Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம் என்றால் என்ன?, நிலம் என்றால் என்ன?

Featured Replies

நான் படித்த காலத்தில் வாத்தியார் மொக்குப்பயலே என்று, அடிக்கடி எனது தலையில குட்டின ஞாபகம் வருகிறது. அவர் குட்டின தாக்கமோ என்னவோ தெரியாது இப்ப தலைமுடி கொட்டுது. இந்த நிலையில நண்பர் ஒருவர் கூறினார் புலத்தில இருந்து நிலத்துக்குப் போயிட்டு வாறன் என்று. எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. புலம் என்றால் என்ன, நிலம் என்றால் என்ன? என் மொக்குத்தனத்தை ஏன் காட்டிக்கொள்வான் என்று பேசாமல் வந்துவிட்டேன். தயவுசெய்து இதற்கான விளக்கத்தை யாராவது தர முடியுமா?

ஒரு வாத்தியார் கூறினார். புலம் என்றால் வயல், இடம், திக்கு, புலனுணர்வு, அறிவு, துப்பு, நூல், வேகம்.

நிலம் என்றால், தரை, மண், உலகு, பதவி, தானம், என்று.

என்னொரு வாத்தியார்,

யாயும் ஞாயும் யாரா கியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

யானும் நீயும் எவ்வழி யறிதும்

செம்புலப் பெயனீர் போல

அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.

-செம்புலப் பெயனீரார். (குறுந்தொகை - 40)

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் ஊடகங்கள் கிட்டத்தட்ட எல்லாமே இந்தச் சொல்லாடலை தவறாக கையாள்கின்றன.

இது தொடர்பான ஒரு விவாதம் யாழ் களத்திலும்.. நடந்து புலம் என்பது நிலத்தை குறிக்கப் பயன்படுவதால்.. புலம்பெயர் தேசம் என்றே அகதிகளாக தாய் நிலம் விட்டு வந்து வாழும் இடங்களை அழைப்பது சரி என்று சொல்லப்பட்டது.

இருந்தாலும் யாழில் கூட சில சந்தர்ப்பங்களில் அதை பின்பற்றுவதாகத் தெரியவில்லை. நான் இயன்ற வரை புலம் என்று புலம்பெயர் தேசங்களை குறிப்பிடுவதை, யாழில் நடந்த விவாதம் மேற்கொண்ட தீர்ப்புக்கு அப்புறம், எழுதுவதை தவிர்த்து வருகிறேன். புலம்பெயர் தேசங்களை.. வாழும் புலம் என்று சொல்லலாம். யாழ் களத்தின் பிரதான பிரிவில் குறிப்பிட்டது போல..! :(:rolleyes::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்து வாழும் மக்களின் நிலம் மீதான பற்றுதலால் தாயகத்தை நிலம் என அழைக்கின்றனர்.

ஆனால் தாயக மக்களிடையே இது போன்ற சொற்கள் பாவிக்கப்படுவது குறைவு.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில(தாயகத்தில்) இடம் பெயர்ந்த மக்கள் அகதிகளாக பார்கப்படுகிறார்கள்(அவமாணப்படுகிறார்கள்)நாடு பெயர்ந்த மக்கள் அது தான் புலம் பெயர்நத மக்கள் நாயகர்களாக :rolleyes: பார்க்கப்படுகிறார்கள்.(மதிக்கப்படுகிறார்கள்)இரண்டுக்கும் காரணம் ஒன்றே.கொடுமையடா சாமி :(

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில், நிலபுலங்கள் என்று ஒரு வார்த்தை வழக்கில் உண்டு!

இதன் கருத்துப் படி, நிலம் என்பது வாழும் இடம்!

புலம் என்பது வாழும் இடத்திற்கு வெளியே உள்ள வயல் வெளிகள்!

அதாவது ஊருக்கு வெளியே என்று பொருள் படும் என்று கருதுகின்றேன்!

தாயகத்தில் வாழ்பவர்கள் நிலத்தில் வாழ்பவர்கள்!

வாழும் நிலத்தை விட்டு வெளியில் வாழ்பவர்கள் 'புலத்தில்' வாழ்பவர்கள்!

இந்த வகையில் 'நிலம் பெயர்ந்தவர்கள்' என்ற வார்த்தையே உபயோகிக்கப் பட வேண்டும்!

