Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனிதாபிமானம் இல்லாதா மனிதர்கள்

Featured Replies

கடந்த வாரத்தில் ஒரு நாள் நான் லண்டனில் உள்ள லூசியம் பகுதியில் ஒரு உணவு விடுதிக்கு போயிருந்தேன்.

அங்கு நடந்த சம்பவம் என் மனசை பெரிதும் பாதித்திருந்தமையால் நான் எப்படியும் அந்த சம்பவத்தை எழுதி இந்த பகுதியில் இணைக்க வேண்டும் எண்ணி இருந்தேன். நான் பார்த்த சம்பவம் மாதிரி நிச்சயம் உங்கள் வாழ்விலும் நடந்திருக்கும், உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளை முன் வையுங்கள்... மற்றவர்களுக்கு உதவியாகவே இருக்கும்... வெளி நாட்டில் இருக்கும் சனம் பலர் இப்படி கஸ்ரப்படுகிறார்கள் என்று மற்றவர்களுக்கும் தெரியவேண்டும்...

அறுபது வயசு மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர், முப்பத்தைஞ்சு வயசு மதிக்கத்தக்க ஒரு

மனிதனிடம் ( அதாவது அந்தக்கடையின் முதாளியிடம்) கெஞ்சி கொண்டிருந்தார்.

" தம்பி ! நான் பண்ணியது தப்பு தான். தயவு செய்து காசை கொடுங்கள். இனிமேல் நான் இப்படி தப்பு பண்ணமாட்டேன். இந்த முறை மட்டும் மன்னித்துவிடுங்கள்" என்று பெரியவர் கெஞ்ச, "எனக்கு முன்னாலே நிக்காதே. முதல்ல கடையைவிட்டு போய்விடு" என்று மரியாதை இல்லாமல் பேசி கொண்டிருந்தான் அந்த நடுத்தரவயது மனுஷன்.

அந்த பெரியவர் தன்னிலை உணர்ந்து அழுது கொண்டிருக்க, அந்த உணவகத்துக்கு வந்திருந்த வாடிக்கையாளர்கள், "ஏன் அவர் உங்களை இப்படி ஏசுகிறார், நீங்கள் எதற்கு அழுகிறீர்கள், அப்படி என்ன தான் தப்பு செய்தீர்கள்" என்று வினாவ, "அது வந்து...நான் முதலாளிக்கு தெரியாமல், அரசாங்க உதவி பணம் எடுத்தது தான் தப்பு...நான் பண்ணியது தப்புதான். ஆனால் இந்த முதலாளி மணித்தியாலத்துக்கு இரண்டு பவுண்ட் படி தருவதாக தான் என்னிடம் ஒப்பந்தம் செய்து, நான் கிழமைக்கு ஐம்பத்திரண்டு மணித்தியாலம் செய்திருக்கிறேன், அந்த பணத்தை கூட கொடுக்காமல், இந்த தப்பை சொல்லி என்னை போக சொல்லுறார்" என்று விளக்கம் அளித்தார்" அந்த முதியவர்.

"அதையும்விட ஒரு நாளைக்கு ஒரு மணித்தியாலம் ஓய்வு எடுக்கலாம் என்று சொல்லியும் ஓய்வெடுக்க கூட விடாமல் நாள் முழுக்க நின்றபடியே இந்த தள்ளாத வயதில் வேலை செய்தும்.. அந்த பணத்தை கூட தர மறுத்து என்னை கேவலமாக திட்டுறாரே என் முதலாளி ..எனக்கு இந்த நாட்டில் வதிவிட அனுமதியும் இல்லாமல் வேறு இடங்களில் வேலையும் இல்லாமல் அலையும்..என் நிலையை உணர்ந்து தான் நான் அழுகிறேன்" என்று கூறிய படியே விக்கி விக்கி அழுதார்.

எனக்கு அதற்கு மேல் அந்த கடையில் நிற்க மனம் இல்லாமல் , உணவும் வாங்காமல் திரும்பி விட்டேன். ஒரு சில மணித்துளிகளின் பின் நான் அந்த தெருவில் மீண்டும் அந்த முதியவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. தலையில்,கையிடுக்கில், மறு கையில் துணி பைகளுடன், ஊரிலே இடம்பெயரும் மக்களை போல அந்த முதியவர் உடமைகளை சுமந்தபடி என்னிடம் புகைவண்டி தரிபிடத்துகான வழி கேட்டார். நான் அவருக்கு வழியை காட்டிவிட்டு மனசிலே வலியுடன் வீடு திரும்பினேன்.

ஆகக்குறைந்தது மனிதாபிமானத்தையும் இழந்தா இருக்கிறோம் எம் இனத்திலே..???

உண்மையிலே கேடு கெட்ட இனம் என்றால் அது நம் இனம்தான்... எழுத்திலும் வாய் சொற்களிலும்தான் நாம் நல்லவர்கள் போல் வாழுகிறோம்.... நம் வாழ்க்கை நம் குடும்பம் என்று வரும்போது எல்லோரும் சுயனலம் பிடித்தவர்களாகவும் மனிதாபிமானம் இல்லாதா மிருங்கள் போல்தான் நடக்கிறோமா என்று எண்ணத்தோன்றுகிறது,,,,

Edited by சுஜி

  • Replies 51
  • Views 5.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தாங்கள் முதியவருக்கு காட்டிய பரிவுக்கு நன்றி தோழர் சுஜி... :D

