Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு எதிராக வாக்களிக்கிறது இந்தியா?

Featured Replies

இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு எதிராக ஐநா மனித உரிமைச் சபையில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை சில திருத்தங்களுடன் ஆதரிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

தமிழக அரசியல் கட்சிகள் ஓரணியில் திரண்டு நின்று தரும் நெருக்கடிகள், அமெரிக்காவே நேரடியாக ஆதரவு கோரி நிற்கும் சூழல், தீர்மானத்தின் நெகிழ்வுத்தன்மை கொண்ட அம்சங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இலங்கைக்கு எதிரான தீர்மான விஷயத்தில், இந்தியாவின் நிலை கண்டு கொதித்துப் போய், “எட்டுகோடி இந்தியத் தமிழர்கள் முக்கியமா… இனப்படுகொலை செய்த சிங்களர்கள் முக்கியமா? போரை நடத்த துணைநின்ற பாவத்தை இந்திய அரசு எப்படி தீர்க்கப் போகிறது,” என்ற கேள்விகளை பாராளுமன்றத்திலேயே தமிழர் கட்சிகள் முன்வைத்தன.

தா பாண்டியன் போன்றவர்கள், இந்த முறை இந்தியா இலங்கைக்கு ஆதரவு காட்டினால், நான் ஒரு இந்தியன் என்ற குடியுரிமையையே மறுபரிசீலனை செய்ய வேண்டி வரும். நான் மட்டுமல்ல, இதை ஒரு இயக்கமாகவே முன்னெடுத்துச் செல்லும் நிலைக்கு அனைத்து தமிழ் கட்சிகளும் தள்ளப்பட்டுவிடும் என பகிரங்கமாகக் கூறினார்கள்.

திமுக எம்பிக்களும் இதையே பாராளுமன்றத்தில் எதிரொலித்தனர். ஆச்சரியப்படத்தக்க வகையில் அதிமுகவினரும் இந்த விஷயத்தில் உறுதியாக நின்று மத்திய அரசை எதிர்த்துக் குரல் எழுப்பினர்.

இனியும் இந்தப் பிரச்னையில் தெளிவான நிலை எடுக்காமல் காலம் தாழ்த்தினால், அது தமிழ்நாட்டில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பிரதமரிடமும் காங்கிரஸ் தலைவர்களிடமும் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பேசி விளக்கியதாகத் தெரிகிறது.

“இந்த விவகாரத்தில், நாடாளுமன்றத்தில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா அளித்த விளக்கம் சரியல்ல என்பதை, அது தமிழ் இனத்துக்கே எதிரானதாகப் பார்க்கப்படுகிறது. இலங்கை நட்பு நாடு என்றால், தமிழ்நாடு பகையாளியா? என்ற கேள்வியை கிருஷ்ணாவின் அறிக்கை எழுப்பிவிட்டது,” என அழுத்தமாகக் கூறியுள்ளாராம் ப சிதம்பரம்.

இது பிரதமர், சோனியா உள்ளிட்ட அனைவரையுமே யோசிக்க வைத்துள்ளது. எனவே சில முக்கியமான அம்சங்களில் திருத்தங்கள் செய்து, தீர்மானத்துக்கு ஆதரவு தரலாம் என்பதே இப்போதைய நிலைப்பாடு என்கிறது டெல்லி வட்டாரம்.

இன்னொரு பக்கம், இந்தியாவிடம் இருந்து கட்டமைப்பு, பொருளாதார உதவிகளைப் பெருமளவு பெற்று வரும் இலங்கை, இந்தியாவுக்கு எதிரான காரியங்களில் ஈடுபடும் பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் கைகோத்து செயல்படுவது டெல்லியை கடும் எரிச்சலுக்குள்ளாக்கியுள்ளது. குறிப்பாக, நாச்சிக்குடா, கச்சத் தீவில் சீனாவை காலூன்ற வைக்கும் வகையில், சீன வீரர்கள் உதவியுடன் நிரந்தர கடற்படை தளத்தை இலங்கை அமைத்திருப்பது இந்தியாவுக்கு நெருக்கடியை உண்டாக்கியுள்ளது.

எனவே இலங்கையை கடுமையாக எச்சரிக்கும் விதமாக, ஐநாவில் தமிழருக்கு ஆதரவான நிலையை இந்தியா எடுக்கலாம் என்கிறார்கள்.

இதிலும் ப சிதம்பரத்தின் பங்குதான் முக்கிய அங்கம் வகிக்கிறது. ராஜீய உறவுகளில் இலங்கை தொடர்ந்து இழைத்து வரும் துரோகம், இலங்கைக்கு ஆதரவளிப்பதால், தமிழகத்தில் எந்த அளவு காங்கிரஸ் அந்நியப்பட்டு நிற்கிறது என்ற உண்மை ஆகியவற்றை ப சிதம்பரம்தான் இந்த முறை விரிவாக எடுத்துரைத்திருக்கிறார்.

manmohan_singh-p-chidambaram11.jpg

இவரது கருத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங், அந்தோனி ஆகியோர் ஒப்புக் கொண்டதைவிட, எப்போதும் இலங்கையின் நண்பனாகத் திகழும் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஒப்புக் கொண்டதைத்தான் டெல்லி வட்டாரங்களில் ஆச்சரியமாகப் பேசுகிறார்கள்.

