Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் பிரபாகரன் பிறந்த தினம் இன்று!

1403706170.jpg

தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் மேதகு வேலுப் பிள்ளை பிரபாகரனின் 71ஆவது பிறந்தநாள் தாயகத்திலும்  புலத்திலும் இன்று கொண்டாடப்படவுள்ளது.

தலைவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு வல்வெட்டித்துறை ஆலடி வீதியில் அவரது இல்லம் அமைந்துள்ள  வளாகம் அந்தப் பகுதி இளைஞர்களால் துப்புரவு செய்யப்பட்டு சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அங்கு, இன்று காலை கேக் வெட்டிக் கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளன.

தமிழர்தாயகத்தின் இதர பகுதிகளிலும், புலம்பெயர்நாடுகளிலும்கூடதலைவர் பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு  ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தேசியத் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் கடந்த பல வருடங்களாக இராணுவத்தினர் மற்றும் புலனாய்வாளர்களது இறுக்கமான கண்காணிப்புக்குள்ளும், கெடுபிடிக்குள்ளும் கொண்டாடப்பட்ட நிலையில், இம்முறை அச்சமின்றி மக்கள் கொண்டாட்டத்தில்  ஈடுபடத்  தயாராகின்றமையை  அவதானிக்க முடிகிறது.

https://newuthayan.com/article/தலைவர்_பிரபாகரன்_பிறந்த_தினம்_இன்று!

  • கருத்துக்கள உறவுகள்

images?q=tbn:ANd9GcQHh0wsCxq_j8OsHTOIlYU

தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு

உளம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🙏 ❤️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அவர் ஒப்பற்ற தலைவர் : ஜெரா

November 26, 2025

1 163 ஏன் அவர் ஒப்பற்ற தலைவர் : ஜெரா

இலங்கை தீவில் இழந்துவிட்ட தம் இறைமையை மீட்கவே முடியாது என்ற பெருங்கவலையோடு ஈழத்தமிழர்கள் பல சந்ததிகளைக் கடந்தனர். இடையிடையே எல்லாளன், சேனன், குத்திகன், பண்டாரவன்னியன், கயிலைவன்னியன், செகராசசேகரன், பரராசசேகரன், சங்கிலியன் எனப் பலர் அந்தக் கனவை ஏந்தி வரலாற்றில் வந்துபோயினர். ஆனால் எவராலும், விஜயனிடம் இழந்த ஈழத்தமிழர் இறைமையை முழுமையாக அடைய முடியவில்லை. ஒரே ஒருவரால் அது முடிந்தது. வெறுங்கனவாக மாத்திரமிருந்த ஈழத்தமிழர் இறைமையை ஆட்சி சிம்மாசனத்தில் ஏற்றி 30 வருடங்களாக அழகுபார்க்க முடிந்தது. அவரே நம் தலைவர். அவரே இன்றைய நாளுக்குரியவர்.

அதுவரைக்குமான உலகில் கண்டுபிடிக்கப்படாதிருந்த அனைத்துவித அறவழிப்போராட்டங்களிலும் ஈடுபட்டு, தோற்றுப்போயிருந்த தருணத்தில்தான் தலைவர் வந்தார். பெற்றோரின், ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்றி முடிவெடுக்க முடியாத வயதில், இனத்தையே வழிநடத்தத் துணிந்தார். தம்மிடமிருக்கும் ஆயுதங்களை வைத்து ”எவ்விதமான” காரியங்களையும் செய்யத்துணியும் வயதில், அனைத்துவித பாசங்கள் மீதான பற்றுக்களையும் அறுத்தெரிந்தார். இனவிடுதலை ஒன்றே தாம் ஏந்தியிருக்கும் ஆயுதத்தின் ஒரே இலக்கு என்பதைத் தன்னைச் சூழ்ந்திருந்த இளையோருக்குப் போதித்தார்.

