Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பிலிப்பைன்ஸ் இல் நடைபெற்ற நேஷனல் மாஸ்டர்ஸ் என்ட் சீனியர் அத்லடிக்ஸ் (National Masters & Seniors Athletics) போட்டியில் முல்லைத்தீவை சேர்ந்த வீராங்கனை இரண்டு தங்கப்பதக்கங்களை தனதாக்கியுள்ளார்.

இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முல்லைத்தீவு - முள்ளியவளை, சேர்ந்த அகிலத்திருநாயகி (75 வயது) (ஓய்வு பெற்ற சிறைச்சாலைகள் உத்தியோகத்தர்) என்ற வீராங்கனையே இந்த சாதனையை படைத்துள்ளார்.

தங்கப் பதக்கம் வென்று சாதனை

 

1500 மீட்டர் ஓட்டப்போட்டி மற்றும், 5000m விரைவு நடை ஆகிய போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளார்.

75 வயதில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த முல்லைத்தீவு பெண் | Ecord At The Age Of 75 Winning A Gold Medal

 

மேலும் 800m ஓட்டபோட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் தனதாக்கியுள்ளார்.

https://tamilwin.com/article/ecord-at-the-age-of-75-winning-a-gold-medal-1700531291

  • கருத்துக்கள உறவுகள்

23-655c0e5b2ae44.webp

75 வயதில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த முல்லைத்தீவு பெண்.

அண்மையில் பிலிப்பைன்ஸ் இல் நடைபெற்ற நேஷனல் மாஸ்டர்ஸ் என்ட் சீனியர் அத்லடிக்ஸ் (National Masters & Seniors Athletics) போட்டியில் முல்லைத்தீவை சேர்ந்த வீராங்கனை இரண்டு தங்கப்பதக்கங்களை தனதாக்கியுள்ளார்.

இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முல்லைத்தீவு - முள்ளியவளை, சேர்ந்த அகிலத்திருநாயகி (75 வயது) (ஓய்வு பெற்ற சிறைச்சாலைகள் உத்தியோகத்தர்) என்ற வீராங்கனையே இந்த சாதனையை படைத்துள்ளார்.

1500 மீட்டர் ஓட்டப்போட்டி மற்றும், 5000m விரைவு நடை ஆகிய போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளார்.

மேலும் 800m ஓட்டபோட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் தனதாக்கியுள்ளார்.

23-655c0e5a635a5.webp

23-655c0e5ac3463.webp

https://tamilwin.com/article/ecord-at-the-age-of-75-winning-a-gold-medal-1700531291?fbclid=IwAR3zmUdSQIDQx7t6ffhBxEx5-TUCKSfNvQxhZc7954P68RwFsXgA40hjtr4

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அட கடவுளே பார்க்கவே கண் கலங்குது.

இந்த அம்மா வெறும் காலுடன் ஓடி பதக்கங்கள் எடுத்திருக்கிறா.

வாழ்த்துக்கள் அம்மா.

  • கருத்துக்கள உறவுகள்

animiertes-sport-smilies-bild-0437.gif  இத்தனைக்கும்  பாதணிகள் இல்லாமல், வெறுங்காலுடன் ஓடி நிகழ்த்திய சாதனைகள்... animiertes-sport-smilies-bild-0351.gif
1️⃣  1500 மீட்டர் ஓட்டம் - தங்கப் பதக்கம்.   animiertes-gewinner-smilies-bild-0010.gi
1️⃣  5000 மீட்டர் விரைவு நடை – தங்கப் பதக்கம்.   animiertes-gewinner-smilies-bild-0001.gi
2️⃣  800 மீட்டர் ஓட்டம் - வெண்கலப் பதக்கம். animiertes-gewinner-smilies-bild-0008.gi
4️⃣  5000 மீட்டர் ஓட்டம் - நான்காம் இடம். 4️⃣  animiertes-gewinner-smilies-bild-0012.gi

உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை அம்மா. animiertes-applaus-smilies-bild-0020.gif

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, ஈழப்பிரியன் said:

அட கடவுளே பார்க்கவே கண் கலங்குது.

