Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரலாறு இப்படித்தான் பதியப்பட்டது

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாருடைய வரலாறு என சொல்லிவிட்டு தொடருங்கோ?

நீங்களும் இங்கு கருத்து எழுதியதற்கு நன்றி

அதற்கு முன் எனக்கு ஒரு விடயம் தெரிந்தாகவேண்டும்

1. கொலை

2. பல கொள்ளைகள் (அவரிடம் விசாரித்ததில்)

3. நம்பிக்கைத்துரோகம்

3. மக்களிடையே மெதுவாக இயக்கங்கள் ஆதரவு பெற்றுவரும் வேளையில் அவர்களின் பெயரைப்பாவித்து கொலை கொள்ளையில் ஈடுபட்டது.

என்பனவுக்காக இவருக்கான தங்களது தீர்ப்பு என்ன.........???

இதற்கு பதில் தாருங்கள்

நாம் வீணாக அடிபட்டுக்கொள்ளவேண்டாம்

எனது வாழ்க்கையில் நான் கண்டவற்றையும் எதற்காக புலிகளை நான் ஆதரித்தேன் ஆதரிக்கின்றேன் என்பது பற்றியும் எழுதலாம் என்றிருக்கின்றேன். இது முறுகும் பட்சத்தில் புலிகளைப்போல் நானும் மௌனித்துவிடலாம் என்றிருக்கின்றேன்.

Edited by விசுகு

  • Replies 210
  • Views 24.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பம் நன்றாக இருக்கு விசுகு அண்ணா, தொடருங்கள் :) .

நன்றி கருத்துக்கு உறவுகளே

இந்த மோட்டார் சைக்கிளுக்கு பின்னர் வருவோம்

அதற்கு முன் எனக்கு ஒரு விடயம் தெரிந்தாகவேண்டும்

1. கொலை

2. பல கொள்ளைகள் (அவரிடம் விசாரித்ததில்)

3. நம்பிக்கைத்துரோகம்

3. மக்களிடையே மெதுவாக இயக்கங்கள் ஆதரவு பெற்றுவரும் வேளையில் அவர்களின் பெயரைப்பாவித்து கொலை கொள்ளையில் ஈடுபட்டது.

என்பனவுக்காக இவருக்கான தங்களது தீர்ப்பு என்ன.........???

நம்பிக்கைத் துரோகம் செய்பவர்களை மன்னிக்க முடியாது. அவர்களை நம்பி அவர்களுக்கே சமைத்து சாப்பாடு போட்ட அந்தப் பெண்ணையே அவர்களால் கொல்ல முடிந்தது என்றால் அப்பிடியானவர்களை விட்டு வைக்க கூடாது. அவர்களிடம் இருந்து அந்தப் பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு தேவையான பொருளாதாரத்தை அபராதமாகப் பெறவேண்டும். பிறகு நடுச் சந்தியிலே நாலு பேருக்கு முன்னாள் வைத்து உதைக்க வேணும் ஆனால் சாக விடக் கூடாது. பின்னர் இவர்களின் நடவடிக்கைகளை அவதானிப்பதோடு மாதம் ஒருமுறை இவர்கள் காவல் நிலையம் சென்று ஒப்பமிட வேண்டும். (எனக்கு வந்த கோவத்துக்கு உடனேயே இப்பிடியான நாய்களை போட்டாத்தான் சரி எண்டு யோசிச்சேன் ஆனால் மற்ற உறவுகள் சொன்ன கருத்திலிருந்து மரணதண்டனை குற்றம் செய்தவனுக்கு கொடுக்கப் படும் விடுதலையே என யோசிக்கிறேன் :unsure: )

அவர்கள் அங்கு சென்றதே கொள்ளையிடத்தான். அப்படி இருக்கையில் அந்த்த பெண்ணிடம் சாப்பாடு வாங்கி சாப்பிட்டு விட்டு கொலை செய்தார்களென்றால், அது திட்டமிட்டது தான். எனவே இப்படியானவர்கள் திருந்துவார்கள் என்பது நடக்காத விஷயம்.

  • கருத்துக்கள உறவுகள்

யாருடைய வரலாறு என சொல்லிவிட்டு தொடருங்கோ?

நீங்களும் இங்கு கருத்து எழுதியதற்கு நன்றி

இதற்கு பதில் தாருங்கள்

நாம் வீணாக அடிபட்டுக்கொள்ளவேண்டாம்

எனது வாழ்க்கையில் நான் கண்டவற்றையும் எதற்காக புலிகளை நான் ஆதரித்தேன் ஆதரிக்கின்றேன் என்பது பற்றியும் எழுதலாம் என்றிருக்கின்றேன். இது முறுகும் பட்சத்தில் புலிகளைப்போல் நானும் மௌனித்துவிடலாம் என்றிருக்கின்றேன்.