ஆனால் 'புலம் பெயர்ந்தவர்கள்' என்ற வார்த்தையே எங்களால் உபயோகிக்கப் படுகின்றது!

இது தவறு என்று கருதுகின்றேன்!

கோமகன், நெடுக்கு அல்லது உடையார் தான், இந்தக் குளறுபடியைத் தீர்க்கக் கூடியவர் என எண்ணுகின்றேன்!

  • தொடங்கியவர்

புலம் என்பது நிலத்தைத்தான் குறிக்கிறது. புலம்பெயர்ந்து வாழும் தேசத்தைக் குறிக்கவில்லை.

ஏற்கனவே குறுற்தொகைப் பாடல் ஒன்றைக் குறிப்பிட்டிருந்தேன்.

செம்புலப்பெயர் நீர் போல்…. என்பது செம்பாட்டு மண் உள்ள நிலத்தில் உள்ள நீர்…

……

வெறுபுலத் திறுக்குந் தானையொடு – வேறு நிலத்திற்குச் செல்லும் படை

…………..

இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும்- நட்சத்திரம் தென் திசைக்கு செல்லினும்.

புறுநாநூறு

மேலும் ஊரில், காணிகளின் பெயரைப் பாருங்கள்.: கொம்மட்டிப் புலம், தாழிபுலம், செட்டிபுலம், உயிலம்புலம், பெரிய புலம், நாவலடிப்புலம், ஈச்சம்புலும், மாரியப்புலம், கோயிலுப்புலம், பள்ளம்புலம், சத்திரியப் புலம், சூடுவெந்தபுலம், ஆவுடையார் புலம், மயிலைப்புலம், ஆலம்புலம்,

உரையாடல்: அவன் நிலம் புலம் எல்லாம் வித்துட்டு வந்திட்டான்.(மேட்டுக்காணியும் வயலும் )

விளக்கத்திற்கு நன்றிகள், செம்பகன்!

தமிழில், நிலபுலங்கள் என்று ஒரு வார்த்தை வழக்கில் உண்டு!

இதன் கருத்துப் படி, நிலம் என்பது வாழும் இடம்!

புலம் என்பது வாழும் இடத்திற்கு வெளியே உள்ள வயல் வெளிகள்!

அதாவது ஊருக்கு வெளியே என்று பொருள் படும் என்று கருதுகின்றேன்!

தாயகத்தில் வாழ்பவர்கள் நிலத்தில் வாழ்பவர்கள்!

வாழும் நிலத்தை விட்டு வெளியில் வாழ்பவர்கள் 'புலத்தில்' வாழ்பவர்கள்!

இந்த வகையில் 'நிலம் பெயர்ந்தவர்கள்' என்ற வார்த்தையே உபயோகிக்கப் பட வேண்டும்!

ஆனால் 'புலம் பெயர்ந்தவர்கள்' என்ற வார்த்தையே எங்களால் உபயோகிக்கப் படுகின்றது!

இது தவறு என்று கருதுகின்றேன்!

கோமகன், நெடுக்கு அல்லது உடையார் தான், இந்தக் குளறுபடியைத் தீர்க்கக் கூடியவர் என எண்ணுகின்றேன்!

பொருள் மயக்கம் தரும் சொற்கள் பொதுவாக எல்லா மொழிகளிலுமே உண்டு . அந்தவகையில் நிலம் , புலம் இவையிரண்டும் மேலோட்டமாகப் பார்த்தால் ஒரே கருத்தைத் தருவது போலத் தோன்றினாலும் , நுணுக்கமாகப் பார்தால் நீங்கள் சொல்வது போல் பொருள் வேறுபடும் . சுய அடையாளத்தை உள்ள தாயகக் குடிமக்கள் இந்த சொல்லாடலைப் பாவிப்பதில் பிழை எதுவும் இல்லை . ஆனால் , ஏதும் அற்ற எதிலிகளாக இடம்பெயர்ந்து அன்னிய தேசங்களில் இரண்டாவது தலைமுறையையைச் சந்திக்கும் நாங்கள் இதே சொல்லாடலை ( அதாவது புலம் பெயர்வு அல்லது புலம் பெயர் தேசம் )பாவனையில் வைப்பது பிழையாகவே எனக்குப் படுகின்றது . ஆனாலும் , < நிலத்தில் உள்ளவன் திரவியம் தேடவே புலத்தைத் தாயகத்தில் அமைத்தான் . அதுபோலவே அன்னிய தேசத்துக்கு திரவியம் தேட்போனவர்களைப் புலம் பெயர்ந்தவர்கள் > என்று சொல்லுவோரும் உண்டு . ஆனால் , இது எவ்வளவு தூரத்திற்கு சரியான சொல்லாடலா என்பதில் தெளிவில்லை . எனது அறிவுக்கு எட்டியவகையில் இதற்கு ஒத்த கருத்தாக புலம்பெயர்வு = இடப்பெயர்வு , புலம் பெயர் தேசம் = இடம் பெயர் தேசம் என்ற சொல்லைப் பரிந்துரை செய்கின்றேன் . இதுபற்றி தமிழறிவு உள்ளவர்கள் கருத்துக்களை வைத்தால் கள உறவுகளுக்கு நன்மையாக இருக்கும் :) :) :) .

