Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்

சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம்.  கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.

  1. உ சிவமயம் பெர்லின் மேற்கு ஜெர்மனி 15.10.1982 அன்புள்ள என்ரை செல்லக்குட்டி பரிமளம் அறிவது! நான் நல்ல சுகம். அது போலை நீங்களும் நல்ல சுகமாய் இருக்க அரசடி பிள்ளையாரை வேண்டுறன் நான் புதன்கிழமை விடியப்பறம் ஜேர்மனிக்கு வந்து சேர்ந்தேன். என்னோடை வந்த இரத்தினத்துக்கு தெரிஞ்ச ஆக்கள் வீட்டிலை இப்ப நிக்கிறன். எப்பிடியும் வாறகிழமையளவிலை பரீசுக்கு ரிக்கற் எடுத்து தல்லாம் எண்டு வீட்டுக்காரர் சொன்னவர். சரியான குளிராய் இருக்கு.....வீட்டுக்குள்ளை கீற்ரர் போட்டுத்தான் இருக்க வேணும்.சாப்பாடுகள் பரவாயில்லை.சொண்டு வெடிச்சுப்போச்சுது. குளிருக்கு வெடிக்குமெண்டு இஞ்சை சொன்னவை. இஞ்சத்தையான் குளிருக்கு மெத்தையிலை போர்த்து மூடிக்கொண்டு படுக்க நல்ல சுகமாயிருக்…

  2. Started by putthan,

    "பல தடவைகள் தாயகம் சென்று வந்த சுரேஸுக்கு இந்த தடவை போவது ஒரு வித புத்துணர்ச்சியை அவனுக்கு கொடுத்தது.சில சமய‌ங்களில் அவனை அறியாமலயே சிரிப்பதும் உண்டு.ஏன் சிரித்தேன் என்று எண்ணும் பொழுது அவனுக்கே வெட்கமா இருந்தது. "இஞ்சாரும் ஊருக்கு போற நாள் வந்திட்டுது டிக்கட் அலுவல் எல்லாம் பார்த்தாச்சோ" "காசு டிரான்சவர் பண்ண வேணும் அதுக்கு இப்ப கனகாசு போகப்போகுது" "போகவெளிக்கிட்டால் காசு போகத்தானே செய்யும்" "என்ன இந்த முறை ஊருக்கு போறது என்றவுடன் என்னை விட நீங்கள் உசாரா இருக்கிறீயள் போல" "இஞ்சாருமப்பா இந்த தடவை சிறிலங்கா போகும் பொழுது கொழும்பில் ஒரு நாள் நின்று போட்டு அடுத்த நாள் ஊருக்கு போவம்" "இதென்ன புதுக்கதையா இருக்கு நீங்கள் தானே வழமையா . ஒரு கிழமைஅக்க…

  3. உ சிவமயம். திவ்ய தேசத்தில் திருத்தல தரிசனம். …

  4. கடந்த ஆண்டு சித்திரையில் நானும் கணவரும் வரலாற்றுத் தொன்மை மிக்கதும் கடல் வணிகத்துக்குப் பெயர் போனதுமான கிரேக்கத்தின் தலைநகரான எதென்சுக்குச் சென்றோம். கிரேக்கரின் இடிபாடுகளுடன் காணப்படும் கட்டடங்களை தொலைக்காட்சிகளில் பார்க்கும்போதெல்லாம் கட்டாயம் அங்கு செல்ல வேண்டும் என்ற என் ஆசை கடந்த ஆண்டே நிறைவேறியது. ஆனாலும் ஒருவித பயம் இருந்துகொண்டே இருந்தது. அங்கு பார்க்கக்கூடிய இடங்களைப் பட்டியலிட்டு அதற்கு அண்மையில் உள்ள ஒரு தங்குமிடத்தையும் ஒழுங்கு செய்துகொண்டோம். ஒரு நாளுக்கு இருவர் தங்குவதற்கு 70 பவுண்ஸ்கள் மட்டுமே. காலை உணவு ஒருவருக்கு 5 யூரோஸ். எனவே அதையும் சேர்த்து பதிவுசெய்தாகிவிட்டது. இணையங்களில் தேடித் பார்த்தபோது பெரிதாகக் களவுகள் இல்லை என்றாலும் இரவில் தனியாக…

