Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொய்மை வெல்கின்றது....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாரீசன் என்ற மாயமானில்,

மதியிழந்த சீதா தேவியின்,

மயக்கம் போல,

இரவு பகலாகத்,

தினமும் பூக்கின்ற,,

இணையத் தளங்களின் பூக்களால்,

பாலும், நீரும்

கலந்த கிண்ணத்திளிருந்து,

பாலை மட்டும் பிரித்தெடுக்கும்,

வல்லமையில்லாத,

பாவப் பட்ட அன்னப் பறவையாய்,

உண்மையும் பொய்யும்,

ஒன்றுடன் ஒன்று,

குலவிக் கலவும் , உலகத்தில்,

உண்மையைத் தேடுகின்றேன்!

பொன்னும், மணியும்,

புன்னகைகளும் அணிந்து,

பொய்மை வலம் வருகின்றது.

மண்ணின் மைந்தர்கள்,

என்ற கவசம் பூட்டித்,

தென்றல் காற்றின் மென்மையோடு,

பொய்மை உலா வருகின்றது.

புனிதமேனும் பேழையில்.

பத்திரமாகப் பூட்டிவைத்துப்,

பீடத்தில் அமர்த்தித்,

தூவிய அர்ச்சனைப் பூக்களிலும்,

துளித் துளியாய்ச் சிந்திய,

துவர்ப்புக் கலந்த,

வேர்வைத் தடங்களிலும்,

பொய்மை கலந்து விட்டது.

தர்மத்தின் முக மூடியைப்,

போர்த்துக் கொண்டு,

சர்வ தேச அரங்குகளில்,

சந்தனக் காவியினால்,

நொந்து சிதைந்து போன,

எலும்புக் கூடுகளையும்,

கண்ணீரில் நிதம் நனையும்,,

தலையணைகளின் ஈரங்களையும்,

மூடி மறைக்கின்றது.

அமாவாசைக் காலத்தின்,

கும்மிருட்டை நோக்கி,.

நம்மை அழைத்துச் செல்கிறது,

பாம்பையும், கயிற்றையும்,

பிரித்தறிய இயலாத,

அத்துவிதப் பெருவெளியின்,

அனாதைகளாய்,

அரிதாரம் பூசிய பொய்மை,

அழைத்துச் செல்கின்றது.

அர்த்த ராத்திரியின்,

இருட்டின் மங்கல் வெளிச்சத்தில்,

அறிவென்ற விளக்கேந்தி,

அடையாளம் காண்போம்!

பொய்மைகளின் புகலிடத்தை,

வாய்மையால் அழித்திடுவோம்!

மாரீசன் என்ற மாயமானில்,

மதியிழந்த சீதா தேவியின்,

மயக்கம் போல,

இரவு பகலாகத்,

தினமும் பூக்கின்ற,,

இணையத் தளங்களின் பூக்களால்,

பாலும், நீரும்

கலந்த கிண்ணத்திளிருந்து,

பாலை மட்டும் பிரித்தெடுக்கும்,

வல்லமையில்லாத,

பாவப் பட்ட அன்னப் பறவையாய்,

உண்மையும் பொய்யும்,

ஒன்றுடன் ஒன்று,

குலவிக் கலவும் , உலகத்தில்,

உண்மையைத் தேடுகின்றேன்!

பொன்னும், மணியும்,

புன்னகைகளும் அணிந்து,

பொய்மை வலம் வருகின்றது.

மண்ணின் மைந்தர்கள்,

என்ற கவசம் பூட்டித்,

தென்றல் காற்றின் மென்மையோடு,

பொய்மை உலா வருகின்றது.

புனிதமேனும் பேழையில்.

பத்திரமாகப் பூட்டிவைத்துப்,

பீடத்தில் அமர்த்தித்,

தூவிய அர்ச்சனைப் பூக்களிலும்,

துளித் துளியாய்ச் சிந்திய,

துவர்ப்புக் கலந்த,

வேர்வைத் தடங்களிலும்,

பொய்மை கலந்து விட்டது.

