Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழீழ விடுதலை பற்றிய உங்களது தற்போதய மனநிலை என்ன?

64 members have voted

  1. 1. தமிழீழ விடுதலை பற்றிய உங்களது தற்போதய மனநிலை என்ன?

    • ஒற்றுமையாக போராடி வெல்வோம்
    • உலகம் எமக்கு ஒரு நீதியை அளிக்கும்
    • நம்பிக்கை போய்விட்டது இனி சான்ஸ் இல்லை
    • பூகோள அரசியல் மாறும் எமக்கு ஒரு சான்ஸ் தரும்
    • மந்திரத்தில் மாங்காய் விழும் எனக்காத்திருக்கிறோம்
    • இந்தியா வெண்டுதரும் கவலையை விடுங்கோ
    • நான் தலைவராகலாமா எண்டு ஜோசிக்கிறேன்

Please sign in or register to vote in this poll.

Featured Replies

சிறீ லங்கா அரசு சர்வதேசத்தின் கைகளை கட்டிவிட்டு தாயகத்தில் பாரிய அழிவுகளை மேற்கொண்டதற்கு த.வி.பு ஓர் பயங்கரவாத அமைப்பு என்பதை சர்வதேசம் ஏற்றுக்கொண்டதே அடிப்படை காரணமாக அமைந்தது. அதாவது சிறீ லங்கா அரசின் பயங்கரவாதத்தைவிட த.வி.புவின் பயங்கரவாதமே சர்வதேசத்தின் கண்களிற்கு அதிக ஆபத்தாக தெரிந்தது. த.வி.புவினை மகிமைப்படுத்தி அமைப்பு ரீதியாக அதை உயர்ந்த நிலைக்கு கொண்டுசெல்வதே நம்மவர்களின் நோக்கம் என்றால்.. அது தாயகத்து மக்களிற்கு ஓர் விடிவை ஏற்படுத்தி கொடுக்கப்போவது இல்லை, அத்துடன் வெளிநாடுகளிலும் நம்மவர்களிற்கு பயன்களை விளைவிக்கப்போவது இல்லை.

தொடர்ந்தும் த.வி.புவிற்கு ஆலவட்டம் பிடிப்பதையே நம்மவர்கள் நோக்கமாக கொண்டால் சிறீ லங்கா அரசு தொடர்ந்தும் தனது ராசதந்திரங்களிலும், பரப்புரைகளிலும் வெற்றிபெற்று தனது நோக்கங்களை இலகுவாக சாதிப்பதற்கே வழிகோலும்.

  • Replies 84
  • Views 6.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சிறீ லங்கா அரசு சர்வதேசத்தின் கைகளை கட்டிவிட்டு தாயகத்தில் பாரிய அழிவுகளை மேற்கொண்டதற்கு த.வி.பு ஓர் பயங்கரவாத அமைப்பு என்பதை சர்வதேசம் ஏற்றுக்கொண்டதே அடிப்படை காரணமாக அமைந்தது. அதாவது சிறீ லங்கா அரசின் பயங்கரவாதத்தைவிட த.வி.புவின் பயங்கரவாதமே சர்வதேசத்தின் கண்களிற்கு அதிக ஆபத்தாக தெரிந்தது. த.வி.புவினை மகிமைப்படுத்தி அமைப்பு ரீதியாக அதை உயர்ந்த நிலைக்கு கொண்டுசெல்வதே நம்மவர்களின் நோக்கம் என்றால்.. அது தாயகத்து மக்களிற்கு ஓர் விடிவை ஏற்படுத்தி கொடுக்கப்போவது இல்லை, அத்துடன் வெளிநாடுகளிலும் நம்மவர்களிற்கு பயன்களை விளைவிக்கப்போவது இல்லை.

தொடர்ந்தும் த.வி.புவிற்கு ஆலவட்டம் பிடிப்பதையே நம்மவர்கள் நோக்கமாக கொண்டால் சிறீ லங்கா அரசு தொடர்ந்தும் தனது ராசதந்திரங்களிலும், பரப்புரைகளிலும் வெற்றிபெற்று தனது நோக்கங்களை இலகுவாக சாதிப்பதற்கே வழிகோலும்.

உங்களின் கருத்தும் ஒட்டுக் குழுக்களின் கருத்தும் ஒன்றே..!

என்னுடைய கேள்வி விடுதலைப்புலிகளுக்கு முன்னர் தமிழீழக் கோரிக்கையை ஜனநாயக வழியில் முன்னுறித்திய போது.. அதனை மேற்கு நாடுகள் வரவேற்றனவா.. இல்லையே.. ஏன்..??!

ஒட்டுக்குழுக்கள்.. இந்தியப் படைகளுடன் இணைந்து இன அழிப்பு புலி அழிப்பு சேவகம் செய்த போதும்.. இந்தியா அவர்களிடம் தமிழீழத்தை மீட்டு ஒப்படைக்கவில்லையே ஏன்..??!

பிரேமதாச காலத்தில் இருந்து மகிந்த காலம் வரை சிங்களத்துக்கு அடிவருடி.. புலி அழிப்புக்கு உதவி வரும் அமைப்புக்களை வைச்சு தமிழீழத்தை சிங்களம் அவர்களிடம் கையளிக்கவில்லையே ஏன்..??!

மலையகத்தில் இருந்து கொண்டு பல்லாண்டுகளாக சிங்கள தேசியத்தோடு அரசியல் செய்து வரும் எவரிடமும் தமிழீழத்தை கையளிக்க முன்வரவில்லையே ஏன்...???!