  5. இந்த வருட யாழ் 21வது அகவைக்காக பயணம் பற்றி எழுதலாம் என்று நினைத்திருந்த போது எழுத்தாளர் சுவி அவர்கள் பயணக் கட்டுரை எழுதி ஒரு கலக்கு கலக்கிவிட்டார்.இதுக்குப் பின் எப்படிடா எழுதுவது என்று எண்ணினாலும் சரி என்ன தான் நடந்தாலும் யாழ்இணையத்திற்கு நான்பட்ட கடன் என்று ஒன்று இருக்கல்லவா அதற்கான நன்றிக்கடன் தான் இது.அதுக்காக நாகபாம்பு ஆடுதென்று நாக்கிளிபுழுவும் ஆட வெளிக்கிட்டுட்டுது என்று யாரும் எண்ணாமலிருந்தால் பெரிய உதவியாக இருக்கும். தொடரும்.

  6. அப்ப எனக்கு ஒரு பதின்மூன்று பதின்நான்கு வயதிருக்கும். எனது அன்ரி மன்னாரில் ஒருபாடசாலையில படிப்பிச்சுக்கொண்டு இருந்தா. நான் அதுவரை அங்கு சென்றதில்லை. ஒரு பெரிய பள்ளி விடுமுறைக்கு அன்ரி எங்களை எல்லாம் அங்கு கூட்டிக்கொண்டு போவதாகக் கூறியவுடன் மனதில ஏற்பட்ட சந்தோசத்தைச் சொல்ல முடியாது. அங்க போற நாளை ஒவ்வொருநாளும் எண்ணியபடி காத்திருக்க ஆரம்பிச்சம் நானும் என் தம்பி தங்கைகளும். அப்போதெல்லாம் எந்த விடயத்தையும் மனதில் வைக்க முடியாது அக்கம் பக்கத்தில் உள்ள எம் வயதுக்காரருக்குச் சொல்லிவிடுவோம்தானே. அப்பிடி நாங்கள் மன்னார் போவதும் பக்கத்து வீட்டு எதிர் வீட்டு ஆட்களுக்கு எல்லாம் தெரிய, எங்களோட வர அவர்களும் ஆசைப்பட, என்னும் இரண்டு பேரை மட்டும் எம்மோடு கூட்டிக்கொண்டு போக அன்ரியும் சம்…

  7. ஒரு மாதத்துக்கு முன்னர் நான் வைத்தியசாலைக்குச் சென்று இரத்தப் பரிசோதனை முடித்து கார் பாக் செய்திருந்த இடத்துக்கு வருகிறேன். பிரதான சாலையில் கரையிலேயே தான் என் கார் நின்றது. என்னைக் கடந்துகொண்டு ஒருவர் பெட்டி ஒன்றைத் தூக்கிக்கொண்டு செல்கிறார். அவர் கடந்து சென்றதன் பின்னர் தான் எனக்கு அவரைப் பார்த்ததுபோல் இருக்க, நான் கார் கதவைத் திறந்தபடி தலை திருப்பி அவரைப் பார்க்கிறேன். யோசித்துக்கொண்டிருக்க எனக்கு நினைவு வந்துவிட்டது. முன்பு ஒரு தடவை சந்தித்த யாழ் உறவுதான் அவர் என்று. அவர் ஒரு கடைக்குள் நுழைய நின்று கதைத்துவிட்டுச் செல்வோமா என்று எண்ணிவிட்டு அவர் எதோ அலுவலாக இருக்கிறார். எனக்கும் காலை தேநீர் கூடக் குடிக்காத தவிப்பு. சரி இன்னொருநாள் பார்ப்போம் என்றுவிட்டுச் சென்றுவி…

  8. கஞ்சா விற்கும் காஞ்சனாவும் கண்ணி வைக்கும் காவலனும்,,,,,,,, ! போதை தரும் வாதை சிரிப்புக்குமட்டும்,சிந்திக்கக்கூடாது......! 🥀..............(1) அந்த நீதிமன்ற வளாகம் அன்று காலை ஒரே பரபரப்பில் இருக்கின்றது.வக்கீல்களும், தரகர்களும்,கட் சிக்காரர்கள் வாதிகள்,பிரதிவாதிகள்,வேடிக்கை பார்க்க வந்தவர்கள்,சின்னசின்ன வியாபாரம் செய்பவர்கள் என்று பலராலும் நிரம்பி வழிகின்றது.அது தற்காலிக கட்டிடத்தில் நடைபெறுவதால…

