Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

             சித்திரை 27 இல் மகனுக்கு ஒரு மகன் பிறப்பதாக இருந்தது.ஏற்கனவே திகதிகள் தெரிந்தபடியால் 13ம் திகதி வட கரோலினா போவதற்கு விமான சீட்டுகளும் எடுத்து வைத்திருந்தோம்.

             அதற்கிடையில் மனைவியும் நானும் பார்க்க வேண்டிய வைத்தியர்களையும் பார்த்துக் கொண்டிருந்தோம்.

              10ம் திகதி Cardiologist  இடம் பகல் 10;30 க்கு பார்க்க வேண்டும்.(6 மாதத்துக்கொரு தடவை வழமையாக பார்ப்பது தான்).

               10 மணி போல வைத்தியரைப் பார்க்க போய்க் கொண்டிருந்த போது மகனிடமிருந்து தொலைபேசி அலறுகிறது.மணிக்கூட்டைப் பார்க்க மகன் தான் எடுக்கிறான் என்று தெரிகிறது.சட்டைப் பையில் இருந்து உடனடியாக எடுக்க முடியவில்லை.

             வண்டியை ஓரம்கட்டி விட்டு என்னடா வேலைக்கு போகலையா? வீட்டிலிருந்து வேலையா? என்றேன்.

             இல்லை இல்லை ஆஸ்பத்திரியில் நிற்கிறேன்.இன்றிரவு அல்லது காலை பிள்ளை பிறக்க போகுது.உடனடியாக ரிக்கற்றை போட்டுட்டு வாங்கோ.

             ஏனடா ஏதாவது பிரச்சனையோ? ஒன்றுமில்லை.இப்ப டாக்ரரைப் பார்க்க வேண்டாம்  கான்சல் பண்ணிப் போட்டு போய் வாற அலுவலைப் பாருங்கோ.பிற்பகல் 4-4;30க்கு மற்றவங்கள் பாடசாலையால் வர முதல் இங்கே நிற்க வேண்டும்.இப்ப டாக்ரர்மாரை 24 மணிநேரத்துக்கு முன் கான்சல் பண்ணலை என்றால் 50 டாலர்கள் தண்டம்.சரி சரி நாங்கள் வாறம் பிரச்சனை இல்லை.

              உடனே மனைவிக்கு விடயத்தைச் சொல்லி நான் டாக்ரரைப் பார்த்துவிட்டு வருகிறேன் உடுப்புகளை அடுக்கி போற அலுவலை பார்.டாக்ரரின் அலுவலகத்தில் சிறிய பிரச்சனை அவசரம் போக வேண்டும் கனநேரம் செல்லுமா என இல்லை அடுத்தது நீ தான். 

                அன்று எனது நல்லகாலம் வழமையை விட நேரத்துக்கே முடித்து வீடு வந்து விமான பயணத்துக்கு ஆராய தொடங்கினேன்.உடனே போவதென்றால் பல மடங்கு கூடுதலாக கொடுக்க வேண்டும்.சில விமானங்கள் குறைவாக இருந்தாலும் புத்தக பையைத் தவிர வேறு எது கொண்டு போனாலும் கூடுதாக பணம் செலுத்த வேண்டும்.

                பிற்பகல் மூன்று மணிக்கே விமானம்.திடீரென்று புறப்படுவதால் எதைஎதை எப்படி செய்வதென்றில்லாமல் செய்து முடிந்து வீட்டிலிருந்து புறப்படும் போது மணி 2 ஆகிவிட்டது.3;10 க்கு விமானம்.

                    விமானநிலையம் போய்ச் சேர 2;20 ஆகிவிட்டது.வடகரோலினாவில் இருந்து  சன்பிரான்சிஸ்கோ போவதால் ஒரு பெரிய பெட்டியும் கொண்டுவந்தோம்.சரி நீ போய் வரிசையில் நில் வெளியே உள்ள மெசினில் பெட்டியைப் போடுவதற்கு துண்டுகளை எடுத்துக் கொண்டு வாறன் என்று அதையும் ஓடிஓடி முடித்தோம்.

                    அடிக்கடி விமான பயணங்களை மேற்கொள்வதால் குளோபல் என்ரி எடுத்து வைத்திருக்கிறோம்.அதனால் வழமையான பாதையால் போகாமல் விசேடமாக பாஸ் வைத்திருப்பவர்களுக்கான பாதையால் போய் கையில் கொண்டு போன சிறிய பொதிகளையும் சோதனை முடிந்து எமது கதவுக்கு போனால் எல்லோரும் விமானத்தில் ஏறிவிட்டார்கள்.கடைசி ஓரிருவர் நின்றார்கள்.அப்பாடா என்று ஒரு நிம்மதி பெரு மூச்சுடன் விமானத்தில் ஏறினோம்.

                    ஆனாலும் 5 மணிக்கு வந்து பெட்டிகளை எடுத்துக் கொண்டு வீடு போய் சேர 6 மணியாகிவிடும்.மகனுக்கு விடயத்தை சொன்னேன்.பிரச்சனை இல்லை நண்பர் குடும்பம் ஒன்றை ஒழுங்கு பண்ணியுள்ளேன்.நீங்கள் வரும்வரை அவர்கள் வீட்டில் நின்று பார்ப்பார்கள்.

                     மகனின் வீடுவந்து சேர 6;15 ஆகிவிட்டது.பிள்ளைகளுக்கு ஒரே சந்தோசம்.நின்றவர்களுக்கு நன்றி சொல்விட்டு பிள்ளைகளின் அலுவல் களைப் பார்த்து உறங்கிவிட்டோம்.

                     காலை பிள்ளைகளை பாடசாலை அனுப்புவதற்காக ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்த போது 8 மணிபோல மகன் கதைத்தான்.