  • கருத்துக்கள உறவுகள்

இது எங்கள் இனக் குணம் என்று தான் சொல்ல வேணும். அகதியாய் வந்தவனை சட்டரீதியாய் வந்தவன் குறைத்து மதிப்பிடுவதும், கொஞ்சம் வெளிநாட்டில் படித்தவன் உள்நாட்டில் படித்து விட்டு இங்க வந்து தகுதி குறைந்த வேலை செய்பவனை ஏளனமாய்ப் பார்ப்பதும் எங்கள் "அர்த்த ராத்திரியில் பவுசு" வந்த அற்பத் தமிழர்களிடையே தான் அதிகம். உங்கள் இரக்கம் நல்லது. இதற்கு மேல் போய் ஏதாவது செய்ய முடிந்தால் செய்யுங்கள். உணவகத்தில் சுத்தம் சுகாதாரப் பிரச்சினை கொஞ்சமேனும் ஏதாவது இருப்பது போல தெரிந்தால் உரிய திணைக்களத்திற்கு தெரியப் படுத்தி கொஞ்சம் தொல்லை கொடுங்கள். அல்லது கடையின் பெயரை பகிரங்கமாக இங்கே எழுதி விடுங்கள்-எல்லோரும் பார்த்து அவரவர் தீர்ப்பைக் கொடுக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த முதியவரின் 52 மணித்தியால உழைப்பை குறைந்த சம்பளத்தில் உறிஞ்சி விட்டு...

சட்டம் கதைக்க வந்த கேடு கெட்ட தமிழனை நினைக்க காறித்துப்ப வேணும் போலை கிடக்குது.

அந்த கடைக்காரருக்கு, முதியவரின் 100 பவுண்ஸை கொள்ளையடிப்பதில் என்ன திருப்தியோ.... :D

ஜஸ்ரின் சொன்ன மாதிரி.... அவரின் கடை சுகாதாரக் கேடுகளை, சுகாதார அலுவலகத்துக்கு அறிவித்து விடுவதே நல்ல பாடம். முதிய‌வரை அந்தக்கடைக்காரரும் வேலை வாய்ப்பு அலுவலக்கத்துக்கு அறிவிக்காமல் தான் வேலைக்கு வைத்திருக்கின்றார். இவரைப் போல் வேறு பலரும் அங்கு வேலை செய்யக் கூடும். எதுக்கும் வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கும் ஒரு தொலைபேசி எடுத்து சொல்லிவிட்டால் அவர்களும் அந்தக்கடைக்காரரை வடிவாக கவனிப்பார்கள்.

அந்த முதியவரை ஏமாற்றிய 100 பவுண்ஸை விட அதிகமாக தண்டப் பணம் செலுத்தட்டும்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமாக புலம் பெயர் நாடுகளீல் கடை,உணவங்கள் வைத்திருப்போர் இவரைப்[முதலாளியைப்] போல தான் உள்ளனர்....இவர்கள் கடைசி வரைக்கும் திருந்த மாட்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்க மனசுக்கு கஸ்ரமாய் இருக்கு :D ...கடைக்கரா முனாவுக்கு இருட்டடி குடுக்கனும்.. :D:)

மனிதாபிமானம் என்ற சொல் இந்த சம்பவத்திற்கு பொருத்தமில்லை என்பது எனது கருத்து. இவன் பிணந்திண்ணி கழுகு. இப்படிப்பட்ட பிணந்திண்ணி கள்ளக்கூட்டம் எம் சமூகத்தின் ஒவ்வொரு வர்க்கத்திலும் வெவ்வேறு வடிவங்களில் இருக்கிறார்கள். இவர்களுக்கு அவர்கள் புரியும் மொழியிலே பாடம் படிப்பிப்பதே சிறந்த வழி. லூவிசியத்தில் உள்ள உங்களுக்கு தெரிந்தவர்களிடமும் கூறுங்கள்.

http://www.lewisham.gov.uk/Business/TradingStandards/

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்க மனசுக்கு கஸ்ரமாய் இருக்கு ^_^ ...கடைக்கரா முனாவுக்கு இருட்டடி குடுக்கனும்.. :D:)

பாவம் அந்த முதியவர். :D

இப்படித்தான் அவர்கள் முனா என்ற நிலையில் இருக்கின்றார்கள்

பையன் 26 சரியாகத்தான் சொல்லி இருக்கின்றார்

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி பல் இடங்களில் நடக்கின்றன. தெய்வம் எதோ ஒரு வழியில் காட்ட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் இதே ஊருக்கு வந்த புதிதில்.. ஒரு முக்கியமான.. தொலைப்பேசி அட்டைகள் விற்கும் தமிழர்கள் நடத்தும் கம்பனிக்கு வேலைக்கு ஆட் தேவை என்று போட கொலிடே ரைம் என்பதால் நானும் வேலைக்கு அப்பிளை பண்ணினன். அதன் பின்னர் தொலைபேசி வழி என்னை நேர்முகப் பரீட்சைக்கு அழைத்தார்கள். நேர்முகப் பரீட்சைக்குப் போய் 3 மணி நேரம் காத்திருந்த பின் உள்ளே அழைக்கப்பட்டேன்.

அங்கே ஒரு நடுத்தர வயது தமிழ் பெண் இருந்தார். அவருக்கு எடுபிடியாக ஒரு தமிழ் ஆண். அந்தப் பெண் விசா இருக்கா.. வேலை செய்ய அனுமதி இருக்கா.. நசனல் இன்ஸூரன்ஸ் நம்பர் இருக்கா என்று கேட்டுக் கொண்டே இருக்க நானும் ஒவ்வொன்றா எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தேன். எடுபிடி அவற்றை போட்டோ கொப்பி பண்ணிக் கொண்டிருந்தார்.

