Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதிக் கட்டம்! தமிழுலகம் அறியாத தகவல்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிக் கட்டம்! தமிழுலகம் அறியாத தகவல்கள்!

By: அருட் தந்தை கஸ்பர் ராஜ்

Courtesy: நக்கீரன் - வைகாசி 26, 2010

2009-ம் ஆண்டு மார்ச் மாதத்தின் முதல் வாரம். இந்தியாவின் இன்றைய பாதுகாப்புச் செயலரும் அப்போது வெளியுறவுச் செயலருமாயிருந்த சிவசங்கர் மேனன் முக்கிய பயணமாக அமெரிக்கா சென்றார். வழமையான ராஜாங்கப் பயணம்போல் இது வெளிக் காட்டிக் கொள்ளப்பட்டாலும் மிக முக்கியமானதும், உண்மையில் மிக அவசரமானதுமாயிருந்தது. விடுதலைப் புலிகளுக்கும்-இலங்கை ராணுவத்திற்கும் இடையே சண்டை நிறுத்தம் கொணர்வது, முற்றுகையிடப்பட்டு நின்ற லட்சக்கணக்கான தமிழ் மக்களை புதுக்குடியிருப்பு- முல்லைத்தீவு பகுதிகளிலிருந்து பாதுகாப்பாக முகாம்களுக்கு நகர்த்துவது, தனது நேரடி மேற்பார்வையில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்குமிடையே அரசியற் பேச்சுவார்த்தைகள் நடத்தி கூட்டாட்சி அடிப் படையிலான ஓர் தீர்வினை அடைவது ஆகிய மூன்று நோக்குகளுடன் மிகப்பெரிய ராணுவ நடவடிக்கை ஒன் றிற்கு அமெரிக்கா கொள்கை ரீதியான முடிவெடுத்து, செயற் திட்டம் நோக்கி நகரத் தொடங்கியிருந்த சூழலில்தான் சிவசங்கர் மேனன் அவசரமாக அமெரிக்கா சென்றார்.

இங்கு நக்கீரனில் எழுதப்படுபவை தமிழுலகம் இது வரை அறியாத தகவல்கள்.

மார்ச் 05-ம் தேதியன்று வாஷிங்டன் டி.சி.யில் வைத்து பூர்வாங்கமாக சிவசங்கர் மேனனிடம் அமெரிக்கா தனது திட்டத்தைத் தெரிவித்ததாக, சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு முன்ன ரேயே அமெரிக்காவின் நகர்வுகள் இந்தியா வுக்கு தெரிந்தே இருந்தன. தென் ஆசியாவில் முதன்முறையாக மிகப்பெரும் ராணுவ நடவடிக்கை ஒன்றை மேற் கொள்ளும் அமெரிக்காவின் இத்திட்டத்தில் மைய மாக இருந்தது. PACOM என்று ஆங்கிலத்தில் பொதுவாக அறியப்படும் அமெரிக்காவின் "ஆசிய பசிபிக், ராணுவப் பிரிவாகும். 2009 பெப்ருவரி மூன்றாம் வாரத்தில் அமெரிக்க ஆசிய பசிபிக் ராணுவப் பிரிவின் முக்கிய அதிகாரிகள் கொழும்பு நகரில் கோத்தபய்யா உள்ளிட்ட முக்கிய ராணுவத் தளபதியர்களை சந்தித்து இது தொடர்பாக விரிவாக விவாதித்திருந்தமையால் அமெரிக்கத் திட்டத்தினது பரிமாணங்கள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் தெரிந்தே இருந்தது.

வெளிப்படையாக அமெரிக்காவை பகைத்துக்கொள்ள ராஜபக்சே சகோ தரர்கள் தயங்கியபோதும் அமெரிக்காவின் ராணுவத் திட்டத்தை அவர்கள் விரும்பவில்லை. அமெரிக்கா இலங்கைக்குள் ராணுவரீதியாய் நேரடியாகக் காலூன்றிவிட்டார்கள் என்றால் அவர்களது நீண்டகால கட்டுப்பாட்டிலிருந்து மீள முடியாதென்பதும், தனித்தமிழ் ஈழத்தை வலியுறுத்தாவிட்டாலும் 2003 நார்வே நாட்டு இடைப்பாட்டிலான ஓஸ்லோ (Oglo) பிரகடனத்தின் அடிப்படையில் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய தன்னாட்சி அமைப்பொன்றினை அமெரிக்க-மேற்குலக நாடுகள் தமிழருக்காக வலியுறுத்துவார்களென்பதும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே அமெரிக்காவின் இத்திட்டம் செயல்வடிவ நிலைக்கு நகருமுன் அதிரடி யாக -பெரும் மனித அழிவு நேர்ந்தாலும்கூட -யுத்தத்தை முடுக்கி முடித்து விட ராஜபக்சே சகோதரர்கள் விரும்பியதில் வியப்பில்லை. முள்ளிவாய்க்கால் பேரழிவில் நிறைவுற்ற அந்த இன அழித்தல் கடைசிப் போருக்குத் தானாகவே முன்வந்து ஊக்கமும் உறுதுணையும் தந்தது சீனா. போரினை இத்துணை கொடூர மாக முடிவுக்குக் கொண்டுவருவதனால், எதிர்காலத்தில் அனைத்துலக அளவில் ஏற்படும் அத்தனை நெருக்கடிகள்... சங்கடங்களிலிருந்தும் ராஜபக்சே சகோதரர்களைக் காப்பாற்றும் வாக்குறுதியினை சீனா கொடுத்தது. போரில் தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை பயன்படுத்திட பச்சைக் கொடி காட்டியதும் சீனாதான்.

அமெரிக்காவின் வல்லாதிக்க அபிலாஷைகளைப் பற்றி நம்மில் பலருக்குத் தெரியும். அதுபற்றி இடது சாரி சிந்தனையாளர்கள் தமிழில் நிறையவே எழுதியிருக்கிறார்கள். அது உண்மையும்தான். இப்பூவுலகின் கோடானுகோடி மக்களது வாழ்வு வறுமையுற்று நலிந்திட அமெரிக்காவின் வல்லாதிக்க பொருளியல் -ராணுவ கொள்கைகள் காரணமாக அமைந்திருக்கிறது. அமெரிக்காவுக்காய் வக்காலத்து வாங்குவது நம் வேலையல்ல. அதேவேளை சீனாவின் வல்லா திக்க, மேலாதிக்கக் கனவுகள் (Imperial Dreams) அமெரிக்காவை விட பன் மடங்கு வக்கிரத்தன்மையும் இன வெறித் தன்மையும் கொண்டவை. அதுபற்றி தமிழில் அதிகம் விவாதிக்கப் படவில்லை. காரணம் தமிழ் சிறு பத்திரிகை வட்டத்தில் இயங்குகிற பெரும்பான்மையோரின் இடதுசாரிச் சார்பு நிலை.

உண்மையில் அமெரிக்கா, போரின் இறுதிக் கட்டத்தில் நேரடியாக ராணுவத் தலையீடு செய்வதென்ற நிலைப்பாடு நோக்கி நகர்ந் தமைக்கு காரணமும்கூட தமிழ் மக்கள் மீதான அன்பு, பாசம் அல்ல. சீனா -தனது எதிர்கால வல்லாதிக்க விரிவாக்கத்திற்கு (Imperial Expansion) இந்தியப் பெருங்கடல் மேலாண்மை மிக முக்கியமானதென்ற கருதுகோளுடன் இலங்கையை தன் கட்டுக்குள் கொண்டு வந்துகொண்டிருக்கிறதென அமெரிக்கா கருதியதும் அதனைத் தடுத்து நிறுத்தவும் -தொடர்ந்தும் எதிர்காலத்தில் சீனாவை சற்று கிடுக்கிப்பிடி நிலையில் வைத்திருக்க வும் இலங்கையில் நேரடி ராணுவ நிலைகொள்ளல் உதவுமென கருதி யதும்தான் முக்கிய காரணங்கள்.