இவை எல்லாம் புலிகளாலா...??! புலிகளை தூக்கிப் பிடிச்சதாலா...??! புலிகளைப் பற்றி வாயே திறக்காதவர்களிடம் கூட சிங்களமோ.. இந்தியாவோ.. எதனையும் வழங்க முன்வரவில்லை ஏன்..??!

1987 உடன்பாடாக இருக்கட்டும்.. 2002 உடன்பாடாக இருக்கட்டும்.. சர்வதேச அளவில் தமிழர்களின் பிரச்சனையை வெளிப்படுத்தியது விடுதலைப் புலிகளே..!

முள்ளிவாய்க்கால் நிகழ்வு வரை... போர் முடிந்ததும்.. இனப்பிரச்சனைக்கு தீர்வு என்று போலி வாக்குறுதிகளைக் கொடுத்துக் கொண்டிருந்த நாடுகள்.. முள்ளிவாய்க்கால் இறுதிமுடிவின் பின்.. இனப்பிரச்சனை என்ற ஒன்று உள்ளது என்பதையே பல நாடுகள் வெகு செளகரியமாக மறந்து விட்டன. இப்போ எல்லோரும் சிறீலங்காவில் வலியுறுத்துவது இன ஐக்கியம் பற்றியே. இதனை கொசவாவிலோ... கிழக்குத் திமோரிலோ.. தென் சூடானிலோ... ஏன் வலியுறுத்தாமல் விட்டார்கள்...???!

ஆட்சி மாற்றங்களை ஜனநாயக வழியில் கொண்டு வருவதை விட்டுவிட்டு.. ஆப்கானிஸ்தான்.. ஈராக்.. லிபியா.. ஐவிரிகோஸ்ட்.. ஏமன்.. சிரியா.. எகிப்து.. துனிசியா என்று எங்கும் குண்டுகளால் ஆட்சிமாற்றத்தைக் கோருவது எந்த வகையில் ஜனநாயகம் ஆகும். அது பயங்கரவாதம் இல்லையோ...???!

விடுதலைப்புலிகளின் ஆயுத வழிப் போராட்டமும் மாவீரர்களின் தியாகமும் தான் எமக்கு ஒரு பிரச்சனை இருக்கு என்பதையே உலகம் அங்கீகரிக்கச் செய்திருந்தது என்பதற்கு முள்ளிவாய்க்காலுக்கு முன்னாலான நிகழ்வுகள் அப்பட்டமாக சொல்லி நிற்கின்ற வேளையில்.. விடுதலைப் புலிகளை உச்சரிக்காது.. தமிழீழம் மீட்க முடியும் எமது பிரச்சனையை உலகின் கவனத்துக்கு கொண்டு வர முடியும் என்பது ஒன்றும் அறிவுபூர்வமானதாக இல்லை.

விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக காட்டி... அவர்களை தமிழ் மக்களிடம் இருந்து தனித்துக் காட்டி.. தமிழ் மக்களின் பிரிவினைவாத நிலைப்பாட்டை முற்றாக நிராகரிப்பதே சர்வதேச சமூகத்தினதும் இந்தியாவினதும் நிலைப்பாடு..! அதன்படியான நிகழ்ச்சி நிரலின் கீழ் தான் முள்ளிவாய்க்காலும் நடந்து முடிந்திருக்கிறது.

லிபியாவில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு எழும்ப முதலே நேட்டோ விமானங்கள் எழும்பி விட்டன. ஆனால் சிறீலங்காவில் ஐநா விசாரணை அறிக்கை பகிரங்கமாக குற்றம் சாட்டியும் நடவடிக்கை எடுக்க.. வாக்கெடுப்பு அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள்..! லிபியாவில் இந்தியா ரஷ்சியா சீனா இவற்றின் நிலைப்பாடுகளை விஞ்சி நேட்டோ மனித உரிமைகளைக் காக்க குண்டு போடலாம்.. ஆனால் சிறீலங்காவில் அப்படி செய்வது கூடாது. லிபியாவில் ஆட்சிமாற்றம் வேண்டி வன்முறையை தூண்டி விடலாம்.. ஆயுத உதவி செய்யலாம்.. அது பயங்கரவாதம் ஆகாது.. ஆனால் சிறீலங்காவில் ஆகும்..???!

இப்படியான வெளிப்படையான இரட்டை நிலைப்பாடுடைய இன்றைய போலி சர்வதேசக் கொள்கைகளால் தான் எமது போராட்டம் நெருக்கடியை சந்தித்து நிற்கிறதே அன்றி விடுதலைப் புலிகளால் அல்ல. விடுதலைப் புலிகளால் தான் எமக்கு பிரச்சனை உள்ளது என்பதையே சர்வதேசம் அங்கீகரிக்க வேண்டி வந்தது. 1983 மற்றும் அதற்கு முன்னாக எத்தனையோ இனக்கலவரங்கள் நடந்தும் எந்த நாடும் எமக்கு ஒரு பாதுகாப்பான அரசியல் தேவை என்பதை சிங்களத்திடம் வலியுறுத்தி நிற்கவில்லை. மாறாக எமது அவல நிலையில் அவர்கள் தங்கள் நலன்காக்க முற்பட்டனர். இதனையே இந்தியாவும் செய்தது.

