Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேவதைகளின் தீட்டுத்துணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜீன் அண்ணா நீங்கள் நடிகைகள பாக்க போனது தான் போனிங்கள்..அப்பிடியே மடில தூக்கி வைச்சிருந்தா சந்தோஷப்பட்டிருப்பம்ல.....

சா...சானஸ்ஸ மிஸ் பண்ணிட்டிங்களே............

ம்; இனி பீல் பண்ணி என்னத்த பண்ண..........

  • Replies 150
  • Views 17.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என்ன தேவைக்கண்டி காமமும், புலமும் இங்கே இருக்கேக்க சிங்கள இடத்தில சேவை செய்ய போனனீர்கள்?

.

வொல்கனோ, உண்மை சொல்லுங்கள் நீங்கள் வன்னியில் தான் சேவை செய்தனீங்களோ? அல்லது குளிர்மையான சிங்கள இடம் தேடி சிங்கள மக்களுக்குச் சேவை செய்தனீங்களோ? ^_^

  • கருத்துக்கள உறவுகள்

கனபேருக்கு இங்கு வயித்தெரிச்சலே நான் நடிகைகளை பார்த்தது போல்தான் இருக்கு.

நடிகைகளை நான் மடியில உட்கார வைக்க பார்க்கவில்லை.அகதிகளுக்கு பணம் சேர்க்கத்தான் பலரை சந்திக்கவேண்டி வந்தது.

இப்பவும் நான் நினைத்து பெருமைப்படுவதுண்டு வள்ளுவர் கோட்டத்தில் இலங்கை அகதிகளுக்காக கல்விஅமைச்சர் அரங்கநாயகம் தலைமையில் ஒரு நிகழ்சியை நடாத்தி முடித்தோம்.இதில் பலர் பங்கு இருந்தாலும் பொறுப்பு என்னிடமே தரப்பட்டு இருந்தது.

பாடகர் ஜேசுதாஸ் தனக்கு கேரளாவில் கச்சேரி இருக்கு என்று சொல்லிவிட்டு நிகழ்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது வந்து தனது மனைவி கட்டாயம் அந்த அகதிகள் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டதாகவும் அதனால் விமானநிலையத்தில் இருந்து நேரே வருவதாகவும் சொன்னார்.அவர் பாடிய பாட்டே ஞாபகம் இருக்கு"ஊரை தெரிஞ்சுக்கிட்டேன்".

உங்களை மாதிரி எனது மனைவியும் நம்பியிருக்க மாட்டார் ஆனால் அவரும் அந்த நிகழ்சிக்கு வந்தார் என்னை தெரியமுதல்.

நீங்கள் சந்திச்சதுகளை பார்த்து வயிறு எரியவில்லை...................

பல உலக தலைவர்களையும் சந்தித்துவிட்டு (அடிக்கடி சோனியா கான்டி உட்பட) அதை எழுதமால் இருக்கிறீர்களே என்றுதான் கவலையாக உள்ளது.

ஒரே கருத்தை 5000 தடவைக்கு மேல் எழுத கூடாது என்றொரு களவிதியை நிர்வாகம் விதிக்கு மட்டும் உங்களின்ர காட்டில மழைதான் அடிச்சு விளாசுங்கோ.

நீங்கள் சந்திச்சதுகளை பார்த்து வயிறு எரியவில்லை...................

பல உலக தலைவர்களையும் சந்தித்துவிட்டு (அடிக்கடி சோனியா கான்டி உட்பட) அதை எழுதமால் இருக்கிறீர்களே என்றுதான் கவலையாக உள்ளது.

அம்மான என்னால இதை வாசித்த பின் வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை :D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

வடலி புத்தகக்கடையில் இருந்து "தேவதைகளின் தீட்டுத்துணி" சிறுகதைத் தொகுப்பை வாங்கிப் படிக்கலாம்

இப்படித்தான் ஒரு நாள் நானும் நேருவும் ஜின்னாவும் மவுண்பேட்டனை சந்தகிக்க டெல்கிக்கு போனோம்.அப்ப நேரு எவ்வளவோ சொல்லியும் ஜின்னா ஒரேயடியாக பாகிஸ்தானை பிரிக்கவேண்டும் என்று நின்றார்.அப்ப மவுண்பேட்டன் என்னப் பார்த்து உங்களுக்கும்சுதந்திரம் கொடுக்கப்போறம்.என்ன மாதிரி பிரிச்சுத்தாறதோ அல்லது சேர்ந்து இருகப்போகின்றீர்களோ என்றுகேட்டார்.நான் சொன்னேன் எங்களுக்கு சும்மா சுதந்திரம் வேண்டாம் ஆயுதப்போரட்டத்தாலதான் வேணும் அதுவும் அங்கு மருதங்கேணி என ஒருவர் இருக்கின்றார் அவர் போடவேண்டிய ஆட்களையெல்லாம் போட்டுவிட்டு விரைவில் பிடித்துவிடுவார் நீங்கள் அது பற்றி அலட்டிக்கொள்ளத்தேவையில்லை என்று.

  • கருத்துக்கள உறவுகள்
Big%20Laugh.gif
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சந்திச்சதுகளை பார்த்து வயிறு எரியவில்லை...................

பல உலக தலைவர்களையும் சந்தித்துவிட்டு (அடிக்கடி சோனியா கான்டி உட்பட) அதை எழுதமால் இருக்கிறீர்களே என்றுதான் கவலையாக உள்ளது.

ஒரே கருத்தை 5000 தடவைக்கு மேல் எழுத கூடாது என்றொரு களவிதியை நிர்வாகம் விதிக்கு மட்டும் உங்களின்ர காட்டில மழைதான் அடிச்சு விளாசுங்கோ.

:lol::lol::lol:

இப்படித்தான் ஒரு நாள் நானும் நேருவும் ஜின்னாவும் மவுண்பேட்டனை சந்தகிக்க டெல்கிக்கு போனோம்.அப்ப நேரு எவ்வளவோ சொல்லியும் ஜின்னா ஒரேயடியாக பாகிஸ்தானை பிரிக்கவேண்டும் என்று நின்றார்.அப்ப மவுண்பேட்டன் என்னப் பார்த்து உங்களுக்கும்சுதந்திரம் கொடுக்கப்போறம்.என்ன மாதிரி பிரிச்சுத்தாறதோ அல்லது சேர்ந்து இருகப்போகின்றீர்களோ என்றுகேட்டார்.நான் சொன்னேன் எங்களுக்கு சும்மா சுதந்திரம் வேண்டாம் ஆயுதப்போரட்டத்தாலதான் வேணும் அதுவும் அங்கு மருதங்கேணி என ஒருவர் இருக்கின்றார் அவர் போடவேண்டிய ஆட்களையெல்லாம் போட்டுவிட்டு விரைவில் பிடித்துவிடுவார் நீங்கள் அது பற்றி அலட்டிக்கொள்ளத்தேவையில்லை என்று.

:lol::lol::lol:

சரியான போட்டி.

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜூன்,

மகாத்மா காந்தியை காய் வெட்டி விட்டா நேருவுடனும், ஜின்னாவுடனும்...... மவுண்ட்பேட்டனை சந்திக்க டெல்லிக்கு போனீங்கள்? :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் ஒரு நாள் நானும் நேருவும் ஜின்னாவும் மவுண்பேட்டனை சந்தகிக்க டெல்கிக்கு போனோம்.அப்ப நேரு எவ்வளவோ சொல்லியும் ஜின்னா ஒரேயடியாக பாகிஸ்தானை பிரிக்கவேண்டும் என்று நின்றார்.அப்ப மவுண்பேட்டன் என்னப் பார்த்து உங்களுக்கும்சுதந்திரம் கொடுக்கப்போறம்.என்ன மாதிரி பிரிச்சுத்தாறதோ அல்லது சேர்ந்து இருகப்போகின்றீர்களோ என்றுகேட்டார்.நான் சொன்னேன் எங்களுக்கு சும்மா சுதந்திரம் வேண்டாம் ஆயுதப்போரட்டத்தாலதான் வேணும் அதுவும் அங்கு மருதங்கேணி என ஒருவர் இருக்கின்றார் அவர் போடவேண்டிய ஆட்களையெல்லாம் போட்டுவிட்டு விரைவில் பிடித்துவிடுவார் நீங்கள் அது பற்றி அலட்டிக்கொள்ளத்தேவையில்லை என்று.

