Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத்தை உருவாக்கி விட்டுத் தான் உயிர்துறப்பேன்: கருணாநிதி சூளுரை

Featured Replies

ஈழத்தமிழர்களுக்கு தமிழீழத்தை உருவாக்கி விட்டுத்தான் உயிர்துறப்பேன் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

வடசென்னை தி.மு.க சார்பில் நேற்றிரவு நடைபெற்ற தமது கட்சி பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

”அண்ணா,காந்தி வழியில் அறப்போராட்டம் நடத்தி தமிழீழம் கிடைக்க போராடுவேன். தனி ஈழம் அமைப்பதற்கு 1980 களில் உருவாக்கப்பட்ட டெசோ எனப்படும் தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பை மீண்டும் தொடங்க வேண்டும்.அந்த இயக்கம் தி.மு.க.வின் துணை இணக்கமாக செயலாற்றி தமிழீழம் உருவாக்கப்படும்.

தந்தை செல்வாவின் வழியில் வன்முறையற்ற வழியில் அமைதிப்போராட்டம் அங்கு புதிய வடிவம் பெறும்.இலங்கை ஜனாதிபதி இதனை நிராகரிக்கலாம்.ஆனால், இதுதான் என் எஞ்சிய வாழி நாளின் இலட்சியம்.

தமிழீழத்தை உருவாக்கி விட்டுத் தான் இந்த உலகத்தை விட்டுச் செல்வேன்” என்று கருணாநிதி மேலும் பேசினார்

http://news.vikatan.com/?nid=7708#cmt241

  • கருத்துக்கள உறவுகள்

டெசோவை மீண்டும் தொடங்க வேண்டும்! - கலைஞர் பேச்சு!

kalaigar-11111.jpg

சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு என்ற தலைப்பில் திமுக கண்டனப் பொதுக்கூட்டம் சென்னை பெரவள்ளூர் சதுக்கத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் கலைஞர்,

நான் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு செய்தியாளர்களிடத்திலே பேசும்போது, உங்களுடைய நிறைவேறாத கனவு என்னவென்று கேட்டார்கள். நான் சொன்னேன். இதுவரையிலே நிறைவேறாமல் இருக்கிற கனவு, தமிழ் ஈழம்தான் என்று சொன்னேன். அது நிறைவேறாமல் போனதற்கு பல காரணங்கள் உண்டு. உயிரையே துட்சமாக மதித்த விடுதலைப் போர் வீரர்கள் ஆயிரம் ஆயிரமாய் உயிரிழந்தும் கூட அது நிறைவேறாமல் போய்விட்டது. அதற்கான காரணங்களை ஆராய்ந்து புதிய குழப்பங்களை உருவாக்க விரும்பவில்லை. அந்தக் காரணங்கள் அப்படியே இருக்கட்டும். ஆனால் தமிழன் தலைநிமிர்ந்து வாழ வேண்டும். அதற்கு பழைய நிலைமைகளையெல்லாம் மறந்து புதிய நிலைமைகளை உருவாக்குவோம். அந்த நம்பிக்கையிலேதான் தமிழ் ஈழம் வேண்டும் என்ற அந்த கனவு நிறைவேற வேண்டும் என்று நான் முரசொலியிலே தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன்.

சிலர் அதை எதிர்த்து பேசினாலும் கூட, அவர்களையும் நம் பக்கம் இழுப்பதற்கு ஏற்ற வகையிலே ஆதாரங்களை எடுத்து எழுதிக்கொண்டிருக்கிறேன். வழங்கிக் கொண்டிருக்கின்றேன். தமிழ் ஈழத்திற்கு இன்றைய தினம் புதிய எழுச்சி, புதிய உருவம் ஏற்படுத்துகின்ற ஒரு காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம் என்று கருதுகின்றேன்.

