங்களின் நலன்களைக் காவுகொடுத்து தமது நலன்பேணும் இந்திய ஏகாதிபத்தியத்திற்கும், அதன் உள்ளூர் எடுபிடிகளுக்கும் நிச்சயம் இது உவப்பானதாக இருக்கப்போவதில்லை.

 

கஜன் & கஜன் கூட இந்திய நலன்களுக்கு எதிராகப் போகமாட்டோம் என்றுதான் நிற்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ரஞ்சித் said:

எங்களின் நலன்களைக் காவுகொடுத்து தமது நலன்பேணும் இந்திய ஏகாதிபத்தியத்திற்கும், அதன் உள்ளூர் எடுபிடிகளுக்கும் நிச்சயம் இது உவப்பானதாக இருக்கப்போவதில்லை.

 

கஜன் & கஜன் கூட இந்திய நலன்களுக்கு எதிராகப் போகமாட்டோம் என்றுதான் நிற்கிறார்கள்.

வடக்கிற்கு வரும் சீன தூதுவரை வச்சு அரசியல் செய்வதெல்லாம் நம்மடை கப்பாசிட்டிக்கு நெருங்கவே முடியாது. நாங்கள்  இன்டர்நெஷனல் லெவல் பாலிடிசின்ஸ்  கையை நீட்டினால் அமெரிக்கா காலை நீட்டினால் ஐரோப்பா என்ற ஹை லெவல் பொலிடிக்ஸ் தான் எங்கடை  ஸ்டைல். ஆயுள் வரைக்கும் இந்திய குடியரசுதினமும், சுதந்தர தினமும்,காந்தி ஜெயந்தியும் கொண்டாடி இப்படியே காணாமல் போகவேண்டியதுதான்  

தங்களுக்கு சொந்தமான அட்டை பண்ணைகளை பார்வையிடச் செல்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்காக சீனத் தூதுவர் வடக்கு விஜயம்!

சீனத்தூதுவர் கீ சென்ஹொங்இன்று யாழ்பாணத்திற்கு விஐயம் செய்வதையடுத்து அவரது வருகைக்காக வவுனியாவில் கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்துள்ளது.

சீனாவின்தூதுவர் கீ சென்ஹொங் சீனத் தூதரகத்தின் அன்பளிப்பில் யாழ்ப்பாணம்,மன்னார் மாவட்ட மீனவர்களிற்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இன்று (புதன்கிழமை) வடக்கிற்கு விஐயம்செய்துள்ளார்

வவுனியாவில் அமைந்துள்ள வன்னி கூட்டுப்படைகளின் தலைமையகத்திற்கு இன்று காலை வருகைதந்த அவர்  அங்கிருந்து யாழ்நோக்கி பயணமனார்.

அவரது வருகைக்காக வவுனியா நகரப்பகுதி உட்பட பல்வேறு பகுதிகளிலும், வீதிகளிலும் இராணுவம் மற்றும்  பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்ப்பாடுகள் பலப்படுத்தப்பட்டது.

 

https://athavannews.com/2021/1256829

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் ஐயா? சீனாவை இவையள் சந்திக்க சீனாக்காரன் சொல்லுவான் என்னுடன் உறவை வளர்த்தால் டமிழ் மக்களுக்கு 26 பிளஸ் சிங்கள அரசுடன் பேசி எடுத்து தருவேன் என்று சொல்ல ,அதை நம்பி நம்ம சனமும் சிவத்த கொடியை தூக்கி கொண்டு திரியவே..

On 14/12/2021 at 03:52, goshan_che said:

ஏதாவது ஒரு தமிழ் கட்சி அவரை சந்திக்க முயற்சித்ததா?

கூடமைப்பு முயற்சித்தால் இந்தியா கடுப்பாகும்.

கஜன் & கஜன் முயற்சிக்கலாமே?

🤣

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, கிருபன் said:

சீனாவின்தூதுவர் கீ சென்ஹொங் சீனத் தூதரகத்தின் அன்பளிப்பில் யாழ்ப்பாணம்,மன்னார் மாவட்ட மீனவர்களிற்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இன்று (புதன்கிழமை) வடக்கிற்கு விஐயம்செய்துள்ளார்

 

On 14/12/2021 at 04:17, புரட்சிகர தமிழ்தேசியன் said:

👍..நீங்க கொடுக்குற வரவேற்பில் பக்கத்து வீட்டுக்குக்காரனுக்கு வாந்தியும் - பேதியும் எடுக்கணும்..😊

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

ஏன் ஐயா? சீனாவை இவையள் சந்திக்க சீனாக்காரன் சொல்லுவான் என்னுடன் உறவை வளர்த்தால் டமிழ் மக்களுக்கு 26 பிளஸ் சிங்கள அரசுடன் பேசி எடுத்து தருவேன் என்று சொல்ல ,அதை நம்பி நம்ம சனமும் சிவத்த கொடியை தூக்கி கொண்டு திரியவே..