எட்னா அன்ரி நேருவுக்குப் பக்கத்தில் நின்றாரா அல்லது உங்கள் மடியில் இருந்தாரா? அங்கே நீங்கள் தான் முக்கியமான நபராக இருந்திருப்பீர்கள், நிச்சயமாக உங்கள் மடியில் தான் இருந்திருப்பார், சரியா? ^_^

நான் நினைக்கின்றேன் இப்பதான் நான் உங்கள் லெவலுக்கு வந்திருப்பதாக.

பெரிய சந்தோசமாக கிடக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கின்றேன் இப்பதான் நான் உங்கள் லெவலுக்கு வந்திருப்பதாக.

பெரிய சந்தோசமாக கிடக்கு.

பூசனிக்காயை புதைக்க முயற்சிக்க முன்பு யோசிச்சிருக்க வேண்டும்.................

உண்மை என்பது வெளியிலே வந்துதான் தீரும்! ( பொத்தி பொத்தி வைக்க பல பொய்களை சொல்லி கொண்டே போகலாம்)

அந்த லேவலிற்கு வந்துதான் ஆக வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் ஒரு நாள் நானும் நேருவும் ஜின்னாவும் மவுண்பேட்டனை சந்தகிக்க டெல்கிக்கு போனோம்.அப்ப நேரு எவ்வளவோ சொல்லியும் ஜின்னா ஒரேயடியாக பாகிஸ்தானை பிரிக்கவேண்டும் என்று நின்றார்.அப்ப மவுண்பேட்டன் என்னப் பார்த்து உங்களுக்கும்சுதந்திரம் கொடுக்கப்போறம்.என்ன மாதிரி பிரிச்சுத்தாறதோ அல்லது சேர்ந்து இருகப்போகின்றீர்களோ என்றுகேட்டார். நான் சொன்னேன் எங்களுக்கு சும்மா சுதந்திரம் வேண்டாம் ஆயுதப்போரட்டத்தாலதான் வேணும் அதுவும் அங்கு மருதங்கேணி என ஒருவர் இருக்கின்றார் அவர் போடவேண்டிய ஆட்களையெல்லாம் போட்டுவிட்டு விரைவில் பிடித்துவிடுவார் நீங்கள் அது பற்றி அலட்டிக்கொள்ளத்தேவையில்லை என்று.

நன்றி

அப்படியே தங்களது வயதையும் சுட்டிக்காட்டியதற்கு............. :lol::D:D:D

மூத்திர விமர்சனம்by இளங்கோவன் அன்பன் on Friday, 15 July 2011 at 05:55

ஒரு பெரும் எழவுக்காக காத்திருந்ததுஅந்த ஓநாய்.

காத்திருந்தது ஈடேறிய குதூகலத்தில் குதித்துக் குதித்து சிறுநீர் கழித்தது.

அது இலக்கியத்தில் ஒருவகை என்று, நாய்க்கு காத்திராமல் நக்கிச்சுவைத்தனர் சிலர்.

அந்த மூத்திர நெடியில் நான் உணர்ந்தது ஒன்றுதான்.

கொன்றவனை விடக் கொடியது, பகடிசெய்து குதூகலிக்கும் இவர்களின் மனம்.

ஆதவன் தீட்சண்யா, யோ. கர்ணன்

இதுதான் உன் எழுத்தும் இலக்கியமும் என்றால்

நுண்மையான வன்மம்தான் உன் உத்தி என்றால்

உன் எழுத்தும் இலக்கியமும் நாசமாய் போகட்டும்.

Parani Krishnarajani ஈழப்போராட்டம் தொடர்பாக நேர்மையான எதிரிகளுடன் வாதம் செய்வதில் எந்த சிக்கலுமில்லை. இது ஒரு வெத்துவேட்டு கும்பல். சுசீந்திரன், சோபாசக்தி என்று ஒரு புலியெதிர்ப்பு கோஸ்டி எடுக்கிற வாந்தியை சிந்தாமல் சிதறாமல் அப்படியே விழுங்கி திரும்ப அப்படியே அத......ை வாந்தியா எடுத்தா எப்பிடி இருக்கும். ஆதவன் தீட்சண்யா அந்த வகையறா.. இந்த எழுத்துக்களை படித்தால் எங்கள் ஊர் என்றால் ஒரு பக்கெட் "பனடோல்" தமிழ்நாடென்றால் 1000 ருபாவுக்கு அஞ்சால் அலுப்பு மருந்து வாங்கிப்; பூசினாலும் தீராத தலைவலி வரும். இந்த புலியெதிர்ப்பு கும்பல் தமிழீழ அரசியல் களத்திலிருந்து எப்போதோ காலாவதியானவர்கள். (expired )தற்போது மே 18இற்கு பிறகு ஒரு கும்பல் புறப்பட்டிருக்கு. அந்த பாசறையிலிருந்து வந்திருப்பவர்தான் யோ.கர்ணன். அதாவது காலச்சுவடு வில் பாசிசத்திற்கெதிரான - அதாவது புலிகளுக்கு எதிரான "முகமூடி" கட்டுரை எழுதியவரும் தற்போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரை, படைப்பாளிகளை துணைஇராணுவக்குழுவினரின் துப்பாக்கிகளின் துணையுடன் மிரட்டி வருபவருமான முன்னாள் புலிகளின் தொலைக்காட்சி பணிப்பாளரான கருணாகரனின் கருத்து "பினாமி". கருணாகரனின் குமட்டலை வாந்தியாக எடுப்பது தற்போது யோ.கர்ணணின் வேலை. அதுதான் இந்த கதை. நாங்கள் எழுத்தாளராக இல்லாவிட்டாலும் ஒரு நேர்மையான வாசகனாக சொல்கிறேன். இந்த கதை வக்கிரத்தின் உச்சம். யோ. கர்ணனின் 4 சிறுகதைகளை படித்தவன் என்ற முறையில் அவரது எழுத்து குறித்து இந்த இடத்தில் ஒரு குறிப்பு. மிகவும் தட்டையான எழுத்து முறை. மிகவும் பலவீனமான உத்திகளை கைகொண்டு அவர் அமைக்கும் சட்டகம் கதைகளின் உள்ளீட்டை அழகியல் ரீதியாக சிதைக்கின்றன. அத்தோடு வக்கிரமான அரசியலும் சேரும்போது அது படைப்பா என்ற கேள்வி வாசகன் முன் தோன்றுவதை தவிhக்கமுடியவில்லை.

Arul Ezhil மாபெரும் இழவுக்காக காத்திருந்த வக்கிரமானவர்கள் இவர்கள். முதலில் அங்கு இனப்படுகொலையே நடக்கவில்லை என்றாகள். இப்போ அப்படி எதுவும் பேசினால் ஜோட்டாலேயே அடிப்பார்கள் என்பதால் புலிகள் மீதான பிம்பங்களை கட்டுடைக்கிறார்களாம்.

