Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்க கொடியை முன்னரும் பல தடவை ஏற்றினேன்- இனியும் தூக்குவேன்- சம்பந்தரின் வாதம்!

Featured Replies

சிங்க கொடியை முன்னரும் பல தடவை ஏற்றியிருக்கிறேன். அது எனது விருப்பத்திற்குரிய கொடி அதனை இனியும் ஏற்றுவேன், அதனை யாரும் தடுக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று கொழும்பில் நடந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குழு கூட்டம் இன்று ஆரம்பமான போது பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு செல்வது தொடர்பாக முதலில் ஆராயப்பட்டது. அந்த விடயம் முடிந்ததும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் சிங்க கொடி பிரச்சினையை எழுப்பினார்.

ஐயா நீங்கள் யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா தேசியக்கொடியை பிடித்தது தமிழினத்திற்கு செய்யும் துரோகம், தமிழின தேசவிரோதம் என காரசாரமாக விடயத்தை தொடங்கினார்.

தம்பி அரியம் நீர் என்ன கதைக்கிறீர்… உமக்கு வரலாறு தெரியாது. என்னை சிங்க கொடியை தூக்க கூடாது என்று ஒருவராலும் தடுக்கேலாது.

தேசிய கொடியை நான் தெரியாமல் தூக்கவில்லை. நன்றாக தெரிந்து விருப்பத்தோடுதான் தூக்கினேன். என்னிடம் யாரும் அக்கொடியை திணிக்கவில்லை. சிங்க கொடியை நான் தூக்கினது இதுதான் முதல்தடவையல்ல. நான் தேசியக் கொடிக்கு எதிரானவன் அல்ல. நான் பல தடவை தேசியக் கொடியான சிங்கக் கொடியை திருகோணமலையில் ஏற்றியிருக்கிறேன். நான் நேசிக்கும் ஒரே கொடி சிங்க கொடிதான். இந்த கொடியை வடிவமைத்த குழுவில் தமிழர்களும் இருந்திருக்கிறார்கள். அந்த குழுவில் ஜி.ஜி.பொன்னம்பலம், நடேசன் போன்றவர்கள் இருந்தார்கள். அதில் நடேசன் மட்டுமே இந்த கொடியை எதிர்த்தார். ஆனால் ஜி.ஜி.பொன்னம்பலம் இந்த கொடியை ஏற்றுக்கொண்டிருந்தார். தமிழரசுக்கட்சி இந்த கொடியை எதிர்க்கவில்லை என சம்பந்தன் தெரிவித்தார்.

அதுதவிர இன்னொரு விடயத்தையும் சம்பந்தன் சொன்னார். இந்த கொடி என்னுடைய மிக விருப்பத்திற்குரிய கொடி , சிங்கம்தான் பத்திரகாளி அம்மனின் வாகனம், எனவே சிங்க கொடிக்கு நான் எதிரானவன் அல்ல என சம்பந்தன் தெரிவித்தார். இதற்கு மாவை சேனாதிராசா, அரியநேத்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

சிறிலங்கா கொடியை நீங்கள் தூக்கி பிடித்ததால் நாங்கள் தமிழ் மக்கள் முகத்தில் முழிக்க முடியாமல் இருக்கிறது. மானம் மரியாதை போகிற விடயம். இதனால் தமிழ் மக்கள் எங்கள் மீது வெறுப்படைந்திருக்கிறார்கள் என அரியநேத்திரன் சொன்னார்.

நீங்கள் அடிக்கடி சொல்வீர்கள் தமிழ் மக்கள்தான் எங்கள் பலம் என்று. ஆனால் இன்று தமிழ் மக்களின் மனங்களையும் உணர்வுகளையும் புரிந்து கொள்ளாது நடந்துள்ளீர்கள் என மாவை சேனாதிராசா கோபத்துடன் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட சுமந்திரன் தேசியக் கொடியை ஏற்றுவதோ, பிடித்திருப்பதோ என்ன பிழை, ஏன் இதை பெரிதாக எடுக்கிறீர்கள் என சொன்னார்.

