Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதமர் இராஜினாமா?; அவசர ஊடக வெளியீடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமர் இராஜினாமா?; அவசர ஊடக வெளியீடு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யவுள்ளார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளியாகியுள்ளன.

சில நாட்களுக்கு முன்னரும் இன்றையதினமும் இவ்வாறான செய்திகள் வெளிவந்துள்ளன. அந்த செய்தியில் எவ்விதமான உண்மையும் இல்லையென பிரதம அமைச்சின் அலுவலகம் அனுப்பிவைத்துள்ள  ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் இராஜினாமா என்ற செய்தியில் எவ்விதமான உண்மையும் இல்லையென பிரதமரின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.

spacer.png

https://www.tamilmirror.lk/செய்திகள்/பிரதமர்-இராஜினாமா-அவசர-ஊடக-வெளியீடு/175-288541

  • கருத்துக்கள உறவுகள்

எதைத்தான் அவர்கள் உண்மை என்று ஏற்றுக்கொண்டார்கள்....? முள்ளிவாய்கால் இன அழிப்பைக்கூட உண்மை என்று அவர்கள் ஏற்றுக்கொண்டதுண்டா....??😎

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா ராஜினாமா?மகிந்த ராஜினாமா?பசில் பிரதமராகிறார் போன்ற செய்திகள் வருவதற்குக் காரணம் என்ன?இப்படியான முன்னுக்குப் பின்னான முரஒ;பாடான செய்திகள் தற்போது அடிக்கடி வருவது ஏன்? அதுவும் பெரும்பான்மை அரசாங்கமாக இருக்கும் நிலையில். இதற்கும் நாட்டின் பொருளாதாரதர வீழ்ச்சிக்கும் சம்பந்தம் இருக்கிறதா?

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த ஆதரவாளர்கள், நெருங்கிய சகாக்கள் இம்மாதம் வெளிநாட்டு விசாக்கள் சகிதம் நாட்டைவிட்டு வெளியேறுவதில் மும்முரமாக இருப்பதாக காற்றுவாக்கில் கதை அடிபடுகிறது யாருக்கேனும் தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

🔥 நெருப்பு…. இல்லாமல், புகையாது. 🌪
ஏதோ… ஒண்டு, நடக்கப் போகுது என்று… தெரிகிறது. 🧐
நமது… யாழ்.கள அரசியல் ஆய்வாளர்களும், மௌனமாக இருக்கிறார்கள். 😂
ஓ…. நிலைமையை, உன்னிப்பாக அவதானிக்கிறார்கள் போலுள்ளது. 🤣        😜

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

🔥 நெருப்பு…. இல்லாமல், புகையாது. 🌪
ஏதோ… ஒண்டு, நடக்கப் போகுது என்று… தெரிகிறது. 🧐
நமது… யாழ்.கள அரசியல் ஆய்வாளர்களும், மௌனமாக இருக்கிறார்கள். 😂
ஓ…. நிலைமையை, உன்னிப்பாக அவதானிக்கிறார்கள் போலுள்ளது. 🤣        😜

யாருக்கும் நோகாமல், எவரையும் கொச்சை படுத்தாமல், கர்பிணிகள், இளகிய மனம் படைத்தவர்கள் சஞ்சலப்படாமல் எப்படி எழுதுவது எண்டு யோசிக்கிறார்களோ🤣😜

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

யாருக்கும் நோகாமல், எவரையும் கொச்சை படுத்தாமல், கர்பிணிகள், இளகிய மனம் படைத்தவர்கள் சஞ்சலப்படாமல் எப்படி எழுதுவது எண்டு யோசிக்கிறார்களோ🤣😜

  🍆🍆🍆கத்தரிக்காய் முத்தினால்…. சந்தைக்கு வரத்தானே வேணும்.😂 🤣 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தமிழ் சிறி said:

🔥 நெருப்பு…. இல்லாமல், புகையாது. 🌪
ஏதோ… ஒண்டு, நடக்கப் போகுது என்று… தெரிகிறது. 🧐
நமது… யாழ்.கள அரசியல் ஆய்வாளர்களும், மௌனமாக இருக்கிறார்கள். 😂
ஓ…. நிலைமையை, உன்னிப்பாக அவதானிக்கிறார்கள் போலுள்ளது. 🤣        😜

உங்கள் ஆசைக்காக

மேற்குலகம் அமெரிக்கா விரும்பும் ஒருவரை பிரதமராக்கலாம்.