  9. Started by putthan,

    "லண்டனிலிருந்து சுதா வந்திருக்கிறாள் வீ க்கென்ட் பின்னேரம் வாறீயா போய் சந்திப்போம்" "யார் மச்சான் சுதா" "டேய் டேய் சும்மா பம்மாத்து விடாத முந்தி நீ சுழற்றிகொண்டு திரிஞ்சாய் கலா, அவளோட போவள் 'இரட்டை பின்னல்' அவளைத்தான் சொல்லுறன்" "கலா ...." " டேய் நீ எனக்கு விசரை கிளப்பாதை" "யாரப்பா போனில் சுதா,கலா என்று முழுசிக்கொண்டிருக்கிறீயள்" "மச்சி வைடா மனிசி வாராள் பிறகு ,நான் எடுக்கிறன்" "குகன் எடுத்தவன் யாரோ கலாவின்ட பிரண்டாம் சுதா லண்டனிலிருந்து வ‌ந்திருக்கிறாளாம், மீட் பண்ண வரட்டாம்." "போய் மீட் பண்ணுங்கோவன்" "மீட் பண்ணலாம் , சுதா யார் என்று யோசிக்கிறன்" "என்ன உங்களுக்கு டிமஞ்சியா கிமஞ்சியா எதாவது வந்திடுதே" " ஏ…

  10. பாலைவன தடங்கள் 🐪 ...................................🐫🐫🐫 2003 உயர்தர பரீட்சை ஒரு படியாக 2 கொடியுடன் கையில் சேர்ந்தது. எப்பவும் விளையாட்டுத்தான் உனக்கு என ஏச்சும் பேச்சும் காதை நிறைத்த வண்ணம் வீட்டில் ஓயாத ரேடியோ பெட்டி போல எந்த நேரமும் ஒலித்துக்கொண்டிருந்தது. காரணம் விளையாட்டில் அதிக மோகம் ஒரு பைத்தியம் போல இருந்துவிட்டேன் அதனால் என்னவோ சமாதான காலத்தில் கிளிநொச்சி வரைக்கும் சென்று விளையாடி வர சந்தர்ப்பம் கிடைத்தது . 2004ல் சமாதான காலம் வெள்ளைப்புறா சிறகடித்து பறந்து திரிந்த காலம் அது. அதன் சிறகுகள் மெல்ல மெல்ல களையப்பட்டு , வேட்டையாட காத்துக்கொண்டிருந்தது மாவிலாறு பகுதியில் சமாதான புறா மெதுவாக இறக்க ஆரம்பிக்க வெள்ளைவான் ஊர்வலம் வரத் தொடங்கியது கிழக்கு வீதிகளில். ய…

  11. அழியாத கோலங்கள். புலம்பெயர்ந்து ஒரு தசாப்தமாயிற்று. காலவோட்டத்தில் நிற்காமலேயே நாட்கள் மின்னி மறைந்துபோயின. இளமைக்காலங்களில் அனுபவித்து மகிழத் தவறிய சந்தர்ப்பங்கள் குறித்த ஏக்கங்களும், ஆற்றாமைகளும், சிறியகாயங்களும் அவ்வப்போது வந்துபோயினும் புலம்பெயர்ந்த செயற்கை வாழ்க்கை இது எதையுமே நினைக்க விடவில்லை. வந்துவிட்டோம், வாகனமும், வீடும், வேலையும் சமூக அந்தஸ்த்தும் தேடித் தேடியே நாட்கள் தொலைந்துதான் மிச்சம். இடையிடையே கவலைகள் மனக்கசப்புகள் வேதனைகள், ஆற்றாமைகள், கோபங்கள், ஏமாற்றங்கள், வெறுப்புகள், விரக்திகள் என்று வாழ்க்கை தெருக்களிலெல்லாம் சிந்திக்கொண்டே போயிருக்கிறது. மறக்க விரும்பிய கணங்கள், நினைக்கத் தோன்றா தருணங்கள், மிண்டும் வாழ்ந்துபார்க்க விரும்பும் பொழுதுகள் …

