Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரதேசி நாய்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்றிரவு தொடரூர்ந்து நிலையத்தில் அவரைச் சந்தித்தேன். ஆபிரிக்கர், அவராகச் சொன்னபின் சோமாலியர் எனத் தெரிந்து கொண்டேன். சற்றுத் தூரத்தில் நின்று சிரித்தார். சோமாலியா எரித்திரியா போன்ற நாட்டுக்காரர்களின் சிரிப்பில் ஒருவித குழந்தைத்தனம் இருப்பது போல எனக்கு நெடுநாளாகத் தெரிகிறது. பதிலுக்குச் சிரித்தேன். சிநேகபூர்வமாக கிட்ட வந்தவர் தமிலியனா என்றார் (Tamilien) ஜெர்மன் மொழியில் தமிலியன் என்றால் தமிழர்கள். தமிலிஸ் என்றால் தமிழ்.

சோமாலியாக்காரருக்கு சுவிற்சர்லாந்து பிடிக்கவேயில்லை என்றார். சுவிற்சர்லாந்து வெள்ளையின மக்கள் தங்களை மனிதர்களாகவே நினைப்பதில்லையென்றவர் ஒரு சிறு புன்னகை கூட தங்களை நோக்கி அவர்கள் தருவதில்லை என்றார். புறக்கணிப்பில் வலி அவரது பேச்சிலிருந்தது. இங்கே எதிர்ப்படும் மனிதருக்கு அது எவராயிருந்தாலும் வணக்கம் சொல்லும் ஒரு மரபிருக்கிறது. grüezi என்கிற அந்த வார்த்தையை நம்மாட்கள் க்றூட்சி என்றும் கிறைச்சி என்றும் விட்டால் இறைச்சி என்றும் பயன்படுத்துவோம். இங்கே கிராமங்கள் வெறிச்சோடிப்போயிருக்கும் எப்போதும். வீதியில் சக மனிதரை எப்போதாவதுதான் காணமுடியும். ஆகவே அப்போது வணக்கம் வைப்பது இவர்களுக்குக் கட்டுப்படியாகிறது. ஆனால் நமது நாட்டில் சூழலில்.. வீட்டிலிருந்து புறப்பட்டால் வணக்கம் சொல்லியே வாயுளைந்து விடும்.

சோமாலியர் சொன்னார் – ஆனால் தமிழர்கள் அப்பிடியல்ல. அவர்கள் சிரிக்கிறார்கள், நெருங்கிப் பேசுகிறார்கள். அவர்கள் அற்புதமானவர்கள்-

வெளியே ஸ்நோ கொட்டிக்கொண்டிருந்தது.

0 0 0

RACISMஇரண்டொரு வாரங்களுக்கு முன்பு, பஸ்ஸில் சீற் இருந்தபோதும் அடுத்த இறக்கங்களில் இறங்குவதற்காக வாயிலில் நின்றுகொண்டே பயணித்தேன். குளிரான நாள் அன்று. தலை காதுகளை இறுக்கி மூடி மப்ளர் அணிந்திருந்தேன். ஒரு நிறுத்தமொன்றில் இரண்டு மூன்று தமிழர்கள் பஸ்ஸில் ஏறினார்கள். அவர்களில் ஒருவர் என்னை கண்ணுக்கு நேராகவே பார்த்தார். பார்த்தபடியே சொன்னார். “பரதேசி நாய் – சீற் இருக்கத்தக்கவா நிண்டு கொண்டு வருகுது”. நானும் கொஞ்சம் குழம்பித்தான் போய்விட்டேன். முன்னைப்பின்னை அவரோடு எங்காவது சண்டைபிடிச்சிருக்கிறனா என்றெல்லாம் யோசித்தேன். இரண்டு மூன்று நிமிடங்கள் கழித்து எனக்கொரு போன் வந்தது. வீட்டிலிருந்து பேசினார்கள். பேசிவிட்டு வைத்துவிட்டேன். இப்போதும் அந்தத் தமிழர் என்னை நேராகப் பார்த்தார். திரும்பவும் திட்டப்போகிறாரோ என்று யோசித்தேன். என்னைப் பார்ப்பதுவும் பிறகு விழிகளைத் தாழ்த்திக் கொள்வதுமாக அவர் கொஞ்சநோரம் விளையாட்டுக் காட்டினார். திடீரென்று ” அண்ணை என்னை மன்னிச்சுக் கொள்ளுங்கோ என்றவர் மேலும் தொடர்ந்தார். “நான் நீங்கள் ஒரு கறுப்பர் என்று நினைச்சுத் திட்டிப்போட்டன்”

