Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாண மாப்பிளைகளின் தற்போதய சீதன பெறுமதி நிலவரங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குடாநாட்டில் தற்போது சீதனத்தின் பெறுமதியும் கிடு கிடுவென அதிகரித்துக் காணப்படுகின்றன. இதனை ஒரு கல்யாணத்தரகர் பட்டியலான தகவலாக எமக்கு அளித்துள்ளார். அதன் விபரம் கீழே தரப்பட்டுள்ளது.

1) டொக்டர் =< 5,000,000 ரொக்கம் - வெள்ளவத்தை அல்லது யாழ் நல்லூரில் வீடு வளவு ( நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

2) இஞ்சினியர் =< 5,000,000 ரொக்கம் - வெள்ளவத்தை அல்லது யாழ் நல்லூரில் வீடு வளவு ( நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

3) வேலையுள்ள பட்டதாரி =< 3,000,000 - திருமணம் செய்யும் ஊரில் வீடு அல்லது எங்கேயும் ஒரு வீடு வளவு ( நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

4) வேலையற்ற பட்டதாரி =< 2,500,000 - திருமணம் செய்யும் ஊரில் வீடு அல்லது எங்கேயும் ஒரு வீடு வளவு ( நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

5) ஏ.எல் படித்து அரசாங்க உத்தியோகம் பார்பவர்கள் =< 2,000,000 - திருமணம் செய்யும் ஊரில் வீடு அல்லது எங்கேயும் ஒரு வீடு வளவு ( நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

6) வேறு சிறு அரசாங்க வேலை பார்போர் =< 1,500,000 - திருமணம் செய்யும் ஊரில் வீடு அல்லது எங்கேயும் ஒரு வீடு வளவு ( நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

7) தனியார் துறை வேலை பார்போர் =< 1,500,000 - திருமணம் செய்யும் ஊரில் வீடு அல்லது காணியெண்டாலும் பறவாயில்லை( நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

8) சுயதொழில் வகை = 1,000,000 வீடு அல்லது காணியெண்டாலும் பறவாயில்லை

9) வர்த்தகம், கடைக்காரர் = 1,000,000 வீடு அல்லது காணியெண்டாலும் பறவாயில்லை

10) தோட்டக்காரர் அல்லது அதே வகைக்குள் அடங்கும் எல்லோருக்கும் = 500,000 தொடக்கம் 800,000 வரைக்கும் - வீடு, காணி எதுவும் தந்தால் அது புண்ணியம்

குறிப்பு - நிபந்தனைக்கு உட்பட்டது என்றாள் பெண்ணினுடைய அழகு, அவள் வேலை செய்பவளா இருத்தல் போன்றன....இவை ஓகே என்றால் ' =< ' = ' = '

சமப்படும்...

நன்றி

http://www.newjaffna.com/index.php

எவ் வகையிலும் எப்படி உழக்குப்பட்டாலும்

நாங்கள் திருந்தப் போறதே இல்லை

d0ee256f392bbef141cf8d3c1441_grande.jpg

Situation_Report_25th_April_TamilNational_Banner.jpg

இந்த விலையேற்றத்திற்கு ஒரு விதத்தில் புலம் பெயர் தமிழர் சமூகமும் பொறுப்பேர்கவேண்டும்.

இலங்கையில் ஒரு அரச ஊழியரின் சராசரி அதிக மாதச்சம்பளம் 50,000 மட்டுமே வரும்

அப்படியானால் ஒரு வருடத்தில் 6 இலட்சம்( சாப்பிடாமல், வேறு ஒருவித செலவுகளும் செய்யாவிட்டால்)

50 இலட்சம் சேர்க்க 8 வருடம் தேவை.

ஆனால் இந்த சோம்பேறிகளான ஆண்கள் எமது பெண்களயும் எடுத்து , 8 வருட இலவச சம்பளத்தையும் பெறுகிறான்

வழக்கமாக ஒரு கொம்பனியில் அல்லது அரசில் வேலை பார்ப்பவர்கள் , திறமையாக வேலை செய்ய முடியவில்லை எனில் தூக்கி விடுவார்கள். அந்த உரிமை எமது பெண்களுக்கு மட்டும் உலகில் உண்டு.

Edited by சுனாமி

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை இதிலை இன்னொண்டை விட்டுட்டியள் சகோதரங்கள் எத்தினை பேர் வெளிநாட்டிலை எண்டதைப் பொறுத்து இதீன்ரை மடங்குகள் கேட்கப்படும்(உ+ம் இரண்டு பேர் வெளிநாட்டிலை எண்டால் இதீன்ரை இரண்டு மடங்கு )

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விலை போகுது.. பேசாமல்.. வெளிநாட்டில உள்ளவையும் இங்க ஒன்று அங்க ஒன்று என்று கட்டுங்கோ.. கொலிடேக்கு போற வழில செலவழிக்க உதவும்..!