விசுகு! நீங்களுமா?

மௌனம் தோல்வியின், சரணாகதியின் அடையாளம்!

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இப்போது... தொடர்கதை சீசன் போலை...

சாத்திரியார் ஒரு பக்கம், அரவிந்தன் ஒரு பக்கம், கோமகன் ஒரு பக்கம், விசுகு ஒரு பக்கம் எண்டு களைகட்டுது.

எங்களுக்கு கொண்டாட்டம் தான். :)

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இப்போது... தொடர்கதை சீசன் போலை...

சாத்திரியார் ஒரு பக்கம், அரவிந்தன் ஒரு பக்கம், கோமகன் ஒரு பக்கம், விசுகு ஒரு பக்கம் எண்டு களைகட்டுது.

எங்களுக்கு கொண்டாட்டம் தான். :)

டமிழ் சிறி சும்மா என்ட வயிற்றெரிச்சலை கிளப்பாதையுங்கொ....நானும் யாழில் கிறுக்க வெளிக்கிட்ட நாளிருந்து தொடர் கிறுக்கல் ஒன்று செய்வோம் என்றால் முடியுதில்லை :D..... :D

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் விசு.

  • கருத்துக்கள உறவுகள்

டமிழ் சிறி சும்மா என்ட வயிற்றெரிச்சலை கிளப்பாதையுங்கொ....நானும் யாழில் கிறுக்க வெளிக்கிட்ட நாளிருந்து தொடர் கிறுக்கல் ஒன்று செய்வோம் என்றால் முடியுதில்லை :D..... :D

யாழில் சிறந்த சிறுகதை எழுத்தாளரான புத்தனே...... முடியுதில்லை என்று சொல்லலாமா? :o

ஒவ்வொரு கிறுக்கலின் பின்னும் சிறிது, சஸ்பென்ஸ் வைத்து, தொடரும்..... என்று போட்டால் தொடர் கிறுக்கல். :lol:

முயற்சியுங்கள் புத்தன். உங்களுக்கு நல்ல கதையின் கருவை தேர்ந்தெடுக்கும் வல்லமை உள்ளது. :)

வரலாறு ...........நன்றாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள் விசுகு அண்ணா வாசிக்க பலர் வரிசையில் நிக்கின்றோம் :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொலை கொள்ளையில் ஈடுபட்டவரை பிடித்த புலிகள் அவரை விசாரித்தனர். திருமணவானவர் 2 சிறுபிள்ளைகளுக்கு தகப்பன் என்பதால் முடிவு எடுப்பதை பின் போட்டனர். அந்த நேரத்தில் வேறு ஒரு இடத்துக்கு உளவு யந்திரத்தில் அவரை இடம் மாற்றியபோது அவர் புலிகளிடமிருந்து தப்பிச்சென்றுவிட்டார். அவரை புலிகள் வலைவிரித்து தேடினர். இறுதியில் அவரது மனைவியின் அத்தான் காறன் அவரை மறைத்துவைத்து பராமரிப்பதாக தெரியவந்ததால் அவரையும் தேடத்தொடங்கினர். இறுதியாக கொலைகாறனைப்பிடித்து மின் கம்ப மரணதண்டனை வளங்கினர்புலிகள் . அவரைப்பாதுகாத்தவரை தம்மிடம் விசாரணைக்காக வருமாறு புலிகள் அழைத்தனர். ஆனால் அவர் எனது அண்ணரிடம் சரணடைந்தார். தன்னை எப்படியாவது வெளிநாட்டுக்கு அனுப்பிவிடுமாறு. எனது அண்ணர் கொழும்பில் அதிககாலம்இருந்து இது போன்ற உதவிகளை ஏற்கனவே செய்து வந்தபடியால் உடனடியாக அவரைக்கொண்டுவந்து வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்தார். அப்படி வெளிநாடு தப்பிவந்தவர்தான் புலிகளின் துரோகியாக மாறினார். இதை நான் அண்ணரிடம் சொன்னபோது அண்ணர் மிகவும் வேதனைப்பட்டார். இப்படியென்றால் உதவி செய்திருக்கமாட்டேன். 5 பிள்ளைகளுக்கு தகப்பன் என்பதாலதான் நான் என் தலையைக்கொடுத்தேன். இறுதியில் என்னையும் விசாரணைக்கு கூப்பிட்டு எச்சரித்து அனுப்பினார்கள் என்றார்.

