Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் 1949 ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதி பிறந்த ராஜேஷ், திண்டுக்கல், வடமதுரை, மேலநத்தம் ஆனைக்காடு, தேனி மாவட்டம் சின்னமனூர் ஆகிய இடங்களில் படித்தவர்.

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 75.

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ். 'கன்னிப் பருவத்திலே' படத்தின் நாயகனாக அறிமுகமானவர் ராஜேஷ். அதற்குப் பிறகு பல்வேறு படங்களில் நடித்தார். வெள்ளித்திரை நடிகர், டப்பிங் கலைஞர், எழுத்தாளர், சின்னத்திரை நடிகர் என அனைத்திலுமே தனது முத்திரையைப் பதித்தவர் ராஜேஷ். . சிறந்த குணச்சித்திர நடிகரான ராஜேஷ், தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்கள் மட்டுமல்ல சீரியல்களிலும் நடித்து புகழ்பெற்றார்.

47 ஆண்டுகளுக்கும் மேலாக 'கன்னிப் பருவத்திலே' தொடங்கி 'சர்க்கார்' திரைப்படம் வரை நடித்து இருக்கிறார். ஹீரோ முதல் குணச்சித்திர வேடங்கள் வரை 150க்கும் மேற்பட்ட படங்களில் முக்கிய பாத்திரங்கள் மற்றும் துணை வேடங்களில் நடித்திருக்கிறார்.

https://tamil.news18.com/entertainment/cinema-famous-tamil-actor-rajesh-died-due-to-illness-nw-mma-ws-l-1816937.html

  • கருத்துக்கள உறவுகள்

திரையுலகில் பொன்விழா கண்ட நடிகர் ராஜேஷ் காலமானார்!

29 May 2025, 10:34 AM

actor rajesh died today may 29

கடந்த 50 ஆண்டுகளாக திரைத்துறையில் நடிகராக திகழ்ந்த நடிகர் ராஜேஷ் திடீர் உடல் நலக் குறைவு காரணமாக இன்று (மே 29) காலை காலமானார். அவருக்கு வயது 75.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 1949ஆம் ஆண்டு பிறந்த அவர், சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக அவர் பணியாற்றி வந்த நேரத்தில், முதன்முறையாக 1974ஆம் ஆண்டு மூலம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான அவள் ஒரு தொடர் கதை படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதனையடுத்து அவரது இரண்டாவது படமாக 1979ஆம் ஆண்டு வெளிவந்த ’கன்னிப் பருவத்திலே’ படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகி ஆச்சரியம் அளித்தார்.

image-2195.png

அதன்பின்னர் வில்லன், நகைச்சுவை, குணச்சித்திர நடிகர் என பல்வேறு கதாப்பாத்திரையும் ஏற்று முத்திரை பதித்தார்.

தமிழில் இதுவரை தாய்வீடு, சிறை, சத்யா, ஜெய்ஹிந்த், நேருக்கு நேர், தீனா, ரமணா, விருமாண்டி, தர்மதுரை, சர்க்கார் என 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கிறார். மேலும் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் பணியாற்றியுள்ளார்.

வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார்.

இந்த நிலையில் ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வசித்து வந்த ராஜேஷ், திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டு இன்று காலை 8.15 மணிக்கு காலமானார். அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், பரிசோதித்து பார்த்த மருத்துவர்களும் அவரது இறப்பை உறுதி செய்தனர்.

ராஜேஷின் திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். https://minnambalam.com/actor-rajesh-died-today-may-29/

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-328.jpg?resize=750%2C375&ssl

நடிகர் ராஜேஷ் காலமானார்!

150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பன்முக நடிப்புத்திறனுக்காக அறியப்பட்ட மூத்த தமிழ் நடிகர் ராஜேஷ் சென்னையில் இன்று (29) காலை காலமானார்.

இறக்கும் போது அவருக்கு வயது 75.

குறைந்த இரத்த அழுத்தம் தொடர்பான உடல்நலக் குறைவு காரணமாக அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குனர் கே. பாலசந்தரின் பாராட்டப்பட்ட படமான அவள் ஒரு தொடர் கதை மூலம் ராஜேஷ் திரைப்படத் துறையில் அறிமுகமானார்.

பின்னர் கன்னிப்பருவத்திலே திரைப்படத்தில் முதல் கதாநாயகனாக நடித்தார்.

பல ஆண்டுகளாக, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.

பல்துறைத்திறமைக்குப் பெயர் பெற்ற ராஜேஷ், வெள்ளித்திரை நடிகராக மட்டுமல்லாமல், டப்பிங் கலைஞர், எழுத்தாளர் மற்றும் தொலைக்காட்சி நடிகராகவும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

அவரது மறக்கமுடியாத நடிப்பில் அந்த ஏழு நாட்கள், பயணங்கள் முடிவதில்லை, சத்யா, விருமாண்டி மற்றும் மகாநதி ஆகிய படங்களில் நடித்தார்.