இந்த அம்மா வெறும் காலுடன் ஓடி பதக்கங்கள் எடுத்திருக்கிறா.

வாழ்த்துக்கள் அம்மா.

வ‌றுமையோட‌ இருந்தாலும் சாதிக்கும் திற‌மை இருந்து இருக்கு.........இவாவின் இள‌மை கால‌த்தில் எம‌க்கு என்று ஒரு நாடு இருந்து இருந்தா நாட்டுக்கு ந‌ம் இன‌த்துக்கு பெருமை சேர்த்து இருப்பா

  • கருத்துக்கள உறவுகள்

பிலிப்பைன்ஸில் தங்கம் வென்ற முல்லைத்தீவின் 75 வயதான அகிலத்திருநாயகி !

Published By: DIGITAL DESK 3   21 NOV, 2023 | 12:30 PM

image

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முள்ளியவளை, முல்லைத்தீவைச் சேர்ந்த திருமதி அகிலத்திருநாயகி (75) இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளதோடு ஒரு வெண்கலப்பதக்கத்தையும் பெற்றுள்ளார். 

இவர் 1,500 மீற்றர் ஓட்டம் மற்றும் 5000 மீற்றர் விரைவு நடை போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

இதேவேளை, 800 மீற்றர் ஓட்டத்தில் வெங்கலப் பதக்கத்தையும் 5000 மீற்றர் ஓட்டத்தில் நான்காம் இடத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/169852

  • கருத்துக்கள உறவுகள்

 வாழ்த்துக்கள் அம்மா.  பாவம் கூட்டிக் கொண்டுபோனவர்கள் கூடவா ஒரு சப்பாத்து வாங்கி கொடுக்க வில்லை.  அல்லது அது அவருக்கு சங்கடமாய் இருக்கும் போல . வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை எதிர் கொண்டு இருப்பார்போல . அவரது தன்னம்பிக்கை இன்னும்  முன்னேற வைக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

மனமுவந்த வாழ்த்துக்கள் அகிலத்திருநாயகி அம்மா👏👏👏

 

1 hour ago, நிலாமதி said:

 வாழ்த்துக்கள் அம்மா.  பாவம் கூட்டிக் கொண்டுபோனவர்கள் கூடவா ஒரு சப்பாத்து வாங்கி கொடுக்க வில்லை.  அல்லது அது அவருக்கு சங்கடமாய் இருக்கும் போல . வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை எதிர் கொண்டு இருப்பார்போல . அவரது தன்னம்பிக்கை இன்னும்  முன்னேற வைக்கும். 

அவர் சப்பாத்துப் போட்டிருந்தால் பதக்கம் வெல்லாமலும் போயிருக்கக்கூடும்!

அவருக்கு ரொம்பத் தன்னம்பிக்கை இருக்கு நிலாமதி அக்கா. இந்தச் சாதனையைப் பார்த்தாவது புலம்பெயர் நாடுகளில் ஐந்து நிமிடம் நடக்கப் பஞ்சிப்படும் முதுமையை அண்ணிப்பவர்கள் குறைந்தது 20 நிமிடம் தினமும் நடக்கவேண்டும்😁

 

  • கருத்துக்கள உறவுகள்

தன்நம்பிக்கையில் தோல்வி அடையாதவரை வெற்றி நிச்சயம். வாழ்த்துக்கள் அம்மா. நீங்கள் பல இளையோருக்கு மட்டுமன்றி.. 60 என்றதும் வீட்டுக்குள் முடக்க நினைக்கும் பேர்வழிகளுக்கும் நல்ல வழிகாட்டி. 

  • கருத்துக்கள உறவுகள்

தங்களது தன்னம்பிக்கைக்கும் முயற்சிகளுக்கும் தலை வணங்குகிறோம் தாயே.......நீங்கள் இன்னும் பல வருடங்கள் வாழ்ந்து சாதனைகள் பல செய்திட வேண்டும்.......!  🙏

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

புலம்பெயர் நாடுகளில் ஐந்து நிமிடம் நடக்கப் பஞ்சிப்படும் முதுமையை அண்ணிப்பவர்கள் குறைந்தது 20 நிமிடம் தினமும் நடக்கவேண்டும்😁

👍

58 minutes ago, nedukkalapoovan said:

பல இளையோருக்கு மட்டுமன்றி.. 60 என்றதும் வீட்டுக்குள் முடக்க நினைக்கும் பேர்வழிகளுக்கும் நல்ல வழிகாட்டி. 