இறுதியில் சொன்னார் எல்லாம் சரி. வேலை காலை 9 மணிக்கு தொடங்கி இரவு10 மணிக்கு முடியும். ஞாயிறு தவிர மிச்ச நாள் எல்லாம் வேலை செய்ய வேண்டும் என்று. 30 நிமிசம் மதியம் போய் வரலாம் என்றார்... அதற்கு சம்பளம் தரமாட்டம்.

நான் கேட்டேன் என்ன வேலை.. சம்பளம் எவ்வளவு என்று....

அதற்கு சொன்னார் ஒரு கூடு (கடைகளுக்கு முன்னால் காட் வைச்சு விப்பினம்.. அந்தக் கூடு) காட் தருவம். அதை நீர் நாங்க சொல்லுற இடத்தில வைச்சு விற்க வேணும். ஒரு மாதம் வேலை பழக சும்மா வேலை செய்யும் அதற்குப் பிறகு உம்மால் நாங்க நிர்ணயிக்கிற அளவுக்கு பிசினஸ் செய்ய முடியுதோ என்று பார்த்திட்டு.. வேலையை தருவம்.. மாதம் 900 பவுண்ஸ் தருகிறேன் என்று.

ஒரு நாளைக்கு 13 மணி நேர வேலை. 6 நாள். 78 மணி நேரம் வாரத்துக்கு. மாதத்திற்கு 78x4 = 312 மணித்தியாலங்கள். அதற்கு தரப்படும் பணம்.. 900 பவுன்ஸ். அதாவது 3 பணுக்கும் குறைவு.

நான் சொன்னேன் கொலிடேயில் இந்தளவுக்கு வேலை செய்ய சட்டப்படி அனுமதி இருக்குது. அதே சட்டப்படி ஆகக் குறைந்த அரசின் சம்பள நிர்ணயம்.. மணிக்கு 5.65 பவுண்கள். நீங்கள் 3 பணுக்கு குறைவாத்தானே தாறீங்கள். அதுஎப்படி என்று...??!

நீர் இப்படி சட்டம் கதைச்சீர் என்றால் வேலை கிடைக்காது என்று மிரட்டினார் அந்தப் பெண். நான் சொன்னேன் எனக்கு உங்கட வேலை வேண்டாம்.. எனது பத்திரங்களை போட்டோ கொப்பி பண்ணி வைச்சிருக்கீங்க.. அவை உட்பட எல்லாத்தையும் திருப்பித் தாங்க என்றேன்.

அதற்கு அந்தப் பெண்.. இதுதான் நான் படிச்ச ஆக்களை வேலைக்கு எடுக்கிறதில்ல என்றார். நான் சொன்னேன் அது உங்கட பிரச்சனை. இப்ப நேர்முகப் பரீட்சை முடிஞ்சுது டொக்கிமென்ர தாங்கோ நான் போகனும் என்றேன்.

அவருக்கு கோவம் வர.. அதை எல்லாம் கொடும் என்று எடுபிடிக்கு சொல்ல அவரும் கொண்டு வந்து தந்தார்.

நான் நன்றி சொல்லிட்டு வெளிக்கிட்டு வந்துவிட்டேன்.

பின்னர் சில மாதங்களின் பின் அந்த நிறுவனத்தின் அந்தக் கிளை காட் விற்றதில் மோசடி என்று சொல்லி பூட்டப்பட்டு விட்டது.

அந்தப் பெண் இந்த தமிழ் கோவில்கள் எல்லாம் விழுந்து விழுந்து கும்பிடுற ஒருவர்.

அவர் சட்டத்துக்குப் புறம்பாக இந்திய மற்றும் பிற நாட்டு ஆட்களை குறைந்த விலைக்கு வேலைக்கு எடுத்தும் வந்தவர்.

அதுமட்டுமன்றி சட்டப்படி 8 மணித்தியாலம் வேலை செய்தால் 30 நிமிடம் சம்பளத்துடனான விடுப்பு அளிக்க வேண்டும். அதற்கு மேல் வேலை செய்தால் இன்னொரு 15 நிமிட நேர விடுப்பு அளிக்க வேண்டும்.

வேலைக்கு ஆட்களை எடுக்கும் போது ஆயிரம் கேள்வி கேட்பவர்களுக்கு தங்களை சட்டம் எப்படி வரையறுக்கிறது என்பதை கவனிக்கிறதில்ல.

இந்தச் சம்பவத்தின் பின்னர் தமிழ் கடைகளுக்கு வேலை கேட்டு மட்டுமில்ல எதற்கும் போறதில்ல.

பொதுவாக தமிழ் ஆக்களுக்கு (அதற்காக எல்லா தமிழர்களும் அப்படி என்றில்லை. நல்லவங்களும் இருக்காங்க. ஆனால் கண்டுபிடிப்பது அரிது) மனிதாபிமானத்தோடு நடத்தவும் நடக்கவும் தெரிவதில்லை. குறிப்பாக தாழ்மையோடு நடக்கத் தெரியாது. ஒரு வகை மாயை திமிர் அவர்களுக்குள். அதை தமது இனத்தில் பலவீனமானவர்கள் மீது காட்டி தம்மைப் பற்றி தாமே பெரிய விம்பத்தை வளர்த்துக் கொள்வதும் அதில் வெட்டி பந்தா காண்பதும் இவர்களின் பாரம்பரியம்.