தொடரும்

புலிகளிடமிருந்து தப்பினாரா :o:o:o:o

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளிடமிருந்து தப்பினாரா :o:o:o:o

அவர்களும் மனிதர்கள் தான்........இவர் அழுதிருக்கலாம் அவர்களின் மனம் இலகியிருக்கலாம்....எனவே அவரை தப்ப விட்டிருக்கலாம்

கடைசி இரு பின்னோட்டங்களையும் பார்த்தால் தெரியும் பலமும் பலவீனமும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளிடமிருந்து தப்பினாரா ,,,,

உண்மைதான்

அண்ணரிடமும் இப்படித்தான் நானும் கேட்டேன். உண்மையில் நானறிந்து புலிகளிடமிருந்து தப்பியவர் முதலும் கடைசியும்ம இவரே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் புலிகளை எனக்கு பிடிக்க ஆரம்பித்தது.

கொண்ட கொள்கையில் உறுதி

அதற்காக எதையும் இழக்க தயாரான மனநிலை

சொல்லைவிட செயலில் அதிக ஈடுபாடு

துல்லியமான புலனாய்வு

எவராக இருப்பினும் தப்பென்றால் தண்டனை

தன்னையே தண்டிக்கலாம் எனக்கூறும் தலைமை

கடுமையான பயிற்சி சுலபமான சண்டை எனும் கோட்பாடு

எல்லோரையும் உள்வாங்காத யாக்கிரதை

இழப்புக்களை குறைக்க தடைகளை உடைக்க தன்னையே தரும் கொடை

இதைவிட எதை எதிர்பார்க்கமுடியும் ஒரு விடுதலை அமைப்பிடம்?

உலகத்துக்கே எடுத்துக்காட்டாக எமது இயக்கம். இதை நான் ஆதரிக்கவில்லையென்றால்............?

தொடரும்

  • கருத்துக்கள உறவுகள்

84 லை ஞானம் தானே பொறுப்பாளர்?? ஞானம் யாரையும் அந்தநேரம் போட்டதாய் கேள்விப்படேல்லை. அடுத்தது படியம் அம்மான் .போட்டது யார்??

கனவில கண்டதை எழுதுகின்றார்

.

சாத்திரியார் வேறு சீரியசாக.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

84 லை ஞானம் தானே பொறுப்பாளர்?? ஞானம் யாரையும் அந்தநேரம் போட்டதாய் கேள்விப்படேல்லை. அடுத்தது படியம் அம்மான் .போட்டது யார்??

சாத்திரி

இந்த போடல் என்ற சொல் எங்கு எவரால் எதற்காக முதன் முதலாக பாவிக்கப்பட்டது என்று சொல்லமுடியுமா?

முடிந்தால் எனக்கு அது பெரும் உதவியாக இருக்கும்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி

இந்த போடல் என்ற சொல் எங்கு எவரால் எதற்காக முதன் முதலாக பாவிக்கப்பட்டது என்று சொல்லமுடியுமா?

முடிந்தால் எனக்கு அது பெரும் உதவியாக இருக்கும்

கேள்விக்கு பதிலாக இன்னொரு கேள்வி நானும் சில சமயங்களில் அப்படித்தால். :lol:

உங்கள் கேள்வியை பார்த்தும் எனக்கு எட்டாம் வகுப்பு தமிழ்பாடத்தின் சோதினை பேப்பர்தான் ஞாபகத்திற்கு வந்தது.யாரால்? யாரிற்கு?எந்தச்சந்தர்ப்பத்தில்.?....... :(

போடல் என்கிற சொல் நான் நினைக்கிறேன் கல் தோன்றி மண்தோன்றா காலத்திற்கு முன்தோன்றிய மூத்த மொழியாம் தமிழ் தோன்றிய காலத்திலேயே போடல் என்கிற சொல்லும் தோன்றியிருக்கலாம். புழக்கத்திலும் இருந்திருக்கலாம்..இது எனது ஊகம்தான் தனியாக ஆராய்ச்சி ஏதும் செய்திருக்கவில்லை.