2009 மார்ச் 6-ந் தேதி வாஷிங்டனில் செய்தியாளர்களிடையே பேசிய அமெரிக்க துணை வெளியுறவுச் செயலர் ரிச்சர்ட் பவுச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்: ""இலங்கை போர்க்களத்தில் என்ன நடக்கிறதென்பதை கவனிக்கவும், அமெரிக்காவால் என்ன செய்ய முடியுமென்ற வாய்ப்புகளை அடையாளப்படுத்தவும் எங்களது அதிகாரிகள் அங்கே நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். துன்பப்படும் அந்த மக்களுக்கு எங்களால் என்ன செய்ய முடியுமோ, அதனை நாங்கள் செய்வோம்.

மிகவும் நுட்பமான ராஜதந்திர சொல்லாடல்களால் போர்த்தப்பட்ட ரிச்சர்ட் பவுச்சர் அவர்களின் இந்தக் கூற்றினை அமெரிக்கா தன் திட்டத்திற்கு கட்டியம் கூறுவதாகவே இலங்கை -சீனா -இந்தியா உள்ளிட்ட நாடுகள் பார்த்தன.

முன்னதாக அமெரிக்க அதிகாரிகள் கொழும்பு வந்து ராஜபக்சே சகோதரர்களுடன் தமது ராணுவத் திட்டம் குறித்து விவாதித்த அதே காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தோடும் -அவர்களின் அனைத்துலக பிரதிநிதி களூடாய் விவாதங்கள் நடத்தப்பட்டிருக்கிறது. அதன்படி ஆயுதங்களை மௌனிப்பதாக விடுதலைப்புலிகள் முதலில் அறிவிக்க வேண்டும் -அதனைத் தொடர்ந்து அமெரிக்க இடைப்பாட்டில் இலங்கை அரசும் போரினை நிறுத்தும். அமெரிக்கப் படையினர், மக்களை முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து செஞ்சிலுவைச் சங்க ஈடுபாட்டுடன் பாது காப்பான முகாம்களுக்கு அப்புறப்படுத்துவர். புலிகளின் ஆயுதங்கள் அனைத்தும் அமெரிக்க ஏற்பாட் டின் கீழ் பூட்டி வைக்கப்படும் (Locking of Weapons). தொடர்ந்து அமெரிக்க ஏற்பாட்டில் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே முறிந்துபோன அரசியற் பேச்சுவார்த்தை கள் மீண்டும் தொடங்கும். பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால் பூட்டி வைத்த ஆயுதங்களை அமெரிக்கா விடுதலைப்புலிகளிடமே திருப்பித் தந்துவிடும். இவையே விடுதலைப்புலிகளுடன் விவாதிக்கப்பட்டவை.

மேற்சொன்னவற்றில் ஆயுதங்களை பூட்டி வைக்க ஒப்படைப்பதில் மட்டும் விடுதலைப்புலிகளின் தலை மைக்கு உடன்பாடு இருக்க வில்லையெனவும், அதே வேளை அமெரிக்காவின் நேரடித் தலையீட்டினை ஏற்றுக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

இன்னொருபுறம் முள்ளிவாய்க்கால் நடவடிக்கைக்காக அமெரிக்கா ஆயத்தப் பணிகள் செய்யத் தொடங்கியிருந்தது. அதன்படி PACOM-அமெரிக்காவின் ஆசிய-பசிபிக் கடற்பிரிவினது Marine Expeditionary Brigade முல்லைத்தீவு கடற்பரப்பில் தரையிறங்கும். PACOM-ன் கடற்படை மற்றும் விமானப்படை பிரிவுகளும் இந்நடவடிக்கையில் இணைந்திருக்கும்.

மிக முக்கியமான செய்தி என்ன வென்றால் தென் ஆசிய மற்றும் இந்தியப் பெருங்கடல் ராணுவ அரசியல் வரலாற்றின் தீர்க்கமானதொரு திருப்பு முனையாக அமையவிருந்த இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா (Coalition Humanitarian Task Force)- "நேச நாடுகளின் மனிதாபிமான செயற் படை' எனப் பெயரிட்டிருந்த போதும் அமெரிக்க ராணுவக் குறிப்புகள் அனைத்தும் இந் நடவடிக்கையை (Invasion) "படையெடுப்பு' என்றே குறித் திருந்ததாய் சொல்லப்படுகிறது.

NATO (North Atlantic Treaty Organization) அமெரிக்கா தலை மையிலான ராணுவக் கூட்டமைப்பு நாடுகளோடும் இத்திட்டம் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கிறது. வழமையாக அமெரிக்காவின் உலக ராணுவ விரிவாக்கத்தை எதிர்க்கும் பிரான்சு நாடு முல்லைத்தீவு நோக் கிய அமெரிக்காவின் திட்டத்திற்கு தீவிர ஆதரவு தெரிவித்திருக்கிறது.

இந்த காலகட்டத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் அடிநிலைச் செயலர் ஜான் ஹோல்ம்ஸ் அவசர மாக கொழும்பு வந்தார். ""போரினை முறைப்படியாகவும், மனித நேயத்தோடும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒழுங்குகளை செய்ய வேண்டியே அவசர பயணம் வந்தி ருக்கிறேன்'' என தனது பயண நோக்கு பற்றி குறிப்பிட்டார் ஜான் ஹோல்ம்ஸ். அமெரிக்காவினது ராணுவத் திட்டத் தினது ஓர் அங்கமாகவே இவரது பயணம் இருந்ததென பின்னர் கூறப்பட்டது.

இதற்கிடையில் தென்ஆசியாவில் அமெரிக்காவின் புதிய இந்த ராணுவ ஈடுபாடு தொடர்பாக அதிபர் ஒபாமா நிர்வாகத்திலேயே கருத்து வேறுபாடுகள் எழுந்திருக்கின்றன. அவற்றை சரிசெய்யும் பொறுப்பு வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டனுடையதாயிருந்திருக்கிறது. அவரே கூட ராணுவ நடவடிக்கை தொடர்பான பூரண விசுவாசம் கொண் டிருக்கவில்லையென்றே சொல்லப்படு கிறது. ராணுவ நடவடிக்கையின் களநிலை அவசியத்தை மேலும் உறுதி செய்ய வேண்டி ""உண்மை நிலை'' அறிக்கை யொன்றினை வாஷிங்டனுக்கு அனுப்பி வைக்கும்படி கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் பணிக்கப்பட்டதாகவும், அதன் படி கொழும்பு, அமெரிக்க தூதரகத்தின் தலைமை துணை பொறுப்பாளர் ஜேம்ஸ் மூர் யாழ்குடாவுக்கு அவசரப் பயணம் மேற்கொண்டு ராணுவத் தளபதிகள், மதத் தலைவர்கள், மக்கள் என பலரையும் சந்தித்து விரிவான அறிக்கை ஒன்றினை அனுப்பியதாகவும், ஜேம்ஸ் மூர் அவர்களின் இந்த அறிக்கை தான் ராணுவ நடவடிக்கை தொடர்பாக ஊசலாடும் மனநிலையிலிருந்த ஹிலாரி கிளிண்டன் அவர்களை ராணுவ நடவடிக்கை அவசியம் என்ற உறுதி நிலைக்கு இட்டுச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால் அமெரிக்கா செயலில் இறங்குமுன் சீனாவின் தீர்க்கமான சமிக்ஞையோடு முழு மூர்க்கமான கடைசி யுத்தத்தை ராஜபக்சே சகோதரர்கள் தொடங்கினர். அமெரிக்கா ராணுவ நட வடிக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த காலத்தில்தான் இந்தியாவும் சண்டை நிறுத்த முயற்சியொன்றினை அவசரத் தன்மையோடு முன்னெடுத்தது.

அம்முயற்சியில் சிறியதோர் தபால் காரனாக நானும் இருந்தேன். அந்த முயற்சி தோற்றது ஏன்? அமெரிக்காவின் ராணுவ திட்டத்தை இந்தியா ஆதரித்ததா?

இந்திய பயங்கரவாதிகளை காப்பாற்றும் முயற்சி?

