கதைக் களம்
கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்
கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
647 topics in this forum
-
உதவி. சிறுகதை. கனடா பூபாளம் பத்திரிகைக்காக சாத்திரி யோகநாதன் கண்ணாடி முன்னால் நின்றபடி வழைந்து நெளிந்து தன்னை முழுவதுமாகப் கண்ணாடியில் பார்த்துவிட முனைந்து கொண்டிருந்தார்.அதுவும் தனது தலைக்கும் மீசைக்கும் அடித்த டை யையும் மீறி எங்காவது வெள்ளை முடி தெரிந்து விடக்கூடாது என்பதுதான் அவரது கவலை.அதற்காக கன்னத்தின் ஓரங்களையும் மீசையையும் சீப்பால் மேலும் கீழுமாக பல தடைவை கிழறிப்பார்த்து சரி செய்து கொண்டவர் தனது பிடரிப்பக்கத்தையும் முன்னும் பின்னுமாக இரண்டு கண்ணாடியை பிடித்து பார்த்துக் கொண்டவரிற்கு அப்பாடா ஒரு இருபது வயது குறைந்தமாதிரி இருக்கு என்று தனக்கு தானே சொல்லி சமாதானமாகிக் கொண்டாலும் முதன் முதலாக குமுதினியை பார்க்கப்போகிறோம் அவள் தன்னுடைய வயதை 56 எண…
-
- 31 replies
- 3k views
-
-
உன்னால் முடியும் தம்பி -------------------------------------- இவ்வளவு மலிவாக விமானச்சீட்டை வாங்கி விட்டோமே என்ற சந்தோசம் அமெரிக்காவிலிருந்து கனடா வந்த விமானப் பயணத்திலேயே தொலைந்து போயிருந்தது. அது இன்னொரு கதை. இது அதே மலிவு விலையில் கனடாவிலிருந்து திரும்பி அமெரிக்கா போகும் கதை. எங்கள் நான்கு பேர்களுக்கும் விமானத்தின் நாலு இடங்களில் நடு இருக்கைகளை கொடுத்திருந்தார்கள். கனடா விமான நிறுவனத்தின் இணையதளத்தில் இருக்கைகளை மாற்ற முற்படும் போது, ஒவ்வொரு புது இருக்கைக்கும் பயணச்சீட்டுக்கு கொடுத்திருந்த அளவில் கட்டணம் மீண்டும் கேட்டார்கள். சரி, விமானநிலையத்தில் போய் இலவசமாகக் கேட்டுப் பார்ப்போம் என்று விமான நிலையம் போய்ச் சேர்ந்தோம். கீழே நின்றவர்கள் பெட்டிகளை மட்டும் வாங்கிக் கொண்…
-
-
- 15 replies
- 716 views
- 1 follower
-
-
'ரி-56 ஆல் 'ரச்' அடிச்சுப் பாத்தபோது, ற்றிகரை விரல் அமுக்கியதற்கும், குண்டு வெளிக்கிட்டு இலக்கை அடைந்ததற்குமிடையேயான நேரம் எத்தனை சிறியது என்பது என் மூளை கிரகிக்க முடியாத சிறியதாய் இருந்தது.... படங்களிலும் கதைகளிலும் துப்பாக்கி சுடுதலைப் பார்த்ததற்கும் சுட்டபோது உணரப்பட்டதற்குமிடையேயான வித்தியாசம் வர்ணனைக்கு அப்பாற்பட்டது. சுடுதலின் ஒலி எத்தனை பெரியது! அது செவிப்பறையில் எத்தனை கடினமாய் உதைத்தது என்பதும், துப்பாக்கியின் எனது தோளின் மீதான உதைப்பின் பரிமாணமும் நான் நினைத்திருந்ததைக் காட்டிலும் எத்தனையோ மடங்கு பெரிதாய் இருந்தது. சண்டைகளைத் திரைப்படத்தில் பார்ப்பதற்கும் ஒரு குண்டு சுடுவதில் உள்ள உடல் வருத்தத்திற்குமிடையேயான வேறுபாடு அப்போது தான் என்னால் உணரப்பட்டது. அந்த சுடுக…