விடுதலைப் புலிகள் மட்டுமே பிராந்தியத்திலும் சரி அதற்கு வெளியிலும் சரி எமது பிரச்சனையை வெளிச்சம் போட்டுக் காட்டினர். அவர்கள் களத்தில் வழங்கிய அரசியல்.. இராணுவ நெருக்கடிகளால் தான்.. எமக்கு ஒரு பிரச்சனை இருக்கு என்பதையே உலகம் ஏற்றுக் கொள்ள நிற்பந்திக்கப்பட்டது. விடுதலைப் புலிகளை அழித்துவிட்டால்.. அதனை இல்லாமல் செய்து தாம் விரும்பியபடி காய் நகர்த்தலாம் என்ற நோக்கில் தான் பயங்கரவாத அறிவிப்புகளும்... போர் முனைப்புக்களும் மேற்கொள்ளப்பட்டன. விடுதலைப் புலிகளை அழிக்கும் வரை பேச்சுவார்த்தை தீர்வு என்று உச்சரித்தவர்கள் இன்று அவற்றை எல்லாம் கிடப்பில் போட்டுவிட்டனர்.

மாநில சுயாட்சி என்றவர்கள்.. இன்று 13ம் திருத்தச் சட்டத்துக்குள் அதிகாரம் குவிந்து கிடக்குது.. அதுபோதும் என்கின்றனர். இதே 13ம் திருத்தச் சட்டத்தை 1988 இல் தெளிவாக நிராகரித்து விட்டனர் தமிழ் மக்கள். இருந்தும்.. அவை இலகுவாக மறக்கப்பட்டு மறைக்கப்பட்டு.. இன்று அவற்றை முன்னிறுத்துகிறார்கள்.. இந்தியர்களும் அமெரிக்கர்களும்..!

கூட்டமைப்பினருடன் பேசக் கூட விரும்பாத நிலையில் இருக்கிறது சிங்கள அரசு. இதையே 2002 இல் எங்கு பேசலாம்.. எங்க போவம் என்று விடுதலைப் புலிகள் காட்டிய இடமெல்லாம் போய் பேசினார்கள். சர்வதேச பங்களிப்பை விடுதலைப்புலிகள் இந்தப் பிரச்சனைக்குள் கொண்டு வர முனைந்தது போல.. கூட்டமைப்பால் நிச்சயம் செய்ய முடியாது. ஏனெனில்.. கூட்டமைப்போடு பேசுவதையோ சர்வதேச அனுசரணையையோ சிறீலங்கா இதய சுத்தியோடு செய்ய வேண்டிய தேவை இன்றில்லை. அதனை சிறீலங்காவிற்கு ஏற்படுத்திக் கொடுத்தது இந்தியா உள்ளிட்ட சர்வதேசமுமே ஆகும். இதனால் தாங்களும் சிறீலங்கா ஆட்சியாளர்கள் மீது பிடிதளர்ந்து போய் உள்ளனர். அதனையும் அவர்கள் உணர்வதால் தான் விரும்பியோ விரும்பாமலோ.. சில மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பட்டும்படாமல் அறிக்கை விட்டு வருகின்றனர்.

நாம் செய்திருக்க வேண்டியது.. விடுதலைப் புலிகளை இன்னும் இன்னும் இராணுவ ரீதியிலும் அரசியல் ரீதியிலும் பலப்படுத்தி இருக்க வேண்டியதே. அதை தவறவிட்டுவிட்டோம். ஆனால் இன்று எம்மிடமுள்ள ஒரே ஆயுதம்.. விடுதலைப் புலிகளின் கொள்கையின் பால் ஜனநாயக வழியில் மக்கள் திரண்டுள்ளனர் என்று காட்டுவதுதான்.

1989 தேர்தலில் ஈரோஸ் விடுதலைப்புலிகள் சார்ந்து பெரு வெற்றியை நிலைநாட்டியதே இந்திய இராணுவத்தை வெளியேற்ற காரணமானது. மக்கள் தமது விருப்பத்தை அந்தத் தேர்தலில் வெளி உலகுக்கு காட்டினர். அதேபோல்.. புலம்பெயர் நாடுகளாகட்டும்.. தமிழகம் ஆகட்டும்.. தாயகம் ஆகட்டும்.. விடுதலைப்புலிகளின் தமிழீழக் கொள்கையின் பால் மக்களை அணித்திரளச் செய்வதன் மூலமே விடுதலைப்புலிகளின் ஆயுத வழிப் போராட்டத்திற்கு பெறுமதி அளிக்க முடியும். எதை சர்வதேசமும் இந்தியாவும் பயங்கரவாதமாக உச்சரித்து எமது பிரச்சனையை கிடப்பில் போட முனைந்தார்களோ.. அதே கூறு விஸ்வரூபமாக ஜனநாயக வழியில் கிளம்பும் போது அடக்குமுறைக்கு ஆயுதத்தைப் பாவிக்க முடியாத நிலை வரும்.

அப்போது சர்வதேசத்தின் நிலைப்பாடும் மாறும். இன்று லிபியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு வலிந்து போய் உதவி செய்யும் நிலையில் உள்ள நேட்டோ நாடுகளை.. நாளை எமக்காக மனித உரிமைகளை தூக்கிக் கொண்டு வரிசையில் நிறுத்தவும் முடியும். அதற்கான அரசியல்.. பொருண்மிய.. மக்கள் தொகை செல்வாக்கு எம்மிடம் உண்டு. பிராந்தியத்தில் எமது தாயக அமைவிடத்திற்கும் அது உண்டு. இதனை உணராமல் த.வி.பு தவிர்ப்பு கொள்கை என்பது எமக்கு எந்த விமோசனத்தையும் தரப்போறதில்லை..! அவை ஏலவே தோற்றுப் போன நிலைப்பாடுகளாக உள்ளமை கண்கூடு.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

28 may 20011

தமிழீழத்தில் ஈடுபாடு உள்ள தமிழர்களின் எண்ணிக்கை = 37

பார்வையாளர்களாக மட்டும் இருக்கவிரும்பும் தமிழர்களின் எண்ணிகை = 1,120

-95%

Edited by Panangkai

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை உடைப்பது கடினம் தான்! ஆயினும் இந்தியா உடையப் போகின்றது என்ற ஒரு நிலையைக் கொண்டு வரலாம்!