  • கருத்துக்கள உறவுகள்

அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள்- தமிழ் தேசிய போலிகளின் கூடாரம்

OldFatherChristmas.jpg

மக்கள் தன்னர்வ எழுச்சி ஏற்படும் போதொல்லாம் அவர்களை கட்டுபடுத்துவதற்கு அவர்கள் வழியிலே சென்று லகானை பிடித்து தன்னார்வ போராட்டங்களை மழுங்கடிக்க செய்வார்கள்.. உலகின் பெரும் பால ஏகாதிபத்திங்கள் பொதுவாக கடைபிடிக்கும் வழி முறை.. அந்த வகையில் பொந்திய அரசு ஈழ பிரச்சனையை அடக்க தேர்வு செய்தது.. அரசு சாரா தொண்டு நிறுவனங்களை.. மக்களிடம் இவ்வாறன வர்கள் களம் இறங்கும் போது ..மக்கள் மனநிலை இவர்களோ பொது தொண்டு நிறுவனங்கள் இவர்களுக்கு மற்ற அரசியல் வாதிகளை போல இந்த விடயத்தில் என்ன லாபம் வந்துவிடபோகிறது..பொது நலத்தோடு தான் செய்கிறார்கள் என்ற எண்ணமே மேலோங்கும்.. சூடான் இனபடுகொலைகள், ஈராக்,ஆப்கானிஸ்தான்,போஸ்னியோ போன்ற இடங்களில் எல்லாம் இவ்வாறன பொது தொண்டு நிறுவனங்களின் சேவை(?) ஏகாதிபத்தியங்களுக்கு தேவை பட்டே வந்துள்ளன..

உண்மையில் யார் இந்த பகத் பாஸ்பர்?

நாம் என்ற அரசு சார பொது தொண்டு நிறுவனத்தின் தலைவர்(?) அல்லது ரோ உளவாளி..

இவ்வாறன பாதிரி இயக்கம் ஆரம்பிக்கலாமா ? அதற்கு அவர்கள் திருச்சபை அனுமதி அளிக்குமா என்பதெல்லாம் வேறு கதை..

உண்மையில் தமிழர் நாட்டில் எப்போது தனக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்ற ஆரம்பிக்கிறார்.. இதற்கு முன்னால் சில சிலுப்பு பொய்களை அவிழ்த்துவிட்டு கொண்டிருந்தார்..சூசை கடைசிநாள் அன்று பேசினாராம் ..பொந்தியா வெள்ளை கொடியோடு வரசொன்னதாம்.. வந்தார்களாம் சுட்டு கொன்றுவிட்டார்களாம்.. நீலி கண்ணீர் வடித்து ஊரை ஏமாற்றுகிறார்..

. இதில் நமக்கு உறுத்துகிற ஒரு கேள்வி இருக்கிறது. சரண்டையச் சொல்லி புலிகளுக்கு ஆலோசனை அல்லது நிர்ப்பந்தம் கொடுத்த மூன்றாம் தரப்பு யார்?

பல நாட்களாக தூக்கமின்றி, உணவின்றி, போராடும் வலுவின்றி, காயங்களுக்கு மருந்தின்றி உளவியல் ரீதியாக பலவீனமாகிப் போயிருந்த போராளிகளை சரணடையச் சொல்லி கடிதம் தயாரித்த பகத் பாஸ்பர் அக்கடிதத்தை யாருக்காக, யாருடைய வழிகாட்டுதலின் பேரில் தயாரித்தார்? தான் ஏதோ புலிகளுக்கு உதவி புரிந்ததாகவும், ஆனால் ராஜபட்சே சகோதர்கள் தன் துரோகம் இழைத்து நடேசனைக் கொன்று விட்டதாகவும் கூறுகிறார். அப்படியே வைத்துக் கொண்டாலும். கடைசி நேரத்தில் பகத் பாஸ்பர் தொடர்பு கொண்ட “அந்த டில்லி பெரியவர்” இந்த துரோகம் குறித்து என்ன சொன்னார்? அந்தப் பெரியவர் யார்? இந்தக் கபட நாடகம் குறித்து அந்தப் பெரியவருக்குத் தெரியாதா? தெரியாது என்று பகத் பாஸ்பர் தேவ சாட்சியம் கூறுகிறாரா? ஒரு கொடூரமான அரசியல் படுகொலையை நடத்திவிட்டு, தான் நடத்திய திரை மறைவு பேரத்தை இன்னமும் இரகசியமாக வைத்துக் கொள்ளும் உரிமை கஸ்பாருக்கு உண்டா?

இது போகட்டும் இவர்களுடைய அமைப்பின் கொள்கை என்ன என்று கேட்டுபாருங்களேன் பொந்திய அரசின் வெளியுறவு கொள்கையை மாற்ற போகிறார்களாம்!.. லால் பகதூர் சாஸ்திரி காலத்தில் இருந்தே இவர்களின் வெளியுறவு கொள்கையின் அம்சம் தெரிய ஆரம்பித்துவிட்டது(மலையக தமிழர்களை நாடற்றோர் ஆக்கியது)..காண்க காணோளி

(http://www.youtube.com/watch?v=dB0313W97d0)

நாம் அன்றிலிருந்து இன்றுவரை சுட்டிகாட்டுவது உள்ளூர் கொள்கையின் விரிவாக்கமே வெளியுறவு கொள்கையாகும்.இளித்தவாயன் பொண்டாட்டி ஊருக்கெல்லாம் வப்பாட்டி என்ற ரீதியில் தமிழன் போன இடமெல்லாம் அவனவன் போட்டு தாக்கிகொண்டிருக்கிறான்.. இதில் மருதமலை படத்தில் வரும் சிரிப்பு போலீஸ் வடிவேலு போல ..நம்மை அடித்து பலர் அரசியலில் முன்னுக்கு வந்துள்ளனர்.. பால்தாக்க்ரே வாட்டாள் நாகராசு.. இவர்கள் மீது எந்த நடவடிக்கை எடுக்கபட்டது?

ஆக வெட்டாத அருவாய்க்கு இந்த கும்பல் பிடி போடுகிறார்கள்.. இந்திய வெளியுறவு கொள்கையும் உள்ளுரவு கொள்கையும் இவர்கள் மட்டுமல்ல இவர்கள் பாட்டன் பூட்டன் வந்தாலும் மாற்ற முடியாது.. இது இவர்களுக்கு தெரியும். மக்களை முட்டாளாக்குவதற்கான முயற்சியே இது..

இவர்களுக்கு டெல்லி ஏகாதிபத்தியத்தால் கொடுக்க பட்ட பணி என்ன?

டெல்லி ஏகாதிபத்தியத்திற்கு எதிராக திரும்பிய மக்கள் தன்னார்வு போராட்டங்களை நீர்த்து போவசெய்வது

‘யாரையும் பகைத்துக்கொள்ளக் கூடாது. நாம் பகையுணர்வை அதிகப்படுத்துவதன் மூலம் அரை ஆதரவாளனாக இருப்பவனை முழு எதிர்ப்பாளனாக மாற்றிவிடுகிறோம்’

‘தாழாது, தாழாது... தமிழினம் தாழாது’, ‘தாழ்த்தாது தாழ்த்தாது, தமிழினம் யாரையும் தாழ்த்தாது’ என்று ஆளும்வர்க்கம் தயாரித்துக் கொடுத்த கழிவிரக்க வசனங்களைப்போல ‘யார் மனதும் புண்படாமல் போராடுவது எப்படி?’ என்று வகுப்பு எடுத்தார். அதற்காக இந்த பாதிரி தேர்ந்தெடுத்த போராட்ட வடிவம் ‘மௌன ஊர்வலம்’. ஈழப் போரை நடத்திய இந்தியாவுக்கு எதிராக அனைத்துத் தரப்பினரும் குரல் கொடுத்தபோதுதான் கஸ்பர் மௌன ஊர்வலம் நடத்தினார்.மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுக்காதீர்கள் அது ஆபத்தானது கெஞ்சி கூத்தாடி அவர்களிடம் நாம் மாற்றத்தை உருவாக்கலாம். இதுவே இந்த் போலிகளின் நிலைபாடானது எதற்காக நாம் அவரிடம் கெஞ்ச வேண்டும் ஏன் டெல்லி வாலாக்களுக்கு மூன்று நான்கு என்று இருக்கிறதா?தமிழனிடம் ஒன்றுதான் இருக்கிறதா? அல்லது அவர்களுக்கு தங்கத்தில் செய்யப்ட்டுள்ளதா? நம்மவர்களுக்கு தகரதில் செய்யபட்டுள்ளதா? இந்த நிலைமைக்கு நம்மை ஆளாக்கியோர் யார்? அதைபற்றி மூச்சுவிடக்கூடாது.. கெஞ்ச மட்டுமே செய்யவெண்டும். இது இந்த ஏகாதிபத்திய அடிப்பொடிகளின் நிலைப்பாடு..