Parani Krishnarajani ‎"யோ.கர்ணன் என்ற பண்ணியும் (பன்றி) கருணாகரன் என்ற சொறி நாயும்.." என்ற தலைப்பில் நண்பர் ஒருவர் ஒரு சிறுகதை எழுதி அனுப்பியிருக்கிறார். ஆச்சரியப்படுத்துற வகையில் நல்ல உத்திகளுடன் தேர்ந்த நடையுடன் எழுதப்பட்டுள்ள ஒரு பின்னவீனத்துவ பாணி சிறுகதை ......அது. யோ.கர்ணன் என்ற பண்ணிக்கும் கருணாகரன் என்ற நாய்க்கும் இடையிலான உரையாடலாக அந்தக் கதை எழுதப்பட்டிருக்கிறது. நாய்களுக்கும் பண்ணிகளுக்குமிடையிலான வாழ்வியற் பிரச்சினைகளை, உளவியல் முரண்பாடுகள், இரைக்காக நடக்கும் போராட்டங்கள், கழுத்தறுப்புக்கள் என்று விரியும் பாhத்திரங்களின் உரையாடல் முடிவில் ஜோர்ஜ் ஓவலின் 'விலங்குப்பண்ணை" முடிவைப்போல் எது பண்ணி எது நாய் யாருக்கு சொறி பிடித்திருக்கிறது யார் சேற்றில் விழுந்து புரள்வது என்று அடையாளம் காண முடியாமல் - தெரியாமல் கதை முடிவடைகிறது. இதை எங்காவது பிரசுரிக்க முடியுமா? எனறு என்னை கேட்டுள்ளார். "பிரபாகரன் -துவாரகா" கதையை பிரசுரித்தவர்களிடம் அனுப்ப வேண்டியதை மாறி எனக்கு அனுப்பியிருக்கிறார் நண்பர். ஒரு கதைதானே என்று எங்காவது பிரசுரிக்கலாம் என்றால் சில நிபந்தனைகளை எழுதியிருக்கிறார்.அதுதான் திகிலூட்டுகிறது. அதாவது இன்னும் 10 சிறுகதைகள் எழுதியிருக்கிறாராம். அதையும் சேர்த்து பிரசுரிக்க வேண்டுமாம். உதாரணத்திற்கு சில தலைப்புக்கள்.

01. சோபாசக்தி எனக்கு அப்பா மாதிரி ஆனால் அப்பா இல்லை.( இங்கு சோபாசக்தி என்பவர் ஒரு வெள்ளாள சாhதிதிமிர் பிடித்த நகைக்கடை முதலாளி)

02. ஆதவன் தீட்சண்யாவின் நான்காவது மனைவியின் அ.மாhச்க்சுக்கு எதிரான வல்லுறவு குற்றச்சாட்டுக்கள்.(இங்கு ஆதவன் தீட்சண்யா என்வபர் அப்பாவி பிராமணர்)

03. சுசீந்திரனின் உள்ளாடையும் ..... (ஒரு பெண் எழுத்தாளரின் பெயர் அதனால் தவிhத்துக்கொண்கிறேன்) உள்ளாடையும். (இங்கு சுசீந்தரன் எலகேஜி மாணவன்)

மிகுதி தலைப்புக்களை இங்கு போடும் தைரியம் எனக்கில்லை. ஆனால் தைரியமாக நண்பர் கதைகளை இரவிரவாக எழுதி முடித்திருக்கிறார். யோ.கர்ணணின் கதை தந்த தைரியம் என்று குறிப்பு வேறு தனியாக எழுதி வைத்திருக்கிறார்.

ஏதோ ஓரளவிற்கேனும் அமைப்பியல், பின்னவீனத்துவம், மிகையதார்த்தம் போன்ற கூறுகளில் தோச்சி உள்ளவனாக யோ. கர்ணனின் கதையும் சரி இப்போது நணபர் எழுதிய 10 கதைகளும் சரி என்ன வகையானது என்று எனக்கு புரியவில்லை. சோபாசக்தி தொடங்கிவைத்த இந்தப்போக்கு யோ.கர்ணனின் கதையில் உச்சத்தை எட்டியிருக்கிறது. தனி மனித வக்கிரங்களை வெளிப்படையாகவே உத்தி என்ற போர்வையில் படைப்பில் பிரயோகிப்பது. ஏதோ ஓரளசவிற்கேனும் உளவியல் குறித்து தேர்ச்சியுள்ளவனாக யோ.கர்ணனின் இந்தப் போக்கு பெரும் கவலையளிக்கிறது. அவர் ஒரு நல்ல உளவியலாளரிடம் உளவள ஆலோசனை பெறுவது நல்லது. அதற்கு பிறகு திறந்தமனத்துடன் மிக இயல்பாக எந்த முன்முடிவுகளும் இன்றி படைப்புக்களை எழுத முன்வரவேண்டும். ஒரு சிறந்த படைப்பின் அடிப்படை என்பது, பாத்திரங்களை அதன்போக்கில் செல்ல அனுமதிப்பது. அவை மிக இயல்பாக ஒரு முடிவை எய்தும். எதையும் வலிந்து திணிக்ககூடாது. தலைப்பில் இருந்து கதையின் போக்கு, முடிவு எல்லவற்றையும் இங்கு யோ.கர்ணன் முன்பே தீர்மானித்துவிட்டார். இந்த முன்முவுவுகளே அந்த படைப்பை முற்றாக நீர்த்துபோக செய்து விட்டது.See more

20 hours ago · LikeUnlike · 4 people

Cartoonist Bala, Tamizh Anban and 2 others like this.

Parani Krishnarajani யோ.கர்ணனின் "தேவதைகளின் தீட்டு துணி" தொகுதியை நான் இன்னும் படிக்கவில்லை. இதை 1000 வது தடவையாக பதிவு செய்கிறேன் என நினைக்கிறேன். ஏனென்றால் நான் தமிழீழ விடுதலைப்போராட்டம், அதன் தலைமை குறித்து சில முன்முடிவுகளுடன் இருக்கிறேன். அதற்கு எதிராக எழ......ுதப்பட்டதாகச் சொல்லும் ஒரு பிரதியை இந்த முன்முடிவுகளுடன் அணுகுவது ஆரோக்கியமான ஒன்றல்ல. ஒரு வாசகனாக நான் இந்த அறத்தை கடைப்பிடித்திருக்க ஆனால் படைப்பாளியோ தீர்மானமான முன்முடிவுகளுடன் பிரதியை எழுதி முடித்திருக்கிறார். முன்னுரை அதைவிட தீர்மானமான முவுகளுடன் எழுதப்பட்டுள்ளது. அவரே திருப்பி எழுதிய மதிப்பீடும் முடிவை இறுதியானதாகவே அறிவிக்கிறது. யோ.கர்ணின் பிரதி பற்றிய மதிப்பீட்டில் சோபாசக்திக்கான அங்கீகாரத்தை கோர முற்படும்போதே "எல்லாம்" - எலலாமும் வெளிச்சத்திற்கு வந்துவிட்டன.

பின்குறிப்பு: யோ. கர்ணனின் "பிரகாரன் துவாரகா" கதையை ஒரு படைப்பாக ஏற்றுக்ககொள்வதில் எந்த பிரச்சினையுமில்லை. ஆனால் அந்த அங்கீகாரத்தை கோருபவர்கள் எனது நணபனின்10 சிறுகதைகளையும் அங்கீகரித்தால் சந்தேசப்படுவேன். அப்டியே எங்களைமாதிரி அரைகுறைகளும் அப்படியே இதன்வழி "புனைவு"'களை எழுதி எழுத்தாளர் பட்டமும் வாங்கிவிடலாம். அதற்காகவாவது யோ.கர்ணணின் கதையை அங்கீகரிக்க கோருகிறேன்.

from facebook.