இதை தாயகத்தில் இருந்து எல்லா இடமும் காணலாம். வெட்டிப் பந்தாக் கூட்டம். இவர்களிடம் போய் மனிதாபிமானத்தை எதிர்பார்க்கிறது நம்ம தப்பு. இவர்களோடு கராரா இருக்கனும். அப்பதான் அடக்கி வாசிப்பினம். :D

Edited by nedukkalapoovan

பொதுவாக தமிழ் ஆக்களுக்கு மனிதாபிமானத்தோடு நடத்தவும் நடக்கவும் தெரிவதில்லை. குறிப்பாக தாழ்மையோடு நடக்கத் தெரியாது. ஒரு வகை மாயை திமிர் அவர்களுக்குள். அதை தமது இனத்தில் பலவீனமானவர்கள் மீது காட்டி தம்மைப் பற்றி தாமே பெரிய விம்பத்தை வரைந்து கொள்வது இவர்களின் பாரம்பரியம்.

இதை தாயகத்தில் இருந்து எல்லா இடமும் காணலாம். வெட்டிப் பந்தாக் கூட்டம். இவர்களிடம் போய் மனிதாபிமானத்தை எதிர்பார்க்கிறது நம்ம தப்பு. இவர்களோடு கராரா இருக்கனும். அப்பதான் அடக்கி வாசிப்பினம். :D

டமில்சை பற்றிய மிகச் சரியான கணிப்பு.

Edited by thappili

நெடுக்குக்கு பச்சை குத்துப் போட்டு தொடருறன்

இது ஒரு தொற்று நோய் போல, இப்படியான வதைகளுக்கு முகம் கொடுத்தவர்கள் கூட எதிர்காலத்தில் தாமும் அப்படியே வதை கொடுப்பவர்களாக மாறி விடுகின்றனர். இப்படியான பணம் தின்னிகளுக்கு சட்ட ரீதியான தண்டனை வாங்கிக் கொடுப்பதே மிகச் சிறந்த விடயம்

இது எம் இனத்தில் மட்டுமல்ல, இது ஏனைய இனத்தவர்களிடமும் இருக்கு. இங்கு Downtown இல் சீன கடைகளில் சீன முதலாளிகள் புதிதாக வரும் சீனர்களிடம் மிகக் குறைந்த அளவு சம்பளத்தில் (ஒரு மணித்தியாலத்துக்கு 3 டொலர்) 18 மணி நேரம் வேலை வாங்குவதாகவும் ஒய்வு கொடுப்பதில்லை என்றும் அண்மையில் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்க மனசுக்கு கஸ்ரமாய் இருக்கு ^_^ ...கடைக்கரா முனாவுக்கு இருட்டடி குடுக்கனும்.. :D:D

பல வருடங்களுக்கு முன் இந்தியரின் பெற்றோல் நிலையத்தில் எனது நண்பர் ஒருவர் வேலை காசுக்கு செய்தார்.ஒரு மாத வேலையின் பின் காசு இல்லை என்றும் அது பயிற்சி என்று ஏமாற்றி விட்டார்.நானும் போய் வாதாடி பார்த்தேன்.இனி கதைத்தால் பொலிசில் சொல்வேன் என்று மிரட்டினார். பல மாதங்கள் கடந்த பின் அண்ணைக்கு நல்ல இருட்டடி.காயம் வரும் படி அடிக்கவில்லை.பிறகு ஒரு நாள் அதே பெற்றோல் நிலையத்தினூடாக போகும் போது மண்டையில் கட்டோடு :) சாமான் அடுக்கி கொண்டு நின்றார்.வேலை செய்தவரிடம் என்ன உனது முதலாளிக்கு நடந்தது என்று கேட்க இங்கு வேலை செய்த சீக்குக்கு காசு கொடுக்கவில்லை.நேற்றிரவு யாரோ இரு சீக் பெடியள் வந்து முதலாளிக்கு அடித்து விட்டு காசையும் எடுத்து கொண்டு போய் விட்டார்கள் என்றார். இப்போ அந்த பெற்றோல் நிலையம் வேறு நிர்வாகம் நடாத்துகிறார்கள்.

சுஜியின் உதவி வரவேற்கத்தக்கது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு வெளிநாடு பிடிக்காததுக்கு பல காரணம் அதிலை இதுவும் ஒன்று. மனிதாபிமானம் என்பது யாரிடமும் கிடையாது. எனக்கு இங்கை வந்தவுடனை அண்ணா சொன்ன ஒரே வார்த்தை யார் அடிபட்டுக்கிடந்தாலும் ஒன்றும் செய்யாதே நீ உன் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு போ என்று. பிறகு இதெல்லாம் கொலை கேஸ் என்றேல்லாம் முடிஞ்சிடும் என்று. என்ன உலகமடா சாமி என்று தான் தோன்றிச்சுது. எத்தனை தடவை எனக்கு முன்னாலையே சயிக்கிளில் இருந்து விழ எல்லாம் கை கொடுக்க முடியாமல் போயிருக்கிறேன். சிலவேளைகளில் இப்படியெல்லாமா வாழவேண்டும் என தோன்றும். வெளிநாட்டை பொறுத்தவரை பணம் பணம் இதை விட எதுவுமே இல்லை.

சுஜி உங்கள் ஆக்கத்திற்கு ஒரு பச்சை.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எதற்கு அழுகிறீர்கள், அப்படி என்ன தான் தப்பு செய்தீர்கள்" என்று வினாவ, "அது வந்து...நான் முதலாளிக்கு தெரியாமல், அரசாங்க உதவி பணம் எடுத்தது தான் தப்பு...நான் பண்ணியது தப்புதான்.

..எனக்கு இந்த நாட்டில் வதிவிட அனுமதியும் இல்லாமல் வேறு இடங்களில் வேலையும் இல்லாமல் அலையும்..என் நிலையை உணர்ந்து தான் நான் அழுகிறேன்" என்று

ஆகக்குறைந்தது மனிதாபிமானத்தையும் இழந்தா இருக்கிறோம் எம் இனத்திலே..???