எந்த வகை அரசியல் நிலைபாடும் அற்ற, டெல்லி ஏகாதிபத்தியத்தின் முகவரான இந்த பாஸ்பர் தமிழ் தேசிய சக்திகளுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். இந்த அடிப்படையிலேயே இவர் நக்கீரனில் இடம் பிடித்து எழுதிக் கொண்டிருக்கிறார்.சிவரூபனின் கடிதம் என்ற பெயரில் உடான்ஸ் கடித்தை தனக்கு தானே எழுதி போஸ்ட் செய்துவிட்டு தனக்கு வந்ததாகவே உதார் விடுகிறார்..ஈழ தமிழர்களின் ஆதரவு இணையதளங்களில் ஒன்றுக்கு கூட அந்த 'சிவ ரூபன்' கடிதம் அனுப்பவில்லை இவருக்கு மட்டுமே அனுப்பி வைத்துகொண்டிருக்கிறார்..இதை நாம் நம்ப வேண்டும்..

இதோ இப்போது அவரின் முழு முகமும் தெளிவாக தெரிந்துவிட்டது.. தற்காலத்தில் அவர் என்ன புளுகுகிறார் பாருங்கள்..

கடந்த வாரம் இந்திய பாராளுமன்ற இரு அவைகளிலும் ஈழத்தின் இன்றைய நிலை குறித்து நடந்த விவாதங்களைப் பார்த்தாலே போதுமானது. பாரதிய ஜனதா கட்சியின் சுஷ்மா ஸ்வராஜ், வெங்கைய நாயுடு இருவரின் உரைகளும் கண்களில் நீர்மல்க வைத்தன. வெறும் அரசியல்வாதிகளாக அவர்கள் பேசவில்லை. உண்மையில் தமிழர்களாக நின்று அவர்கள் பேசியது போலவே இருந்தது.

ஏன் இவ்வளவு காலம் ஈழ தமிழர்கள் கொல்லபடும் வேளையில் இவர்கள் இஞ்சி மரபா விற்று கொண்டிருந்தார்களா? என்று நாம் கேட்க கூடாது.. நமக்காக யாரோ அழுகிறார்கள் என்றால் சுழிவிரக்கதோடு நாம் அணுகவேண்டும்.. அதை ஏன் எதற்கு என்று ஆராய கூடாது.. இப்படித்தான் காலாதி காலம் இந்தி தேசியம் நம்மை காயடித்து வைதிருக்கிறது..எவன் டெல்லியில் இருந்து பிரச்சரத்திற்கு வந்தாலும் தமிழ்நாட்டில் தவறாமல் ஒன்றை கூறுவார்கள்.. தமிழர்கள் புத்திசாலிகள் கடுமையான உழைப்பாளிகள் என .. எல்லா மாநிலங்களிலும் அதே புளுகுகளைத்தான் அவிழ்த்து விடுகிறார்கள் என்பது பெரும்பாலோருக்கு உரைப்பதில்லை அதையே வேத வாக்காக எடுத்து கொண்டு தங்கள் எஜமானர்களின் புகழ் கூட்ட இந்த போலி கும்பல் கிளம்பிவிடுகிறது..

இவ்வாறன இந்தி தேசிய அடிப்பொடிகள்..ரோ உளவாளிகளை தமிழ் தேசிய தோழர்கள் சரியாக அடையாளம் காண்பதுடன் . டெல்லி ஏகாதிபத்தியத்திற்கு கொடிபிடிப்பவர்களை செருப்பால் அடித்து தமிழர் நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும்..

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

இவை யாவற்றுக்கும் ஒரு தொடர்பு இருக்கு போலிருக்கின்றது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=72169

http://www.yarl.com/forum3/index.php?showtopic=72081

  • கருத்துக்கள உறவுகள்

இவை யாவற்றுக்கும் ஒரு தொடர்பு இருக்கு போலிருக்கின்றது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=72169

http://www.yarl.com/forum3/index.php?showtopic=72081

தொடர்பும் இல்லை ஒன்றும் இல்லை தோழர் டெல்லியை தன்மானமுள்ள தமிழன் ஆளாதவரைக்கும் அல்லது பொந்தியா சிதறும் வரைக்கும் மாற்றம் இல்லை.......

இந்திய பயங்கரவாதிகளை காப்பாற்றும் முயற்சி?

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவையும் சீனாவையும் பற்றி விலாவாரியாக இராணுவ நேர்த்தியுடன் புட்டு புட்டு எழுதும் இவர் இந்தியா போரின் இறுதி நாட்களில் என்ன செய்தது என்றோ என்ன நிலைப்பாட்டில் இருந்தது என்பதையோ கட்டுரையில் அறியத் தரவில்லை. இதிலிருந்தே சாமியாரின் போலி வேடம் கலைகிறது. சீனாவையும் அமெரிக்காவையும் எதிரிகளாக எண்ணி கருவறுக்க நினைப்பது அவரின் தாய்நாட்டுப்பற்றின் வெளிப்படையே தவிர ஈழத்தமிழினத்தின் மேலுள்ள நட்போ நேசமோ அல்ல. மொத்தத்தில் இவர் ஒரு றோவின் கைக்கூலி. இந்திய ஆளும் வர்க்கத்தால் ஆட்டப்படும் கைப்பொம்மை.

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஒரு நாட்டினதும் மீது ஒரு நடவடிக்கையை எடுக்கும் போது அது ரகசியமாக வைத்திருப்பதற்கான அவசியம் அமெரிக்காவிற்க்குக் கிடையாது.

இது குழந்தைப் பிள்ளைகள் விளையாடும் விளையாட்டல்ல.

முதலில் ஐ. நா. வின் அனுமதியையும் நேச நாடுகளினது ஆதரவையும் பெற்றுக் கொள்ளத் தான் முயற்சிக்கும்.

சரி அவர்களின் ஆதரவும் அனுமதியும் கிடைக்கா விட்டால் கூட அமெரிக்கா ஒன்றை நினைத்தால் எவர் தடுத்தாலும் எடுத்த அடியைப் பின்னோக்கி நகர்த்த மாட்டார்கள்.(உதாரணம்: ஈராக்)

இந்தியாவின் நல்லுறவை நாடும் அமெரிக்கா ஒரு போதும் தான் ஈழத்தில் நடவடிக்கை எடுக்க முயற்சித்து இருக்க மாட்டாது.

தனது நீண்ட கையான இந்தியாவையே அங்கு அனுப்பியிருப்பார்கள்.

இந்திய வெளியுறவுக் கொள்கையை அறிந்தவர்களுக்கு அவர்களின் நாடகம் நன்றாகப் புரியும்.

இந்தியப் பாமர மக்களை வேண்டுமானால் கஸ்பார் அடிகளார் குழப்பலாம்.

ஏற்கனவே ஒரு(பாதிரி) வேசம் போட்ட அடிகளார் எதற்காக இன்னும் ஒரு வேசம் போடுகின்றார்?

வாத்தியார்

.....................

Edited by vathiyar

இக்கட்டுரைகளிலுள்ள சிலவைகளே போதும், இங்கு எமக்கு இந்தியாவின் நட்புறவு தேவை என்பவர்களை, லொயிக்கல் மூலமாக நிறுவி அடைமொழி செருகுவதற்கு!!

தமிழ் தேசிகரே, நீங்கள் சொல்வது உண்மைகள்! எமக்கு அழிவை தந்து கொண்டிருப்பது இந்தியா! அதில் மாற்றுக்கருத்து தேவையில்லை. ஆனால் எமக்கு இனியொரு வாழ்வு என்று ஒன்றிருக்குமாயின் அதனையும் இந்தியாவே வழங்க முடியும்!! ... இந்தியாவை தாண்டி வேறெந்த கொம்பனும் அங்கு காலடி எடுத்து வைக்க முடியாது! உண்மையை சொல்லப் போனால் இன்று இலங்கை இந்தியாவின் இன்னொரு மாகாணம் ஆக்கப்ப்ட்டிருக்கிறது.

