Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண் மறைந்த ஓவியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன், கதையை நகர்த்தும் விதம் மிகவும் அழகாக உள்ளது! அடுத்தது எப்ப வரும், என்ற ஆவலைத் தூண்டுகின்றது, உங்கள் தொடர்!

நீங்கள் சபாலிங்கம் காலத்து ஆள். நானும் அந்தக் கால கட்டம் தான்! இப்போதைக்கு இவ்வளவு போதும்! தொடருங்கள்!!!

  • Replies 50
  • Views 7.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

டிசம்பர் வர முதல்

அப்பா கொழும்பிற்கு வேலை நிமித்தம் போய் விட்டதால் தினமும் பஸ்சில் வருவேன்,அதைவிட சனி சமய பொது சோதினை எட்டரை பஸ் எடுப்பேன்.

இதற்கிடையில் அத்தான் லண்டனில் இருந்து USED CLOTHES என்று ஒரு பார்சல் அனுப்பியிருந்தார்.பலதும் பத்துமாக அது இருந்தது.அப்பிடி ஒரு பொக்கிஷம் நான் வாழ்க்கையில் காணவில்லை அளவுக்கதிகமாக.நினைக்க முடியாத ஸ்டைலில் சேட்சும்,பான்ஸ்சும் முழு நண்பர்களும் இரவல் வேண்டி போட்டுகொண்டு திரிந்தார்கள்.அதில் ஒரு பான்ஸ் உள்ள பக்கமெல்லாம் பொக்கெட்.

சனி காலை அதையும் போட்டு, மேலே மஞ்சள் நிறத்தில் சிவாஜி போடுவது போல இறுக்கமாக ஒரு டீசேட்டையும் போட்டு ஆள் ரெடி..ஒழுங்கையால் நம்ம ஆள் வருகின்றா .ஊருக்குள்ள அது கொஞ்சம் ஓவர் போல் இருந்தது.கையில்லாத ஓரளவு கட்டையான முழங்காலுக்கு மேல் நிக்கும் சட்டை.(இப்ப ஸ்ரேயாவை பார்த்தமாதிரி ).எனக்கு ஏனோ பிடிக்கவில்லை.

அன்றுதான் சில வார்த்தைகள் ஒழுங்காக கதைத்தோம்.அப்பாவிற்கு சிலவேளை மினிஸ்ரியில் புரோமோசன் கிடைத்து எல்லோரும் கொழும்பு போய் விடுவோம்.நீங்கள் ஒழுங்காக படித்து யுனிவசிற்றி என்டர் பண்ணுங்கோ எல்லாம் நல்லா முடியும்.

எனக்கு ஒன்றும் மண்டைக்குள் ஏறவில்லை ஆனால் உலகமே எதிர்த்தாலும் இவளை கட்டியே தீர வேண்டும் என முடிவெடுத்துவிட்டேன்.பின்னர் இறங்க்கிப்போகும் போது பார்த்தேன் இதைவிட அழகாக உடுப்பு போட முடியாது போலிருந்தது.

டிசம்பர் வந்தது, சோதினை முடிய குடும்பமாக கொழும்பு போய் சேர்ந்துவிட்டார்கள்.பாடசாலை தொடங்கி விட்டது. SCHOOL BUS வெறு மையாகிவிட்டது.அந்த வயதில் எதுவும் செய்ய முடியாத ,யாரிடமும் எதுவும் கேட்க முடியாத நிலை.எனக்கு வேறு சோதினை வருகின்றது.

தைப்பொங்கலுக்கு சிறி என்ற பெயரில் கொழும்பு விலாசத்துடன் ஒரு காட் வந்தது.எனது வீட்டில் ஒரு சிறு பொறி,இருந்தும் எவரும் எதுவும் கேட்கவில்லை.நானும் பதிலுக்கு பாடசாலை நண்பனின் ஹோஸ்டல் விலாசம் போட்டு ஜானகி என்ற பெயரில் கடிதம் அனுப்பினேன்.

சித்திரை வந்து எனது சோதினையும் முடிந்துவிட்டது.இனி என்ன செய்வது. எப்படியும் போய் பார்க்கவேண்டும் என முடிவெடுத்துவிட்டேன்.

WEST INDIES CRICKET TEAM இலங்கை வருவதாக தெரியும்,அம்மாவிற்கு கரைச்சல் கொடுத்து ,கொழும்பில் இருக்கும் மாமாவிடம் தங்க இடம் கேட்டு கொழும்பு போய்விட்டேன்.முதன் நாள் ஓவலில் போய் மட்ச் பார்தேன். அடுத்த நாள் மட்சிற்கு போகாமல் கையில் இருந்த நாரன்பிட்டிய விலாசத்தை கொண்டு அலைந்து திரிந்தேன்.ஓரளவிற்கு இடத்தை வேறு பிடித்துவிட்டேன்,மதியம் இரண்டு மணியிருக்கும் பிளாட்டை சுத்தி நடந்துவருகின்றேன் .யாரோ கூப்பிடும் சத்தம் திரும்பினால் அவளது அண்ணன்.