கொழும்பில் இருக்கும் உங்களுக்கு தெரியாது. இந்த பிரச்சினையின் தாக்கத்தை யாழ்ப்பாணத்திற்கும் மட்டக்களப்புக்கும் வந்து பாருங்கள் அப்போது தெரியும் என உறுப்பினர் ஒருவர் சுமத்திரனை பார்த்து கூறினார்.

நாங்கள் இளைஞர்களாக பாடசாலை மாணவர்களாக இருந்த போது இந்த கொடி எங்களுக்கு எதிரானது என தமிழரசுக்கட்சி தலைவர்களான நீங்கள்தான் சொல்லித்தந்தீர்கள். பாடசாலை காலத்தில் நான் இந்த கொடியை எரித்திருக்கிறேன். தமிழ் மக்களை இந்த அரசியல் யாப்போ, இந்த கொடியோ ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த கொடியை ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் எங்களுக்கு இன்னும் வரவில்லை. இந்த கொடிக்கு பெரிய வரலாறு இருக்கிறது. இந்த கொடியை எரித்ததற்காக சிறை சென்ற இளைஞர்கள் பலர். சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் பலர். இவ்வாறு நீங்கள் சிறிலங்காவின் தேசியக் கொடியை தூக்கி பிடிப்பதும் அதுதான் என்னுடைய கொடி என்று கூறுவதும் சிங்கள தேசத்திற்கு அடிபணிந்து போவது போல இருக்கிறது என முன்னாள் போராளியான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

இப்படி நடந்து கொண்டால் தமிழ் மக்களிடமிருந்து நாங்கள் அந்நியப்பட்டு போய்விடுவோம் என்றும் அரியநேத்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சிறிதரன், மாவை சேனாதிராசா ஆகியோர் தெரிவித்தனர்.

தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்படவில்லை என்றால் தலைவர்கள் என்ற அந்தஸ்த்திலிருந்து தூக்கி எறியப்பட்டு விடுவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறிய போது நான் சரி என்று பட்டதை செய்வேன். எனக்கு ஆலோசனை சொல்ல தேவையில்லை. நான் செய்யும் காரியங்களை யாரும் கேள்வி கேட்ககூடாது என சர்வாதிகார தோரணையில் சம்பந்தன் தெரிவித்தார்.

விவாதம் காரசாரமாக போய் கொண்டிருந்த போது குறுக்கிட்ட மாவை சேனாதிராசா சாம் அண்ணன் ( சாம் அண்ணன் என்றுதான் மாவை சேனாதிராசா சம்பந்தனை அழைப்பார்) இந்த பிரச்சினை தொடர்பாக நான் உங்களோடு தனிய கதைக்க வேணும் என சொல்லி அந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இன்று சம்பந்தன் நடந்து கொண்ட விதமும், இறுமாப்பும், மக்களை மதிக்காத தன்மையும் எங்களை வெறுப்படைய வைத்து விட்டது. அவர் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தலைமை தாங்க தகுதி உடையவராக என நாங்கள் சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

http://thaaitamil.com/?p=18529

சம்பந்தன் - சுமந்திரன் போக்கிரிகளின் உண்மை சொரூபத்தை பல தடவைகள் இங்கு எழுதியாகிவிட்டது. அப்போது வால் பிடித்த சிலர் இப்போ என்ன சொல்கிறார்களோ தெரியவில்லை.

புலிகளிடம் ஜனநாயகம் இல்லை என்று உலகம் முழுவதும் உளறித் திரிந்த பொறுக்கி சம்பந்தனின் ஜனநாயகம் இப்போது தெளிவாகி விட்டது. இந்தியப் பயங்கரவாதிகளின் கைக்கூலியாக இந்த போலி ஜனநாயகவாதி சம்பந்தன் தற்போது சுமந்திரனுடன் இணைந்து சிங்களப் பயங்கரவாதிகளுடன் நக்கித்திரிகிறான்.

இந்த தறுதலைகளை தூக்கி வீசிவிட்டு சிறீதரன், அரியநேத்ரன் போன்றவர்களை தலைமை பதவிக்கு கொண்டு வரவேண்டும்!

தமிழரின் பிரச்சினை இந்தக் கொடி பிடித்த விசயமல்ல!