எமக்கு 87ல் ஒரு சந்தர்ப்பம் வந்தது. நாம் அதனை கை நழுவ விட்டு விட்டோம். அப்போது இலங்கை ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர் குறிப்பிட்டது ... "நண்பர்களை அடிபட விட்டு, நான் இன்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்." .... அன்று நாம் இந்தியாவுடன் உடன்பாட்டு அரசியலை நடாத்தி, அவர்களை அடிபட விட்டு விட்டு நாம் வேடிக்கை பார்ப்பதை தவிர்த்து விட்டோம்.

48இலிருந்து ஜனநாயக வழியில் நடைபெற்ற போராட்டங்கள், ஆயுதமுனையில் சிங்களத்தினால் அடக்கப்பட்டதே, தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தின் பிறப்பாகும். எமது இலக்கு சரியாகவே இருந்தது. போராட்டத்தில் அறம் இருந்தது. அதனை மறப்பதற்கில்லை. ஆனால் நாம் கால ஓட்டத்துக்கு ஏற்ப நம்மை மாற்றி அதனூடு பயணிக்க தவறி விட்டோம். .......அதுதான் இன்றைய அழிவு!!!

எமக்கு நண்பர்கள் என்று ஒருவரும் இருக்கவில்லை. தமிழக உறவுகளே கை கொடுப்பார்கள் என்று உறுதியாக நம்பி இருந்தோம். கலைஞரின் ஒவ்வொரு அறிவிப்பும் ஆரம்பத்தில் எமது காதுகளில் தேனாக ஒலித்தது. இறுதியில் கலைஞரே இலங்கையில் யுத்த நிறுத்தம் ஏற்பட்டு விட்டதாக கூறி, எம் அழிவிற்கு ஆதாரமானார். என்ன செய்வது தமிழக மக்களை நோவதா?? அங்கு மாறி மாறி ஆட்சிக்கு வரும் தி.மு.கவோ, அ.தி.மு.கவோ ஈழத்தமிழர்கள் நிலைப்பாட்டில் புதிராக இருக்கிறார்கள். இதற்கு மேலாக அங்கு எமது ஆதரவுக்கரங்களாக இருப்பவர்கள் ஒன்றும் செய்ய முடியாது.

இன்றைய மேற்குலகில் நடைபெறும் சில போராட்டங்கள், அந்த அந்த நாடுகளின் அரசுகள் சில அனுதாபங்களைப் பெற்றாலும், இந்தியா எனும் சந்தையின் முன் எம்மை ஒருவரும் பகிரங்கமாக ஆதரிக்கவோ இல்லை மறைனுகமாக ஆதரிக்கவோ தயாரில்லை.

நாம் காலா காலாமாக, எம்மை அழித்த இந்திய எதிர்ப்புவாதம் பேசிக் கொண்டிருக்கலாம். அதன் மூலம் அங்குள்ள எம் மக்கள் சிங்களத்தினால் அழிவதை/அழிக்கப்படுவதை தடுக்கலாமா? இல்லை பழையவைகளை மறந்து(இந்தியா எமக்கு செய்தவைகள் மட்டுமல்ல, நாமும் சிலவற்றை செய்து விட்டோம்), இந்திய அரசின் கொள்கையில் மாற்றம் வரவேண்டும் என்பதற்காகவும், எம்மக்களின் எதிர்காலத்துக்காகவும் இந்திய உறவை நாடிச் செல்வது சாணக்கியமா?????

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஒரு நாட்டினதும் மீது ஒரு நடவடிக்கையை எடுக்கும் போது அது ரகசியமாக வைத்திருப்பதற்கான அவசியம் அமெரிக்காவிற்க்குக் கிடையாது.

இது குழந்தைப் பிள்ளைகள் விளையாடும் விளையாட்டல்ல.

முதலில் ஐ. நா. வின் அனுமதியையும் நேச நாடுகளினது ஆதரவையும் பெற்றுக் கொள்ளத் தான் முயற்சிக்கும்.

சரி அவர்களின் ஆதரவும் அனுமதியும் கிடைக்கா விட்டால் கூட அமெரிக்கா ஒன்றை நினைத்தால் எவர் தடுத்தாலும் எடுத்த அடியைப் பின்னோக்கி நகர்த்த மாட்டார்கள்.(உதாரணம்: ஈராக்)

இந்தியாவின் நல்லுறவை நாடும் அமெரிக்கா ஒரு போதும் தான் ஈழத்தில் நடவடிக்கை எடுக்க முயற்சித்து இருக்க மாட்டாது.

தனது நீண்ட கையான இந்தியாவையே அங்கு அனுப்பியிருப்பார்கள்.

இந்திய வெளியுறவுக் கொள்கையை அறிந்தவர்களுக்கு அவர்களின் நாடகம் நன்றாகப் புரியும்.

இந்தியப் பாமர மக்களை வேண்டுமானால் கஸ்பார் அடிகளார் குழப்பலாம்.

ஏற்கனவே ஒரு(பாதிரி) வேசம் போட்ட அடிகளார் எதற்காக இன்னும் ஒரு வேசம் போடுகின்றார்?

வாத்தியார்

.....................

கனிமொழியை கேட்டால் தான் தெரியும் தோழர் வாத்தியார்... நாமும் ஏதோ செய்தோம் என சால் சாப்பு காட்ட இருக்கலாம் இல்லையா? அத்தோடு சிவரூபன் கடித்தத்தில் சொல்கிறாராம் இந்தியா நாளைக்கு இம் என்றால் மறுபடி போர்மூளுமாம் ... உடனே இழந்த பகுதிகளை பிடித்துவிடுவார்களாம்... குண்டு தயாரித்து கொடுத்தவன் மீது போருக்கு உதவி ஒத்தாசை செய்தவர்கள்மீது அவர்களால் காயம் பட்டவர்கள் உடனுக்குடன் பாசம் வருவது இப்பத்தான் நான் முதல் முறையா பார்க்கிறேன் தோழர் .....

இக்கட்டுரைகளிலுள்ள சிலவைகளே போதும், இங்கு எமக்கு இந்தியாவின் நட்புறவு தேவை என்பவர்களை, லொயிக்கல் மூலமாக நிறுவி அடைமொழி செருகுவதற்கு!!

தமிழ் தேசிகரே, நீங்கள் சொல்வது உண்மைகள்! எமக்கு அழிவை தந்து கொண்டிருப்பது இந்தியா! அதில் மாற்றுக்கருத்து தேவையில்லை. ஆனால் எமக்கு இனியொரு வாழ்வு என்று ஒன்றிருக்குமாயின் அதனையும் இந்தியாவே வழங்க முடியும்!! ... இந்தியாவை தாண்டி வேறெந்த கொம்பனும் அங்கு காலடி எடுத்து வைக்க முடியாது! உண்மையை சொல்லப் போனால் இன்று இலங்கை இந்தியாவின் இன்னொரு மாகாணம் ஆக்கப்ப்ட்டிருக்கிறது.

எமக்கு 87ல் ஒரு சந்தர்ப்பம் வந்தது. நாம் அதனை கை நழுவ விட்டு விட்டோம். அப்போது இலங்கை ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர் குறிப்பிட்டது ... "நண்பர்களை அடிபட விட்டு, நான் இன்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்." .... அன்று நாம் இந்தியாவுடன் உடன்பாட்டு அரசியலை நடாத்தி, அவர்களை அடிபட விட்டு விட்டு நாம் வேடிக்கை பார்ப்பதை தவிர்த்து விட்டோம்.

48இலிருந்து ஜனநாயக வழியில் நடைபெற்ற போராட்டங்கள், ஆயுதமுனையில் சிங்களத்தினால் அடக்கப்பட்டதே, தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தின் பிறப்பாகும். எமது இலக்கு சரியாகவே இருந்தது. போராட்டத்தில் அறம் இருந்தது. அதனை மறப்பதற்கில்லை. ஆனால் நாம் கால ஓட்டத்துக்கு ஏற்ப நம்மை மாற்றி அதனூடு பயணிக்க தவறி விட்டோம். .......அதுதான் இன்றைய அழிவு!!!