சீமான் தலைமையில் தமிழ் நாடு, மெல்ல மெல்லத் துயிலெழுகின்றது!

தமிழ் நாட்டில் மாற்றம் வரும் போது, எமக்கு ஒரு தீர்வு நிச்சயம் வரும்!

சிங்களம் முள்ளி வாய்க்காலில் செய்த முழு அழிவுகளுக்கும் காரணம், சிங்களத்திடம் இழப்பதற்கு எதுவும் இருக்கவில்லை.

ஆனால் இந்தியாவின் நிலை அப்படியல்ல!

தமிழ் நாடு இந்தியாவில் இருந்து பிரிந்தால் அது ஒரு ஆரம்பமாக மட்டுமே இருக்கும்!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒற்றுமையாகப் போராடி வெல்வோம் என்பதில் வாக்களித்திருக்கிறேன். இது எனது விருப்பத்தையும் மற்றவர்களுக்கான செய்தியையும் எடுத்துச் சொல்ல.

ஆனால், உண்மை மன நிலை நம்பிக்கை போய்விட்டது இனி தனித் தமிழீழத்திற்கான சான்ஸ் மிகக் குறைவு என்பதே.

  • கருத்துக்கள உறவுகள்

ஞரழவந

இந்தியா என்பது கண்ணாடியல்ல கல்லெறிஞ்சு உடைக்கிறதற்கு. முன்பொருகாலத்தில் இந்தியஉடைவை விரும்பிய ஜரோப்பா அமெரிக்கா கூட தற்சமயம் இந்தியாவில் பிரச்சனைகள் உருவாவதை விரும்பவில்லை. காரணம் அவர்களது பொருளாதார நலன்கள்

ஆனானப்பட்ட சோவியத் யூனியனே துண்டாக உடைந்து சிதறிப் போயிருக்கிறது.ஒரு காலத்தில் nஅமரிக்காவுக்கு ஈடு கொடுத்த வல்லரசு.ஆனாலும் அதன் பிரிவைத் தடுக்க முடியவில்லை.இந்தியா ஒரு நாடென்று வெளியில் சொன்னாலும் உள்ளுக்குள் பிரிந்துதான் கிடக்கிறது.தமிழ்நாட்டுக்குத் தண்ணி கொடுக்க கர்நாடகமும் கேரளமும் மறுக்கிறது.இந்திய மத்திய அரசால் ஒரே நாடு என்ற கொள்கையின் படி அந்த மாநிலங்களைப் பணிய வைக்க முடியவில்லை.தேசியக் கட்சியான காங்கிரசால் மாநிலங்களில் செல்வாக்குச் செலுத்த முடியாதுள்ளது.பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் இனப்பாகுபாடும் மேலும் இறுக்கமடையும் பொழுது பிரிவினை தவிர்க்க முடியாததாகிவிடும்.இந்தியாவின் உடைவை சீனாவும் பாகிஸ்தானும் விரும்பும் மேற்குலகும் ஏதாவது ஒரு தேவை கருதி அவ்வாறான ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் பொழுது இந்தியாவின் உடைவு தவிர்க்க முடியாததாகிவிடும்.இந்தியா உடைந்தால் உலகில் தமிழருக்கு 2 தேசங்கள் கிடைக்கும்.நாம் தமிழர் எமக்கான காலம் வரும்வரை போராடிக் கொண்டே இருப்போம்.எம் பிரச்சனையை தியாகம் நிறைந்த ஆயுதப்போராட்டத்தின் மூலமாக உலகிற்கு புலிகள் உணர்த்திவிட்டுச் சென்றுள்ளனர்.இதை ஜனநாயகப் போராட்டத்தின் மூலம் நாம் ஒற்றுமையாகச் செயற்பட்டால் எமது வெற்றி வெகு தூரத்தில் இல்லை.தமிழகதpன் பரிபூரண எழுச்சியும் ஈழத்தமிழர்களின் ஒறு;றுமையும் மிகவும் அவசியமான தேவைகளாகும்.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்தை தொடர்ந்து நெல்லயன் வாந்தி எடுக்கிற முகக் குறியையும் இணைத்துள்ளார் ஆனால் எங்கட வாழ்க்கையில இருந்து இந்தியத்தை பிரித்துப்பார்க்க முடியாது. இந்தக் களத்தில் பொழுதுபோக்கு பாடல்கள் திரைப்படம் நகைச்சுவை என எல்லா இணைப்பும் இந்தியம் தான். 98 வீதம் இந்தியம். மனதுக்கினிய சிங்களப்பாடல்களை கண்ணால் கூட காணமுடியாது. கருத்துக்களம் உதராணம். அன்றாட வாழ்வில் சினிமா சீரியல் மத சம்பிரதாய முறைகள் கலியாணம் சீர்வரிசை என்றும் உண்ணும் உணவு உடை உறக்கத்தில் நாயந்தார திரிசாவை கனவு காணும் வரை இந்தியம் கலந்தே உள்ளது. இதை பிரிக்கமுடியாது. ஆனால் சேர்ந்து வாழமுடியாது என்பது விந்தையானது. உண்மையில் எமது வாழ்வு இந்தியத்துள்ளேதான் கிடக்கின்றது.

இந்தியா உடைவது குறித்த கருத்தும் அதை தனிநாடு அமைவதற்கு சாதகமாக சிந்திப்பதும் யதார்த்தத்துக்கு புறம்பானதும் எதிர்மறையானதும் கூட.