ஆனபடியால் ரணில் அல்லது பசில் பிரதமராகலாம்.
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

எதைத்தான் அவர்கள் உண்மை என்று ஏற்றுக்கொண்டார்கள்....? முள்ளிவாய்கால் இன அழிப்பைக்கூட உண்மை என்று அவர்கள் ஏற்றுக்கொண்டதுண்டா....??😎

ஆமாம் நீங்கள் சொல்வது உண்மை...ஆனால் நம்ம தமிழர்கள் அனைவரும் பூரணமாக ஏற்றுக்கொண்டார்களா ?...இல்லையென்றால் ஏன்?...ஆம் எனில்    அதற்கு எதிராக ஓற்றுமையாக  என்ன நடவடிக்கை எடுததார்கள

14 minutes ago, தமிழ் சிறி said:

  🍆🍆🍆கத்தரிக்காய் முத்தினால்…. சந்தைக்கு வரத்தானே வேணும்.😂 🤣 

இந்த வகை கத்தரிக்காய் ஒருபோதும் முத்தாது. 100 வருடம் சென்றாலும்....

🤣😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

உங்கள் ஆசைக்காக

மேற்குலகம் அமெரிக்கா விரும்பும் ஒருவரை பிரதமராக்கலாம்.

ஆனபடியால் ரணில் அல்லது பசில் பிரதமராகலாம்.
 
ரணில், பிரதமராக வந்தால்… சம்பந்தன், சுமந்திரன்
எதிர்க்கட்சி தலைவராக…. வர சந்தர்ப்பம் உள்ளதா?🤣

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

ரணில், பிரதமராக வந்தால்… சம்பந்தன், சுமந்திரன்
எதிர்க்கட்சி தலைவராக…. வர சந்தர்ப்பம் உள்ளதா?🤣

எதிர்க்கட்சியாக வர சந்தர்ப்பமே இல்லை.

ஆனாலும்
மேசைக்கு கீழால்
பொதி,சொதி
பெட்டி,கிட்டி
இப்படி ஏதாவது கிடைக்கலாம்.

எதுக்கும் ஐயா சம்பந்தரின் ஆயுளை வேண்டவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 minutes ago, தமிழ் சிறி said:

ரணில், பிரதமராக வந்தால்… சம்பந்தன், சுமந்திரன்
எதிர்க்கட்சி தலைவராக…. வர சந்தர்ப்பம் உள்ளதா?🤣

இல்லை தெரியாமல் கேக்கிறன் சம்சும் கொம்பனி எதிர்க்கட்சிக்கு வந்து என்ன கோதாரியை புடுங்குவினம்? 😎

அதை யோசிக்கவே எனக்கு கெட்ட கோவம் வருது சிறித்தம்பி....🤣

அது சரி இண்டைக்கு என்ன சாப்பிட்டனியள்......இண்டைக்கும் இரண்டு முட்டை? 🤪

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் அரசியலுக்கு ராஜபக்ஸக்களே சரியானவர்கள் ரணில் மற்றும் ரணிலதும் அமெரிக்காவினதும் கைத்தடியான "சுமந்திரனது" கூட்டு அரசாங்கம் தமிழர்களைப் படிகுழியில் கொண்டுபோய்விடும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

ரணில், பிரதமராக வந்தால்… சம்பந்தன், சுமந்திரன்
எதிர்க்கட்சி தலைவராக…. வர சந்தர்ப்பம் உள்ளதா?🤣

அமிர், சம்பந்தருக்கு ஒரு தடவை எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்தது.  அப்போ அரசு கிழித்த கோட்டை இருவரும் தாண்டவில்லை என்பதை பணிவன்புடன் தெரிவித்து எனது உரையை முடிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nunavilan said:

அமிர், சம்பந்தருக்கு ஒரு தடவை எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்தது.  அப்போ அரசு கிழித்த கோட்டை இருவரும் தாண்டவில்லை என்பதை பணிவன்புடன் தெரிவித்து எனது உரையை முடிக்கிறேன்.