விசா இல்லாத ஒருவர் எப்படி உதவித்தொகை பெற முடியும்?

அதைவிட ஒரு பக்க விளக்கத்தை மட்டும் கேட்டுவிட்டு

தொழிலுக்கும் மனிதாபிமானத்துக்கும் முடிச்சுப்போடுவது நல்லதல்ல.

தங்களுக்கு வந்த கோபத்துடன் அந்த கடைக்காறரிடம் நீதி கேட்டிருக்கவேண்டும்

எல்லோரும் இப்படித்தான் நமக்கேன் என்று ஒதுங்குகின்றோம்

அதேநேரம் நீதியை வேறு ஒருவர் பெற்றத்தரவேண்டும் என்று அவரைக்கடவுளாக்குகின்றோம்

இங்கு எழுதும் எத்தனைபேருக்கு நீதிகேட்கும் அந்த தெம்பு இருக்கிறது என்று தெரியவில்லை.

இருந்தால் அந்த கடையைக்கண்டுபிடிப்பது அவ்வளவு கடினமல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு வெளிநாடு பிடிக்காததுக்கு பல காரணம் அதிலை இதுவும் ஒன்று. மனிதாபிமானம் என்பது யாரிடமும் கிடையாது. எனக்கு இங்கை வந்தவுடனை அண்ணா சொன்ன ஒரே வார்த்தை யார் அடிபட்டுக்கிடந்தாலும் ஒன்றும் செய்யாதே நீ உன் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு போ என்று. பிறகு இதெல்லாம் கொலை கேஸ் என்றேல்லாம் முடிஞ்சிடும் என்று. என்ன உலகமடா சாமி என்று தான் தோன்றிச்சுது. எத்தனை தடவை எனக்கு முன்னாலையே சயிக்கிளில் இருந்து விழ எல்லாம் கை கொடுக்க முடியாமல் போயிருக்கிறேன். சிலவேளைகளில் இப்படியெல்லாமா வாழவேண்டும் என தோன்றும். வெளிநாட்டை பொறுத்தவரை பணம் பணம் இதை விட எதுவுமே இல்லை.

சுஜி உங்கள் ஆக்கத்திற்கு ஒரு பச்சை.

அதுமட்டுமல்ல.. எனக்கு வந்ததும் சொன்ன தகவல்.. சின்னக் குழந்தைகளை தொட்டிடாதேங்கோ.. பிறகு பிடோ என்று உள்ள போட்டிருவாங்கள் என்று. பறவைகள் மிருகங்களை தொட்டிராதேங்கோ.. அப்புறம் பிராணி வதை என்றிடுவாங்கள் என்று. அதற்கு எல்லாம் அப்படியே பழக்கப்பட்டு... இப்போ சின்ன பிள்ளைகள் றோட்டில தடக்கி விழுந்தாலும்... கண்டுக்கிறதே இல்ல. குழந்தைகளை துஸ்பிரயோகம் செய்யும் மனிதர்களால்.. குழந்தைகள் மீது அன்பு காட்டுதல் கூட தடை செய்யப்படுகிறது. இப்படித்தான் மனிதன் வாழும் உலகம் உருண்டுக்கிட்டு தான் இருக்கு. :D:)

  • தொடங்கியவர்

விசா இல்லாத ஒருவர் எப்படி உதவித்தொகை பெற முடியும்?

அதைவிட ஒரு பக்க விளக்கத்தை மட்டும் கேட்டுவிட்டு

தொழிலுக்கும் மனிதாபிமானத்துக்கும் முடிச்சுப்போடுவது நல்லதல்ல.

தங்களுக்கு வந்த கோபத்துடன் அந்த கடைக்காறரிடம் நீதி கேட்டிருக்கவேண்டும்

எல்லோரும் இப்படித்தான் நமக்கேன் என்று ஒதுங்குகின்றோம்

அதேநேரம் நீதியை வேறு ஒருவர் பெற்றத்தரவேண்டும் என்று அவரைக்கடவுளாக்குகின்றோம்

இங்கு எழுதும் எத்தனைபேருக்கு நீதிகேட்கும் அந்த தெம்பு இருக்கிறது என்று தெரியவில்லை.

இருந்தால் அந்த கடையைக்கண்டுபிடிப்பது அவ்வளவு கடினமல்ல.

விசுகு அண்ணா இங்கே வந்து இறங்கியது ஒரு காட் குடுப்பார்கள்... அதை வைத்தே ஒரு வரால் உதவி தொகை பெற முடியும்.... அவர் இங்கே இருக்கலாம்.... ஆனால் வேலை செய்ய அனுமதி குடுக்கமாட்டார்கள்... அந்த அயிடியிலே அடித்து இருக்கும் வேலை செய்ய அனுமதியில்லை என்று.... ஆனால் உதவி தொகை பெற முடியும்.... அதைத்தான் அந்தப்பெரியவரும் பண்ணினார்......

இரண்டாவது அந்தக்கடைக்காரரிடம் நான் நீதிகேட்டு இருக்க முடியும்....ஆனால் அவர் நல்லவர் இல்லை.... அப்படி ஒரு வேளை நான் கேட்டு இருந்தால்... அவர் வேறு மாதிரி சமந்தப்படுத்திப்பேசி இருப்பார்....ஏன் என்றால் அவர் போற வாற பெட்டைகளை வேறு கண்ணோட்டத்தோட பார்க்கிறதை நானே பார்த்து இருக்கேன்...

