Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

ன்.

ஆனால் நான் கணித்தது சரியாயின். அடுத்த பாராளுமன்ற தேர்தலில் யாழ் மாவட்டம் தமிழ் தேசிய அரசியலுக்கு அல்லது தமிழ்  தேசிய அரசியல் செய்வதாக பாவனை செய்வோருக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் என்றே நினைக்கிறேன்.

நான் பலமுறை இவ்வாறு கணித்து ஏமாந்து இருக்கிறேன். 

தமிழ் மக்கள் கொஞ்சம் தூர நோக்கோடு தெளிவான முடிவுகளை தொடர்ந்து எடுக்கிறார்கள்.

  • Replies 364
  • Views 38k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • goshan_che
    goshan_che

    பாகம் II   ஒருவருக்கு நீண்ட கால்கள் இருப்பது சில அனுகூலங்களையும், சில பிரதிகூலங்களையும் தரவல்லது. விமானப்பயணத்தில் பிரதிகூலம் என்னவெனில், எக்கானாமி இருக்கைகள் இடையேயான  இடைவெளி போதாமையால், ம

  • Thumpalayan
    Thumpalayan

    எல்லார்ட வரவேற்புக்கும் நன்றி. ஒவொருநாளும் யாழப் பாக்காட்டிக்கு எனக்கு பத்தியப்படாது. எழுதத்தான் பஞ்சி, அதைவிட அநேகமான புலம்பெயர் உறவுகள் அடுத்த கட்டத்துக்கு நகர விரும்பாமையும் (moving on) ஒருவகை விரக

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣.

நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.

ரீலை ஓட்டுவதில் திறமை கொண்டவர்  உங்களுக்கு நினைவிருக்கோ  முன்பு நான் தான் கற்பகதரு Tulpen என்றவர்🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, விசுகு said:

நான் பலமுறை இவ்வாறு கணித்து ஏமாந்து இருக்கிறேன். 

தமிழ் மக்கள் கொஞ்சம் தூர நோக்கோடு தெளிவான முடிவுகளை தொடர்ந்து எடுக்கிறார்கள்.

இருக்கலாம். 

இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ரீலை ஓட்டுவதில் திறமை கொண்டவர்  உங்களுக்கு நினைவிருக்கோ  முன்பு நான் தான் கற்பகதரு Tulpen என்றவர்🤣

இதென்ன பிரமாதம்….

நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு…

அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣.

இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.

கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார்.

அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
32 minutes ago, விசுகு said:

நான் பலமுறை இவ்வாறு கணித்து ஏமாந்து இருக்கிறேன். 

தமிழ் மக்கள் கொஞ்சம் தூர நோக்கோடு தெளிவான முடிவுகளை தொடர்ந்து எடுக்கிறார்கள்.

தமிழ்மக்கள் 60 வருசத்துக்கு மேலாக தூர நோக்கோடுதான் வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அந்த தூர நோக்கு தனது எல்லையை தொடவில்லை. தொடுவதற்கான அறிகுறியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

தமிழ்மக்கள் 60 வருசத்துக்கு மேலாக தூர நோக்கோடுதான் வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அந்த தூர நோக்கு தனது எல்லையை தொடவில்லை. தொடுவதற்கான அறிகுறியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.

கசப்பான உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

தமிழ்மக்கள் 60 வருசத்துக்கு மேலாக தூர நோக்கோடுதான் வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அந்த தூர நோக்கு தனது எல்லையை தொடவில்லை. தொடுவதற்கான அறிகுறியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.

இதில் மக்கள் ஏமாற்றப் படுகிறார்கள். தலைவர்கள் சுயநலத்தோடு.....?

  • கருத்துக்கள உறவுகள்
On 25/3/2024 at 11:28, goshan_che said:

ஒரு வழியாக போர்டிங் வெட்டி, ஏழு கிலோவுக்கு பதில் பதினொரு கிலோ ஹாண்ட்லெகேஜுடன் விமான இருக்கையை வெற்றிகரமாக அடைந்து

பக்கா தமிழன் அண்ணே நீங்க.

On 26/3/2024 at 22:11, goshan_che said:

இப்படியாக இந்த பயணத்தில் அமைந்த கடலைக்காரிதான் தமாரா. பெயருக்கேற்ற தாமரை இலை போன்ற அகன்ற முகம், அதில் சிங்கள வெட்டோடு அழகிய கண்கள். கொஞ்சம் உதட்டாலும், அதிகம் கண்களாலும் பேசிக் கொண்டாள். சீனி மட்டும் இல்லை, பால் இல்லாமல் குடித்தும், அன்று அந்த கோப்பி கசக்கவே இல்லை

அண்ணர் தான் ஒரு ஜொள்ளுப் பாட்டியாம். நம்பச் சொல்லுறார். 