👍

கிருபன் அய்யா சொன்ன பின்பு தான் விளங்கியது.
யாழ்கள உறவுகள் வீராங்கனை அம்மையார் ஓடியது பாதணிகள் இல்லாமையால் தான் என்று ஏன் முடிவு எடுத்தனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

👍

👍

கிருபன் அய்யா சொன்ன பின்பு தான் விளங்கியது.
யாழ்கள உறவுகள் வீராங்கனை அம்மையார் ஓடியது பாதணிகள் இல்லாமையால் தான் என்று ஏன் முடிவு எடுத்தனர்.

முன்பு எல்லாம் பாத அணி கட்டாயம் இப்ப அதெல்லாம் கிடையாது .இன்னும் நுணுக்கமாய் சொல்லலாம் இந்த நேரம் அது வேண்டாம் அமைதியாக அவரின் வெற்றியை கொண்டாடுவோம் .

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தாயே! 🙏

ஓட்டப்போட்டிகளில் அவ்வளவு கடினமான விதிமுறைகள் இல்லைதான். ஆனால் விரைவு நடை போட்டிக்கு பல கடினமான விதிமுறைகள் உண்டு. அவற்றையெல்லாம் பழகி தங்கம் வென்றது உண்மையிலேயே மெச்சப்படவேண்டியதே! 👏

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் மட்டுமல்ல முழு ஈழத்தீவுமே கொண்டாடவேண்டிய தாய். முள்ளியவளை மண்ணிலேயிருந்து தமிழுக்குப் பெருமை சேர்த்த தாயே வாழ்த்துகின்றோம். 

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுக்கு பெருமை சேர்த்த முல்லைத்தீவின் அகிலத்திருநாயகிக்கு உயரிய சபையில் வாழ்த்துத் தெரிவித்த உதயனி கிரிந்திகொட

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

அண்மையில் பிலிப்பைன்ஸ்  நாட்டில்  நடைபெற்ற நேஷனல் மாஸ்டர்ஸ் என்ட் சீனியர் அத்லடிக்ஸ்  போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய முல்லைத்தீவை சேர்ந்த வீராங்கனை அகிலத் திருநாயகி  இரண்டு தங்கப்பதக்கங்களை தனதாக்கி நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

ஆகவே  இவருக்கு இந்த உயரிய சபை ஊடாக வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன் என பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர் உதயனி கிரிந்திகொட குறிப்பிட்டார்.

404116290_1577505672654021_1896458765966

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தின் போது மேற்கண்டவாறு வாழ்த்து தெரிவித்தார்.

403779415_842736924528405_41974059275841

இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முல்லைத்தீவு - முள்ளியவளை பகுதியை சேர்ந்த அகிலத்திருநாயகி (72 வயது) (ஓய்வு பெற்ற சிறைச்சாலைகள் உத்தியோகத்தர்) என்பவரே  இந்த சாதனையை படைத்து நாட்டுக்கு பெருமை தேடிக் கொடுத்துள்ளார்.

இந்த வீராங்கனைக்கு வாழ்த்து தெரிவிப்பதுடன், அவருக்கு தேவையான வசதிகளை பொறுப்பான அமைச்சு வழங்க வேண்டும் என்று குறிப்பிடுகிறேன் என்றார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வின் போது தமிழ் பிரதிநிதிகள் எவ்வாறு இந்த சாதனை பற்றி பேசவில்லை, வாழ்த்து தெரிவிக்கவுமில்லை.