தர்மத்தின் முக மூடியைப்,

போர்த்துக் கொண்டு,

சர்வ தேச அரங்குகளில்,

சந்தனக் காவியினால்,

நொந்து சிதைந்து போன,

எலும்புக் கூடுகளையும்,

கண்ணீரில் நிதம் நனையும்,,

தலையணைகளின் ஈரங்களையும்,

மூடி மறைக்கின்றது.

அமாவாசைக் காலத்தின்,

கும்மிருட்டை நோக்கி,.

நம்மை அழைத்துச் செல்கிறது,

பாம்பையும், கயிற்றையும்,

பிரித்தறிய இயலாத,

அத்துவிதப் பெருவெளியின்,

அனாதைகளாய்,

அரிதாரம் பூசிய பொய்மை,

அழைத்துச் செல்கின்றது.

அர்த்த ராத்திரியின்,

இருட்டின் மங்கல் வெளிச்சத்தில்,

அறிவென்ற விளக்கேந்தி,

அடையாளம் காண்போம்!

பொய்மைகளின் புகலிடத்தை,

வாய்மையால் அழித்திடுவோம்!

:):):)1 .

  • கருத்துக்கள உறவுகள்

பாலும், நீரும்

கலந்த கிண்ணத்திளிருந்து,

பாலை மட்டும் பிரித்தெடுக்கும்,

வல்லமையில்லாத,

பாவப் பட்ட அன்னப் பறவையாய்,

உண்மையும் பொய்யும்,

ஒன்றுடன் ஒன்று,

குலவிக் கலவும் , உலகத்தில்,

உண்மையைத் தேடுகின்றேன்!

உண்மைகளை அறிய மக்கள் ஆலாய் பறக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.அவர்கள் காலம் கடந்தாவது உண்மையை அறிவார்கள் என்பதில் அளவிலா நம்பிக்கை உண்டு.

நல்லதொரு கவிதையை தந்த புங்கையூரானுக்கு நன்றி.

எழுத்துநடையில் உவமைகள் நன்றாக வருகின்றது.

இவ் யுகத்தில் பொய்மை மலிந்து விட்டமை நிதர்சனம்.

ஆட்சியில் பொய்மை,

கொள்கையில் பொய்மை,

நேசத்தில் பொய்மை,

கலாச்சாரத்தில் பொய்மை,

மொத்தத்தில் வாழ்க்கையே பொய் என்ற மேடையில் தான் அரங்கேறிவருகின்றது!

வாய்மையே வெல்லும் என்ற கூற்று சற்று மங்கித்தான் வருகின்றது இவ்வுலகில்!!

தங்கள் கவிதையில் நயம்படக் கூறியிருக்கும் "பொய்மையின்" தன்மை நிஜமே!!

பாராட்டுகிறேன் கூற்றின் உண்மைக்கு!!!

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையில் உவமை நயம் அழகாக இருக்கிறது..வழமையாக உங்கள் கவிதைகளில் உவமைகள் புகுந்து விளையாடும்..

அறிவென்ற விளக்கேந்தி,

அடையாளம் காண்போம்!

பொய்மைகளின் புகலிடத்தை,

வாய்மையால் அழித்திடுவோம்!

காலத்திற்க்கேற்ற கவிதை..நன்றி அண்ணா பகிர்வுக்கு..

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான்

வாய்மை எது, வதந்தி எதுவென்று ஆய்தறிய முடியாத அவலத்தில் தோய்ந்து கிடக்கிறோம்.... எப்போது இவற்றிலிருந்து மீளப்போகிறோம் என்று தெரியவில்லை...மனங்களுக்குள் உலுக்கிக் கொண்டிருக்கும் உண்மை கவிதையாக வெளிப்பட்டிருக்கிறது. பகர்வுக்கும் பதிவுக்கும் நன்றி புங்கையூரான்.