                     காலை 7;33க்கு மகன் சுகமாக பிறந்துள்ளான்.அனேகமாக நாளைக்குத் தான் விடுவார்கள்.மனதுக்கு பெரியதொரு நிம்மதியாக இருந்தது.

IMG-0549-Original.jpg

  • Like 14
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேரப்பிள்ளைகளோடு   கொண்டாடடம் தான். 

 3+1 😃  உங்க ஆத்துக் காரி   பாவம்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் பிரியன் தாத்தா! வாழ்த்துக்கள் (எலிக்)குட்டிப்பையா, வாழ்க வளத்துடன்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

பேரப்பிள்ளை  சுகமாக பிறந்தது மகிழ்ச்சி. 👍
நீங்களும் குறுகிய நேரத்துக்குள்..  Cardiologist டாக்டரையும் பார்த்து, உங்கள் அலுவல்களையம்  சமாந்திரமாக செய்து முடித்து விமானம் ஏறியமைக்கு பாராட்டுக்கள்.  
பேராண்டிக்கு பெயர் வைத்து விட்டீர்களா. 

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

வாழ்த்துகள்

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா ....நல்ல செய்தி பிரியன்.........வாழ்த்துக்கள் உங்கள் எல்லோருக்கும்..........!   💐

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் பெரியவரே! 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/4/2024 at 10:51, நிலாமதி said:

பேரப்பிள்ளைகளோடு   கொண்டாடடம் தான். 

 3+1 😃  உங்க ஆத்துக் காரி   பாவம்.

 

On 22/4/2024 at 10:59, ஏராளன் said:

வாழ்த்துகள் பிரியன் தாத்தா! வாழ்த்துக்கள் (எலிக்)குட்டிப்பையா, வாழ்க வளத்துடன்.

 

On 22/4/2024 at 11:16, நிழலி said:

வாழ்த்துகள்!!!

 

On 22/4/2024 at 11:25, தமிழ் சிறி said:

பேரப்பிள்ளை  சுகமாக பிறந்தது மகிழ்ச்சி. 👍
நீங்களும் குறுகிய நேரத்துக்குள்..  Cardiologist டாக்டரையும் பார்த்து, உங்கள் அலுவல்களையம்  சமாந்திரமாக செய்து முடித்து விமானம் ஏறியமைக்கு பாராட்டுக்கள்.  
பேராண்டிக்கு பெயர் வைத்து விட்டீர்களா. 

 

On 22/4/2024 at 11:46, பெருமாள் said:

வாழ்த்துகள்!

 

On 22/4/2024 at 11:50, aaresh said:

வாழ்த்துகள்

 

On 22/4/2024 at 12:01, வாதவூரான் said:

வாழ்த்துகள்

 

On 22/4/2024 at 15:06, suvy said:

ஆஹா ....நல்ல செய்தி பிரியன்.........வாழ்த்துக்கள் உங்கள் எல்லோருக்கும்..........!   💐

 

21 hours ago, குமாரசாமி said:

வாழ்த்துகள் பெரியவரே! 

பேரனுக்கு ஆர்நவ் (Arnaav)என்று பெயர் வைத்துள்ளார்கள்.

வாழ்த்திய நல்லுள்ளங்களுக்கு மிக்க நன்றி.

7c2a2db9-ced6-458d-b014-179b3321ab99-Ori

  • Like 8
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேரப்பிள்ளைகளோடு   கொண்டாடடம் தான். இது வாழ்க்கையில் மிகப் பெரும் பேறு...நான்குடனும்..நன்றாக சந்தோசமாய் இருங்கள்... வாழ்த்துக்கள்..

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, alvayan said:

பேரப்பிள்ளைகளோடு   கொண்டாடடம் தான். இது வாழ்க்கையில் மிகப் பெரும் பேறு...நான்குடனும்..நன்றாக சந்தோசமாய் இருங்கள்... வாழ்த்துக்கள்..

நன்றி அல்வாயன்.

சன்பிரான்சிஸ்கோவில் இன்னுமொரு பேரனும் பேத்தியும் இருக்கிறார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்  ஈழப்பிரியன். 

மொத்தம் எத்தனை பேரப்பிள்ளைகள். ....ஒரு பத்து வருமா??  🤣🤣

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

 

 

 

 

 

 

 

 

பேரனுக்கு ஆர்நவ் (Arnaav)என்று பெயர் வைத்துள்ளார்கள்.

வாழ்த்திய நல்லுள்ளங்களுக்கு மிக்க நன்றி.

7c2a2db9-ced6-458d-b014-179b3321ab99-Ori

பிறந்த தேதி என்ன??    Arnaav. =1+2+5+1+1+6=16. ....V  க்கு   6 சரியா  தெரியவில்லை  சரி எனில்   கூட்டு எண்.  16.     1+6= 7   பெயர் எண்ணின் கூட்டு   7ஆகும். உங்கள் மகன் பெயர் அல்லது பெயரின் முதல் ஆங்கில எழுத்து என்ன  ?? மீண்டும் வாழ்த்துக்கள்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

 

 

 

 

 

 

 

 

பேரனுக்கு ஆர்நவ் (Arnaav)என்று பெயர் வைத்துள்ளார்கள்.

வாழ்த்திய நல்லுள்ளங்களுக்கு மிக்க நன்றி.

7c2a2db9-ced6-458d-b014-179b3321ab99-Ori

கண்ணு பட போகுது சுத்தி போடுங்க அண்ணா .