இவர்கள் எதிர்க் கட்சியில் இருந்து கொண்டே… 
ரணிலின் பிரதமர் பதவிக்கு ஆபத்து வந்த போது… 
சுமந்திரன் என்பவர், நீதிமன்றம் போய்… ரணிலின் பதவியை காப்பாற்றி… உலக அளவில் யாரும் செய்யாததை செய்து…
தமிழர்களின்  😁 “இளிச்சவாய் தனத்தை” 😁 காட்டியவர்கள் என்பதனையும்….
இந்த சந்தர்ப்பத்தில் நினைவூட்ட கடமைப் பட்டுள்ளேன். 😁 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்

  மஹிந்த மட்டுமல்ல , கோத்தபாய , பசில் உட்பட எவர் ராஜினாமா பண்ணினாலும் அதனால நமக்கு என்னதான் நன்மை வந்துவிட போகிறது?

இப்போது ஆட்சியில் இருக்கும் ஆட்சியில் உள்ள சிங்கள தலைவர்களுக்கும், இப்போது ஆட்சியில் இல்லாத சிங்கள தலைவர்களுக்கும் ஒரேயொரு வித்தியாசம்தான்.

ஆட்சியில் உள்ளவர்களுக்கு தமிழர்களை இனபடுகொலை செய்ய வாய்ப்பு கிடைத்திருக்கிறது,

ஆட்சியில் இல்லாதவர்களுக்கு தமிழர்களை இனவேட்டையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த இரண்டு தரப்பில் எவராவது தமிழர்களுக்கு இழைக்கப்பட்டது அநீதி என்று எப்போதாவது சொன்னதுண்டா?

எதிர் தரப்பில் உள்ளவர்கள் கவலையெல்லாம் தமிழரை இனபடுகொலை செய்து சிங்களவர்களிடம் வீரபரம்பரை என்று பெயர் வாங்க ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற கவலைதான்.

நல்லாட்சியென்று சொல்லிக்கொண்டு வந்த மைத்திரிகூட, ஒப்புக்கு சில தமிழ் கைதிகளை விடுவித்துக்கொண்டு, மறுவளத்தில் ஹிஸ்புல்லா மூலமாக ஒட்டுமொத்த கிழக்கையும் முஸ்லிம்கள் கையில் ஒப்படைக்கும் சதி திட்டத்தில் இறங்கினான்.

அவரோடு பார்க்கும்போது மஹிந்த கூட்டம் ஏதோ சும்மாவாச்சும் பரவாயில்லை.

ஆக சிங்கள தலைமைகள் மாறினாலும், தமிழரின் தலைவிதி ஒருபோதும் மாற போவதில்லை என்பதே மனசுக்கு உறைக்கும் யதார்த்தம்.

  • கருத்துக்கள உறவுகள்

எவன் வந்தும் தமிழருக்கு எந்த நன்மையும் செய்யப்போவதில்லை.  நேரம் இருக்கிறவர்கள் இதில விரும்பியதை எழுதி நேரம் போக்காட்டலாம் அவ்வளவே. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Elugnajiru said:

தமிழர் அரசியலுக்கு ராஜபக்ஸக்களே சரியானவர்கள் ரணில் மற்றும் ரணிலதும் அமெரிக்காவினதும் கைத்தடியான "சுமந்திரனது" கூட்டு அரசாங்கம் தமிழர்களைப் படிகுழியில் கொண்டுபோய்விடும். 

இப்படி தான்  2005 இல் இயக்கம் சொல்லி அழிந்து போனார்கள். வரலாற்றில் இருந்து பாடங்களை கற்காவிடில், வரலாறு எங்களை மன்னிக்காது.
 