இன்னொரு பக்கம் திமுகவுக்கு நேர்ந்துள்ள பெரும் நெருக்கடியையும் கருத்தில் கொள்ளுமாறு சிதம்பரம் எடுத்துக் கூறியுள்ளார்.

“மம்தாவைப்போல இந்த முரை கருணாநிதி கடும் நிலைப்பாட்டை மேற்கொண்டால், மத்திய அரசு தார்மீக ரீதியாகவே பலமிழக்கும். தேர்தல் நெருங்கும் வேளையில், காங்கிரஸ் அரசு தமிழர் விரோதமாகப் போவதால், தமிழகத்துக்குள் முற்றாக ஆதரவை இழந்து நிற்க வேண்டி வரும்” என்ற நிதர்சனத்தை முன்னெப்போதையும்விட தெளிவாகவே உணர்த்தியுள்ளார் சிதம்பரம் என்கின்றனர்.

தங்கள் கோஷ்டி சண்டைகளை மறந்து, இந்த முறை சிதம்பரத்தின் கருத்தை முழுமையாக ஆதரித்துள்ளனர் தமிழக காங்கிரஸ் தலைவர்கள். இதுவும் மத்திய அரசின் மனமாற்றத்துக்கு ஒரு காரணம் என்கிறார்கள்.

மார்ச் 23-ல் வாக்கெடுப்பு

இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானம் வரும் மார்ச் 22 அல்லது 23ம் தேதி ஐநா மனித உரிமைச் சபையில் ஓட்டுக்கு விடப்படுகிறது. ஏற்கெனவே இந்தத் தீர்மானத்துக்கு 23 நாடுகள் ஆதரவு தெரிவிள்ளன. இன்னும் ஒரு நாடு ஆதரவளித்தாலே போதும். எனவே இந்தியா ஆதரித்தாலும், இல்லாவிட்டாலும் தீர்மானம் நிறைவேறிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஆனால் எம் தந்தையர் நாடு என்று ஈழத் தமிழர்கள் கொண்டாடிய தேசமான இந்தியா, இத்தனை துயரங்களுக்குப் பிறகாவது அரவணைக்காதா என்ற ஏக்கம் உலகத் தமிழரிடையே நிலவுகிறது. தாயகத் தமிழர்கள் 8 கோடி பேரின் ஆதங்கமும்கூட அதுவே.

அதைப் புரிந்து நடந்தால் இந்தியா இழந்த மரியாதையையும் அபிமானத்தையும் ஓரளவுக்குப் பெறும்!

http://www.envazhi.com/india-to-support-us-resolution-against-sri-lanka/

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் பாவங்களைக் கழுவ, அதன் பஞ்ச நதிகள் கூடக் காணாது!

ஆனால், இந்தியா தனது பாவங்களுக்குப் பிராயச்சித்தம் செய்யும் வழிகள், இன்னும் திறந்து தான் இருக்கின்றன!

http://www.youtube.com/watch?v=46gzIso-9XU

இந்தியா கொண்டுவரும் திருத்தம் தமிழருக்குப் பாதகமாகவே இருக்கும்.சர்வதேச விசாரணை என்பதை அது இல்லாது செய்துவிடும்.

தீர்மானம் என்ன என்றே தெரியாமல் அதனை ஆதரித்த தமிழ் அமைப்புக்கள் தொடர்ந்தும் தமிழரையும் தம்மையும் ஏமாற்றுமா அல்லது தம்மை சுதாகரித்துக் கொண்டு தொடர்ந்தும் சர்வதேச சுயாதீன விசாரணையைக் கோருமா?

எமக்கு வேண்டியது,

சர்வதேச சுயாதீன விசாரணை மட்டுமே.

எமது மக்களுக்கான நீதி, பிரிந்து போகும் உரிமைக்கான சர்வதேச வாக்கெடுப்பு மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இதில் தலையிட்டு சர்வதேச விசாரணை செய்யவிடாமல்... தடுக்கப் போகின்றது போல் உள்ளது.

கடைசியில்.... குரங்கு அப்பம் பங்கிட்ட நிலை தான்... வரப் போகுது. அவதானம்.

தமிழர் தரப்பு இந்த நிலையை மிக இலாவகமாக கையாள வேண்டும். எக்காரணம் கொண்டும் பிரச்சனை திரும்பவும் தென்னாசிய பிராந்தியத்துக்குள் முடங்கி விடாது பார்த்துக்கொள்ளல் அவசியம்.

சிறிது காலம் வரை இந்திய பிரதமர், மற்றும் அமைச்சர்கள் வெளியிட்ட அறிக்கைகள் “இலங்கை எம் நிர்ப்பந்தத்தை கருத்தில் எடுக்காது” என்பதாகவே இருந்தது. இது இந்திய மத்திய அரசின் இலங்கை மீதான செயலூக்க வினைத்திறனை கடுமையான கேள்விக்குள்ளாக்கி இருப்பதை எடுத்துக்காட்ட வேண்டும். ஆங்கில பத்திரிகைகள் இதை சரிவர செய்வது காலத்தின் கட்டாயம்.

மேலும் “இது இந்தியாவின் போர்” என ஜனாதிபதி கூறியது அரசியல் ரீதியில் இந்தியாவின் நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கி உள்ளது.