>இந்த கதை வக்கிரத்தின் உச்சம். யோ. கர்ணனின் 4 சிறுகதைகளை படித்தவன் என்ற முறையில் அவரது எழுத்து குறித்து இந்த இடத்தில் ஒரு குறிப்பு. மிகவும் தட்டையான எழுத்து முறை. மிகவும் பலவீனமான உத்திகளை கைகொண்டு அவர் அமைக்கும் சட்டகம் கதைகளின் உள்ளீட்டை அழகியல் ரீதியாக சிதைக்கின்றன.

கொஞ்சம் புரிகிறமாதிரிச் சொன்னால் என்ன? அதென்ன "தட்டையான எழுத்து முறை"? மற்றவர்கள் முப்பரிமாணத்தில் எழுதுகிறார்களா? கணிதத்தில் நான்கு பரிமாணங்களும் படித்தேன். நான்கு பரிமாணங்களிலும் யாரும் எழுதுகிறார்களா? அப்ப x, y, z, t அச்சுக்கள் வழியே கதை நகருமா?

Edited by கறுவல்

ஈழ எதிர்ப்பு - ஆதவன் தீட்சண்யாவின் ஆளும் வர்க்க சேவை

மீ.த.பாண்டியன் வியாழன், 14 ஜூலை 2011 01:34

பயனாளர் தரப்படுத்தல்: / 10

குறைந்தஅதி சிறந்த

புது விசை ஜூன் 32 ஆவது இதழில் யோ.கர்ணன் எழுதிய‌ ‘துவாரகாவின் தந்தை பெயர் பிரபாகரன்’ எனும் தலைப்பிலும், அதே போல் ஆதவன் தீட்சண்யா எழுதிய ‘ஒரு பில்லியன் பிரார்த்தனைகளும் ஒற்றைச் சூடக்கட்டியும்’ எனும் தலைப்பிலும் இரண்டு சிறுகதைகள் வெளியிடப்பட்டிருக்கிறது.

கர்ணனின் கதை ஈழத் தமிழ் நடையில் எழுதப்பட்டுள்ளது. மிக்சர் கம்பெனி வைத்திருந்த வீரப்பிள்ளை மகன் பிரபாகரனைப் பற்றிக் கதை சொல்லத் தொடங்கி, அவருக்கு ஒரு மகள் துவாரகா எனச் சொல்லி வேலுப்பிள்ளை பிரபாகரனை நினைவூட்டிப் பகடி செய்யும் கதை. "இலங்கையில் முப்பது வருடங்களாக நீடித்து வந்த உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து விட்டதாக அரசாங்கம் அறிவித்த கையுடன்" எனத் தொடங்கும் கதை, "விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை, அவரது மகள் துவாரகாவை நினைவூட்டும் வகையில்" மிக்சர் கடை வீரப்பிள்ளை மகன் பிரபாகரன் தப்பி தமிழகத்திற்கு வந்து, பின்னர் தாய்லாந்து சென்று பிரிட்டனுக்கு விசா விண்ணப்பம் கொடுப்பதாகக் கதை. ஈழத்தில் அவரது மகளின் கைது விசாரணை மூலம், தப்பித்த பிரபாகரன் மிக்சர் கடை பிரபாகரன் என வெளிப்படுத்துவது. கதையில் கையாளும் மனிதர்களும், செய்திகளும் நெடுமாறன், சீமான், வைகோ என துணைச் செய்திகளும் முப்பது ஆண்டு காலம் நடந்து தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட ஈழ விடுதலைப் போராட்டத்தின் நாயகர்களை பகடி மூலம் கொச்சைப்படுத்துகிற செயலை இக்கதை எழுதியவர் செய்துள்ளார்.

இறுதியில் மகள் துவாரகாவை தான் அகதியாக தஞ்சம் புகுந்துள்ள ஆஸ்திரேலியாவுக்கு அழைக்கிறார். ‘‘எங்கட நாட்டை விட்டுட்டு வர விருப்பமில்லை’ என பதில் தருகிறார் துவாரகா. கதையின் இறுதி வாசகமாக வீரப்பிள்ளை பிரபாகரன் சொல்வதாக "நாடும், மசிரும்" என முடிக்கிறார்.

ஆதவன் தீட்சண்யாவின் கதை மாரிச்சாமி எனும் ஒற்றைக் கதாபாத்திரத்தை தமிழகத்தின் தமிழ்த்தேச இயக்கங்களை, உணர்வாளர்களை உருவகப்படுத்தி ஆதவனின் வழக்கமான கிண்டல், கேலிகள் ஊடே எளிமைப்படுத்தியுள்ளார். தமிழகத்தின் தமிழ்த்தேச, ஈழ ஆதரவாளர்களின் செயல்பாடுகள் ஆதவனை எரிச்சலூட்டியிருக்கலாம். இதன் வெளிப்பாடாக கிரிக்கெட் போட்டிக்கு வரும் இலங்கை அணிக்கு எதிராக மாரிச்சாமியை ஒரு கேலிக்கும், கிண்டலுக்கும் உரிய பொருளாக மாற்றுவதன் மூலம் ஈழத் தமிழர் ஆதரவு ஆர்வலர்களை, செயல்பாட்டாளர்களை, "இணைய தளத்திற்குள் ஈழம் அமைத்தே தீருவது எனப் போராடி வரும்" என இயக்கங்களை வரிசைப்படுத்துகிறார். இடையில் மாரிச்சாமி மருகுவதாய் "இலங்கையில் தொழில் நடத்துகிற அசோக் லேலண்ட், ஹிந்துஜா வீட்டு முன் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை" எனச் சுட்டிச் செல்கிறார். இணையத்துக்குள் இன்று ஈழத்திற்கு ஆதரவான குரல் அதிகரித்திருப்பதும், அது இதர கருத்தியலை ஏற்றுக் கொண்டுள்ள சிந்தனையாளர்களை, செயல்பாட்டாளர்களை எரிச்சலூட்டியுள்ளது என்பதும் தெரிகிறது. கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி தோற்றுப்போக மாரிச்சாமி பிரார்த்தனை செய்வதாகவும், போட்டியில் இலங்கை அணி தோற்றுப் போனது தனது சூடக்கட்டி பிரார்த்தனையால்தான் என மன நிறைவு கொள்வது போலவும் கதை முடிவுறுகிறது.

இரண்டு கதைகளுமே அரசியல் கிண்டல் சிறுகதைகள். கடந்த முப்பது ஆண்டுகளாக சிறிய அளவில் வடிவமெடுத்த ஈழ விடுதலைப் போராட்டம், இந்திய அரசின் தெற்காசிய அரசியல் நடவடிக்கையின் மையமாக மாற்றப்பட்டதும், இலங்கையை மையப்படுத்திப் போட்டி மையங்கள் இன்று உருவாகி உள்ளன என்பதும் வெளிப்படையான உண்மை. சுமார் 15 இயக்கங்கள், அதில் ஐந்து பிரதான அமைப்புகள் முன்னிருத்தப்பட்டும், முன்னெழுந்தும் வந்தன. இந்திய அரசின் ஆயுத உதவியுடன் இந்தியாவின் விரிவாக்க நோக்கத்தை நிறைவேற்ற வளர்த்து விடப்பட்டன. அரசியல் ரீதியாக இந்திய உளவு நிறுவனமான ‘இரா’ ஈழ அமைப்புகளுக்கிடையே போட்டியை உருவாக்கி, மோதலை உண்டாக்கி ஒருவரையொருவர் அழிப்பதில் இறங்கி, இறுதியில் சில அழிக்கப்பட்டன. எஞ்சிய இரு அமைப்புகள் ஈரோஸ், விடுதலைப் புலிகளுடன் இணைந்து போராட்டக் களத்தைச் சந்தித்தன. ஈழ இயக்கங்களின் தோற்றம், தலைமைகள், அரசியல் நிலைப்பாடுகள், இந்திய அரசுடனான உறவு, உட்பகை, அழிவு என விவரிக்கத் தொடங்கினால் மிகவும் விரிவானது. தியாகம், துரோகம் என இரு முனை விவாதமாகச் சுருக்க முடியாது.