தமிழ் ஈழத்திற்கான உரத்தை, அதற்கான பலத்தை, அதற்கான எழுச்சியை உருவாக்கிவிட்டுதான் உங்களிடமிருந்தல்ல இந்த உலகத்திலேயிருந்துகூட நான் விடைபெற விரும்புகின்றேன். அத்தகைய எழுச்சி உருவாக, தமிழ் ஈழம் உருவாக சாத்தீக முறையில், அமைதியான முறையில், அறவழியில், அண்ணா வழியில், அண்ணல் காந்தியடிகள் வழியில் நாம் போராட்டத்தை நடத்த வேண்டும். அந்த அறப்போராட்டம் தமிழ் ஈழத்தை நமக்கு தருகின்ற போராட்டமாக, அமைதி போராட்டமாக அமையும்.

50, 60 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை செல்வா அவர்களுடைய தலைமையில் உருவான கீதம், தமிழ் ஈழம் என்பது. அந்தக் காலத்திலே இருந்து அவர்களோடு இணைந்து திமுகவும், பெரியாரும், அண்ணாவும், நானும், நம்முடைய நண்பர்களும் தந்தை செல்வா எந்த குறிக்கோளுக்காக அன்றைக்கு கொடியேற்றினாரோ, அந்த கொடிகளிலே நின்று தமிழ் ஈழம் பெற, தனித் தமிழ் ஈழம் பெற நாம் பாடுபட வேண்டும்.

இது இலங்கையிலே இருக்கின்ற அதிபர்களுடைய காதிலே விழுந்து, அவர்கள் இதற்கு மறுப்புரைக்கலாம். ஆதிக்கக்காரர்கள் ஆதிக்கத்தை அவ்வளவு சுலபத்திலே விட்டுவிடமாட்டார்கள். ஆனால் நாம் அந்த ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு நம்முடைய தமிழன் தமிழனாக, தமிழ் மொழிக்கு உரியவனாக வாழுகின்ற அந்த விடுதலை அவர்களுக்கு கிடைக்கின்ற வரையில் நாம் போராடுவோம்.

உங்களுக்கு ஞாபகம் இருக்கும் ஏற்கனவே டெசோ என்ற ஒரு இயக்கத்தை நாம் நடத்தினோம். டெசோ என்றால், தமிழ் ஈழம் சப்போர்ட்டர்ஸ் ஆர்கனிகேஷன்ஸ். அந்த டெசோவை மீண்டும் தொடங்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அதற்கு நீங்களெல்லாம் உங்களுடைய ஆதரவை தரவேண்டும்.

திமுகவின் துணை அமைப்பாக டெசோ இருந்து, அந்த டெசோவிலே நானும், நம்முடைய பேராசியரும், வீரமணி போன்றவர்களும் அதில் அங்கம் வகித்து இன்னும் யார் யாரை இதில் இணைத்துக்கொள்ள வேண்டுமோ, அவர்களையெல்லாம் இணைத்துக்கொண்டு அந்த டெசோ பணியாற்றும், பாடுபடும், போராடும் அறவழியிலே ஆக்கமாக அந்த காரியத்தை செய்து முடிக்கும். அதற்கு உங்களுடைய அன்பான ஆதரவு தேவை.

இன்றைக்கு இந்த கூட்டத்திலே எனக்கு இரண்டு இலட்சியங்கள். ஒன்று, தமிழக சட்டமன்றத்திலே ஜனநாயகம் ஓங்க வேண்டும் என்பது. அது எப்போது என்று கேட்டால், அது இப்போதா அல்லது மறுபடியும் நாம் ஆட்சிக்கு வரும்போதா. அதற்கு விடைகாண வேண்டியது நீங்கள். இரண்டாவது, தமிழ் ஈழம் பெறுவதற்கு இலங்கையிலே உள்ளவர்கள் தங்களுடைய ஒப்புதலை தருவதற்கு ஏற்றவகையில் நாம் நம்முடைய சக்தியை திரட்ட வேண்டும். அதற்கு நம்முடைய மத்திய பேரரசும் நமக்கு ஆதரவை வழங்க வேண்டும் என்ற அந்த கோரிக்கையை இந்த மாபெரும் மக்கள் சமுத்திரத்திலே வைக்கிறேன். இவ்வாறு பேசினார்.

