Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நித்தியானந்தாவின் "கைலாசா நாடு" கிளிநொச்சியில் இயங்கியது கண்டு பிடிக்கப் பட்டது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Godman Nithyananda's Own Country

நித்தியானந்தாவின்  "கைலாசா நாடு" கிளிநொச்சியில் இயங்கியது கண்டு பிடிக்கப் பட்டது.

கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு... சுவாமி நித்தியானந்தா கைலாசா நாடு என்று நாட்டை உருவாக்கி,
அதற்கு என தனியே... கடவுச்சீட்டு, நாணயம் போன்றவற்றை அறிமுகப் படுத்தி இருந்த போது...
இந்திய அரசு அந்த நாடு எங்கே இருக்கும் என்ற தேடுதலில் தனது உளவுத் துறை மூலம் 
பல இடங்களிலும் இரகசியமாக தேடுதல் நடாத்தி வந்தது.

குறிப்பாக... பசிபிக் சமுத்திரத்தில் எங்காவது ஒரு நாட்டில் 
அவர் தனியே ஒரு தீவை வாங்கி அதற்கு கைலாசா என்ற பெயரை வைத்திருக்கலாம் 
என்ற சந்தேகத்தில்  அங்கு இந்திய அரசு கூடுதல் கவனத்தை செலுத்தியது.
அங்கு பல வருடம் தேடியும் கண்டு பிடிக்காத நிலையில்...
தென்னாபிரிக்கா, மாலைதீவு பகுதிகளில் தனது தேடுதல் நடவடிக்கையை தீவிரப் படுத்தியும் 
பலன் கிடைக்காத நிலையில், தேடுதல் நடவடிக்கையை கைவிட்டு இருந்தார்கள்.

இந்நிலையில்... கிளிநொச்சியில் உள்ள உருத்திரபுரம் கிராமத்தில் 
30 ஏக்கர் நிலத்தில் ஒரு பண்ணை மாதிரி இயங்கிய இடத்தில்...
பல வெளிநாட்டு, உள்நாட்டு,  இந்தியர்களின் நடமாட்டம் அதிகம் இருப்பதாக 
இலங்கை புலனாய்வுத்துறைக்கு தகவல் தெரிய வர... அந்த இடத்திற்கு சென்ற அவர்கள்,
அவ்விடத்தை சோதனையிட, 30 பேருடன் நித்தியானந்தா இருந்தது கண்டு பிடித்து 
இலங்கை பொலிஸாரின் துணையுடன் கைது செய்தார்கள்.

கைது செய்யும்  போது... நித்தியானந்தா எந்த எதிர்ப்பையும் காட்டாமல், 
பொலிஸாருக்கு ஒத்துழைப்பு கொடுத்ததாக தெரிவிக்கப் படுகின்றது.  

நித்தியாந்தாவை கைது செய்த இலங்கை பொலிஸாருக்கு,
இந்திய அரசு உடனடியாக இலங்கை அரசுக்கு பாராட்டு தெரிவித்து... 
அவரை இந்தியாவிடம் ஒப்படைக்கும் படி அரச உயர் மட்டத்தில் 
பேச்சு நடத்தப் பட்டுக் கொண்டு இருக்கின்றது.

https:// Suya aakkam. Com

Edited by தமிழ் சிறி

  • Replies 56
  • Views 4.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

நித்தியானந்தாவின்  "கைலாசா நாடு" கிளிநொச்சியில் இயங்கியது கண்டு பிடிக்கப் பட்டது.

தெய்வமே!   கிளிநொச்சியிலிருந்து அருள்பாலிக்கின்றாயா? :beaming_face_with_smiling_eyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

தெய்வமே!   கிளிநொச்சியிலிருந்து அருள்பாலிக்கின்றாயா? :beaming_face_with_smiling_eyes:

சில மாதங்களுக்கு முன்பு  கிளிநொச்சியில்  வசித்த எனது உறவினர் ஒருவர்,
நித்தியானந்தாவை போல ஒரு ஆளை.. ஒரு வாகனத்தின் உள்ளே பின் சீட்டில் இருந்து போனதை கண்டதாக சொன்னார். வாகனம் கெதியாக போனதால்... தான் சரியாக கவனிக்கவில்லை என்றார்.
அவர் இங்கு வருவாரா.... என்று சொல்லிவிட்டு, நான் அந்தக் கதையை மறந்து விட்டேன்.  
இப்ப பார்த்தால், இவர் நம்மடை ஊரில் வந்து இருந்திருக்கிறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, தமிழ் சிறி said:

தெய்வமே உன் திருவிளையாடலை தொடங்கிவிட்டாயா 👍

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நந்தன் said:

தெய்வமே உன் திருவிளையாடலை தொடங்கிவிட்டாயா 👍

தெய்வம் தனது  திருவிளையாடலை இன்று  அதுவும்  கிளிநொச்சியில் தொடங்கியிருப்பது கவனிக்க  வரவேற்கத்தக்கது?😂