  12. விசித்திரமான கனவொன்று இடையிலே குழம்பி அதிகாலை அலாரச்சத்தம் கேட்டுத் திடுக்கென விழித்தெழுந்தான் வசந்தன். சில வினாடிகள் மட்டுமே நீடித்த அக்கனவை அவனால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை; காட்சிகளும் நினைவில் இல்லை. மிகவும் பிரயத்தனப்பட்டு மீண்டும், மீண்டும் யோசித்து என்ன கனவு என்று யூகிக்க முனைந்தான். எனினும் 'தாயகத்தில், அவனது ஊரில் அவனுக்கு ஏதோ ஒரு புதையல் ஒன்று எதிர்பாராத விதமாகக் கிடைக்கப்போகிறது' என்பதை மட்டும் அந்தக் கனவில் கண்டதாக உணர முடிந்தது. இவ்வாறு அவன் சிந்தித்துக்கொண்டிருக்கையில், குளியலை முடித்துவிட்டு அவனிடம் படுக்கையறைக்கு வந்த அவன் மனைவி கல்யாணி "என்னப்பா விடிய எழும்பினதும் கையுமா யோசிச்சுக்கொண்டு இருக்கிறீங்கள்? நேரம் 6:10 ஆச்சு. வேலைக்குப் பிந்…

  13. உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பது பலருக்கு ஆவலாக இருந்தாலும் அதற்கான முயற்சியில் இறங்குவது கடினமானது. உடல் எடையைக் குறைக்கப் பல விதங்களாக முயன்று பார்த்திருப்பீர்கள். உணவின் அளவையும் கலோரிகளையும் கட்டுப் படுத்தி உடலையும் மனதையும வருத்தி மெலிய வைப்பது கடினம். எமது உடல் மிகவும் புத்திசாலியானது. உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கும்போது தனக்குக் கிடைக்கும் சொற்ப உணவைக் கொழுப்பாக மாற்றி உடலில் சேமிக்க முயலும். இவ்வாறு சேமிக்கப்பட்ட கொழுப்பை மீண்டும் கலோரிகளாக மாற்றி இலகுவில் பாவிக்க முடியாது. நீண்டநேர உடற்பயிற்சி நல்ல பலனைத் தரும். கட்டுப்பாடுகளைத் தளர்த்தினால் எடை மீண்டும் ஏறிவிடும். முள்ளை முள்ளால் எடுப்பதுபோல் கொழுப்பைக் கொழுப்பால் கரைக்கும் முறை தற்போது மேல…

  14. இந்தத் தென்னைகளே சாட்சி.. பல வீடுகளுக்கு குண்டுகள் வைத்து தகர்த்தவன் யார் என்பதற்கு. அயராத மக்கள் இன்னும் ஊரில் இருக்கிறார்கள். புகையிலை தோட்டம். தொண்டமனாறுக்கு குறுக்கே பாலம். செல்வச்சந்நிதி. ஈஸ்டாமில் ஒரு குட்டி எஸ்ரேட் ஏஜென்ட் வைச்சிருந்து எப்படியோ செல்வம் திரட்டி.. வேலணை சாட்டியில் உல்லாச விடுதி நடத்தும் ரில்கோ. செங்கரங்கள் நீட்டி.. பனைக் கறுப்பிகள் கூந்தல் தடவி.. ஒளித்து விளையாடும்.. சூரியன். வேலணை சாட்டி.. அந்திசாயும் வேளை. யாழ்ப்பாண கடைசி தமிழ் மன்னனின் சமாதி என்று சொல்லப்படுகிறது. சுற்றி நிற்பதை யமுனா ஆறு என்கிறார்கள். தமிழரின் வாழ்வு போல் சிதைந்து நிற்கும் சங்கிலியனின் சரித்திரம். விட்டால்.. …

  15. “வந்துட்டான்யா வந்துட்டான் எழுதியே கொல்லப் போறான் “ என்ற மைன்ட் வொய்ஸ் நல்லாவே கேட்குது. சீ சீ அப்படி செய்வேனா என்ன? இது ஒரு உண்மைக்கதை.சின்னக்கதை. ஆனாலும் பிரபல்யமான கதை. இது சுவியின் ஊரவர் என்றபடியால் அவரும் தெரிந்ததை விபரமாக எழுதலாம். இதை அறவே மறந்தே போனேன்.இருந்தாலும் சைக்கிள்கடை என்று சிறி கேள்வி எழுப்பத் தான் ஞாபகத்துக்கு வந்தது. யாழ் இந்துவில் மழைக்கொதுங்கிய வேளை எட்டாம் வகுப்பிலேயே ஒரு பாடம் இரண்டு பாடம் என்று நாளடைவில் அரைநாள் முழுநாளாக மாறிவிட்டது.யாரிடமாவது சைக்கிள் இரவல் வாங்கிறது.இரண்டு மூன்று பேர் சேர்ந்து கீரிமலை சேந்தாங்குளம் பண்ணை வெள்ளைக் கடற்கரை இப்படி எங்காவது திரிவது. …