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Kandiah57 said:

பிறந்த தேதி என்ன??    Arnaav. =1+2+5+1+1+6=16. ....V  க்கு   6 சரியா  தெரியவில்லை  சரி எனில்   கூட்டு எண்.  16.     1+6= 7   பெயர் எண்ணின் கூட்டு   7ஆகும். உங்கள் மகன் பெயர் அல்லது பெயரின் முதல் ஆங்கில எழுத்து என்ன  ?? மீண்டும் வாழ்த்துக்கள்  

பிறந்தது சித்திரை 11-2024
 

K.Arnaav.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள்

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

 

 

 

குட்டி தம்பிக்கு வாழ்த்துக்கள்..✍️🖐️

7c2a2db9-ced6-458d-b014-179b3321ab99-Ori

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

பிறந்த தேதி என்ன??    Arnaav. =1+2+5+1+1+6=16. ....V  க்கு   6 சரியா  தெரியவில்லை  சரி எனில்   கூட்டு எண்.  16.     1+6= 7   பெயர் எண்ணின் கூட்டு   7ஆகும். உங்கள் மகன் பெயர் அல்லது பெயரின் முதல் ஆங்கில எழுத்து என்ன  ?? மீண்டும் வாழ்த்துக்கள்  

ஓ......ஐயாவுக்கு எண் சோதிடத்தில நம்பிக்கையோ?  😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அண்ணா. அர்னாவ் நீடூழி வாழ வாழ்த்து.

(அர்னாவ் என்ற பெயரில் ஒரு தமிழ் சீரியல் நடிகர் உள்ளார் என நினைக்கிறேன்).

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, ஈழப்பிரியன் said:

பிறந்தது சித்திரை 11-2024
 

K.Arnaav.

k   க்கு   2 எனவே… 7+2=9. நல்லது   

பெயர்    1. 5.  6.  9.   எண்களில் தா வைப்பார்கள்  எந்த திகதிகளில் பிறந்தாலும்     11-4-2024 =2+4+2+0+2+4=14   =5.  கூட்டு எண். 5 ஆகும்     5 இல. பெயர் அமைவது   சிறப்பாக இருக்கலாம்   கூட்டு எண் 5வருவது   மிகவும் உத்தமம்    அருமை    

1,.பிறந்த எண். ...  2.   

2,  பெயர் எண்,... 9.  

3.    கூட்டு எண்,...   5.   

நல்லது   பிறந்த எண் 2.  எனவே… உங்கள் சொல்லை. அவன் கேட்க மாட்டான்.   அவன். சொல்வதை தான்   நீங்கள் கேட்டு நடக்க வேண்டும் 🤣🤣🤣🙏

குறிப்பு  ...V. =6. எனில்   சரி   பெயர் எண் சோதிடப்படி வைக்க விரும்பினால்  எண் சோதிடரை அணுகவும்   நன்றி வணக்கம் 🙏. பன்டிட்  டாக்டர்  சேதுராமானின்  எண் சோதிடப் புத்தகம்  பல தடவையாக படித்து உள்ளேன்  45. ஆண்டுகளுக்கு முன்னர்.  அனேகமாக மறந்து விட்டேன்   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/4/2024 at 01:25, தமிழ் சிறி said:

பேராண்டிக்கு பெயர் வைத்து விட்டீர்களா. 

பாவம் சிறியர்! அவர்கள் பெயர் வைப்பதில் முந்திவிட்டார்கள். பரவாயில்லை, நீங்கள் தெரித்தெடுத்த பெயரை எனக்கு அறிவியுங்கள், எனக்கு பேரப்பிள்ளை கிடைக்கும் சந்தர்ப்பத்தில் அவருக்கு அந்தப்பெயரை சூட்டி மகிழ்கிறேன்.

1 hour ago, Kandiah57 said:

பிறந்த தேதி என்ன??    Arnaav. =1+2+5+1+1+6=16. ....V  க்கு   6 சரியா  தெரியவில்லை  சரி எனில்   கூட்டு எண்.  16.     1+6= 7   பெயர் எண்ணின் கூட்டு   7ஆகும். உங்கள் மகன் பெயர் அல்லது பெயரின் முதல் ஆங்கில எழுத்து என்ன  ??

1 hour ago, Kandiah57 said:

மொத்தம் எத்தனை பேரப்பிள்ளைகள். ....ஒரு பத்து வருமா??

களமே உற்சாகத்திலும் மகிழ்ச்சியிலும் மிதக்குது, வாழ்த்துகிறது.! எனது வாழ்த்துக்களும்! ஆனால் பெயர் திகதி பார்ப்பது சும்மா எதிர்காலத்தை கணிப்பதற்காகதானே?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, குமாரசாமி said:

ஓ......ஐயாவுக்கு எண் சோதிடத்தில நம்பிக்கையோ?  😎

கொஞ்சம் தெரியும்  45. வருடங்களுக்கு முன்னர்  படித்தது.  பொழுதுபோக்குக்கு. வேலைவாய்ப்பு தேடிக்கொண்டு இருந்த சமயம்    ஒரளவு நம்பிக்கை உண்டு”   எண்களுக்கு  சக்தி உண்டு”   அவை கண்ணுக்குத் தெரியாது   பார்க்க முடியாது   உணரலாம்.  🤣😂

4 minutes ago, satan said:

களமே உற்சாகத்திலும் மகிழ்ச்சியிலும் மிதக்குது, வாழ்த்துகிறது.! எனது வாழ்த்துக்களும்! ஆனால் பெயர் திகதி பார்ப்பது சும்மா எதிர்காலத்தை கணிப்பதற்காகதானே?