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, தமிழ் சிறி said:

சில மாதங்களுக்கு முன்பு  கிளிநொச்சியில்  வசித்த எனது உறவினர் ஒருவர்,
நித்தியானந்தாவை போல ஒரு ஆளை.. ஒரு வாகனத்தின் உள்ளே பின் சீட்டில் இருந்து போனதை கண்டதாக சொன்னார். வாகனம் கெதியாக போனதால்... தான் சரியாக கவனிக்கவில்லை என்றார்.
அவர் இங்கு வருவாரா.... என்று சொல்லிவிட்டு, நான் அந்தக் கதையை மறந்து விட்டேன்.  
இப்ப பார்த்தால், இவர் நம்மடை ஊரில் வந்து இருந்திருக்கிறார்.

எனக்கு தெரிந்த ஒருவரும் கிளிநொச்சியில் A9 வீதிக்கு இடதுபுறம் உள்ள இரெணைமடு குளம், மற்றும் கல்மடுகுளம் இடையில் பாரிய விஸ்தீரணத்தில் ஏதோ முன்னெடுப்பு நடப்பதாயும், உள்ளூர்வாசிகள் அந்த பகுதிக்கு போவது தடை செய்யபட்டுள்ளது என்றும் சொன்னவர்.

இதுதான் போலும்?

ஆனால் இலங்கை, இந்திய அரசுகளுக்கு இது தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

ரோவின் நாடகமாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, விசுகு said:

தெய்வம் தனது  திருவிளையாடலை இன்று  அதுவும்  கிளிநொச்சியில் தொடங்கியிருப்பது கவனிக்க  வரவேற்கத்தக்கது?😂

கிளிநொச்சியிலிருந்து தொடங்கி  வெடுக்குநாறி, குருந்தூர் வழியாக புத்தன், இடம்பிடித்து ஒளித்துபிடித்து விளையாடும் இடமெல்லாம் தொடரணும்!        

  • கருத்துக்கள உறவுகள்

இங்க 4 மணியாகிவிட்டது, அப்ப அறிவிக்கலாமா?!

  • கருத்துக்கள உறவுகள்

Eyes Dance Beautiful Eyes GIF - Eyes Dance Beautiful Eyes Eye Makeup -  Discover & Share GIFs

நாடகம் எல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே......!   😂

Edited by suvy
திருத்தம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியன் எம்பஸியின் மறுப்பு அறிக்கைக்காக வெயிட்டிங்😂🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

https:// Suya aakkam. Com

அவர்கள் அனைவரும் சற்றுமுன்னர் இந்தியாவிடம்   ஓப்படைக்கப்பட்டுள்ளதுடன்.    இலங்கையும் இந்தியாவும்   கைலாசா.  நாட்டை அங்கீகாரித்துள்ளன...மட்டுமல்ல   ஏனைய நாடுகளையும். அங்கீகாரம்…………………… வழங்கும்படி கோரிக்கை விட்டு உள்ளார்கள்   🤣😂.    சுய   இன்பம்.  காம்.     ஜேர்மனி 😛

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

நித்தியானந்தாவின்  "கைலாசா நாடு" கிளிநொச்சியில் இயங்கியது கண்டு பிடிக்கப் பட்டது.

உங்கள் திறமைக்கு நித்தா உங்களை வெளிவிவகார அமைச்சராக நியமிப்பார் தொடர்பு கொண்டால்😎

Just now, Kandiah57 said:

   சுய   இன்பம்.  காம்.     ஜேர்மனி 😛

🤣

22 minutes ago, suvy said:

Eyes Dance Beautiful Eyes GIF - Eyes Dance Beautiful Eyes Eye Makeup -  Discover & Share GIFs

நாடகம் எல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே......!   😂

ஆகா என்னவொரு அழகான கயல் விழிகள்

  • கருத்துக்கள உறவுகள்

கைது செய்யும்  போது... நித்தியானந்தா எந்த எதிர்ப்பையும் காட்டாமல், 
பொலிஸாருக்கு ஒத்துழைப்பு கொடுத்ததாக தெரிவிக்கப் படுகின்றது.  

அவர் நோமலாவே ஒத்துழைப்பு குடுக்கிற ஆள்😁

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா….. அவரது பெண் சீடர்கள் என்ன ஆனார்கள்? ஒருவரும் தப்பி ஓடவில்லையா?

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

ஆகா….. அவரது பெண் சீடர்கள் என்ன ஆனார்கள்? ஒருவரும் தப்பி ஓடவில்லையா?

அவர்களை பொறுப்பில் எடுக்க, நம்ம உடான்ஸ் சுவாமிகள், கிளிநொச்சிக்கு தலை தெறிக்க ஓட்டம் பிடித்தார். 😁

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

அவர்களை பொறுப்பில் எடுக்க, நம்ம உடான்ஸ் சுவாமிகள், கிளிநொச்சிக்கு தலை தெறிக்க ஓட்டம் பிடித்தார். 😁

உடான்சை பார்த்து பெண் சீடர்கள் ஓடாமல் இருக்க வேணும் .