இன்றைய உலக அனுபவங்களை வைத்துக் கற்பனை செய்துபாருங்கள், ஆயிரக்கணக்கான இளைஞர்களிடம் கனரக ஆயுதங்களும், வெளியுலகத் தொடர்புகளற்ற ஒரு பிராந்தியத்தை நிர்வகிக்கவல்ல அதிகாரமும் கிடைத்தால் என்ன செய்திருப்பர். உலக அனுபவங்களைப்போன்று எதுவும் நடக்கவில்லை. இனவிடுதலை என்கிற இலக்கு ஒன்றிற்காக ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்கள் அவர் தலைமையில் விதையாகி வீழ்ந்தபோதிலும் யாரை நோக்கியும் ஒரு தீயசொல் பாயவில்லை. ”அவரின் எத்தனையோ படங்களை மீட்டோம். ஒரு படத்தில்கூட மது போத்தல்களைக் காணவில்லை” என எதிரிகளே புகழுமளவிற்கு உலகின் மிகஉன்னதமான சுய ஒழுக்கமிக்க இயக்கமொன்றைக் கட்டமைத்தார் அவர். அதனை இம்மியளவும் வழிபிசகாமல் இறுதிவரையில் வழிநடத்தினார். அதனால்தால் அவர் தலைவர்.

விடுதலை கோரி போராடத்தை ஆரம்பிக்கும் ஆயுத இயக்கங்கள், வெகுவிரைவிலேயே திசைமாறிப் போவது உலக வழக்கம். உலகநாடுகளின் சதிகளில் சிக்கி தான் வந்த வழியையே மறந்து, விடுதலை இயக்கங்களின் மறைந்துபோவதும் பொதுப்போக்கு. தலைவரை நோக்கியும் உலக வல்லரசு நாடுகள் அந்த வலையை தொடர்ச்சியாக முப்பதாண்டுகள் வீசிவந்தன. ”நான் இனவிடுதலை என்கிற இலட்சியத்திலிருந்து விலகினால் என் மெய்பாதுகாவலரே என்னை எவ்வேளையிலும் சுட்டுக்கொல்லலாம்” என்கிற கொள்கையில் தலைவர் துளியளவும் விடாப்பிடியாக இருந்தார்.

அவருக்கென்று தனிப்பட்ட வாழ்வொன்றிருந்தது. ஒரே மகள், இரண்டு ஆண் மகன்கள் என்கிற அரியதொரு குடும்பமிருந்தது. அன்பிற்கே அடையாளமான தாய், தந்தையர் இருந்தனர். ஒரு மனிதனின் வாழ்க்கை வரம்பின் உச்சமெதுவெனில் இப்படியொரு அன்பான குடும்பம்தானே. ஆனால் இந்த இனவிடுதலைக்காக தன் மொத்தக் குடும்பத்தையும் தியாகித்தார் தலைவர். தானும் தன் பிள்ளைகளும், தன் உறவினர்களும் ஏழேழு தலைமுறையாக செழித்து வாழவேண்டியளவுக்கு நாட்டைச் சூறையாடி சொத்துச் சேர்க்கும் தலைவர்கள் மத்தியில், ஒரு ரூபாயைக்கூடத் தனக்காகவோ, தன் குடும்பத்திற்காகவோ எடுத்துச்செல்லாத – தன் மொத்தக்குடும்பத்தையும் இனத்திற்காக வித்தாக்கிய ஒப்பற்ற தலைவர் உலகில், இந்தப் பூகோள வரலாற்றில் வேறெந்த இனத்திற்கு வாய்த்திருக்கும்.