-
- 9 replies
- 1.2k views
-
-
இம்மாத ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகையில் வெளிவந்த என் சிறுகதை சிவாவுக்கு இன்னும் தூக்கம் கலையவில்லை. இரவு அடித்த வொட்காவின் தாக்கம் தலையிடியாய் மாறி அவனை எழுப்பியிராவிட்டால் இன்னும் கன நேரமாக அவன் தூங்கியிருப்பான். அப்பவும் எழும்ப மனமின்றிப் புரண்டே படுத்தான். இதமாக இளங்காலையில் வீசிய காற்றினால்கூட அவனை எழுப்ப முடியவில்லை. அதற்காக அவன் இரசனை அற்றவனும் அல்ல. மதுவையும் பெண்களையும் எப்படி இரசிக்கின்றானோ அதுபோல் இயற்கையின் விந்தைகளையும் தன்னை மறந்து இரசித்துமிருக்கிறான். வேலை அற்ற நாட்களில் ஞாயிற்றுக் கிழமைகளில் ஏனோ அவனுக்கு வெள்ளனவே விழிப்பு வந்துவிடும். அந்த நாள் முழுவதையும் அமைதியாக வீட்டிலிருந்தபடியே கரைப்பதான அவனின் அந்தத் தீர்மானத்தை யாராலும் கலைக்க முட…
-
- 3 replies
- 1k views
-
-
Sunday, April 19, 2020 உலையும் மனசோடு அலையும் இரவு. - சாந்தி நேசக்கரம் - குண்டம்மா ? இன்னும் எவ்வளவு நேரத்தில வாறீங்கள்? அவள் வட்ஸ் அப்பில் எழுதியிருந்தாள். இன்னும் ஒரு மணிநேரத்தில்...பதில் எழுதினேன். றெயின் கொலோன் பிரதான நிலையத்தைத் தாண்டி பிராங்போட் நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. எத்தைனயோ ஞாபகங்களும் மனசுக்குள் அலைபோலோடி வந்து உடையும் நுரைகளாய் மணலோடு கலந்து போவது போல பிள்ளைகளுடன் வாழ்ந்த காலங்களும் அவர்களுடனான ஞாபகங்களும் வந்து வந்து போய்க்கொண்டிருந்தது. றைன் நதியோரமாக றெயின் ஓடிக்கொண்டிருந்தது. ஆவணிமாதம் ஆற்றோரமெங்கும் பச்சையாகியிருந்தது. ஆங்காங்கே சரக்குக்கப்பல்கள் பயணித்துக் கொண்டிருந்தது. வெயில் ஏறாத கால…
-
- 6 replies
- 2.6k views
-
-
தலைக்கு கறுப்பு சாயம் பூசி ஒவ்வொரு நாளும் முகச்சவரம் செய்து 80 வயதிலும் 60 வயது தோற்றத்தில் இருப்பார் கந்தசாமி சிவசாமிப்பிள்ளை.அவுஸ்ரேலியாவில் அவரின் பெயர் கந்ஸ் ஆனால் ஊர்காரர் ஆசையாக கந்தர் என்று அழைப்பார்கள்.சுரேஸ் அவரை கந்ஸ் அண்ணே என்று செல்லமாக அழைப்பான்.ஊரில் அங்கிள் என்றுதான் கூப்பிட்டவன் அப்படி கூப்பிட ஒரு காரணமிருந்தது.காரணத்தை கதை வாசிச்ச பின்பு அறிவீர்கள்.சுரேஸும் கந்தரும் ஒரே ஊர்,ஒரே சாதி அத்துடன் தூரத்து உறவு வேறு ,இருவரின் பாசப்பிணைப்பை பற்றி சொல்வதற்கு வேறு விடயங்கள தேவையில்லை. இப்ப மகளுடன் இருக்கின்றார் ..இரண்டும் பெட்டைகள் மூன்றாவது பெடியனாக பெறவேண்டும் என்று கோவில் குளமெல்லாம் ஏறிய புண்ணியம் 7வருடத்தின் பின்பு கடவுள் அவருக்கு ஒரு ஆண்குழந்தையை கொடுத்திட்டா…
-
- 16 replies
- 2k views
-
-