இதில இன்னொன்று பாருங்கோ.. சீதனம் வேண்டாமல் எவராவது கட்டப் போனியள்.. தொலைஞ்சியள்.. பெண் வீட்டாரும் எவ்வளவுக்கு எவ்வளவு கொடுக்கினமோ அவ்வளவுக்கு அவ்வளவு அவைட சமூக அந்தஸ்தும் உயருதாமெல்லே.

இத்தனைக்கும் அவைட அண்ணன்மார்.. அப்பாமார்.. உறவுகள் வெளிநாட்டில.. ஒன்றில் அரசாங்கப்பணத்தில விறாண்டுவினம்.. இல்ல தமிழ் கடை வைச்சிருப்பினம்.. இல்ல சுப்பர் மார்க்கெட்டில.. பெற்றோல் ஸ்ரேசனில.. "வேலை" செய்வினம்..!

அடிங்கொய்யாலா..!

விடுதலைப்புலிகள் சீதன தடை சட்டம் கொண்டு வந்த போது அதை வரவேற்ற யாழ்ப்பாணத்தவர்களை விட அதை எதிர் வகையில் விமர்சித்த யாழ்ப்பாணத்தாரே அதிகம்.

வாழ்க.. ஈழத்தமிழன். :unsure:

Edited by nedukkalapoovan

சிங்களவன் இவ்வளவு அடி குடுத்தும் இவங்கள் திருந்தல்ல. இந்த இனத்திற்கு என்னத்திற்கு விடுதலை புண்ணாக்கு எல்லாம்.

இலங்கை தமிழனின் அழிவின் முதற்படி சீதனம், சாதி

உலகத்திலேயே நல்ல கொளுத்த சீதனம் வாங்குவதற்காகவே படித்த மொக்கன் இலங்கை தமிழன் ஒருத்தன்தான்.

Edited by thappili

பாஸ் என்ற பாஸ்கரன்களுக்கு எவ்வளவு என்று போடவில்லை? இங்கு கனபேர் கோவிக்க போகினம்.

நல்ல விலை போகுது.. பேசாமல்.. வெளிநாட்டில உள்ளவையும் இங்க ஒன்று அங்க ஒன்று என்று கட்டுங்கோ.. கொலிடேக்கு போற வழில செலவழிக்க உதவும்..!

அட.. இது நல்ல ஐடியாவாக இருக்கே :unsure:

... 40+(40க்கு கிட்டமட்ட), மற்றும் இரண்டாம் தாரத்துக்கு என்ன விலை போகுது????? :unsure:

... டாக்குத்தர், இஞ்சினியர், பட்டதாரி, வர்த்தகர் போல ..... லண்டன், கனடா, பிரான்சு, சுவிஸ், ஆஸ்ச்திரேலியா(இதுகும் குவாலிகேஷனுகள் தானே????) இதில் ஏன் சேர்க்கப்படவில்லை?????

... டாக்குத்தர், இஞ்சினியர், பட்டதாரி, வர்த்தகர் போல ..... லண்டன், கனடா, பிரான்சு, சுவிஸ், ஆஸ்ச்திரேலியா(இதுகும் குவாலிகேஷனுகள் தானே????) இதில் ஏன் சேர்க்கப்படவில்லை?????

அது யாழ்ப்பாணத்துக்குரியது

இதுக்கெல்லாம் அதவிட டபுள்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ரேட்டு எல்லாம் கொஞ்சம் கூடுதலாக தெரியுது... ஒருவேளை கிந்திய- இலங்கை பணமாற்ற வித்தியாசம் இருக்கும் போல தெரியுது... :unsure:

X,000,000

பொதுவாக இந்த பூச்சியங்களுக்கு தனியாக ஒரு பெறுமதியும் இல்லை.

அதுபோல் தான் இந்த சீதனக் கொடுமைக்கு பின்னல் ஒளிபவர்களும் - பூச்சியங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
:unsure: ஒருக்காக் கலியாணம் கட்டின ஆக்காள் இதுக்குள்ள அடங்கீனமோ அல்லது அவைக்கு வேற ரேட்டோ?? சும்மா எதுக்கும் தெரிஞ்சு வைப்பம் எண்டுதான் கேட்கிறன்.
  • கருத்துக்கள உறவுகள்

:unsure: ஒருக்காக் கலியாணம் கட்டின ஆக்காள் இதுக்குள்ள அடங்கீனமோ அல்லது அவைக்கு வேற ரேட்டோ?? சும்மா எதுக்கும் தெரிஞ்சு வைப்பம் எண்டுதான் கேட்கிறன்.

