Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோத்தபாயவும் நானும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபாயவும் நானும்

விமானத்தில் இருந்து இறங்கிப் பதட்டத்துடன் பயணிகளுடன் பயணிகளாக

விமான நிலையத்தின் உள்ளே காலடி வைத்தேன் .அடுத்த வருவது பயணிகளைச் சோதிக்கும் இடமென்பதால் பதட்டம் இன்னும் அதிகரித்தது.

எதற்காக இந்த்தப் பதட்டம் "நீ என்ன கொள்ளையடித்தாயா கொலை செய்தாயா எதற்காகப்பயப்படுகின்றாய் " என் உள்மனம் சொல்லிக் கொண்டாலும் பதட்டம் தீர்ந்த பாடில்லை.

ஒருமாதிரி சிங்கள அதிகாரி கேட்ட கேள்விகளுக்கும் முறைத்த முறைப்புகளுக்கும் பதில் அளித்துவிட்டு வெளிவாசலை நோக்கி என் கால்கள் விரைகின்றன.

வெளி வாசலை அடைந்ததும் என் கண்கள் வாடகை வண்டிகள் நிற்கும் இடத்தைத் தேடின.

தூரத்தில் அவைகள் நிறுத்தப் பட்டிருந்ததை அடையாளம் கண்டுகொண்டு நடந்து கொண்டிருந்தேன்

திடீரெனப் பல இருசக்கரவண்டிகளில் படையினர் புடைசூழ

முன்னும் பின்னும் மகிழூர்ந்துகள் சகிதம் ஒரு மகிழூர்ந்து வந்து என் முன்னே நின்றது.

நடுவே நின்ற காரிலிருந்து அவசர அவசரமாக நாலு பக்கமும் படைகள் பாதுகாக்க

கோத்தபாய வாகனத்தை விட்டு இறங்குகின்றார். என்னால் நம்பமுடியாமல் இவரா கோத்தபாய என நான் வாய் பார்த்து விட்டு என் பார்வையை வாடகை வண்டிகள் நிற்கும்இடத்தை செலுத்திய போது என் கைகள் நடுங்கின.

அங்கே ஒரு வண்டியின் பின் புறத்திலஒரு முகமுடி மனிதன் ஒளிந்து கொண்டு

தனது கையில் வைத்திருக்கும் துப்பாக்கியால் கோத்தாவைக் குறி பார்த்துக் கொண்டிருந்தான்.

கோத்தபாய தன்னை வரவேற்று அழைத்துச் செல்ல வந்த அதிகாரி ஒருவருடன் கைலாகு கொடுத்துச் சிரித்தபடி ஏதோ கதைத்துக் கொண்டிருக்கின்றார்.

படை வீரர்கள் ஒருவர் கூட அந்த முகமூடி மனிதனை அவதானித்ததாகத் தெரியவில்லை.

எனக்கு என்னவோ அந்த முகமூடி மனிதன் கோத்தபாயவைக் கொல்லப் போகின்றான் எனத்தோன்றியது.

அவனது விரல்கள் துப்பாக்கியின் அழுத்தும் இடத்தை நோக்கி நகர்ந்தன.

எங்கிருந்து வந்த வீரமோ தெரியவில்லை கண் இமைக்கும் நேரத்தில் நான்

பயணப் பொதியின் மேல் பாய்ந்து அருகே நின்ற வண்டியின் கூரையின் மேல் ஏறிக் கோத்தா எனக் கத்திய படி அவரின் மீது பாய்ந்து அவரை நிலத்தில் சாய்க்கின்றேன்.

துப்பாக்கிக் குண்டுகள் அவரின் வாகனக் கண்ணாடியின் மீது பட்டுத் தெறிக்கின்றன.

"என்னப்பா" "என்னப்பா" என்ற குரல் என்னை நினைவுக்குக் கொண்டு வர

என் கனவைக் நினைத்து நானே என்னைத் திட்டினேன்.

சரி இப்போது எனக்கு சில விடயங்களுக்கு விளக்கம் தெரிய வேண்டும்.

ஏன் எனக்கு இப்படியான ஒரு கனவு வந்தது ?

கொடுமையான முறையில் எங்கள் உறவுகளைக் கொன்ற அல்லது கொல்ல கட்டளையிட்ட ஒரு அதிகாரியாக இருந்ததும் கனவில் நான் ஏன் அவரைக் காப்பாற்றுவது போல இருந்தது ?