ஊடறுப்பு (ஒருபேப்பருக்காக கோமகன் ) அதிகாலை நேரம் ஐந்து மணியை நேரக் கம்பிகள் அடித்துப் பிடித்துத் தொடமுயன்ற வேளையில் , இரவுக்கும் வானத்துக்கும் நடந்த கட்டிபிடி விளையாட்டில் மேகங்கள் வெட்கத்தால் சிலிர்த்து சிவப்படையத் தொடங்கிக் கொண்டு இருந்தன . இந்த ஆல்லோல கல்லோலதால் வெறி கொண்ட கூழைக் கடாக்கள் வானத்தில் சித்திரம் வரைந்து சீறிக்கொண்டு பறந்தன . தூரத்தே ஒலித்த பிள்ளையார் கோயில் மணி ஐயரின் வருகையை அந்த ஊர் மக்களுக்கு தெரியப்படுத்திக் கொண்டிருந்தது . புல்லுப் பாயில் படுத்திருந்த தம்பையா தனது உள்ளங்கைகளைத் தனது முகத்துக்கு நேராகப் பிடித்து அவை இரண்டையும் சரசரவென்று தேய்த்தவாறே அவற்றில் கண்களைத் திறந்தார் .இததற்கு அவரிடம் ஒரு காரணமும் ஒன்று உண்டு யாரோ ஒரு புண்ணிய…
-
- 24 replies
- 2.2k views
-
-
ஊமைக் கனவுகள் தோழி அவள் காத்திருந்தாள். காலம் முழுவதும் காத்திருக்கலாம் போன்ற உணர்வுடன் காத்திருந்தாள். இனியும் காத்திருப்பின் காத்திருந்த அர்த்தம் எல்லாம் பொய்த்து விடுமோ என்ற அச்சமேயில்லாமல் காத்திருந்தாள். நெஞ்சம் நிறைய ஆதங்கத்துடன் இருந்தவள் வயிற்றில் இவன் ஊருக்குப் போகிறான் என்ற செய்தி அரசல் புரசலாகக் காதில் விழுந்து தொலைத்தது. அவளின் காத்திருப்புக்கு ஒரு அர்த்தம் உண்டானது போல அவளது மனம் குதூகலித்தது. “அண்ணை, ஊருக்குப் பயணமாம் எண்டு கேள்விப்பட்டனான், மெய் தானே?" அவளுக்கேயுரிய மெல்லிய குரலில் அவள் கேட்டபோது அவனும் ஒளிவு மறைவில்லாமல் பதில் சொல்ல நேர்ந்தது. "ஏன் பவானி என்ன விசயம்? ஏதும் தேவையோ ஊரிலையிருந்து ?" மௌனமாய்ப் போனவளின் …
-
- 6 replies
- 2.6k views
-
-
கழுத்தில் மின்னும் தங்க சங்கிலி, கறுத்த கண்ணாடி, வார்த்தைக்கு வார்த்தை வெக்கை, ஊருக்கு போனா செலவு அடுத்தது அங்க இருக்கிற எல்லாருக்கும் ஏதாவது குடுத்திட்டு வரவேணும். போகாமலே இருக்கலாம், ஆனா போறம். „அண்ண விமான பற்றுச்சீட்டு கொழும்புக்கு என்ன விலையண்ண ஏழாம் மாசம் 9ம் திகதி போய் 22 23 வாற மாதிரி?“ „தம்பி இப்ப தை மாசம், ஆனா நிறைய சீட் இல்லை. எத்தின பேர் நீங்க?“ „நான் என்ற வைப் அடுத்தது என்ற இரண்டு சின்ன பிள்ளைகள், மகனுக்கு 7 வயசு மகளுக்கு 4 வயசு. அவாவ மடியில வச்சு இருக்க ஏலாதா?“ „இல்ல தம்பி அவாக்கு புள் டிக்கெட், தலா ஒருத்தருக்கு 850.- சுவிஸ் பிராங் வருது.“ „என்ன அண்ண இந்த விலை சொல்லுறீங்க? „நான் ஒண்டும் பண்ண ஏலாது, விடுமுறை நேரம், இது எமிரேட்ஸ் விமானம், கத்தார்…
-
- 2 replies
- 4k views
-
-
