Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடிய தமிழ்ப் பெண் கருப்பினத்தவரை மணந்ததால் வெகுண்டெழுந்த தமிழினத்தின் ஆண்மை!

  1. October 10, 2025

Sivavathani_Daughter_Wedding_03-768x1024

சமீபத்தில் கனடாவில் வாழும் தமிழ்த் தேசிய உணர்வாளப் பெண்மணி சிவவதனி பிரபாகரன் என்பவர் தனது மகளான திவ்யாவின் திருமண புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் தனது முகநூல் பதிவில் “இரு வீட்டாரினதும் தாய் மண்ணின் பண்பாட்டு விழுமியங்களையும் பின்பற்றி கனடிய மண்ணின் பூர்வ குடியினரின் ஆசிகளைப் பெற்று, இணையர்கள் முதன் முதலில் சந்தித்த இந்த மண்ணின் அதாவது கனடாவில் பழங்குடி மக்களிற்குச் சொந்தமான நிலத்தில் தனது மகளின் திருமணம் இனிதே நடந்தேறியது” என்றும் பதிவிட்டுள்ளார். ஒரு தாயார் தனது மகளின் திருமணத்தையிட்டு பேருவகை கொள்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை. சமூக வலைத்தளத்திலேயே குடும்பம் நடத்தும் இக்காலத்தில், சிவவதனி அம்மையார் தனது மகளின் திருமணப் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டமையும் ஒன்றும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. ஆனால் திருமதி சிவவதனி பிரபாகரன் தனது சம்ந்தக்குடி பற்றி தெரிவித்த தகவல்களே சமூக வலைத்தள தமிழ்த் தலிபான்களுக்கு சும்மா மெல்லுகிற வாய்க்கு அவல் கிடைத்தமாதிரி ஆகிவிட்டது.

சிவவதனி அம்மா மகள் திவ்யா காதலித்த ஆபிரிக்க நாடான கொங்கோ நாட்டு இளைஞனை திருமணம் செய்து வைத்தமையை பொறுக்காத தமிழ்த் தலிபான்கள் பின்னூட்டலில் வந்து வசை மாரி பொழிகிறார்கள். அடுத்தவர் வீட்டு படுக்கையறையை எட்டிப் பார்க்க கூடாது என்ற அடிப்படை நாகரீகம் கூடத் தெரியாத பண்பற்ற தமிழ் ஆண்களும் பெண்களும் புதுமணத் தம்பதிகளுக்கு சாபங்களை அள்ளிக் கொட்டுகிறார்கள்.

சம்பந்தப்பட்ட குடும்பத்தின் அனுமதியின்றி தம்பதிகளின் திருமணப் படங்களை பல்வேறு சமூக வலைத்தள போலிக் கணக்குகளில் பகிர்ந்து தமது காழ்ப்புணர்வை உமிழ்கிறார்கள். புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் மத்தியில் வேற்று நாட்டவர்களை மணம் புரிதல் என்பது புதிதல்ல. இரண்டாவது தலைமுறையை கடந்து வாழும் புலம்பெயர் தமிழர்கள் இடையே வேறு இனத்தவர்களில் ஆண் மற்றும் பெண் எடுத்தல் சகஜமாக நடந்து தான் வருகிறது. அவ்வாறான திருமணப் படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டும் வருகின்றன. பெரும்பாலான அத்திருமணங்கள் வெள்ளையினத்தவர்களுடான தமிழ்க் கலியாணங்களாக இருக்கின்றன.

வெள்ளையினத்தவர்களுடனான கலப்புத் திருமணங்களுக்கு வராத விமர்சனங்கள், கறுப்பு நிற ஆபிரிக்க இனத்தவர்களுடான திருமணங்களுக்கு வருகின்றன. இது தமிழர்களின் நிற வெறியை வெளிப்படுத்துகிறது. பெரும்பாலும் பளுப்பு நிறமுடைய தமிழர்கள் தங்களை ஆபிரிக்கர்களை காட்டிலும் உயர் இனமாக கருதுகின்றனர். அதனாலேயே வெள்ளை நிறத்தவர்களிடையே ஏற்படும் கலப்பு திருமண பந்தங்களை வரவேற்று கொண்டாடுகின்றனர். அதேநேரம் ஆபிரிக்க இனத்தவரையோ அல்லது வெள்ளையினம் சாராத ஏனைய கலப்புத் திருமணங்களை எள்ளி நகையாடுகின்றனர்.

