Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அழகு ரசிப்பதற்கு மட்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உங்களில் ஆணோ அல்லது பெண்ணோ,திருமணம் முடித்தவரோ/முடிக்காதவரோ அடுத்தவரின் அழகை ரசிக்கிறது என்டால் ஒரு தனி இன்பம் அதுவும் மனைவி பக்கத்தில் இருக்கும் போதே வேற பெண்களை களவாய் ரசிக்கிறது இதெல்லாம் தனிக்கதை...ஒவ்வொருவருக்கும் அழகை ரசிப்பதில் ஒரு வித்தியாசமான ரசனை காணப்படும்...இந்த பகுதியில் நான் பார்த்து என்னை கம்பீரத்திரதால்,அழகால்,கவர்ச்சியால் ஜொல்லு விட வைத்தவர்களைப் பற்றி எழுதப் போறேன் நீங்களும் உங்களை கவர்ந்தவர்களைப் பற்றி எழுதுங்கள்.

என்னை முதலில் தன் கம்பீரத்தால் கவர்ந்தவர் என்டால் அது பொட்டம்மான் தான்...என்ன ஒரு

ஸ்மாட்...அவர் உரையாற்றும் அழகே ஒரு தனியழகு தான்..இவரது அழகு என்னைப் பொறுத்த வரை மரியாதைக்குரிய,கம்பீரமான அழகு.

நான் பார்த்து ஜொல்லு விடுகிற அழகு என்டால் அது ஹிந்தி நடிகர் ஜோன் ஏபிரகாம் தான்.என்ன உயரம்,சுப்பர் ஹான்சமான ஆள் இவர் தான் :lol: இவரைத் தெரியாதவர்கள் போய் கூகுலில் தேடவும் தெரிந்தவர்கள் இவரைப் பார்த்துப் பொறாமைப் படவும் :D ...அடுத்து அக்சய்குமாரின் அழகும் எனக்குப் பிடிக்கும்...ஜ டிவியில்[itv] தே பில்[the bill] என்று ஒரு நாடகம் போனது[இப்பவும் போகுதோ எனக்கு தெரியாது] அதில் ஒரு முஸ்லீம் பொலிசாக வாற ஒருத்தரையும் எனக்குப் பிடிக்கும் பெயர் மறந்து போய் விட்டது...இங்கு நான் போகின்ற நூலகத்தில் ஒருத்தன் வேலை செய்கிறான் அவனைப் பார்ப்பதற்காகவே கூடுதலாக நூலகத்திற்குப் போகிறது :D

பெண்களிலே எனக்கு சுஸ்மிதா சென்னை பிடிக்கும்.அவரது கண்ணும்,முகமுமே ஒரு தனியழகு ஆனால் இவரது மைனஸ் என்ன என்டால் அளவுக்கு மிஞ்சிய உயரம்...அடுத்து எனக்கு சில்பா செட்டியைப் பிடிக்கும்.வாவ் என்ன உடம்பு,பொடி ஸ்ரெச்சர்...பிபாசா பாசுவின் அழகும் எனக்குப் பிடிக்கும் ஆனால் எனக்கு இவரைப் பார்த்தால் பொறாமை ஏன் என்டால் இவர் தானே ஜோன் ஏபிரகாமின் கேள் பிரண்ட் <_< ...என்ட அசின் குட்டியை எனக்குப் பிடிக்காமல் இருக்குமா? இவரை நாள் முழுதும் பார்த்துக் கொண்டே இருக்கலாமே.

இது முற்றும் முழுதாக ஒரு நகைச்சுவைப் பதிவு...எப்படி வடக்கத்தியானை ரசிக்கலாம் அதோ,இதோ என சண்டை பிடிக்காமல் எனக்கு என் மனைவியை/கணவனை மட்டும் தான் பிடிக்கும் எனப் பொய் சொல்லாமல்[அதற்காக அவர்களை பிடிக்க கூடாது என சொல்ல வரேயில்ல.] உண்மையாக உங்களை கவர்ந்தவர்களை,உங்களுக்குப் பிடித்த‌ அழகானவர்களை பற்றி எழுதுங்கள்...நன்றி வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

அது ஹிந்தி நடிகர் ஜோன் ஏபிரகாம் தான்.என்ன உயரம்,சுப்பர் ஹான்சமான ஆள் இவர் தான்

அந்த ஆள் நான்தான்!!!!