'டேய் இங்கு எங்கு வந்தனி" என மேலே கூட்டிக்கொண்டு போகின்றான்.அவர்கள் பிளட் பால்கனியில் அவனுடன் கதைத்துகொண்டு நிற்கின்றேன்.கீழே பாட்மின்டன் விளையாடிக்கொண்டு ஆள் நிக்குது.அப்படியே கொஞ்ச நேரம் நின்று பார்த்துவிட்டு விடைபெறுகின்றேன்.

ரெயினில் யாழ்பாணம் திரும்பும் போது விழுந்து செத்துவிடலாம் போலிருக்கு.விடு திரும்ப அம்மா கேட்கின்றா மட்ச் பார்க்க போனியா அல்லது வேறு ஏதும் அலுவலா என்று.

விசர் பெட்டை வீட்டு விலாசத்திற்கு கடிதம் போட்டிருக்கு. எனது ரூம் அகழ்வாராச்சிக்கு உட்படுத்தப்பட்டு அனைத்து கடிதங்களும் ,அவளின் சாமத்திய வீட்டு படமும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

A/L EXAM இரண்டாம் தரம் எடுத்து விட்டு ரிசல்டுக்காக காத்திருந்த ஒரு நாள் நண்பனுடன் வெலிங்டனில் "ஆறில் இருந்து அறுபது வரை" மதியம் காட்சி பார்த்து விட்டு வருகின்றேன்.எனது வீட்டுக்கருகில் இருக்கும் கோவிலில் இருந்து கல்யாண ஊர்வலம் ஒன்று போகின்றது.

மாப்பிள்ளை நானில்லை பெண் "மேனகா " தான் .நான் ஒரு லைட் போஸ்ருடன் சாய்ந்து நின்று அவளை பார்கின்றேன்.குனிந்த தலை நிமிராமல் போனவள் ஒழுங்கைக்குள் திரும்பும் போது அதே பழைய பார்வையை வீசிவிட்டு போகின்றாள்.

எனக்கு பின்னணியில் ஆறில் இருந்து அறுபது வரையில் "கண்மணியே காதல் என்பது கற்பனையோ,காவியமோ ,கண் வரைந்த ஓவியமோ " பாட்டு கேட்டுக்கொண்டே இருக்கின்றது.

.

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

அட, இவ்வளவு தானா, அர்ஜுன்?

உங்கள் காதலும் பத்தோடு, பதினோன்றாகப் போனதில் வருத்தம்!

யாவும் கற்பனை, என்று காணாததையிட்டுக் கதை ஒருவேளை உண்மையாய் இருக்கலாம் போல் உள்ளது!

போனால் போகின்றது! ஒரு பஸ்ஸை விட்டால் மற்றது வந்து விட்டுப் போகின்றது!

அது தானே வாழ்க்கை!!!

  • கருத்துக்கள உறவுகள்

இது சும்மா ஒரு வயசில வார இது......இதை காதல் என்று சொல்ல முடியாது......

பேச்சுவார்த்தை மூலம் ஒரு தீர்வை பெற்றிருக்கலாம்..அண்ணன்மாருடன் ,அப்பாவுட்னும் கதைத்துமுயற்சி செய்திருக்கலாம்.....

  • கருத்துக்கள உறவுகள்

கதையை நல்லாய் கொண்டு போயிட்டு கடைசியிலை இப்பிடி பொத்தெண்டு போட்டிட்டிங்களே???

எனக்கென்னமோ அந்த சிற்றிவேசனுக்கு பொருத்தமான பாட்டு இதுதான் எண்டு நினைக்கிறன்.

arjun கதையை சுருக்கமாக முடித்துவிட்டீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளம் என்பது ஆமை

அதில் உண்மை என்பது ஊமை

சொல்லில் வ்ருவது பாதி

நெஞ்சில் தூங்கி கிடப்பது மீதி .

...அவவுக்கு ...ஒ.எல் முடிய அவ்வளவு சீக்கிரம் கல்யாணமா ?....

..கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போன கோலங்கள் ....

  • கருத்துக்கள உறவுகள்

சுபமாய் முடியும் என்று பார்த்தால்...

கண்ணுக்குள் மறையாத ஓவியம் எல்லோருக்கும் இருக்கும் என்பது உண்மைதான்..