இந்தியாவோடு தமிழ் ஈழத்தை இணைத்து விட்டால் உருப்பட்ட மாதிரி தான் இப்பவே நடிகர்களுக்கு பாலபிசேகம் அது,இது என செய்யத் தொடங்கி விட்டார்கள் தமிழ்நாட்டையும் இணைத்து விட்டால் தமிழர்களின் பெரும் சொத்தான கல்வி பறி போய் விடும்...வரதட்சனை,சீதனக் கொடுமை அதை காரணமாய் வைத்து உயிரைப் பலி வாங்குதல்,விபச்சாரம்,அரசியல்வாதிகளின் ஆதிக்கம் எல்லாவற்றிக்கும் மேலாக எங்கும்,எதிலும் இலஞ்சம் தலை விரித்தாடும்...தற்போது இருக்கிற கொஞ்ச,நஞ்ச நிம்மதியும் போய் ஈழத் தமிழினமே அழிந்து போய் விடும்.

இந்தியாவுடன் இணைவது என்றில்லை ஆனால் இந்திய உதவியில்லாமல் எமக்கு எந்தஒரு தீர்வும் இல்லை.

இங்கு பலர் தமக்கு என்ன விருப்பம் என்று எழுதுகின்றார்கள் அது யதார்த்தமா என்பதை மறந்துவிட்டு.

இந்தியா உடையவேண்டும்,சீமான் முதலமைச்சராக வரவேண்டும் நித்திரையில்தான் இவையெல்லாம் சாத்தியம்.கண்டுகொண்டே இருங்கள்.

இப்போ நாங்கள் இருக்கும் நிலையைவைத்து முடிந்தளவு ஒரு தீர்விற்கு யார் காலிலில் விழுந்தாவது எடுப்பது தான் ஒரே தெரிவு.அது இந்தியாதான்.

இதேபோல் கலைஞன் எழுதியது தான் நடைமுறை உண்மை,நெடுக்ஸ் எழுதுவது யாழில் பச்சைபுள்ளிக்கும்,பின்னர் போய் போத்திப்படுப்பதற்கும் தான் உதவுமே தவிர எந்த ஒரு தீர்வையும் எமக்கு கொண்டுவரப்போவதில்லை.

நேற்று புலத்தில் என்ற புலிகளின் ஒரு பத்திரிகையில் சேரமான் எழுதுயிருக்கின்றார்"உருத்திரகுமார் புலிகளிடம் 2008 ஆண்டு கேட்டாராம் பரந்தன் ராஜன் ஊடாக ரோ நாராயணனிடம் உதவி கேட்போமோ என்று" நிலமைகள் அந்தளவில் இருந்திருக்கின்றன.

புலம்பெயர்ந்து வீரவசனம் பேசுவதில் பலனில்லை.

ஆக்குவனே அழிப்பான் என்பது போல தான் வட நாட்டவர்கள்........... :D:lol:

  • தொடங்கியவர்

சிங்களவரின் நேரடி ஆடிமைகளாக.. அவர்களுக்கு சேவகம் மட்டுமே செய்யக் கூடிய கீழ்த்தர அடிவருடிகளாக இருப்பதை விட... முன்னேற்றத்துக்கு வழியே இல்லாமல் நிச்சய வீழ்ச்சியே இறுதி என்னும் உறுதியுடன் வாழ்வதைவிட...

இந்தியாவில் 2ம்தர பிரஜைகளாக இருப்பது மேல்.

Edited by Panangkai

1. இந்தியா உடையாது.

2. இலங்கையில் இனி தமிழ் ஈழம் சாத்தியம் இல்லை

3 நாம் ஒற்றுமையாக் இருந்தால் வெளிநாடுகளின் உதவியுடன், ஒரு அரசியல் தீர்வே சாத்தியம்

  • தொடங்கியவர்

ஆனானப்பட்ட சோவியத் யூனியனே துண்டாக உடைந்து சிதறிப் போயிருக்கிறது.

காசு.. சாப்பாடு.. போண்றவற்றையே வாழ்கையில் முக்கிய குறிக்கோளாக கொண்ட நாடாகிய இந்தியாவில் இது சாத்தியமில்லை.

சுழியோடு நீந்தி கரையேரலாம் தனிப்பட்டமுறையில்.. மண்டையுள்ளவர்களுக்கு அங்கிகாரம் கிடைக்கும்..

சிரீ லன்காவில் நீங்கள் என்னதான் பெரியவராக இருந்தாலும்.. தமிழெண்டால் நாயிலும் கீழானவர்கள்.. தன்னை துன்புறுத்தி இன்பம்காணுவது சிலருக்கு இன்பம்.. பல இலங்கைதமிழர்களுக்கும் இது பொருந்தும்..

என்ன பாவம் செய்தேனோ இப்படிப்பட்ட ஒரு கேவலமான / கீழ்த்தரமான இனத்தில் வந்து பிறந்திருக்கிறேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1. இந்தியா உடையாது.