இன அடக்குமுறைக்கு எதிராக விடுதலை வேண்டிப் போராடிய இனமான ஈழத்தமிழர்கள் நிறவெறி, சாதிவெறி, மதவெறி, பிரதேச வாதம் மற்றும் பெண்ணடிமைத் தனம் என்ற பிற்போக்குத் தனங்களில் இன்னமும் உழல்வது வெட்கக்கேடானது. தாயகத்தை காட்டிலும் புலத்தில் வாழும் தமிழர்களிடையே இவ்வாறான பிற்போக்குத் தனங்கள் மிகுதியாக காணப்படுகின்றன.

கருத்துச் சுதந்திரத்தின் வரையறை தெரியாத காட்டுமிராண்டி சமூகமாக ஈழத்தமிழ்ச் சமூகம் புலம்பெயர் நாடுகளில் வாழ்வது தலைகுனிவானது. சிவவதனி அம்மையார் தனது மகளின் திருமணப் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு தனது மகள் கலப்புத் திருமணம் செய்ததை ஆதரித்தது உண்மையில் வரவேற்க்கத்தக்க செயலாகும். அவர் சொல்ல வந்த செய்தி கணியன் பூங்குன்றனாரின் “ யாதும் ஊரே யாவரும் கேளிர் “ என்பதன்படி தமிழர்கள் சர்வதேசவாதிகள். உலகில் வாழும் அனைவரும் எமது உறவுகளே. அதேநேரம் உலகில் உள்ள அனைத்து ஊர்களும் நமதே என்பதாகும்.

சிவவதனி அம்மையாரின் தூரநோக்கு சர்வதேசப் பார்வையை புரிந்து கொள்ள திராணியற்ற கூட்டமொன்று சமூக வலைத்தளங்களில் குத்தி முறிகிறது. பாலியல் வக்கிரமான சொற்றாடல்களில் பின்னூட்டல்களை இடுகின்றது. அவ்வாறான பின்னூட்டல்களில் பெரும்பாலானவை ஆபிரிக்க மணமகனின் ஆண்குறியை மையமாக கொண்ட வக்கிர கருத்துக்களாக உள்ளன. பெரும்பாலும் இப் பின்னூட்டல்களை இடுபவர்கள் புலம்பெயர் நாடுகளில் வாழும் ஆண்களாகவே உள்ளனர். அவர்களுக்கு தமது ஆண்மையில் இருக்கின்ற குறைபாடுகள் காரணமாகத் தான் ஆபிரிக்க மணமகன் மீது காழ்ப்புணர்வு கொண்டு பாலியல் வக்கிரமான பின்னூட்டல்களை இடுவதாகத் தான் கருத வேண்டியுள்ளது.

ஒரு பெண் யாரைத் திருமணம் செய்ய வேண்டும். யாருடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட பெண் தான் தீர்மானிக்க முடியும். பெண்களின் சுதந்திரம், சமத்துவம் மற்றும் பாதுகாப்பில் கூடுதல் முன்னுரிமை கொடுக்கும் மேற்கு நாடுகளில் அகதிகளாக வந்து தஞ்சம் பெற்று வாழும் தமிழ் ஆண்களுக்கு மேற்கூறிய விடயங்கள் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

பெண்கள் மீதான அத்துமீறல்களில் மற்றும் வன்முறைகளில் ஈடுபடும் ஆண்களுக்கு புலம்பெயர் நாடுகளில் எத்தகைய தண்டனைகள் வழங்கப்படும் என்பதும் தெரிந்திருக்கும். அல்லது தெரிந்து வைத்திருக்க வேண்டும். புலம்பெயர் நாடுகளில் மட்டுமல்ல தாயகத்திலும் பெண்கள் பாதுகாப்புத் தொடர்பில் பல்வேறு சட்டங்கள் மற்றும் அமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆகவே சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகளில் ஒழிந்து கொண்டு வெட்டி வீராப்பு மற்றும் அவதூறு பரப்புகிறவர்கள் திருந்த வேண்டும். அல்லது திருத்தப்படுவார்கள்.