சதாகாலமும் போர் நடத்திக்கொண்டு, கடல், தரை, வான் என எல்லைகளைக் காத்துக்கொண்டு, புவிசார் அரசியல் அழுத்தங்களுக்கு எதிராகப் போராடிக்கொண்டு ஒரு நிழல் அரசைக் கட்டமைப்பதும், அதனை நேர்த்தியாக வழிநடத்துவதும் கற்பனைகூட செய்துபார்க்கமுடியாத ஒன்று. உலகம் பாதுகாப்புசார் துறைகளில் இவ்வளவு தூரம் வளர்ந்துவிட்ட பிறகும்கூட நவீன அரசுகள் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கின்ற பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் குற்றங்கள், திட்டமிட்டக் குற்றச்செயல்களுக்காக உருவாகும் குழுக்கள் என எல்லாவற்றையும் 30 ஆண்டுகளாக ஒருவர் கட்டுப்படுத்தினார் எனில் அது தலைவரைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்..!

எல்லாவற்றுக்கும் மேலாக, படையக் கட்டுமானம்..! சோழர்களுக்குப் பிறகு 30 ஆண்டுகள் இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய ஒரே படையக் கட்டமைப்பைத் தலைவர் உருவாக்கினார். அவரின் காலத்தில் இலங்கைத் தீவின் மீதான புவிசார் அரசியல் இன்றிருக்கிற அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

இந்தியா, சீனா என எந்நாட்டுக்கும் ஒரு துண்டு நிலம்கூட இத்தீவிலிருந்து விற்கப்படவில்லை. இன்று இந்நாட்டின் தலைநகரில் பெரும்பகுதியைப் பிடித்து சீனா தனக்கான தனிநாடொன்றை உருவாக்கிக்கொள்ளுமளவிற்கு இந்நாடு புவிசார் அரசியல்விடயத்தில் தோல்வியடைந்திருக்கின்றது. இந்தியாவின் தலையீடுகள் சொல்லத்தேவையில்லை. அவர் உருவாக்கிய வலிதான – ஓர்மம் மிக்க படையக் கட்டமைப்புக்களின் வழியே தமிழர்களின் கடல் மற்றும் நிலம் சார் இறைமை மாத்திரமின்றி, முழு இலங்கைத்தீவின் இறைமையும் காப்பாற்றப்பட்டது. ஆனால் அவரற்ற பதினாறு வருடங்கள் கடந்துள்ள இன்றைய நிலை…!

இப்படி தன்னினத்திற்கு மாத்திரமல்லாது, இத்தீவில் வாழுகிற எதிர் இனத்திற்குமாகப் போராடியவர் எம் தலைவர். அதனால்தான் குற்றவுணர்வால் உந்தப்படும் எதிரிகள்கூட அவ்வப்போது தலைவர் பற்றிய உண்மையைச் சொல்லிவிடுகின்றனர். உலகில் தோன்றிய ஆச்சரியமிகு – மேன்மைமிகு தலைவர்களின் வரிசையில் நின்றுநிலைத்துவிட்ட தலைவருக்கு இன்று அகவைத் திருநாள். வானும் தன் ஆசி வழங்கி, வாழ்த்தி நிற்கும் இன்நன்நாள் குறித்து நம் தலைமுறைக்கு ஒரு பெருமிதம் உண்டு.

அது எதுவெனில், தலைவ…நாம் நின் காலத்தில் வாழ்ந்தோம்..!

https://www.ilakku.org/ஏன்-அவர்-ஒப்பற்ற-தலைவர்-ஜ/

  • கருத்துக்கள உறவுகள்

தன்னிகரல்லாத தலைவனுக்கு இனிய அகவைநாள் வாழத்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணால் கண்ட கடவுள்

தமிழர்களின் தலைவர் பிரபாகரன்

எங்கிருந்தாலும் வாழ்க.

பொங்கிடும் கடற்கரை ஓரத்தில்,

மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்தில்,

மங்களம் தங்கிடும் நேரத்தில்,

பிறந்த எங்கள் ஒரே தலைவனுக்கு

பிறந்த நாள் வாழ்த்துகள்!