2. இலங்கையில் இனி தமிழ் ஈழம் சாத்தியம் இல்லை

3 நாம் ஒற்றுமையாக் இருந்தால் வெளிநாடுகளின் உதவியுடன், ஒரு அரசியல் தீர்வே சாத்தியம்

தமிழகத் தமிழனனா நான் , இங்கிருக்கும் தமிழினவாதிகளிடம் இதையே சொன்னபோது ”என்ன தோழர் உளறுகிறீர்கள்” என்று உளறுவாயன் பட்டம் வாங்கிக் கொண்டது தான் மிச்சம். இந்திய உடைப்பிலிருந்து ஈழம் பீறிட்டுக் கிளம்பும் என்பது போன்ற யாழ் கள பதிவாளர்களின் பதிவுகளை ஆயாசமளிக்கின்றன. தமிழனின் அத்துனைத் தோல்விக்குமான காரணங்களில் முதன்மையானது யதார்த்தை ஒட்டிச் சிந்திக்க அவன் மறுப்பதே முதலிடம் பெறுகிறது. அப்படியானவர்கள் மனச்சாந்தியடையும் வகையில் சிந்தித்தாலும் கூட இந்தியா இன்னும் 50 ஆண்டுகளுக்குள் உடையுமென்பது கனவில் உடலுறவு கொண்டு, நினவில் பிள்ளையைத் தேடுவதற்குச் சமம். இந்தியா என்பது ஆதிக்க மனோபாவ அதிகார சக்திகளின் வலுவான பிடியில் உள்ள நாடு. பிரிந்து செல்வதற்கான அனைத்து முகாந்திரங்களையும் கொண்டுள்ள காசுமீரமே தலைகீழாக தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கிறது. மற்ற மாநில இன தேசிய மக்கள் அனைவரும் இந்திய தேசிய பக்தியில் மூழ்கித் திளைக்கிறார்கள்.மூழ்கித் திளைக்க வைக்கப்படுகிறார்கள்.அதை மீறிச் சிந்திக்கும் மனப்பான்மை வளராமல் ,வராமல் இருக்க இந்திய தேசியம் அனைத்து முயற்சிக்களையும் செயல்பாடுகளையும் திட்டமிட்டுச் செய்து வருகிறது. ஆக இந்தியா உடையும் , தமிழர்க்கு இரு நாடுகள் என்ற எண்ணத்திலிருந்தான ஈழ விடுதலையை , இப்போதைக்கேனும் ஒத்தி வையுஙகள்.

இப்போதைக்கு இயன்றது சாணக்கியத்தன அரசியல் ராசதந்திர நகர்வுகளூடாக ஒரு அதியுச்ச அதிகாரமுள்ள அரசியல் தீர்வை அடைவதே. பிற்காலத்தில் பூகோள அரசியல் நிலைகள் மாறும் போது , அந்த அதியுச்ச அரசியல் தீர்விலிருந்து ஈழம் அடையும் சாத்தியத்தை யோசிக்கலாம்.

Edited by புலேந்திரன்

இந்தியாவில் சாதாரண இந்தியனே வாழ முடியாமல் அல்லாடுகிறான். இந்த லட்சணத்தில் நாங்கள் எப்படி அவர்களோடு சேர்ந்து வாழ்வது??. எப்படி இந்தியாவுடன் சேர்ந்து வாழலாம் என சிறு விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும்.

திரைப்படப்பாடல்களை சிறுவயது முதல் நாங்கள் கேட்பதும் அதுவும் தமிழ் நாட்டு மக்கள் தமிழ் மொழி பேசுவதாலும் அவர்களின் கலாச்சாரத்துடன் நாமும் பின்னிப் பிணைவதாலும் அவர்களின் படங்களை பார்த்து பாடல்களை கேட்கிறோம்.எமது பொப்பிசை பாடல்கள் பிரபல்யமான போது நாமும் கேட்டோம். தமிழ் நாட்டிலும் கேட்டார்கள்.எனவே அவர்களது வாழ்வு எமக்குள்ளே உள்ளது என்பதும் நம்ப முடியாதவை.கற்பனையானவை.

இந்தியாவோடு தமிழ் ஈழத்தை இணைத்து விட்டால் உருப்பட்ட மாதிரி தான் இப்பவே நடிகர்களுக்கு பாலபிசேகம் அது,இது என செய்யத் தொடங்கி விட்டார்கள் தமிழ்நாட்டையும் இணைத்து விட்டால் தமிழர்களின் பெரும் சொத்தான கல்வி பறி போய் விடும்...வரதட்சனை,சீதனக் கொடுமை அதை காரணமாய் வைத்து உயிரைப் பலி வாங்குதல்,விபச்சாரம்,அரசியல்வாதிகளின் ஆதிக்கம் எல்லாவற்றிக்கும் மேலாக எங்கும்,எதிலும் இலஞ்சம் தலை விரித்தாடும்...தற்போது இருக்கிற கொஞ்ச,நஞ்ச நிம்மதியும் போய் ஈழத் தமிழினமே அழிந்து போய் விடும்.

மையவாத தமிழ்த்தேசியத்திடம் ஒரு அடிப்படைச் சிந்தனை முறை இருக்கின்றது அதுவானது அங்கால வடக்கத்தியான் அவனுடன் சேர்ந்து வாழ முடியாது இங்கால மோட்டுச் சிங்களவன் அவனுடனும் சேர்ந்து வாழமுடியாது உள்ளுக்குள்ளேயும் இஸ்லாமியத் தமிழர்கள் தொப்பிபிரட்டிகள் அவர்களுடனும் ஒத்துப்போக முடியாது மலயகத் தமிழர்கள் தோட்டக்காட்டார் மட்டக்கிழப்பான் யாழ்பாணத்தான் போன்ற பிரதேசவாதம். என்னும் உள்ளுக்கு இறங்கி அலசினால் நாறும். இந்த லட்சணத்தில் ஈழத்தமிழன் என்றால் என்னவோ தனித்துவமான புடுங்கி என்றொரு கருத்தை விதைத்து அதை தேசியத்துடன் கலந்து தமிழரின் பாரம்பரியத்தை தூக்கி நிறுத்தும் தூண்களாக புலிகளின் போராட்ட காலத்தில் சேரன் சோழன் பாண்டியன் என்றுதானே வணிகங்களுக்கு பெயர் வைத்து கரிகாலன் கனவு முள்ளிவாய்க்காலில் வன்னிமக்களை கருவறுத்தது தான் மிச்சம்.