  • கருத்துக்கள உறவுகள்

ஓட்டுக் குழுக்கள் எல்லாவற்றையும், ஒரே நொ(கொ)டியில் தூக்கிச் சாப்பிட்டு விட்டார், சம்பந்தன்!

அவரை மாவை அன்புடன் அழைக்கும் பெயர் 'சாம்'.

இவர்களுக்கெல்லாம் தமிழ் ஒரு கேடு! :o

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தி உண்மையோ.. மிகையோ தெரியாது. ஆனால் கடந்த கால வரலாற்றை உன்னிப்பாகப் பார்த்தால் தெரியும்..

சம்பந்தன்.. ஒரு போதும்.. தமிழீழத்தை ஆதரித்த தலைவர் அல்ல. அவர் சந்திரிக்காவோடு சேர்ந்து நின்று எம் தலை அறுக்க முயற்சித்த ஒருவர். இடையில் சந்தர்ப்பவாத அரசியல் செய்து தன்னை சங்கரியிடம் இருந்து தற்காத்துக் கொண்டார். அவ்வளவே..!

இவரை நம்பினது.. தமிழ் மக்களின் தவறே அன்றி.. அவரது அல்ல..! அவர் சாகும் வரை இப்படித்தான் இருப்பார்..! எவர் செத்தாலும்.. எந்த மண் அடிமையானாலும்.. இவருக்கும் சுமந்திரனுக்கும் ஒன்றுமே ஆகாது..!

இன்றைய நிலையில் சம்பந்தனையும் தான் அவர் போக்கோடு விட்டுப் பிடித்துப் பார்க்கட்டுமே மக்கள். தந்தை செல்வா செய்ய முயலாததையா.. இவர் சிங்களத்தோடு சிங்கக் கொடி தூக்கி... செய்து சாதிக்கப் போறார்.. அதையும் ஒருக்கா பார்ப்பமே..! :icon_idea:

Edited by nedukkalapoovan

பத்திரகாளியோ வீரபத்திரரோ சிறீ லங்காவுக்கு கிட்டத்தட்ட பொருத்தமான கொடி;

stateterroristscopy.jpg

யாரும் கேட்க முடியாததென்றில்லை. அடுத்த தேர்தல் என்று ஒன்றிருக்கிறது. அதன்போது இதற்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலையில் ஒரு தடவை தேர்தலில் தோல்வியை தழுவியவர் என நினைக்கிறேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆராவமுதன் கருதுவதுபோல் அரியநேந்திரன் ,சிறிதரனுடன் பத்மினி ,கஐேந்திரனையும் இணைக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆராவமுதன் கருதுவதுபோல் அரியநேந்திரன் ,சிறிதரனுடன்  பத்மினி ,கஐேந்திரனையும் இணைக்கவேண்டும்.

சிவாஜிலிங்கத்தையும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைதான். தேசியத்திலிருந்து பிசகாத அணியாயிருக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனையும் சுமத்திரனையும் கட்சியிலிருந்து தூக்கி எறிய வேண்டும்.அன்றேல் அவர்கள் பிரிந்து செண்று கஜேந்திரகுமார் அணியுடன் சேரவேண்டும்.சம்பந்தரை காப்பாற்ற மாவை சொன்ன செய்தி பொய்யாகி விட்டது.அடுத்த தலைமைப்பதவிக்கு காத்திருக்கும் மாவையும் சுரேசும் இதற்குச் சம்மதிப்பார்களோ தெரியாது.கஜேந்திரகுமார் அணியைப் பலப்படுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது என்றே நினைக்கிறேன்.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முறை பிரான்சில் நடந்த கூட்டம் ஒன்றில் இரு அணிகள் என்பது பற்றி சூடான விவாதம் எனது கேள்விக்கு

உருத்திரகுமார் உட்பட ஒருவரிடம் அதிகாரங்களை அதிகளவில் ஒப்படைப்பது தற்போதைய சூழ்நிலையில் ஆபத்தானது. எனவே தாயகம் உட்பட சிவாசிலிங்கம் - சம்பந்தர் என இரு அணிகளாகவே இருப்பதால் அவர்களுக்கும் ஒரு பொறி இருக்கும் என்று சொல்லப்பட்டது. அப்போது அது என்னை பெரிதாக சமாதானமாக்காத போதும்

தற்போது உறைக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஓட்டுக் குழுக்கள் எல்லாவற்றையும், ஒரே நொ(கொ)டியில் தூக்கிச் சாப்பிட்டு விட்டார், சம்பந்தன்!