நன்றி: நக்கீரன்.கொம்

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த முறை ஆட்சிக்கு வர என்னமா துடிக்கிறார், வேண்டாம் அப்பு இது உங்களுக்கு ஆகாது

போனபின்பும் தன் வாரிசுகளுக்கு வித்திடுகிறார்

நீங்க நினைச்சிருந்தா அப்பவே பட்டையை கிளப்பிருன்க்கலாம்.. கிளப்பெல்லையே?

சரி.. இப்ப போடனுங்கிரிங்க, போர்ர போட்ல தாலந் தட்டைஎல்லாம் பிய்யணும் ஆமா

(டிஸ்கி)

இப்படி போட்டாத்தான் குறைஞ்சது குடும்ப சண்டையை வெளில மறைக்கலாம்.

இவ ஜெயா இனி என்ன செய்வாளோ?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஈழம் கிடைக்கும்வரை தான் இருக்கணும் என்ற ஆசையில் சொல்லியிருப்பார்.

(ஆனாலும் இவ்வளவு பேராசை கூடாது)

  • கருத்துக்கள உறவுகள்

குலைஞர் செக் குடியரசின் அரசியலமைப்பு தான் தமிழர்களுக்கு சரியானது.தமிழீழம் அல்ல என சொன்ன நினைவு.பிளேட்டை தருணத்துக்கு ஏற்றால் போல் மாத்றாய்யா.

கலைஞர் அய்யா... தயவு செய்து பேச வேண்டாம் ! சிரித்தபடி கேட்கும் சீமான் - ஜுவி பேட்டி !

தமிழ் ஈழம் அடையும் வரை ஓய மாட்டேன்� என்றும் 'தமிழ் ஈழத்துக்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்� என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி திடீர் என அறிவித்து இருப்பது தமிழ் உணர்வாளர்களையும் அதிர வைத்துள்ளது. 'ஆட்சியில் இருந்த காலத்தில் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது கருணாநிதி பேசுவது நாடகம்� என்று சொல்ல ஆரம்பித்து உள்ளார்கள். இந்த நிலையில், நாம்தமிழர் கட்சியின் தலைவர் சீமானிடம் பேசினோம். ''ஆற்ற முடியாத காயங்​களோடும் வலியோடும் பெரும் சோகத்தோடும் இருந்த எம் மக்கள் இப்போதுதான் மெள்ள விடுபட்டு வருகின்றனர். துக்கமான காட்சியை அடுத்து, ஒரு நகைச்சுவைக் காட்சியைப் போல, கலைஞர் அய்யா திடீ​ரென ஈழத்தைப் பற்றி பேசி இருக்கிறார். அவரு​டைய திடீர் 'தமிழீழ� ஆர்​வத்தைப் பார்த்து ஒவ்வொரு தமிழனும் வாய்விட்டுச் சிரிக்கிறான். அவரால் எப்படி இதுபோல அறிக்கை வெளியிட முடிகிறதோ ?

இறுதிப்போர் நடந்துகொண்டு இருந்த​போது, 'ஈழம் இனி சாத்தியம் இல்லை� என பேசினீர்கள். 'மத்திய அரசின் நிலைப்​பாடுதான் மாநில அரசின் நிலைப்பாடு� என்றீர்கள். ஒன்றுபட்ட இலங்கைக்குள், மாநில சுயாட்சியும் அதிகாரப் பரவலும் வேண்டும் என்பதுதான் அவரது கொள்கையாகச் சொன்னார். 65 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில், மிகப்பெரிய வலிமையான கட்சியை நடத்தும் கலைஞரின் முழக்கமே 'மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி� என்பதுதான். அதையே அவரால் அடைய முடியவில்லை. இந்தியாவிலேயே இந்த நிலைமை என்றால், இலங்கை ஜனநாயக நாடே இல்லை. அது, பவுத்த மதத் தீவிரவாத நாடு. அங்கு ஒரு சிங்கள பவுத்தனைத் தவிர யாருமே தலைமை அமைச்சராக வரமுடியாது.