பையன் சொன்ன மாதிரி இருட்டடி குடுக்கலாம் ஆக்களை வைத்து பண்ணலாம்...ஆனால் இப்படி பண்ணுவதால் என்ன பிரயோசனம் ... என்னோட நோக்கம் எல்லாம் கடை இழுத்து மூடவேண்டும்.... இப்படியானவர்கள் நடுத்தெருவுக்கு வரவேண்டும்... கஸ்ரப்படவேண்டும் அப்பதான் மற்றவன் வலி தெரியும்...

நெடுக்கண்ணா சொன்னதுபோல் சட்டம் பேசலாம்..ஆனால் வதிவிட உரிமை இருந்தால் பேசலாம்... இப்படியானவர்கள் எப்படி பேசுவார்கள்...

தனி மனிதன் என்றால் தண்ணியை குடித்துவிட்டும் இருக்கலாம்... ஆனால் எனக்கு அந்தபெரியவரை பார்த்தால் அப்படித்தெரியவில்லை... அவர் உடம்பு சரியில்லாதவர் என்று நினைக்கிறேன்... அவருக்கு பின்னால் அவரை நம்பி பிள்ளைகள் இருக்கலாம் ஒருவேளை ஊரில் இருக்கலாம்... தன் பிள்ளைகள் மனைவிக்காக அவர் அப்படி கஸ்ரப்பட்டு இரண்டு பவுண்ஸ்க்கு வேலை செய்து இருக்கலாம்...

கண்டிப்பாக நான் அந்தக்கடை முதலாளிக்கு ஏதாவது பண்ணுவேன்....

Edited by சுஜி

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் லா சப்பலுக்கு போயிருந்தபோது...

ஒருவர் என்னிடம் ஒரு விளம்பரத்தை நீட்டினார்

அந்த விளம்பரத்தை ஏற்கனவே நான் பெற்றுக்கொண்டதால்

வேண்டாம் என்று மறுத்தேன்

அவர் என்னிடம் திணிக்க முயன்றார்

தமிழில் சொன்னால் விளங்காதோ என்று பிரெஞ்சில் சொன்னார்

அதுவும்புரியவில்லையோ என்று ஆங்கிலத்தில் சொன்னார்

அதுவும் இல்லையோ என்று சிங்களத்திலிலும் சொன்னார் அந்த விளம்பரம் என்ன வென்று.

நான் சூடாகிவிட்டேன்

அதைக்கண்ட அந்த கடை முதலாளியின் சகோதரன் என் கையைப்பிடித்து அழைத்துக்கொண்டுபோய்ச்சொன்னார்

அண்ணா அவனோட கோபிக்காதீர்கள்

அவனைப்பற்றி சொன்னால் நீங்களே இரங்குவீர்கள் என்று.

என்னடாப்பா போறவாறவனையெல்லாம் வம்புக்கிழுக்கிறான்

அவனை வேலைக்கு வைத்திருக்கும்உன்ர அண்ணனுக்கு போடணும் என்று நான்பேச...

அவன் சொன்னான்

அண்ணா குடும்பத்தில் 4 பேர் மாவீரர்

தாய் தகப்பன் எல்லாம் முள்ளிவாய்க்காலில்......???

இவனும் கொழும்பில் உளவுப்போராளியாக இருந்து...

பிடிபட்டு

ஆண்பிள்ளைக்கான எந்த உறுப்பும் இயங்காதநிலையில்........

அந்த ஒரே காரணத்துக்காகத்தான் அவனை குழந்தையைப்போல் அண்ணர் பார்க்கின்றார் என்றான்

அவனது அண்ணனைக்கண்டு கும்பிட்டுவிட்டுவந்தேன்

இப்போ சொல்லுங்கள் முதலாளிகள் எல்லோரும் மனச்சாட்சி இல்லாது காசு பறக்கும் கூட்டமா...???

சுஜி, நீங்கள் முதலாளிக்கு அல்லது குறிப்பிட்ட கடைக்கு ஏதாவது செய்வதுபற்றி சிந்திப்பதை நிறுத்திவிட்டு.. குறிப்பிட்ட பெரியவரை மீண்டும் கண்டால்… அல்லது அவர் விபரம் பெற்று, அவரது பிரச்சனைகளை அறிந்து அவருக்கு உங்களால் முடியுமான உதவியை செய்தால் அது மெத்தப்பெரிய உபகாரமாய்போகும்.

இங்கு நாங்கள் இருப்பது Downtown. எனக்கு ஓர் அதிர்ச்சி ஏற்பட்டது எப்போது என்றால் நம்மவர்களான தமிழர்கள் பூங்காக்களில், தெருக்களில் குடித்துவிட்டு, போதை பாவித்துவிட்டு வேற்று இன Homeless people போல ஊத்தை உடுப்புக்களுடன் தெரு ஓரங்களில், பூங்காக்களில் கிடந்தார்கள். இவர்களின் நிலை எவ்வளவோ வசதிகள், வாய்ப்புக்கள் கொண்ட அழகிய கனடா திருநாட்டில் ஏன் இப்படி வந்தது என்பது நீண்ட ஆராய்ச்சிகளுக்குரியது. ஆனால்.. நான் இங்கு கூறவரும் விடயம் என்ன என்றால்.. வெளிநாடுகளில் ஒவ்வொரு தனிநபருக்கும் வெவ்வேறு பிரச்சனைகள் வரலாம். அதற்கு அவர்களால் முகம் கொடுக்க முடியாத நிலையில் நீங்கள் மேலே விபரித்த பெரியவரின் நிலமை போன்றும் ஏற்படலாம்.