^_^

அடுத்தது போடல் என்கிற சொல் மண்டையில் போடுதல் என்பதன் குறியீட்டு சொல்லாடலாக மாறிய காலம் நேரம் அதனை முதல் முதலில் பாவித்தவர் யார் என்று சரியாக கண்டு பிடிக்கமுடியாவிட்டாலும். அந்தச்சொல்லாடல் பரவலாக அனைவரினதும் புழக்கத்திற்கு வந்த சம்பவத்தை மட்டும் சொல்லலாம். 1975 ம் ஆண்டு யூலை மாதம் 27 ந்திகதி இலங்கையை உலுக்கியதொரு செய்தி. அனைத்து தமிழர்களுமே எருவரையொருவர் பார்த்து என்ன துரையப்பாவை பெடியள் போட்டிட்டாங்களாம் என்கிற செய்திதான் அது. :o

யார் போட்டது என்று யாரிற்கும் தெரியவில்லை. ஆனால் என்னுடைய உறவினர் ஒருவர் சிறீலங்கா சுதந்திரக்கட்சி முக்கியஸ்தர். அவர் சொன்னார் இது அமுதலிங்கத்தின்ரை பெடியன் காண்டீபன்தான் போட்டிருக்கிறான். என்று அடித்துச்சொன்னார். ஆனால் நானோ நவாலி இன்பம்தான் போட்டிருக்கலாம் என நினைத்தேன். காரணம் அவர்தான் ஊரிற்குள் துரையப்பாவை போடவேண்டும் என்று அடிக்கடி சொல்லித்திரிந்தார். இந்தச் சம்பவம் தான் போடல் என்பதன் அர்த்தத்தினை மாற்றிவிட்டிருந்தது. :wub:

அதற்கு முன்னரும் தமிழ் மாணவர் பேரவையை சத்திய சீலன் அமைத்தபின்னர் ஆயுதப்போராட்டம் மூலமே தமிழருக்கான தீர்வு என தீர்மானம் நிறைவேற்றிய பொழுது துரோகிகளை ஒழிக்கவேண்டும் என முடிவெடுத்து போடவேண்டியவர்களின் பட்டியல் என ஒரு பட்டியலையும் தயாரித்திருந்தனர். அந்தப் பட்டியலில் இருந்தவர்களது விபரங்களை பின்னர் ஒருநாள் சத்தியசீலன் அவர்கள் என்னிடம் சொல்லியிருந்தார். ^_^

பிற்குறிப்பு. இன்றுவரை துரையப்பாவை போட்டவர் யாரென எனக்கு தெரியாது :rolleyes:

ஜயரின் வரலாற்றுப்பதிவு எனக்கு தெரிந்தவரை முழுக்க உண்மையே.

அதில் அனேகமான சம்பவங்களுகான விடை உண்டு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தது போடல் என்கிற சொல் மண்டையில் போடுதல் என்பதன் குறியீட்டு சொல்லாடலாக மாறிய காலம் நேரம் அதனை முதல் முதலில் பாவித்தவர் யார் என்று சரியாக கண்டு பிடிக்கமுடியாவிட்டாலும். அந்தச்சொல்லாடல் பரவலாக அனைவரினதும் புழக்கத்திற்கு வந்த சம்பவத்தை மட்டும் சொல்லலாம். 1975 ம் ஆண்டு யூலை மாதம் 27 ந்திகதி இலங்கையை உலுக்கியதொரு செய்தி. அனைத்து தமிழர்களுமே எருவரையொருவர் பார்த்து என்ன துரையப்பாவை பெடியள் போட்டிட்டாங்களாம் என்கிற செய்திதான் அது. :o

அதற்கு முன்னரும் தமிழ் மாணவர் பேரவையை சத்திய சீலன் அமைத்தபின்னர் ஆயுதப்போராட்டம் மூலமே தமிழருக்கான தீர்வு என தீர்மானம் நிறைவேற்றிய பொழுது துரோகிகளை ஒழிக்கவேண்டும் என முடிவெடுத்து போடவேண்டியவர்களின் பட்டியல் என ஒரு பட்டியலையும் தயாரித்திருந்தனர். அந்தப் பட்டியலில் இருந்தவர்களது விபரங்களை பின்னர் ஒருநாள் சத்தியசீலன் அவர்கள் என்னிடம் சொல்லியிருந்தார். ^_^

பிற்குறிப்பு. இன்றுவரை துரையப்பாவை போட்டவர் யாரென எனக்கு தெரியாது :rolleyes:

நான் அப்படி விபரமாகக்கேட்டதற்கு காரணம்

உண்மையை பூரணமாக அறிந்து கொள்ளவே. அதாவது எமது போராளிகளால் எப்போது எங்கு இச்சொல் பாவிக்கப்பட்டது என்பதை அறிவதற்கே. ஆனால் எனக்கு நிச்சயமாகத்தெரியும் துரையப்பாவை போட்டுட்டாங்களாம் என்று அந்த நேரம் சொல்லப்படவில்லை. துரையப்பா கொலை செய்யப்பட்டார். துரையப்பாவை இளைஞர்கள் சுட்டுவிட்டார்கள் என்பதுதான் அப்போது பழக்கத்திலிருந்தது. இது பற்றி வேறு எவரும் ஏதாவது தெரிந்தால் எழுதவும்.