இப்படி ஒரு கனவைக் கண்டதால் நான் ஒரு துரோகியா?

முக்கியமாக நான் எப்போதாவது தான் கனவு காண்பேன்.

அப்படிக் கனவில் தோன்றுவது நிஜத்திலும் நடைபெறும்.

இப்படி ஒரு கனவைக் கண்டபின் எனக்கு கனவே வெறுத்துவிட்டது. :D

  • கருத்துக்கள உறவுகள்

நானும் முன்பு இலங்கைக்குப் போய் இராணுவத்திடம் மாட்டிக்கொள்வது போல பலமுறை கனவு கண்டிருக்கிறேன். பிறகு நித்திரை விட்டு முழித்துப் பார்க்கும் போது வெளினாட்டில் இருப்பதை நினைச்சு மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தாவை பாய்ந்து காப்பாற்று கிறீர்களா ... :D ......கவனம் அடிக்கடி அவரை நினைக்காதீங்க

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார்.. கண்டதுதான் கண்டீங்கள்.. ஒரு கோலிவூட் நடிகை எண்டாலும் பரவாயில்லை..! :D இது ரொம்பக் கேவலமா இருக்கு..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இப்படி கனவு கண்டிருக்கிறீங்க. நானோ அண்மையில் ஒரு கனவு கண்டன். நான் போன நிகழ்வு ஒன்றிற்கு.. எதிர்பாராத விருந்தினராக கோத்தா. ஏதோதோ அளந்து கொண்டிருக்கிறார். எந்த பாதுகாப்பும் இல்ல. கூட்டத்தோடு கூட்டமாக வட்ட மேசையில் உட்கார்ந்திருக்கிறார். எனது எண்ணத்தில் இவனை கதிரையால மண்டையில அடிச்சே போட்டிருவமோ என்று தோன்ற.. அவர் பின் வளமாகப் போய் றயல் பார்க்கிறன். ஏதோ அச்சம் மனதுக்குள்.. நினைச்சதைச் செய்யாமல்.. போய் அமைதியாக குந்திவிடுகிறேன். மனமோ.. உள்ளூர என்னைத் திட்டியபடி..! சந்தர்ப்பதை உன் உயிருக்காக தவற விடுறியே.. நீ எங்க அந்தப் புலிகள் எங்க என்று.... அப்புறம் கனவு கலைஞ்சிட்டுது.

இது கனவில வந்த உண்மைச் சம்பவம். இதனை இங்க எழுதனும் என்று நினைச்சிருந்தனான். ஆனால் வாத்தியாரின் கனவிலும் கோத்தா வந்தது என்றதும் இதனையும் கூடவே பதிகிறேன்..! :):icon_idea:

கனவில் மட்டுமல்ல நிஜத்திலும் நாங்கள் இப்படியானவர்களாக இருந்திருந்தால் பிரச்சனை எப்போதோ தீர்ந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ, வாத்தியார்.

அடுத்த முறை, கோத்தாவைக் கனவில கூடக் காப்பாற்ற முயலாதீங்க!

இந்த உலகத்துக்குப் புண்ணியமாகப் போகும்!

பி.கு: கதை நன்றாக இருக்கின்றது!>

  • கருத்துக்கள உறவுகள்

கனவில் மட்டுமல்ல நிஜத்திலும் நாங்கள் இப்படியானவர்களாக இருந்திருந்தால் பிரச்சனை எப்போதோ தீர்ந்திருக்கும்.

அதைத்தான் பொன்னம்பலம்.. இராமநாதன்.. அமிர்தலிங்கம் என்று.. செய்து கொண்டிருந்தவை. இடையில உமாமகேஸ்வரன் வந்து ஆயுதத்தைத் தூக்கிக் காட்டி எல்லாத்தையும் கெடுத்துப் போட்டு.. அவர் போய் கொழும்பில தஞ்சம் அடைஞ்சிட்டார்.. அப்படியே உள்வீட்டு சண்டையில் சமாதியும் அடைஞ்சிட்டார். எனி என்ன செய்வது...??!

