Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபல பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார்! | Popular Playback Singer Jayachandran Passed Away

பிரபல பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார்!

பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் (80 வயது) உடல்நலக்குறைவால் காலமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றையதினம் (09-01-2025) சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறான நிலையில் அவரது குடும்பத்தினருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

பாடகர் ஜெயச்சந்திரன் தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 14000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

https://jvpnews.com/article/popular-playback-singer-jayachandran-passed-away-1736438344

  • கருத்துக்கள உறவுகள்

மகத்தான திரையிசை பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார்!

1346441.jpg திரையிசை பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் | கோப்புப் படம்

 

திருச்சூர்: தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 16,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய மகத்தான திரையிசை பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார். அவருக்கு வயது 80.

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், அவரது உயிர் பிரிந்தது. கடந்த 1944, மார்ச் 3-ம் தேதி எர்ணாகுளத்தில் அவர் பிறந்தார். அவரது தந்தையை பின்பற்றி இசை பயின்று, அதில் தேர்ச்சி பெற்றார். விலங்கியலில் இளங்கலை பட்டம் பெற்ற அவர், சென்னையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பாடியதன் மூலம் திரைப்படத்துக்கு பாடும் வாய்ப்பை பெற்றார்.

ADVERTISEMENT
 
 
 
 
 
 
HinduTamil8thJanHinduTamil8thJan
 

தமிழில் கடந்த 1973 முதல் திரைப்படங்களுக்கு பாடல் பாடி உள்ளார். எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, எஸ்.ஏ.ராஜ்குமார், தேவா, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், பரணி, ஸ்ரீகாந்த் தேவா, ஜி.வி.பிரகாஷ்குமார் உள்ளிட்ட இசை அமைப்பாளர்களுடன் தமிழில் பணியாற்றி உள்ளார்.

‘மூன்று முடிச்சு’ படத்தில் ‘வசந்த கால நதிகளிலே’, ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் ‘வாழ்க்கையே வேஷம்’, அந்த 7 நாட்களில் ‘கவிதை அரங்கேறும் நேரம்’, நானே ராஜா நானே மந்திரி படத்தில் ‘மயங்கினேன் சொல்ல தயங்கினேன்’, வைதேகி காத்திருந்தாள் படத்தில் ‘ராசாத்தி உன்ன’, கிழக்கு சீமையிலே படத்தில் ‘கத்தாழங் காட்டு வழி’, மே மாதம் படத்தில் ‘என் மேல் விழுந்த’, பூவே உனக்காக படத்தில் ‘சொல்லாமலே யார் பார்த்தது’, கிரீடம் படத்தில் ‘கனவெல்லாம்’ உள்ளிட்ட பாடல்களை அவர் தமிழில் பாடி உள்ளார். சுமார் 60 ஆண்டுகள் இசை உலகை ஆட்சி செய்த அவர் தற்போது விடைபெற்றுள்ளார். மண்ணுலகை விட்டு அவர் விடைபெற்றாலும் அவரது குரல் என்றும் காற்றில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

 

பி.ஜெயச்சந்திரனின் திரைப் பயணம்: (2020-ல் பி.ஜி.எஸ்.மணியன் எழுதிய கட்டுரையில் இருந்து...) எழுபதுகளின் தொடக்கத்தில் தமிழ்த் திரை இசையில் சத்தமே இல்லாமல் ஒரு மாறுதல் நிகழ ஆரம்பித்தது. அறுபதுகளின் இறுதிவரை கனமான குரல் வளம் கொண்ட பாடகர்களை முன்னிலைப்படுத்தி இயங்கி வந்த திரையிசை, எழுபதுகளில் புதிய தலைமுறை நடிகர்களான கமல், ரஜினி போன்றவர்களின் வருகையால் மென்மையான குரல்வளம் நிறைந்த பாடகர்களின் வசம் வந்தது.