  16. இரு வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நின்றபோது பெரும்பாலும் ஓட்டோவில தான் திரிந்தது. பணச்செலவுதான் அதிகமே தவிர தாங்கமுடியாத வெய்யிலில் நடந்து செல்வதோ அல்லது பஸ்சுக்காகக் காத்திருப்பது கொடுமையிலும் கொடுமை. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் கணவருடன் சென்றபோது அந்தாள் என்னை ஓட்டோவே பிடிக்க விடாமல் பஸ்சிலும் சைக்கிளிலும் கொண்டு திரிந்து சிலோனே வெறுத்துப்போயிருந்த எனக்கு, கணவன் இல்லாமல் தனியாகச் சென்றது ஒருவித சுதந்திரமாகவும் நின்மதியாகவும் இருந்தது. அதுக்காக அதிக பணம் கொடுத்து ஓட்டோவில் திரியவில்லை. எங்கள் அயலில் ஓட்டோ ஓடுபவர் நியாய விலையைக் கூறியதால் நின்ற இரு வாரங்களில் பன்னிரண்டு நாட்கள் அதிலேதான். மனுசனுக்கு குர்தா தைக்க யாழ்ப்பாணத்தில் ஒரு கடையில் கொடுத்திருந்தேன…

  17. மனிதர் ஒவ்வொருவருக்கும் ஓர் அடையாளம் உண்டு; அந்த அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமே நமது தனித்துவமாக உலகிற்கு தோன்றுகிறது. நமது அடையாளத்தில் மிதமிஞ்சி கவனம் செலுத்தும்போது அங்கே ஆணவம் ஊற்றெடுக்கிறது. அப்போது தான் மற்றவர்களின் தனித்துவத்தை அலட்சியம் செய்யும் மனப்பான்மை உருவாகிறது. சக மனிதர் யாவரினதும் அடையாளத்தை நாம் அடையாளம் கண்டு புரிந்துகொள்ளும் தருணம் அவர்களை மதிக்கவும், அங்கீகரிக்கவும் ஏதுவாகின்றது; அவர்களின் 'குறைகள் என்று ஏனையோரால் சொல்லப்படுபவை' குறைகளாகத் தோன்றாது; முழுமையான மனிதராக அவர்கள் காட்சியளிப்பர். எனினும் அவர்கள் மீது பொறாமை ஏற்படாது. மற்றவர்களின் அடையாளத்தை புரிந்து கொள்ளும்/புரிய முயற்சிக்கும் மனது அன்பின் ஊற்றாகிறது. ஒருவர் தனது அடையாளம் எது …

  18. இன்றைய தகவல் தொழிநுட்ப உலகில் பொழுதுபோக்கு ஊடகங்கள் மலிந்து கிடக்கின்றன. வேலை / வகுப்பு முடிந்து வீடு வந்து தான் தொலைக்காட்சியில் அல்லது கணினியில் நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்க வேண்டும் என்ற நிலை மாறி யூடியூப் (YouTube), முகநூல் (Facebook) போன்ற சமூக ஊடகங்களின் அபரிமிதமான வளர்ச்சியாலும், ஸ்மார்ட்போன்களின் (smartphones) உதவியுடனும் நாம் எங்கு சென்றாலும் எந்த நேரத்திலும் விரும்பிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்கக் கூடியதாக இருக்கிறது. கடைக்காரர் கொத்துரொட்டி போடும் ஓர் பத்து நிமிட இடைவெளியில் வடிவேலுவின் பழைய பகிடி ஒன்றை யாழில் கள உறவு ஒருவர் பகிர்ந்ததை கைத்தொலைபேசியில் பார்த்துச் சிரிப்பதை ஓரிரு தசாப்தங்களுக்கு முன்னர் நினைத்திருப்போமா?! இவ்வாறு கேளிக்கை ஊடகங்க…