1500 மீட்டர் ஓட்டப்போட்டி மற்றும், 5000 மீற்றர்  விரைவு நடை ஆகிய போட்டிகளில்  கலந்துக் கொண்டு இந்த இரண்டு தங்கப் பதக்கங்களை அகிலத்திருநாயகி வென்றுள்ளார்.

72 வயதில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த இவர் மேலும் 800 மீற்றர் ஓட்டபோட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் தனதாக்கியுள்ளார்.

நாட்டுக்கு பெருமை சேர்த்த முல்லைத்தீவின் அகிலத்திருநாயகிக்கு உயரிய சபையில் வாழ்த்துத் தெரிவித்த உதயனி கிரிந்திகொட | Virakesari.lk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக மாறிய தமிழ் பெண் - குவியும் பாராட்டுக்கள்

இலங்கைக்கு பெருமை சேர்த்த தமிழ் பெண் தொடர்பில் தென்னிலங்கையின் சிங்கள ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக அதனை வெளியிட்டுள்ளன.

வயதான காலத்தில் அபார திறமையை வெளிப்படுத்திய பெண்ணுக்கு சிங்கள மக்கள் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிலிப்பைன்ஸில் இளையோர் மற்றும் முதியோருக்கான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற 71 வயது பெண் இரண்டு தங்கம் உட்பட மூன்று பதக்கங்களை பெற்று சாதனை படைத்தார் முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியை சேர்ந்த 71 வயதான திருமதி அகிலத்திருநாயகியை சிங்கள மக்கள் புகழ்ந்துள்ளனர்.

 

 

 

சிங்கள அமைச்சர்களின் செயல்

அத்துடன் அரசியல்வாதிகள் மீது கடும் கோபத்தை வெளியிடும் வகையில் சிங்கள மக்கள் பதிவிட்டுள்ளனர்.

 

சிங்கள ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக மாறிய தமிழ் பெண் - குவியும் பாராட்டுக்கள் | Mullaitivu Tamil Lady Get Two Gold Medals

முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் இவரை போன்று திறமையான இளைஞர், யுவதிகள் பலர் உள்ளனர். அவர்கள் தொடர்பில் கவனம் செலுத்துவது அவசியமாகும் என பலரும் பதிவிட்டுள்ளனர்.

இரண்டு செருப்பு கூட இல்லாமல் ஓடும் இவரை யாருக்கும் தெரிவதில்லை. ஆனால் அவர் செருப்பு இல்லாமல் ஓடி பெற்ற தங்கம் மட்டும் அரசியல்வாதிகளின் கண்களுக்கு தெரியும்.

விளையாட்டுத்துறை அமைச்சர் இருக்கிறார். அனுசரனையாளர்கள் உள்ளனர். ஆனால் வெற்றி பெற்றவர் நாடு திரும்பும் போது செல்பி எடுப்பதற்காக மட்டுமே அவர்கள் வருவார்கள்.

 

 

 

சிங்கள மக்கள் பாராட்டு

குடும்பத்துடன் சவாரி செல்லும் அரசியல்வாதிகள் உள்ள நாட்டில் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் ஏழை மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட இல்லை என ஒருவர் கூறியுள்ளார்.

 

சிங்கள ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக மாறிய தமிழ் பெண் - குவியும் பாராட்டுக்கள் | Mullaitivu Tamil Lady Get Two Gold Medals

இந்த பெண் மதிப்புமிக்க பொக்கிஷம். அவர் பதக்கம் வெல்லும் போதுதான் ஒவ்வொருவரும் அவரை வைத்து விளம்பரம் தேடுவார்கள். இந்த நிலைமை மிகவும் பரிதாபகரமானது என மேலும் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

இந்த வயதிலும் இலங்கைக்கு பெருமை சேர்ந்த அவருக்கு வாழ்த்துக்கள் என பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, தங்க பதக்கங்களை வென்ற திருமதி அகிலத்திருநாயகிக்கு வாழ்த்துக்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

https://tamilwin.com/article/mullaitivu-tamil-lady-get-two-gold-medals-1700638700

  • கருத்துக்கள உறவுகள்

 🙆‍♂️

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வின் போது தமிழ் பிரதிநிதிகள் எவ்வாறு இந்த சாதனை பற்றி பேசவில்லை, வாழ்த்து தெரிவிக்கவுமில்லை]