 

இளைய தலைமுறையின் துள்ளல், துடிப்பு, உற்சாகத்தைப் பிரதிபலிக்க ஒரு எஸ்.பி.பி. கிடைத்தார். அமைதியான நதியோட்டமாக மனத்தை வருட ஒரு ஜேசுதாஸ் கண்டெடுக்கப்பட்டார். இந்த இருவரின் ஆளுமை திரையிசையை வசப்படுத்திக்கொண்ட நேரத்தில், மலையாளத் தேசத்திலிருந்து மற்றுமொரு மயக்கும் குரலால் தமிழ் ரசிகர்களைக் கட்டிப்போட வந்தவர்தான் பளியத்து ஜெயச்சந்திரக்குட்டன் என்ற பி. ஜெயச்சந்திரன்.

 

1944-ம் வருடம் மார்ச் மாதம் மூன்றாம் தேதி எர்ணாகுளத்தில் உள்ள ரவிபுரம் பகுதியில் பத்ராலயம் என்ற சிற்றூரில் ரவிவர்மா கொச்சனியன் தம்புரான் - பளியத்து சுபத்ரா குஞ்சம்மாள் தம்பதிக்கு இவர் மூன்றாம் மகனாகப் பிறந்தார். குடும்பம் இரிஞ்ஞாலக்குடாவுக்குக் குடிபெயர்ந்ததால் மாணவப் பருவம் இரிஞ்ஞாலக்குடாவிலேயே கழிந்தது. 1958-இல் மாநில இளைஞர் திருவிழாவில் பதினான்கு வயது ஜெயச்சந்திரன் சிறந்த இளம் மிருதங்கக் கலைஞராகச் சிறப்பிக்கப்பட்டார். அதே மேடையில் சிறந்த இளம் கர்நாடக இசைக் கலைஞர் விருது பெற்றவர் பதினெட்டு வயது வாலிபரான கே.ஜே.ஜேசுதாஸ்.

முதல் பாடல்: பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகளில் பாடிய ஜெயச்சந்திரனுக்குக் கிடைத்த பாராட்டுகளும் பரிசுகளும் அவருடைய இசை ஆர்வத்தை அதிகரிக்கச் செய்தன. முதல் வாய்ப்பு இருபத்து மூன்றாம் வயதில் ‘உத்யோகஸ்தா’ என்ற மலையாளப் படத்தில் எம்.எஸ்.பாபுராஜ் இசையில் ‘அநுராக கானம் போலே’ என்ற பாடல். இவருடைய திறமையை மேலும் புடம்போட்டுத் தங்கமாக ஒளிரவைத்த பெருமை இசையமைப்பாளர் தேவராஜனையே சேரும்.

 

வசீகரக் குரலால் சேட்டன்களைக் கட்டிப்போட்ட ஜெயச்சந்திரனுக்கு மெல்லிசை மன்னர் இசை அமைத்த ‘பணி தீராத வீடு’ படத்தில் பாடிய ‘சுப்ரபாதம்’ பாடல், கேரள மாநில அரசின் சிறந்த பாடகருக்கான விருதைப் பெற்றுத் தந்தது. 1973-இல் சத்யா மூவிஸின் ‘மணிப்பயல்’ படத்தில் ‘தங்கச்சிமிழ் போல் இதழே’ பாடலின் மூலம் ஜெயச்சந்திரனின் குரலைத் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார் எம்.எஸ். விஸ்வநாதன்.

 

“அந்த இணையற்ற கலைஞர் என் கிட்டே இருந்த திறமையை அழகா வெளியே கொண்டு வந்தார். சொல்லப்போனால் எனக்கு முதல் முதலாகக் கிடைச்ச அவார்டே ‘பணி தீராத வீடு’ படத்துலே அவர் இசையில் பாடிய ‘சுப்ரபாதம்’ பாட்டுக்குத்தான்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுவார் ஜெயச்சந்திரன். 1976-ல் வெளிவந்த பாலசந்தரின் ‘மூன்று முடிச்சு’ படத்தில் ஜெயச்சந்திரன் வாணி ஜெயராமுடன் பாடிய ‘ஆடி வெள்ளி தேடி வந்த’, ‘வசந்த கால நதிகளிலே’ ஆகிய பாடல்கள் பெரிய வெற்றியைப் பெற்றன.