நீங்கள் விட்ட சுவாசம் கலந்த காற்றை நான் சுவாசித்ததும்,

உங்கள் காலடித் தடம் பதித்த கோண்டாவில் முகாமில் சுவடுகள் காயும் முன் நானும் நடந்ததும்,

உங்களின் குரலை கேட்டதும் என் வாழ்வில் கிடைத்த மிகச் சிறந்த அனுபவங்கள்.

நீங்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதே ஒரு பெரும் பாக்கியம்

ஆயிரம் விமர்சனங்கள் உங்கள் மீது எனக்கும் இருக்கலாம்.

ஆயினும் நீங்கள் ஒருவரே என் தலைவன்.

என்னைப் போன்றோரிற்கான ஒப்பற்ற ஏக தலைவன்.

இறந்தும் இறவாமல் நீக்கமற நிறைந்து இருக்கும் தலைவன்!

-நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் நினைவேந்தல் நாள் : மட்டக்களப்பில் சிவப்பு - மஞ்சள் கொடிகள் அலங்காரம்.

26 Nov, 2025 | 04:03 PM

image

மாவீரர் நினைவேந்தல் நாள் நாளை வியாழக்கிழமை (27) அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் மட்டக்களப்பு நகரில் சிவப்பு - மஞ்சள் கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இன்று புதன்கிழமை (26)  காலை மட்டக்களப்பு இளைஞர் குழுக்களினால் இந்த கொடிகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மணிக்கூண்டு கோபுரம், மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவுள்ள சுற்றுவட்டம் ஆகியவற்றில் சிறப்பு மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் மட்டக்களப்பில் உள்ள நான்கு மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் தினம் அனுஸ்டிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொக்கட்டிச்சோலை மாவடிமுன்மாரி துயிலும் இல்லம், வவுணதீவு தாண்டியடி துயிலும் இல்லம், தரவை மாவீரர் துயிலும் இல்லம், வாகரை கண்டலடி துயிலும் இல்லம் ஆகியவற்றில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

ஆனைத்து துயிலும் இல்லங்களிலும் தமிழ் மக்களை கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தவருமாறு ஏற்பாட்டுக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

WhatsApp_Image_2025-11-26_at_12.40.38__1

WhatsApp_Image_2025-11-26_at_12.40.31.jp

WhatsApp_Image_2025-11-26_at_12.40.30.jp

WhatsApp_Image_2025-11-26_at_13.43.42.jp

WhatsApp_Image_2025-11-26_at_13.43.42__1

மாவீரர் நினைவேந்தல் நாள் : மட்டக்களப்பில் சிவப்பு - மஞ்சள் கொடிகள் அலங்காரம் | Virakesari.lk

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதிரியும் போற்றும்

தலைவன் மேதகு பிரபாகரனுக்கு

இனிய அகவை நாள் வாழ்த்துகள்.

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/reel/1368171011667466/?fs=e&s=TIeQ9V&fs=e&mibextid=wwXIfr&fs=e

புதுவையின் தலைவருக்கான வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தேசியத் தலைவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG-20251125-WA0132.jpg

அண்ணை 71

‘அண்ணை’ என்கிற அந்த வார்த்தை. அதை உச்சரிக்கும்போதே தேகமெல்லாம் சிலிர்க்கும். தமிழ் இனத்தின் ஒட்டுமொத்த வரலாறும் இந்த ஒரேஒரு வார்த்தைக்குள் அடக்கம்..! 

“அண்ணைக்காக போறன்” “அண்ணைய பார்த்துக்கொள்ளுங்கோ” “அண்ணைமேல சத்தியமா” “அண்ணை பார்த்துக்கொள்வார்” “அண்ணையே சொல்லிட்டார்” 

இப்படி எங்கள் வாழ்க்கையே அண்ணைதானே..!  இந்த உலகத்தில் அண்ணையைப் போல கொள்கைப் பற்றுக்கொண்ட ஒரு தலைவன் உண்டா? அண்ணையைப் போல நிதானம்மிக்க ஒரு மனிதன் உண்டா? அண்ணையைப் போல உறுதிகொண்ட இன்னொரு வழிகாட்டி உண்டா? 