1987க்கு முன், 1987க்குப் பின் எனக் காலக் கட்டத்தைப் பிரித்து அணுக வேண்டியுள்ளது. ஆம். இந்திய அமைதிப்படை இலங்கை சென்றதற்கு முந்தைய சூழல், பிந்தைய சூழல் எனப் பரிசீலிக்க வேண்டும். இந்திய அரசின் ‘இரா’ உளவுத் துறையின், அன்றைய பிரதமர் இராசீவ் காந்தியின் இராணுவ, வெளியுறவுத் துறை அதிகாரிகளின் பாத்திரம் என்ன? தெற்காசியாவின் பேட்டை ரவுடி இந்தியாவின் சதிச் செயலுக்கு எதிராகத் தாக்குப் பிடித்த சக்திகள் எவை? நார்வே மூலம் தலையிட்ட சர்வதேச சக்திகளின் பாத்திரம், இலங்கை, இந்திய, தெற்காசியப் பகுதியில் உள்ள இடதுசாரிக் கட்சிகளின் செயல்பாடுகள் என மிக விரிவான தளத்தில் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய ஒரு இனத்திற்கான சனநாயகப் போராட்ட வரலாறு. சிங்களம் மட்டுமே என்ற சட்டத் திருத்தம் தொடங்கி நடந்த வெகுமக்கள் போராட்ட கட்சிகளும், தனி ஈழமே எனப் போராடிய விடுதலைப் போராட்டத்தின் முப்பது ஆண்டுகால ஆயுதப் போராட்டமும் என மிகவும் கனமான, இரத்தமும், சதையும் லட்சக்கணக்கான உயிர்ப்பலிகளும் நிறைந்த போராட்டம் கேலிக்குரியதா? கிண்டலுக்குரியதா? பகடிக்குரியதா? இருக்கலாம். யாருக்கு? ஆளும் வர்க்கச் சேவை புரிபவர்களுக்கு. ஆதவன் தன்னை அப்படித் தான் முன்னிருத்துகிறாரா? புதுவிசை தன்னை எந்தவகையான கலாச்சாரக் காலாண்டிதழாக முன்னிருத்துகிறது.

தமிழகத்தின் இருதுருவ அரசியல் அனைத்துக் கட்சிகளை, இயக்கங்களை தன் பின்னே அணிதிரட்டுகிறது. இடதுசாரிக் கட்சிகளும் இதற்கு விதிவிலக்கில்லை. தலித் அரசியலுக்கான கருத்தியல், சர்வதேசிய, தேசிய, தமிழ்த் தேசிய, ஏனைய அனைத்து சமூக இயக்கங்களையும் மறுதலிக்கிறது. ஆனால் இருதுருவ அரசியலுக்குள் மாட்டிக் கொள்கிறது. சிறுபான்மை இயக்கங்களின் இந்துத்துவ மதவெறி எதிர்ப்பு அரசியலுக்கான கருத்தியல் தனக்கான அணி சேர்க்கைக்கு முக்கியத்துவ‌மளிக்கும் அதே வேளை தமிழகத்தின் இருதுருவ அணி சேர்க்கையில் சிக்கிக் கொள்கிறது. தேசிய இன அரசியலும் இதே கதி தான். இடதுசாரி அரசியல் இருதுருவ அரசியலுக்குள் மாட்டிக் கொண்டு, சிக்கிக் கொண்டு விடுபட முடியாமல் திணறிக் கொண்டுள்ளது. விடுபடுவதற்கான விருப்பத்தை, முயற்சியைக் கூடப் பார்க்க முடியவில்லை.

ஆனால் வர்க்கப் போராட்டம் எனும் சொல்லாடல் இன்று பரந்த பொருளில் பார்க்கப்பட்டு, பேசப்பட்டு, கையாளப்பட்டு வருகிறது. பன்முகப் பரிமாணத்தைக் கொண்டுள்ள இந்திய, தமிழ்ச் சமூகத்தில் தலித் ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியலுக்கு சாதி ஒழிப்பு நோக்கில் இணைத்துப் பார்க்கும் தன்மை மா- லெ அமைப்புகளில் மட்டுமே இருந்தது. இடதுசாரிகள் சாதிக் கலவரமாக, மோதலாக, வர்க்க ஒற்றுமைக்கு எதிரான ஏகாதிபத்தியச் சதியாகப் பார்த்த சூழல் மாறி இன்று ‘தீண்டாமை ஒழிப்பு முன்னணி’யாக அடியெடுத்து வைத்துள்ளது; மாற்றம் நிகழ்ந்துள்ளது. இதைக் கூட எரிச்சலாகப் பார்க்கும் மரபு ரீதியான இடதுசாரிகள் இன்றும் அமைப்புகளுக்குள் உள்ளார்கள்.

தலித் அரசியலே மண்ணுக்கேற்ற மார்க்சியம்! தேசிய இன விடுதலையே மண்ணுக்கேற்ற மார்க்சியம்! எனப் புதிது, புதிதாக முழக்கங்கள் எழுந்து வந்த சூழலில் மார்க்சியத்தின் மறுவாசிப்பும், சுய பரிசீலனையும், தாக்குதல்களும், கடந்த இருபது ஆண்டுகால விவாதங்களும் படிப்படியாக மாற்றங்களைச் சந்தித்து ‘வர்க்கப் போராட்டம்’ அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி இணைத்துக் கொண்ட பரந்த பொருளில் தன்னை முன்னிருத்தியுள்ளது. பல் தேசிய இன இந்திய நாட்டில், இந்திய ஆளும் வர்க்கம் இந்துத்துவா அரசியலின் மூலம் ஒற்றை அடையாளத்தை முன்னிருத்துகிறது என்றால், உலகமயச் சூழல் உலகமே ஒரு கிராமமாக ஒற்றைத் தன்மையை முன்னிருத்துகிறது. இந்தி மொழித் திணிப்பிற்கு எதிரான இயக்கம் தொடங்கி, இன்றைய இலங்கை அரசுக்குத் துணையான இராணுவ உதவி வரை இந்திய அரசால் தமிழக, தமிழன் உணர்வுகள் புறந்தள்ளப்படுவதை பார்க்க முடியவில்லையா?

தேசிய இன அமைப்புகளின், தலித் இயக்கங்களின் விருப்பத்திற்கேற்றவாறு கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்தியாவில் இயங்க முடியாது. தலித் இயக்கங்களின் விருப்பங்களுக்கு இணங்க தமிழ்த் தேசிய அமைப்புகள் இயங்க முடியாது. வர்க்க ஒற்றுமை, இன ஒற்றுமை பேசும் அமைப்புகளின் நோக்கங்களுக்காக தலித் இயக்கங்கள் தன் மீதான ஒடுக்குமுறையைத் தாங்கிக் கொண்டு, தனது எழுச்சியைத் தள்ளிப் போட முடியாது. சகலமும் அறிந்ததாக மார்தட்டிக் கொள்ளும் கம்யூனிஸ்ட் அமைப்புகளின், புரட்சியாளர்களின் விருப்பம், உணர்வுகளுக்கேற்றவாறு தலித் இயக்கங்களோ, தேசிய இன இயக்கங்களோ, பெண் விடுதலை அமைப்புகளோ, சிறுபான்மை அமைப்புகளோ, சுற்றுச் சூழல் அமைப்புகளோ சிந்திககவோ, செயல்படவோ முடியாது. இதில் ஆதவன் தீட்சண்யாக்கள் எரிச்சலடைவது எதனால்?