 

மாஞ்சோலைக் கிளிதானோ... - புதுமை இயக்குநர் ஸ்ரீதரின் ‘அலைகள்’ படத்தில் ஜெயச்சந்திரன் மெல்லிசை மன்னரின் இசையில் பாடிய கவியரசரின் ‘பொன்னென்ன பூவென்ன கண்ணே’ பாடலில் ஜெயச்சந்திரனின் குரலில் தென்படும் வசீகரம் மனத்தை வருடி சாந்தப்படுத்தும்.

 

1975-ல் ‘பெண்படா’ என்ற மலையாளப்படம். ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை ஆர்.கே. சேகர் இசையமைப்பாளர். இந்தப் படத்தில் ‘வெள்ளித் தேன்கிண்ணம் போல்’ என்ற பாடலை ஜெயச்சந்திரன் பாடினார். இளையராஜாவின் இசையில் முதல்முதலாக ‘காற்றினிலே வரும் கீதம்’ படத்தில் பாடிய ‘சித்திரச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன்’ பாடலும், ‘கிழக்கே போகும் ரயி’லின் ‘மாஞ்சோலைக் கிளிதானோ’ பாடலும் பெரு வெற்றிபெற்று முன்னணிப் பாடகர் வரிசையில் ஜெயச்சந்திரனைச் சேர்த்தன.

 

‘ஒருதலை ராகம்’ படத்தில் ‘கடவுள் வாழும் கோவிலிலே,’ ‘இரயில் பயணங்களில்’ படத்தில் ‘வசந்த காலங்கள்’ ஆகிய பாடல்கள் டி.ராஜேந்தரின் இசையில் ஜெயச்சந்திரன் தொடுத்த வெற்றிக்கோலங்கள். கே. பாக்யராஜின் சிறந்த திரைக்கதை அமைப்புக்கான படங்களில் முதலிடத்தில் இருக்கும் ‘அந்த ஏழு நாட்கள்’ படத்தில் ‘கவிதை அரங்கேறும் நேரம்’ பாடலை எஸ். ஜானகியுடன் இணைந்து வெகு அற்புதமாகப் பாடி அசத்தி இருப்பார் ஜெயச்சந்திரன்.

 

‘ராஜ’ கீதங்கள் - ‘கடல் மீன்கள்’ படத்தில் ‘தாலாட்டுதே வானம்’ என்று எஸ். ஜானகியுடன் சேர்ந்து இசையலைகளை மனத்தில் பாயவைத்தார் ஜெயச்சந்திரன். பாடல்களுக்காவே பெரிய வெற்றிபெற்ற ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் கதாநாயகன் பாடுவதாக அமைந்த மூன்று பாடல்களையுமே ஜெயச்சந்திரனைத்தான் பாடவைத்தார் இளையராஜா. ‘ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு’ , ‘இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே’, ‘காத்திருந்து காத்திருந்து’ மூன்றுமே வெற்றிக்கனியை ஜெயச்சந்திரனின் மடியில் போட்ட முத்தான பாடல்கள்.

 

‘அம்மன் கோவில் கிழக்காலே’ படத்தில் ‘பூவை எடுத்து’, ‘கொடியிலே மல்லியப்பூ’ (கடலோரக் கவிதைகள்) ஆகியவை ஜெயச்சந்திரனின் குரல் தனித்தன்மையோடு வெளிப்பட்ட பாடல்கள். ரஜினிகாந்த்தின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றான ‘ஆறிலிருந்து அறுபதுவரை’ படத்தில் ‘வாழ்க்கையே வேஷம்’ பாடலில் சொந்தபந்தங்களால் ஒதுக்கப்பட்ட ஒரு மனிதனின் மனநிலையைத் தனது குரலால் அற்புதமாக வெளிப்படுத்தி இருப்பார் ஜெயச்சந்திரன்.