திரையில் அவர் கடைசியாகத் தோன்றிய படம் விஜய் சேதுபதி-கத்ரீனா கைஃப் நடித்த மெர்ரி கிறிஸ்துமஸ்.

சினிமாவுக்கு ராஜேஷ் ஆற்றிய பங்களிப்புகளுக்கு அப்பால், சமூக ஊடகங்களில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் தீவிரமாக பங்கேற்பதற்காகவும் அவர் அறியப்பட்டார்.

திரைப்படத் துறையைச் சேர்ந்த உறுப்பினர்கள் ராஜேஷுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அவரை ஒரு பன்முகத் திறமை கொண்ட கலைஞர், ஒரு உன்னதமான நபர் மற்றும் ஒரு ஊக்கமளிக்கும் ஆளுமை என்று நினைவு கூர்ந்து வருகின்றனர்.

https://athavannews.com/2025/1433711

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிறந்த நடிகர். ஆழ்ந்த இரங்கல்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஒரு நடமாடும் பல்கலைக்கழகம்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறந்த நடிகர் . ....... அறிவு சார்ந்த அனுபவசாலி ..........!

ஆழ்ந்த இரங்கல்கள் .......... !

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள். ஒம் சாந்தி 🙏

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிறந்த நடிகர். ஆழ்ந்த இரங்கல்

(இவர் சாத்திரம் சொல்பவர். தனது ஆயுளையும் கணித்திருப்பார் என்று நினைக்கிறேன்)

  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் ராஜேஷ் காலமானார் - ஆசிரியராக இருந்தவர் நடிக்க வந்தது எப்படி?

நடிகர் ராஜேஷ் காலமானார்

பட மூலாதாரம்,UGC

படக்குறிப்பு,நடிகர் ராஜேஷ்

3 மணி நேரங்களுக்கு முன்னர்

1970களிலும் 80களிலும் தமிழ்த் திரையுலகில் பிரபலமாக விளங்கிய நடிகர் ராஜேஷ் காலமானார். மாறுபட்ட, அழுத்தமான பாத்திரங்களில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகில் முத்திரை பதித்தவர் இவர்.

தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகரான ராஜேஷ் சென்னையில் இன்று (மே 29) காலமானார். அவருக்கு வயது 75. உடல்நலக் குறைவின் காரணமாக இன்று காலை 8.15 மணியளவில் அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ராஜேஷிற்கு இன்று காலையில் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும் சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜேஷின் மனைவி கடந்த 2012ஆம் ஆண்டிலேயே காலமாகிவிட்டார். இந்தத் தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இயக்குநர் கே. பாலச்சந்தர் இயக்கிய 'அவள் ஒரு தொடர்கதை' படத்தின் மூலம் 1974ஆம் ஆண்டில் திரையுலகில் அறிமுகமான ராஜேஷ், தொடர்ந்து கவனத்தை ஈர்க்கத்தக்க, அழுத்தமான பாத்திரங்களில் திரையில் தோன்றினார். திரைப்படங்கள் மட்டுமல்லாமல், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்த அவர், டப்பிங் குரல் கலைஞராகவும் திகழ்ந்தார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்துள்ள நடிகர் ராஜேஷ், 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

'அவள் ஒரு தொடர்கதை' திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த போதிலும், தவிர்க்க இயலாத காரணங்களால் தன்னால் அதில் நடிக்க முடியாமல் போய்விட்டதாக பேட்டி ஒன்றில் நடிகர் ராஜேஷ் தெரிவித்திருந்தார்.

கே. பாக்கியராஜ் திரைக்கதையில் பாலகுரு இயக்கிய 'கன்னிப் பருவத்திலே' படத்தில் நடிகர் ராஜேஷ் கதாநாயகனாக நடித்தார். இதுவே அவரது முதல் படமாக அமைந்தது.

'அந்த ஏழு நாட்கள்' திரைப்படத்தில் இவர் ஒரு சிறிய வேடத்தில்தான் நடித்திருந்தார் என்றாலும், அந்தப் பாத்திரம் இவருக்கு ஒரு மறக்க முடியாத பாத்திரமாக அமைந்தது.

2024ஆம் ஆண்டில் விஜய் சேதுபதி - காத்ரீனா கைஃப் நடித்து வெளிவந்த 'மெர்ரி கிறிஸ்மஸ்' திரைப்படம்தான் இவர் நடித்து வெளியான கடைசித் திரைப்படமாகும்.

நடிகர் ராஜேஷ் காலமானார்

பட மூலாதாரம்,SOCIAL MEDIA

படக்குறிப்பு,நடிகர் ராஜேஷ்

ஆசிரியராக இருந்தவர் நடிக்க வந்தது எப்படி?