  • கருத்துக்கள உறவுகள்

வம்பை விலை கொடுத்து வாங்குவேன் என்று அடம் பிடிக்கும் ரதியின் பதிவுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் :D

john-abraham-023-01.jpg

  • கருத்துக்கள உறவுகள்

மனித அழகு அல்லது கம்பீரம் என்பது பற்றிக் கேட்டால்.. எனக்கு என்னை இயற்கை படைச்ச அழகுதான் பிடிக்கும்..! அடுத்து எனக்கு அழகாக தெரியும் இயற்கையின் அனைத்துப் படைப்புகளும் எனக்கு பிடிக்கும். :D:)

மற்றும்படி இந்த உலகில் மனிதர்கள் யாரும் என்னைக் கவரும் வகையில் அழகாக இல்லை..! எல்லாரும் சுமார் தான். :D :D :D

Edited by nedukkalapoovan

... சிறீதேவிகளை தேட முன், திரும்பிப்பாருங்கள், நீங்கள் கமலகாசன்களோ என்று ...

  • கருத்துக்கள உறவுகள்

நாளொரு மேனி பொழுதொரு வண்ணம்.இதில எதைச்சொல்ல :unsure::lol:

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கையில் எல்லாமே அழகு.

அதை ரசிக்கும் மனங்களில் தான் வேறுபாடுகள்!

ஒருவருக்கு அழகில்லாமல் தெரிவது மற்றொருவருக்கு அழகாகத் தெரியும்!

ஆனால் பூமியில் பிறந்த எல்லாவற்றிலும் ஒரு விதமான அழகு கட்டாயம் இருக்கும்!

காய்ந்து போன சுள்ளிகளில் நாம் அழகைக் காணத் தவறுகின்றோம்!

அதுவே குருவிக் கூடாகும் போது, அதை ரசிக்கின்றோம்!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தரும் இதில் வந்து இருந்து கருத்து எழுதவில்லை பயமோ :lol: :lol: :lol:

... சிறீதேவிகளை தேட முன், திரும்பிப்பாருங்கள், நீங்கள் கமலகாசன்களோ என்று ...

அப்படி என்டால் அழகில்லாதவர்கள் அழகை ர‌சிக்க கூடாதோ :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருத்தரும் இதில் வந்து இருந்து கருத்து எழுதவில்லை பயமோ :lol: :lol: :lol:

தங்கச்சி எண்ட மரியாதைக்காக விட்டுட்டு இருக்கிறன்.

இல்லாட்டி

உந்த கேள்வியை வேறை ஆரும் கேட்டிருந்தால்.......நடக்குறதே வேறை :o

ஒருத்தரும் இதில் வந்து இருந்து கருத்து எழுதவில்லை பயமோ :lol: :lol: :lol:

பக்கம் பக்கமாக எழுத வேண்டிவரும் என்ற பயம் காரணமாக இருக்கலாம். <_<

ரதிக்கு பிடித்த இருவர் ஒன்றாக........

  • கருத்துக்கள உறவுகள்

ரதி

உண்மையில் இன்றுதான் இதைப்பார்த்தேன்

உங்களுக்கு தெரியும் நான் எப்பவுமே வாழ்க்கையில் நான் பட்டவற்றையே முதலில் எழுதுவேன். எனக்கு ஒன்றும் பெரிதாக வயதாகிவிடவில்லை. அழகை ரசிக்கும் வயதுதான். :wub:

ஆனால் தடை எப்படி வந்ததென்றால் மக்கள் வடிவில். :lol:

ஒரு இடத்துக்கு சென்றால் அல்லது வாகனத்தில் செல்லும்போது நானும் மகனும் ஒரு திசையில் பார்க்கின்றோம். இதனால் தற்போதைக்கு தடை.............. :o:(:(:(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அநேகமாக யாழில் உள்ளவர்களுக்கு ஜெனிலியாவையும்,நயனையும் பிடித்திருக்குது :rolleyes:

ரதிக்கு பிடித்த இருவர் ஒன்றாக........

இதில் யார் இரண்டு பேர்?...ஒருவர் அக்சய்குமார் மற்றவர் :unsure:

உண்மையாக வளர்ந்த பிள்ளைகள் இருக்கிற வீட்டில் இது ஒரு பிரச்சனை தான் அண்ணா...வெளிப்படையாக ஒன்றையும் ரசிக்க முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லிஸ்ற் ல நிறைய பேர் இருக்கிறதாலை ஆரைச்சொல்லுறது யாரை விடுவது எண்டு தான் யோசிக்க வேண்டி இருக்குது.