நல்ல கவிதை புங்கையூரன்,

உண்மையில் இந்தப் பொய்களின் அம்சமாகவும், அவற்றை ஏற்றுக் கொள்கின்றவர்களாவும், அவற்றை தெரிந்தோ தெரியாமலோ பரப்புபவர்களாகவும், பொய்களுக்கு உடந்தையானவர்களாவும் நாமும் இருக்கின்றோம். ஒருவரை துரோகி என்றவுடன் அதை அப்படியே நம்புகின்றவர்களாக, புனிதன் என்று சொன்னவுடன் அப்படியே ஏற்றுக் கொண்டவர்களாக, சூளுரைகளின் பின்னால் இருக்கும் கபடத்தை உள் மனம் காட்டிக் கொடுப்பினும் கூட அதைக் லட்சியம் செய்யாமல் பாசாங்கு செய்பவர்களாக, போலித் தமிழ் தேசியம் கூறி தம்மை கலாச்சார காவலர்களாக காட்டிக் கொள்பவர்களின் முதுகில் உள்ள ஊத்தைகளை பற்றி உணராமல் கோசம் போடுபவர்களாக....எல்லாவிதத்திலும் நாமும் இன்றைய பொய்யான நிலைக்கு முற்றிலும் காரணகர்த்தாக்களாக இருக்கின்றோம்

வெற்றுக் கோசங்களையும் பாசாங்குகளையும் நம்பும் இனம் நாம், இனியும் இப்படித்தான் இருப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி

தங்களுடைய கருத்துடனும் நிழலியின் கருத்துடனும் ஒத்துப்போகமுடியவில்லை.

காரணம்

நான் வெளியில் நின்று என்றுமே பார்த்ததில்லை விமர்சித்ததில்லை. அவரவர் கடமையை அவரவர் செய்யணும். அதை வைத்தே மக்கள் நல்லதுது கெட்டதை தெரிவுசெய்வர். இதைவிடுத்து எதுவுமே தெரியவில்லை என்பதெல்லாம் எமது பார்வைக்கோளாறையே சுட்டி நிற்கிறது.

பொய்மை ஒரு நாளும் வெல்லாது.

கவிதைக்கு நன்றி

தங்களுடைய கருத்துடனும் நிழலியின் கருத்துடனும் ஒத்துப்போகமுடியவில்லை.

காரணம்

வெறுமனே ஒத்துப் போகவில்லை என்று சொல்லாமல் அதன் காரணத்தையும் கூறினால்தான் சரியாக இருக்கும். அத்துடன் "நான் என்றுமே வெளியில் நின்று என்றுமே பார்த்ததில்லை" என்பதன் அர்த்தம் என்ன? மற்றவர்கள், இங்கு எழுதுபவர்கள், நான், எல்லாரும் வெளியில் நின்று வேடிக்கை பார்த்துவிட்டு பொழுது போக்கில்லாமல் இங்கு வந்து எழுதுகின்றோமா என்றா அர்த்தம்?

புங்கையூரன் சொல்லில் குற்றமில்லை பொருளில் தான் குற்றம் .

எமக்கு தெரியாத, ஈடுபாடில்லாத, ஆர்வமில்லாத விடயங்களில் மற்றவர்கள் மாறுபட்ட பல கருத்து வைக்கும் போது அது எம்மை குழப்பத்தில் தான் ஆற்றும் அதுவே நாம் கரைகண்ட ஒரு விடயமாக இருந்தால் எவர் என்ன கருத்து வைத்தாலும் அது எம்மை குழப்பத்தில் ஆற்றாது .

எம்மவர் வட்டி ,மொட்கேஜ் ,இன்ஸுரன்ஸ்,வீட்டு பில்ஸ்,பிள்ளைகளின் படிப்பு பற்றி கரைத்து குடித்து வைத்திருக்கும் அளவிற்கு வேறு விடயங்களில் ஆர்வம காட்டுவதில்லை .