ஓம்   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kandiah57 said:

கொஞ்சம் தெரியும்  45. வருடங்களுக்கு முன்னர்  படித்தது.  பொழுதுபோக்குக்கு. வேலைவாய்ப்பு தேடிக்கொண்டு இருந்த சமயம்    ஒரளவு நம்பிக்கை உண்டு”   எண்களுக்கு  சக்தி உண்டு”   அவை கண்ணுக்குத் தெரியாது   பார்க்க முடியாது   உணரலாம்.  🤣😂

அப்ப சிலோன் பிரச்சனை இழுபட்டு கொண்டு போறதுக்கு எந்த நம்பர் பிரச்சனை எண்டு ஒருக்கால் சொல்லுங்கோ கந்தையர்....😎

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்கள் எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கும் ஊக்கத்திற்கு மிக்க நன்றிகள். பல வருடங்களின் முன்னர், ஈழத்து எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்கள் நல்ல ஒரு எழுத்தாளராக வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு ஒரு பதில் சொல்லியிருந்தார். உலகில் உள்ள நல்ல சிறுகதைகளில் 500 ஐயும், நல்ல நாவல்களில் 50 ஐயும் முதலில் வாசிக்க வேண்டும் என்று அந்தப் பதிலில் சொல்லியிருந்தார். சிறந்த சிறுகதை, நாவல் வரிசைகள் பலரால், எஸ் ரா, ஜெயமோகன் மற்றும் சில விமர்சகர்களால் (க நா சு போன்றோர்) போன்றவர்களால், வெளியிடப்பட்டும் இருந்தன. அந்த வரிசைகளில் உள்ள சில படைப்புகள் இணையத்திலேயே கிடைத்ததால், வாசிக்க கூடியதாகவும் இருந்தது. ஆனால் பலவற்றை வாசித்த பின் பெரும் பிரமிப்பும், பயமுமே உண்டானது, எவ்வளவு பெரிய படைப்பாளிகள் வந்து போயிருக்கின்றனர், இதுவல்லவோ எழுத்து என்று.    
    • இதோட இரான் திருந்தவேணும், இல்லை எண்டு அடம்பிடிச்சால் நாங்கள் என்னேய்யலும்?!👀
    • "கனிந்த காதலி இறந்தாலும் நினைப்பில் வாழலாம்! முறிந்த காதலியை நினைக்கவும் முடியாது! மறக்கவும் முடியாது!"     பழத்தின் சதைகளுக்குள்ளே விதைகள் இருப்பது போலே, கனிந்த இதயத்தின் உள்ளே காதல் தூங்குவதுண்டு, அதுவாய் கனிந்து மெதுவாய் நிமிர்ந்து, சதையை தாண்டி விதியை காண்பது காதல் ....   அப்படி காதல் கொண்ட கனிந்த காதலிக்காக ஷாஜகான் [Shah Jahan], மும்தாஜ் மஹால் [Mumtaz Mahal] இறந்த பின் .....   கண்களை கலந்து, இதயங்களை ஒன்றாக்கி, மௌனத்தை மொழியாக்கி, சிந்தனையை சீராக்கி, வாழ்வை வசந்தமாக்கி, இன்பத்தை இரட்டிப்பாக்கி கொடுத்து வாழ்ந்த அவள் நினைவாக தாஜ்மகாலை கட்டி அவள் நினைப்பில் வாழ்ந்தான்!   வேறு பல மனைவிகள் இருந்தும்??, அவள் 14 பிள்ளைகள் பெற்றப் பின்பும், அவள் மீதான அன்பு தனியாமல் இருந்ததால், அது காதலின் சின்னம் என்று சொல்லப்படுகிறது!!   .........................   உன்னை ஒரு பார்வை கேட்டேன், கண்கள் பேசும் சில வார்த்தை கேட்டேன். கன்னத்தில் வந்த ஈரமும் இதயத்தில் நொந்த காயமும்தான் எனக்காக நீ கொடுத்தது!   இந்த முறிந்த காதலியை இனி நினைக்க முடியாது! என் என்றால் அவள் எங்கோ யாருடனோ இப்ப வாழ்கிறாள்!! அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே என மறக்கவும் முடியாது! என் என்றால், என் நெஞ்சுக்கு [வேறு] நினைவில்லை என் நிழலுக்கு [இப்ப] உறக்கமில்லை ...   தன் சிறு பருவத்திலிருந்தே லைலா [Laila] என்னும் தன் தோழியின்மீது ஆழமான அன்பு கொண்டு வளர்கிறான் 'கைஸ்' [Qays]. அன்பு முற்றிக் காதலாகிறது. காதலின் சக்திக்குத் தன்னை முழுவதுமாகக் கொடுத்து விட்ட கைஸ் அலங்கோலமாக ஒரு பக்கிரியைப் போல் ஆகிவிட்டான். மக்கள் அவனை "மஜ்னூன்" [Majnun] என்று அழைக்க ஆரம்பித்து அதுவே அவனுக்குப் பெயராகி விடுகிறது.   மஜ்னூன் என்றால் பித்தன் என்று பொருள். மஜ்னூனின் தந்தை தன் மகனுக்கு லைலாவை மனம் முடித்து வைக்க அவளின் தந்தையிடம் பெண் கேட்கிறார். ஒரு கிறுக்கனுக்கு என் மகளைக் கொடுக்க மாட்டேன் என்று சொல்லி லைலாவின் தந்தை மறுத்து விடுகிறார். அவளை வேறு ஒருவனுக்குத் திருமணம் செய்து கொடுத்து விடுகிறார். இதனால் மனமுடைந்த மஜ்னூன் வனாந்தரங்களில் திரிகிறான்.   ஒரு முறை,லைலாவின் தெருவில் அலைந்து கொண்டிருந்த மஜ்னூன், அவள் வீட்டின் சுவர்களை முத்தமிட்டுக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்துப் பரிகாசம் செய்தவர்களின் காதுகளில் விழுமாறு ஒரு கவிதை பாடினான்!     "லைலாவின் தெருவில் அவள் வீட்டின் சுவர்களை முத்தமிடுகிறேன் நான்.   இந்தச் சுவற்றின் மீதோ அல்லது அந்தச் சுவற்றின் மீதோ காதல் கொண்டவனல்ல நான்.   என் மனதில் பொங்கி வழிவது அந்த வீட்டுக்குள் இருப்பவளின் காதலே!"     "I pass by these walls, the walls of Layla And I kiss this wall and that wall It’s not Love of the walls that has enraptured my heart But of the One who dwells within them"     அதே மஜ்னூன், முறிந்த காதலியை பற்றி ஒரு முறை இப்படி சொல்கிறான் :     "ரோஜா காதலின் சின்னம் என்பது சரிதான்.   காலையில் இருக்கிறது அவளைப் போல். மாலையில் ஆகிறது என்னைப் போல்."     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]    
    • 🤣....... நான் தான் சொந்தப் பெயரைத் தவிர மற்ற எல்லாவற்றையும் சொல்லி விட்டேனே..........பேசாமல் அந்தப் பெயரிலேயே வந்திருக்கலாம், நாம தான் அடி பிடிக்கு போகாமல் ஒதுங்குகிற டைப் ஆயிட்டுதே......😀
    • "மாற்றம்" [யாழ்ப்பாணத்து தமிழ் மருத்துவ மாணவனின் கதை]     துடிப்பான நகரமான யாழ்ப்பாணத்தில், இலங்கையின் வடபகுதியில், பரபரப்பான தெருக்களுக்கும், யாழ்ப்பாணக் கடல் நீரேரியின் [கடற்காயல் அல்லது வாவி] அமைதியான கடற்கரைக்கும் நடுவே, குறளரசன் என்ற இறுதியாண்டு மருத்துவ மாணவர் வாழ்ந்து வந்தார். தீவின் வரலாற்றில் வேரூன்றிய நீண்ட பரம்பரையுடன் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்த குறளரசன், பல நூற்றாண்டுகளின் பாரம்பரியத்தின் எடையையும் 'மாற்றத்திற்காக' ஏங்கும் மக்களின் அபிலாஷைகளையும் [ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பையும்] தனக்குள் சுமந்தார்.     குறளரசன் மருத்துவம் படிக்கும் மாணவர் மட்டுமல்ல; அவர் தனது தமிழ் சமூகத்தின் உரிமைகள் மற்றும் அங்கீகாரத்திற்காக ஒரு தீவிர சமூக உழைப்பாளியாகவும் இருந்தார். தமிழரின் வாழ்வில் ஏற்பட்ட பின்னடைவுகள் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தின் வரலாற்று கதைகளிலும் மற்றும் இன்று நடைபெறும் அரசியல் அழுத்தங்களிலும் வளர்க்கப்பட்ட அவன், ஒரு அரசியல் 'மாற்றம்' தேவை என்பதை விரும்பியது  மட்டுமல்ல, தனது மக்களின் வாழ்வு மற்றும் செழிப்புக்கு அது இன்றியமையாதது என்றும்  நம்பினான்.     குறளரசன் மருத்துவப் படிப்பைத் தொடர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், இலங்கை வாழ் தமிழ் இளைஞர்களின், சமூகத்தின்  நம்பிக்கையின் விளக்காக நின்றது. இங்குதான் சிங்கள வம்சாவளியைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மருத்துவ மாணவியான ருவனிக்காவை  [Ruwanika] அவன் முதல் முதல் சந்தித்தான். அவர்களின் நட்பு இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டி ஆழமான ஒன்றாக மலர்ந்தது. ஆனால் அவர்களின் பாசத்தின் அரவணைப்பில் கூட, குறளரசனால் அவர்களது சமூகத்தை ஆட்கொண்ட ஆழமான வேரூன்றிய பிளவுகளின் நிழலை மறக்க  முடியவில்லை. அவன் அதில் உறுதியாக நின்றான்.      குறளரசன் தனது படிப்பில் ஆழமாக இருந்தாலும், தன் இலங்கை மக்களின் வரலாற்றை சரியாக அறிவதிலும் முழுமையாக தன் கவனத்தை செலுத்தினான். தமிழ் சிறுபான்மை யினருக்கும் சிங்கள பெரும்பான்மை அரசாங்கத்திற்கும் இடையிலான உறவில், அரசாங்க தலைவர்களால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையும், பின் அவ்வாற்றில் முக்கியமான ஒன்றையேனும் நிறைவேற்றாமல் உடைக்கப்பட்டு கிடங்கில் போட்டத்தையும் மற்றும் ஒவ்வொரு முறையும் தமிழர்களின் சுதந்திரம், கல்வி, உரிமைகள், காணிகள், வழிபாடுகள் மேலும் மேலும் பறிக்கப்படத்தையும், மறுக்கப்படத்தையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் தொல்லைகளையும்  சிதைந்த கனவுகளையும் பற்றி அவன் அடிக்கடி சிந்தித்தான். 1957 பண்டாரநாயக்கா - செல்வநாயகம் உடன்படிக்கையில் இருந்து தொடர்ந்து பல தசாப்தங்களில் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான தோல்வியுற்ற முயற்சிகள் வரை, குறளரசன் காட்டிக்கொடுப்பு மற்றும் ஏமாற்றங்களின் தொடர்ச்சிகளைக் கண்டான்.      