எமக்கு நண்பர்கள் என்று ஒருவரும் இருக்கவில்லை. தமிழக உறவுகளே கை கொடுப்பார்கள் என்று உறுதியாக நம்பி இருந்தோம். கலைஞரின் ஒவ்வொரு அறிவிப்பும் ஆரம்பத்தில் எமது காதுகளில் தேனாக ஒலித்தது. இறுதியில் கலைஞரே இலங்கையில் யுத்த நிறுத்தம் ஏற்பட்டு விட்டதாக கூறி, எம் அழிவிற்கு ஆதாரமானார். என்ன செய்வது தமிழக மக்களை நோவதா?? அங்கு மாறி மாறி ஆட்சிக்கு வரும் தி.மு.கவோ, அ.தி.மு.கவோ ஈழத்தமிழர்கள் நிலைப்பாட்டில் புதிராக இருக்கிறார்கள். இதற்கு மேலாக அங்கு எமது ஆதரவுக்கரங்களாக இருப்பவர்கள் ஒன்றும் செய்ய முடியாது.

இன்றைய மேற்குலகில் நடைபெறும் சில போராட்டங்கள், அந்த அந்த நாடுகளின் அரசுகள் சில அனுதாபங்களைப் பெற்றாலும், இந்தியா எனும் சந்தையின் முன் எம்மை ஒருவரும் பகிரங்கமாக ஆதரிக்கவோ இல்லை மறைனுகமாக ஆதரிக்கவோ தயாரில்லை.

நாம் காலா காலாமாக, எம்மை அழித்த இந்திய எதிர்ப்புவாதம் பேசிக் கொண்டிருக்கலாம். அதன் மூலம் அங்குள்ள எம் மக்கள் சிங்களத்தினால் அழிவதை/அழிக்கப்படுவதை தடுக்கலாமா? இல்லை பழையவைகளை மறந்து(இந்தியா எமக்கு செய்தவைகள் மட்டுமல்ல, நாமும் சிலவற்றை செய்து விட்டோம்), இந்திய அரசின் கொள்கையில் மாற்றம் வரவேண்டும் என்பதற்காகவும், எம்மக்களின் எதிர்காலத்துக்காகவும் இந்திய உறவை நாடிச் செல்வது நல்லதா?????

அடுத்தவன் வந்துதான் விடுதலை பெற்றுதருவான்... கெஞ்சுவதுதான் ஒரே வழி என்றால் எதுவும் கூறமுடியாது தோழர் ..... அவர்களை போல அறிவியல் ....அணுக்கரு... வேதியல்.. பொருளியல்... என அனைத்திலும் மீண்டு எழுந்து தாயகத்தினை ஈழத்தினை கட்டிஎழுப்புவதுதான் ஒரே வழி..... இல்லையெனில் டெல்லியின் தும்மலுக்கு கெல்லாம் பதில் சொல்லவேண்டி இருக்கும்...

இந்தியாவை நம்புபவர்க்ளுக்கு காசுமீர் ...நாகலாந்து சிக்கல் தீரும் வரை ஈழ விடுதலைக்கு வாய்ப்பு இல்லை... அத்தோடு இந்திய மாநிலங்கள் போல ஒரு தீர்வு வருமா எனபதே சந்தேகம் தான்.... வேண்டுமானால் கெஞ்சி கொண்டே இருக்கலாம் .... ஈழத்தோழர்கள் கெஞ்சி கொண்டே இருப்பதில் தான் இந்தியத்தின் அரசியல் அடங்கியுள்ளது...2000 வருடமோ 3000 வருடமோ.... அமைதி எப்போதும் திரும்ப வாய்ப்பு இல்லை.... அமைதியாக இருந்து சீங்கபூர் போல துளிர்த்து எழுந்துவிட்டால் இவர்கள் என்ன செய்வார்கள்???? வல்லரசு கனவு என்ன ஆகும்????

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கஸ்பாருக்கு இருக்கும் திறமைக்கு படத்திற்கு கதை எழுதலாம். கம்முனாட்டி என்ன என்ன மாதிரி கதையெல்லாம் சொல்லுறான்.

கஸ்பாருக்கு இருக்கும் திறமைக்கு படத்திற்கு கதை எழுதலாம். கம்முனாட்டி என்ன என்ன மாதிரி கதையெல்லாம் சொல்லுறான்.

:D:D:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனிமொழியை கேட்டால் தான் தெரியும் தோழர் வாத்தியார்... நாமும் ஏதோ செய்தோம் என சால் சாப்பு காட்ட இருக்கலாம் இல்லையா? அத்தோடு சிவரூபன் கடித்தத்தில் சொல்கிறாராம் இந்தியா நாளைக்கு இம் என்றால் மறுபடி போர்மூளுமாம் ... உடனே இழந்த பகுதிகளை பிடித்துவிடுவார்களாம்... குண்டு தயாரித்து கொடுத்தவன் மீது போருக்கு உதவி ஒத்தாசை செய்தவர்கள்மீது அவர்களால் காயம் பட்டவர்கள் உடனுக்குடன் பாசம் வருவது இப்பத்தான் நான் முதல் முறையா பார்க்கிறேன் தோழர் .....

அடுத்தவன் வந்துதான் விடுதலை பெற்றுதருவான்... கெஞ்சுவதுதான் ஒரே வழி என்றால் எதுவும் கூறமுடியாது தோழர் ..... அவர்களை போல அறிவியல் ....அணுக்கரு... வேதியல்.. பொருளியல்... என அனைத்திலும் மீண்டு எழுந்து தாயகத்தினை ஈழத்தினை கட்டிஎழுப்புவதுதான் ஒரே வழி..... இல்லையெனில் டெல்லியின் தும்மலுக்கு கெல்லாம் பதில் சொல்லவேண்டி இருக்கும்...

இந்தியாவை நம்புபவர்க்ளுக்கு காசுமீர் ...நாகலாந்து சிக்கல் தீரும் வரை ஈழ விடுதலைக்கு வாய்ப்பு இல்லை... அத்தோடு இந்திய மாநிலங்கள் போல ஒரு தீர்வு வருமா எனபதே சந்தேகம் தான்.... வேண்டுமானால் கெஞ்சி கொண்டே இருக்கலாம் .... ஈழத்தோழர்கள் கெஞ்சி கொண்டே இருப்பதில் தான் இந்தியத்தின் அரசியல் அடங்கியுள்ளது...2000 வருடமோ 3000 வருடமோ.... அமைதி எப்போதும் திரும்ப வாய்ப்பு இல்லை.... அமைதியாக இருந்து சீங்கபூர் போல துளிர்த்து எழுந்துவிட்டால் இவர்கள் என்ன செய்வார்கள்???? வல்லரசு கனவு என்ன ஆகும்????

புரட்சி உங்களின் கருத்தை நிச்சயமாகாக ஆதரிக்கிறேன். ராஜீவ் கொலையை சாட்டாக வைத்து கடந்த 30 வருடங்களாக எமது இனத்தை அழித்தவர்கள் எமக்கு திரும்பவும் உதவுவார்கள் என என்னால் நம்ப முடியவில்லை. வாழ்க்கையின் அனுபவங்களினூடு தான் எமது முடிவுகள் இருக்க வேண்டும்.

துரதிஸ்ட வசமாக எமக்காக குரல் கொடுக்க கூடி ஒரு இனிய நண்பன் இல்லை.இந்தியாவை விட தூய நண்பர்களை நாம் உருவாக்கலாம்.

இந்தியாவை சுற்றி உள்ள நாடுகளில் யார் தான் இந்தியாவின் நண்பர்கள் என்று பார்த்தால் ஒருவர் கூட இல்லை.அந்த அளவுக்கு இந்தியாவின் இரட்டை வேடம் உள்ளது.

Edited by nunavilan

இந்தியாவின் யனநாயக முகமூடி மெல்ல மெல்ல கிழியத் தொடங்கும் வேளையில் இந்த மதகுரு மற்றும் சிலரையும் தன்னை காப்பாற்றிக் கொள்ள விபச்சாரி சோனியா தலமையிலான இந்திய பாசிசம் களத்திலே இறக்கியுள்ளது.