அவர் மேலும் ஒன்றிரண்டு தடவைகள் sorry சொல்லிக்கொண்டே வந்தார்.

எனக்கு சிரிப்பாக இருந்தது. நாங்கள் இனவெறிக்கு எதிராக போராடும் ஒரு இனம்

http://sayanthan.com/?p=337

Edited by sayanthan

  • கருத்துக்கள உறவுகள்

அது அவரது அறியாமை......... தலை தாழ்ந்து விட்டது.

வருந்தியிருக்கிறார். மன்னித்து விடுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பான ஆட்களைத் தாழ்வாக நினைப்பது ஆரிய-திராவிட, பிராமண-தலித்திய வேற்றுமைகளில் இருந்து வந்ததுதானே.

கறுப்பர்களுடன் பழகாமலே அவர்களை தாழ்வானவர்கள், திருடர்கள் என்ற சிந்தனையில் தமிழர்கள் பெரும்பாலோனோர் உள்ளனர்.

அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சி இது.அழகாக எழுதியிருந்தீர்கள்.

நான் பயப்பிடும் ஒரே இனம் எம்மவர்தான்.ஒருமுறை கதவை திறந்து பிடித்து வைத்திருந்தததற்கு "எனக்கு கையில்லையோ? கனேடியன் ஆகிவிட்டங்களடா எங்கட ஆட்கள் என்று கெட்ட வார்த்தையால் வசவு வாங்கினேன். அதைவிட வாகனம் ஓட்டும் போது இடம் தராமல் ஓட்டுவதும்,திரும்பி பார்த்தால் என்னவும் தேவைபடுதோ என்றொரு பார்வையும் ரொம்பத்தான் பயப்பிடுத்திறாங்கள்.

கிருபனுக்கு,இரு இனத்தை வைத்து ஒருவரை எடை போடுவது சரியான பிழை. கறுப்பர்களுக்கும் இது பொருந்தும், நீங்கள் லண்டன் பெற்றோல் ஸ்ரேசனில் இரவு வேலை செய்யாத மட்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி - அப்ப ஆபிரிக்கர்களை பரதேசி நாய் எனத் திட்டலாமோ.. கறுப்பன் என்ற காரணத்திற்காக..

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் நான் இவர்களுடன்தான் (சோமாலியா எரித்திரியா) அதிக நேரம் செலவிடுகிறேன்

கூடுதலாக அப்பாவிகள்

ஒருசிலரைத்தவிர...

அந்த ஒருசிலரில்

சிலர் இவ்வப்பாவித்தனமான தமது இனத்தின் குணத்தால் பாதிக்கப்பட்டவர்கள்

சிலர் அதே அப்பாவித்தனத்தை சில கெட்ட வேலைகளுக்காக பாவிப்பவர்கள்

சிலருக்கு நன்றாக தமிழ் பேசவரும் எமது ஆட்களுடன் வேலை செய்வதால்

அதிலும் ஆபாச சொற்கள் அத்துப்படி....