எழுதியவர்: கங்கா ஜெயபாலன், சமூக சேவைப் பணியாளர், கல்வி: Social Work & Education (University of Niederrhein), சர்வதேச உறவுகள் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்), அரசியல் விஞ்ஞானம் (கொழும்புப் பல்கலைக்கழகம்).

https://www.thesamnet.co.uk/?p=113593

  • கருத்துக்கள உறவுகள்

தாழ்வுச் சிக்கல்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

கனடிய தமிழ்ப் பெண் கருப்பினத்தவரை மணந்ததால் வெகுண்டெழுந்த தமிழினத்தின் ஆண்மை!

நியூயோர்க்கில் கறுப்பினத்தவரை மணந்து சந்தோசமாக வாழ்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

நியூயோர்க்கில் கறுப்பினத்தவரை மணந்து சந்தோசமாக வாழ்கிறார்கள்.

நானும் இந்த குப்பை கூழங்களை வாசித்தேன் ...எத்தனையோ சனம்வேற்றினத்தவரை மணந்து படம் போடுது...இந்தக் கலியாணத்துக்குத்தான் ...இவ்வளவு வரவேற்பு...காரணம் பெண்ணிந்தாய் இனவிடுதலையை ..தீவிரமாக ஆதரிப்பவர்...காப்புலி என்ற வார்த்தையை சர்வசாதரணமாக பாவிக்கின்றார்கள்...

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

தாழ்வுச் சிக்கல்.

நீங்களும் அப்படி நினைச்சீங்க இல்லையா?

அப்ப நானும் அந்த மாதிரி நினைச்சது தப்பில்லையே?🤪

3 hours ago, கிருபன் said:

தமிழ்த் தலிபான்களுக்கு

தேசம் நெட் ஜெயபாலனுக்கு ஒரு கொப்பி ரைட் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்🤣

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

நீங்களும் அப்படி நினைச்சீங்க இல்லையா?

அப்ப நானும் அந்த மாதிரி நினைச்சது தப்பில்லையே?🤪

இல்லாததை இருப்பதாக கனவு காணமுடியாதே அண்ணை!

இயற்கையானதை ஏற்றுக்கொள்ளத் தானே வேணும்.

முழு மனித உலகத்தோரும் ஆபிரிக்க வழித்தோன்றல்களே எனின் உயர்வு தாழ்வு ஏது?

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் எங்கேயோ போயிட்டுது இப்பத்தான் எங்கடை புலம் பெயர் சனம் நித்திரையால் எழும்பி பார்க்கினம் போல் உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்தேசங்களில் இப்படியான பல கலப்புத்திருமணங்களை காணக்கூடியதாக இருக்கிறது. இது புலம்பெயர்ந்த தமிழர்களின் இரண்டாம் தலைமுறையினரின் திருமணங்களே இப்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.3 ஆம் தலைமுறையினரில் இந்த விகிதம் மேலும் அதிகரிக்கும்.ஒரு வயது வந்த ஆணும் பெண்ணும் தமக்குப் பிடித்த துணையைத் தேடிக்கொள்வதை தாயகத்தைப் போல்கட்டுப்பாடுகள் விதித்து தடுக்க முடியாது என்ற உண்மை போகப் போக பழகிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் தம்பதிகளுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

இருவருக்கும் திருமண வாழ்த்துக்கள்.பறவா இல்லை .தனக்கு பிடித்ததை செய்திருக்கிறா இதில் வெள்ளை, கறுப்பு என்று பேசிக் கொள்வதில் அர்த்தமே இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல தினங்களுக்கு முன்னர் பல இணைய ஊடகங்களில் காறித்துப்பப்பட்ட செய்தி.😂

புது நெல்லு புது நாத்து என்பதற்கமைய....