எவருடனும் ஒத்துப்போக முடியாத எமது பயித்தியக்கார சிந்தனை முறைக்கு சர்வதேசத்திடம் எந்தக் காலத்திலும் தீர்வு கிடையாது. எமக்கொரு நாடுவேண்டும் என்ற சிந்தனைக்கு விருப்பத்திற்கு அப்பால் ஒரு நாட்டை உருவாக்கும் அடிப்படை பண்பும் ஒற்றுமையும் எம்மிடம் அறவே இல்லை. இதனால் சிங்களமும் எம்மை கொல்லும் சிங்களத்தை தமது நலன்களுக்குள் வைத்திருக்க விரும்பும் நாடுகள் அனைத்தும் எம்மை பலிக்கடாவாக்கும்.

தமிழர்களின் பெரும் சொத்தான கல்வி பறி போய் விடும்

இந்தக் கல்வியால் கடுகளவு பிரயோசனமும் சமூகம் சார்ந்து கிடையாது என்பது தான் நடைமுறையில் காணும் உண்மை. முற்றுமுழுதான சுய நலன் சார்ந்த கல்வி என்றைக்கும் சமூகத்தின் சொத்தாக முடியாது. சுய நலனுக்கான கல்வியை எங்கேயும் எந்த நாட்டில் வேண்டுமானாலும் கற்று டொக்டர் எஞ்சீனீயர் ஆகி பிழைத்துக்கொள்ளலாம்.

திரைப்படப்பாடல்களை சிறுவயது முதல் நாங்கள் கேட்பதும் அதுவும் தமிழ் நாட்டு மக்கள் தமிழ் மொழி பேசுவதாலும் அவர்களின் கலாச்சாரத்துடன் நாமும் பின்னிப் பிணைவதாலும் அவர்களின் படங்களை பார்த்து பாடல்களை கேட்கிறோம்

அதைத்தான் சொல்கின்றேன் பின்னிப் பிணைந்திருப்பது நல்லது. சிங்களவருடன் பின்னிப் பிணைவதைக் காட்டிலும் தமிழ்நாட்டுடன் பின்னிப் பிணைவது சாத்தியமான ஒன்றுதானே

நாளைக்கு சாவம் என்றால் சிங்களவருடன் இணைவது நாலு நாள் கழித்து சாவம் என்றால் தமிழகத்துடன் இணைவது என்ற கருத்தை அடிப்படையாக கொண்டிருப்பது. இதைக்கடந்து ஒற்றுமையாகிறது தனியரசுகாண்கிறது போன்ற நடைமுறைக்கு ஒவ்வாத கற்பனைக் குதிரைகளை பறக்கவிடுவதில் எந்த அர்த்தமும் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

1. இந்தியா உடையாது.

2. இலங்கையில் இனி தமிழ் ஈழம் சாத்தியம் இல்லை

3 நாம் ஒற்றுமையாக் இருந்தால் வெளிநாடுகளின் உதவியுடன், ஒரு அரசியல் தீர்வே சாத்தியம்

1. :mellow:

2. :rolleyes:

3. :wub:

1. இந்தியா உடையாது.

2. இலங்கையில் இனி தமிழ் ஈழம் சாத்தியம் இல்லை

3 நாம் ஒற்றுமையாக் இருந்தால் வெளிநாடுகளின் உதவியுடன், ஒரு அரசியல் தீர்வே சாத்தியம்

பல்லின மக்கள் வாழும் நாடுகள் ஒரு போதும் உடையாது எனறு கூற முடியாது..... அதுவும் இந்தியாவில் இருக்கும் அடிப்படை பிரச்சனை அப்படி ஆனால் இந்தியாவில் படித்தவர்கள் கூடிவருவதால் இவர்களுக்கு தெரியும் ஓற்றுமையாக இருந்தால் பிரந்திய வல்லரசாகவது நிலைக்க முடியும் என்று.

2 வது தமிழீழத்துக்கான தேவையும் இலங்கையில் அழிந்து போய்விடும்.

3 வது மன்னிக்கவேண்டும் இது எங்கள் இனத்துக்கு ஏற்புடையது இல்லை.

நானும் ஒரு புத்தி சொல்லலாமா????????????

  • கருத்துக்கள உறவுகள்

சிறீ லங்கா அரசு சர்வதேசத்தின் கைகளை கட்டிவிட்டு தாயகத்தில் பாரிய அழிவுகளை மேற்கொண்டதற்கு த.வி.பு ஓர் பயங்கரவாத அமைப்பு என்பதை சர்வதேசம் ஏற்றுக்கொண்டதே அடிப்படை காரணமாக அமைந்தது. அதாவது சிறீ லங்கா அரசின் பயங்கரவாதத்தைவிட த.வி.புவின் பயங்கரவாதமே சர்வதேசத்தின் கண்களிற்கு அதிக ஆபத்தாக தெரிந்தது. த.வி.புவினை மகிமைப்படுத்தி அமைப்பு ரீதியாக அதை உயர்ந்த நிலைக்கு கொண்டுசெல்வதே நம்மவர்களின் நோக்கம் என்றால்.. அது தாயகத்து மக்களிற்கு ஓர் விடிவை ஏற்படுத்தி கொடுக்கப்போவது இல்லை, அத்துடன் வெளிநாடுகளிலும் நம்மவர்களிற்கு பயன்களை விளைவிக்கப்போவது இல்லை.தொடர்ந்தும் த.வி.புவிற்கு ஆலவட்டம் பிடிப்பதையே நம்மவர்கள் நோக்கமாக கொண்டால் சிறீ லங்கா அரசு தொடர்ந்தும் தனது ராசதந்திரங்களிலும், பரப்புரைகளிலும் வெற்றிபெற்று தனது நோக்கங்களை இலகுவாக சாதிப்பதற்கே வழிகோலும்.