அங்கே எப்படி மாநில சுயாட்சி கிடைக்கும்? இதை உணராத கலைஞர், மாநில அதிகாரம் பெற வேண்டும் என்று ஈழத் தமிழனுக்கு அறிவுரை சொன்னார். இப்போது, 'ஈழத்தை அடையும் வரை ஓயமாட்டேன்� என்று சொல்கிறார். நியாயப்படி, அவர், 'ஈழத்தை அழிக்கும் வரை ஓயமாட்டேன்� என்றுதான் சொல்லி இருக்க வேண்டும். அண்ணன் திருமாவளவன், சென்னையில் ஈழஆதரவு மாநாடு நடத்தியபோது, அதற்கான விளம்பரங்களில் 'ஈழம்� என்ற வார்த்தையைக் காவல்துறையைக் கொண்டு அழித்தவர் நீங்கள். அதை மறைக்க முடியுமா? ஈழம் என்ற சொல் இருக்கக் கூடாது என்​பதற்காக, இலங்கைத் தமிழர்... இலங்கைத் தமிழர் என்று பேசி​வந்தவர். தொடர்ச்சியாக, என்னை ஐந்து முறை சிறைப்படுத்தினீர்களே, நான் என்ன பேசினேன்?

இன்றைக்கு நீங்கள் பேசியிருப்பதைத்தானே, அன்றைக்கு நான் பேசினேன்? 'இறுதிப்போர் காணொளி காட்சியைப் பார்க்க முடியவில்லை� என்கிறீர்கள்.

இந்தக் காணொளிக் காட்சியை, அச்செடுத்து, வீடுவீடாகக் கொடுத்த​போது, கொடுத்தவர்களைத் தேடித்தேடி சிறைப்​பிடித்தீர்களே ஏன்? நீங்கள் இன்றைக்குச் சொல்லும் ஈழ விடுதலைக்காகத்தானே தம்பி முத்துக்குமார் தீக்குளித்தான்? ஏன் நீங்கள் அவனுக்காக ஒரு இரங்கல்கூட தெரிவிக்க​வில்லை? அவன் மரணத்துக்காகத் திரண்ட இளைஞர்களின் எழுச்சியை, கல்லூரி விடுதிகளை மூடி ஏன் அடக்கினீர்கள்? பெரும் ஊடகம் வைத்திருக்கிற நீங்கள் அதைப்பற்றி சிறு செய்திகூட அதில் வெளியிடவில்லையே, ஏன்? இன்றில்லாவிட்டாலும் நாளை மலரும் என்று நீங்கள் சொல்லும் ஈழத்துக்காகத்தானே, வழக்கறிஞர்கள் போராடி​னார்கள்? ஏன் அவர்களைக் காவல்துறையை விட்டு வெறிபிடித்த மாதிரி அடித்தீர்கள் ?

'ஈழம் அடையும்வரை ஓயமாட்டேன்� என்று, என் தலைவர் பிரபாகரன், அந்த ஈழ மண்ணில் கருவியோடு நின்றுகொண்டு இருந்தபோது, ஏன் நீங்கள் சொல்லவில்லை? பல்லாயிரக்கணக்கான மாவீரர்கள் சிந்திய ரத்தம் வீண்போகாது என்று இப்போது சொல்கிற நீங்கள், 'மாவீரர்களின் கல்லறைகளைக் கட்டினதைவிட வேற காரியத்துல கவனம் செலுத்தியிருக்கலாம்� என்று அப்போது சொன்னது ஏன்? 'தேவையில்லாமல் ஈழத்தைப் பற்றிப் பேசி தமிழகத்தில் வீணாக அரசியல் செய்கிறார்கள்� என நீங்களும் உங்கள் பிள்ளைகளும் நாடாளுமன்றத் தேர்தலில் பேசினீர்களா, இல்லையா? அந்த மக்களின் மீது இவ்வளவு அக்கறையும் பற்றும் கொண்டிருக்கிற நீங்கள், போர்க்குற்ற வீடியோவை உங்களின் ஊடகத்தின் மூலம் வெளியிடாதது ஏன்? இறுதிப் போரிலே, எதிரியால் உருக்குலைக்கப்பட்ட தமிழ் உறவுகளைக் காப்பாற்ற, தமிழகம் முழுவதும் குருவி சேர்த்ததுபோல, அத்தியாவசிய மருந்துப் பொருட்களைச் சேகரித்தார்களே, தமிழ் இளைஞர்கள். அவர்களை எல்லாம் வேட்டையாடி சிறப்பு முகாம்களில் அடைத்து வைத்தீர்களே, ஏன்?