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட‌ அவவை பிறகு கனடாவில் சந்தீத்தனீங்களா அண்ணா?...எனக்கும் கதையை அவ்ச‌ர‌ப்பட்டு முடித்த மாதிரி இருக்குது

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பின்னணியில் ஆறில் இருந்து அறுபது வரையில் "கண்மணியே காதல் என்பது கற்பனையோ,காவியமோ ,கண் வரைந்த ஓவியமோ " பாட்டு கேட்டுக்கொண்டே இருக்கின்றது.

http://www.youtube.com/watch?v=fBdib2FwHTQ&feature=related

ஆகாய வெண்ணிலா தரைமீது வந்ததேனோ.....

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் நீங்கள் ஆரம்பத்தில் கதையை நன்றாக நகர்த்தியிருந்தீர்கள்.

பொறுமையின்மையால் அல்லது சில விடயங்களைப்

பகிர்ந்து கொள்ளக்கூடாது என்ற நினைப்பில் கதையை முடித்துவிட்டீர்கள்.

வாழ்த்துகள்

யாழ் இந்துவிலிருந்து நீங்கள் விலகியபோது நான் சேர்ந்திருக்கின்றேன்

  • தொடங்கியவர்

கருத்து சொன்ன நிலாமதி, ரதி, கோமகன் , நுணாவிலான், சாந்தி, சுவி , கவிதை , புங்கையூரான், இசைக்கலைஞ்ன் கிருபன் ,சாத்திரி ,புத்தன் ,தப்பிலி ,குமாரசாமி ,வாத்தியார் ,அலைமகள் ,இன்னுமொருவன், சஜிவன் அனைவருக்கும் நன்றிகள் .

அதைவிட அரசியல் எழுதுவதை விட்டு ஆக்கபூர்வமாக எதையாவது முயற்சிக்க சொன்னவர்களுக்கும் நன்றி ,மீள் பரிசீலனை செய்கின்றேன்.

கதை எனக்கும் மின்னி மறைந்துதான் விட்டது. உண்மையும் அதுதான் .

சில குறிப்புகள். கலியாணத்தின் பின் நான் ஆளைக்காணவில்லை.காண விரும்பவும் இல்லை.லண்டனில் இருந்து இந்தியா போகமுதல் திரும்பி வராவிட்டாலும் ஒருக்கா போய் பார்ப்பமோ என நினைத்தேன் .பின்னர் வேண்டாம் என்று விட்டு விட்டேன் .கதை எழுத தொடங்கத்தான் பழைய நினைவுகள் மீண்டும் மலர்ந்தது ,இனி லண்டன் வந்தால் கட்டாயம் போய் சந்திப்பேன்.

இது சும்மா ஒரு வயசில வார இது......இதை காதல் என்று சொல்ல முடியாது......

பேச்சுவார்த்தை மூலம் ஒரு தீர்வை பெற்றிருக்கலாம்..அண்ணன்மாருடன் ,அப்பாவுட்னும் கதைத்துமுயற்சி செய்திருக்கலாம்.....

----

புத்தனுக்கு ஒரு பச்சை. அர்ஜூனுக்கு இருந்தமாதிரி உங்கடை மனிசிமாருக்கும் ஒரு ஓட்டோகிராப் இருந்திருக்கலாம் :-)

உங்கட‌ அவவை பிறகு கனடாவில் சந்தீத்தனீங்களா அண்ணா?...எனக்கும் கதையை அவ்ச‌ர‌ப்பட்டு முடித்த மாதிரி இருக்குது

சந்திக்காமல் விடுவதுதான் அழகு.

அவவின் கணவன் உயிருடன் இருக்கும் பொழுதோ அல்லது அவரின் செத்தவீட்டுக்கோ நீங்கள் போனால் தப்பில்லை, ஆனால் இனிப் போவது பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும், சில சமயத்தில் உங்களைப் பற்றி அவா தப்பாக எடை போடக் கூடும். இது எனது அபிப்பிராயம் :)

  • கருத்துக்கள உறவுகள்

<p>

புத்தனுக்கு ஒரு பச்சை. அர்ஜூனுக்கு இருந்தமாதிரி உங்கடை மனிசிமாருக்கும் ஒரு ஓட்டோகிராப்
அந்த ஒட்டோகிராப்பை நான் கிறுக்க நீங்கள் வாசிக்க வேணும் என்று நினைக்கிறீயள்...ஒருநாளைக்கு கிருக்கினால் போச்சு...
  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் அண்ணா கதை எழுதிய விதம் அழகு பாராட்டுக்கள். மற்றவர்கள் சொன்னது போலவே கதையை சடுதியா தொப் எண்டு போட்ட மாதிரி இருக்கு. உங்களுக்கு வந்தது காதலா எண்டு என்னால் முடிவு பண்ண முடியவில்லை ஆனால் உங்களுக்கு உடம்பு முழுக்க மச்சம் எண்டு மட்டும் முடிவா சொல்லுறன். உங்கடை கதையில இருந்து பொம்பிளை வீடு கொஞ்சம் வசதியான, hi-fi type போல இருக்கு, காதல் கை கூடியிருந்தாலும் உங்களுக்கு hi maintenance தான். உங்களுக்கு நடந்தமாதிரி நான் காதல் வயப்பட்டு, எனக்கு அப்பிடி நடந்தால் அதை தாங்கும் சக்தி எனக்கு இல்லை. கதை கதையாம் பகுதியில உங்களிடம் இருந்து இனமும் அதிகம் எதிர் பார்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