கோத்தா.. கொப்பே கடுவவைப் போட பயந்து ஓடினவன் தான். அமெரிக்காவால.. வந்து குந்த.. பனம் பழமும் விழ.. எல்லாம் வசதியாப் போச்சு. இப்ப கீரோ என்று நினைச்சிக்கிட்டு திரியுறான்.. அந்த ஜீரோ..! அதுக்கு இவர்... ஆலவட்டம்..! :lol::D:icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ, வாத்தியார்.

நான் காணும் கனவுகளில் பெரிய யுத்தம் சிறிலங்காவில் நடப்பது போலவும் அதில் நான் ஒரு படைப்பிரிவை வழி நடத்துவது போலவும் அதில் காயப்பட்டு சாகும் தறுவாயில் கண் விழித்து சற்று நேரம் தூக்கம் வராமல் இருததுமுண்டு ....

ஐஐயோ எனக்கும் ஒரு கனவு ஞாபகம் வருகிறது அதே இடத்தில் நான் நிற்பதாகவும் வாத்தியார் காப்பாற்றி கொத்தபாய வீழ்வதாகவும் நான் கொத்தபாயாவின் தொண்டையைக் கடிச்சுத் துப்புவதுபோலவும் , பின்னர் வாத்தியாரை கொத்தபாயாவின்ரை ஆட்கள் பிடித்துச் செல்வது மாதிரியும் நான் தப்பிவிட்டது மாதிரியும் தான் அந்தக் கனவு...

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாயிருக்கு உங்கள் கனவை சுவைபட எழுதிய விதம்...எல்லோரும் கனவு காண்கிறோம்..அதை சப்பென்றில்லாமல் சுவைபட எழுதுவதுதான் திறமை..வாசித்து ரசித்தேன்...

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு வாத்தியாரும், நெடுக்ஸும் கோத்தாவை கனவில் கண்டுள்ளார்கள்.

இரவில் படுக்கப்போகும் போது, மூத்தா பெய்யாமல் படுத்தால்... கோத்தா கனவில் வருவார். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நானும் முன்பு இலங்கைக்குப் போய் இராணுவத்திடம் மாட்டிக்கொள்வது போல பலமுறை கனவு கண்டிருக்கிறேன். பிறகு நித்திரை விட்டு முழித்துப் பார்க்கும் போது வெளினாட்டில் இருப்பதை நினைச்சு மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன்.

இதுவரை நான் அப்படியொரு கனவையும் காணவில்லை கந்தப்பு அண்ணை.இது ஒரு சற்று வித்தியாசமான கனவாக இருந்ததால் இங்கு எழுதினேன்.உங்கள் பகிர்விற்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

கனவில் கூட தமிழன் வன்முறையை விரும்பாதவன் என்று தெரிகிறது. அதுதான் உண்மையும்.

ஆனால் தமிழனைச்சொறிந்தால் என்பதற்கும் தமிழன் தான் சான்று

நன்றி வாத்தியார் பதிவுக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோத்தாவை    பாய்ந்து காப்பாற்று கிறீர்களா ... :D ......கவனம் அடிக்கடி அவரை நினைக்காதீங்க

ஈழத்தமிழனாகப் பிறந்த எவராலும்கோத்தாவை நினைக்காமல் இருக்க முடியாது.தமிழருக்குச் செய்த அனியாயங்கள் கொஞ்ச நஞ்சமா? நன்றி நிலாமதி அக்கா

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் எதுக்கும் உங்கள் உடம்பைத் தேற்றி குண்டாக வைத்திருங்கள், கோத்தாவுக்கு தோட்டா செய்யாததை உங்கள் வெயிட்டாவது செய்திடும்! :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார்.. கண்டதுதான் கண்டீங்கள்.. ஒரு கோலிவூட் நடிகை எண்டாலும் பரவாயில்லை..! :D இது ரொம்பக் கேவலமா இருக்கு..! :lol:

என்ன செய்வது என் நிலமை அப்படியாகி விட்டது.படுக்கையிலேயே சமாதி கட்ட வைக்கின்ற நோக்கமா? :lol::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இப்படி கனவு கண்டிருக்கிறீங்க. நானோ அண்மையில் ஒரு கனவு கண்டன். நான் போன நிகழ்வு ஒன்றிற்கு.. எதிர்பாராத விருந்தினராக கோத்தா. ஏதோதோ அளந்து கொண்டிருக்கிறார். எந்த பாதுகாப்பும் இல்ல. கூட்டத்தோடு கூட்டமாக வட்ட மேசையில் உட்கார்ந்திருக்கிறார். எனது எண்ணத்தில் இவனை கதிரையால மண்டையில அடிச்சே போட்டிருவமோ என்று தோன்ற.. அவர் பின் வளமாகப் போய் றயல் பார்க்கிறன். ஏதோ அச்சம் மனதுக்குள்.. நினைச்சதைச் செய்யாமல்.. போய் அமைதியாக குந்திவிடுகிறேன். மனமோ.. உள்ளூர என்னைத் திட்டியபடி..! சந்தர்ப்பதை உன் உயிருக்காக தவற விடுறியே.. நீ எங்க அந்தப் புலிகள் எங்க என்று.... அப்புறம் கனவு கலைஞ்சிட்டுது.

இது கனவில வந்த உண்மைச் சம்பவம். இதனை இங்க எழுதனும் என்று நினைச்சிருந்தனான். ஆனால் வாத்தியாரின் கனவிலும் கோத்தா வந்தது என்றதும் இதனையும் கூடவே பதிகிறேன்..! :):icon_idea:

கனவுகளுக்கு உளவியல் ரீதியில் எதாவது காரணங்கள் உண்டா? நாம் எதாவது சம்பவங்களால் பாதிக்கப்பட்டால் அல்லது அதன் தாக்கத்தினால் கனவுகள் தோன்றுவது என்பது உண்மையா?கனவுகளுக்கு உளவியல்மருத்துவ ரீதியில் ஏதாவது காரணங்கள் உண்டா? அல்லது அரைகுறை நித்திரையில் நாங்கள் அசைபோடுவது தான் கனவா? நேரம் கிடைத்தால் சிறு விளக்கம் தாருங்கள் நெடுக்ஸ்.உங்கள் பகிர்வுக்கு நன்றிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனவில் மட்டுமல்ல நிஜத்திலும் நாங்கள் இப்படியானவர்களாக இருந்திருந்தால் பிரச்சனை எப்போதோ தீர்ந்திருக்கும்.

ஒட்டுமொத்த ஈழமும் எப்பவோ சிங்களவனிடம் பறிபோயிருக்கும்என்று சொல்ல வருகின்றீர்களா அர்ஜுன் அண்ணாஉங்கள் பகிர்வுக்கு நன்றிகள்

ஐயோ, வாத்தியார்.

அடுத்த முறை, கோத்தாவைக் கனவில கூடக் காப்பாற்ற முயலாதீங்க!

இந்த உலகத்துக்குப் புண்ணியமாகப் போகும்!

பி.கு: கதை நன்றாக இருக்கின்றது!>

அடுத்த தரம் அவர் கனவிலே வந்தால் ஒரே போடு தான் :D நன்றி புங்கையூரன்

ஐயோ, வாத்தியார்.

நான் காணும் கனவுகளில் பெரிய யுத்தம் சிறிலங்காவில் நடப்பது போலவும் அதில் நான் ஒரு படைப்பிரிவை வழி நடத்துவது போலவும் அதில் காயப்பட்டு சாகும் தறுவாயில் கண் விழித்து சற்று நேரம் தூக்கம் வராமல் இருததுமுண்டு ....

உங்கள் கருத்திற்கு நன்றி தமிழரசு

ஐஐயோ எனக்கும் ஒரு கனவு ஞாபகம் வருகிறது அதே இடத்தில் நான் நிற்பதாகவும் வாத்தியார் காப்பாற்றி கொத்தபாய வீழ்வதாகவும் நான் கொத்தபாயாவின் தொண்டையைக் கடிச்சுத் துப்புவதுபோலவும் , பின்னர் வாத்தியாரை கொத்தபாயாவின்ரை ஆட்கள் பிடித்துச் செல்வது மாதிரியும் நான் தப்பிவிட்டது மாதிரியும் தான் அந்தக் கனவு...

என்னை உள்ளே தள்ளுவதில் உங்களுக்கு ஒரு ஆசை :lol:செம்பகன் உங்கள் பகிர்விற்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

கவனம் வாத்தியார், "இன்செப்ஷன் (inception)" என்ற திரைப்படத்தில வாற மாதிரி சிங்களப் புலனாய்வாளர்கள் உங்கள் ஆழ் மனதை ஏதோ செய்து விட்டார்களோ தெரியாது. இப்படி ஆழ் மனது சிதைக்கப் பட்ட பலர் இங்க யாழில உலவுகினம்-(அது அர்ஜுன் எண்டு நான் சொல்ல வர இல்ல!) :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லாயிருக்கு உங்கள் கனவை சுவைபட எழுதிய விதம்...எல்லோரும் கனவு காண்கிறோம்..அதை சப்பென்றில்லாமல் சுவைபட எழுதுவதுதான் திறமை..வாசித்து ரசித்தேன்...