ஆனால் என்னைக்கேட்டால்

எம்மவரைவிட இவர்கள் நல்லவர்கள் என்றுதான் சொல்வேன்

எம்மவர் கண்ணுக்கு முன் மரியாதை தருவதாக நடிப்பர்

தள்ளிச்சென்றதும் வேறு சொல்வர்

இதுதான் சயந்தனுக்கும் நடந்துள்ளது

இவரிடம் ஏன் பேசவேண்டும்

பின்னர் மன்னிப்புக்கோரவேண்டும்

இரண்டுக்குமே இந்த கண்ணுக்கு முன் மரியாதை தருவதாக நடிப்பதும்

தள்ளிச்சென்றதும் வேறு சொல்வதும் தான் காரணம்

எனக்கு இது சயந்தனுக்கு சொல்லுப்பட்டதாகவே தெரிகிறது

தெரியாமல் செய்ததாக நடிக்கப்பட்டுள்ளது என்று தான் நினைக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

சயந்தன் நீங்கள் என்ன அவ்வளவு கறுப்போ [சும்மா பகுடிக்கு]

உங்களை சரியாய்த்தானே திட்டி இருக்கிறார் உதிலை கோவிக்க என்ன இருக்கிது.. :)

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் தனது சுயத்தைத் தொலைத்த இனம் தமிழினம் மட்டுமே. புலம்பெயர் தெசங்களில் நீங்கள் கவனித்தீர்கள் என்றால் அறிந்து கொள்ளலாம். நாம் பொது இடங்களில், அது அனேகமாக வெள்ளையர்கள் பழகும் இடங்களில் பவ்யமாக இருப்போம். அதாவது ஒன்றுமறியாத அப்பிராணிகள்போல், ஆனால் ஒதுக்கமான இடங்களில் ஒருசிலர் ஒன்றுகூடியதும் அட்டகாசம் தாங்காது. ஆனால் ஆபிரிக்கர்கள் அப்படியல்ல தமது சூழழை தமக்கேற்றது போலவே வைத்திருப்பார்கள் யாருக்கும் விட்டுக்கொடுக்கும் மனப்பயம் கிடையாது அதாவது நான் இப்படித்தான இருப்பேன் விருப்பமென்றால் ஏற்றுக்கொள் இல்லையேல் விலகிவிடு, இதுவே அவர்களது கருத்து மற்றும் தமது அடிப்படிடைக் கலாச்சாரத்தில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்த முயற்சிசெய்ய மாட்டார்கள.; அது தெருவில் வைத்து அடித்து காச சேகரிக்கும் ஆபிரிக்க மேளமாகட்டும் அதன் தாளக்கட்டாகட்டும் எதிலுமே மாற்றமிருக்காது. யாராவது எம்மவர் வேட்டி சட்டை உடுத்தி மெற்றேரெயிலிலோ அன்றேல் வேறு பொது வாகனங்களிலோ செல்ல எத்தனிப்பார்களா? ஆனால் தமது கலாச்சார அன்றேல் சொந்த ஊரினில் உடுக்கும் உடைகளுடன் வெளிச்செல்ல அவர்களால் முடியும். அதனாலேயே கள்ளமனம் படைத்த எங்களுக்கு இருக்கின்ற அங்கீகாரத்தைவிட அவர்களுக்கு வெள்ளையர்கள் மத்தியில் அங்கீகாரம் அதிகம்.

பரதேசி நாய்

எமது பொதுப்பெயர் ஆனால் நாயை ஒப்பிட முடியுமா என்பது ஆராயப்படவேண்டியது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சயந்தன் நீங்கள் என்ன அவ்வளவு கறுப்போ [சும்மா பகுடிக்கு]

ரதியினது பல கருத்துக்களுடன் வேறுபட்டாலும், எனக்கும் இப்படியான ஒரு "லொள்ளு பகிடிதான் / ஞானம்தான்" முதலில் வந்தது...3 / 4 வகுப்பு சுற்றாடல் கல்வி வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் :wub:

நிலாமதி - அப்ப ஆபிரிக்கர்களை பரதேசி நாய் எனத் திட்டலாமோ.. கறுப்பன் என்ற காரணத்திற்காக..

சயந்தனின் பதில் வந்த சிரிப்பையும் அள்ளிச்செல்கிறது...:(

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மையைத்தான் இது காட்டுது என நினைக்கிறன்.