இந்தக்கேள்வியை நான் இங்கு கேட்பதற்கு நிறைய காரணமுண்டு. அது புலிகளாலேயே தொடங்கப்பட்டதாக இங்கு பலர் தூற்றித்திரிகின்றனர். ஆனால் உண்மை என்ன?

நீங்கள் செய்தித் தாள்களில் வந்த தலைப்புக்களை பற்றி எழுதியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். நான் ஊரில் அதாவது எங்கள் ஊரில் துரையப்பாவை போட்டிட்டாங்களாம் என்று கதைதத்ததை சொன்னேன். சிலநேரங்களில் உங்கள் ஊரில் "உனக்கு சேதி தெரியுமா துரையப்பாவை இளைஞர்கள் சுட்டுக் கொன்று விட்டார்களாம். அல்லது துரையப்பா கொலைசெய்யப்பட்டுவிட்டராம் " என்று கதைத்திருக்கலாம். ஏனெனில் பேச்சு என்பது ஊரிற்கு ஊர் மாறுபடும் வட்டார வழக்கு என்று சொல்வார்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் புலிகளை எனக்கு பிடிக்க ஆரம்பித்தது.

கொண்ட கொள்கையில் உறுதி

அதற்காக எதையும் இழக்க தயாரான மனநிலை

சொல்லைவிட செயலில் அதிக ஈடுபாடு

துல்லியமான புலனாய்வு

எவராக இருப்பினும் தப்பென்றால் தண்டனை

தன்னையே தண்டிக்கலாம் எனக்கூறும் தலைமை

கடுமையான பயிற்சி சுலபமான சண்டை எனும் கோட்பாடு

எல்லோரையும் உள்வாங்காத யாக்கிரதை

இழப்புக்களை குறைக்க தடைகளை உடைக்க தன்னையே தரும் கொடை

இதைவிட எதை எதிர்பார்க்கமுடியும் ஒரு விடுதலை அமைப்பிடம்?

உலகத்துக்கே எடுத்துக்காட்டாக எமது இயக்கம். இதை நான் ஆதரிக்கவில்லையென்றால்............?

தொடரும்

அத்தோடு இறுதி வரை மன உறுதியோடு போராடினார்கள்.

இதை விட்டிட்டு மாலை தீவை பிடித்தல், ஒரு நாளில் இலங்கை முழுக்க பிடிப்போம் என அம்புலி மாமா கதை சொல்லுதல் அது மட்டுமா எப்படியாவது புலிகளில் பிழை பிடித்தல் அதற்கு பேர் விமர்சனமாம் என்று ஒரு கூட்டம் இன்றும் அலைவதை எண்ணும் போது ..............

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா சொல்கிறேன் எனக் கோவிக்காதீங்கோ.நீங்கள் நல்லதை நினைத்துத் தான் கதையை எழுதத் தொடங்கினீர்கள் ஆனால் தற்போதைய நிலைமையில் எழுதாமல் விடுவதே நல்லது என்பது என் கருத்து

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நானறிந்தவரையில்

நான் தாயகத்தில் இருந்தவரையில் இச்சொல் பாவிக்கப்படவில்லை. இச்சொல் எப்போது பாவிக்கப்பட தொடங்கியிருக்கலாம் என்றால்(எனக்கு தெரிந்தவரை) இயக்கங்களால் ஒருவருக்கு தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டபின் அதுவும் தங்களால் செய்து முடிக்கமுடியும் என்று நிச்சயமாக தெரிந்த காரியங்களுக்கே போடு அல்லது போடுதல் என்பது பாவிக்கப்பட தொடங்கியிருக்கலாம். ஆரம்பத்தில்இது ஒரு ரகசியச்சொல்லாக அல்லது இயக்கங்கள் மட்டுமே பாவித்த ஒரு சொல்லாக இருந்திருக்கலாம். யோசித்து பாருங்கள் சாத்திரி.

மற்றும் ரதி நன்றி தங்களது ஆலோசனைக்கு.

ஆனால் இதை எழுத தொடங்குமுன்பே பலமுறை யோசித்துத்தான் எழுதத்தொடங்கினேன். எனக்கு கொஞ்சம்பேசணும். அது முடிந்ததும் நிறுத்திவிடுவேன் எல்லாவற்றையும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.