அவரை மாவை அன்புடன் அழைக்கும் பெயர் 'சாம்'.

இவர்களுக்கெல்லாம் தமிழ் ஒரு கேடு! :o

சம்பந்தனே... முன்னின்று, ஒட்டுக்குழுக்களின் வேலை பார்ப்பதால்.... இனி டக்ளஸ், கருணா பாடு திண்டாட்டம் தான்.

சம்பந்தனையும் சுமத்திரனையும் கட்சியிலிருந்து தூக்கி எறிய வேண்டும்.அன்றேல் அவர்கள் பிரிந்து செண்று கஜேந்திரகுமார் அணியுடன் சேரவேண்டும்.சம்பந்தரை காப்பாற்ற மாவை சொன்ன செய்தி பொய்யாகி விட்டது.அடுத்த தலைமைப்பதவிக்கு காத்திருக்கும் மாவையும் சுரேசும் இதற்குச் சம்மதிப்பார்களோ தெரியாது.கஜேந்திரகுமார் அணியைப் பலப்படுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது என்றே நினைக்கிறேன்.

சம்பந்தனை, இனியும் தலைமைப் பதவியில் விட்டு வைத்தால்... முழுத்தமிழனையுமே அவமானப் படுத்தி விடுவார். அவர் தலைமையில்.... வருகின்ற தேர்தல்களில் கூட்டமைப்பு ஒரு ஆசனத்தை பெறக் கூட, முடியாது போகும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கையெழுத்துடன் தமிழனின் தலை எழுத்தே மாறிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுக்கு ஆப்படிக்கவென்றே..... ஒவ்வொரு கால கட்டத்திலும் கிளம்பி வந்திடுவாங்கள் நாதாரிப்பயல்கள்.

இப்ப சம்பந்தன், சுமந்திரன் முறை நடப்பதை பார்க்க... தமிழர்கள் பாவம் செய்த பிறவிகள் என்று தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சம்பந்தன் போன்றோர் மூன்று ஆண்டுகளின் முன்னர் புலிகளுக்கு எவ்வளவு துரோகம் இழைத்திருப்பார்கள், இப்போது இவர்களின் நடத்தையை பார்த்தாலே புரிகின்றது

சிங்கம்தான் பத்திரகாளி அம்மனின் வாகனம், எனவே சிங்க கொடிக்கு நான் எதிரானவன் அல்ல என சம்பந்தன் தெரிவித்தார்.

இங்கேதான் அவரது செமகடி உள்ளது. நான் சிறீ லங்கா கொடியைத்தூக்கவில்லை, பக்திப்பரவசத்தில் மயூராபதி அம்மனின் கொடியைத்தூக்கி சாமி கும்பிடுகின்றேன் என்று சொல்கின்றார். தான் ஓர் பழுத்த, மூத்த ஞானப்பழம் என்பதற்குரிய அவரது அரசியல் சாணக்கியம் (சாணியடி) இங்கேதான் உள்ளது?

எங்கள் தேசியக்கொடியில் இந்துக்களின் கடவுளான சிங்கத்தை அமர்த்தி தமிழரை கெளரவம் செய்துள்ளோம் என்றும் அரசதரப்பினால் கூறப்படலாம்?

  • கருத்துக்கள உறவுகள்

இதன் உண்மை தன்மை தெரிவிடினும், சம்பந்தர் இந்த கொடி விடயத்தில் மக்களின் மனம் புரிந்து நடக்காதது அட்சரியமான விடயம் இல்லை. அவரின் சமரச அரசியல் வரலாறு அப்படியானது. (இந்த சமரச அரசியளுடக ஒரு மண்ணும் பண்ண முடியாது என்பது அவருக்கு நன்றாக தெரிந்தும்) ஆனால் இந்த கொடியை திருமலை மணிக்கூட்டு கோபுரத்தில் இருந்து அகற்ற முற்பட்டு மரணமான முதல் (1969 ?) போராளி நடராஜனின் ஊரில் இருந்து வந்த மனிதருக்கு இந்த கொடிமீது இவ்வளவு விருப்பு வேண்டாம்.