சொந்த நிலத்திலிருந்து கள்ளமாய் ஒடி வந்து 'அசைலம்' அடித்து வாழுமிடம் புலம்.

தாயகத்தில் கூட தமிழீழ பிரதேசத்தை வடபுலம், தென்புலம்... என வர்ணிப்பதுண்டு. எனவே இதில் புலம் எனப்படுவது ஒரு நாட்டின் பிரதேசம் இல்லை பகுதி.

அந்த நிலத்தை விட்டு பெயர்ந்தவன் எல்லாம் 'புலம் பெயர்ந்தவன்' என அழைக்கப்படுகிறான், அதாவது தான் வாழ்ந்து வந்த பிரதேசத்தை விட்டுவிட்டு இடம்பெயர்ந்த காரணத்தால்.

எனவே 'புலம் பெயர்ந்தவன்', 'புலம்பெயர்ந்த தேசம்' என்பன சரி என்றே தோன்றுகின்றது.

சொந்த நிலத்திலிருந்து கள்ளமாய் ஒடி வந்து 'அசைலம்' அடித்து வாழுமிடம் புலம்.

சொந்த நிலத்திலிருந்து கள்ளமாய் ஒடி வந்து தஞ்சம் பெற்று வாழுமிடம் புலம். :) :) :)

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த,சொந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு எதாவது ஒரு காரணத்திற்காக இடம் பெயர்ந்து வசித்தால் அவ்விடம் புலம்[ஒருதரும் அடிக்க வாறதில்லை :lol: ]

தாயகத்தில் கூட தமிழீழ பிரதேசத்தை வடபுலம், தென்புலம்... என வர்ணிப்பதுண்டு. எனவே இதில் புலம் எனப்படுவது ஒரு நாட்டின் பிரதேசம் இல்லை பகுதி.

அந்த நிலத்தை விட்டு பெயர்ந்தவன் எல்லாம் 'புலம் பெயர்ந்தவன்' என அழைக்கப்படுகிறான், அதாவது தான் வாழ்ந்து வந்த பிரதேசத்தை விட்டுவிட்டு இடம்பெயர்ந்த காரணத்தால்.

எனவே 'புலம் பெயர்ந்தவன்', 'புலம்பெயர்ந்த தேசம்' என்பன சரி என்றே தோன்றுகின்றது.

தாயகத்தில் கூட தமிழீழ பிரதேசத்தை வடபுலம், தென்புலம்... என வர்ணிப்பதுண்டு. எனவே இதில் புலம் எனப்படுவது ஒரு நாட்டின் பிரதேசம் இல்லை பகுதி.

இதில் வடபுலம் தென்புலம் என்பது அந்தந்தப் பிரதேசங்களின் திசைகளைக் குறிக்கும் அகோதா :) :) :) .

சொந்த நிலத்திலிருந்து கள்ளமாய் ஒடி வந்து தஞ்சம் பெற்று வாழுமிடம் புலம். :) :) :)

ஒடி வந்ததே பொருளுக்காக. அதற்குள் ஆங்கிலம் தவிர்ப்பு. சரி இனி புதிதாய் சிந்திப்போம்.

சுயனிலமருவி களவாய்த்தான் - பிறன்

அடிக்கால் பற்றுவதே புலமாம்

-ஆயிபோவன் தப்பிலிச்சித்தன்-

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

புலம்.. என்றால்.. வயல் ..திசை..வேகம்.. இடம் இப்படி பல பொருள்படும். புலம்பெயர்ந்தவன் என்றால்..வேகமாக இடம் பெயர்ந்தவன் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.. அதை விட முக்கியமானதொரு அர்த்தம் அது என்னவென்றால்.புலத்தோர் என்றால் ஞானிகள் என்று தமிழில் ஒரு பொருள் உண்டு எனவே நாங்கள் எல்லோரும் ஞானிகள்..