சமீபத்தில் தாயகம் போயிருந்தேன். நீண்ட வருடங்களின் பின்னர் ஒரு மாவீரர் நாளில் தாயகத்தில் இருக்க முடிந்தது. கொழும்பில் வசிக்கும் எனது பழைய நண்பன் ஒருவன் என்னை தன்னுடனே தங்க வைத்துக் கொண்டான். அவன் ஒரு சட்டத்தரணி. இப்பொழுது என்னைப் போலவே அவனும் ஓய்வில் இருக்கிறான். அவனுக்கு இரண்டு பிள்ளைகள். இருவரையும் வெளிநாடு அனுப்பி விட்டு குடியும் குடித்தனமுமாக இருக்கிறான். முற்றம் கூட்டவும் எடுபிடி வேலைகளுக்கும், சமையல், துவையல் போன்ற வேலைகளுக்கும் என இரண்டு வேலையாட்களை வைத்திருக்கிறான். ஏகப்பட்ட தமிழ் தொலைக்காட்சிகள் இருப்பதால் பழைய பாடல்கள் திரைப்படங்களுடன் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தவனிடம் நான் சிக்கிக் கொண்டேன். நண்பனுக்கு இங்கே நான் வைத்திருக்கும் பெயர் மணியன். இ…
-
-
- 82 replies
- 9.4k views
- 1 follower
-
-
கோயிலில் தோரணம் கட்டுதல் ,அன்னதானம் வழங்குதல்,சாமி காவுதல் போன்றவற்றிக்கு நானும் என்னுடைய நண்பர்களும் முன்னுக்கு நிற்போம்.இவற்றை செய்யும் பொழுது சில சுயநலங்களை எதிர்பார்த்துதான் செய்வோம் ஆனால் வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு பொது நலம் போல இருக்கும்,இது தான் அன்றைய காலகட்டத்தில் பொதுசேவை என்று கூட சொல்லலாம்..அம்மாவின் அல்லது சகோதரிமாரின் தங்க செயினை வாங்கி போட்டு கொண்டு மேலாடையின்றி சாமி காவுவோம் அதிலும் முன்னுக்கு நின்று காவ வேணும் என்ற போட்டியும் எங்களுக்கிடையே நடக்கும்.சாமியை இருப்பிடத்தில் வைத்த பின்பு பிரசாதத்தை பெற்று கோவில் வெளிமண்டபத்திலிருந்து அன்றைய தரிசனங்களை இரைமீட்பது எங்களது வழமை. சின்ன பெடியள் அடிபட்டால் அவங்களை விளத்தி சமாதானப்படுத்தி அனுப்புதல்,பக…
-
- 7 replies
- 2.7k views
-
-
எங்க ஊர் முதலாளி ஒரு காலத்தில் நகரத்தையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த ஆளுமை மிகுந்தவர் முதலாளி. எங்கள் துறைமுகப் பகுதியில் கடலின் ஆழம் போதாது, வணிகக் கப்பல்கள் அங்கு வர முடியாது என்ற நிலை இருந்த போது, துறைமுகத்துக்கு ஒரு மைல் தள்ளி வணிகக் கப்பல்களை நிறுத்திவிட்டு, படகுகளில் போய் பொருட்களை ஏற்றி, கரைக்கு கொண்டுவரலாம் என்று செய்து காட்டி பலருக்கு நகரத்தில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்த பெருமை முதலாளியினுடையது. முதலாளிக்கு வணிகத் திறமை மட்டுமல்ல பெண்களை வசியப் படுத்தும் கலையும் நன்றாக வரும். முதலாளியுடன் நெருக்கமாகப் பழகும் அவரது நண்பர்களுக்கு, குழந்தை பிறக்கும் போது, தங்களது குழந்தை முதலாளியைப் போல இருந்து விடுமோ என்ற அச்சம் ஒட்டிக்…
-
- 10 replies
- 3.4k views
-
-