இதே போல் ‘ரிஷி மூலம்’ படத்தில் குற்ற உணர்வு நீங்கி பாரம் அகன்ற மனிதனின் உணர்வை ‘நெஞ்சில் உள்ள காயம் ஒன்று’ பாடலில் வெளிப்படுத்தி இருப்பார் ஜெயச்சந்திரன். எம்.ஜி.ஆரின் கடைசிப் படமான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தில் மெல்லிசை மன்னரின் இசையில் வாணிஜெயராமுடன் பாடிய ‘அமுதத் தமிழில் எழுதும் கவிதை’ என்ற துவிஜாவந்தி ராகப் பாடல் இனிய தேனமுது. என்றாலும் இளையாராஜாவின் இசையில் இவர் பாடிய அனைத்தும் ‘ராஜ’கீதங்கள் எனலாம்.

 

துல்லியமான உச்சரிப்பு, பொருளுணர்ந்து பாவநயத்தோடு குரலால் மெருகூட்டுவது ஆகியவற்றில் தனித்தன்மையோடு பிரகாசித்தார் ஜெயச்சந்திரன். பி. சுசீலாவுடன் பாடிய ‘மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்’ (‘நானே ராஜா நானே மந்திரி’) பாடலுக்கு மயங்காதவர் யாருமே இல்லை. மனோஜ் கியான் இசையில் ‘இணைந்த கைகள்’ படத்தில் ‘அந்திநேரத் தென்றல் காற்’றை எஸ்.பி.பி.யுடன் சேர்ந்து வரவழைத்தார். விக்ரமனின் ‘பூவே உனக்காக’ படத்தில் எஸ்.ஏ. ராஜ்குமாரின் இசையில் சுஜாதாவுடன் பாடிய ‘சொல்லாமலே யார் பார்த்தது’ பாடலில் ஜெய் சேட்டனின் குரல் வசீகரம் சொல்லாமலே புரியும்.

 

‘ஸ்ரீமன் நாராயண குரு’ மலையாளப் படத்தில் ‘சிவசங்கர சர்வ சரண்ய விபோ’ பாடலுக்காக 1975-ம் ஆண்டு சிறந்த பாடகருக்கான தேசிய விருது பெற்றார் ஜெயச்சந்திரன். ஜேசுதாஸ் சம்பந்தப்பட்ட மறக்க முடியாத நிகழ்வும் இவர் வாழ்வில் உண்டு. தனது பதினான்காவது வயதில் முதல்முதலாக எந்த ஜேசுதாஸ் சிறந்த இசைக் கலைஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மேடையில் சிறந்த மிருதங்க இசைக் கலைஞராக ஜெயச்சந்திரன் கௌரவிக்கப்பட்டாரோ அதே ஜேசுதாஸின் பெயரால் ஆண்டுதோறும் இசைத்துறையில் சாதனை புரிந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் ‘ஸ்வரலயா கைரளி யேசுதாஸ் விரு’தை முதல்முதலாக - இரண்டாயிரமாண்டில் - ஜேசுதாஸின் கையாலேயே பெற்றுக்கொண்டார் ஜெயச்சந்திரன்.

Edited by நிழலி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

"ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு..'' - காந்தக் குரலோன் ஜெயச்சந்திரன் காலமானார்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் . .......!

  • கருத்துக்கள உறவுகள்

பிரபல பின்னணிப் பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார்!

Published By: VISHNU

09 JAN, 2025 | 09:56 PM
image
 

பிரபல பின்னணிப் பாடகர் ஜெயச்சந்திரன் உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை (9) காலமானார். அவருக்கு வயது 80.

கேரள மாநிலம் திருச்சூர் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் சுமார் 16,000 பாடல்களை இவர் பாடியுள்ளார்.

சிறந்த பின்னணிப் பாடகருக்கான மதிப்புமிக்க தேசிய திரைப்பட விருது, கேரள மாநில திரைப்பட விருதுகள் 5, கேரள அரசின் ஜே.சி.டேனியல் விருது மற்றும் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது உள்ளிட்டவற்றைப் பெற்றுள்ளார். 4 முறை தமிழ்நாடு மாநில விருதுகளை வென்றுள்ளார்.

https://www.virakesari.lk/article/203442

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

'வைதேகி காத்திருந்தாள்' வந்த பின் இவரின் குரல் மேல் வந்த மயக்கம் இன்னும் போகவில்லை.

இவருடைய பாடல்களையும், பாடகி ஜென்சியினுடைய பாடல்களையும் தனித்தனியாக கேட்பது ஒரு தெரபி போல.....................🙏.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மிகவும் பிடித்த பாடகர்!