நன்றி சுபேஸ்

இங்கு வாத்தியாரும், நெடுக்ஸும் கோத்தாவை கனவில் கண்டுள்ளார்கள்.

இரவில் படுக்கப்போகும் போது, மூத்தா பெய்யாமல் படுத்தால்... கோத்தா கனவில் வருவார். :D

:lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனவில் கூட தமிழன் வன்முறையை விரும்பாதவன் என்று தெரிகிறது. அதுதான் உண்மையும்.

ஆனால் தமிழனைச்சொறிந்தால் என்பதற்கும் தமிழன் தான் சான்று

நன்றி வாத்தியார் பதிவுக்கு

நன்றி விசுகு அண்ணா உங்கள் பகிர்விற்கு.தமிழன் எப்போதுமே சாந்தமானவன்.தன்னை மற்றவன் சீண்டும் வரை.

வாத்தியார் எதுக்கும் உங்கள் உடம்பைத் தேற்றி குண்டாக வைத்திருங்கள், கோத்தாவுக்கு தோட்டா செய்யாததை உங்கள் வெயிட்டாவது செய்திடும்! :lol:

இப்பவே நூறுக்குக் கிட்ட இன்னுமா?இன்னும் கூடினால் நித்திரையே வராதுஎப்படிக் கோத்தா கனவில் வருவார் :lol::D

கவனம் வாத்தியார், "இன்செப்ஷன் (inception)" என்ற திரைப்படத்தில வாற மாதிரி சிங்களப் புலனாய்வாளர்கள் உங்கள் ஆழ் மனதை ஏதோ செய்து விட்டார்களோ தெரியாது. இப்படி ஆழ் மனது சிதைக்கப் பட்ட பலர் இங்க யாழில உலவுகினம்-(அது அர்ஜுன் எண்டு நான் சொல்ல வர இல்ல!) :lol:

நான் கொள்கையை விட்டாலும் கோத்தாவுடன் சேரமாட்டென். நன்றி உங்கள் கவனத்திற்கு ஜஸ்ரின் :D

  • 1 year later...

நன்றி நியானி!

இந்தப் பதிவை இன்று தான் வாசித்தேன். எனக்குக் கனவு ஒவ்வொரு நாளுமே வரும். ஏன் தான் இந்தக் கனவுகள் வந்து துலையுதோ தெரியாது. குண்டு வீச்சு விமானங்கள் தான் என் கனவில் அடிக்கடி வரும். கனவு வராமல் தடுக்க ஏதாவது வழி?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நியானி!

இந்தப் பதிவை இன்று தான் வாசித்தேன். எனக்குக் கனவு ஒவ்வொரு நாளுமே வரும். ஏன் தான் இந்தக் கனவுகள் வந்து துலையுதோ தெரியாது. குண்டு வீச்சு விமானங்கள் தான் என் கனவில் அடிக்கடி வரும். கனவு வராமல் தடுக்க ஏதாவது வழி?

நினைவுகள் அழியாமல் மனதில் பதிந்து இருக்கும்வரை

கனவுகளும் தொடர்ந்து கொண்டே இருக்குமாம்

இந்தக் கனவை இரை மீட்டபோது  கள உறவுகள் எழுதிய

கருத்துக்களை வாசித்த போது சிரிப்பு அடக்க முடியவில்லை

இருந்தாலும்

தமிழன் கனவிலும் மற்றவர்களுக்குத் தீங்கு நினைக்காதவன்

தன்னை சீண்டும் வரை

என விசுகு அண்ணை எழுதியது வந்த சிரிப்புக்களை அலைபோல அடித்துச் சென்று ஆழ் மனதில் கேள்விக்குறியுடன் ஒரு பெருமூச்சு வந்து விடுகின்றது.

நன்றி நியானி

படைப்புக்குப் பாராட்டுக்கள் வாத்தியார் . நல்லாய்தான் கனவு காணுறியள் :D :D .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.