'சிங்களர்கள் கோபப்படும்படி நடந்துகொள்ளக்​கூடாது� என்று அப்போது சொன்னீர்கள். இன்று, நீங்கள் ஈழத்துக்காகப் பேசுவதற்கு கோத்தபய ராஜ​பக்ஷே கோபப்படுகிறாரே? ஈழத் தமிழர்களுக்காக கண்ணீராக வருகிறது என இன்று சொல்கிறீர்களே. அன்று இறுதிப் போரில் தமிழ்க் குழந்தைகள் கரிக்கட்டையாகக் கிடந்த படங்கள் வரும்போது, பத்திரிகையின் அதே பக்கங்களில், உங்கள் பிள்ளை மதுரையில் பிறந்தநாள் கேக் வெட்டிக் கொண்டாடிய படமும் வந்ததே ஐயா? மறக்க முடியுமா எங்களால்? இன்றும் நா கூசாமல் சகோதர யுத்தம் என்று பேசுகிறீர்கள். உங்கள் பிள்ளைகளுக்கு இடையில் நடப்பது என்ன அன்பு முத்தமா? அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் ஒன்றாக இருக்க முடியுமா? எம்.ஜி.ஆரை ஏன் நீக்கினீர்கள்? வைகோவை ஏன் நீக்கினீர்கள்?

ஐயா, கலைஞரே. நீங்கள் தமிழ் இனத்துக்கு இனியாவது நல்லது ஏதாவது செய்யலாம் என நினைத்தீர்கள் என்றால், இதுபோல பேசாமல் அமைதியாக இருங்கள். நீங்கள் இருக்கும் திசைபார்த்து வணங்குகிறோம்'' எனச் சீற்றத்துடன் முடித்தார், சீமான்.

இதற்கு கருணாநிதி என்ன பதில் சொல்வாரோ?

Edited by கருத்து கந்தசாமி

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் அய்யா... தயவு செய்து பேச வேண்டாம் ! சிரித்தபடி கேட்கும் சீமான் - ஜுவி பேட்டி !

இன்றும் நா கூசாமல் சகோதர யுத்தம் என்று பேசுகிறீர்கள்.

உங்கள் பிள்ளைகளுக்கு இடையில் நடப்பது என்ன அன்பு முத்தமா?

அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் ஒன்றாக இருக்க முடியுமா?

எம்.ஜி.ஆரை ஏன் நீக்கினீர்கள்? வைகோவை ஏன் நீக்கினீர்கள்?

ஐயா, கலைஞரே. நீங்கள் தமிழ் இனத்துக்கு இனியாவது நல்லது ஏதாவது செய்யலாம் என நினைத்தீர்கள் என்றால், இதுபோல பேசாமல் அமைதியாக இருங்கள். நீங்கள் இருக்கும் திசைபார்த்து வணங்குகிறோம்'' எனச் சீற்றத்துடன் முடித்தார், சீமான்.

இதற்கு கருணாநிதி என்ன பதில் சொல்வாரோ?