ஆனாலும், விரக்தியின் மத்தியில், புத்தரின் உண்மையான போதனைகளில் குறளரசன் ஆறுதல் கண்டான். ஞானம் பெற்றவர் போதித்த இரக்கம், சகிப்புத்தன்மை, புரிதல் ஆகிய கொள்கைகளை அவன் நம்பினான். இனம் மற்றும் மதத்தின் தடைகளைத் தாண்டி, இந்த விழுமியங்களை மக்கள் ஏற்றுக் கொள்ளும் ஒரு சமூகத்திற்காக அவன் ஏங்கினான். நீண்ட காலமாக தனது மக்களை ஒடுக்கிய ஒரு மகாவம்சம் என்ற புராண கதையின் கனத்துடனும் போராடினான். குறிப்பாக புத்த சமயத்தை போதிக்கும் துறவிகள், உண்மையில் இலங்கையில் முறையாக பின்பற்றுகிறார்களா என்று தனக்குத் தானே கேள்வி கேட்டான்?       மகாவம்சம், பாளி மொழியில் எழுதிய, புத்தமதத்தை முன்னிலைப்படுத்திய வரலாற்றின் புராணக் கதையாகும். மகாவிஹரா துறவிகள் கி பி 5ம் அல்லது கி பி 6ம் நூற்றாண்டில், புத்த மதத்தை பின்பற்றும் அரசனின் ஆதரவுடன், புத்த மதத்தை பின்பற்றும் வெவேறு இனக்குழுக்களை ஒருங்கிணைத்து ஒரு இனமாக, புராண விஜயனை பின்பற்றுபவர்களாக, சிங்கத்தின் வழித்தோன்றலாக, உருவாக்க முன், இலங்கையில் ஒரு சிங்கள இனம் என்று ஒன்றும் இருக்கவில்லை என்பது வரலாற்று உண்மையாகும். அதனை  முதல் வில்ஹெய்ம் கெய்கர் பாளி மொழியில் இருந்து ஜெர்மன் மொழிக்கும் பின்னர், 1912ல் ஆங்கிலத்திற்கும் மொழிப்பெயர்ப்பு செய்தனர், அதன் பின்பு தான் சிங்கள மொழிபெயர்ப்பு வந்தது, அதுவரை இலங்கையில் சிங்கள - தமிழ் வேறுபாடுகிடையாது, அதன் பின் தமிழருக்கு எதிரான கருத்துக்கள் தீவின் மீது நீண்ட நிழலைப் போட்டு இன்றைய நிலைக்கு இட்டுச் சென்றது. எனவேதான் குறளரசன் மற்றும் தமிழ் சமூகத்திற்கு, மகாவம்சம் ஒரு வரலாற்று புராண நூல் மட்டுமல்ல; அது ஒடுக்கு முறைக்கான ஒரு கருவி, ஓரங்கட்டப்படுதல் மற்றும் பாகுபாடுகளை நியாயப்படுத்த பயன்படுத்தப் பட்ட ஆயுதம் ஆக அது தென்பட்டது, அதனால் தான் பொய்யான புராண கதையில் இருந்து உண்மையான தொல்பொருள் மற்றும் வரலாறுச் சான்றுகள் கூடிய இலங்கை வரலாறு 'மாற்றம்' காணவேண்டும், உண்மையின் அடிப்படையில், இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழ் பேசி வாழும் இலக்கை தமிழர்களின் மேல் அரசு கொண்டு இருக்கும் நிலையில் 'மாற்றம்' வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக புத்தரின் போதனைகளை போதிப்பவர்கள், அவர் வழியில் தங்கள் வாழ்க்கையை அமைக்கும்  'மாற்றம்' தேவைப்படுகிறது. இந்த மூன்று மாற்றங்களையும் தான் குறளரசன் காணத் துடித்தான்.       சிறுவயதிலிருந்தே, மகாவம்சத்தின் உண்மைத் தன்மையை கேள்விக்குள்ளாக்கும் பல வரலாற்று உண்மைகளை கற்றுக் கொண்டான், உண்மையை மறைக்கும் கட்டுக்கதைகள் மற்றும் பிரச்சாரத்தின் அடுக்குகளையும் அது முன்வைக்கும் ஆபத்தான முறையில் தவறாக வழிநடத்தும், வெறும் பக்கச்சார்பான விவரிப்புகளையும் அறிந்தான். இது சிங்கள புத்த  தலைமுறைகளின் மனதை விஷமாக்கும் பொய்கள் என்பதை அவன் உண்மையான சான்றுகளுடன் அறிந்தான். அதனால்த் தான் 'மாற்றம்' உடனடியாகத் தேவை என்கிறான்!      ஆனால் மகாவம்சத்தின் வஞ்சகத்தால் பாதிக்கப்பட்டது தமிழர்கள் மட்டும் அல்ல. இந்த வரலாற்று சூழ்ச்சிக்கு சிங்கள சாமானிய மக்களும் எப்படி பலியாகினர் என்பதை குறளரசன் இலங்கையின் இன்றைய நிகழ்வுகளில் நேரில் கண்டான். மற்ற சமூகங்களின் பங்களிப்புகள் மற்றும் இருப்பை அழிக்கும் அரசியல் மற்றும் மத தலைவர்களின் செயல்களில்! அது தான் 'மாற்றத்துக்காக' ஏங்குகிறான்!      புத்தர், ஞானம் பெற்றவர், இரக்கம் மற்றும் அகிம்சையின் செய்தியைப் போதித்தார், ஆனால் அவரது போதனைகள் அதிகாரத்தில் இருப்பவர்களின் நிகழ்ச்சி நிரல்களுக்கு சேவை செய்ய திரிக்கப்பட்டன. உலகளாவிய அன்பு மற்றும் புரிதல் கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட ஒரு மதம், மற்றவர்களை ஒதுக்கி வைப்பதையும் ஒடுக்குவதையும் நியாயப்படுத்த எப்படி இன்று ஒத்துழைக்கப்பட்டது என்று குறளரசனால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.     