எனவே, சர்வதேச துறைசார் நிபுணர்கள், ஐ.நா தாருஷ்மான் பரிந்துரைக் குழுவினர் போன்றவர்கள் சுயாதீன விசாரணைக் குழுவில் இருப்பது ஓரளவேனும் மனித குலத்திற்கு எதிரான இலங்கையின் இனப்படுகொலையை விசாரிக்க உதவும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் ஆதரவு இல்லையென்றாலும் இந்தத் தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறும்.இந்தியாவுக்கு வேறு வழியில்லாமல் எதிர்த்து அவமானப்படாமல் ஓடுற குதிரையில் பணம் கட்டியதுமாச்சு. தமிழ்நாட்டுக்கு தண்ணி காட்டியதும் ஆச்சு.என்று கடைசிநேரத்தில் வேண்டாவெறுப்பாக ஆதரிக்கலாம்.திருத்தம் செய்கிறேன் பேர்வழிஎன்று தீர்மானத்தின் சக்தியை வலுவிழக்கச் செய்வதை விட இந்தியா எதிர்த்து வாக்களித்தால் தமிழருக்கு நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

manmohan_singh_2_110119.jpg

தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் தீவிர நெருக்கடிக்குப் பணிந்து, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் ‘தினமணி‘ நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது.

இந்திய மத்திய அரசு தனது நிலையை இந்திய நாடாளுமன்றத்தில், வரும் வாரம் தெளிவுபடுத்தும் என்றும் இந்திய அரச வட்டாரங்களை மேற்கோள்காட்டி தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தச் செய்தியில் மேலும், கூறப்பட்டுள்ளதாவது, இந்தப் பிரச்சினையில் தெளிவான நிலை எடுக்காமல் காலம் தாழ்த்தினால், அது தமிழ்நாட்டில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பிரதமரிடமும் காங்கிரஸ் தலைவர்களிடமும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேசி விளக்கி வருவதாகத் தெரிகிறது.

இந்த விவகாரத்தில், நாடாளுமன்றத்தில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா அளித்த விளக்கம் சரியல்ல என்ற நிலையை தமிழ்நாட்டு மக்களின் உணர்வாக உள்துறை அமைச்சர் பிரதிபலித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, சிறிலங்காவுக்கு எதிரான தீர்மான விவகாரத்தில் மத்திய அரசு எடுக்க வேண்டிய நிலை, அந்தத் தீர்மானத்தில் சில திருத்தங்களைச் செய்து ஆதரவு அளிப்பது போன்ற முயற்சிகளைத் தற்போது மத்திய உள்துறை அமைச்சர் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக வெளியுறவு அமைச்சக வட்டாரம் உறுதி செய்துள்ளது.

இந்தியாவிடம் இருந்து கட்டமைப்பு, பொருளாதார உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் அதே வேளை, இந்தியாவுக்கு எதிரான காரியங்களில் ஈடுபடும் பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் கைகோத்துக் கொண்டு வலம் வரும் சிறிலங்காவின் போக்கு இந்தியாவுக்கு அதிருப்தியை அளித்துள்ளதாகத் தெரிகிறது.

மேலும், இந்தியாவின், வலிய வந்து செய்யும் உதவிகளுக்கு உரிய மரியாதையும் மதிப்பையும் சிறிலங்கா கொடுப்பதில்லை என்ற தகவலும் மத்திய அரசுக்கு கிடைத்துள்ளது. இந்தநிலையில், சிறிலங்காவுக்கு எதிரான – திருத்தப்பட்ட தீர்மானத்தை ஆதரிப்பதன் மூலம் அந்நாட்டுக்கு ஒரு “எச்சரிக்கை சமிக்ஞை’ அனுப்பவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

“இந்தத் தருணத்தில், சிறிலங்காவுக்கு எதிரான கடுமையான நிலையை இந்தியா எடுக்க வேண்டும். அது, ராஜீய ரீதியாக இந்தியாவின் செல்வாக்கைச் சர்வதேச சமூகத்தில் நிலை நிறுத்திக் கொள்ள உதவுவதுடன், உள்நாட்டில் சரிந்து வரும் தமது செல்வாக்கையும் சரி செய்து கொள்ள உதவும்’ என்ற சிதம்பரத்தின் வாதத்தை பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் பிரணாப் முகர்ஜி, ஏ.கே. அந்தோனி ஆகிய மூத்த அமைச்சர்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

ஒருபுறம், ரயில் பயணக் கட்டணத்தை உயர்த்திய விவகாரத்தில் ரயில்வே அமைச்சர் தினேஸ் திரிவேதியை நீக்க வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி நெருக்கடி கொடுத்து வருகிறார். மறுபுறம், சிறிலங்கா விவகாரத்தில் அந்நாட்டுக்கு அனுசரணையான நிலையை இந்தியா கடைப்பிடித்தால், அது உள்நாட்டு அரசியலில் மேலும் நெருக்கடியைத் தரும் என்றும் சிதம்பரம் விளக்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த முன்னேற்றங்களின் பலனாக, ஐ.நா மனித உரிமைகள்பேரவைக் கூட்டத்தில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தில் சில திருத்தங்களுடன் இந்தியா ஆதரவு அளிக்க களம் தயாராகி வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

http://www.saritham.com/?p=54392

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு எதிரான தீர்மானம்... சிதம்பரம் முயற்சியால் ஆதரிக்கிறது இந்தியா?