ஒரு ஆளைச் சொல்லி ஒரு ஆளைச் சொல்லாமல் விடக்கூடாது பாருங்கோ? :rolleyes:

அநேகமாக யாழில் உள்ளவர்களுக்கு ஜெனிலியாவையும்,நயனையும் பிடித்திருக்குது :rolleyes:

இதில் யார் இரண்டு பேர்?...ஒருவர் அக்சய்குமார் மற்றவர் :unsure:

உண்மையாக வளர்ந்த பிள்ளைகள் இருக்கிற வீட்டில் இது ஒரு பிரச்சனை தான் அண்ணா...வெளிப்படையாக ஒன்றையும் ரசிக்க முடியாது.

சில்பா செட்டியையும் ரவீனா ராட்டனையும் மாறி நினைத்து இனைந்த்து விட்டேன், ஆனாலும் ராவீனா ராட்டனை பிடிக்க்காதோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லிஸ்ற் ல நிறைய பேர் இருக்கிறதாலை ஆரைச்சொல்லுறது யாரை விடுவது எண்டு தான் யோசிக்க வேண்டி இருக்குது.

ஒரு ஆளைச் சொல்லி ஒரு ஆளைச் சொல்லாமல் விடக்கூடாது பாருங்கோ? :rolleyes:

பிரியாவிற்கு பயம் என வெளிப்படையாய் சொல்ல வேண்டியது தானே :lol:

சில்பா செட்டியையும் ரவீனா ராட்டனையும் மாறி நினைத்து இனைந்த்து விட்டேன், ஆனாலும் ராவீனா ராட்டனை பிடிக்க்காதோ?

சீச்சீ ரவீனா எங்கே அழகுச் சிலை சில்பா செட்டி எங்கே :D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

எங்கேயும் அழகை ரசிப்பதில் தப்பில்லை. எனக்கு முதன் முதலாக அழகு என நான் ரசித்தது 5 ஆம் ஆண்டிலே என்னோடு படிச்ச ஒரு பிள்ளை. பத்து வயசிலேயே முத்திட்டனோ எண்டோ எல்லாம் யோசிக்கப் படாது பாருங்கோ. அவவின் கையெழுத்து மிக அழகாக இருக்கும் அத்துடன் வலு நீட்டாத்தான் எப்பவும் வெளிக்கிடுவா. இடம் பெயர்வுகளோட அந்தப் பிள்ளையும் எங்கயோ வெளிநாட்டுக்குப் போயிட்டா. பிறகு ஆண்கள் கல்லூரியில படிச்சாலும் எங்கட சகோதரிப் பாடசாலையில படிச்ச இன்னுமொருத்தி அழகாய் இருந்தா. மூக்கும் முழியுமா கண்ணாடியும் போட்டுக் கொண்டு நீள ஒற்றைப் பின்னலுடன் அவள் வகுப்புக்கு வாற அழகே தனி. பின்னர் எனது மனைவி. நடிகைகளில் பலரை பிடிக்கும் ஆனால் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியது என்றால் அது சேலை கட்டிய திரிசாவின் அழகுதான்...... :wub:

trish2.jpg

trish3.jpg

trish4.jpg

Edited by Thumpalayan

  • கருத்துக்கள உறவுகள்

qqqqqqq.jpgnewsofap.com4ca0f19fddd0cGenelia-Half-Saree.jpgactress-genelia-latest-stills-1.jpg

கடந்த மூன்று வருடத்திலிருந்து, எனக்கு ஜெனொலியாவை மிகவும் பிடிக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடம் இல்லை.

அவள் பாவி.... கனவில் வந்து தரும் தொல்லைகள் கொஞ்ச நஞ்சமல்ல.... இதுவே அடுத்த வருடங்களுக்கும் தொடர வேண்டும் என்று விரும்புகின்றேன்.

மூன்று வருடமாக கனவில் கூட ஏகபத்தினி விரதம் இருக்கும் உங்களை நினைத்து பெருமிதத்தில் கண்கள் பனிக்கின்றன. :(

ரதி நீங்கள் குறிப்பிட்ட நபர், (சகாரா அக்கா இணைத்த படத்தில் இருப்பவர் போலவே ஒருவர் (பாக்கிஸ்தானியர்) ஹலால் இறைச்சிக் கடையில் வேலை செயக்கிறார்... :lol: :lol: :D^_^

மனித அழகு கண்ணுக்கு முன்னால் அடிக்கடி தெரிவது தானே? இயற்கையின் அழகு எவ்வளவோ இருக்கு அதனை தினமும் அனுபவிக்க முடிவில்லை என்ற வருத்தம் உள்ளூர இருக்கு...