திருமணம் என்பதை விட மனப்பொருத்தம் முக்கியம் என்பதை பலர் ஏன் ஏற்க மறுக்கின்றார்கள் என தெரியவில்லை? என்னிடமும் இன விசுவாசம் உண்டு.மாற்று கருத்துக்களும் உண்டு. அதை எப்படி கையாள வேண்டும் என்ற சிந்தனையும் உண்டு.

நிற்க...

கீழ் வரும் காணொளிகளில் வருபவர்களுடன் சிறு தொடர்புகள் உண்டு. அவர்களது காணொளிகளில் என் கருத்துக்களும் உண்டு. அவர்களது காணொளிகளில் எங்கும் தமிழ்மானத்தை விட்டுக்கொடுக்கவேயில்லை. மாறாக தமிழை முன்னெடுத்து செல்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமக்குப் பிடித்த துணையுடன் வாழ முடிவு எடுத்த…

தம்பதிகளுக்கு, இனிய திருமண வாழ்த்துக்கள்.

குடும்பப் படங்களை…. சமூக வலைத்தளங்களில் பதியும் போது, ஏற்படும் ஆபத்தான விடயங்களில்… மேற்படி சம்பவமும் ஒன்று.

பெண்ணின் தாய்… தமது மகிழ்ச்சிக்காக இயல்பாக பதிந்த படத்திற்கு இவ்வளவு விமர்சனம் வைத்தமை மிகவும் அருவருப்பான செயல்.

மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை… விமர்சிக்கும் உரிமையை இவர்களுக்கு யார் கொடுத்தது. வாழ்த்த விருப்பம் இல்லாவிடில்… ஒதுங்கி இருந்திருக்கலாம். இது…. அந்தக் குடும்பத்திற்கு எவ்வளவு மன உழைச்சலை கொடுத்திருக்கும் என்பதை, சம்பந்தப் பட்டவர்கள் சிந்தித்து இருந்திருக்க வேண்டும். நாளைக்கு இது… அவர்களின் குடும்பத்திலும் நடக்கலாம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

உலகம் எங்கேயோ போயிட்டுது இப்பத்தான் எங்கடை புலம் பெயர் சனம் நித்திரையால் எழும்பி பார்க்கினம் போல் உள்ளது .

எழும்பி தமது வீட்டில் என்ன நடக்குது என்று பார்ப்பதில்லை

அடுத்தவன் வீட்டில் என்ன நடக்குது என்று ஆராய்வதே வேலை.

  • கருத்துக்கள உறவுகள்

தம்பதிகளுக்கு, இனிய திருமண வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

தமக்குப் பிடித்த துணையுடன் வாழ முடிவு எடுத்த…

தம்பதிகளுக்கு, இனிய திருமண வாழ்த்துக்கள்.

10 hours ago, புலவர் said:

ஒரு வயது வந்த ஆணும் பெண்ணும் தமக்குப் பிடித்த துணையைத் தேடிக்கொள்வதை தாயகத்தைப் போல்கட்டுப்பாடுகள் விதித்து தடுக்க முடியாது என்ற உண்மை போகப் போக பழகிவிடும்.