தலைப்பை வாசித்தவுடன், என்னைத்தான் சயந்தன் திட்டுகின்றாரோ என முதலில் நினைத்து விட்டேன்

சயந்தனின் கதைகளில் /கட்டுரைகளில் தொடர்ந்து வரும் 'எம்மை நாமே விமர்சித்துக்கொள்ளல்' வடிவில் இந்தக் ஆக்கத்தின் கருவும் அமைந்து இருக்கின்றது. தன்னை நிமிர்ந்து பார்த்து சுயவிமர்சனம் செய்ய பின்னடிக்கும் எம் சமூகத்தில் சஜீயின் எழுத்துகள் வித்தியாசமாக அமைகின்றன

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பர் சயந்தனுக்கு நீங்கள் மேற்கூறிய உங்களை திட்டிய நபர் வெள்ளை நிறத்துக்கு சொந்தக்காரர் என நினைக்கிறேன்.

நம்மவர்கள் சற்று வெள்ளையாக இருந்தால் அவர்களுக்கு கருப்பானவர்களை பார்த்தால் இழிச்சொல் பேசுவது என்பது ஒரு நடைமுறை பழக்கமாக ஆகிவிட்டது.

உதாரணமாக கருப்பன் என்ற சொல்லை எதொ கெட்ட வார்த்தை போல பாவிக்கும் நாம் என் வெள்ளையன் என்பதை அவ்வளவாக கருத்தில் கொள்வது இல்லை.

வெள்ளையாக உள்ளவர்களில் பெரும்பாலணோர் இந்த மனப்பான்மையை கொண்டுள்ளனர்.

அண்ணே இதை வாசி த்து வயிரு குழுங்க குடும்பத்தோடு சிரிச்சது மட்டும் இல்லாமல் எனக்கு தெரிந்தவர்களுக்கு அச்சடிச்சு குடுத்து மி-அ அனுப்பி இருக்கிரேன்.

அய்யோ அண்ணே முதுகு எல்லாம் நோகுது .

வந்திட்டாங்க தமிழர குற்றம்சாட ஒரு பட உங்கட கதயக் கோட்டு ஓய் நீய் செய்ய வேண்டியதை செஉ ஓய்

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது எம்மவர் வேட்டி சட்டை உடுத்தி மெற்றேரெயிலிலோ அன்றேல் வேறு பொது வாகனங்களிலோ செல்ல எத்தனிப்பார்களா? ஆனால் தமது கலாச்சார அன்றேல் சொந்த ஊரினில் உடுக்கும் உடைகளுடன் வெளிச்செல்ல அவர்களால் முடியும். அதனாலேயே கள்ளமனம் படைத்த எங்களுக்கு இருக்கின்ற அங்கீகாரத்தைவிட அவர்களுக்கு வெள்ளையர்கள் மத்தியில் அங்கீகாரம் அதிகம்.

நூறு வீதம் உண்மை.இதை விட இப்ப புதுசா வாற எங்கட சனத்தைப்பார்த்து

எங்கட ஆக்களே அகதிகள் என்னுகினம். :wub:

நூறு வீதம் உண்மை.இதை விட இப்ப புதுசா வாற எங்கட சனத்தைப்பார்த்து

எங்கட ஆக்களே அகதிகள் என்னுகினம். :wub:

செகவன் நீரும் அதத்தானே செய்ரீர் மற்ராட்கள் தமிழரை குறை கூறினம் நீர் தமிழர் குற கூறினம் எண்டு குறை கூறீரீர்

சயந்தன் இது எங்களில் பலருக்கு உள்ள பழக்கம், மற்றைய இனத்தவ்ரை தரக்குறைவான பெயரகள் கொண்டு அழைப்பது. இங்கு களத்தில் இரண்டு முறை இதைப்பற்றி புதிய தலைப்புக்களை ஆரம்பிருந்தேன்.காப்பிலி, சப்பை....