யாராலும் மிரட்டி அண்ணையைப் அடக்க முடியவில்லை. பேரம்பேசி பணியவைக்க முடிந்திருக்கவில்லை. பணத்தைக் காட்டி, இன்னபிற சலுகைகளைக் காட்டி அவரை விலைக்குவாங்க முடியவில்லை. 

அதுதான் அண்ணை..! 

எல்லாவற்றையும்விட அண்ணை எங்களுக்குத் தந்த பாதுகாப்பு இருக்கிறதே..! இந்த உலகத்தில் எங்குமே கிடைக்காத பாதுகாப்பு. 

சாமம் 3 மணிக்குகூட பெண்கள் தன்னந்தனியாக வீதியில் போகமுடியும். யாரும் கேட்கமாட்டார்கள். கத்தியைக் காட்டி மிரட்டுவார்களோ, நகைகளை அறுப்பார்களோ, வாகனத்தில் வந்து கடத்துவார்களோ என எந்த அச்சமும் இல்லாத காலம் அது. போதைப்பொருள் கடத்தல் - கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. 

வீடுபுகுந்து தாக்குவது.. பெற்றோல் குண்டு வீசுவது.. ஆளைவிட்டு மிரட்டுவது.. கட்டப்பஞ்சாயத்து.. இதெல்லாம் “கிலோ என்ன விலை?” என்று கேட்ட காலம் அது. 

வீதி ஒழுங்கை உங்களால் மீற முடியுமா அன்று? காவல்துறைக்கு லஞ்சம் கொடுக்க முடியுமா? குற்றம் செய்துவிட்டு தப்ப முடியுமா? எதுவுமே முடியாது. ஒற்றைப் பார்வையாலேயே ஒரு தேசத்தைக் கட்டியாண்டவர் அண்ணை. 

அது அண்ணையின் காலம்..! பொற்காலம்! அந்தக் காலத்தில் அண்ணையின் பாதுகாப்பின்கீழ் வாழக்கிடைத்ததே தமிழர்களுக்குப் பெரும் பாக்கியம். அதைவிட வேறென்ன பெருமை இருந்துவிடப் போகிறது எமக்கு..? 

அண்ணையின் புகழ் என்றென்றும் நீடித்திருக்கும்! 

அண்ணைக்கு வாழ்த்துக்கள்..!❤️

~~ யாரோ எழுதிய வரிகள்...🙏

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்

ஓப்பற்ற. தலைவனுக்கு. இனிய. அகவை. நாள். நல் வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவன் மேதகு பிரபாகரனுக்கு

தேசவிடுதலைக்காய் தியாகங்கள் செய்தீர் வாழி!

தேசமக்களின் தெய்வம் ஆனீர் வாழி!

தேசக்காற்றின் சிந்தையில் நிறைந்தீர் வாழி!

தேசியத்தை உயிராக நினைத்தீர் வாழி!

தேசியத்தலைவராகத் திக்கெட்டும் திகழ்கின்றீர் வாழி!

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!🎂"

  • கருத்துக்கள உறவுகள்

எம் தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த தினம் இன்று!......அகவை 71

வணிகமும் வீரமும் வான்நோக்கும் கடலலையும்

மணி ஓசையும் மனைகளும் உயர்ந்து

அணிகலனாய்க் கொண்ட அழகிய வல்வெட்டித்துறையில்

தணியாத தாகமும் தமிழீழ மண்மீட்பும்

பணியாகக் கொண்டே பகலவன் உதித்தனன்!