எங்கட கதை பெரிசா சுவாரசியமாய் இருக்காது.நாங்கள் மூன்று பேர் ஒன்றாய் ஒரு அறையில தங்கியிருக்கிறம். இலங்கையில இருந்து இன்னொரு ஆசிய நாட்டுக்கு வந்து கப்பலுக்கு கொஞ்சக்காசைக் கட்டிட்டு ஆறு மாதமாய் பார்த்துக்கொண்டிருக்கிறம்.ஒ எங்களைப்பற்றி சொல்ல மறந்திட்டன்.நான் வன்னியில கொஞ்சக்காலம் ஊடகத்தில வேலை செய்தனான் என்றதைவிட சொல்ல ஒன்றுமில்லை.மாத்தளனில குடும்பத்தோட ஆமியின்ர பகுதிக்கு வந்திட்டன்.மற்றது டாவின் அவன் சங்கானைப் பெடியன்.அவன் எங்களுக்குள்ள வசதியான ஆள் .தமையன் இரண்டு பேர் வெளியால இருக்கிறாங்கள்.அவன் கொம்புயுட்டர் படிச்சவன்.அவன்ர லப் டொப்பில தான் நான் எழுதிக்கொண்டிருக்கிறன். அடுத்தது மோகன் அவன் பதினாலு வருஷம் இயக்கத்தில இருந்து இரண்டு வருஷம் புனர்வாழ்வுல இருந்தவன்.அ…
-
- 133 replies
- 11k views
-
-
வயசு போகப்போக பக்தி முத்தி பரவச நிலையை அடைய துடிப்பது மனித இயல்பு .அது அடியேனை ஆட்டி படைக்க தொடங்கி சில அறிகுறிகள் தென்படவே என்னை அறியாமலே சில செயல்களை செய்ய தொடங்கினேன் .காலையில் எழுந்தவுடன் "முருகா நீயே முதல்வன் நீ இன்றி எதுவும் அசையாது" என கொஞ்சம் சத்தமாக சொல்ல பக்கத்தில படுத்திருந்த பெட்டர்காவ் "என்னப்பா ஆர் யூ ஆல்ரைட்" என கேட்க நானும் "ஓம் நமச்சிவாய எல்லாம் சிவமயம் "என கண்ணை மூடி கட்டிலில் அமேர்ந்தேன் திடுக்கிட்டு எழுந்து அருகில் வந்து " டொக்டரிட்ட போவமே ,குளிச்சு வெளிக்கிடுங்கோ நான் லீவு போட்டுவிட்டு கூட்டிகொண்டு போகிறேன்" "இப்ப ஏன் டொக்டரிட்ட உமக்கு விசரே" "எனக்கோ உங்களுக்கோ...." என ஆச்சரியதுடனும் பரிதாபமாகவும் பார்த்து கேட்டாள். " எம் பெருமா…
-
- 18 replies
- 2.1k views
- 1 follower
-
-
எங்கே அவன் தேடுதே சனம் அவரை எல்லோரும் நாட்டாமை என்றுதான் அழைப்பார்கள். மற்றவர்கள் அவரை நாட்டாமை என்று அழைப்பதில் அவருக்கு நிறைந்த மகிழ்ச்சி. கலியாண வீடா? சாமத்தியச் சடங்கா? பிறந்தநாள் விழாவா? இல்லை செத்த வீடா? எங்கள் நகரத்தில் தமிழர்களுடைய எந்த நிகழ்வானாலும் நாட்டாமையே பிரதம விருந்தினர். புலம் பெயர்ந்து யேர்மனிக்கு வந்த காலத்தில் வேலை செய்வதற்கான அனுமதி எங்களுக்குக் கிடையாது. அப்படியான நிலையிலேயே நாட்டாமை, பூ விற்றுக் காசு சேர்த்தவர். பூ விற்பவர் என்பதால் அவரது பெயரோடு ‘பூ’ என்பது அடைமொழியாயிற்று. அதாவது ‘பூ சபா’ என்றாயிற்று. சேர்த்த பணம், அதனால் வந்த அங்கீகாரம் அதோடு இணைந்த ஆணவம் எல்லாம் சேர்ந்ததால் காலம் செல்ல அவர் நாட்டாமை ஆகிப்போனார். அதெப்படி பூ வி…
-
- 24 replies
- 3.8k views
-
-