சயந்தன் இது எங்களில் பலருக்கு உள்ள பழக்கம், மற்றைய இனத்தவ்ரை தரக்குறைவான பெயரகள் கொண்டு அழைப்பது. இங்கு களத்தில் இரண்டு முறை இதைப்பற்றி புதிய தலைப்புக்களை ஆரம்பிருந்தேன்.காப்பிலி, சப்பை....

ஒவ்வொரு இனத்தவருக்கும் ஒரு பட்டப்பெயர் சொல்லி அழைக்கிற நாங்கள் -

எங்கள (தமிழர்கள) "சோறு" எண்டு அழைக்கிறனாங்கள் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் தனது சுயத்தைத் தொலைத்த இனம் தமிழினம் மட்டுமே. புலம்பெயர் தெசங்களில் நீங்கள் கவனித்தீர்கள் என்றால் அறிந்து கொள்ளலாம். நாம் பொது இடங்களில், அது அனேகமாக வெள்ளையர்கள் பழகும் இடங்களில் பவ்யமாக இருப்போம். அதாவது ஒன்றுமறியாத அப்பிராணிகள்போல், ஆனால் ஒதுக்கமான இடங்களில் ஒருசிலர் ஒன்றுகூடியதும் அட்டகாசம் தாங்காது. ஆனால் ஆபிரிக்கர்கள் அப்படியல்ல தமது சூழழை தமக்கேற்றது போலவே வைத்திருப்பார்கள் யாருக்கும் விட்டுக்கொடுக்கும் மனப்பயம் கிடையாது அதாவது நான் இப்படித்தான இருப்பேன் விருப்பமென்றால் ஏற்றுக்கொள் இல்லையேல் விலகிவிடு, இதுவே அவர்களது கருத்து மற்றும் தமது அடிப்படிடைக் கலாச்சாரத்தில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்த முயற்சிசெய்ய மாட்டார்கள.; அது தெருவில் வைத்து அடித்து காச சேகரிக்கும் ஆபிரிக்க மேளமாகட்டும் அதன் தாளக்கட்டாகட்டும் எதிலுமே மாற்றமிருக்காது. யாராவது எம்மவர் வேட்டி சட்டை உடுத்தி மெற்றேரெயிலிலோ அன்றேல் வேறு பொது வாகனங்களிலோ செல்ல எத்தனிப்பார்களா? ஆனால் தமது கலாச்சார அன்றேல் சொந்த ஊரினில் உடுக்கும் உடைகளுடன் வெளிச்செல்ல அவர்களால் முடியும். அதனாலேயே கள்ளமனம் படைத்த எங்களுக்கு இருக்கின்ற அங்கீகாரத்தைவிட அவர்களுக்கு வெள்ளையர்கள் மத்தியில் அங்கீகாரம் அதிகம்.

உண்மையிலே சுயந்தனது எழுத்து ஒரு சம்பவத்தினது பதிவாக மட்டுமல்ல. எம்மை நாம் ஏற்க மறுக்கும் பாங்கையும் சுட்டிநிற்கிறது.

இதை வாசித்தபோது என் நண்பரொருவரே ஞாபகத்துக்கு வந்தார். அவரை வேலை செய்யுமிடத்தில் " கறுப்பா" என்று பேசிவிட்டார்கள். உடனே இவர் சொன்னார் நான் கறுப்பில்லை பிறவுன் என்று. எனக்கு முதலில் சிரிப்பு வந்துவிட்டது. அப்போ நான் சொன்னேன் நாங்களும் இயற்பியல் ரீதியாகக் கறுப்பரேயென்று அவரால் ஏற்கமுடியவில்லை.இப்படியும் இருக்கிறார்கள் மனிதர்கள்.