  • தொடங்கியவர்

தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தான் என்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை

தென்புலத்தார் - முன்னோர்கள்,

  • கருத்துக்கள உறவுகள்

புலம்.. என்றால்.. வயல் ..திசை..வேகம்.. இடம் இப்படி பல பொருள்படும். புலம்பெயர்ந்தவன் என்றால்..வேகமாக இடம் பெயர்ந்தவன் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.. அதை விட முக்கியமானதொரு அர்த்தம் அது என்னவென்றால்.புலத்தோர் என்றால் ஞானிகள் என்று தமிழில் ஒரு பொருள் உண்டு எனவே நாங்கள் எல்லோரும் ஞானிகள்..

சாத்திரியார், நீங்கள் எதை இழந்தாலும் உங்கள் நகைச்சுவையை மட்டும், இழந்து விடாதீர்கள்! உங்கள் பதிவுகளுக்கு உயிரூட்டுவதே அவை தான்!

' தென் புலத்தார், தெய்வம், விருந்து ஒக்கல்

தான் என்று ஐம்புலத்தார் ஓம்பல் தலை' - திருவள்ளுவர்.

இதில் புலம் என்பது திசையைக் காட்டுகின்றது! எனவே வெவ்வேறு திசைகளுக்குப் போனவர்வர்களை, புலம் பெயர்ந்தவர்கள் என்று கூறலாம் போல உள்ளது!

பொதுவாகப் பறவைகள் புலங்களில் (குடியிருப்புக்கள் இல்லாத வெளிகளில், வயல்களில்) வசிக்கின்றன!

அவை இடம் மாறும் போது, புலம் பெயர்கின்றன என்று நாம் கூறுவதுண்டு!

குழப்பி விட்டேன் போல் உள்ளது! :lol:

புங்கையூரான் என்னிடம் இந்த நகைச்சுவை உணர்வு மட்டும் இயற்கையாக சேர்ந்திருக்கவில்லையென்றால் எனக்கு எப்பொழுதோ விசராக்கியிருக்கும் அல்லது நான் தற்கொலை செய்திருப்பேன். . :( என்ன யாழ் இணையத்தில் பலரிற்கு நிம்மதியாய் இருந்திருக்கும். :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நிலம் என்பது பூமி

பரப்பளவில் வேறு வேறு பெயர்களைக் கொண்டது.

ஒரு வீடு உள்ளது ஒரு காணி.

பல காணிகளைக் கொண்டது ஒரு குறிச்சி.

பல குறிச்சிகளைக் கொண்டது ஒரு ஊர்.

பல ஊர்களைக் கொண்டது நாடு.

வாழ்ந்த ஊரை விட்டு வேறு இடத்திற்குச் சென்றால் அது இடப்பெயெர்வு

வாழ்ந்த நாட்டை விட்டு வேறு நாட்டிற்குச் செல்ல நேர்ந்தால் அது புலம் பெயர்வு.

புலம் என்பது தூரத்தே இருக்கும் ஒரு பெரிய நிலப்பரப்பு.

நிலமும் புலமும் பொருளில் ஒன்றுதான்.

ஆனால் அது எங்கே இருக்கின்றது என்பதில் தான் பொருள் வேறுபடுகின்றது.

இடம் மாறும் போது பொருளும் மாறுபடுகின்றது.

  • தொடங்கியவர்

புலம் என்றால் என்ன? நிலமென்றால் என்ன? என்ற பகுதிக்கு வந்து கருத்துக்கூறிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். புலம், நிலம் இரண்டும் வேறான கருத்துக்களைக் கொண்டுள்ளவை. என்றாலும் சில இடங்களில் அவற்றின் கருத்து ஒன்றுபட்டும் வரும் மாறுபட்டும் வரும். இவை இரண்டும் ஒரு நிலப் பகுதியுக்குள்ளேயே அடங்குகின்றன. இதற்கான உதாரணங்கள் என்னால் மேலே குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றின் அடிப்படையில், புலம் என்ற பதத்துக்கு வெளிநாட்டில் வாழும் மக்கள் என்ற கருத்தை கையாள்வது தவறு என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். கருத்து வழங்கியவர்களும் இதனை வலியுறுத்தியுள்ளார்கள். ஆகவே புலம் பெயர்ந்து வாழும் தேசதில் இருந்து… அல்லது வாழும் புலத்திலிருந்து…. என்று எழுதுவதே சரியானதெனக் கருதுகிறேன்.