  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எவன் வந்தும் தமிழருக்கு எந்த நன்மையும் செய்யப்போவதில்லை.  நேரம் இருக்கிறவர்கள் இதில விரும்பியதை எழுதி நேரம் போக்காட்டலாம் அவ்வளவே. 

ஆனால் விருதென்று வரும்போது எவ்வளவு பவ்வியமாக.. அரச விருது என்று தலைப்புப் போட்டிருக்கிறீங்க. சிங்கள பெளத்த பேரினவாத தமிழின அழிப்பு அரச விருதுன்னு தானே சொல்லி இருக்கனும்.. அதற்கு பரிந்துரைச்சவையிட்ட உறுதியா இருந்து.. உந்த விருதுக்கு ஆக்கத்தை அனுப்பிறதை.. மறுதலிச்சிருக்கனும். ஆனால்.. அதைச் செய்யல்லப் பாருங்க.. அப்படித்தான்.. இதிலும்.. அவரவர் தமது ஆற்றலை.. ஆற்றாமைகளை எழுதவே செய்வர். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எவன் வந்தும் தமிழருக்கு எந்த நன்மையும் செய்யப்போவதில்லை.  நேரம் இருக்கிறவர்கள் இதில விரும்பியதை எழுதி நேரம் போக்காட்டலாம் அவ்வளவே. 

இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன என்று அடிச்ச பியரும், தின்ற சோறும் சமிபாடு அடைய புலம்பெயர்ந்தோர் சொல்லிக் கொண்டு திரியலாம். ஆனால் தாயகத்தில் இருப்பவர்களுக்கு வாழ்வியல் பிரச்சனை, அவர்கள் சந்தர்ப்பத்துக்கு ஏற்ற மாதிரி முடிவுகளை கடந்த காலத்தில் எடுத்திருந்தார்கள், எதிர்காலத்திலும் எடுப்பார்கள்.

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

ஆனால் விருதென்று வரும்போது எவ்வளவு பவ்வியமாக.. அரச விருது என்று தலைப்புப் போட்டிருக்கிறீங்க. சிங்கள பெளத்த பேரினவாத தமிழின அழிப்பு அரச விருதுன்னு தானே சொல்லி இருக்கனும்.. அதற்கு பரிந்துரைச்சவையிட்ட உறுதியா இருந்து.. உந்த விருதுக்கு ஆக்கத்தை அனுப்பிறதை.. மறுதலிச்சிருக்கனும். ஆனால்.. அதைச் செய்யல்லப் பாருங்க.. அப்படித்தான்.. இதிலும்.. அவரவர் தமது ஆற்றலை.. ஆற்றாமைகளை எழுதவே செய்வர். 

இதுவும் நல்ல ஜடியாதான்.. உது பரிசு கிடைக்குதோ இல்லையோ.. கன்பார்ம் இல்ல.. ஆனா சுமேரியர் மறுதலிச்சிருந்தா ரீவி ரேடியோ நியூஸ்பேப்பர் எண்டு எல்லாந்திலும் வந்து ஆள் கடும் பேமஸ் ஆகி இருப்பா.. பரிசு கிடைத்தத விட பலமடங்கு பேமஸ்.. ஊரில இருக்குற சனம்தான் பயப்பிடோனும்.. வெளிநாட்டில இருக்குறவைக்கு என்ன பயம்.. ஒரு விருதுக்கு ஆசைப்பட்டு இன அழிப்பை மறக்கலாமோ.. இப்படி அரிதாக கிடைக்கும் சந்தர்ப்பம்க்களில் நாம் நம் இனத்துக்காக நமது எதிர்ப்பை வரலாற்றில் பதிவு செய்து வைக்கோணும்.. எத்தனையோ விளையாட்டு வீரர்கள் எழுத்தாளர்கள் இப்படி முன்னர் செய்திருக்கினம்.. அண்மையில் சிங்களவர்கூட புத்தபிக்கு ஒருவரிடம் இருந்து பட்டம் வாங்காமல் புறக்கணித்திருந்தனர்.. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.