இந்தியா உடையும்வரை அல்லது முற்றாக பலமிழந்து போகும்வரை இந்தியா தொடர்ந்தும் 'ஈழத்தமிழர்;' விரோதப்போக்கையே கொண்டிருக்கும்.இதில் என்றைக்கும் மாற்றமிருக்காது.இன்னும் எங்களில் உள்ள 'சில' இந்திய வழிவந்த விசுவாசிகள் இந்திய சார்பான கருத்துக்களை பொது இடங்களிலும் பொது தகவல் பரிமாற்று தளங்களிலும் ஊடுருவி பரப்பி வருகிறார்கள்.இது இனியும் தொடர்வதை நிறுத்துவது ஒவ்வொரு ஈழத் தமிழனும் கொண்டிருக்கும் இந்திய பாசிசம் பற்றிய அறிதலிலேயே தங்கியுள்ளது.

அடிமைப் புத்தி உள்ளவர்களுக்கு இந்தியா தான் கடவுள்.

தொடர்பும் இல்லை ஒன்றும் இல்லை தோழர் டெல்லியை தன்மானமுள்ள தமிழன் ஆளாதவரைக்கும் அல்லது பொந்தியா சிதறும் வரைக்கும் மாற்றம் இல்லை.......

நன்றி நண்பரே . இல்லையென்றால் என்னையும் சந்துல வச்சி சிந்து பாடியிருப்பார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

:D இவன் ஒரு பாம்பு. பாதிரியார் வேடத்தில் வலம் வரும் இன்னொரு இந்திய மேலாதிக்க வாதத்தின் தொண்டன். இறுதிக் காலத்தில் இவன் செய்த சுத்து மாத்துக்கள் ஏராளம்.

சரணடைதல் நாடகத்தில் முக்கிய பாத்திரமேற்று நடித்தவர். தில்லி முக்கிய புள்ளியின் அறிவுறுத்தலின்படி தலைவர்களைக் கொல்ல வசனம் பேசியவர்.

நெல்லைய்யன், இந்தியா செய்ததெல்லாம் பிழை என்கிறீர்கள், ஆனால் அதன்மூலம் தாம் எமக்கு வாழ்வும் பிறக்கவேண்டும் என்றும் சொல்கிறீர்கள். ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லா விடயங்களல்லவா இவை இரண்டும்??

இந்தியாமூலதான் எமக்கு வாழ்வென்றால் அது எப்போது வரப்போகிறது? இன்னும் ஏன் காலதாமதம்?? புலிகலை அழிப்பதுதான் நோக்கமென்றால், ஏன் அதற்குப்பின்னரான காலத்திலும் தமிழர் விரோதப் போக்கை இன்னும் கடைப்பிடிக்கிறது?? ஐ.நா மன்றத்தில் சிங்கலவனுக்கு கவர் குடுக்கிறதில இருந்து அவனுக்கு மாமா வேலை செய்வது வரை(கொழும்பு சர்வதேச இந்தியத் திரைப்பட விழா கூட இந்திய அரசின் உந்துதலால்த்தான் நடக்கிறதென்பது உற்பட)விளக்குப் பிடித்துக்கொண்டுதானே ஐய்யா இருக்கிறது??!! எப்படி அவர்கலை நம்புவதென்று தெரியவில்லையே?? நீங்கள் சொல்லுங்கல் பார்க்கலாம்.

ஆனால் நீங்கள் முன்னர் சொல்லிய ஒரு வசனம் பிரமாதம், அருகில் நண்பனை உருவாக்குவதை விட்டு, பல்லாயிரம் மயில் தள்ளி நண்பர்களை உருவாக்கப் பார்த்தோம் என்பது. ஆனால் சின்னச் சந்தேகம், அருகிலிருப்பவன் எப்போதாவது தன்னை எமது நண்பனாகக் காட்டிக் கொண்டானா என்பது.

இந்திரா அம்மையார் இருந்தகாலம் வேறு, அதற்குப்பிறகு வேறு....எல்லாம் எங்கட தலை விதி!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இத்தக்கட்டுரையின் மீதிப்பாகம் எழுதும் முன், இவர் பைபிள் மேல் ஆணையாக நான் M K நாராயணனிடமோ, அல்லாது காந்தி குடும்பத்திடமோ காசுவாங்கவில்லையென்று சத்தியப்பிரமாணம் நக்கீரனூடாக செய்யட்டும் பாப்பம்.

சிவசங்கர் மேனன் இவரிட்ட சொல்லிட்டுதான் அமெரிக்கா போனவர்.

அமெரிக்காகாறன் தன் திட்டத்தை ரஜபக்சா சேடைக்குடும்பததாரிட்ட சொன்னவனாம் :D என்ன புலுடாவெடா இது..

ம் ம் ..

எம் பாசமிகு மக்களின் உயிர், உடமை, உணர்வுகளின் பேரழிவு இன்று பலரும் வியாக்கியானம் தரும் நிகழ்வாக மாறிவிட்டது. இந்தியா எம் மக்களின் வாழ்வை சிதைத்தது. நேரடியாகவும் மறைமுகமாகவும் இன்றும் அதையே தொடர்கிறது. உண்மையில் இந்தியா தமிழர் மீது அக்கறை உள்ள நாடு எனில் 1983ல் நடைபெற்ற இனக் கலவரத்தின் பின் தனது அரசியல் பலத்தை பிரையோகித்து ஈழத்தில் அமைதியை கொண்டுவந்திருக்கும். மாறாக ஈழத்தை என்றுமே சமநிலை அடையாமல் எப்படி வைத்திருப்பது என்பதில் முழுக்கவனத்தையும் செலுத்தி திட்டங்களை வரைந்து வருகிறது. புலிகள் அதற்கு பெரும் தடையாக எழுந்த போது என்ன விலை கொடுத்தும் அதை நிர்மூலமாக்கியது. சீனா என்பது இந்திய சிறீலங்கா கூட்டணிகள் மக்களுக்கு காட்டும் பூச்சாண்டி. ராஜீவ் கொலை இந்திய தமிழர்களுக்கு றோ போட்ட வாய்ப்பூட்டு.

அமெரிக ராணுவ நடவடிக்கைகள் ஒன்றும் விளையாட்டல்ல. ஈராக் மீது நடவடிக்கை தொடங்குமுன் அதிபர் சதாமுடன் அமெரிக்க அதிகார வர்க்கம் விளக்கி கூறியதா? அமெரிக்கா ஒரு நடவடிக்கையை ஆரம்பிக்க போவதாக செய்தி கசியும் தருணம் அந்த நடவடிக்கையில் பாதி நிறைவேறி இருக்கும்.

இறுதிப்போரின் போது இந்திய ஆளும் வர்க்கம் சம்பந்தப்பட்ட அனைத்து கோப்புக்களும் செம்மையாக தயாரிக்கபட வேண்டும். தக்க தருணத்தில் காந்தி தேசம் பதிலளிக்க வேண்டும்.

நாம் தமிழர். இந்திய, இலங்கை கூட்டணிகளின் துரோகம் என்றும் எம் நெஞ்சில் இருக்கும் என உறுதி பூணுவோமாக.

தானாகவே முன்வந்து ஊக்கமும் உறுதுணையும் தந்தது சீனா. போரினை இத்துணை கொடூர மாக முடிவுக்குக் கொண்டுவருவதனால், எதிர்காலத்தில் அனைத்துலக அளவில் ஏற்படும் அத்தனை நெருக்கடிகள்... சங்கடங்களிலிருந்தும் ராஜபக்சே சகோதரர்களைக் காப்பாற்றும் வாக்குறுதியினை சீனா கொடுத்தது. போரில் தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை பயன்படுத்திட பச்சைக் கொடி காட்டியதும் சீனாதான்.