ஒருத்தர் கேட்கிறார் 40 - 45 க்கு........

இன்னொருத்தர் ஒருக்கா கட்டினா என்கிறார்..

கொஞ்ச காலத்தில் இதுவும் பெரிய ஒரு தலையிடியாக இருக்கப்போகுது தாயக மக்களுக்கு.............? :unsure:

குடாநாட்டில் தற்போது சீதனத்தின் பெறுமதியும் கிடு கிடுவென அதிகரித்துக் காணப்படுகின்றன. இதனை ஒரு கல்யாணத்தரகர் பட்டியலான தகவலாக எமக்கு அளித்துள்ளார். அதன் விபரம் கீழே தரப்பட்டுள்ளது.

1) டொக்டர் =< 5,000,000 ரொக்கம் - வெள்ளவத்தை அல்லது யாழ் நல்லூரில் வீடு வளவு ( நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

2) இஞ்சினியர் =< 5,000,000 ரொக்கம் - வெள்ளவத்தை அல்லது யாழ் நல்லூரில் வீடு வளவு ( நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

3) வேலையுள்ள பட்டதாரி =< 3,000,000 - திருமணம் செய்யும் ஊரில் வீடு அல்லது எங்கேயும் ஒரு வீடு வளவு ( நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

4) வேலையற்ற பட்டதாரி =< 2,500,000 - திருமணம் செய்யும் ஊரில் வீடு அல்லது எங்கேயும் ஒரு வீடு வளவு ( நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

5) ஏ.எல் படித்து அரசாங்க உத்தியோகம் பார்பவர்கள் =< 2,000,000 - திருமணம் செய்யும் ஊரில் வீடு அல்லது எங்கேயும் ஒரு வீடு வளவு ( நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

6) வேறு சிறு அரசாங்க வேலை பார்போர் =< 1,500,000 - திருமணம் செய்யும் ஊரில் வீடு அல்லது எங்கேயும் ஒரு வீடு வளவு ( நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

7) தனியார் துறை வேலை பார்போர் =< 1,500,000 - திருமணம் செய்யும் ஊரில் வீடு அல்லது காணியெண்டாலும் பறவாயில்லை( நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

8) சுயதொழில் வகை = 1,000,000 வீடு அல்லது காணியெண்டாலும் பறவாயில்லை

9) வர்த்தகம், கடைக்காரர் = 1,000,000 வீடு அல்லது காணியெண்டாலும் பறவாயில்லை

10) தோட்டக்காரர் அல்லது அதே வகைக்குள் அடங்கும் எல்லோருக்கும் = 500,000 தொடக்கம் 800,000 வரைக்கும் - வீடு, காணி எதுவும் தந்தால் அது புண்ணியம்

குறிப்பு - நிபந்தனைக்கு உட்பட்டது என்றாள் பெண்ணினுடைய அழகு, அவள் வேலை செய்பவளா இருத்தல் போன்றன....இவை ஓகே என்றால் ' =< ' = ' = '

சமப்படும்...

நன்றி

http://www.newjaffna.com/index.php

கலியாணத் தரகார் சொன்னது உண்மையோ பொய்யோ தெரியாது...

ஆனால், 3 வருடங்களாக விரும்பிய பின் கலியாணம் என்று வரும் போது லட்சக் கணக்கில சீதனம் கேட்டாக்களும் ஊரில இருக்கினம். அது யாழ்ப்பாணத்துக்காரர் குடுக்கிறவையள் தானே... அது ஒண்டும் புதுசில்லையே எண்டினம்... :unsure: முதுகெலும்பு இல்லாத மானம் கெட்டதுகள்! :unsure:

பெடிகள் திருமணத்தின் பின் பெரும்பாலும் வீட்டு காவல்தானே. நாய்க்குட்டி - பப்பியை வாங்கி வீட்டில் கட்டிவைத்து வளர்ப்பது போல் இதையும் எடுத்துக்கொள்ளலாம்.

:unsure: ஒருக்காக் கலியாணம் கட்டின ஆக்காள் இதுக்குள்ள அடங்கீனமோ அல்லது அவைக்கு வேற ரேட்டோ?? சும்மா எதுக்கும் தெரிஞ்சு வைப்பம் எண்டுதான் கேட்கிறன்.