  19. நிரந்தரம் என்று எதுகும் இல்லை உறவுகளோ நண்பர்களோ உன்னை வெறுப்பதாய் இருந்தால் விட்டு விலகிவிடு அவர்கள் வேண்டாம் என்று போன பின் நீ அன்பு வைப்பதில் அர்த்தமில்லை இந்த உலகில் நிரந்தரமானது என்று எதுகும் இல்லை அன்பு பாசம் எல்லாமே ஒரு மேடை நாடகமே சுயநலத்துடன் சுளரும் பம்பரம் போலே வேசம் கலைந்தபின் விட்டு விலகிவிடுவார்கள் ஒன்றை மட்டும் உங்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன் என்னோடு எப்பவுமே பொய்மைகள் உறங்குவதில்லை என் மனச்சாட்சியுடன் நான் இப்போ மௌனமான மொழியை கற்றுக்கொண்டு விட்டேன் அதனோடு வாழவும் …

    • 16 replies
    • 4k views
  20. இந்த பாழாய் போன போரிலே எந்த சண்டையும் நடைபெறாமல் 29 வருடமாக (அதிகமான வருடங்கள்) இடம்பெயர்ந்தது காங்கேசன்துறை மக்களே. இங்கு பல்லின, பல்மத பலசாதி மக்கள் ஒன்றாய் கூடி வாழ்ந்த காலமும் ஒன்றிருந்தது. அன்று யாழ் மாவட்டத்தில் யாழ்ப்பாணம் மாநகரசபையாகவும் பருத்தித்துறை, காங்கேசன்துறை நகர சபையாவும் கொடிகட்டிப்பறந்தன. எனது வீட்டை சுற்றி இருந்தவர்கள் வேறு ஜாதியினர், வேறு மதத்தவர், வேறு இனத்தவர் +வேறு மொழி பேசுபவர்கள் - ஆனால் எங்களுக்குள் வேறுபாடு இருந்ததில்லை. இது காங்கேசன்துறை பற்றிய ஒரு அறிமுகம் மட்டுமே. ஆனால் முப்பது வருடங்களின் பின்னான மாற்றம் - தொடரும்.

  21. Started by கந்தப்பு,

    1988 ஆடி மாதம் சனிக்கிழமை. வேகமாக துவிச்சக்கரவண்டியில் வந்த சங்கரை மறித்தான் கோபால். என்ன மச்சான் கிளாசுக்காப் போகிறாய்? ஓமோம் சோதியற்ற பிஸிக்ஸ். உமக்கு ? எனக்கு பொருளியல் கிருஸ்ணானந்தான் ஆசிரியரின் கிளாஸ். அங்க பார் ஆமிக்கார்கள், எல்லோரையும் மறிக்கிறாங்கள். இன்றைக்கு கிளாசுக்கு போனபாடுதான். சங்கர் க.போ.த உயர்தரம் கணிதபிரிவில் கல்வி கற்கிறான். பொறியிலாளராக வேண்டும் என்ற விருப்பம். கோபால் யாழ்மத்திய கல்லூரியில் வர்த்தகதுறையில் உயர்தரம் படித்துக்கொண்டிருக்கிறான் . நன்றாகப் படித்து பல்கலைக்கழகம் சென்று கற்று தனது சகோதரிகளை கரைசேர்க்கவேண்டும் என்று விரும்பினான். கோபாலின் அப்பா ஒரு சட்டத்தரணி. பலருக்கு பல்வேறு விதமாக உதவும் எண்ணம் கொண்டவர். தகப்…