ஏங்கோ அவ்வளவு தூரம் போறீங்கோ. நம் இனம் விழுந்து, எழுந்து நடமாட துடித்திருக்கும்போது, அந்த இனத்தின் பிரதிநிதி என்று பினாத்திக்கொண்டு திரிபவர், அவர்களை அழித்தவர்களோடு கிறிக்கெற் விளையாடினார். கேட்ட போது, அவர்களோடுதான் பேச்சு நடத்த வேண்டும் ஆகவே நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் நோக்கில் விளையாடினேன் என்று விளக்கம் கொடுத்தார். நமது விடுதலைக்காய் போராடி இறந்த நம் வீரருக்கு வணக்கம் செலுத்த முடியவில்லை, இவரோ பொப்பிப்பூ குத்திக்கொண்டு பாராளுமன்றம் போய் நம் இனத்தை அழித்த இராணுவத்திற்கு தம் மரியாதையை காட்டினார். சிங்கள மக்களோடு வாழ்வது தனது அதிஷ்டம் என்று வேறு பெருமை பாராட்டினார். ஆனால் முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரனின் மகன்கள் சிங்கள பெண்களை மணந்ததால், சிங்களச்சம்பந்தி என்று வாய்க்கு வாய் தூற்றிக்கொண்டு திரிந்தார். தனது மகன் சிங்களப்பெண்ணை மணந்து, தான் சிங்களசம்பந்தியான போது அமைதியாக இருந்துவிட்டார். எங்கள் வீட்டில் நடந்தால் போற்றுவோம், அடுத்தவர் வீட்டில் நடந்தால் தூற்றி ஏளனம் செய்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, alvayan said:

காரணம் பெண்ணிந்தாய் இனவிடுதலையை ..தீவிரமாக ஆதரிப்பவர்

நானும் தமிழ் தேசிய கொள்கை உடையவனாக இருந்துகொண்டு கருணாவை ஆதரிக்கவில்லையா.

தனக்கென்று வரும்போது கொள்கையாவது கோற்பாடாவது. இரண்டாவதாக தாயார் சும்மா புகைப்படத்தை பதிவேற்றிவிட்டு சென்றிருக்கலாம். சமூகத்திற்கு எதோ சொல்லவந்து இந்த கருத்து சாம்பாரை பதிவேற்றியிருப்பதால் சரவெடி வெடித்திருக்கிறது

இரு வீட்டாரினதும் தாய் மண்ணின் பண்பாட்டு விழுமியங்களையும் பின்பற்றி கனடிய மண்ணின் பூர்வ குடியினரின் ஆசிகளைப் பெற்று, இணையர்கள் முதன் முதலில் சந்தித்த இந்த மண்ணின் அதாவது கனடாவில் பழங்குடி மக்களிற்குச் சொந்தமான நிலத்தில் தனது மகளின் திருமணம் இனிதே நடந்தேறியது

இப்படி பதிவேற்றியதற்கு பதிலாக

இரு வீட்டாரினதும் தாய் மண்ணின் பண்பாட்டு விழுமியங்களையும் பின்பற்றி கனடிய மண்ணின் பூர்வ குடியினரின் ஆசிகளைப் பெற்று, வந்தேறி இணையர்கள் முதன் முதலில் சந்தித்த இந்த மண்ணின் அதாவது கனடாவில் பழங்குடி மக்களிற்குச் சொந்தமான நிலத்தில் வந்தேறிகளான எனது மகளின் திருமணம் இனிதே நடந்தேறியது

இப்படி பதிவேற்றியிருக்கவேண்டும். பழங்குடி ,பூர்வகுடி என்று அதிகப்பிரசங்கிதனமாக அலப்பறை செய்தவர் தான் யாரென்பததையும் சுயவிமர்சனம் செய்திருக்கவேண்டும் என்பதே எனது பார்வை

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, அக்னியஷ்த்ரா said:

இந்த தாயார் எழுதியது சுத்த அலப்பறைதான்….

மகளின் திருமணம் என்பது தனிப்பட்ட விடயம். அதை போட்டோ எடுத்து போடலாம்….அதற்குள்ளும் பூர்வகுடி, பூர்ஷுவா குடி என தனது இடதுசாரி அரசியலை நுழைத்த்திருக்க தேவையில்லை.