எனக்கு அதிகாலையில் சூரிய உதயத்தை மலையிலிருந்து, கடற்கரையில் இருந்து ரசிக்கப் பிடிக்கும் மனதுக்குப் புதுப் பொலிவு உண்டாகும்.

ஒரு தடவை பாடசாலையிலிருந்து கேரளாவில் உள்ள தேக்கடி என்ற இடத்திற்கு சுற்றுலா சென்றோம். ஒரு இரவு புறப்பட்டு, அதிகாலை வேளையில் அங்கே சென்றடைந்தோம். வாகனத்தின் கடைசி இருக்கையில் இருந்து கலைத்துக் களைத்து, தூக்கத்தில் எழும்பிப் பார்த்த போது... வந்த வீதி எதுவுமே தெரியவில்லை, சுற்றிலும் மலைகள், மரங்கள், நீர்வீழ்ச்சி ஒருபக்கம், மரங்களின் இடையே மெல்லிய சூரிய ஒளிக் கீற்றுக்கள் வார்த்தைகளில் அவற்றை வர்ணிக்க முடியாது, மறக்கவும் முடியாது... :wub:

(கண்ணைக் கட்டிக் காட்டில விடுறது என்று சொல்லுவாங்களே அது இது தானா? நல்லாத்தானே இருக்கு என்று நினைத்தது வேறு... :wub: )

ஆனால் சூரிய அஸ்தமனம் பார்த்தால் ஏனோ ஒரு வகை மன அழுத்தத்தைக் கொடுப்பது போன்று உணருவேன்...

இணையத்தில் தேடிய போது கிடைத்த படங்கள் சில...

Thekkady-Wildlife.jpg

http://www.tripadvisor.com/ReviewPhotos-g297636-r10072825-Thekkady_Kerala.html#17217232

அதே போல கண்டி கொண்டை ஊசி வளைவுகளினால் போகவும் பிடிக்கும். ஆனால் வன்னிக் காட்டுக்குள் தான் ஒரு தடவை கூட போனதே இல்லை... :(

:wub::)

Edited by குட்டி

குட்டி அந்த இறைச்சிக் கடைக்காரர் எங்கால பக்கம் இருக்கிறார் :lol:

இயற்கையை மனிசராய் பிறந்த எல்லோரும் தான் ரசிக்கிறார்கள்...மனிதர்களுள் யாரைப் பிடித்திருக்குது என சொல்வதற்குப் பயமோ

குட்டி அந்த இறைச்சிக் கடைக்காரர் எங்கால பக்கம் இருக்கிறார் :lol:

இயற்கையை மனிசராய் பிறந்த எல்லோரும் தான் ரசிக்கிறார்கள்...மனிதர்களுள் யாரைப் பிடித்திருக்குது என சொல்வதற்குப் பயமோ

ரதி நீங்கள் இணைத்த பாடலில் உள்ள இடங்களும், இசையும் நன்றாக உள்ளது, ஆனால் ஒரு கோதாரி சொல்லும் விளங்க இல்லை. :unsure:

நான் உண்மையைச்சொல்லி ஒரு பொம்பிள்ளைப் பிள்ளையை இறைச்சிக்கடையளுக்கு அலைய விடுகிற பாவத்தை என்னை செய்ய வைக்கதேயுங்கோ... :mellow:

நான் குறிப்பிட்ட இயற்கை அழகை எப்போதாவது ஒரு முறைதானே ரசிக்க சந்தர்ப்பம் கிடைக்கும், இப்படியான இடங்களுக்குத் தனியாகப் போனால் தான் இயற்கையை முழுதும் ரசிக்க முடியும், நீங்களே சொல்லுங்கோ, அழகானவர்களுடன் போகும் போது நீர்வீழ்ச்சியில் தள்ளிவிட்டால், எனக்கு நீந்தக் கூட தெரியாது... :o:blink: (எல்லாம் ஒரு safety தான் :D:lol: )

மனிதருள் யாரை பிடிக்கும் என்று கேட்டால், பொதுவாக எல்லோரையும் பிடிக்கும் அது அவர்களது அழகை வைத்து என்று சொல்ல முடியாது, அவர்கள் குணத்தை வைத்தே எனக்குப் பிடிக்கும். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.