:(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழத்தை உருவாக்கி விட்டுத் தான் உயிர்துறப்பேன்: கருணாநிதி சூளுரை

உந்தக்கிழவனை என்ன செய்யலாம்?

sign0186.gifmad0251.gif

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைத்தேன் தமிழீழத்தை விற்று விட்டுத்தான் ஒய்வு பெறுவார் என்று...

  • கருத்துக்கள உறவுகள்

எமது விடுதலை பற்றி யார் யார் எது எது எதற்க்காகப் பேசினாலும் நாம் அதனை வரவேற்க்கவே வேண்டும். ஏனெனில்

அத்தகைய நகர்வுகள் நமக்குக் குறும்காலத்துக்காவது நமக்குப் பயன்படலாம். களத்தில் வாழும் மக்களின் நிலமையில் வேப்பம் குச்சும் வேழைக்குதவுமென பெற்றுக்கொள்ளும் நிலமைதான் நிலவுகிறது. புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் நாம் கள நிலையை புரிந்து கொள்ளுவது அவசியம்

ஓ... அப்பிடியே..??? அப்ப நீங்கள் படுக்கையில கிடந்து அழுந்தி அழுகி சாகோணும் என்று நாங்கள் போட்ட சாபம் எல்லாத்தையும் வாபஸ் வாங்கிறம். அதை தந்தியடிச்சு உங்களுக்கு உறுதிப்படுத்திறம். நீங்கள் கெதியா உயிர் திறவுங்கோ... அப்பதான் எங்களுக்குத் தேவையானதும் கெதியாக் கிடைக்கும்...!!!

ரொம்ப சந்தோசம் ஐயா!!!! :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞருக்கு வயதுபோய் விட்டது என்று நன்றாகத் தெரிகின்றது..

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞருக்கு வயதுபோய் விட்டது என்று நன்றாகத் தெரிகின்றது..

உங்கள் கருத்தை ஏற்க முடியவில்லை கிருபன்

அவர் குறி வைத்துத்தான் பேசுகின்றார்.

அறளையில் அல்ல.............

  • கருத்துக்கள உறவுகள்

எமது விடுதலை பற்றி யார் யார் எது எது எதற்க்காகப் பேசினாலும் நாம் அதனை வரவேற்க்கவே வேண்டும். ஏனெனில்

அத்தகைய நகர்வுகள் நமக்குக் குறும்காலத்துக்காவது நமக்குப் பயன்படலாம். களத்தில் வாழும் மக்களின் நிலமையில் வேப்பம் குச்சும் வேழைக்குதவுமென பெற்றுக்கொள்ளும் நிலமைதான் நிலவுகிறது. புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் நாம் கள நிலையை புரிந்து கொள்ளுவது அவசியம்

உங்களுடைய கருத்து வெள்ளை தன்மை உடையது.............

அன்றி வெள்ளை அடிக்கபட்டது.

இந்த கருத்திற்கு எதிர்கருத்து யாரிடமும் இருக்காது.

ஆனால் கால காலமாக எமை எமாத்தியவர்கள் இதே கோசங்கள் உடன்தானே வருகிறார்கள்.

வாயிலே நல்ல வார்த்தை உண்டு என்பதற்கா...........

அவர்கள் கையிலே இருக்கும் கத்தியை பார்க்காமல் விடுங்கள்? என்பது புத்திசாலித்தனமா??

இன்றும் தி.மு.க. பல பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஓரளவு பலத்துடன் மத்தியில் உள்ளது. எமக்கு இன்று தேவை இந்திய வெளிவிவகார அணுகுமுறையில் மாற்றம், சிங்களத்தை மீறி தமிழருக்கு ஒரு அரசியல் தீர்வை பெற்றுத்தரக்கூடிய வெளிவிவகார கொள்கை மாற்றம்.

அதற்கு ஆதரவு சேர்க்க எமக்கு துரோகம் செய்தவர்களையும் தருணத்துக்கு ஏற்ப பாவிப்பது சாமார்த்தியமான அரசியலே.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

தற்சமயம் மத்திய ஆட்சியைக் கவிழ்த்தால் கூட்டணி கைவிட்டுப் போய்விடும்.