18-chidambaram11-300.jpg

டெல்லி: இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு எதிராக ஐநா மனித உரிமைச் சபையில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை சில திருத்தங்களுடன் ஆதரிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

தமிழக அரசியல் கட்சிகள் ஓரணியில் திரண்டு நின்று தரும் நெருக்கடிகள், அமெரிக்காவே நேரடியாக ஆதரவு கோரி நிற்கும் சூழல், தீர்மானத்தின் நெகிழ்வுத்தன்மை கொண்ட அம்சங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இலங்கைக்கு எதிரான தீர்மான விஷயத்தில், இந்தியாவின் நிலை கண்டு கொதித்துப் போய், "எட்டுகோடி இந்தியத் தமிழர்கள் முக்கியமா... இனப்படுகொலை செய்த சிங்களர்கள் முக்கியமா? போரை நடத்த துணைநின்ற பாவத்தை இந்திய அரசு எப்படி தீர்க்கப் போகிறது," என்ற கேள்விகளை பாராளுமன்றத்திலேயே தமிழர் கட்சிகள் முன்வைத்தன.

தா பாண்டியன் போன்றவர்கள், இந்த முறை இந்தியா இலங்கைக்கு ஆதரவு காட்டினால், நான் ஒரு இந்தியன் என்ற குடியுரிமையையே மறுபரிசீலனை செய்ய வேண்டி வரும். நான் மட்டுமல்ல, இதை ஒரு இயக்கமாகவே முன்னெடுத்துச் செல்லும் நிலைக்கு அனைத்து தமிழ் கட்சிகளும் தள்ளப்பட்டுவிடும் என பகிரங்கமாகக் கூறினார்கள்.

திமுக எம்பிக்களும் இதையே பாராளுமன்றத்தில் எதிரொலித்தனர். ஆச்சரியப்படத்தக்க வகையில் அதிமுகவினரும் இந்த விஷயத்தில் உறுதியாக நின்று மத்திய அரசை எதிர்த்துக் குரல் எழுப்பினர்.

இனியும் இந்தப் பிரச்னையில் தெளிவான நிலை எடுக்காமல் காலம் தாழ்த்தினால், அது தமிழ்நாட்டில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பிரதமரிடமும் காங்கிரஸ் தலைவர்களிடமும் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பேசி விளக்கியதாகத் தெரிகிறது.

"இந்த விவகாரத்தில், நாடாளுமன்றத்தில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா அளித்த விளக்கம் சரியல்ல என்பதை, அது தமிழ் இனத்துக்கே எதிரானதாகப் பார்க்கப்படுகிறது. இலங்கை நட்பு நாடு என்றால், தமிழ்நாடு பகையாளியா? என்ற கேள்வியை கிருஷ்ணாவின் அறிக்கை எழுப்பிவிட்டது," என அழுத்தமாகக் கூறியுள்ளாராம் ப சிதம்பரம்.

இது பிரதமர், சோனியா உள்ளிட்ட அனைவரையுமே யோசிக்க வைத்துள்ளது. எனவே சில முக்கியமான அம்சங்களில் திருத்தங்கள் செய்து, தீர்மானத்துக்கு ஆதரவு தரலாம் என்பதே இப்போதைய நிலைப்பாடு என்கிறது டெல்லி வட்டாரம்.

இன்னொரு பக்கம், இந்தியாவிடம் இருந்து கட்டமைப்பு, பொருளாதார உதவிகளைப் பெருமளவு பெற்று வரும் இலங்கை, இந்தியாவுக்கு எதிரான காரியங்களில் ஈடுபடும் பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் கைகோத்து செயல்படுவது டெல்லியை கடும் எரிச்சலுக்குள்ளாக்கியுள்ளது. குறிப்பாக, நாச்சிக்குடா, கச்சத் தீவில் சீனாவை காலூன்ற வைக்கும் வகையில், சீன வீரர்கள் உதவியுடன் நிரந்தர கடற்படை தளத்தை இலங்கை அமைத்திருப்பது இந்தியாவுக்கு நெருக்கடியை உண்டாக்கியுள்ளது.

எனவே இலங்கையை கடுமையாக எச்சரிக்கும் விதமாக, ஐநாவில் தமிழருக்கு ஆதரவான நிலையை இந்தியா எடுக்கலாம் என்கிறார்கள்.

chidambaram1-300_18032012.jpg

இதிலும் ப சிதம்பரத்தின் பங்குதான் முக்கிய அங்கம் வகிக்கிறது. ராஜீய உறவுகளில் இலங்கை தொடர்ந்து இழைத்து வரும் துரோகம், இலங்கைக்கு ஆதரவளிப்பதால், தமிழகத்தில் எந்த அளவு காங்கிரஸ் அந்நியப்பட்டு நிற்கிறது என்ற உண்மை ஆகியவற்றை ப சிதம்பரம்தான் இந்த முறை விரிவாக எடுத்துரைத்திருக்கிறார்.

இவரது கருத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங், அந்தோனி ஆகியோர் ஒப்புக் கொண்டதைவிட, எப்போதும் இலங்கையின் நண்பனாகத் திகழும் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஒப்புக் கொண்டதைத்தான் டெல்லி வட்டாரங்களில் ஆச்சரியமாகப் பேசுகிறார்கள்.

இன்னொரு பக்கம் திமுகவுக்கு நேர்ந்துள்ள பெரும் நெருக்கடியையும் கருத்தில் கொள்ளுமாறு சிதம்பரம் எடுத்துக் கூறியுள்ளார்.