அர்யூன் உங்கள் கதை நன்றாக இருந்தது... உங்களுக்குள்ளும் ஒரு படைப்பாளி உள்ளார். நல்ல இலகுவான புரிதலுக்குரிய எழுத்து நடை... நன்றாக இருக்கிறது.. இன்னும் எழுதுங்கள். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜூனுக்கு ஒரு ஓ போட வைக்கிற படைப்பு. முடிவு சோகம் தான் எண்டாலும் உங்களுக்கு ஆறுதல் எல்லாம் யாரும் சொல்ல வேண்டிய தேவையில்லை. இதையெல்லாம் வெற்றிகரமாகக் கடந்து வந்து இப்ப நன்றாகத் தான் இருக்கிறீங்கள். அது தான் மிக முக்கியமானது. விளக்குத் தூணில சாய்ந்து பார்த்த படியான விம்பத்தோடு நீங்கள் கதையில் இருந்து மறைகிறீர்கள். கதை முடிய திரைக்குப் பின்னால் கவிகிற சோகம், அழுத்தம், சுய இரக்கம் கோபம் இவையெல்லாம் நீங்கள் எழுதாமலே விளங்குகிறது. என் பால்ய வயது நண்பர்கள் ஓரிருவர் இந்த கன்றுக் குட்டிக் காதல் தோல்வியின் பின்னர் விட்ட படிப்பும் உழைப்பும் அவர்களது வாழ்க்கையையே மாற்றி விட்டது.உங்களுக்கு எல்லாம் சுபமே நடந்திருக்கிறது. வாழ்த்துக்கள்!

சாதாரணக் காதல் கதை என்றாலும், கோர்த்துச் சொன்ன விதம் நன்றாக இருந்தது.

மற்றைய பதிவுகளில் இருந்த சுவை, கடைசிப் பதிவில் இல்லை. ஏதோ அந்தரப்பட்டு முடித்த மாதிரியுள்ளது. காதலைக் கோட்டை விட்ட மாதிரி, கடைசிப் பதிவும் கைவிடப்பட்டுள்ளது.

அர்ஜுன், நல்ல கதை சொல்லியாக வெற்றி அடைந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன பாஸ்.. உங்க கதைய முழுசா படிப்பம் என்று ஓடோடி வந்த என்னை ஏமாத்திப்போட்டியளே.??? ராக்கட் போல ஆரம்பிச்சு புஸ்வாணம் போல முடிச்சிட்டிங்களே அண்ணா. :o

(ஆனால் கதையும் எழுதினவிதமும் சூப்பர் அண்ணா) :)

:-)

Edited by கறுவல்

<p>அந்த ஒட்டோகிராப்பை நான் கிறுக்க நீங்கள் வாசிக்க வேணும் என்று நினைக்கிறீயள்...ஒருநாளைக்கு கிருக்கினால் போச்சு...

உங்களைத் தனிப்படச் சொல்லவில்லை புத்தன். பொதுவாகச் சொன்னேன். ஆனால் நீங்கள் கிறுக்கினால் வாசித்தாற் போயிற்று.

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் அண்ண!என்னத்தைச்சொல்ல...பின்னீட்டங்க...முதல் இரண்டு பகுதியிலும் ஒரு விறுவிறுப்பு நாவல் படித்ததுபோல் நுனிக்கதிரையில் இருந்து படிக்கவைத்துவிட்டு கடைசிப்பகுதியில் அழவச்சீட்டங்க...அருமையான் பதிவு...

நல்லதொரு காதல் கதை.....கடசியில் உப்பு சப்பில்லாமல் போனமாதிரி உள்ளது

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்

கண் மறைந்த ஓவியம் இன்றுதான் என் கண்ணில் பட்டது. உண்மையியே அர்ஜூன் நன்றாக எழுதியுள்ளீர்கள். இத்தனை திறமைகளை உங்களுக்குள் வைத்துக்கொண்டு ஏன் தொடர்ந்து கதை எழுதுவதில்லை? உங்கள் ஆக்கங்களை வாசிக்கக் காத்திருக்கிறோம். பாராட்டுக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.