தமிழ் நாட்டு தமிழரிடம் பேசினால் அவர்களா சினிமா ,சங்கீதம்,தமது அரசியல் பற்றி நன்கு தெரிந்து வைத்திருப்பார்கள்.

புலம் பெயர்ந்து தான் எம்மவர் இப்போ சில விடயங்களில் ஆர்வம காட்டுகின்றார்கள் .எமது போராட்டம் பற்றியோ ,அரசியல் நிலைப்பாடு பற்றியோ உண்மையில் எம்மவர் பெரிதும் அக்கறை எடுக்கவில்லை.ஏதோ காசை கொடுத்தால் காணும் என்று கனவுலகில் இருந்துவிட்டார்கள்.இன்று திக்கு திசை தெரியாமல் எம்மினம் நடுத்தெருவில் நிற்பது ஏன் என்று மண்டையை குடைய தொடங்க கண்டவன் நிண்டவன் எல்லாம் எழுதும் பலதையும் பத்தையும் வாசிக்க வேண்டிகிடக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை புங்கையூரன்,

உண்மையில் இந்தப் பொய்களின் அம்சமாகவும், அவற்றை ஏற்றுக் கொள்கின்றவர்களாவும், அவற்றை தெரிந்தோ தெரியாமலோ பரப்புபவர்களாகவும், பொய்களுக்கு உடந்தையானவர்களாவும் நாமும் இருக்கின்றோம். ஒருவரை துரோகி என்றவுடன் அதை அப்படியே நம்புகின்றவர்களாக, புனிதன் என்று சொன்னவுடன் அப்படியே ஏற்றுக் கொண்டவர்களாக, சூளுரைகளின் பின்னால் இருக்கும் கபடத்தை உள் மனம் காட்டிக் கொடுப்பினும் கூட அதைக் லட்சியம் செய்யாமல் பாசாங்கு செய்பவர்களாக, போலித் தமிழ் தேசியம் கூறி தம்மை கலாச்சார காவலர்களாக காட்டிக் கொள்பவர்களின் முதுகில் உள்ள ஊத்தைகளை பற்றி உணராமல் கோசம் போடுபவர்களாக....எல்லாவிதத்திலும் நாமும் இன்றைய பொய்யான நிலைக்கு முற்றிலும் காரணகர்த்தாக்களாக இருக்கின்றோம்

வெற்றுக் கோசங்களையும் பாசாங்குகளையும் நம்பும் இனம் நாம், இனியும் இப்படித்தான் இருப்போம்

நான் பலமுறை எழுதியுள்ளேன். பிரான்சில் நான் எந்தத்துரோகியையும் கண்டதில்லை என்று. காரணம் இங்கு தேசத்துதுக்காக உழைத்த எல்லோரையும் எனக்கு தெரியும். அவர்கள் என்ன செய்தார்கள் செய்கிறார்கள் என்றும் தெரியும். காரணம் அவர்களுடன் நான் இன்றும் தொடர்பிலுள்ளேன். இதைத்தான் நான் குறிப்:பிட்டேன். இங்கு 2 மாவீரர் நாள் நடந்தபோதும் அந்த இரண்டுக்கும் நான் போய் எனது விமர்சனத்தை நேரில் வைத்துவிட்டுத்தான் வந்தேன். அதேநேரம் இயக்ககத்திடமும் இந்த துரோகிப்பட்டம் கொடுப்பதை நிறுதத்துங்கோ. இப்படி தொடர்ந்தால் என்னை எப்போ துரோகியாக அறிவிக்கப்போகின்றீர்கள் என்று கேட்டுவிட்டுத்தான் வந்தேன்.