"மம்தாவைப்போல இந்த முறை கருணாநிதி கடும் நிலைப்பாட்டை மேற்கொண்டால், மத்திய அரசு தார்மீக ரீதியாகவே பலமிழக்கும். தேர்தல் நெருங்கும் வேளையில், காங்கிரஸ் அரசு தமிழர் விரோதமாகப் போவதால், தமிழகத்துக்குள் முற்றாக ஆதரவை இழந்து நிற்க வேண்டி வரும்" என்ற நிதர்சனத்தை முன்னெப்போதையும்விட தெளிவாகவே உணர்த்தியுள்ளார் சிதம்பரம் என்கின்றனர்.

தங்கள் கோஷ்டி சண்டைகளை மறந்து, இந்த முறை சிதம்பரத்தின் கருத்தை முழுமையாக ஆதரித்துள்ளனர் தமிழக காங்கிரஸ் தலைவர்கள். இதுவும் மத்திய அரசின் மனமாற்றத்துக்கு ஒரு காரணம் என்கிறார்கள்.

மார்ச் 23-ல் வாக்கெடுப்பு

இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானம் வரும் மார்ச் 22 அல்லது 23ம் தேதி ஐநா மனித உரிமைச் சபையில் ஓட்டுக்கு விடப்படுகிறது. ஏற்கெனவே இந்தத் தீர்மானத்துக்கு 23 நாடுகள் ஆதரவு தெரிவிள்ளன. இன்னும் ஒரு நாடு ஆதரவளித்தாலே போதும். எனவே இந்தியா ஆதரித்தாலும், இல்லாவிட்டாலும் தீர்மானம் நிறைவேறிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஆனால் எம் தந்தையர் நாடு என்று ஈழத் தமிழர்கள் கொண்டாடிய தேசமான இந்தியா, இத்தனை துயரங்களுக்குப் பிறகாவது அரவணைக்காதா என்ற ஏக்கம் உலகத் தமிழரிடையே நிலவுகிறது. தாயகத் தமிழர்கள் 8 கோடி பேரின் ஆதங்கமும்கூட அதுவே.

அதைப் புரிந்து நடந்தால் இந்தியா இழந்த மரியாதையையும் அபிமானத்தையும் ஓரளவுக்குப் பெறும்!

http://tamil.oneindia.in/news/2012/03/18/india-india-support-us-resolution-against-aid0136.html

http://naathamnews.com/?p=4513

dinamani-266x300.jpg

ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா தொடர்பில் அமெரிக்காவினால் சமர்பிக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்க, இந்திய மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக தமிழகத்தின் தினமணி நாளேடு தெரிவித்துள்ளது.

இவ்விவகாரத்தில் தமிழகத்தில் எழுந்துள்ள கொதிநிலையைக் கவனத்தில் கொண்டு, இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களினால் மத்திய அரசுக்கு விளக்கப்பட்டதன் ஊடாகவே, பிரேரணையினை இந்தியா ஆதரக்க முடிவு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மத்திய அரசின் இந்த நிலைப்பாடு குறித்து, அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பிரேரணையில் சில திருத்தங்களை முன்வைத்து, ஆதரிவினை இந்தியா வழங்க வேண்டுமென இந்திய உள்துறை அமைச்சர்

ப.சிதம்பரம் வலியுறுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிம் இருந்து உட்கட்டமைப்பு, பொருளாதார உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் அதே வேளை, இந்தியாவுக்கு எதிரான காரியங்களில் ஈடுபடும் பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் கைகோத்துக் கொண்டு வலம் வரும் சிறிலங்காவின் போக்குக்கு இந்தியா ‘எச்சரிக்கை சமிக்ஞை’ அனுப்பவும் வகையில், பிரேரணைக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்திய மத்திய அரசு எடுத்துள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐ.நாவ மனித உரிமைச் சபையில் சிறிலங்கா தொடர்பிலான பிரேரணைக்கு ஆதரவு வழங்குவது அல்லது வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் விடுகின்ற இக்கட்டான நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளதாக பேராசிரியர் பொல் நியூமன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

http://youtu.be/_YitiJguZvk

பேராசிரியர் பொல் நியூமன் அவர்கள் ஐ.நா மனித உரிமைச் சபை விவகாரங்களுக்கான, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வள அறிஞர் குழுவில் பங்கெடுத்திருக்கின்றார்.

இதுவரை இத்தகைய அழுத்தத்தை டெல்லி சந்தித்ததில்லை என தெரிவித்துள்ள பேராசிரியர் பொல் நியூமன், 2009ம் இத்தகைய அழுத்தம் டெல்லியில் ஏற்பட்டிருந்தால், குறைந்தபட்சம் 40 ஆயிரம் உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைச் சபை விவகாரத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சிகளும் பொதுவான நிலைப்பாடு எடுத்திருக்கின்றமை நல்லதொரு முடிவென தெரிவித்துள்ள பேராசிரியர் பொல் நியூமன் அவர்கள், இந்திய மத்திய அரசினைப் பொறுத்தவரை உள்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதா அல்லது சிறிலங்காவைத் திருப்திப்படுத்துவதா என்ற நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Edited by அகரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த நிலைப்பாடு தமிழ்நாட்டின் கொதிப்பை அடக்குவதற்கே. ஆனால் ராஜபக்ஷவிற்கு தங்கள் இக்கட்டான நிலையைக் காலில் விழுந்தது போலத் தெரிவித்திருப்பார்கள் 'பயப்படவேண்டாம் ங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் தாருங்கள். தமிழ்நாட்டைத்திருப்திப்படுத்த. என்றும் நாங்கள் உங்கள் பக்கமே என்று.