தர்சினி லண்டனில் பிறந்து வளர்ந்தவள். அழகானவள். தன்னம்பிக்கை மிக்கவளும் கூட. ஆனால் இப்ப ஒரு மாதமாகத்தான் அவளது நம்பிக்கை தடம்புரண்டு போனதில் தன்மீதே நம்பிக்கை அற்றவளாகி செய்வது அறியாது தவிக்கிறாள். பெற்றோர்கள் அவளை எப்படிப் பொத்திப் பொத்தி வளர்த்தனர். அவளும் பெற்றோர் சொல் கேட்டு ஒழுங்காக வளர்ந்தவள் தான். இப்ப கொஞ்ச நாட்களாக குற்றம் செய்யும் உணர்வு. சதீசை என்று சந்தித்தாலோ அன்று பிடித்தது சனி. அடிக்கடி தாய் சொல்வதுதான் உந்த பேஸ் புக் நல்லதில்லை அம்மா. நெடுக உதுக்குள்ள கிடக்காதேங்கோ என்று. அப்ப விளங்கவே இல்லை. பேஸ் புக் இல் சதீசை பார்த்த உடனேயே இவளுக்கு மனம் தடுமாற தொடங்கிவிட்டது. அவனும் எப்ப பார்த்தாலும் சற் பண்ண தயாராக இருப்பான். இவளும் நிர்பாட்டுவதில்லைத்தான். ஆனாலும்…
-
- 15 replies
- 2.9k views
-
-
இது ஒன்றும் பயண அனுபவமோ அல்லது பயணக் கட்டுரையோ அல்ல, இப்படி ஒரு இடம் இருக்கிறது இங்கு போய் வந்தேன் என உங்களுக்குச் சொல்வது தான் நோக்கம் . இம்முறை வசந்த கால விடுமுறைக்கு இத்தாலியின் கடற்கரை நகரங்களில் ஒன்றான ஜேசலோவிற்கு ஒர் ஐந்து நாள் பயணம் போய் வந்தோம். பயணத்திற்கான நோக்கம் பெரிதாக ஒன்றுமில்லை வீடு , வேலை, மன அழுத்தங்கள் எல்லாவற்றையும் மறந்து சில நாட் கள் ஒய்வெடுப்பது தான் நோக்கம்.எனது வேலை இடத்து நண்பன் ஒருவர் ஐந்தாறு தடவைகள் ஜேசலோவிற்கு சென்று வந்தது ஜேசலோவினை தெரிவு செய்தமைக்கான காரணமாக இருந்தது அத்துடன் எனது வீட்டிலிருந்து 600 km தூரத்திலிருந்ததும் ஒரு காரணம் எமது வீட்டிலிருந்து காரில் பயணம் 600km தூரம் ஏறத்தாள 7 மணித்தியாலப் பயண நேரம். …
-
- 37 replies
- 7.7k views
- 1 follower
-
-
முதல் பயணம் பற்றி எழுத முன்பாக ஒரு சத்தியம்: இந்த சிறு பதிவையாவது முழுமையாக எழுதுவேன் என புங்கையூரன் மேல் சத்தியம் செய்து விட்டு ஆரம்பிக்கின்றேன் (என் அம்மா மேல கனக்க தரம் பொய் சத்தியம் செய்து இருக்கின்றேன். இப்ப அம்மாவுக்கு 73 வயதாகின்றது) முதல் பயணம். 2007 ஏப்ரலில் இலங்கையை விட்டு டுபாயிற்கு நான் புறப்படும் போது என் பாஸ்போர்ட்டில் கனடாவுக்கான தற்காலிக வதிவிட வீசாவும் குத்தப்பட்டு இருந்தது. அப்படி புறப்படும் காலத்தில் தான் இலங்கையில் கொழும்பிலும் நாடு எங்கிலும் தமிழர்கள் வீதி வீதியாக சுட்டுக் கொல்லப்பட்டும், காணாமல் போக்கடிக்கப்பட்டும் கொண்டு இருந்தார்கள். ஊடகவியலாளார்களும் முஸ்லிம் வியாபாரிகளும் கடத்தப்பட்டுக் கொண்டு இருந்தார்கள். மகிந்தவுக்கும் கோத்தாவுக…
-
- 139 replies
- 20.1k views
- 1 follower
-
-