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விளங்க நினைப்பவன் said:

 🙆‍♂️

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வின் போது தமிழ் பிரதிநிதிகள் எவ்வாறு இந்த சாதனை பற்றி பேசவில்லை, வாழ்த்து தெரிவிக்கவுமில்லை]

 

அதுகள் பெட்டி வாங்கத்தானே போனதுகள் இதெல்லாம் அதுகளுக்கு தெரியாது  அதுமட்டுமா ?யுத்தம் முடிந்து இவ்வளவு காலத்தில் சிங்கள கிரிகெட் நம்மவர்களில் திறமையான எத்தைனையோ பேர் இருக்க அவர்களில் ஒருத்தரையாவது ....................இதெல்லாம் இனவாத சிங்கள கிரிகெட் ரீமுக்கு விளங்காது .

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Eppothum Thamizhan said:

வாழ்த்துக்கள் தாயே! 🙏

ஓட்டப்போட்டிகளில் அவ்வளவு கடினமான விதிமுறைகள் இல்லைதான். ஆனால் விரைவு நடை போட்டிக்கு பல கடினமான விதிமுறைகள் உண்டு. அவற்றையெல்லாம் பழகி தங்கம் வென்றது உண்மையிலேயே மெச்சப்படவேண்டியதே! 👏

மிக‌ ச‌ரியாக‌ சொன்னாய் ந‌ண்பா 🥰🙏

On 21/11/2023 at 20:51, கிருபன் said:

அவர் சப்பாத்துப் போட்டிருந்தால் பதக்கம் வெல்லாமலும் போயிருக்கக்கூடும்!

வாழ்த்துகள் !

சப்பாத்து அணியாமலே அவர் பயிற்சி செய்திருப்பார். அதன்படியே சப்பாத்து இல்லாமல் போட்டியிலும் கலந்து கொள்வது அவருக்கு வசதியாக இருந்திருக்கும். 

On 21/11/2023 at 15:28, தமிழ் சிறி said:

animiertes-sport-smilies-bild-0437.gif  இத்தனைக்கும்  பாதணிகள் இல்லாமல், வெறுங்காலுடன் ஓடி நிகழ்த்திய சாதனைகள்... animiertes-sport-smilies-bild-0351.gif
1️⃣  1500 மீட்டர் ஓட்டம் - தங்கப் பதக்கம்.   animiertes-gewinner-smilies-bild-0010.gi
1️⃣  5000 மீட்டர் விரைவு நடை – தங்கப் பதக்கம்.   animiertes-gewinner-smilies-bild-0001.gi
2️⃣  800 மீட்டர் ஓட்டம் - வெண்கலப் பதக்கம். animiertes-gewinner-smilies-bild-0008.gi
4️⃣  5000 மீட்டர் ஓட்டம் - நான்காம் இடம். 4️⃣  animiertes-gewinner-smilies-bild-0012.gi

உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை அம்மா. animiertes-applaus-smilies-bild-0020.gif

1500 மீற்றரில் முதலாவதாக வந்துள்ளார். 5000 மீற்றரை விட இதுவே கடினமானது, வேக ஓட்டம். ஒருவேளை 5000 மீற்றர் ஒரே நாளில் அல்லது ஒரு நாள் இடைவெளியில் இடம்பெற்றிருக்கலாம். சரியான ஓய்வு இல்லாததால் நான்காம் இடம் கிடைத்துள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அம்மா

  • கருத்துக்கள உறவுகள்

72 வயதிலும் வெறுங்காலுடன் ஓடி தங்கப் பதக்கங்களைக் குவிக்கும் இலங்கைப் பெண்

இலங்கை, முதியவர், தடகளம்
கட்டுரை தகவல்
  • எழுதியவர், யூ.எல். மப்றூக்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

நடப்பதற்கே அநேகமானோர் சிரமப்படக்கூடிய முதுமையில், இலங்கையின் முல்லைத்தீவு - முள்ளியவளை பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான பெண் ஒருவர் சர்வதேச அளவில் நடைபெற்ற நெடுந்தூர ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டு, தங்கம் உள்ளிட்ட பதக்கங்களை வென்றுள்ளார்.