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையோ பொய்யோ, கிளிநொச்சியில் கைலாசா என்றவுடன் ரஞ்சிதா மகமாயியை நினைத்த்தவுடன் ஒரு கிளுகிளுப்பு  🥰

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, MEERA said:

ஆகா….. அவரது பெண் சீடர்கள் என்ன ஆனார்கள்? ஒருவரும் தப்பி ஓடவில்லையா?

40 minutes ago, பெருமாள் said:

உடான்சை பார்த்து பெண் சீடர்கள் ஓடாமல் இருக்க வேணும் .

42 minutes ago, Nathamuni said:

அவர்களை பொறுப்பில் எடுக்க, நம்ம உடான்ஸ் சுவாமிகள், கிளிநொச்சிக்கு தலை தெறிக்க ஓட்டம் பிடித்தார். 😁

பிந்திய அறிவிப்பு 

யாரும் பதற வேண்டாம். சிஷ்யைகள் எல்லாரையும் கணக்கு பண்ணி….சை….கணக்கு பார்த்து உடான்ஸ்சாமியார் பொறுப்பேற்றுக்கொண்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, MEERA said:

ஆகா….. அவரது பெண் சீடர்கள் என்ன ஆனார்கள்? ஒருவரும் தப்பி ஓடவில்லையா?

அங்கே இரகசிய அறையில் இருந்தார்கள்....தகவல் அறிந்து....சிறிதரன்  பாராளுமன்ற உறுப்பினர்...குடை பிடிக்கும்..ஒருவருடன்  ஸ்தாலத்துக்கு  உடனும்   விஐயம்.  செய்தார்...குடை  பிடிப்பவன்.  குடையை. போட்டு விட்டு   ஒரு பெண் சீடருடன்.  ஓடிச்சென்று விட்டார்.........இந்த   நிகழ்வை நேரில் பார்த்த சிறிதரனுக்கு கண் மண் தெரியாத கோபம்......கொண்டு   ரணிலுடன.  தொடர்பு கொண்டு   விடயத்தை  விளக்கப்படுத்தி    சம்பந்தப்பட்ட நபரை  உடனுனும். கைது செய்து   பத்து ஆண்டுகளுக்கு  பயங்கர வாததடைச்சட்டத்தின்.  கீழே சிறையினுள்ளே அடைக்கும்படி கேட்டு கொண்டார்.......அதற்கு ரணில்   மறுத்து விட்டார்....என்னுடைய  செல்லப்பிராணி    சுமந்திரன் ஊடக   தொடர்பு கொண்டால் மட்டுமே உடன்  நடவடிக்கை எடுக்கப்படும்    என. பதில் கூறியுள்ளார் 🤣🙏 யாவும் சுய. கற்பனை 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kandiah57 said:

சம்பந்தப்பட்ட

90 வயசிலும் ஓட்டத்துக்கு குறைவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

90 வயசிலும் ஓட்டத்துக்கு குறைவில்லை.

நீங்கள் நைசாக... சம்பந்தப் பட்டவரை, கோத்து விடுகிறீர்கள். 😂 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Kandiah57 said:

அவர்கள் அனைவரும் சற்றுமுன்னர் இந்தியாவிடம்   ஓப்படைக்கப்பட்டுள்ளதுடன்.

தேவையில்லாத வதந்திகளை பரப்பாதீர்கள். சபிக்கபடுவீர்கள்.😁

Nithyananda Shrikailasa GIF - Nithyananda Shrikailasa Shiva GIFs

  • கருத்துக்கள உறவுகள்

 இறுதியாக  கிடைத்த தகவலின்படி "  சிரிப்பு சிங்கன் குழு " போலிச்செய்தியை  பரப்புவதாக   இலங்கை இந்தியா   கூட்டுப்படை  வலை வீசித் தேடுகிறார்கள். கண்டு  பிடிப்பவருக்கு சன்மானமாக ஆயிரம்   கோடி  வெகுமதி என்றும் அறிவித்திருக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

உண்மையோ பொய்யோ, கிளிநொச்சியில் கைலாசா என்றவுடன் ரஞ்சிதா மகமாயியை நினைத்த்தவுடன் ஒரு கிளுகிளுப்பு  🥰

உங்களுக்கு எப்பொழுதும் மற்றவர்களின் மீது தான் மோகமா???🤪

3 hours ago, நந்தன் said:

கைது செய்யும்  போது... நித்தியானந்தா எந்த எதிர்ப்பையும் காட்டாமல், 
பொலிஸாருக்கு ஒத்துழைப்பு கொடுத்ததாக தெரிவிக்கப் படுகின்றது.  

அவர் நோமலாவே ஒத்துழைப்பு குடுக்கிற ஆள்😁

இதன் படி தற்பொழுது நித்தியானந்தா வைத்திருந்த கார் தங்கள் வசம்??🤪

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.