எனவே, முடியுமானால் பெரியவரை சந்தித்து அவரது நிலவரம் அறிந்து உதவி செய்யுங்கள். இப்படியான விடயங்களுக்கு நீங்கள் தனியாக போகத்தேவையில்லை. யாராவது நண்பர்கள், உறவினர்களுடன் சென்று முயற்சித்து பாருங்கள் உண்மையில் குறிப்பிட்ட நிகழ்வு உங்கள் மனதை தொடர்ந்து உருத்திக்கொள்ளுமானால்…

இவ்வாறான விடயங்களில் நாங்கள் குயிக் judgment செய்யமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

நான் சூடாகிவிட்டேன்

அதைக்கண்ட அந்த கடை முதலாளியின் சகோதரன் என் கையைப்பிடித்து அழைத்துக்கொண்டுபோய்ச்சொன்னார்

அண்ணா அவனோட கோபிக்காதீர்கள்

அவனைப்பற்றி சொன்னால் நீங்களே இரங்குவீர்கள் என்று.

என்னடாப்பா போறவாறவனையெல்லாம் வம்புக்கிழுக்கிறான்

அவனை வேலைக்கு வைத்திருக்கும்உன்ர அண்ணனுக்கு போடணும் என்று நான்பேச...

அவன் சொன்னான்

அண்ணா குடும்பத்தில் 4 பேர் மாவீரர்

தாய் தகப்பன் எல்லாம் முள்ளிவாய்க்காலில்......???

இவனும் கொழும்பில் உளவுப்போராளியாக இருந்து...

பிடிபட்டு

ஆண்பிள்ளைக்கான எந்த உறுப்பும் இயங்காதநிலையில்........

அந்த ஒரே காரணத்துக்காகத்தான் அவனை குழந்தையைப்போல் அண்ணர் பார்க்கின்றார் என்றான்

அவனது அண்ணனைக்கண்டு கும்பிட்டுவிட்டுவந்தேன்

இப்போ சொல்லுங்கள் முதலாளிகள் எல்லோரும் மனச்சாட்சி இல்லாது காசு பறக்கும் கூட்டமா...???

எல்லோரும் இல்லை ஆனால் அப்படியும் ஆட்க்கள் இருக்கினம்.அவை எல்லாம் உங்கள் உவமைக்கு பின்னால ஒழியாமல் இருக்க நீங்களும் விழிப்பாக இருக்க வேண்டும்.

ஏனோ தெரிய இல்லை இந்தத் திரியை வாசித்ததில் இருந்து மனம் கொஞ்சம் கனமாக இருக்கிறது. காரணம், இந்த நாட்டிற்கு வந்த புதிதில் எனக்கு அரசாங்க விதி முறைகள் சட்டங்கள் ஏதும் தெரியாது, தெரிந்தவர்களும் அதனைச் சொல்லித் தர விரும்பவில்லை காரணம் தாங்கள் சொல்லிக் குடுப்பதே தங்களுக்கு ஆப்பாக வந்துவிடும் என்று ஏதும் நினைத்தார்களோ தெரியாது.... (விசா, work permit NI no எல்லாமே இருந்தது) வாரத்தில் ஏழு நாட்களும் ஒரு இந்தியனின் கடையில் ஒரு நாளுக்கு பன்னிரண்டு மணித்தியாலங்கள் வேலை செய்து ஐம்பது பவுண்ட்ஸ் பெற்று அதில் ஒரு சிறிய அறை வாடகை, பில்ஸ் போக மீதியை ஊருக்கு அனுப்பினேன். சாப்பாடுச் செலவு இருந்ததில்லை. ஒரு நாளைக்கு 2 mars bars & tap water மட்டும் தான் மிஞ்சி, மிஞ்சி போனால் பாண் அப்போது 9p, குறைந்தது 4 நாட்களுக்குப் போதுமானதாக இருந்தது, ஆறு மாதங்கள் இப்படித் தான் இருந்தேன். அதன் பிறகு கடைக்கு வரும் சிலர் நன்புடன் இந்த நாடு சட்டங்களை அறியத் தன்மையால் நான் அங்கிருந்து வேறு வேலை எடுத்து மாறக் கூடியதாக இருந்தது. பல வருடங்கள் ஆனாலும், பல மாற்றங்கள் ஆனாலும் வந்த பாதையை, வாழ்க்கை தந்த அனுபவத்தை மறக்க முடியாது தானே?

இன்றைய சட்டப் படி, ஒரு முதலாளி அவர் வேலைக்கு அமர்த்துவோருக்கு (NMW) தகுந்த ஊதியம் கொடுக்காமல் விட்டால் அது சட்டப் படி குற்றமாகும். சுஜி, நீங்கள் குறிப்பிட்டது போல அந்த முதலாளி ஒருவரை குறைந்த ஊதியத்திற்கு ஏன் அமர்த்தவேணும்? அந்த முதியவர் அரசாங்க சலுகைகள் எடுக்கிறார் என்று தெரிந்தால் தானே?

முடிந்தால் அந்த பெரியவரே, தன்னை அந்த முதலாளி குறைந்த ஊதியத்திற்கு வேலைக்கு அமர்த்தினார் என்றோ, அல்லது செய்த வேலைக்கு ஊதியம் தர மறுக்கிறார் என்றோ ஒரு முறைப்பாடு செய்யலாம். குற்றத்தை தானே ஒத்துக் கொண்டால் அந்த முதலாளிக்குத் தண்டனையாக பெரிய அபராதம் சட்டப் படி கொடுக்கப்படும்.

இப்படியான முதலாளிமார் வருடாந்த வரிப்பத்திரங்கள் நிரப்பும் போது, தங்களின் வருமானத்தை சரியாகக் காட்ட மாட்டார்கள். இது சட்டப் படி குற்றமாகும்.