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 22-ஆவது 'மூத்தோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் - 2023' (Masters Athletics Championships - 2023) விளையாட்டு விழாவில் கலந்து கொண்டு, தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் என, மூன்று பதக்கங்களை வென்றுள்ளார் எஸ். அகிலத் திருநாயகி.

அவரது உத்வேகமளிக்கும் கதையை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

 
இலங்கை, முதியவர், தடகளம்
படக்குறிப்பு,

70 முதல் 74 வயதுக்கு இடைப்பட்ட பெண்களுக்கான போட்டிகளில் இவர் பங்கேற்று இந்த வெற்றிகளைப் பெற்றுள்ளார்

பதக்கங்களைக் குவித்த மூத்த வீராங்கனை

1,500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கமும், 5,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும் வென்ற அகிலத் திருநாயகி, 800 மீட்டர் பந்தயத்தில் மூன்றாமிம் பெற்றுள்ளார். 5,000 மீட்ட நடத்தல் போட்டியில் நான்காம் இடம் பெற்றுள்ளார்.

70 முதல் 74 வயதுக்கு இடைப்பட்ட பெண்களுக்கான போட்டிகளில் இவர் பங்கேற்று இந்த வெற்றிகளைப் பெற்றுள்ளார்.

இம்மாதம் 8 ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை, 'மூத்தோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள்’ பிலிப்பைன்ஸில் நடைபெற்றன. இதில் இலங்கையிலிருந்து 145 பேர் கலந்து கொண்டனர்.

இப்போட்டிகளில் மொத்தம் 22 நாடுகள் கலந்து கொண்டன. இவற்றில் இந்தியா 70 தங்கப் பதக்கங்களைப் பெற்று (மொத்தம் 215 பதக்கங்கள்) முதலாமிடத்தினையும், ஜப்பான் 58 தங்கப் பதங்கங்களைப் பெற்று (மொத்தம் 101 பதக்கங்கள்) இரண்டாமிடத்தினையும், பிலிப்பைன்ஸ் 42 தங்கப் பதக்கங்களைப் பெற்று (மொத்தம் 116 பதக்கங்கள்) மூன்றாமிடத்தையும் பெற்றன.

25 தங்கப் பதக்கங்களைப் பெற்ற (மொத்தமாக 87 பதக்கங்கள்) இலங்கைக்கு 8-வது இடம் கிடைத்தது.

 
இலங்கை, முதியவர், தடகளம்
படக்குறிப்பு,

தினமும் காலை 5 மணிக்கு விழிப்பதை இன்னும் வழக்கமாகக் கொண்டுள்ளார் அகிலத் திருநாயகி. "எந்த உணவு என்றாலும் அதிகமாக சாப்பிட மாட்டேன்,” என்கிறார்

‘பெண்கள் எந்தப் பணியும் செய்ய முடியும்’

1951-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8-ஆம் தேதி பிறந்தார் அகிலத் திருநாயகி. வீட்டில் இவர் கடைசிப் பெண். இவருக்கு நான்கு அண்ணன்களும், ஒரு அக்காவும் இருக்கின்றனர்.

தனது 24 வயதில் சிறைச்சாலை பாதுகாவலர் பணியில் சேர்ந்தார். பின்னர் சிறைச்சாலை மேற்பார்வையாளராகப் பதவி உயர்வடைந்து 36 வருடங்கள் பணியாற்றிய பிறகு ஓய்வுபெற்றார்.

கல்விப் பொதுத் தராதரத்தில் உயர்தரம் (13-ஆம் வகுப்பு) வரை தான் படித்துள்ளதாக அகிலத் திருநாயகி கூறுகிறார்.