ஆனால்….விமர்சனம் அதை விட்டு விட்டு, மாப்பிள்ளையின் இனம் சார்ந்து குரோதமாக அமைவது ஏற்புடையதல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சிக்கல் என்னவென்றால் விமர்சனத்தை எதிர்பார்த்து தான் அந்த அம்மா வீட்டுச் செய்தியை ஊர்ச்செய்தியாக்கினார். ஆனால் என்ன தனியே அவா எதிர் பார்த்த வகையான விமர்சனம் வரவில்லை. புதுமை என்று கொண்டு வந்து அவாவுக்கு ஏற்ற விமர்சனங்களை எதிர்பார்ப்பதும் அக்கா இன்னும் பல மைல் தூரம் பின்தங்கிய நிற்கிறா என்று மட்டும் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, satan said:

ஏங்கோ அவ்வளவு தூரம் போறீங்கோ. நம் இனம் விழுந்து, எழுந்து நடமாட துடித்திருக்கும்போது, அந்த இனத்தின் பிரதிநிதி என்று பினாத்திக்கொண்டு திரிபவர், அவர்களை அழித்தவர்களோடு கிறிக்கெற் விளையாடினார். கேட்ட போது, அவர்களோடுதான் பேச்சு நடத்த வேண்டும் ஆகவே நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் நோக்கில் விளையாடினேன் என்று விளக்கம் கொடுத்தார். நமது விடுதலைக்காய் போராடி இறந்த நம் வீரருக்கு வணக்கம் செலுத்த முடியவில்லை, இவரோ பொப்பிப்பூ குத்திக்கொண்டு பாராளுமன்றம் போய் நம் இனத்தை அழித்த இராணுவத்திற்கு தம் மரியாதையை காட்டினார். சிங்கள மக்களோடு வாழ்வது தனது அதிஷ்டம் என்று வேறு பெருமை பாராட்டினார். ஆனால் முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரனின் மகன்கள் சிங்கள பெண்களை மணந்ததால், சிங்களச்சம்பந்தி என்று வாய்க்கு வாய் தூற்றிக்கொண்டு திரிந்தார். தனது மகன் சிங்களப்பெண்ணை மணந்து, தான் சிங்களசம்பந்தியான போது அமைதியாக இருந்துவிட்டார். எங்கள் வீட்டில் நடந்தால் போற்றுவோம், அடுத்தவர் வீட்டில் நடந்தால் தூற்றி ஏளனம் செய்வோம்.

ஒவ்வொருத்தருக்கும் அவரவர் பிரச்சினை😇!

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு நாள் காத்திருந்ததுக்கு பலன் இருக்கு

தேசிய செயட்பாட்டலுருக்கு என்று ஒரு கடமையிருக்கு அதை சரிவர செய்யாமல் பூசி மெழுகி அவசரப்பட்டு அறிக்கை விடவேண்டிய அவசியமென்ன

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, அக்னியஷ்த்ரா said:

தனக்கென்று வரும்போது கொள்கையாவது கோற்பாடாவது. இரண்டாவதாக தாயார் சும்மா புகைப்படத்தை பதிவேற்றிவிட்டு சென்றிருக்கலாம். சமூகத்திற்கு எதோ சொல்லவந்து இந்த கருத்து சாம்பாரை பதிவேற்றியிருப்பதால் சரவெடி வெடித்திருக்கிறது

இரு வீட்டாரினதும் தாய் மண்ணின் பண்பாட்டு விழுமியங்களையும் பின்பற்றி கனடிய மண்ணின் பூர்வ குடியினரின் ஆசிகளைப் பெற்று, இணையர்கள் முதன் முதலில் சந்தித்த இந்த மண்ணின் அதாவது கனடாவில் பழங்குடி மக்களிற்குச் சொந்தமான நிலத்தில் தனது மகளின் திருமணம் இனிதே நடந்தேறியது

இப்படி பதிவேற்றியதற்கு பதிலாக

இரு வீட்டாரினதும் தாய் மண்ணின் பண்பாட்டு விழுமியங்களையும் பின்பற்றி கனடிய மண்ணின் பூர்வ குடியினரின் ஆசிகளைப் பெற்று, வந்தேறி இணையர்கள் முதன் முதலில் சந்தித்த இந்த மண்ணின் அதாவது கனடாவில் பழங்குடி மக்களிற்குச் சொந்தமான நிலத்தில் வந்தேறிகளான எனது மகளின் திருமணம் இனிதே நடந்தேறியது