தவறு இருப்பின் திருத்திக் கொள்வோம்.

புலத்துக்கும், நிலத்துக்கும்... சின்னதாதான் வித்யாசம்...!

புலம்- வசதியான அகதிகள் வாழுமிடம்!

நிலம்- வறுமை வசதியாய் .. அகதிகளில் வாழும் இடம்!

  • கருத்துக்கள உறவுகள்

புலத்துக்கும், நிலத்துக்கும்... சின்னதாதான் வித்யாசம்...!

புலம்- வசதியான அகதிகள் வாழுமிடம்!

நிலம்- வறுமை வசதியாய் .. அகதிகளில் வாழும் இடம்!

100% நிஐம்

  • 6 years later...

இன்று புலம் என்றால் என்ன என்று தேட போய் இந்த திரி கண்ணில் பட்டது. முழுக்க வாசித்தும் ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியாமல் இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

இன்று புலம் என்றால் என்ன என்று தேட போய் இந்த திரி கண்ணில் பட்டது. முழுக்க வாசித்தும் ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியாமல் இருக்கு

உங்களூக்கேயா முடியல ?? 

 தற்போதய புலம் பொருள் படுவது வெளிநாடு தான் tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

 தமிழறிஞர் திரு. கார்த்திகேசு சிவதம்பி அவர்களிடம் 08-01-2011 அன்று கொழும்பில் உள்ள அரசு இல்லத்தில் திருநெல்வேலி, சாராள் தக்கர் கல்லூரியில் பணியாற்றும் வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியை முனைவர் மூ.சு.தங்கம் அவர்கள் “சிதறல் (Diaspora) மற்றும் புலம் பெயர்த தமிழர்'' என்ற தலைப்பில் எடுத்த நேர்முகப் பேட்டியின் ஓர் தொகுப்பு :

இலங்கையில் தற்பொழுது நடந்து கொண்டிருக்கிற சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் தாங்கள் சிதறல் பற்றிப் பேசினீர்கள். அதைப்பற்றி ஒரு சிறு விளக்கம் கூறுங்கள்.

“dia'' என்றால் throughspace என்று பொருள்படும். “spora' என்றால் விதைகள் வெடித்துச் சிதறுதல் என்று அர்த்தம் கொள்ளலாம். இதுவே மனிதர்களின் இயக்கத்தைக் குறிப்பிடும் போது “diaspora'' என்றால் “சிதறல் அடைதல்'' என்று பொருள்படும்.

ஜெர்மனி ஹிட்லரின் கட்டுப்பாட்டிலிருந்தபோது அங்குள்ள யூதர்கள் ரஷ்யா, இஸ்ரேயல் மற்றும் உலகில் பிற நாடுகளுக்கு சிதறிச் சென்றனர். இதுவே “Jewish Diaspora'' என்று பேசப்பட்டது. இவ்வாறு மனிதர்களை குறிக்கும் முகமாக முதலில் “DIASPORA'' என்ற வார்த்தை யூதர்களின் சிதறல்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் நாடுகளில் அதிகமான அளவில் சிதறல் ஏற்பட்டிருக்கிறது. இலங்கையைப் பொறுத்தமட்டில் இலங்கைத் தமிழ் மக்கள் சிதறல் என்பது முக்கிய இடம்வகிக்கிறது. அதாவது “சிதறல்'' என்பது இரண்டுவகைப்படும். நாடு கடத்தப்பட்டதற்கு (exiles) என்பது ஒருவகை. மற்றொன்று தாங்களாவே நாட்டைவிட்டுச் சென்றவர்கள் (self exiles). இலங்கைத் தமிழ் மக்களின் சிதறல் இரண்டாம் வகையில் சார்வது. இலங்கையில் உள்ள ஜாப்னா தீபகற்பத்திலிருந்து அதிகமான அளவில் தமிழர்கள் சிதறல் அடைந்துள்ளனர். இச்சிதறலுக்கு முக்கியக் காரணம் தமிழர்கள் தங்கள் பிள்ளைகளின் படிப்பை இங்குத் தொடர இயலாதச் சூழலில் மற்ற நாடுகளுக்கு சென்றனர்.