இதன் மூலம் நான் செய்கின்றேன் நீங ;கள் செய்யவில்லை என்றுறு சொல்லவரவில்லை. நீங்கள் எல்லோரும் இதைப்பார்த்து பார்த்து தள்ளித்தள்ளி போவது போன்ற ஒரு ஆதங்கம் எனக்கு. அதனால்ததான் எழுதினேன். நனறி

Edited by விசுகு

மிக மிக அருமையான கவிதை.

மறைமுகமாக சொல்லப்பட்ட கவிக்கருத்துக்கள்.... சென்றடைய வேண்டிய இடத்தினை.... சென்றடைந்தே தீர வேண்டும் என்பதும்..... காலத்தின் தேவையாக இருக்கின்றது!!! மிக்க நன்றி புங்கையூரன். :)5

செவிட்டில் அறைந்த மாதிரி இருக்கிறது. நல்ல வரிகள்.

பாம்பையும் கயிற்றையும் பிரித்தறிய முடியாத, பாலை மட்டும் பிரித்து உண்பது தெரியாத இனம் கொஞ்சம் விழித்துள்ளது.

ஏதோ 'சொந்தப் புத்தி சுய புத்தி' இப்ப கொஞ்சம் துளிர் விடத் தொடங்கியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

பார்ப்பதற்கு பொய்மை ஜெயிக்கிற மாதிரி இருக்கும் ஆனால் கடைசியில் உண்மை தான் ஜெயிக்கும்...தப்பிலி எழுதிய மாதிரி செவிட்டில் அறைந்த மாதிரி உள்ளது உங்கள் எழுத்துக்கள் தொடர்ந்தும் எழுதுங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:):):)1 .

கருத்திட்டமைக்கு நன்றிகள், கோமகன்!

உண்மைகளை அறிய மக்கள் ஆலாய் பறக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.அவர்கள் காலம் கடந்தாவது உண்மையை அறிவார்கள் என்பதில் அளவிலா நம்பிக்கை உண்டு.

நல்லதொரு கவிதையை தந்த புங்கையூரானுக்கு நன்றி.

உண்மைகள் நீண்ட காலங்கள் உறங்குவதில்லை, நுணா!

ஆனால் காலங்கடந்த உண்மைகளால் அதிக பயன்களும் இல்லை!

எனினும் அவை வெளிக்கொணரப் பட வேண்டும் என்பதின் இரு கருத்துக்களுக்கு இடமில்லை!

நன்றிகள், நுணா!!!

எழுத்துநடையில் உவமைகள் நன்றாக வருகின்றது.

உவமைகளின் விளைவு தானே கவிதைகள், சுகன்!

தங்கள் கருத்துக்கு, நன்றிகள்!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவ் யுகத்தில் பொய்மை மலிந்து விட்டமை நிதர்சனம்.

ஆட்சியில் பொய்மை,

கொள்கையில் பொய்மை,

நேசத்தில் பொய்மை,

கலாச்சாரத்தில் பொய்மை,

மொத்தத்தில் வாழ்க்கையே பொய் என்ற மேடையில் தான் அரங்கேறிவருகின்றது!

வாய்மையே வெல்லும் என்ற கூற்று சற்று மங்கித்தான் வருகின்றது இவ்வுலகில்!!

தங்கள் கவிதையில் நயம்படக் கூறியிருக்கும் "பொய்மையின்" தன்மை நிஜமே!!

பாராட்டுகிறேன் கூற்றின் உண்மைக்கு!!!

மகாபாரதத்தில், துரோணரை அழித்தாக வேண்டிய கட்டாய தேவை வரும்பொழுது, தர்மன் கூடப் பொய் உரைக்கின்றான்!

அந்தப் பொய், அந்த நேரத்தில் தேவைப்பட்டது. அதனால் ஏற்றுக்கொள்ளப் பட்டது!

ஆனால்,தற்போதைய பொய்மைகள் நவீனமானவை! உண்மையைப் போன்ற மாயத் தோற்றத்தை அவை ஏற்படுத்துகின்றன!

தங்கள் கருத்துக்கு நன்றிகள், கல்கி!!!