சரி

த.வி.பு.களைத்தவிர்த்து

இதுவரை புலம்பெயர் தமிழரால் எடுக்கப்பட்டுள்ள ஆக்கபூர்வமான முயற்சிகளை தரமுடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

||நாம் ஒற்றுமையாக் இருந்தால் வெளிநாடுகளின் உதவியுடன், ஒரு அரசியல் தீர்வே சாத்தியம்||

28 may 20011

தமிழீழத்தில் ஈடுபாடு உள்ள தமிழர்களின் எண்ணிக்கை = 37

பார்வையாளர்களாக மட்டும் இருக்கவிரும்பும் தமிழர்களின் எண்ணிகை = 1,120

-95%

"ஆறுமாதங்களுக்கும் இலங்கை ரூபா 153000/= ரூபா (ஒரு லட்சத்து ஐம்பத்து மூவாயிரம் ரூபா) உதவியாக வழங்கியுள்ளார். முகிலன் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்."

http://www.yarl.com/forum3/index.php?showtopic=86111

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே பிரச்சனை என்னெவென்றால் இந்தியாவில் பணக்காரன் பெரும் பணாக்காரன் ஆகி வருகிறான். ஏழை ஒன்னும் பரம ஏழையாகிக்கொண்டே வருகிறான். இதுவா ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி?????????????????????????

இது முதலாளித்துவ மேற்கு நாடுகளுக்கும் பொருந்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

1. இந்தியா உடையாது.

2. இலங்கையில் இனி தமிழ் ஈழம் சாத்தியம் இல்லை

3 நாம் ஒற்றுமையாக் இருந்தால் வெளிநாடுகளின் உதவியுடன், ஒரு அரசியல் தீர்வே சாத்தியம்

நிழலியின் கருத்துக்களே எனது நிலைப்பாடும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இங்கு வோட்டு போட்டது நான் தலைவராகலாமா எண்டு யோசிக்கிறன் என்றதற்குதான் காரணம் நான் தலைவரானால் இன்னமும் எங்கள் வாழ்வையும் எங்கள் அவலங்களையும் வைத்து தமிழ்நாட்டில் தலைவர்களாகவும் தங்கள் பிழைப்பை அரசியலை நடத்தும் பலரை போட்டுத்தள்ளலாம் எண்டுதான் .அவர்களை ஒழித்தாலே எங்கடை பாதி பிரச்சனை முடிந்தமாதிரி :lol:

நானும் தலைவராகலாமா என்று தான் யோசிக்கிறேன் என்று தான் வோட்டு போட்டேன் அண்ணா. பழையகணக்குகள் கொஞ்சம் தீர்க்கப்படாமலே இருக்குது அது தான். :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் இருவரது நோக்கமும் ஆக்கபூர்வமானதாக இருப்பதால் முதல் வாழ்த்துக்கள்

டிஸ்கி : போட்டுத்தள்ளும் நபர்களின் பட்டியலில் எனது பெயரும் உண்டோ?????????????? :lol::D:D:D

சந்தர்ப்ப சூழ்நிலைகளை எங்களுக்கு சாதகமா பாவிக்கும் திறமை வேண்டும். தற்பொழுதுள்ள ஐநா அறிக்கையை சாதகமாகப் பாவிக்காவிட்டால் எதிர்காலத்தில் அது ஒரு வெறும் காகிதக்கற்றை.

கடந்தகாலத் தவறுகள்.

-இலங்கை சுதந்திரமடைந்த பொழுது நடந்த 'சோல்பரிக் கமிசனிடம்' தமிழர் ஆண்ட பூமியினை (கண்டி இராசதானி, யாழ்ப்பாணம்) திரும்பித் தரும்படி கேட்காமல் ஐம்பதுக்கு ஐம்பது எனும் நடை முறைக்கு ஒத்துவராத தீர்வைக் கேட்டது.

-87 இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பொழுது வடகிழக்கு தமிழர்களின் தாயகப் பூமி என்பதை அங்கீகரிக்கப் பண்ணி ஒரு தீர்வை எடுத்து அதன் தளத்திலிருந்து அடுத்த கட்டத்திற்கு நகர்வது.

சர்வதேசத்திர்ற்கு போராடும் மக்களின் நியாயத்தைவிட அவர்கள் உலகவரை படத்தில் வாழும் இடமே முக்கியம்.

பூர்வீக நிலங்கள் சிறுகிப்போகின்றன.

குன்றக்குடி அடிகளார் கூறியதாக வேறு ஒரு இணையத்தில் வாசித்த வசனங்கள்.

தமிழன் வீழ்வதை பற்றி நான் கவலைப்படவில்லை.

வீழ்ந்த இடத்திலேயே மீண்டும் மீண்டும் வீழ்கிறானே என்றுதான் கவலைப்படுகிறேன்.

'மந்திரத்தில் மாங்காய் விழும் எனக்காத்திருக்கிறேன்'

Edited by thappili

  • தொடங்கியவர்

உங்கள் இருவரது நோக்கமும் ஆக்கபூர்வமானதாக இருப்பதால் முதல் வாழ்த்துக்கள்

தலைவர் எண்டால் வன்முறைதான் எனும் கருத்தை தொணிக்கும் உங்கள் கருத்துக்களுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்குகொள்ளுகிறேன்..

..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.