குறளரசனும் ருவனிக்காவும்  தங்களின் உறவின் சிக்கல்களை சிலவேளை எதிர் கொள்ளவேண்டி இருந்தது. அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள தப்பெண்ணங்கள் மற்றும் பாரபட்சங்களை அடிக்கடி எதிர்கொண்டனர். கடந்த காலத்தின் பாவங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டு, திருத்தப்பட்டு, மன்னிப்பு கேட்டு, அனைத்து சமூகங்களும் நல்லிணக்கத்துடனும், பரஸ்பர மரியாதையுடனும் இணைந்து வாழக்கூடிய எதிர்காலத்தை, இவ்வாறான அதி முக்கிய 'மாற்றத்தை' இருவரும் எதிர் பார்த்தனர்.      "இருஇனம் வாழும் ஒரு நாட்டில்  இருக்கையை பிடுங்கி எடுத்து தனதாக்கி இறுமாப்புடன் வரலாற்றையும் திருத்தி எழுதி இதயமற்று நசுக்குவது பெருமை அல்ல? "    "இச்சை படுத்துவதை உணர்ந்து நிறுத்தி  இணக்கம் கண்டு இதயம் பரிமாறி  இன்று நேற்று செய்த அநியாயங்களுக்கு  இனியாவது மன்னிப்பு கேள் நாடுமுன்னேறும்! "     இந்த 'மாற்றம்' தான் அவன் சுருக்கமாக எதிர்பார்ப்பது. எது எப்படியானாலும்,  அவர்களின் காதல் ஒரு இணக்கமான சகவாழ்வு சாத்தியம் என்பதற்கு ஒரு சான்றாக இருந்தது, கருத்து வேறுபாடு இலங்கையில் நிலவினாலும், அவர்களின் வாழ்க்கை என்ற கடலில், நம்பிக்கை கலங்கரை விளக்காக இருந்தது.     வருடாந்த ஜெனிவா தலையீடுகள் குறளரசனுக்கும் அவரது சமூகத்திற்கும் ஒரு நம்பிக்கையை அளித்தன. இலங்கையில் ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் அமைப்பு ரீதியான அநீதிகளுக்கு தீர்வு காண சர்வதேச சமூகம் இங்குதான் கூடுகிறது. குறளரசன் அர்த்த முள்ள 'மாற்றத்திற்காகவும்', தனது கடமைகளை மதிக்கும் மற்றும் அனைத்து குடிமக்களின் கண்ணியத்தை நிலைநிறுத்தும் ஒரு அரசாங்கத்திற்காகவும் உருக்கமாக பிரார்த்தனை செய்தான். அவனுடன் அவனின் காதலி ருவனிக்காவும்  இணைந்து கொண்டாள். என்றாலும் குறளரசனும் ருவனிக்காவும் பாவத்தில் இருந்து இலங்கையை மீட்பதற்கான பாதை தடைகள் நிறைந்தது என்பதை உணர்ந்தனர். மேலும் 'மாற்றம்' எளிதில் வராது என்பது  குறளரசக்குத் தெரியும். அறியாமை மற்றும் தப்பெண்ணத்தின் தூக்கத்திலிருந்து ஒரு நாள் முழு சமூகமும் விழித்து, கடந்த கால தவறுகளை உணர்ந்து, நல்லிணக்கம் மற்றும் நீதியை நோக்கி ஒரு புதிய பாதையை உருவாக்குமா? அல்லது அனைத்து குடிமக்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் அங்கீகரிக்கும் அதிகாரங்களை கட்டாயப்படுத்த சர்வதேச சமூகத்தின் இடைவிடாத அழுத்தம் தேவைப்படுமா?. அவன் மனம் அலை பாய்ந்தது. இந்த கவலையிலும், மற்றும் படிப்பாலும், அவன் சிலவேளை தனிமையை விரும்பினான். இதனால் அவன் ருவனிக்காவை சந்திப்பதும் குறையத் தொடங்கியது. இது அவளுக்கு ஒரு தவிப்பைக் கொடுத்தது.    ஒரு நாள் அவள், அவனின் காதில் விழக்கூடியதாக தன் தவிப்பை ஒரு சிங்கள பாடலை முணுமுணுத்து எடுத்துக் காட்டினாள்.     'සිහිනෙන් වගේ ඇවිදින් ආයෙත් සැගවී හිටියේ කොහෙදෝ? මදකින්  පෙනී නොපෙනී ගියේ මේ ආදරේ හැටිදෝ  ?'   'නෙත සනසනා නුඹගේ සිනා මා රැය පුරා එය සිහි කලා නිදි දෙවු දුවත් අද නෑ ඇවිත් ඈතින් ඉදන් සරදම් කලා.'.   'නෙතු වෙහෙසිලා  දහවල  පුරා නුඹ සොය සොයා සිත දුර ගියා  මදකින්  පෙනී නොපෙනී ගියේ මෙ ආදරේ හැටිදෝ  ?'       குறளரசன் மௌனமாக கண்ணீர் சிந்தி, அதே பாடலை தமிழில் முணுமுணுத்தான்.     "மீண்டும் வருவாயோ கனவில் அணைப்பாயோ? எங்கே மறைந்தாய் ? எந்தத் தொலைவில் ? திடீரெனத் தோன்றுவாய்? சடுதியாக மறைவாய்? உண்மைக் காதலா?, வெறும் நாடகமா?"   "சோர்ந்த கண்களுக்கு புன்னகை தைலம் இரவின் மடியில் முகத்தைக் காண்கிறேன்  இரவுதேவதை என்னைத் தழுவ மறுக்கிறாள்?  தூர விலகி கிண்டல் செய்கிறாள்?."   "பகலில் கண்கள் சோர்வு அடையுதே  இதயம் அலைந்து உன்னைத் தேடுதே!  கண்ணுக்குள் அகப்படாதா காதலா இது? கணப்பொழுதில் கடக்கும் கனவின் மகிழ்ச்சியா ?"     குறளரசன் தனது மருத்துவப் பயிற்சியின் இறுதி நாட்களை நெருங்கிக் கொண்டிருந்தபோது, அவன் நம்பிக்கைக்கும் விரக்திக்கும் இடையே கிழிந்துக் கொண்டு இருந்தான். முன்னோக்கி, செல்லும் நேரிய பாதை சவால்கள் நிறைந்ததாக இருந்தது, ஆனால் அவன் ஒரு சிறந்த நாளைய கனவுகளை என்றும் கைவிட மறுத்துவிட்டான். கல்வி, சுறுசுறுப்பு மற்றும் அன்பு ஆகியவற்றின் சக்தியை அவன் நம்பினான்.     