கறுப்பர்கள் தமது தனித்துவத்தை விட்டுக் கொடுப்பதே கிடையாது. ஆனால் நாங்கள் பிறவுனிகள். அதனால்தான் இடத்திற்கேற்றாற் போல் நிறம்மாறுகிறோம். அதனால் எமக்கு எங்கும் இடம் கிடையாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பவும் ஈழத்திலை மாப்பிளை வெள்ளையெண்டால் சீதனம் கூடவாம்

பொம்புளை வெள்ளையெண்டால் நகைநட்டு இல்லாட்டிலும் பறவாயில்லை

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையைச்சொன்னால்

தமிழர்கள் எல்லாவற்றிலும்

இடைத்தரம்

கறுப்புமில்லை வெள்ளையுமில்லை

குட்டையுமில்லை நெட்டையுமில்லை

பெரிசுமில்லை சிறுசுமில்லை

......???

.......????

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் தனது சுயத்தைத் தொலைத்த இனம் தமிழினம் மட்டுமே. புலம்பெயர் தெசங்களில் நீங்கள் கவனித்தீர்கள் என்றால் அறிந்து கொள்ளலாம். நாம் பொது இடங்களில், அது அனேகமாக வெள்ளையர்கள் பழகும் இடங்களில் பவ்யமாக இருப்போம். அதாவது ஒன்றுமறியாத அப்பிராணிகள்போல், ஆனால் ஒதுக்கமான இடங்களில் ஒருசிலர் ஒன்றுகூடியதும் அட்டகாசம் தாங்காது. ஆனால் ஆபிரிக்கர்கள் அப்படியல்ல தமது சூழழை தமக்கேற்றது போலவே வைத்திருப்பார்கள் யாருக்கும் விட்டுக்கொடுக்கும் மனப்பயம் கிடையாது அதாவது நான் இப்படித்தான இருப்பேன் விருப்பமென்றால் ஏற்றுக்கொள் இல்லையேல் விலகிவிடு, இதுவே அவர்களது கருத்து மற்றும் தமது அடிப்படிடைக் கலாச்சாரத்தில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்த முயற்சிசெய்ய மாட்டார்கள.; அது தெருவில் வைத்து அடித்து காச சேகரிக்கும் ஆபிரிக்க மேளமாகட்டும் அதன் தாளக்கட்டாகட்டும் எதிலுமே மாற்றமிருக்காது. யாராவது எம்மவர் வேட்டி சட்டை உடுத்தி மெற்றேரெயிலிலோ அன்றேல் வேறு பொது வாகனங்களிலோ செல்ல எத்தனிப்பார்களா? ஆனால் தமது கலாச்சார அன்றேல் சொந்த ஊரினில் உடுக்கும் உடைகளுடன் வெளிச்செல்ல அவர்களால் முடியும். அதனாலேயே கள்ளமனம் படைத்த எங்களுக்கு இருக்கின்ற அங்கீகாரத்தைவிட அவர்களுக்கு வெள்ளையர்கள் மத்தியில் அங்கீகாரம் அதிகம்.

உங்களின் கருத்துக்கள் என்னால் ஒரு வேளை புரிய முடியவில்லையோ தெரியவில்லை.

எனக்கு உங்களுடைய எடுத்துகாட்டு தவறானாதாக படுகின்றது.

காலத்திற்கு சூழ்நிலைக்கு ஏற்ப எமது பழக்கவிழக்கங்களை மாற்றுவதே சிறந்தது என்றே வள்ளுவர் கூட சொல்லிவைத்துள்ளார்.

நான் இப்படிதான் வேண்டுமென்றால் இரு வேண்டா விட்;டால் விடு....... என்பது ஒருவித ஆணவ ஆதிக்கம்.

நாம் ஒரு தனி சமூகமாக இருந்துகொண்டு ஏனைய சமூகங்களுடன் தொடர்படும்போது. விட்டுகொடுப்புகளும் சகிப்புகளுமே சரியானது.