தங்களது படைப்புகளை ஏனைய கருத்தியலை நோக்கித் திருப்பும் தீட்சண்யாக்கள் கூடங்குளத்தில் அணு உலை ஆதரவும், செகதாவூரில் அணு உலை எதிர்ப்பும் என நிலை எடுக்கும் இடதுசாரிகளைப் பார்த்து எரிச்சல்படுவதில்லையே, ஏன்? ஐந்து ஆண்டுகள் வர்க்கச் சுரண்டலுக்கு எதிராகப் போராடி, போராட வைத்து, அடி உதை வாங்கிச் சிறை சென்று, ஆளும் வர்க்கக் கட்சிகளின் தலைவர்களை சனநாயகத்தைக் கொண்டு வரும் விடுதலை வீரர்களாக, வீராங்கனைகளாகச் சித்தரிக்கும் மாபெரும் படைப்பாளிகளான பாட்டாளி வர்க்கத் தலைவர்களை நோக்கித் திருப்புவதே இல்லையே ஏன்? தனது கதையில் படைப்பின் உத்திகளை, படைப்புச் சுதந்திரத்தைப் பாருங்கள் எனக் கூறும் தீட்சண்யா மன்மோகன்சிங், கிலானி, இராசபக்சே, நெடுமாறன், சீமான், வைகோ என எல்லோரையும் தான் சொல்லியிருக்கிறேன், ஒரு படைப்பாளிக்கு சார்புத் தன்மை இல்லை எனக் கூடப் பேசலாம். படைப்புச் சுதந்திரத்தை ஏற்றுக் கொள்! என அறைகூவல் விடுக்கலாம்.

கிரிக்கெட் மைதானத்தில் மாரிச்சாமித் தமிழனை நிராயுதபாணியாக நிறுத்தி கோவணத்தை உரியும் தீட்சண்யா வங்க உணர்வு பொங்கி வழியும் பட்டாச்சார்யாக்களை, பாசுக்களை, சட்டர்ஜிகளை, முகர்ஜிக்களை, யெச்சூரிகளை, மலையாள உணர்வு பெருக்கெடுத்து முல்லைப் பெரியாறு வரை அணை உடைக்கும் அச்சுதானந்தன்களை அழைத்து வந்திருக்கலாமே! ஆந்திரத்தின் தெலுங்கானாவை ஏன் விட்டு விட்டார்? காஷ்மீரின் கிலானி உங்களது கிண்டலுக்கு சோளப்பொறி. வர்க்க உணர்வுகளை தேர்தல் சூத்திரத்திற்கு ஏற்ற அரசியல் உணர்வாக மாற்றி வடிவமைக்கும் கட்சித் தலைவர்கள் மீது காட்டலாமே! பரம ஏழை டாடாவிற்கு சிங்கூர், நந்திகிராம் நிலங்களைப் பிடுங்கிக் கொடுத்து மாட்டிக் கொண்டதை மறைக்க, மாவோயிஸ்ட் பூதத்தைக் காட்டி மம்தாவிடம் பறிகொடுத்த கதையை நூறு கதைகளாக்கலாம். இலங்கைக்குப் போகும் அசோக் லேலண்ட், இந்துஜா பெருமுதலாளிகளுக்கு எதிராக வீட்டு முன் ஆர்ப்பாட்டத்தை த.மு.எ.க.ச வை, சி.ஐ.டி.யூ வை, சி.பி.ஐ (எம்) ஐ நடத்தச் சொல்ல வேண்டியது தானே! ஏர்டெல்லுக்கு எதிரான இயக்கத்தை மே- 17 இயக்கம் முன்னெடுக்காமல், பி.எஸ்.என்.எல் எம்ளாயிஸ் யூனியனா நடத்தியது?

தாங்கள் நேரிடையாக எதிர்க்க முடியாத சர்வாதிகாரிகள் அடக்குமுறையாளர்கள், கங்காணிகள், ஆதிக்க சக்திகள் இவர்களுக்கெதிராக வெளிப்படும் கோபத்தை உருமாற்றிப் பாடல்கள், கதைகள், பழமொழிகளாக வெளிப்படுத்த உழைக்கும் மக்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் உதவும் கலை வடிவங்கள்தான் பகடி, கேலி, கிண்டல். சாப்ளின் மிகப் பெரிய மேதை. முதலாளித்துவக் கலாச்சாரத்திற்கு எதிராக, இயந்திரமயமாக்கத்திற்கு எதிராகப் பகடிகளைப் பயன்படுத்திய மேதை. என்.எஸ்.கே சாப்ளினின் தமிழ் அடையாளம். அந்தப் பகடி, கேலி, கிண்டல் ஆதவனுக்கு இரத்தம் சிந்திப் போராடிய விடுதலை இயக்கங்களுக்கு எதிராக, போராட முனையும் தமிழகப் போர்க்குணமிக்க இளைஞர்களுக்கு எதிராகப் பயன்படுகிறதே! இதுவும் வர்க்கச் சேவைதான். ஆம். ஆளும் வர்க்கச் சேவை. அந்தோணியோ கிராம்சியின் எழுத்துக்கள் விசையில் பிரசுரிக்க மட்டும் தானே! செயல்பாட்டுக்கு, படைப்புக்கு அல்ல.

போராட்டங்களை, போராளிகளை, திட்டங்களை, முழக்கங்களை, இலக்குகளை, தலைமைகளை கொச்சைப்படுத்தாமல் கருத்தியல், அரசியல் ரீதியாக விமர்சிக்க நிதானமும், தத்துவ அரசியல் புலமையும் அவசியம். புரட்சிகரத் தலைவர்களுக்கு எதிராக வீசப்பட்ட வதந்திகளை, கிண்டல், கேலிகளை புறந்தள்ளிவிட்டுச் சந்தித்த வரலாறு இலக்கியங்களாக நம் முன் இன்றும் இருக்கிறது. பொறுப்புடன், விமர்சனங்களை முன்வைக்கப் பழகுவதும், பழக்கப்படுத்துவதும் இதழாளர்களின், படைப்பாளிகளின் மாபெரும் கடமை. உணர்ச்சியைக் கொட்டுவதற்கும், உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கும் தமிழகச் சூழலில் ஏராளமான விசைகள் உள்ளன. புதுவிசை எதற்கு? அரிப்பதைச் சொறிவதும், சொறிவதினால் ஏற்படும் சுகத்தை, எரிச்சலைப் பதிவு செய்யும் சாரு நிவேதிதாக்கள் பேசும் படைப்புச் சுதந்திரம் யாருக்கு?

இந்தியாவை ஏற்றுக் கொள்ளாதே எனும் தமிழ்த் தேசிய முன் வைப்புகளுக்கு தீட்சண்யாவின் பதில் என்ன? தமிழ்த் தேசிய அரசியலைக் கிண்டலடி என்பதா? சரியான அணுகுமுறையா? தமிழ்த் தேசிய அரசியலுக்கான புறநிலை யதார்த்தம் உள்ளதா? இல்லையா? ஈழ மக்களின் போராட்டங்களுக்கு தமிழகத்தின், தமிழர்களின் பங்கு, பாத்திரம் அவசியமா? இல்லையா? ஒரு படைப்பு உணர்வுகளைத் தூண்டி, வழி நடத்த வேண்டும். அதைச் செய்கிறதா உங்களது படைப்பும், தாங்கள் வெளியிட்ட படைப்பும்.