ஈழத் தமிழர் தரப்பு 'சர்வதேச விசாரணை' நோக்கியே காய் நகர்த்த வேண்டும். தமிழக உறவுகள் கட்சி பேதம் மறந்து, இந்திய மத்திய அரசை இதிலிருந்து ஒதுங்கி இருப்பதற்கான அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்.

'வெண்ணை திரண்டு வரும் பொழுது தாழியை உடைப்பதே' இந்தியாவின் கொள்கையாக உள்ளது. தென்கிழக்காசியப் பிராந்தியத்தை விட்டு கடந்து போன பிரச்னையை தங்களின் சுயநலனிற்காய், மீண்டும் தங்கள் கையில் எடுக்கப் பார்க்கிறார்கள். சீனாவை கட்டுப்படுத்தும் பலமும் இராஜதந்திரமும் இந்தியாவிடம் இல்லை. இந்தியாவின் குறுங்கால நலனுக்காக பலியிடப்படப்போவது ஈழத் தமிழன்தான்.

முள்ளில் இருந்து சேலையை கிழியாமல் எடுக்கும் இராஜதந்திரம் தமிழர்களுக்கு அவசியம்.

தம் நலன் சார்ந்த விடயங்களில் கூட எதிரும் புதிருமாக நின்ற தமிழக கட்சிகளே இந்த விடயத்தில் ஒன்றுபட்டும் நிற்கும் போது, இலங்கையில் இருக்கும் ஈபிடிபி போன்ற கட்சிகள் இன்னும் இந்த விடயத்தில் எதிராக நிற்கின்றது கேவலமான விடயம். இவர்களுடன் மாற்று அரசியல் பேசுகின்றோம் என்று புலிக்காச்சல் பீடித்து இருக்கும் சில தமிழ் இணையத்தளங்கள் கூட இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை எதிர்த்து எழுதுவதும் இலங்கை அரசை ஆதரிப்பதும் படு கேவலமானது

இந்த தீர்மானத்தை இந்தியா எதிர்த்தும், அதன்மேல் அமெரிக்கா தனது வலுவைக்காட்டி நிறைவேற்றினாலும் மட்டுமே ஒரு 4,5 வருடங்களுக்குள் அமெரிக்காவால் இலங்கை மீது ஒரு ஆளுமையைக்காட்டி (எது வென்றாலும்) ஒரு தீர்வை தமிழருக்கு கொண்டுவர முடியும். இல்லையேல் இந்தியா எப்படி சர்வதேச நாடுகளை தான் இலங்கை விடயத்தை கையாளமுடியும் என்று கூறி போர்நேரம் சமாதானம் ஒன்று வரவிடாமல் பாதுகாத்து கொண்டதோ அதன் இன்னொரு படியாகவே இதைப் பார்க்க வேண்டும்.

இந்தியா கேட்கும் திருத்தங்கள் என்ன தாக்கத்தை தரும் என்று நாம் கவலைப்பட தேவையில்லை. நாம் கவனிக்க வேண்டியது, சிதம்பரம் கொடுத்த அறிவுரை. இதில் ஒரு வரி கூட தமிழ் மக்களுக்கு இப்படி பிரேரணைக்கு தேவை இருக்கிறது. அயல் நாடான இந்தியாவின் கடமை(தமிழ் நாட்டின் பங்கை கணக்கில் எடுக்காமல் சிந்தியுங்கள்) இதை அவர்களுக்கு செய்துவைக்க வேண்டும் என்பதல்ல. மாறாக அதன் சாரம் தமிழ்நாட்டுக்குப் பொய் வாக்குறுதிகள் கொடுத்து என்னை நீங்கள் காப்பாற்றி அடுத்த தேர்தலில் வெல்ல வைக்கவில்லையானால் உங்களுக்கு இன்னும் ஒருஆள் அடுத்தமுறை குறையபோகுது என்பதேயாகும்.

இந்த காங்கிரஸ் நன்றாக மகிந்தாவிடம் ஒன்று சொல்லி இன்னொன்று செய்யும் பாடம் கற்றிருக்கிறது. தமிழ்நாட்டு தமிழர் தேர்தலுக்காக காங்கிரஸ் பிரேரணையத்திருத்தி ஆதரிக்க முன் வருவதைதமிழர் மீதுகாட்டும் உண்மைப் பரிவாக எடுக்க கூடாது. தமிழரை இரண்டாம் தரப்பிரஜைகள் இல்லை என்று காங்கிரஸ் கருதினால் பிரேரணையுனடன்,

1. சூறாவளி நிவாரண நிதி,

2.பெரியாறு அணை

3. கூடங்குள மின்னி நிலையம்,

4.மின்சார தட்டுப்பாடு,

5.மற்றைய மானிலங்களுக்கு சரியான அபிவிருத்தி நிதி.

......

.....

தமிழ்நாட்டின் நீதியான கோரிக்கைகள் எல்லாவற்றையும் செவி மடுக்கும்.