🤣

பிறகு கொஞ்சகாலம் தந்தை ஷி எண்டு சொல்லி அவர் படத்தை வீட்டில தொங்க விடுவம். பிறகு அவங்கள் ஆமிய அனுப்பி வெளுப்பாங்கள்😔.

  • கருத்துக்கள உறவுகள்
On 14/12/2021 at 06:26, அக்னியஷ்த்ரா said:

நாங்கள்  இன்டர்நெஷனல் லெவல் பாலிடிசின்ஸ்  கையை நீட்டினால் அமெரிக்கா காலை நீட்டினால் ஐரோப்பா என்ற ஹை லெவல் பொலிடிக்ஸ் தான் எங்கடை  ஸ்டைல்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டங்களில் அமெரிக்கா கொடியையும், ஐரோப்பா கொடியையும் வைத்திருப்பதை காணலாம்.

IMG20210224132037.jpg?resize=600%2C450&s

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.பொது நூலகத்தில் “இந்தியன் சென்ரரை” பார்வையிட்ட சீன தூதுவர்!

December 15, 2021
spacer.png

 

 

இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையில் தூதரக அதிகாரிகள் குழு இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள நிலையில் , யாழ்.பொது நூலகத்திற்கு பயணம் மேற்கொண்டு இருந்தார்.

அதன் போது , அங்கு மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடியும் இருந்தார். அத்துடன் நூலகத்திற்கு உதவிகளையும் வழங்கியுள்ளார். 

அதேவேளை யாழ்.பொது நூலகத்தினுள் உள்ள ” இந்தியன் சென்ரர்” பகுதியையும் சீன தூதுவர் பார்வையிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

spacer.png

 

https://globaltamilnews.net/2021/170490

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

சீனாக்காரன் காணி பாத்த போது எடுத்த படம்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழிற்கும் சீனாவிற்கும் இடையில் தொடர்புகளை பேண விரும்புகின்றோம் – இலங்கைக்கான சீனத் தூதுவர்

 
எதிர்வரும் காலங்களில் யாழ்ப்பாணத்திற்கும் சீனாவிற்கும் இடையில் தொடர்புகளை பேண விரும்புகின்றோமென யாழ்ப்பாண பொது நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட சீன நாட்டின் தூதுவர் கீ சென் ஹொங் தெரிவித்தார்.

267754097_636042027530673_43913164720821

பொது நூலகத்தினை பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
 267457497_958911284834388_61168705815333267280474_958911328167717_17907929648744முதன்முதலாக யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ளேன். இன்றைய தினம் நீண்ட கால வரலாற்றினைக் கொண்ட யாழ் பொது நூலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டமையிட்டு நான் மகிழ்வடைகிறேன். யாழ் நூலகத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் யாழ் மாநகர முதல்வர் மற்றும் யாழ் மாநகரசபை ஆணையாளருடன் கேட்டு தெரிந்து கொண்டேன். அவர்கள் நூலகம் பற்றிய முழு விபரங்களையும் எமக்கு விளங்கப்படுத்தியிருந்தார்.
எதிர்வரும் காலங்களில் யாழ்ப்பாணத்திற்கும் சீனாவிற்கும் இடையில் தொடர்புகளை பேண விரும்புகின்றோம் என்றார்.
குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன், இன்று சீன நாட்டின் தூதுவர் பொது நூலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு கணணிகளையும் மேலும் பல புத்தகங்களையும் நமக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார். அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அத்தோடு இந்த நூலகத்தினை இணையவழியிலான நூலகமாக மாற்ற உதவ முடியுமா என கோரிக்கையை முன்வைத்தபோது தாங்கள் அது தொடர்பாக பரிசீலிப்பதாக கூறியிருந்தார் என்றார்.

 

https://thinakkural.lk/article/155594

 

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென் ஹொங் இன்றைய தினம் யாழ்ப்பாண பொது நூலகத்திற்கு விஐயம் செய்தார்.
இதன் போது யாழ் மாநகர முதல்வர் மற்றும் யாழ் மாநகர அதிகரிகளினால் தமிழ் பாரம்பரிய முறைப்படி வரவேற்ப்பு வழங்கப்பட்டது.
 