- மீ.த.பாண்டியன் ( marxpandian@yahoo.com)

தட்டையான எழுத்துமுறை என்றால் ஒற்றைப் பரிமாணம் என்று நீங்கள் சரியாகவே விளங்கி இருகிறீர்கள் ,கர்ணானின் அப்பா போன்ற சோபா ஒரு இடத்தில் கூறும் போது சொல்லுவார் தனது கதைகள் ஒரு நீண்ட அரசியல் துண்டுப் பிரசுரம் என.அதேயே தான் பரணியும் மேலே கூறி உள்ளார்.இவர்கள் எழுதுவது தமது மன வக்கிரங்களின் வடிகாலாக, இலக்கியத்தில் நேர்மை உண்மை பன்முகத் தன்மை எனப் பல பரிமாணங்கள் இருக்க வேண்டும்.தமது அரசியலை புனைவு என எழுதி இரத்தமும் சதையும் ஈந்த மனிதரை தமது சொற்களால் வன் புணர்வு செய்வது மன வக்கிரம்.மன வக்கிரங்களின் வன் வெளிப்பாடாகவே இதனைப் பார்க்க முடியுமே தவிர , ஒரு தரமான இலக்கியமாக இல்லை.

கர்ணனுக்கு தற்போது வக்காலத்து வாங்கும் சாந்தியும், சாத்திரி அவர்களும் அவரின் பிரபாகரனின் மகள் துவாரகா என்னும் கதை பற்றி என்ன சொல்வார்கள் என்று அறிய ஆவலாக இருக்கிறேன்.

கொஞ்சம் புரிகிறமாதிரிச் சொன்னால் என்ன? அதென்ன "தட்டையான எழுத்து முறை"? மற்றவர்கள் முப்பரிமாணத்தில் எழுதுகிறார்களா? கணிதத்தில் நான்கு பரிமாணங்களும் படித்தேன். நான்கு பரிமாணங்களிலும் யாரும் எழுதுகிறார்களா? அப்ப x, y, z, t அச்சுக்கள் வழியே கதை நகருமா?

இதெல்லாம்

t - நேரத்தை தவறவிட்டதால் வந்த வினை.

  • கருத்துக்கள உறவுகள்

கர்ணனுக்கு தற்போது வக்காலத்து வாங்கும் சாந்தியும், சாத்திரி அவர்களும் அவரின் பிரபாகரனின் மகள் துவாரகா என்னும் கதை பற்றி என்ன சொல்வார்கள் என்று அறிய ஆவலாக இருக்கிறேன்.

நாரதர் கர்ணனனி் எழுத்துக்களை இங்கு கிருபன் இணைத்த பின்னர்தான் கர்ணனின் அண்மைக்கால எழுத்துகளை படித்தேன். நீங்கள் சொல்கிற கதையை இன்னும் நான் வாசிக்கவில்லை.

இதேபோல் பலரது எழுத்துக்களை இங்கு சிலர் பகிர்கிற போது வாசிப்பேன். வாசிப்புக்கும் அவர்களது எழுத்துடனான முரண்பாடுகளுக்கும் நிறைய வித்தியாசமிருக்கென நம்புகிறேன். அண்மையில் முகப்புத்தகத்தில் நடக்கிற கர்ணனின் கதைகள் பற்றிய அடிபாடுகளுக்கு நடுவில் தொலைய நேரமுமில்லை. அதில் எவ்வித உடன்பாடுமில்லை. எதிர்வினை ஏழரை வினையென நிறைய நிமிடத்துக்கு நிமிடம் வருகிறது. அதற்கெல்லாம் கருத்து எழுத கருத்துக் கூற முற்பட்டால் எங்கள் ஆயுளை கருத்தோடு தான் செலவளிக்க வேணும்.

சோபா சக்தியின் கொரில்லா புத்தகத்தை வன்னியில் பல (புலிகள்) தேவையெனக் கேட்ட நேரம் அப்புத்தகம் வந்த நேரம் பரிசிலிருந்து நண்பர் ஒருவர் மூலம் 10புத்தகம் எடுப்பித்து அனுப்பினேன். அப்புத்தகத்தில் முரண்பாடுகள் நிறைய எனக்கிருந்தது. எனக்கு முண்பாடு என்பதற்காக புத்தகம் தேவையென்றவர்களையும் வாசிக்க வேண்டுமென்றவர்களையும் இல்லை அது தீட்டு என தடுத்திருக்க முடியுமா ?

கிடைக்கிற நேரங்களில் நிறைய வாசிக்கப்பிடிக்கும் எல்லா எழுத்துக்கும் பதில் எழுதிக்கொண்டிருக்க ஆயுள்போதாது எனக்கு. பைபிளில் பகவத்கீதையில் கூட எனக்கு முரண்பாடுகள் இருக்கிறது. கண்ணதாசன் கவியரசர் ஆனால் கண்ணதாசனின் எழுத்துக்களை பெரும்பாலும் படித்திருக்கிறேன். பல இடங்களில் மரண்பாடு உண்டு. :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

பைபிளில் பகவத்கீதையில் கூட எனக்கு முரண்பாடுகள் இருக்கிறது.

வாழ்த்துக்கள் சாந்தி!

முரண்பாடுகள் தெரிவதே, நீங்கள் சரியான பாதையில் போய்க்கொண்டிருக்கின்றீர்கள், என்பதன் அறிகுறி!

கண்ணதாசன், கவிஜர்!

அவர் அவரது, அந்த நேரத்தின் உணர்ச்சிகளின் வெளிப்பாட்டைக் கவிதையில் வடிப்பார்!

வேறொரு நேரம், அவரது உணர்ச்சிகள் மாறும்போது அவர் கருத்துக்களும் மாறுவதை நானும் பலமுறை உணர்ந்திருக்கின்றேன்!

'ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு'

ஒரு கோலமயில் என் துணையிருப்பு'

இது தனது உண்மையான வாழ்வைப் பற்றிய கவிதை என்று ஒரு தரம் கூறினார்.

அவரே தான். பிற்காலத்தில் இந்துமதத்திகும் அர்த்தம் தேடினார்!!!

அர்த்தமுள்ள இந்துமதம் என்ன சொன்னது"

அவரவர் கடமைகளை வகுத்துத் தந்தது'

இங்கு வருணாச்சிரம தர்மத்தை நியாயப் படுத்துகின்றார்!!!

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணதாசன், கவிஜர்!

அவர் அவரது, அந்த நேரத்தின் உணர்ச்சிகளின் வெளிப்பாட்டைக் கவிதையில் வடிப்பார்!

வேறொரு நேரம், அவரது உணர்ச்சிகள் மாறும்போது அவர் கருத்துக்களும் மாறுவதை நானும் பலமுறை உணர்ந்திருக்கின்றேன்!

இந்த யதார்த்தம் எல்லாருக்கும் எல்லாருடைய எழுத்துகளுக்கும் பொருந்துமென நினைக்கிறேன் புங்கையூரான்.

இது போல் கர்ணன் ஒரு எழுத்தாளனாக எங்களுக்கு அறிய வந்திருக்கிறார். அவரது எல்லா எழுத்துகளுடனும் ஒற்றுமைப்படவோ முரண்படவோ முடியாது.