சிதம்பரம் கட்சியோ, காங்கிரசோ, கருணாநிதிகட்சியோ, பிரேரணை நிலையை கருத்திதில் கொள்ளாமல் ஒரு தொகுதியும் தமிழ் நாட்டில் வெல்லாமல் தமிழர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். கருணாநிதிக்கு டெல்கிக்கு ஒரு டிக்கெட்டும், சிதம்பரத்திற்கு கொழும்புக்கு டிகெட்டும் வாங்க வேணும். சிதம்பரம் கொழும்பில் தனது டெலிபோன் கமபனிகளின் முதலீடுகளை நிர்வகிக்கட்டும்.

Edited by மல்லையூரான்

அமெரிக்காவின் பிரேரணையில் என்ன திருத்தம் செய்யப் போகிறார்கள்? கூர்ந்து கவனியுங்கப்பா :unsure:

தமிழர் தரப்பு இந்த நிலையை மிக இலாவகமாக கையாள வேண்டும். எக்காரணம் கொண்டும் பிரச்சனை திரும்பவும் தென்னாசிய பிராந்தியத்துக்குள் முடங்கி விடாது பார்த்துக்கொள்ளல் அவசியம்.

உண்மை, இந்தியாவை மீறி சர்வதேசப்படுத்தி, இந்தியாவின் கையை மீறி சிங்களம் மேல் தமிழர் நலம் சார் அழுத்தங்களை சர்வதேச ரீதியில் பேணவேண்டும். அதன் மூலம் மட்டுமே எமது மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வு சாத்தியம்.

காங்கிரசை இல்லை டெல்லியை எமதினம் எக்காரணத்திலும் நம்ப்பக்கூடாது, ஆனால், நம்புவது போல காட்டவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ஆதரவாக வாக்களிக்கிறார்களோ இல்லையோ மேற்கு நாடுகளின் பக்கம் தமிழர்கள் நின்று போர்க்குற்றவாளிகளை கூண்டில் நிறுத்தும் இறுதி இலக்கு நோக்கி இருக்க வேண்டும்.

இந்தியாவின் தமிழர் மீதான கழுத்தறுப்புக்களை காலம் காலமாக கண்ட தமிழர்கள் மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை இவர்களுக்கு வழங்கக்கூடாது.

தமிழ்நாட்டு கட்சிகள் தொடர்ந்தும் ஒற்றுமையாக செயற்படுவார்கள் என நம்புவோமாக.

அமெரிக்காவின் பிரேரணையில் சில திருத்தங்களை முன்வைத்து, ஆதரிவினை இந்தியா வழங்க வேண்டுமென இந்திய உள்துறை அமைச்சர்

ப.சிதம்பரம் வலியுறுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஒண்டுமில்லை. இதில் இந்தியாவின் திருத்தங்கள்???

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு காலமும் மௌனமாக மதில்மேல் பூனையாக இருந்த இந்தியா இந்த விடயத்தில் இப்போது குட்டிக்கரணமடிப்பது சந்தேகத்தைக் கிளப்புகிறது.இது அமெரிக்கா கொண்டுவரப்போகும் தீர்மானம் இதில் திருத்தங்கள் செய்ய அமெரிக்கா உடன்படுமோ தெரியாது.எற்கனவே தீர்மானம் சற்று வலுக்குறைந்தது என்று கருதப்படுகையில் திருத்தங்கள் அதுவும் இந்தியாவின் ஆலோசனைப்படி நடந்தால் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகத்தான் இருக்கும்.தன்னை விட்டுக் கைவிட்டுப் போன தமிழர் பிரச்சனையை மீண்டும் தனது கைக்குள் போட்டுக் குழப்பியடிக்கவே அது முனையும்.ஆகவே இந்தியா இந்தத் தீர்மானத்தை எதிர்ப்பதே எமக்கு நல்லது.ஏனெனில் இந்தியா ஆதரிக்காவிட்டாலும் தீர்மானம் வெல்லும்.அத்துடன் இந்தியா இத்தீர்மானத்தை எதிர்த்தால் இந்திய மத்திய அரசு மீதான தமிழக உறவுகளின் கொதிநிலை தணிந்து விடாது மேலும் உக்கிரம் பெறும்.அமெரிக்காவும் பிரச்சனையை இந்தியாவிடம் கையளித்து விடாமல் மேலும் இந்தப் பிரச்சனையில் கரிசனை காட்டும்.(இறுதிக்கட்டப் போரின் போது அமெரிக்கா சில நகர்வுகளை எடுக்கவிருந்ததாகவும் இந்தியாவே நான் பார்த்துக் கொள்கிறேன் என்று குட்டையைக் குழப்பியதாகவும் செய்திகள் அடிபட்டது அனைவரும் அறிந்த விடயமே)