இப்படி பதிவேற்றியிருக்கவேண்டும். பழங்குடி ,பூர்வகுடி என்று அதிகப்பிரசங்கிதனமாக அலப்பறை செய்தவர் தான் யாரென்பததையும் சுயவிமர்சனம் செய்திருக்கவேண்டும் என்பதே எனது பார்வை

15 hours ago, அக்னியஷ்த்ரா said:
7 hours ago, goshan_che said:

இந்த தாயார் எழுதியது சுத்த அலப்பறைதான்….

மகளின் திருமணம் என்பது தனிப்பட்ட விடயம். அதை போட்டோ எடுத்து போடலாம்….அதற்குள்ளும் பூர்வகுடி, பூர்ஷுவா குடி என தனது இடதுசாரி அரசியலை நுழைத்த்திருக்க தேவையில்லை.

ஆனால்….விமர்சனம் அதை விட்டு விட்டு, மாப்பிள்ளையின் இனம் சார்ந்து குரோதமாக அமைவது ஏற்புடையதல்ல.

இதனை நானும் ஏற்றுக் கொள்கின்றேன்....தாய்மையின் வேதனை ...ஆற்றாமையால் வெளிப்பட்டிருக்கு...இந்த பதிவு வந்தவுடனேயே ...நான் புரிந்து கொண்டேன் ...எனினும் விமர்சனம் மாறுபட்டு வரத் டொடங்கவே ...நான் தேசிய செயற்பாட்டாளர் என்பதை பாவித்தேன் ...காப்புலி வசனம் கனடாவில் பாவித்தால் ஆள் உள்ளே...

  • கருத்துக்கள உறவுகள்
On 12/10/2025 at 22:59, கிருபன் said:

தமிழினத்தின் ஆண்மை

On 12/10/2025 at 22:59, கிருபன் said:

சமூக வலைத்தள தமிழ்த் தலிபான்களுக்கு

On 12/10/2025 at 22:59, கிருபன் said:

இது தமிழர்களின் நிற வெறியை வெளிப்படுத்துகிறது.

On 12/10/2025 at 22:59, கிருபன் said:

இன அடக்குமுறைக்கு எதிராக விடுதலை வேண்டிப் போராடிய இனமான ஈழத்தமிழர்கள் நிறவெறி, சாதிவெறி, மதவெறி, பிரதேச வாதம் மற்றும் பெண்ணடிமைத் தனம் என்ற பிற்போக்குத் தனங்களில் இன்னமும் உழல்வது வெட்கக்கேடானது. தாயகத்தை காட்டிலும் புலத்தில் வாழும் தமிழர்களிடையே இவ்வாறான பிற்போக்குத் தனங்கள் மிகுதியாக காணப்படுகின்றன.

On 12/10/2025 at 22:59, கிருபன் said:

ஆபிரிக்க மணமகனின் ஆண்குறியை மையமாக கொண்ட வக்கிர கருத்துக்களாக உள்ளன. பெரும்பாலும் இப் பின்னூட்டல்களை இடுபவர்கள் புலம்பெயர் நாடுகளில் வாழும் ஆண்களாகவே உள்ளனர்.

கட்டுரையை வாசிக்கும்பொழுதே புரிகின்றது என்ன நோக்கத்துக்காக எழுதப்பட்டுள்ளது ...புலம் பெயர் சமுகத்தையும் ,தமிழ் இனத்தையும் இலக்கு வைத்து எழுதப்பட்டுள்ளது...1980 களில் தமிழகத்தில் கல்விகற்க வந்த பல ஆபிரிக்க இளைஞர்களை தமிழ்பெண்கள் மணமுடித்து இன்று மகிழ்ச்சியாக வாழ்கின்றனர் இணைந்து வாழ்கின்றனர் சமுகத்துடன் .....

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.