இவனின் கருத்தை எல்லாம் இவ்வளவு காலமும் கேட்ட என்னை செருப்பலா அடிக்க வேணும்

  • கருத்துக்கள உறவுகள்

கிந்தியாவே சனநாயக முகம் தரித்த பயங்கரவாத நாடாகும். காங்கிரஸ் விசுவாசியான இவர் கிந்தியாவினது விசவாயுத் தாக்குதல் மற்றும் தமிழின அழிப்பு ஆகியவைகளை மறைக்க இந்தக் கட்டுரையை கட்டியுரைத்திருக்கிறார். கருநாய்நிதியிடம் தமிழகத்தை கட்டுப்படுத்துமாறு கூறிவிட்டு, பிரணாப் முகர்ஜி மகிந்தவுக்கு படைவள ஆளணி தொழில் நுட்பம் விசவாயு என்று எல்லாவற்றையும் கொடுத்துத் தமிழினத்தை அழித்துப் பிணக்காடாகவும், எஞ்சியோரை அகதிகளாகவும் மாற்றித் தனது வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்கிறது. சின்னஞ சிறிய தமிழீழத்தை அழித்த முதன்மை நாடெனில் அது கிந்தியாவேயாகும். ஆனால் வரலாறு ஒருநாள் மாறும். ஈழம் மலர்வதே கிந்தியாவுக்குக் காப்பு. இல்லையேல் சீனாவோட சேர்ந்து ஆப்புத்தான் சிறிலங்கா வெகுவிரைவிலை அடிக்கும். அப்ப தெரியவரும். கிந்தியா மறைந்து தமிழ்நாடு, அதுகாங்கிரஸ் விசுவாசியான கருநாய்நிதி இருக்கும்வரை சரிவராது. ஆனால் கேரளநாடு, கன்னடநாடு, நாகலாந்து, மணிப்புரி இப்பிடி எல்லாம் துண்டாவது உறுதி. பெரும் வல்லரசான சோவியத் ஒன்றியம் இன்று இல்லை. சனநாயகத்தின் பெயரால் ஒரு நேர உணவுக்குக் கூடக் கதியற்ற பெரும் ஏழைகளையும் வீடற்றவர்களையும் கொண்ட நாடான கிந்தியா ஒழிவதே கிந்தியாவிலுள்ள இனங்களுக்கு நன்மையாகும்.

பாதர் நீங்களுமா? பாதர் நம்பவே முடியலை பாதர்.

எம் பாசமிகு மக்களின் உயிர், உடமை, உணர்வுகளின் பேரழிவு இன்று பலரும் வியாக்கியானம் தரும் நிகழ்வாக மாறிவிட்டது.

இந்தியா எம் மக்களின் வாழ்வை சிதைத்தது. நேரடியாகவும் மறைமுகமாகவும் இன்றும் அதையே தொடர்கிறது.

உண்மையில் இந்தியா தமிழர் மீது அக்கறை உள்ள நாடு எனில் 1983ல் நடைபெற்ற இனக் கலவரத்தின் பின் தனது அரசியல் பலத்தை பிரையோகித்து ஈழத்தில் அமைதியை கொண்டுவந்திருக்கும். மாறாக ஈழத்தை என்றுமே சமநிலை அடையாமல் எப்படி வைத்திருப்பது என்பதில் முழுக்கவனத்தையும் செலுத்தி திட்டங்களை வரைந்து வருகிறது. புலிகள் அதற்கு பெரும் தடையாக எழுந்த போது என்ன விலை கொடுத்தும் அதை நிர்மூலமாக்கியது.

சீனா என்பது இந்திய சிறீலங்கா கூட்டணிகள் மக்களுக்கு காட்டும் பூச்சாண்டி. ராஜீவ் கொலை இந்திய தமிழர்களுக்கு றோ போட்ட வாய்ப்பூட்டு.

நாம் தமிழர். இந்திய, இலங்கை கூட்டணிகளின் துரோகம் என்றும் எம் நெஞ்சில் இருக்கும் என உறுதி பூணுவோமாக.

உண்மை!

Edited by vettri-vel

நாம் தமிழர். இந்திய, இலங்கை கூட்டணிகளின் துரோகம் என்றும் எம் நெஞ்சில் இருக்கும் என உறுதி பூணுவோமாக.

நாம் தமிழர்கள் இந்தியாவின் துரோகத்த இலகுவாக மறந்து விடுவோம்,காரணம் இந்து என்ற கருத்து எம்மில் ஆழமாகவே பதியப்பட்டுள்ளது.விரும்பியோ,விரும்பாமலோ நாம் எல்லாம் அந்த கொள்கைக்கு எம்மை அறியாமலே ஆட்கொள்ளப்பட்டுள்ளோம்.புலத்திலும் சரி களத்திலும் சரி உள்ள தமிழர்கள் இந்தியாவுடன் ஒரு பாசம் வைத்துள்ளார்கள்.

சிங்களவின் துரோகத்தை மறக்கமாட்டார்கள் ஆனால் இந்தியாவின் துரோகத்தை மற்ந்துவிடுவார்கள்.

சிங்களவர்களுடன் எம்மவருக்கு எந்த ஒரு பிணைப்பும் இல்லை .ஒரே தீவை சேர்ந்தவர்கள் என்ற பிணைப்பைவிட.

Edited by Jil

இருபது நாடுகளில் ஒத்துழைப்புடனேயே தமிழரின் ஆயுதப் போராட்டம் ஒழிக்கப்பட்டது என்பது கஸ்பார் அடிகளாருக்குத் தெரியாமலிருக்காது. இந்தியா, அமெரிக்கா, சீனாவும் அதற்குள் அடக்கம்.

இருந்தாலும் அவர் காப்பாற்ற வெளிக்கிட்டார். இவர் தடுத்துவிட்டார் என்பதெல்லாம் கொஞ்சமும் தமிழருக்கு உலக அரசியலே தெரியாது என்பது போல் கட்டுரை எழுதியிருக்கிறார்.

நாம் தமிழர்கள் இந்தியாவின் துரோகத்த இலகுவாக மறந்து விடுவோம்,காரணம் இந்து என்ற கருத்து எம்மில் ஆழமாகவே பதியப்பட்டுள்ளது.விரும்பியோ,விரும்பாமலோ நாம் எல்லாம் அந்த கொள்கைக்கு எம்மை அறியாமலே ஆட்கொள்ளப்பட்டுள்ளோம்.புலத்திலும் சரி களத்திலும் சரி உள்ள தமிழர்கள் இந்தியாவுடன் ஒரு பாசம் வைத்துள்ளார்கள்.

சிங்களவின் துரோகத்தை மறக்கமாட்டார்கள் ஆனால் இந்தியாவின் துரோகத்தை மற்ந்துவிடுவார்கள்.

சிங்களவர்களுடன் எம்மவருக்கு எந்த ஒரு பிணைப்பும் இல்லை .ஒரே தீவை சேர்ந்தவர்கள் என்ற பிணைப்பைவிட.

ஈழத் தமிழர் இந்திய பிணம் தின்னி நாய்களின் துரோகத்தை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். எனவே கனவு காண வேண்டாம்.

இந்துக்கள் அழியும் பொது, இந்து ஆலயங்கள் அழிக்கப்படும் போது, கூட இருந்து அழித்த, அழிக்க ஒத்துழைப்பு நல்கிய "இந்து" இந்திய பிணம் தின்னி நாய்களின் துரோகத்தை ஈழத் தமிழர் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

பாகிஸ்தானை மன்னிக்கலாம், சீனாவை மன்னிக்கலாம், ஏனைய தமிழருடன் நேரடி உறவில்லாத நாடுகளை மன்னிக்கலாம். ஆனால் உறவான

இந்துக்கள் அழியும் பொது, இந்து ஆலயங்கள் அழிக்கப்படும் போது, கூட இருந்து அழித்த, அழிக்க ஒத்துழைப்பு நல்கிய "இந்து" இந்திய பிணம் தின்னி நாய்களின் துரோகத்தை ஈழத் தமிழர் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

இந்தியா சிதையவேண்டும், அழியவேண்டும் என்பதே தன்மானம், ரோஷம், சகோதர தமிழின உணர்வுள்ள ஒவ்வொரு ஈழத்தமிழனின் நாளந்த பிரார்த்தையாகும். அதர்மம் அழிந்தால் தான் தர்மம் தலை எடுக்க முடியும்.

குறிப்பு: எம்மைப் பொறுத்தவரை எமது இரத்த உறவுகளான தமிழ் நாட்டவரை (ஏன் மாராட்டியரை, கன்னடத்தவரை, தெலுங்கரை, வங்க தேசத்தவரை, பஞ்சாபியரை/சீக்கியரை) இந்தியன் என்ற இழிமக்கள் கூட்டத்தில் ஒருவராக, இந்திய பிணம் தின்னி நாய்களில் ஒருவராக நாம் பார்க்கவில்லை. இந்தியா என்ற மாயையில் இருந்து இவர்கள் விடுபடவேண்டும்.

Edited by ஆராவமுதன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.