May be an image of 11 people, people standing and outdoors
 
 
May be an image of 5 people, people standing and people sitting
 
 
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடையம்.ஆரோக்கியமாக தொடர வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சுவைப்பிரியன் said:

நல்ல விடையம்.ஆரோக்கியமாக தொடர வேணும்.

ஆமாம் நிச்சயம் மணிவண்ணனுக்கு பாராட்டுகள் 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சுவைப்பிரியன் said:

நல்ல விடையம்.ஆரோக்கியமாக தொடர வேணும்.

பெரியண்ணை கடுப்பாகுவாரே!

7 minutes ago, Kandiah57 said:

ஆமாம் நிச்சயம் மணிவண்ணனுக்கு பாராட்டுகள் 

ஏதும் மாற்றம் நடக்கப்போகுதோ?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, zuma said:

இதன் போது யாழ் மாநகர முதல்வர் மற்றும் யாழ் மாநகர அதிகரிகளினால் தமிழ் பாரம்பரிய முறைப்படி வரவேற்ப்பு வழங்கப்பட்டது.

 தமிழர்கள் வரவேற்பு மட்டும் கொடுப்பதோடு நின்றுவிடாமல் இன்னும் நிறையவே செய்ய இருக்கின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்கின்ற முகத்தோடு,சம்பந்தன் சுமந்திரன் வகையறாக்கள் "அவாளுக்கு" குடை பிடிக்கும் கலாச்சாரத்தை விட்டு விலகி செல்ல வேண்டும்.  தமிழர் நலன், உரிமை என வரும்போது "அவாளின்" கருத்துகளுக்கு (இனிப்பு, புளிப்பு, இனிப்பு) இடம் கொடுக்கக் கூடாது.

 ஐயா மனோ கணேசன் அவர்கள்,

 இந்தியா என்கின்ற பெரும் பூதம் இலங்கை என்கின்ற பேய் கொடுத்த 13ஆவது திருத்தச்சட்டத்தை அவர்கள் பாணியிலேயே திருப்பி கொடுக்கின்றார். திராணி இல்லாத "அவாளுகள்"  கதா பிரசங்கங்கள் வைக்கிறார்கள் அதை மடை மாற்ற முன்னாள் பின்னால் கூலி கொலையாளிகள் அங்க இங்க ஓடித் திரிகிறார்கள். முடிந்தால் உங்களது இறையாண்மை உட்பட்டு இயற்றப்பட்ட 13ஆவது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள் சவால் விடுகின்றார். ஆனாலும் அவர்களுடைய முகத்திரையை கிழிக்க அதாவது இந்தியா இலங்கை கூட்டு களவாணிகள் அடக்குமுறையை மேலை நாடுகளுக்கு அவர்கள் விரும்பும் வாசலிலேயே கொண்டுபோய் சேர்க்க எத்தனிக்கிறார். நல்ல முயற்சி.

வியட்நாம் போருக்குப் பின்னர் வகுத்த கொள்கைகளை சத்து உன்னிப்பாக அவதானிக்க வேண்டும்.  சமகாலத்திலேயே சீனாவையும், அமெரிக்காவையும் இவ்வாறு உள்ளே வர வைக்கின்றார்கள்.

தமிழர்களுக்கு தேசம் இல்லை உண்மை.ஆனால் இலங்கை இந்தியாவை அண்டி இருக்கும் தமிழர் நாங்கள் ,ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருக்கும் ஒரு இனப்பரம்பல்.

மாறிவரும் உலக ஒழுங்கில் தமிழர்களின் பரம்பல் உலகம் பூராவும் ஏற்பட்டு தெரிந்தோ தெரியாமலோ அவர்களின் உள்ளார்ந்த விடயங்களில் சிறிதளவேனும் செல்வாக்கைச் செலுத்தும் ஒரு காரணியாக மாறிப் போய்விட்டார்கள்.

எத்தனையோ லட்சம் உயிர்களின் இறப்பில் தமிழர் நிலம் சரியான காலத்துக்கான இடுகைகள் அறுவடைக்கும் காத்திருக்கின்றது.

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 13/12/2021 at 16:52, goshan_che said:

ஏதாவது ஒரு தமிழ் கட்சி அவரை சந்திக்க முயற்சித்ததா?

கூடமைப்பு முயற்சித்தால் இந்தியா கடுப்பாகும்.

கஜன் & கஜன் முயற்சிக்கலாமே?

சிந்திக்கத் தெரியவேண்டும் அய்யா😃😃😃

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

 

ஏதும் மாற்றம் நடக்கப்போகுதோ?

ஆமாம் எனக்கு நம்பிக்கையுண்டு. பொறுத்திருந்து பார்ப்போம் 

Edited by Kandiah57

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.