அண்மைக்காலத்தில் இலங்கையிலிருந்து வெளிநாடு சென்ற தமிழர்கள் அதிகமான அளவில் தமிழ்வழியில் கல்வி கற்றவர்கள். அதாவது ஆங்கிலவழியில் கல்வி கற்றவர்கள் அல்லர். இவர்கள் தாங்கள் செல்லுமிடங்களில் தமிழ் பேசுவது மட்டுமல்லாமல் தங்கள் தமிழ் தன்மையை உண்மையாகப்பற்றிப் பாதுகாக்கிறார்கள். இந்துக்கள் மட்டுமல்லாது இங்கிருந்துச் சென்ற கிறிஸ்தவர்கள் தங்கள் ஆலயங்களில் மாதத்திற்கு ஒருமுறை தமிழ்வழி ஆராதனை முறைமைகளைக் கடைப்பிடிக்கின்றனர். மேலும் மொழிப்பற்றைத்தாண்டி திராவிட உறவுமுறைகளைத்தான் பின்பற்றுகிறார்கள். இட்லி, தோசை, புட்டு போன்ற நம்முடைய உணவு முறைகளையே கைக்கொள்கின்றனர். பொங்கல், தீபாவளி போன்ற முக்கியப் பண்டிகைகளைக் கொண்டாடுகின்றனர். தாங்கள் புகலிடமாகச் சென்ற இடங்களில் எல்லாவிதமான வசதி வாய்ப்புகள் இருந்தாலும் தங்கள் சொந்த நாட்டில் தாங்கள் வசித்த இடத்தில் உள்ள கேணி, குளம், கோவில் என்று நினைத்துக்கொண்டே இருப்பார்கள். இதனை நாடுகடந்த மனநிலை என்று அழைப்பர். இவ்வாறு நாடு, இனம், மொழியினைக் கடந்து பண்பாட்டுப் பேணுகை நடைபெறுகிறது.

புலம் பெயர்தல் பற்றி உங்கள் கருத்து என்ன?

“புலம்'' என்றால் ஒரு நிலப் பகுதி அல்லது நிலப்பரப்பு என்று பொருள்படும். வடபுலம் என்றால் வடபகுதி அல்லது வடநிலம் என்றும் தென்புலம் என்றால் தென்பகுதி அல்லது தென் நிலம் என்றும் பொருள் கொள்ளலாம். புலம் பெயர்தல் என்றால் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வாழமுடியும் என்ற நம்பிக்கையோடு கடந்துச் செல்லுதலாகும். புலமை மற்றும் புலவோன் (அறிவின் எல்லை) என்ற வார்த்தைகள் இதனோடு தொடர்புடையவைகளே.

புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு அவர்கள் வாழும் நாடுகளில் அடையாள நெருக்கடி உள்ளதா?

தமிழர்கள், தமிழ் அல்லாதோர் மத்தியில் வாழும் போது அவர்கள் தமிழ்த்தன்மைக் கூடுகிறது. அத்தகுச் சூழ்நிலையில் அவர்கள் தங்கள் தமிழ்த்தன்மையைப் பராமரிப்பதையே நாம் அடையாள நெருக்கடி என்று கூறுகிறோம். இத்தகுப் பிரச்சனைகள் தனிப்பட்டோர் வாழ்க்கையில் வரலாம். மற்றபடி பொதுவில் தமிழன் என்ற அடையாளத்திற்கு எந்தப் பிரச்சனையுமில்லை. ஏனென்றால் நம்முடைய கலாச்சாரம் மிகவும் பழமையானது. அதிலும் மொழியில் மாத்திரம் அடையாள நெருக்கடி கிடையாது. ஏனென்றால் சங்க இலக்கியம் இருக்கிறதே.

நன்றி கீற்று .காம் 

எனது கருத்துப்படி புலம்  என்றால் தாயகம்.  இடம் பெயர்ந்த்வர்கள் /புலத்தில் இருந்து வெளியேறி  (வெளி நாடு ) சென்றவர்கள்

புலம்   பெயர்ந்தவர்கள். புலம் பெயர் தமிழர் / வெளிநாட்டு தமிழர் ..
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.