On 26/3/2024 at 22:11, goshan_che said:

தென்னை மர உச்சிகள் கண்ணில் புலப்படத்தொடங்க, அத்தனை கிலேசங்களையும் தாண்டி மனதில் ஒரு நேச உணர்வு படர ஆரம்பித்தது.

தென்னை மர உச்சியை கண்டவருக்கு.. நீண்டு செல்லும் அதிவேக சாலை தெரியவில்லை.

On 26/3/2024 at 22:11, goshan_che said:

தகவல் தொழில் நுட்ப disruptive technologies ஆகிய ஊபர், ஊபர் உணவு, பிக் மி என்பன யாழ் உட்பட எங்கும் கிடைக்கிறது.

யாழில் ஊபர்..?! பிக் மி தானே இருந்திச்சு. 

On 26/3/2024 at 22:11, goshan_che said:

யாழில் காங்கேசந்துறை கடற்கரையை நேவி பராமரிப்பில் மக்கள் பாவனைக்கு விட்டுள்ளார்கள்.  ஒரு இராணுவ நகரின் (cantonment) நெடி இருக்கத்தான் செய்கிறது.

அப்பாடா.. ஒரு மாதிரி ஒரு உண்மையை ஒத்துக் கொண்டார். என்ன கடற்கரை பார்த்தவர்.. தரைக்கரையை பார்க்கவில்லை..?! எல்லா இராணுவ பீடங்களும் வீதி நெடுகிலும் ஏக்கர் கணக்கில் ஆக்கிரமிச்சு நிற்குது. 

On 26/3/2024 at 22:11, goshan_che said:

யாழுக்கு பீட்சா ஹட் இரெண்டு வந்துள்ளது.

பீட்சா பிரியரோ..?! கே எவ் சி கண்ணில படல்ல. 

On 26/3/2024 at 22:11, goshan_che said:

தனியார் மருத்துவமனை வியாபாரமும் நாடெங்கும், குறிப்பாக யாழில், மட்டக்களப்பில் கொடி கட்டி பறக்கிறது.

கொழும்பில் இல்லாத அளவுக்கா. ஆனால் முந்தி இருந்த ஆனப்பந்தியடி வைத்தியசாலை எல்லாம் காணாமல் போயிட்டே. அண்ணருக்கு அது தெரியல்லை. 

On 26/3/2024 at 22:11, goshan_che said:

ஆரிய குளமும் நன்றாக உள்ளது. நடைபாதை அருகே பெஞ்சுகள், மின் விளக்குகள், உணவு வண்டிகள் என நன்றாக உள்ளது.

ஆரிய குளத்தில்.. பழையபடி.. வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல் குப்பை மிதக்கிறது.. விட்ட படகுகளை காணம். அண்ணர் அதையும் கவனிக்கேல்ல. 

On 26/3/2024 at 22:11, goshan_che said:

உள்ளூர்வாசிகளும், இராணுவத்தினரை காண வரும் சிங்கள குடும்பத்தினரும் என ஒரு கலவையாக இருக்கிறது அந்த இடம். நேவியே கோப்பி, சோர்ட் ஈட்ஸ் விற்கிறது.

அண்ணரும் சாட்சி. 

On 26/3/2024 at 22:11, goshan_che said:

அண்மையில் கொழும்பு, யாழ், கண்டி, காலியில் பெரும் கிரிகெட் போர்கள் (பிக் மேட்ச்) நடந்தன.  நான் போனவற்றில் மது ஆறாக ஓடியது.

மது ஆறாக ஓடுவது இங்கு மட்டுமல்ல. ரகளை இல்லை என்பது தான் முக்கியம். 

On 26/3/2024 at 22:11, goshan_che said:

அதே போல் மேல் மாகாணத்தில் இருக்கு சில திருமண மண்டபங்கள்….இலண்டனில் கூட அந்த வகை ஆடம்பரமாக இல்லை.

உண்மை தான். ஆனால் சாப்பாடும் நல்லம் லண்டனை விட. 

On 26/3/2024 at 22:11, goshan_che said:

யாழின் பொருளாதாரம் அசுர பாய்ச்சல் பாய்வதாகவே நான் உணர்கிறேன். வலிகாமத்தில் யாழ் நகரை அண்டிய சிறு நகர்களில், பிரதான வீதியோர காணிகள், கண்ணை மூடி கொண்டு பரப்புக்கு ஒரு கோடி என்கிறார்கள்.

இதை விட மோசம் தென்னிலங்கை. யாழ் சில இடங்களில் விலை குறைவு.

On 26/3/2024 at 22:11, goshan_che said:

நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.