ஆழ்ந்த இரங்கல்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் .

சித்திர செவ்வானத்தை சிரிக்க வைத்த ஆண் குயில் ஒன்று விடைபெற்று பறந்து போனது .

 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மிகவும் பிடித்த பாடகர். அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

பூவண்ணம் போலநெஞ்சம்
https://www.youtube.com/watch?v=CzPca6-I6iQ

பொன்னென்ன பூவென்ன
https://www.youtube.com/watch?v=EdDTS3l9KCQ

  • கருத்துக்கள உறவுகள்

 ஆர்பாடடம்   இல்லாத  இனிய பாடல்களைத்தந்த சிறந்த பாடகர் . அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, நிலாமதி said:

 ஆர்பாடடம்   இல்லாத  இனிய பாடல்களைத்தந்த சிறந்த பாடகர் . அஞ்சலிகள்.

நீங்கள் சொன்னது போல் ஆர்ப்பாட்டம் இல்லாத சிறந்த பாடகர். அவரது பாடல்கள் கூட ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக கேட்டு ரசிக்கலாம்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகின்றேன்.

 

Edited by குமாரசாமி
எழுத்துப்பிழை.

எமக்கு வயது படிப்படியாக ஏறிக் கொண்டு போகும் போது நாம் காண விரும்பாத நிகழ்வுகளில் ஒன்று, நாம் விரும்பிய, பழகிய, நெருக்கமான உறவுகளை அவர்களின் வயோதிபத்தின் காரணமாக இழப்பதும் ஒன்று.

அந்த வரிசையில் இன்று பாடகர் ஜெயச்சந்திரன் அவர்களும் காலமாகி காற்றில் கரைந்து விட்டார்.

கண்ணீர் அஞ்சலி 😢

  • கருத்துக்கள உறவுகள்

பாடகர் ஜெயச்சந்திரன் தனது எண்பதாவது வயதில் மறைந்துவிட்டார். ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
ஆழ்ந்த இரங்கல்🙏
 
 
  • கருத்துக்கள உறவுகள்

இவரது பாடல்களை நான் என்னை மறந்து ரசிப்பதுண்டு. அதிலும், எனக்கு மிகவும் பிடித்த இவரது பாடல் கடன்மீன்கள் படத்தில் பாடிய "தாலாட்டுதே வானம்." இவருக்கு இவ்வளவு வயதென்று நான் அறிந்திருக்கவில்லை.   இவரது புகைப்படத்தை இன்றுதான் காண முடிந்தது. 

அவரது ஆன்மா அமைதியில் இளைப்பாறட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தால் அழியாத பாட்டுக்களைத் தந்த பாடகர் ஜெயச்சந்திரனுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

 

 

காற்றில் கலந்த இசை: ஜெயச்சந்திரன் மறைவால் கலங்கும் பிரபலங்கள்!

christopherJan 10, 2025 08:46AM
jeyachandran.jpg

பிரபல தென்னிந்திய பின்னணிப் பாடகர் பி. ஜெயச்சந்திரன் கடந்த ஒரு வருடமாக கல்லீரல் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். அவருக்கு வயது 80. 

திருச்சூர் மாவட்டம் பூக்குன்னத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று (ஜனவரி 9) மாலை 7 மணியளவில் ஜெயச்சந்திரன் திடீரென மயக்கமடைந்தார். இதனையடுத்து அவர் உடனடியாக திரிச்சூரில் உள்ள அமலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். 

தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக புகழ்பெற்ற பின்னணி பாடகராக வலம் வந்தவர் ஜெயச்சந்திரன்.

1944 மார்ச் 3ஆம் தேதி எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ரவிபுரத்தில் பிறந்தார். அவரின் பாடும் திறமையை சிறுவயதிலேயே அறிந்துகொண்ட அவரது அண்ணன் சுதாகரன் தொடர்ந்து ஊக்கப்படுத்தினார்.

zLuFEVAE-image-1-1-1024x576.jpg

தலைமுறை கண்ட பாடகர்

1965ஆம் ஆண்டு வெளியான ‘குஞ்சாலி மரக்கார்’ படத்தில் பி. பாஸ்கரன் எழுதி சிதம்பரநாத் இசையமைத்த ‘ஒரு முல்லைப்பூ மாலமாய்’ என்ற பாடல் மூலம் ஜெயச்சந்திரன் திரையுலகில் பாடகராக அறிமுகமானார்.