1949ஆம் ஆண்டில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வில்லியம்ஸ் - லில்லி கிரேஸ் தம்பதியின் மகனாகப் பிறந்த ராஜேஷ், காரைக்குடி அழகப்பா கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி ஆகிய இடங்களில் படித்தாலும் பட்டப்படிப்பை நிறைவுசெய்யவில்லை.

சில காலம் சென்னையில் ஆசிரியராகப் பணிபுரிந்த அவருக்கு 1974ல் 'அவள் ஒரு தொடர்கதை' திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இதற்குப் பிறகு நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு 'கன்னிப்பருவத்திலே' திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இதற்குப் பிறகு தொடர்ச்சியாக அவர் திரைப்படங்களில் நடித்தார். கடந்த சில ஆண்டுகளாக யூ டியூபில் தனது அனுபவங்களை விரிவாகப் பகிர்ந்துவந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c0qg5g8glq0o

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு குணசித்திர நடிகர்.

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் ராஜேஷ் ஜனரஞ்சகமான யுரியூப் புரோகிராம்களையும் வெளியிட்டு வந்தார். மாஜிக் செய்யும் இளைஞர்களையும் அழைத்துப் பேட்டிகண்டு வெளியிட்டார். அவற்றில் சிலவற்றை பார்க்கும் வாய்ப்பு எனக்கும் கிட்டடியது. அவரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதோடு குடும்பத்தாருக்கு ஆழ்ந்த ஆனதாபங்களைத் தெரிவிக்கிறேன்.

Edited by S. Karunanandarajah

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.ஒரு றியல் எஸ்டேற் ஏஜன்டுமாவார்.🙏

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் 🙏

  • கருத்துக்கள உறவுகள்

💔மறைந்தார் பிரபல நடிகர் Rajesh😭கண்ணீரில் திரையுலகம்🥲Last Interview">நான் செத்தா இப்படிதான் சாவேன்💔மறைந்தார் பிரபல நடிகர் Rajesh😭கண்ணீரில் திரையுலகம்🥲Last Interview

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆர்ப்பாட்டம் இல்லாத நடிகர்.

ஆழ்ந்த அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள். அந்த 7 நாட் கள் படக்காட்சி

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

மிகவும் திறைமையான ஒரு நடிகர். ஆரம்ப ரஜனி - கமல் வெள்ளத்தில் மூழ்கிப் போனவர்களில் ஒருவர்.

ஆழ்ந்த இரங்கல்கள்.

நல்ல குணச்சித்திர நடிகர். இவர் பல நடிகர்களுக்கு பின்னணி குரல் கொடுத்தவர். நல்ல கம்பீரமான குரல்.

இவர் கெட்டவனாக இருந்து பின்னர் திருந்தும் பாத்திரத்தில் நடித்த "சிறை" எனக்கு பிடித்த படங்களில் ஒன்று.

13 hours ago, விசுகு said:

(இவர் சாத்திரம் சொல்பவர். தனது ஆயுளையும் கணித்திருப்பார் என்று நினைக்கிறேன்)

இல்லை என நினைக்கிறேன். ஏனெனில் தன் மகனது திருமணத்தை இந்த வருடம் ஆகஸ்ட் டில் நடாத்த திட்டமிடப்பட்டு இருந்தார். தன் ஆயுள் 75 இல் முடியும் என கணித்திருந்தால் அதை முதலிலேயே நடாத்த முயன்று இருப்பார்.

இவர் 99 வயது வரை வாழ்வதற்கு ஏற்ற ஆரோக்கியமான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை பற்றி பலருக்கு ஆலோசனைகள் சொல்பவர்.

மரணம் என்பது கணிக்கப்பட முடியாத சூத்திரம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

ஆழ்ந்த இரங்கல்கள்.

நல்ல குணச்சித்திர நடிகர். இவர் பல நடிகர்களுக்கு பின்னணி குரல் கொடுத்தவர். நல்ல கம்பீரமான குரல்.

இவர் கெட்டவனாக இருந்து பின்னர் திருந்தும் பாத்திரத்தில் நடித்த "சிறை" எனக்கு பிடித்த படங்களில் ஒன்று.

இல்லை என நினைக்கிறேன். ஏனெனில் தன் மகனது திருமணத்தை இந்த வருடம் ஆகஸ்ட் டில் நடாத்த திட்டமிடப்பட்டு இருந்தார். தன் ஆயுள் 75 இல் முடியும் என கணித்திருந்தால் அதை முதலிலேயே நடாத்த முயன்று இருப்பார்.

இவர் 99 வயது வரை வாழ்வதற்கு ஏற்ற ஆரோக்கியமான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை பற்றி பலருக்கு ஆலோசனைகள் சொல்பவர்.

மரணம் என்பது கணிக்கப்பட முடியாத சூத்திரம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆச்சரியமான காணொளி.

Magic Vs Astrology...RAJESH SIR-ஐ மிரளவைத்த Magician!!!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.