உண்மை தான். சீன அங்காடிகளின் வரவும் அதிகரிச்சிருக்கு. விலையும் குறைவு.. டிசைனும் நல்லது. சொறீலங்காவில் தற்போது.. காசிருந்தால்.. விரும்பிய வாழ்கையை வாழலாம். லண்டனில் காசிருந்தாலும் விரும்பிய வாழ்கையை வாழ்வது கடினம். 

இறுதியா.. வாங்கோண்ணா.. வாங்கோ. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன்.

சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?

  • கருத்துக்கள உறவுகள்

//நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//

அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG-20240130-WA0002.jpg.b1fa85cc745c32230d7921101de50561.jpg

இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது. 

large.20240118_123212.jpg.ad59be1f052a357d3b7381764f698a8e.jpg

இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார்.

large.VideoCapture_20240212-085534.jpg.40624a11557f87c6b53cea195362ea13.jpg

large.VideoCapture_20240212-085620.jpg.390cc8ade6ab22fdd0acd65063fa1c89.jpg

இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை. 

large.20240129_201218.jpg.dd177a61ce124b50e965ac933ef084f0.jpg

அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச். 

ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, nedukkalapoovan said:

இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார்.

அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, விசுகு said:

இதில் மக்கள் ஏமாற்றப் படுகிறார்கள். தலைவர்கள் சுயநலத்தோடு.....?

மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை.
இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்......

தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்.....
தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது. 

 போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்?

புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!
 
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?

அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)

11 hours ago, nedukkalapoovan said:

இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்..

நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள். 

கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, இணையவன் said:

நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள். 

கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂

எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 

2 minutes ago, nedukkalapoovan said:

என் தாயக பூமியில் ...

போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, இணையவன் said:

போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂

என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

@goshan_che மீண்டும் உங்களை கண்டது மகிழ்ச்சி…

ஆனால் 2 (?) வார விடுமுறையில் மக்களின் வாக்களிக்கும் தன்மையை தீர்மானிக்க முடியுமா?

நீங்கள் குறிப்பிட்டவாறு

தமிழ்தேசிய கூட்டமைப்பு 

தமிழ் தேசிய மக்கள் முன்னணி

தமிழ் மக்கள் கூட்டணி

ஆகியவற்றிற்கு மக்கள் வாக்களிக்க போவதில்லை என்ற முடிவிற்கு எவ்வாறு வந்தீர்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை”

இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்?

உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 26/3/2024 at 22:11, goshan_che said:

சீனி மட்டும் இல்லை, பால் இல்லாமல் குடித்தும், அன்று அந்த கோப்பி கசக்கவே இல்லை.

கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nedukkalapoovan said:

யாழில் ஊபர்..?! பிக் மி தானே இருந்திச்சு.

வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ்.

இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான்.

கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம்.

21 hours ago, nedukkalapoovan said:

அப்பாடா.. ஒரு மாதிரி ஒரு உண்மையை ஒத்துக் கொண்டார். என்ன கடற்கரை பார்த்தவர்.. தரைக்கரையை பார்க்கவில்லை..?! எல்லா இராணுவ பீடங்களும் வீதி நெடுகிலும் ஏக்கர் கணக்கில் ஆக்கிரமிச்சு நிற்குது. 

அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன்.

21 hours ago, nedukkalapoovan said:

ஆரிய குளத்தில்.. பழையபடி.. வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல் குப்பை மிதக்கிறது.. விட்ட படகுகளை காணம். அண்ணர் அதையும் கவனிக்கேல்ல. 

நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣.

21 hours ago, nedukkalapoovan said:

கொழும்பில் இல்லாத அளவுக்கா. ஆனால் முந்தி இருந்த ஆனப்பந்தியடி வைத்தியசாலை எல்லாம் காணாமல் போயிட்டே. அண்ணருக்கு அது தெரியல்லை

கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ஈழப்பிரியன் said:

சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?

ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன்.

12 hours ago, குமாரசாமி said:

மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை.
இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்......

தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்.....
தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது. 

 போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்?

புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!
 
மிக தெளிவான பார்வை. ஊருக்கு போகா விடிலும் உங்களுக்கு யதார்த்தம் அழகாக புரிகிறது.

11 hours ago, nunavilan said:

அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)

ஓம். ஆனால் இது அரசியலால் இல்லை. நன்றி உணர்வு. பாசம். நினைவுகூரல்.

சில மாவீரர் குடும்பங்களிடம் உரையாடிய அனுபவத்தில் சொல்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன்.

இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம் என எண்ணுகிறீர்கள்?

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.