கவிதையில் உவமை நயம் அழகாக இருக்கிறது..வழமையாக உங்கள் கவிதைகளில் உவமைகள் புகுந்து விளையாடும்..

காலத்திற்க்கேற்ற கவிதை..நன்றி அண்ணா பகிர்வுக்கு..

தங்கள் கருத்துக்கள், எப்போதுமே எனக்கு மேலும் எழுத வேண்டும் என்ற உந்துசக்தியை அளிக்கின்றன, சுபேஸ்!

தங்கள் கருத்துக்கு,நன்றிகள்!

புங்கையூரான்

வாய்மை எது, வதந்தி எதுவென்று ஆய்தறிய முடியாத அவலத்தில் தோய்ந்து கிடக்கிறோம்.... எப்போது இவற்றிலிருந்து மீளப்போகிறோம் என்று தெரியவில்லை...மனங்களுக்குள் உலுக்கிக் கொண்டிருக்கும் உண்மை கவிதையாக வெளிப்பட்டிருக்கிறது. பகர்வுக்கும் பதிவுக்கும் நன்றி புங்கையூரான்.

நன்றிகள் வல்வை!

இந்தத் தேர்தல் கெடுபிடியிலும், நேரம் ஒதுக்கிக் கருத்திட்டமைக்கு நன்றிகள்! :D

வாய்மையையும், வதந்திகளையும் பிரித்தறிய வேண்டிய தேவை எமக்கு உள்ளது!

நல்ல கவிதை புங்கையூரன்,

உண்மையில் இந்தப் பொய்களின் அம்சமாகவும், அவற்றை ஏற்றுக் கொள்கின்றவர்களாவும், அவற்றை தெரிந்தோ தெரியாமலோ பரப்புபவர்களாகவும், பொய்களுக்கு உடந்தையானவர்களாவும் நாமும் இருக்கின்றோம். ஒருவரை துரோகி என்றவுடன் அதை அப்படியே நம்புகின்றவர்களாக, புனிதன் என்று சொன்னவுடன் அப்படியே ஏற்றுக் கொண்டவர்களாக, சூளுரைகளின் பின்னால் இருக்கும் கபடத்தை உள் மனம் காட்டிக் கொடுப்பினும் கூட அதைக் லட்சியம் செய்யாமல் பாசாங்கு செய்பவர்களாக, போலித் தமிழ் தேசியம் கூறி தம்மை கலாச்சார காவலர்களாக காட்டிக் கொள்பவர்களின் முதுகில் உள்ள ஊத்தைகளை பற்றி உணராமல் கோசம் போடுபவர்களாக....எல்லாவிதத்திலும் நாமும் இன்றைய பொய்யான நிலைக்கு முற்றிலும் காரணகர்த்தாக்களாக இருக்கின்றோம்

வெற்றுக் கோசங்களையும் பாசாங்குகளையும் நம்பும் இனம் நாம், இனியும் இப்படித்தான் இருப்போம்

இதுவே உண்மை நிழலி!

மக்கள் ஒரு மாயையால் கட்டுப்படுத்தப் பட்டிருக்கும் போது, அவர்கள் பாம்பாட்டியின் அசைவை மட்டுமே அவதானிக்கின்றார்கள்!

அதனால் தான் பாம்பாட்டியும், தனது ஊதுகுழலில் மிகவும் கவனமாக இருக்கின்றான்!

அதனால் தான், முழு ஜெர்மனியையும் முட்டாளாக்க ஹிட்லரால் முடிந்தது!

  • கருத்துக்கள உறவுகள்

பொய்மை எப்போதும் வெல்வது போன்ற ஒரு மாயயை உருவாக்கும்.

ஆனால் வெல்வது எப்போதுமே வாய்மையே

நல்லதொரு கவிதை படைத்த புங்கையூரனுக்கு வாழ்த்துகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி

தங்களுடைய கருத்துடனும் நிழலியின் கருத்துடனும் ஒத்துப்போகமுடியவில்லை.