என் இல்லம் சொல்லும் சேதி இது... என் முற்றத்தில் மூழியாய் எறிக்கிறது முழுநிலவு. சற்றைக்கொருதரம் தன்னை ஸ்பரிசிக்கும் திரைச்சீலைகளின் உரசல்களை இழந்த சாளரத்து ஓரங்கள். தலைவாசல் கதவிழந்து தனிமையில் தவிக்கும் நிலைப்படிகள். மௌனித்துக் கிடக்கும் சமையலறை மேடை. பொலிவிழந்து புகைக்க மறந்த சோகத்தில் புகைபோக்கி. ஏஞ்சல்கள் ஆடும் ஊஞ்சலை எண்ணி ஏங்கும் வேப்பமரம். சிறு சோறு சமைக்கும் சில்வண்டுகளைத் தேடும் சிறு தாழ்வாரம். சுற்றிப் பறந்த ( த) தும்பிகளைத் தேடும் கம்பி வேலிகள். தேவதைகளைத் தேடி தேகம் இளைத்த நிலைக் கண்ணாடி;. ஓளித்து விளையாடிய தோழர்களின் தோள்சாயத் துடிக்கும் குட்டை மதில். ஓண்டிகாகி உறவிழந்து நிற்கும் ஒற்றைப்பனை. உல்லாசமிழந்து உருக்குலைந்த மண்டபம். ஒப்பனை இழந்த…
-
- 8 replies
- 1.6k views
-
-
ரெலிபோன் மணி அடித்தது.. அவளாகத் தான் இருக்கும்.. என்ற நினைப்பில் போனைத் எடுத்தேன்.. தொட்டேன்.. அமுக்கினேன்.. ஏதோ அவளை நேரில்.. தொடுவது போல எல்லாம்..மெதுவாக.... நிதானமாக நடந்தது. ஆம் அது அவளே தான்... ஹலோ... என்றேன்.. பவுத்திரமாக. மறுமுனையில்... எப்படி இருக்கீங்க.. என்றவள் என்னிடம் இருந்து.. பதிலை எதிர்பார்க்க முதலே...நீங்க விரும்பியது போல.. இன்றைக்கு சந்திக்கலாம்... இன்றைக்கு ஏமாற்றமாட்டன். சொல்லிற இடத்த வாங்க... என்றாள் அவசரப்பட்டவளாக. அதனைக் கேட்டு.. அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியில்.. திகைத்துப் போய் நான் போனோடு நிற்க.. சிந்திக்க கால அவகாசம் தராமல்.... நவிக்கேற்றறை மூளையில் பதித்தவள் போல.. சந்திக்கும் இடத்திற்கும் வழியும் சொல்லிக் கொண்டே போனால்..... கெதியா வாங்க…
-
- 62 replies
- 6.5k views
-
-
நான் 10ஆம் வகுப்பை நிறைவு செய்யமுன் என் முன்னால் அடிக்கடி வந்து போவாள். எப்படியாவது அவளை தொட்டு பார்க்கும் ஆசை எனக்கு ஆனால் வயது இல்லை என என்னை போக தடுப்பார் உறவுகள். ஆனாலும் என்னுள் ஆசை தீயாய் எரிய முயற்சி செய்தவண்ணம் அவளின் காதலர்களுடன் அடிக்கடி தொடர்பில் இருப்பேன். அவர்கள் அவளை பலமுறை கொண்டு வந்து காட்டி போவார்கள். ஆசை அதிகமாக நானும் சண்டை பிடித்து அவர்களுடன் போய் விட்டேன். விளைவு மூன்று மாதங்களில் எனக்கு சொந்தம் ஆனாள். அவளை கழட்டி பிரித்து சுத்தம் பண்ணி அணைத்து தூங்கும் சுகம் எவளவு இனிமை. அவளில் வரும் வாசனை ஒரு தனி சுகம். உறக்கத்திலும் பாதுகாப்பை உறுதிப்படித்தி வெட்கம் அற்று உறங்குவாள். கைகளில் ஏந்தி அவளை காடுமலை வயல்கள் எல்லாம் நடப்பேன்.என்னுடன் சுற்றுவது எண்டால் அவ…
-
- 22 replies
- 2.4k views
-
-
Thursday, August 17, 2017 என் விவாகரத்தும் விளங்காத புனைவுகளும். _____________________________________________________ 2007ம் ஆண்டு சித்திரை மாதம் இனிமேல் சேர்ந்து வாழ்வதில் அர்த்தமில்லையென்ற முடிவை எடுத்த போது விவாகரத்துக்கு விண்ணப்பிக்கலாமென்ற எண்ணம் வந்தது. என் கண்முன்னே வேறு பெண்கள் வந்து போவதை வாழ்வதை ஏற்றுக் கொண்டு சமாளிக்க கடினமாக இருந்தது. என்னையும் எனது ஏற்றத்தையும் உழக்கி வீழ்த்தக் காத்திருந்தவர்கள் முன் தலைகுனியும் தைரியம் இல்லாது போ…