தமிழ் திரையுலகில் 1973ஆம் ஆண்டு வெளியான ‘அலைகள்’ படத்தில் மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் இசையில் ‘பொன்னென்ன பூவென்ன’ என்ற பாடலைப் பாடி அறிமுகமானார்.

அதன்பின்னர் இளையராஜா, சங்கர் கணேஷ், தேவா, வித்யாசாகர், ஏ. ஆர். ரகுமான், ஜி. வி.பிரகாஷ் என பல தலைமுறைகளாக பிரபல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி, ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார். 

குறிப்பாக, தமிழில் பாரதி ராஜாவின் கிழக்கு சீமையிலே திரைப்படத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் `கத்தாழங் காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி’ பாடலைப் பாடியதற்காக, 1994-ல் தமிழ்நாடு அரசின் சிறந்த பாடகருக்கான திரைப்பட விருது பெற்றார். 

image-1-1-1024x585.jpg

ஏழைகளின் ஜேசுதாஸ்

இளையராஜா இசையில் தாலாட்டுதே வானம், மயங்கினேன் சொல்லத் தயங்கினேன், காத்திருந்து காத்திருந்து, ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு, கொடியிலே மல்லியப்பூ போன்ற பல நெஞ்சம் வருடும் பாடல்களை பாடியுள்ளார்.

அதே போன்று விஜய்க்காக பூவே உனக்காக படத்தில் ’சொல்லாமலே யார் பார்த்தது’ முதல் அஜித்குமாருக்காக கிரீடம் படத்தில் ‘கனவெல்லாம் பலிக்குதே’ வரை என இன்றைய தலைமுறையின் மனதையும் தனது குரலால் வருடியுள்ளார்.

ஏழைகளின் ஜேசுதாஸ் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட ஜெயச்சந்திரன், மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் மட்டுமன்றி இந்தியிலும் ஜெயச்சந்திரனின் குரல் ஒலித்திருக்கிறது. மேலும் தனது குரலுக்காக தேசிய விருது, தமிழ்நாடு அரசு விருது, கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறார். 

Ja3uT861-image-1-1-1024x576.jpg

பிரபலங்கள் இரங்கல்!

ஜெயச்சந்திரன் மறைவை அடுத்து நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “மலையாளத்திலிருந்து வந்து தெற்கு மாநிலங்களை நிரப்பிய மணிக்குரலுக்குச் சொந்தக்காரரான ஜெயச்சந்திரன் மறைந்து விட்டார் என்னும் செய்தி மனதை வருத்துகிறது. பாடிய பாடல்களில் எல்லாம் வெற்றிகண்டு காட்டியவர். இசையாக என்றும் நம் மனங்களில் இருப்பார். அவருக்கு என் அஞ்சலி” என தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமர் எம்.பி விஜய் வசந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில், “என்றும் மனதில் நிற்கும் மிக சிறந்த பாடல்களை பாடிய ஜெயச்சந்திரன்மறைவு சோகம் தரும் செய்தி. அவரை இழந்து வருந்தும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்” என இரங்கல் தெரிவித்துள்ளார்.

https://minnambalam.com/cinema/celebrities-are-shocked-by-the-demise-of-jayachandran/

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தமிழீழப்  பாடலை பாடியவர் இவர் தான்.🙏

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

ஶ்ரீதர் தயாரித்த அலைகள் படத்தில் ஜெயச்சந்திரன், “பொன்னென்ன பூவென்ன கண்ணே உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே….” என்ற பாடலைப் பாடியிருந்தார். நான் நினைக்கின்றேன் அந்தப் பாடல்தான் அவரின் முதலாவது தமிழ்ப் பாடலாக இருக்கும் என்று. இன்றும் அந்தப் பாடலை ரசித்துக் கேட்பேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.