தவிர எமது அடையாளத்தை எம்மவர்கள் பல இடங்களில் மறைக்கின்றார்கள். இதுவே தறானது ஆனால் இதை எளிதில் மாற்றிவிட முடியாது. காரணம் இது அறிவோடு சம்மந்தபட்டது....................... தமிழுழையும் தமிழர்களின் பாரம்பரியத்தையும் தெளிவாக தெரிந்தவனுக்கு தமிழனாக இருப்பது எவ்வளவு பெருமிதம் என்பது புரியும். தவிர மேல்நாட்டு திட்மிட்ட சதிகளையும் மூடி மறைக்கபட்ட வரலாறுகளையும் புரியாதவர்கள் தாம் வெள்ளையாக பிறக்கவில்லையே என்று மருந்து குடித்து தமிழை மறந்தாலும் வேதனையுடனேயே வாழ்கின்றார்கள். இதை எளிதாக திருத்திவிட முடியாது.

தொழில் ரீதியாக இன்னொரு மனிதனை தாழ்த்தி எமை எந்த ஒரு உயர் குணமும் இல்லாது உயாந்தவர்களாக ஒரு போலி மாயை காட்டி வாழந்தவர்கள் நாங்கள். ஆகவே நாம் நாட்டிலும் பணக்காரர் போன்ற மாயவித்தையை கூடி பழகும் வெள்ளையர்களுக்கு அவிச்சு கொட்டும் சிலரை நான் கண்டுள்ளேன். ஆனால் அவர்களுக்கு நாம் எல்லோருமே மூன்றாம் உலக நாட்டவர்களே அந்த சின்ன விடயம் கூட அவர்களால் புரிந்துகொள்ள முடியாது............... அதற்கு போதுமான அறிவு கூட தட்டுபாடு எனில். மனிதம் பற்றிய சிந்தனைக்கு எம்மட்டு தேவை?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

;உண்மையைச்சொன்னால்

தமிழர்கள் எல்லாவற்றிலும்

இடைத்தரம்

கறுப்புமில்லை வெள்ளையுமில்லை

குட்டையுமில்லை நெட்டையுமில்லை

பெரிசுமில்லை சிறுசுமில்லை;. விசுகர் சொல்லுறமாதிரி நாங்கள் எல்லாத்திலயும் இடையிலதான். நிறத்திலயும் வெள்ளையுமில்ல கறுப்புமில்ல. இடையில மண்நிறம்.மண்ணாயே இருக்கிறம்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் எழுதிய கருத்தின் இறுதியில் வெள்ளையர்களுடைய அங்கீகாரம் எனக் குறிப்பிட்டது. அவர்கள் வெள்ளையாக இருப்பதால் முதன்மையானவர்கள் என்பதற்காகவல்ல, நாம் அவர்களது நாட்டில் வாழ்கிறோம் என்பதற்காகவே. ஆபிரிக்கர்கட்கு என தனியான நாகரீகப் பழக்கவழக்கங்கள் உள்ளன, அவற்றை அவர்கள் தாம் வாழ்கின்ற நாடுகளில் அறிமுகப்படுத்துவதில் முதன்மையாக இருக்கின்றார்கள். ஏன் நாம்கூட அவர்களது ஆடைக்கலாச்சாரத்தை உள்வாங்கியுள்ளோம் (உதாரணமாக, நமது இளையோர் உடுக்கின்ற உடைகளில் ஆனேகமானவை அவர்கள் வழிவந்த வடிவமைப்பே) தமிழினம் என்பது மிகவும் கரிய உருவத்தை உடையவர்கள் ஆவர். காலப்போக்கில் அந்னியரது ஆளுகைக்கு நாம் உட்பட்டதன் காரணமாகவே எமது நிறம் கருமையில் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. காலாகாலமாக நாம் அடிமைப்பட்டவர்களாகவே வாழ்ந்து வந்தோம் அதன்காரணமாக எமது பிறப்புக்களில் பலவாறான கலப்புக்கள் இடம்பெற்றதை நாம் ஏற்றுக்கொள்ளவே வேண்டும். இது பல நூறு வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட மாற்றங்களாக இருக்கலாம். ஆகவே நாம்மில் சிலர் வெள்ளையாக இருப்பதையிட்டுப் பெருமைகொள்ளக் கூடாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.