-
- 28 replies
- 7.2k views
-
-
எனது வீட்டு வரவேற்பறை பத்து வருடப் பழசு. ஆட்களைத்தான் மாற்ற முடியாது. சரி அறைகளின் வண்ணங்களையாவது மாற்றினால் மனதுக்கு இதமாக இருக்கும் எண்டு கணவரைக் கேட்டால், கணவர் அதுக்கென்ன மாத்துவம். எல்லாரும் சேர்ந்து பழைய பேப்பரை உரியுங்கோ. நான் பெயின்ற் அடிக்கிறன் என்றார். எனக்குத் தெரியும் உது நடக்காத வேலை எண்டு. ஏனென்டா போன வருசமும் இப்பிடித்தான் கொரிடோருக்குச் சொல்லி கடைசியா நான் தான் பெயின்ட் அடிச்சு முடிச்சது. அதனால நீங்களோ நாங்களோ ஒண்டும் செய்ய வேண்டாம். ஆட்களைப் பிடிச்சுச் செய்வம் எண்டு சொல்ல, வீணா ஏன் அவங்களுக்குக் காசு எண்டு இரண்டு மூண்டு நாள் இழுபறியில் பக்கத்து வீட்டில இருக்கிற போலந்துக் காரனைக் கேட்பதென முடிவெடுத்தேன். போன மாதம் அவன் முன் வீட்டு மதில் கட்டினதைப்…
-
- 28 replies
- 2.8k views
-
-
தொலை பேசி ,முகப்புத்தகம்,யுடுயுப்,வட்சப் இது இல்லாமல் நம்மட வாழ்க்கை இல்லை என்ற காலம் இப்ப பொழுது . ஒருகாலத்தில் முற்சந்தி ,படலையடி ,பொட்டுகள் வாசிகசாலை,விளையாட்டு மைதானங்கள் தான் எமது கருத்து பரிமாற்றங்கள் வீட்டு வேலை செய்ய கள்ளம் அடித்து எனது அறையில் அமைதியாக முகப்புத்தகத்தில் மூழ்கியிருந்தேன்,மெசெஞர் அலரியது பார்த்து கொண்டிருந்த நயன்ந்தாராவின் படத்திற்கு மேலே குகன் கொலிங் ஆன்சர் என்று வந்தது... இவனுக்கு ஆன்சர் பண்ண வெளிக்கிட்டால் இன்றைய பொழுது அதோ கதி என்று எண்ணியபடி மவுஸை வேறு இடத்திற்கு மாற்றினேன் ஆனால் எனது காலகஸ்டம் மவுஸ் ஆன்சர் என்ற இடத்தில் போய் கிளிக் பண்ணிவிட்டது. "ஹலோ மச்சான் எப்படிடா இருக்கிறாய் ,என்ன சிட்னி எரியுதாம் புஷ் வயராம்"…
-
- 14 replies
- 2.7k views
-
-
'Hello " "Is Kulan there pls" "Speaking" "குலன் நான் இங்க பிரேம்" ... "பிரேம்" ? "பெல்ஜியம் பிரேம் ". "சொல்லும் பிரேம் எப்படி இருக்கின்றீர் ? இப்பவும் பிரசல்ஸ் தானே " ? "பிரேசெல்சில் இருந்து கொஞ்சம் தள்ளி ஒரு கிராமத்திற்கு இடம் மாறிவிட்டேன் ,இப்ப கனடாவில் தான் நிற்கின்றேன் .சின்ன உதவி ஒன்று தேவை .யாரிடம் கேட்கலாம் என்ற போது உம்மிட நினைவுதான் வந்தது அது தான் போன் அடித்தேன்". 'எப்படி தொலைபேசி இலக்கம் கிடைத்தது ,என்ன விஷயம் சொல்லும் ?" "சும்மா கூகிளில் உமது பெயரை போடவே தொலை பேசி இலக்கம் வந்துவிட்டது .நான் டொராண்டோ ஹில்டனில் நிற்கின்றேன் .நேரில் வந்து சந்தித்து கதைத்தால் நன்றாக இருக்கும் ". "ஏதும் பெரிய பிரச்சனையோ ?" "அப்படி பெரிதாய் ஒன்றுமில்லை , எனத…
-
- 35 replies
- 3.5k views
-