  22. இல்லாத ஊருக்கு வழி சொல்லும் கதைகள்! செப்ரெம்பர் 11, 2001 இல் நான்கு விமானங்களைப் பயங்கர வாதிகள் கடத்திச் சென்று அமெரிக்காவின் கிழக்குக் கரைகளில் இருந்த இலக்குகளைத் தாக்கியதை யாவரும் அறிவர். கடத்தப் பட்ட விமானங்களுள் ஒன்று அமெரிக்காவின் பென்ரகன் எனப்படும் பாதுகாப்புத் தலைமையகத்தின் மேற்குப் பகுதியைத் தாக்கியதில் ஒரு பாரிய ஓட்டையுடன் கட்டிடத்தின் பெரும்பகுதி இடிந்து வீழ்ந்தது. ஜெசி வென்சுரா, இப்போதும் வாழும் 67 வயது முன்னாள் அமெரிக்க அரசியல் வாதி. தனது அரசியல் பதவிகள் தீர்ந்து போன பின்னர், தொடர்ந்து பொது வாழ்வில் நிலைக்க அவர் தேர்ந்தெடுத்த பாதை சதித்திட்டங்கள் (conspiracy theories) குறித்த விவரணப் படங்கள் தயாரிப்பது. 9/11 தாக்குதல் உண்மையில் அமெரிக்க அரசின் உளவுத…

  23. உன் தோள் சாய ஆசைதான்.... காலை எழுந்ததிலிருந்து சுந்தரத்தின் மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. காரணம் என்னவென்று சொல்லத் தெரியவில்லை. வீடு அமைதியாக இருந்தது. முன்பெல்லாம் தாத்தா தாத்தா என்று தோள்மீதும் மார்மீதும் புரண்டு மடிமீது தவழ்ந்த செல்லப் பேரன்கள் இருவரும் இ;ப்பொழுது தம் தேவைகளைத் தாமே கவனிக்கும் அளவு வளர்ந்து விட்ட பின்பு அவரை திரும்பியும் பார்ப்பதில்லை. காரணம் அவர்கள் கைகளில் பல தொழில் நுட்பச் சாதனங்கள். காலை எழுந்ததும் அவரவர் வேலையை அவரவர் பார்த்துக் கொண்டு வேகவேகமாக தத்தமது கருமங்களை கவனித்தபடி 'போய் வருகிறேன்' என்று சொல்லக் கூட நேரமில்லாமல் 'அப்பா யாராவது கதவைத் தட்டினால் பார்த்து திறவுங்கள் கவனம்' என்று சொல்வதைத் தவிர நின்று நிதானித்த…

  24. மனிதாபிமானம் (சிறு கதை) அண்மையில் ஒரு உணவகத்தில் சாப்பிடச்சென்றிருந்தேன். அது ஒரு அல்யீரிய நாட்டவருக்கு சொந்தமான உணவகம். அன்று PSG இன் உதை பந்தாட்டம் இருந்ததால் உணவை ஓடர் செய்து விட்டு அவரது அகண்ட திரையில் விளையாட்டையும் பார்க்க தயாரானேன். சிறிய நேரத்தில் அந்த உணவக முதலாளி ஒருவரை அழைத்து வந்து எனக்குப்பக்கத்து மேசையில் இருந்தி விட்டு என்ன சாப்பிடுகின்றீர்கள் என்று கேட்க அவரும் ஒரு சிறிய சாப்பாட்டை சொல்லி இன்று இது மட்டும் போதும் எனக்கு என்றார். குடிக்க என்ன வேண்டும் என்ற கேள்விக்கு ஒன்றும் வேண்டாம் என்றபடி முதலாளியை இரு கையெடுத்துக்கும்பிட்டார். …

  25. அன்று மிஸ்டர் ஆபீசர் தனது அலுவலக உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்ற நாள். நெருங்கிய சில அலுவலக சகாக்களுடன் மதிய உணவை முடித்துக் கொண்டு விடைபெற்று வீடு வந்தபோது அவர் மனைவி உமாவும், ஒரே ஒரு மகள் கவிதாவும் இன்னும் வேலையில் இருந்து வீடு திரும்பியிருக்கவில்லை. வீட்டுக்கு வெளியே இருந்த சாய்மனைக் கதிரையில் சாய்ந்தவர் தனது அலுவலக நினைவுகளை அசை போட்டார். நிர்வாக உதவியாளராகத் தொடங்கிய அவரது பணிக்காலத்தின் இடையே கம்ப்யூட்டர் மயமான பொழுதில் தொழிநுட்பத்தின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் போக இறுதி வரை சாதாரண அலுவலராகவே வேலை செய்து ஒய்வு பெற்றார். (எனினும் அலுவலக உத்தியோகத்தர் என்னும் திமிர் அவரிடம் எப்போதுமே குடி கொண்டிருந்தது. வேலை தவிர்ந்த வெளியிடங்களில் நண்பர்கள், உறவினருடன் உரைய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.