எழும்பி நடக்கவே சத்து கிடையாது இதுக்கை ஒம்பது பொண்டாட்டி கேட்டானாம்... நீங்கள் விடுப்பு கேட்ட விசயம் வீட்டிலை நீங்கள் கட்டினவுக்கு தெரிஞ்சுது சம்பல் தான் அப்பு ... :unsure: :unsure: :unsure: பிறகு நீங்கள் புலி எல்லாம் ஆக ஏலாது வெறும் புளி தான்... அதுவும் கெட்டை எடுத்தது... :lol:

Edited by தயா

சிங்களவன் இவ்வளவு அடி குடுத்தும் இவங்கள் திருந்தல்ல. இந்த இனத்திற்கு என்னத்திற்கு விடுதலை புண்ணாக்கு எல்லாம்.

இலங்கை தமிழனின் அழிவின் முதற்படி சீதனம், சாதி

உலகத்திலேயே நல்ல கொளுத்த சீதனம் வாங்குவதற்காகவே படித்த மொக்கன் இலங்கை தமிழன் ஒருத்தன்தான்.

100 % RIGHT

  • கருத்துக்கள உறவுகள்

:huh: தயா,

உதெல்லாமோ மனிசீட்ட சொல்லிக்கொண்டிருக்கப்போறன்? எங்களுக்க இருக்கட்டன்?!

  • கருத்துக்கள உறவுகள்

ஆராவது சீதனம் வேண்டாமல் கலியாணம் செய்யப்போறன் என்ற கொள்கையோட இருந்தால் மாப்பிள்ளைக்கு ஏதோ குறை என்று கதை கட்டி விடுவாங்கள்.அதுக்கு பிறகு காசு இல்லாதவனும் தன்ரை பொண்ணைக் கட்டிக் கொடுக்க மாட்டான்.வடிவான பொம்பிளையை என்றால் பரவாயில்லை. வடிவில்லாத வயது கூடின பொம்பிளைகளை காசைக் குடுத்துத்தானே கரை சேர்க்க வேண்டி இருக்கிறது.வெளிநாட்டுக்கு வந்தவன் வந்த கடனைக் கட்டி அக்கா தங்கச்சியைக் கரை சேர்த்து முடிய வயது வட்டுக்குள்ளே போயிடும். சீதனம் வேண்டுபவர்களை கடுமையான சட்டத்தில் உள்ளே போடணும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேசிக்கிட்டு இருக்காமல் எனக்கு எவ்வளவு தாறிங்க என்று சொல்லுங்கோப்பா?

முடிஞ்சால் என்னை வச்சு ஏலம் போடுங்கோ பார்க்கலாம்? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப கொஞ்சநாளைக்குமுதல் ஜேர்மனியிலை நடந்த கலியாண பேச்சிலையும் மாப்பிளையின்ரை தாய்க்காரி பத்தாயிரம் ஈறோ சீதனமாய்க்கேட்டு பொம்புளைவீட்டுக்காரரோடை மல்லுக்கட்டினது இப்பவும் என்ரை கண்ணுக்கை நிக்குது. :D

ஆனால்.............

இரண்டு பக்கமும் பலதும்பத்தும் தெரிஞ்ச பழைய காயள் :lol::D :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சீதனம் கொடுக்கும் பழக்கம்..... எப்போது, எங்கு, யாரால்..... ஆரம்பிக்கப் பட்டது என்று தெரியவில்லை.

தமிழர்களில் பெண்களிடம் சீதனம் எதிர்பார்ப்பதும், சில இஸ்லாமிய நாடுகளில் ஆண்களிடம் சீதனம் எதிர் பார்ப்பதும் நடைமுறையில் உள்ளது.

தமிழர் சீதனம் வாங்குவதற்குச் சொல்லும் காரணம்; மகனை, படிப்பித்து ஆளாக்கி விட்டதற்கு கேட்கின்றேன் என்றும்,

இஸ்லாமியர் சீதனம் வாங்குவதற்குச் சொல்லும் காரணம்; மகளை, ஆணால் வைத்துப் பார்க்க..... நல்ல வேலை, மற்றும் பணம் இருக்கின்றாதா......

என்னும் காரணங்களையே..... சொல்கிறார்கள்.

இரு பக்கமும் நியாயம் இருந்தாலும்...... வற்புறுத்தி சீதனம் வாங்குவதில் பெற்றோர்களே.... முன் நிற்கிறார்கள் என்பது மனவருத்தமானது.

ஆனால்.... பெற்றோர் சாகும் போது....... தான் சேர்த்த பொருளை, பிள்ளைக்குக் கொடுக்காமல்....., வேறு யாருக்கு கொடுக்கப் போகின்றார்கள்.

மனமும், மனமும் சேர்ந்து வாழ்வதே...... வாழ்க்கை. அந்த வாழ்க்கையை வியாபாரப் பொருளாக்க வேண்டாம்.

Edited by தமிழ் சிறி

கனடா நிலவரப்படி, கனடிய டொலர்கள் 1 இலட்சத்தில் போய்க் கொண்டிருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.