கார்த்திகை இருபத்தாறு கார்மேகம் சூழ

ஆர்ப்பரிக்கும் அலைநடுவே ஆதவன் வடிவான

பார்வதியின் மைந்தன் பிரபாகரன் என்னும்

கீர்த்திகொள் நாமத்தைக் கிரீடமாய்க் கொண்டு

தீர்க்கதரசி திருவுளம்கொண்டு தாய்மடியில் தவழ்ந்ததன்று!

மேதகு என்றே மேதினியார் போற்றும்

மாதவ மைந்தன் மண்ணில் மலர்ந்து

பாதகம் செய்தோரின் படையணி அழித்து

வேதனை தீர்க்கும் வீர காவியத்தில்

சாதனைகள் கண்ட சரித்திர நாயகன்!

பாசத்தில் தந்தை பழக்கத்தில் அண்ணன்

நேசக் கரம்நீட்டும் நேர்மையின் வடிவம்

ரோசப் பரம்பரையில் ராசியாய் வந்துதித்து

வாசம் வீசிய வண்ணமலர் மூன்றை

மோசத் துரோகத்தில் முழுமையாய் தொலைத்தவர்!

அன்னைத் தமிழின் அழகு தெரிந்தவர்

முன்னைத் தமிழன் முரசொலி அறிந்தவர்

வன்னி மண்ணின் வரலாறாய் வாழ்கின்றார்

தன்னுள் நிறைந்த தம்பி தங்கையரை

வின்மீன் வடிவில் விண்ணெங்கும் காண்கின்றார்!

தேசவிடுதலைக்காய் தியாகங்கள் செய்தீர் வாழி!

தேசமக்களின் தெய்வம் ஆனீர் வாழி!

தேசக்காற்றின் சிந்தையில் நிறைந்தீர் வாழி!

தேசியத்தை உயிராக நினைத்தீர் வாழி!

தேசியத்தலைவராகத் திக்கெட்டும் திகழ்கின்றீர் வாழி!

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

Edited by alvayan
எழுத்துபிழை

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, alvayan said:

வாசம் வீசிய வண்ணமலர் மூன்றை

மோசத் துரோகத்தில் முழுமையாய் தொலைத்தவர்!

எல்லா சரி பிழைகள், வழி முறைகள் சொல்லப்படும் போதும்

இதுவே கண் முன்னே வந்து நிற்கின்றது

அந்தப் பாலகனின் கடைசி விம்பம்

எவர் நெஞ்சிலும் அப்படியே ஒட்டி நிற்கும்..................🙏.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பிழம்பு said:

ஆனைத்து துயிலும் இல்லங்களிலும் தமிழ் மக்களை கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தவருமாறு ஏற்பாட்டுக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

எந்தச்சந்தர்ப்பத்திலும் தம் தலைவனை மக்கள் மறந்ததில்லை. எந்தக்கட்டுப்பாடுகள், அச்சுறுத்தல்கள், சலுகைகள் வந்த போதிலும் அவரையும் அவர்தம் சேனையையும் அவர்கள் தந்த பாதுகாப்பையும் அவர்கள் மறுக்கவுமில்லை, விட்டுக்கொடுக்கவுமில்லை. ஆயுதப்போராட்டத்தை நான் ஆதரிக்கவில்லை என்று கூவியவர், இன்று மாவீரர் அடியில் மண்டியிட வைத்துள்ளனர் மக்கள். சந்தற்பவாதிகளும் மாவீரரின் தியாகத்தின் முன்னால் அடிபணிந்தேயாகவேண்டும். ஆயிரம் காரணங்கள் கூறி தம்மை நிஞாயப்படுத்தலாம், மாவீரரை புறக்கணிப்போருக்கு தம்மதியில் இடமில்லை என்பதை நிரூபித்து விட்டனர் மக்கள்.

வாழ்க நம் சேனைத்தலைவரும் அவரது வீரர்களும். நிம்மதியாகத்தூங்குங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், ஒப்பற்ற ஒரு உதாரண தலைவர். வாழ்த்துக்கள் அண்ணை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.