"சிறைச்சாலைக் காவலராக 1975-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தேன். எனது அம்மாவுக்கு அப்படியொரு பணியில் நான் சேர்வது பிடிக்கவில்லை. பின்னர் அம்மாவுக்கு எங்கள் பிரதேசத்தைச் சேர்ந்த ஐயா ஒருவர் 'எந்தத் தொழிலையும் பெண்கள் செய்ய முடியும்' எனக் கூறி, நம்பிக்கை ஏற்படுத்தியதால், அம்மா சம்மதித்தார்,” என்றார்.

சிறைக் காவலர் பணியில் இணைந்த பின்னரே இவருக்குத் திருமணமானது. கணவர் விமான நிலையத்தில் பணியாற்றியதாக தெரிவிக்கின்றார். ஒரு மகன், ஒரு மகள் என, இவருக்கு இரண்டு பிள்ளைகள். இவருவரும் திருமணமாகி வெளிநாட்டில் வசிக்கின்றார்கள்.

பள்ளியில் துவங்கிய விளையாட்டு ஆர்வம்

“பாடசாலைக் காலத்திலேயே விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஈடுபடுவேன்,” என பிபிசி தமிழிடம் அகிலத் திருநாயகி தெரிவித்தார்.

பொதுவாக நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றுள்ளதாகவும் கூறினார்.

“நாட்டிலுள்ள சிறைச்சாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். அவற்றில் நான் கலந்துகொண்டு சிறந்த வீராங்கணையாகவும் தெரிவாகியிருக்கிறேன்,” என்றார்.

இவ்வாறு தனது விளையாட்டுத் திறமையினை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்த அகிலத் திருநாயகி, தாய்லாந்து, ஜப்பான், சிங்கப்பூர், மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற சர்வதேச விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்றுள்ளார்.

 

கொஞ்சம் உணவு, நிறைய வேலை

சாதாரணமாக 72 வயதில் கணிசமானோருக்கு பல்வேறு நோய்கள் தொற்றிக் கொள்கின்றன. மூப்பு காரணமாக வலிமையை இழந்தும், ஆரோக்கியம் இல்லாமலும் அவர்கள் அவதியுறுவதை காண்கிறோம். ஆனால், திருநாயகி 5,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சர்வதேச ரீதியாகக் கலந்து கொண்டு பதக்கம் வென்றுள்ளார்.

அவரது ஆரோக்கியத்துக்கான பிரதான காரணம் என்ன, என அவரிடம் கேட்டோம்.

“நான் சாப்பிட்ட பின்னர் சோர்வாக அல்லது ஓய்வாக ஓரிடத்தில் இருப்பது கிடையாது. சாப்பிட்டவுடன் எனது வேலைகளைத் தொடங்கி விடுவேன். கடமைக் காலத்தில் சைக்கிளில்தான் பயணிப்பேன். இப்போதும் சைக்கிள் ஓடிக் கொண்டுதான் இருக்கிறேன்,” என அவர் பதிலளித்தார்.

தினமும் காலை 5 மணிக்கு விழிப்பதை இன்னும் வழக்கமாகக் கொண்டுள்ளார் அகிலத் திருநாயகி. "எந்த உணவு என்றாலும் அதிகமாக சாப்பிட மாட்டேன்,” என்கிறார்.

தனது தனிப்பட்ட வாழ்க்கை முறைமை குறித்துப் பேசும் போது “அதிகமாக விரதமிருப்பேன்,” எனத் தெரிவித்தார். இவர் சைவ உணவுகளை மட்டுமே உண்பவர். தனது வாழ்வில் ஒருபோதும் அசைவ உணவுகளைச் சாட்பிட்டதில்லை என்கிறார்.

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 'மூத்தோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப்' விளையாட்டுப் போட்டியில் சாப்பாத்துக்கள் இன்றி வெறுங்காலுடன் ஓடித்தான் தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களை அகிலத் திருநாயகி வென்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/articles/c51r513v991o

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தங்கமகள் என்றே சொல்லலாம் ......அவ்வளவும் வெறும் பதக்கங்களல்ல அவவின் பெறுமதிமிக்க வியர்வைத் துளிகள்........வணங்குகிறோம் தாயே.....!  🙏

நன்றி பையா .......!  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துகள் தாயே. 🙏🏼

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.