கீழுள்ள இணைப்பில் ஒரு இலவச இலக்கம் உள்ளது. அதில் தொடர்பு கொண்டு கதைத்துப் பாருங்கள்.

http://www.direct.gov.uk/en/MoneyTaxAndBenefits/Taxes/ContactOrDealWithHMRC/DG_10010579

உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் !

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் இந்திய முதலாளிகளால் தமிழர்கள் சுரண்டப்பட்டார்கள். தற்போது தமிழர்கள் முதலாளிகளாக இருந்து தமிழர்களையே சுரண்டுகின்றார்கள். நேர்மை, நாணயம், மனிதாபிமானம் உள்ளர்வர்களும் இருக்கின்றார்கள், இல்லாதவர்களும் இருக்கின்றார்கள். ஆனால் நம்மவர்களே நம்மைச் சுரண்டும்போது அதிகம் ஆத்திரம் வருவதைத் தடுக்கமுடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு வெளிநாடு பிடிக்காததுக்கு பல காரணம் அதிலை இதுவும் ஒன்று. மனிதாபிமானம் என்பது யாரிடமும் கிடையாது. எனக்கு இங்கை வந்தவுடனை அண்ணா சொன்ன ஒரே வார்த்தை யார் அடிபட்டுக்கிடந்தாலும் ஒன்றும் செய்யாதே நீ உன் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு போ என்று. பிறகு இதெல்லாம் கொலை கேஸ் என்றேல்லாம் முடிஞ்சிடும் என்று. என்ன உலகமடா சாமி என்று தான் தோன்றிச்சுது. எத்தனை தடவை எனக்கு முன்னாலையே சயிக்கிளில் இருந்து விழ எல்லாம் கை கொடுக்க முடியாமல் போயிருக்கிறேன். சிலவேளைகளில் இப்படியெல்லாமா வாழவேண்டும் என தோன்றும். வெளிநாட்டை பொறுத்தவரை பணம் பணம் இதை விட எதுவுமே இல்லை.

சுஜி உங்கள் ஆக்கத்திற்கு ஒரு பச்சை.

ஜீவா.. உங்களுக்கு யாரோ சட்டத்தைப் பிழை பிழையா சொல்லிக்குடுத்திருக்கினம். :D யாராவது ஆபத்தில் இருந்தால் நீங்கள் செய்யவேண்டியது அவசர உதவி இலக்கத்தை அழைத்து தகவலைத் தெரிவிப்பது மட்டுமே.. நீங்கள் பயிற்சிபெற்ற முதலுதவி வல்லுனராகவோ அல்லது மருத்துவராகவோ இருந்தால், முதலுதவிகளும் தரலாம். ஆனால் இதில் கொஞ்சம் சிக்கல் இருக்கிறது. மிகுந்த அவதானம் தேவை. ஆகையால் பெருவாரியான சந்தர்ப்பங்களில் அவசர இலக்கத்தைத் தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவித்துவிட வேண்டும். :D

அவசரத்துக்கு உதவி செய்யாமல் போய், உங்களை அந்த விபத்துதாரி பிறகு அடையாளம் காட்ட்வாரேயாக இருந்தால் உங்கள் மீது Involuntary Manslaughter அடிப்படையில் வழக்குத் தொடரப்பட சந்தர்ப்பம் உண்டு..! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா.. உங்களுக்கு யாரோ சட்டத்தைப் பிழை பிழையா சொல்லிக்குடுத்திருக்கினம். :D யாராவது ஆபத்தில் இருந்தால் நீங்கள் செய்யவேண்டியது அவசர உதவி இலக்கத்தை அழைத்து தகவலைத் தெரிவிப்பது மட்டுமே.. நீங்கள் பயிற்சிபெற்ற முதலுதவி வல்லுனராகவோ அல்லது மருத்துவராகவோ இருந்தால், முதலுதவிகளும் தரலாம். ஆனால் இதில் கொஞ்சம் சிக்கல் இருக்கிறது. மிகுந்த அவதானம் தேவை. ஆகையால் பெருவாரியான சந்தர்ப்பங்களில் அவசர இலக்கத்தைத் தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவித்துவிட வேண்டும். :D

ஓம் மாமோய். ரொம்ப அவசரம் என்றால் அவசர இலக்கத்துக்கு அழைத்து சொல்லலாம் சின்ன சின்ன விசயதுக்கு ஏன் என்று விட்டிடுவேன். :D

Involuntary Manslaughter அடிப்படையில் வழக்குத் தொடரப்பட சந்தர்ப்பம் உண்டு..! :D

ம்... இது வேறை கொடுமையா???? :D

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் மாமோய். ரொம்ப அவசரம் என்றால் அவசர இலக்கத்துக்கு அழைத்து சொல்லலாம் சின்ன சின்ன விசயதுக்கு ஏன் என்று விட்டிடுவேன். :D

மாப்பிளை.. சின்ன விசயமா பெரிய விசயமா என்கிறதையெல்லாம் தீர்மானிக்க வேண்டியது மருத்துவம் சம்பந்தப்பட்ட ஆட்கள் அல்லோ.. :D சைக்கிளால் விழுந்து தலையில் உள்காயம் பட்டு, பிறகு கோமாவுக்குப் போய்ட்டானெண்டால் சிக்கல் தானே.. :D

வட அமெரிக்காவில் தேவையென்றால் நீங்கள் அனானியாக அவசர இலக்கத்தை அழைத்து விடயத்தைத் தெரிவிக்கலாம். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.