காரணம்

நான் வெளியில் நின்று என்றுமே பார்த்ததில்லை விமர்சித்ததில்லை. அவரவர் கடமையை அவரவர் செய்யணும். அதை வைத்தே மக்கள் நல்லதுது கெட்டதை தெரிவுசெய்வர். இதைவிடுத்து எதுவுமே தெரியவில்லை என்பதெல்லாம் எமது பார்வைக்கோளாறையே சுட்டி நிற்கிறது.

பொய்மை ஒரு நாளும் வெல்லாது.

தங்கள் கருத்துக்கு நன்றி, விசுகர்.

நான் எவரது புனிதமான இலட்சியங்களையோ, அவர்கள் அதற்காகச் செய்த அளப்பரிய தியாகங்களையோ சந்தேகிக்கவில்லை!

ஆனால் நாங்கள் அறிந்தோ, அறியாமலோ சில புல்லுரிவிகளையும் வளர்த்து விட்டோம்!

அந்தப் புல்லுருவிகளே, ஒரு புனிதமான ஒரு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்து விட்டது மட்டுமன்றி, தங்கள் நடவடிக்கைகளையும் நியாயப் படுத்த முனைகின்றன!

அந்த ஆதங்கத்தின் விளைவே இது!

  • கருத்துக்கள உறவுகள்

பாம்பையும், கயிற்றையும்,

பிரித்தறிய இயலாத,

அத்துவிதப் பெருவெளியின்,

அனாதைகளாய்,

அரிதாரம் பூசிய பொய்மை,

அழைத்துச் செல்கின்றது.

அர்த்த ராத்திரியின்,

இருட்டின் மங்கல் வெளிச்சத்தில்,

அறிவென்ற விளக்கேந்தி,

அடையாளம் காண்போம்!

பொய்மைகளின் புகலிடத்தை,

வாய்மையால் அழித்திடுவோம்!

கொஞ்சம் கஸ்ரமானவிடயம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரன் சொல்லில் குற்றமில்லை பொருளில் தான் குற்றம் .

எமக்கு தெரியாத, ஈடுபாடில்லாத, ஆர்வமில்லாத விடயங்களில் மற்றவர்கள் மாறுபட்ட பல கருத்து வைக்கும் போது அது எம்மை குழப்பத்தில் தான் ஆற்றும் அதுவே நாம் கரைகண்ட ஒரு விடயமாக இருந்தால் எவர் என்ன கருத்து வைத்தாலும் அது எம்மை குழப்பத்தில் ஆற்றாது .

எம்மவர் வட்டி ,மொட்கேஜ் ,இன்ஸுரன்ஸ்,வீட்டு பில்ஸ்,பிள்ளைகளின் படிப்பு பற்றி கரைத்து குடித்து வைத்திருக்கும் அளவிற்கு வேறு விடயங்களில் ஆர்வம காட்டுவதில்லை .

தமிழ் நாட்டு தமிழரிடம் பேசினால் அவர்களா சினிமா ,சங்கீதம்,தமது அரசியல் பற்றி நன்கு தெரிந்து வைத்திருப்பார்கள்.

புலம் பெயர்ந்து தான் எம்மவர் இப்போ சில விடயங்களில் ஆர்வம காட்டுகின்றார்கள் .எமது போராட்டம் பற்றியோ ,அரசியல் நிலைப்பாடு பற்றியோ உண்மையில் எம்மவர் பெரிதும் அக்கறை எடுக்கவில்லை.ஏதோ காசை கொடுத்தால் காணும் என்று கனவுலகில் இருந்துவிட்டார்கள்.இன்று திக்கு திசை தெரியாமல் எம்மினம் நடுத்தெருவில் நிற்பது ஏன் என்று மண்டையை குடைய தொடங்க கண்டவன் நிண்டவன் எல்லாம் எழுதும் பலதையும் பத்தையும் வாசிக்க வேண்டிகிடக்கு.