இதே கூட்டணியில் எதிர்வரும் தேர்தலில் தி மு க வெல்ல தற்சமயம் வாய்ப்புக்கள்

குறைவு. அதனால்த் தான் சத்தம் ஓங்கி வருகின்றது.

இன்று தமிழ் ஈழம் என்று கதைத்தால் தான் தமிழ் நாட்டில் வோட்டு விழும் என்ற நிலையே எமக்கு பெரிய ஒரு வெற்றி தான். இதை நாம் மிக்க கவனமாக பயன்படுத்தி எமது இலக்கை அடைய வேண்டும்.

ஏழரை கோடி தமிழக உறவுகள் எமக்குள்ள மிகப்பெரிய பலம். அவர்களை வழிநடத்துபவர்கள் தி மு க மற்றும் அ தி மு க. என்ற இரு திராவிட கட்சிகள் மட்டுமே.

இந்த இரு கட்சித்தலைமைகளையும் எமக்காக பேசவைப்பதிலேயே எமது வெற்றி தங்கியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமலே தமிழீழம் அமைக்க லட்சக்கணக்கில் எமது ரத்த உறவுகள் காத்திருக்கின்றார்கள்.

இவர்கள் பேசிப்பேசியே அவர்களைச் செயற்படாமல் வைத்திருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அதற்க்கான காலம் ஏற்பட்டு இருந்தபோது சோனியாவுக்கு கடிதம் எழுதி காலத்தை கழித்துவிட்டு இப்போது உங்கள் வெறுமையான அரசியல் பையை நிரப்ப ஆசைப்படுவது நியாயமா கலைஞர் அவர்களே ?

இது குள்ளநரி கருணாநிதியின் நாடகம் அல்ல, மாறாக கருணாநிதியை கொண்டு இந்திய மத்தி ஆட வைக்கும் நாடகம் போல உள்ளது???

...

... ஜெயலலிதாவின் அரசியல் தெரிந்து ... கருணாநிதி என்ன செய்தாலும்/சொன்னாலும் அதற்கு எதிராக செயற்படும் ... ஜெயலலிதா மூலம் தமிழ்த்தேசியத்துக்கு ஆதரவான தமிழக சக்திகளுக்கு ஆப்பிறுக்க நடைபெறும் சதியா?????

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனும்.. தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கைவிட்டதை.. இந்தாள் உச்சரிக்கிறதே பெரிய விசயம். செய்யுறாரோ இல்லையோ.. இவரின் குரலுக்கு சிங்களம் பதில் சொல்லுற அளவுக்கு இவரின் குரல் சிங்களத்தால் செவிமடுக்கப்படுகிறது. சம்பந்தன்.. சுமந்திரன் பேச மறுக்கும் மக்களின் இதயக் குரலை... இந்தாள்.. கொடும் சந்தர்ப்பவாதியாக இருந்தும்.. சொல்லுறதே பெரிய விசயம். வரவேற்கலாம். அதற்காக இவர் எல்லாம் செய்து முடிப்பார் என்று நம்பிக் கெடுவது கூடாது..! :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த முறை ஆட்சிக்கு வர என்னமா துடிக்கிறார், வேண்டாம் அப்பு இது உங்களுக்கு ஆகாது

போனபின்பும் தன் வாரிசுகளுக்கு வித்திடுகிறார்

எம்,ஜி.ஆருக்கு போட்டியாய் இவரைத்தான் கிழடு கிளப்பிவிட்டது ஒண்டும் சரிவரேல்லை.

தேப்பனுக்கும் மோனும் ஒண்டாய் நிக்கினம் பாருங்கோ

1710.gif

  • கருத்துக்கள உறவுகள்

யாரெங்கே பிரிவினைவாதம் பற்றிக் கதைக்கிற கலைஞரை பொடாவில் போடுங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.