Edited by புலவர்

இவ்வளவு காலமும் மௌனமாக மதில்மேல் பீனையாக இருந்த இந்தியா இந்த விடயத்தில் இப்போது குட்டிக்கரணமடிப்பது சந்தேகத்தைக் கிளப்புகிறது.இது அமெரிக்கா கொண்டுவரப்போகும் தீர்மானம் இதில் திருத்தங்கள் செய்ய அமெரிக்கா உடன்படுமோ தெரியாது.எற்கனவே தீர்மானம் சற்று வலுக்குறைந்தது என்று கருதப்படுகையில் திருத்தங்கள் அதுவும் இந்தியாவின் ஆலோசனைப்படி நடந்தால் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகத்தான் இருக்கும்.தன்னை விட்டுக் கைவிட்டுப் போன தமிழர் பிரச்சனையை மீண்டும் தனது கைக்குள் போட்டுக் குழப்பியடிக்கவே அது முனையும்.ஆகவே இந்தியா இந்தப் பிரேரணைணை எதிர்பதே எமக்கு நல்லது.ஏனெனில் இந்தியா ஆதரிக்காவிட்டாலும் தீர்மானம் வெல்லும்.அத்துடன் இந்தியா இத்தீர்மானத்தை எதிர்த்தால் இந்திய மத்திய அரசு மீதான தமிழக உறவுகளின் கொதிநிலை தணிந்து விடாது மேலும் உக்கிரம் பெறும்.அமெரிக்காவும் பிரச்சனையை இந்தியாவிடம் கையளித்து விடாமல் மேலும் இந்தப் பிரச்சனையில் கரிசனை காட்டும்.(இறுதிக்கட்டப் போரின் போது அமெரிக்கா சில நகர்வுகளை உடுக்கவிருந்ததாகவும் இந்தியாவே நான் பார்த்துக் கொள்கிறேன் என்று குட்டையைக் குழப்பியதாகவும் செய்திகள் அடிபட்டது அனைவரும் அறிந்த விடமே)

இந்தியா ஆதரிக்கப்போவது ஓரளவுக்கு உறுதியாகிவிட்டது, காரணம் காங்கிரசின் இருப்பை தமிழகத்தில் தக்கவைக்கவே.

இந்தியாவால் தீர்மானத்தில் மாற்றங்களை கொண்டுவருவதற்கு நேரகால சாத்தியங்கள் இல்லை என்றே நம்புகிறேன். அத்துடன் அமெரிக்கா கேட்பது நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை அமுல்படுத்து ஒருவருடகால அவகாசமும் இறுதியில் ஐ.நா. அறிக்கையையும் சமர்ப்பிக்கவேண்டும் என்பதே. இதில் ஐ.நா. அறிக்கையை ஆரம்பத்திலேயே மாற்றி இருக்கலாம், ஆனால், டெல்லியின் இராஜததந்திரம் ' வென்றால் எல்லாம் தோற்றால் ஒன்றுமில்லை' என்ற அணுகுமுறையை முன்வைத்தது, தோற்றது என்றே பார்க்கலாம்.

இந்தியாவின் எதிர்ப்பை சிங்களம் எவ்வாறு கையாளும் என்பது வரும் நாட்களில் அவதானமாக பார்க்கப்படவேண்டிய ஒன்று. அதேவேளை இந்தியாவின் மாற்றத்தின் மூலம் மற்றைய நாடுகளின் ஆதரவை, குறிப்பாக அணிசேரா நாடுகளின் ஆதரவை பெறவேண்டும்.

http://www.youtube.com/watch?v=46gzIso-9XU

இந்தியா கொண்டுவரும் திருத்தம் தமிழருக்குப் பாதகமாகவே இருக்கும்.சர்வதேச விசாரணை என்பதை அது இல்லாது செய்துவிடும்.

தீர்மானம் என்ன என்றே தெரியாமல் அதனை ஆதரித்த தமிழ் அமைப்புக்கள் தொடர்ந்தும் தமிழரையும் தம்மையும் ஏமாற்றுமா அல்லது தம்மை சுதாகரித்துக் கொண்டு தொடர்ந்தும் சர்வதேச சுயாதீன விசாரணையைக் கோருமா?

எமக்கு வேண்டியது,

சர்வதேச சுயாதீன விசாரணை மட்டுமே.

எமது மக்களுக்கான நீதி, பிரிந்து போகும் உரிமைக்கான சர்வதேச வாக்கெடுப்பு மட்டுமே.

ஆசை தோசை அப்பளம் வடை.

நிழலி மகாபாரதம் படிக்கவில்லையா? அதில் வரும் கர்ணன் தான் டக்கிளஸ்.

ஆசை தோசை அப்பளம் வடை.

நிழலி மகாபாரதம் படிக்கவில்லையா? அதில் வரும் கர்ணன் தான் டக்கிளஸ்.

அப்ப மகா பாரதத்தில் வரும் அரிச்சுன் நீங்கள்தானா?

இப்ப மலைதீவிலை அப்பளம் தோசை வடை கொடுப்பதை நிறுத்தி விட்டார்களாம்.

சோத்து பாசல் மட்டும் தான் கொடுக்கிறார்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்

புலவருக்கு ஒரு பச்சை...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிழலி மகாபாரதம் படிக்கவில்லையா? அதில் வரும் கர்ணன் தான் டக்கிளஸ்.

ஏன் சிராந்தியோட டக்கி தாயம் விளையாடினா மகிந்தா இவனைப் பாத்து எடுக்கவோ கோர்க்கவோ என்பானோ? :lol:

Edited by காட்டாறு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

manmohan_singh-p-chidambaram11.jpg

தயவுசெய்து இவர்கள் படங்களை இனியும் இங்கே இணைக்காதீர்கள்.

இது அநேகமாக எதிர்பார்க்கப்பட்ட முடிவுதான். இதில் எதிர்பார்கப்படாத ஏதோ ஒன்று நடக்கப்போகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.