பிளவு மற்றும் அவநம்பிக்கையால் பிளவுபட்ட சமூகத்தின் குழப்பங்களுக்கு மத்தியில் அவர்களின் காதல் மலர்ந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக முற்றங்களில் மற்றும் மாலை நேர உலாக்களில் அவர்கள் ஒருவருக்கொருவர் கைகளில் ஆறுதலைக் கண்டார்கள், அவர்களின் காதல் வெளியில் வீசும் புயல்களிலிருந்து ஒரு தற்காலிக அடைக்கலமாக இருந்தது.      "மாலை நேர தென்றல் என்ன பாடுதோ என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ மஞ்சள் வண்ண வெய்யில் என்று தோணுதோ என் மங்கை மேனி தங்கம் என்று நாணுதோ?"   "பூ விரிந்த சோலை என்ன எண்ணுதோ இந்த பூவைப்போல மென்மை இல்லை என்றதோ தங்க நிற கலசம் எடுத்து நடக்கும் தேரோடு பக்கம் வந்து மெதுவாய் பதமாய் இதமாய் உறவாடு?"     ஒரு சிங்கள குடும்பத்தின் மகளான ருவனிக்காவுக்கு, குறளரசனை நேசிப்பது என்பது பிறப்பிலிருந்தே அவளிடம் சூழ்நிலை காரணமாக வேரூன்றியிருந்த தப்பெண்ணங்கள் மற்றும் பக்கசார்புககளின் தாக்கங்களை கலையத் தொடங்கியது. குறளரசனின் தமிழ் மக்கள் சமூகத்தின் விளிம்புநிலையில் நலிந்தபோது, எழுபத்தி ஆறு ஆண்டுகளாக, சலுகை மற்றும் அதிகாரத்தால் பயனடைந்த ஒரு சமூகத்தைச் தான் சேர்ந்தவர் என்ற குற்ற உணர்வுடன் அவள் சிலவேளை மல்யுத்தம் செய்தாள்.     ஆனால் குறளரசனிடம், அவள் ஒரு காதலியாக மட்டுமல்ல, நீதி மற்றும் சமத்துவத்திற்கான போராட்டத்தில் ஒரு பங்காளியாகவும் இருந்தாள். ஒன்றாக, காதல் இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டிய எதிர்காலத்தை கற்பனை செய்யத் துணிந்தனர், அங்கு கடந்த கால பாவங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டு பரிகாரம் செய்யப்பட்டன.     அவர்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தின் வாசலில் நிற்கும் போது, குறளரசனும் ருவனிக்காவும் ஒருவரையொருவர் ஒட்டிக்கொண்டனர், அவர்களின் காதல் இருள் கடலில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருந்தது. ஏனென்றால், அவர்களின் கூட்டணியில், மகாவம்சத்தின் எதிரொலிகள் மௌனமாகி, ஒற்றுமை, சமத்துவம் மற்றும் புரிந்துணர்விற்காக அழைப்பு விடுக்கும் குரல்களின் சேர்ந்திசையால் [கோரஸால்] பதிலீடு செய்யப்பட்ட எதிர்காலம் பற்றிய வாக்குறுதி இருந்தது.     யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில், குழப்பமான கடந்த காலத்தின் எதிரொலிகள் மற்றும் நிச்சயமற்ற எதிர்காலத்தின் கிசுகிசுக்களின் மத்தியில், குறளரசன் தனது மக்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக உயர்ந்து நின்றான். மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய அவனது அசைக்க முடியாத நம்பிக்கையில், ஒரு நாள், தமிழர்களின் குரல்கள் கேட்கப்படும், அவர்களின் கனவுகள் நனவாகும், 'மாற்றம்' கட்டாயம் நிகழும் என்ற நம்பிக்கை, மற்றும் இரவீந்தரநாத் தாகூரின் கீதாஞ்சலி பாடல் [“Where the mind is without fear and the head is held high; Where knowledge is free;] அவனின் போராட்டத்தைத் தொடர ஊக்கம் & கொடுத்தது.  வலிமையைக் கொடுத்தது.     "இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ, அறிவு வளர்ச்சிக்கு எங்கே பூரண விடுதலை உள்ளதோ, குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால் வெளி உலகின் ஒருமைப்பாடு எங்கே  உடைபட்டுத் துண்டுகளாய்ப் போய்விட படவில்லையோ, வாய்ச் சொற்கள் எங்கே மெய்நெறிகளின் அடிப்படையிலிருந்து வெளிப்படையாய் வருகின்றனவோ, விடாமுயற்சி எங்கே தளர்ச்சி யின்றி பூரணத்துவம் நோக்கி தனது கரங்களை நீட்டுகிறதோ, அடிப்படை தேடிச் செல்லும் தெளிந்த அறிவோட்டம்  எங்கே பாழடைந்த பழக்கம் என்னும் பாலை மணலில் வழி தவறிப் போய்விட வில்லையோ, நோக்கம் விரியவும், ஆக்கவினை புரியவும் இதயத்தை எங்கே வழிநடத்திச் செல்கிறாயோ,  அந்த விடுதலைச் சுவர்க்க பூமியில் எந்தன் பிதாவே! விழித்தெழுக என் தேசம்!"   [கீதாஞ்சலி / தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா]     நன்றி      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]              
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 0 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.