திருமது சாந்தி அவர்களே தங்கள் கருத்துக்கு நன்றி,

புனைவுகளுக்குப் பின்னால் இருக்கும் அரசியல் பற்றியும், இலக்கிய அரசியல் பற்றியும் ஒரு கவனிப்பு எங்கள் எல்லோரிலும் இருக்க வேண்டும்.எவர் எதற்காக இவ்வாறு எழுதுகிறார்கள் என்னும் கவனிப்பு இல்லாத வாசிப்பு எம்மையே நிலை குலையச் செய்யும்.விடுதலைப் போரிற்க்கு என்று ஒரு சத்தியம் அறம் இருக்கிறது.ஒருவர் ஆயுதம் ஏந்தியவர் என்பதற்காக அவர் சொல்வதை நாம் விடுதலையின் அறமாக எடுத்துக் கொள்ள முடியாது.ஆயுதம் ஏந்திய பிள்ளையான் முதல் இனிய பாரதி வரை நிகழ்த்திய வன் புணர்வுகளை நாம் அவர்கள் போராளிகளாக இருந்தார்கள் என்பதற்காக எவ்வாறு நியாயப்படுத்த முடியாதோ அவ்வாறே கர்ணனின் வன் புணர்வு எழுத்துக்களை விடுதலையின் அரசியலாக நாங்கள் எடுத்துக் கொள்ள முடியாது.ஒருவர் எழுதுவதையோ, வாசிப்பதையோ எவரும் குறை சொல்ல முடியாது.ஆனால் அவர்கள் எதற்காக எவருக்காக என்ன எழுதுகிறார்கள், அவர்களின் எழுத்தில் எத்தகைய அறம் இருக்கிறது என்பதை நாம் ஒவ்வொருவரும் சீர்த்துக்கிப் பார்க்க வேண்டும்.எத்தகைய அரசியல் நடக்கிறது என்று அறியாமல் நீங்கள் அகிலனின் சுவற்றில் எழுதியதைக் கவனித்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நாரதர் சொல்லுவதோடு ஒத்துப் போகமுடிகின்றது. எழுத்தில் அறம் இருக்கவேண்டும். அதேவேளையில் எமது மனப்பிரமைகளையும் கவனத்தில் எடுக்கவேண்டும்.

யோ. கர்ணனின் சிறுகதைகள் மூன்றுதான் படிக்கக் கிடைத்தது. மூன்றுமே அரசியல் பகிடியான ஒற்றைப் பரிமாணக் கதைகளாகத்தான் உள்ளன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தட்டையான எழுத்துமுறை என்றால் ஒற்றைப் பரிமாணம் என்று நீங்கள் சரியாகவே விளங்கி இருகிறீர்கள் ,கர்ணானின் அப்பா போன்ற சோபா ஒரு இடத்தில் கூறும் போது சொல்லுவார் தனது கதைகள் ஒரு நீண்ட அரசியல் துண்டுப் பிரசுரம் என.அதேயே தான் பரணியும் மேலே கூறி உள்ளார்.இவர்கள் எழுதுவது தமது மன வக்கிரங்களின் வடிகாலாக, இலக்கியத்தில் நேர்மை உண்மை பன்முகத் தன்மை எனப் பல பரிமாணங்கள் இருக்க வேண்டும்.தமது அரசியலை புனைவு என எழுதி இரத்தமும் சதையும் ஈந்த மனிதரை தமது சொற்களால் வன் புணர்வு செய்வது மன வக்கிரம்.மன வக்கிரங்களின் வன் வெளிப்பாடாகவே இதனைப் பார்க்க முடியுமே தவிர , ஒரு தரமான இலக்கியமாக இல்லை.

கர்ணனுக்கு தற்போது வக்காலத்து வாங்கும் சாந்தியும், சாத்திரி அவர்களும் அவரின் பிரபாகரனின் மகள் துவாரகா என்னும் கதை பற்றி என்ன சொல்வார்கள் என்று அறிய ஆவலாக இருக்கிறேன்.

கர்ணனிற்கு நான் வக்கலாத்து வாங்கினேனா?? :lol: எங்கே ஒரு வரியையாவது காட்டுங்கள் நாரதர். :) கதையை இணைக்கும்போதே தெளிவாக குறிப்பிட்டிருக்கிறேன் மீண்டுமொரு முறை படித்துப்பாருங்கள்.பிற் குறிப்பு யாழில் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற உக்கிரமான கருத்தாடல்களிற்கு இந்தக் கதையும் மூலகாரமாக இருந்தது.. அதனால்தால்தான் இதனை இணைத்தேன் இன்று புலம்பெயர் எழுத்தளர்கள் பலர் யோ.கர்ணன் தற்றும் கருணாகரனின் முன்னுரையாவது கிடைக்காதா என ஏங்கியபடி றிக்கற்போட்டு போன காலங்கள் படமெடுத்து இணையத்தில உலாவிட்ட காலங்கள்.நினைத்து பார்த்தேன். அதனால்தான் இணைத்தேன் மற்றும்படி வேறு எந்த எண்ணமும் இல்லை

அதே நேரம் கதையை நகைச்சுவையாக நகர்த்திய விதம் படிக்கும்போது பிடித்திருந்தது அவ்வளவுதான் மற்றபடி ஒரு கதைக்கு பின்னால் உள்ள அரசியல் தட்டையான எழுத்து தடித்த எழுத்து பின்நவீனத்தும் ஒற்றை பரிமாணம் முப்பரிமாணம் என்கிற வார்த்தை பிரயோகங்கள் எல்லாம் எனக்கு தலையை சுத்தவைக்கிற விடயம்.மற்றபடி முப்பரிமாணம் 3 டி என்டால் ஒரு கறுப்பு கண்ணாடி போட்டு பாக்கவேண்டும் அப்பதான் அது பக்கத்திலைமாதிரி தெரியும் எண்டது மட்டும் எனக்கு தெரியும்.அப்படித்தான் அவதார் படம் பாத்தனான்.

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

எத்தகைய அரசியல் நடக்கிறது என்று அறியாமல் நீங்கள் அகிலனின் சுவற்றில் எழுதியதைக் கவனித்தேன்.

நாரதர்,

அகிலனை இந்தச் சுவர்களுக்கு முதல் அறிவேன். அகிலனின் எழுத்துகளின் ஆரம்பம் முதல் இன்றுவரை பெரும்பாலும் வாசித்திருக்கிறேன். இன்று அகிலன் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து உண்டு. முரண்களினூடு அகிலனின் படைப்புகளை படிக்கிறேன். அவ்வப்போது கருத்து இடுகிறேன்.

அன்றைய நண்பன் இன்றைய எதிரியென்ற நிலையில் எவருக்கு அகிலனைப் பிடிக்கவில்லையோ அவர்களுக்காக அகிலனை எதிர்க்க எனக்கு அகிலனில் எவ்வித கோபமுமில்லை.

அகிலனும் ஈழவிடுதலைக்கான தனது பணியை அந்த நிலத்திற்குள் இருந்து செய்துள்ளான். அவனது தம்பியும் அந்த மண்ணில் வீழ்ந்திருக்கிறான். அவன் தனது சொந்தத் துயரை எழுதுகிற போது இது முரண் நீ எனது எதிரியென்று ஒதுக்க முடியாது. முடிந்தால் அவனது நட்பை பேணிக்கொள்வோம்.

காலம் எவ்வளவோ விடயங்களை எவ்வளவோ மோசங்களை மாற்றியிருக்கிறது.

அகிலனுக்கு சுவரில் எழுதியதை நீங்கள் கவனித்து அதனை அரசியல் ரீதியாக பார்த்தலுக்கும் எனக்கும் எதுவித அரசியலுமில்லை.

கர்ணனின் கதையை நீங்கள் இங்கு எழுதிய பின்னர் தேடி வாசித்தேன். (கருத்து கேட்காதீர்கள்) :( நீங்கள் அக்கதை பற்றி எழுதாவிட்டால் சிலவேளை நான் வாசிக்காமலே இருந்திருப்பேன். நன்றிகள்.

அக்கதைக்கு இன்னொரு மறுகதையும் இன்னொருவர் எழுதியிருக்கிறார். அதையும் இன்று வாசித்தேன்.

அதேவேளையில் எமது மனப்பிரமைகளையும் கவனத்தில் எடுக்கவேண்டும்.

இதற்கு கொஞ்சம் விளக்கம் சொல்லுங்கோ கிருபன் !

Edited by shanthy

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.