சொல்லில் குற்றமிருப்பின், அது மன்னிக்கப் படலாம்!

ஆனால் பொருட்குற்றம்,மன்னிக்கப் பட முடியாதது!

அங்கம் புழுதி பட, அறவாழி நெய் பூசும் இந்த அர்ஜுனனா என் பாட்டில் குற்றம் சொல்லத் தக்கவன்? :D

உண்மை தான் அர்ஜுன்! எங்களில் பெரும்பாலானவர்கள், குடும்பம் என்ற வட்டத்தில் இருந்து வெளியே வருவதில்லை! எதையும், ஏனென்று கேள்விகள் கேட்காமல் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் வளர்ந்து விட்டோம்!

அதனால் தான், மற்றவர்களால் எங்களை இலகுவாக முட்டாள்களாக்க முடிகின்றது!!!

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இப்போதெல்லாம் பொய்யான/ மாயையான உலகத்தில் வாழ்வது பிடித்துத்தான் உள்ளது. உண்மை கனவாக இருக்கும்போது பொய்யான நனவுலகம் பரவாயில்லைத்தானே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதொரு படைப்பு வாழ்த்துக்கள் புங்கையூரன்

Edited by pakee

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிக மிக அருமையான கவிதை.

மறைமுகமாக சொல்லப்பட்ட கவிக்கருத்துக்கள்.... சென்றடைய வேண்டிய இடத்தினை.... சென்றடைந்தே தீர வேண்டும் என்பதும்..... காலத்தின் தேவையாக இருக்கின்றது!!! மிக்க நன்றி புங்கையூரன். :)5

நன்றிகள், கவிதை!

போக வேண்டிய இடத்திற்குப் போய்ச் சேர வேண்டுமென்பதே எனது விருப்பமுமாகும்!

செவிட்டில் அறைந்த மாதிரி இருக்கிறது. நல்ல வரிகள்.

பாம்பையும் கயிற்றையும் பிரித்தறிய முடியாத, பாலை மட்டும் பிரித்து உண்பது தெரியாத இனம் கொஞ்சம் விழித்துள்ளது.

ஏதோ 'சொந்தப் புத்தி சுய புத்தி' இப்ப கொஞ்சம் துளிர் விடத் தொடங்கியுள்ளது.

நன்றிகள், தப்பிலி!

தங்கள் கருத்தே கவிதையில் நான் சொல்லவேண்டியதைச் சொல்லி நிற்கின்றது!

பார்ப்பதற்கு பொய்மை ஜெயிக்கிற மாதிரி இருக்கும் ஆனால் கடைசியில் உண்மை தான் ஜெயிக்கும்...தப்பிலி எழுதிய மாதிரி செவிட்டில் அறைந்த மாதிரி உள்ளது உங்கள் எழுத்துக்கள் தொடர்ந்தும் எழுதுங்கள்

உண்மை ஜெயிக்க வேண்டுமென்பதே எனது விருப்பமுமாகும்!

ஆனால், காலங்கடந்து அது வெல்லும் போது, யாருக்கு என்ன பயன் கிடைக்கப் போகின்றது?

தங்கள் கருத்துக்கு நன்றிகள்!

எனக்கு இப்போதெல்லாம் பொய்யான/ மாயையான உலகத்தில் வாழ்வது பிடித்துத்தான் உள்ளது. உண்மை கனவாக இருக்கும்போது பொய்யான நனவுலகம் பரவாயில்லைத்தானே!

பிடிக்கத் தானே வேண்டும், கிருபன்!

உலகமே ஒரு 'மாயை' என்பது தானே வேதாந்திகளின் கருத்தும்!

தங்கள் கருத்துக்கு, நன்றிகள்!!!

நல்லதொரு படைப்பு வாழ்த்துக்கள் புங்கையூரன்

நன்றிகள், பகீ!

தங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.