இவங்கள் எங்களுக்கு தலைமை தாங்குவார்கள் கொள்கையில் இருந்து விலக மாடார்கள் என்று போராளிகளும் தலைவரும் ஏமாந்து போனார்கள்.

இவர்கள் எங்களை எமாத்துரார்கள் என்று எனக்கு வருத்தமில்லை.. இவங்களுக்கு இதுதான் கடைசி வாழ்க்கை.

போராட்டத்தையும் ஈகையையும் இவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்னும்போது வேதனை வருகிறது.

இவர்களை தலைவர் இதும்பவும் உருவாக்கினார் என்பதற்காக ஒரு சந்தர்ப்பம் கொடுக்கவேண்டும் என்பதில் நானும் உறுதியாய் இருந்தேன் ஆனால் இனியொரு சந்தர்ப்பத்தையும் எங்களுக்கு இவர்கள் விட்டு வைக்கமாட்டார்கள் போல உள்ளது.

சிங்கக் கோடி எங்கள் அடிமையின் சின்னம்... அதை எமக்கு எதிராய் பிடிக்கும் சிங்களவன் எனக்கு எதிரி.

அதைப் தூக்கி பிடிக்கும் தமிழன் எனது துரோகி...

தியாக தீபத்திலும் செத்த பிணத்தை வேகவைத்து உண்ணும் ஈனக் கூட்டம்.

.

அருணா, சார்ள்ஸ் அன்டனி(சீலன்) என்ற இரண்டுபேர் சேர்ந்து தான் சிங்கக்கொடிக்கு பொட்டாசியம் வைத்து எரித்தார்கள். இந்த அருணா சம்பந்தனின் உறவினர்.

******************

வெள்ளைக் கொடி பிடிச்சாச்சு. இனி எந்தக் கொடி பிடிச்சால் தான் என்ன ?

  • கருத்துக்கள உறவுகள்

இவங்கள் எங்களுக்கு தலைமை தாங்குவார்கள் கொள்கையில் இருந்து விலக மாடார்கள் என்று போராளிகளும் தலைவரும் ஏமாந்து போனார்கள்.

இவர்கள் எங்களை எமாத்துரார்கள் என்று எனக்கு வருத்தமில்லை.. இவங்களுக்கு இதுதான் கடைசி வாழ்க்கை.

போராட்டத்தையும் ஈகையையும் இவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்னும்போது வேதனை வருகிறது.

இவர்களை தலைவர் இதும்பவும் உருவாக்கினார் என்பதற்காக ஒரு சந்தர்ப்பம் கொடுக்கவேண்டும் என்பதில் நானும் உறுதியாய் இருந்தேன் ஆனால் இனியொரு சந்தர்ப்பத்தையும் எங்களுக்கு இவர்கள் விட்டு வைக்கமாட்டார்கள் போல உள்ளது.

சிங்கக் கோடி எங்கள் அடிமையின் சின்னம்... அதை எமக்கு எதிராய் பிடிக்கும் சிங்களவன் எனக்கு எதிரி.

அதைப் தூக்கி பிடிக்கும் தமிழன் எனது துரோகி...

தியாக தீபத்திலும் செத்த பிணத்தை வேகவைத்து உண்ணும் ஈனக் கூட்டம்.

இந்தியாவின் கபடத்தனம் ,விடுதலை இயக்கங்கள் எனக்கூறிக்கொண்டு இந்தியாவுடன் ஒட்டி உறவாடிய கூட்டங்கள்.அமிர்தலிங்கம் போன்றோரின் இந்திய அடிவருடல்.சம்பந்தர் போன்றோரின் நடிப்பு.அத்தோடு மேற்குலகின் நடிப்பு.இவற்றை தீர்க்க தரிசனத்தோடு பார்த்தவர்கள் இன்று எம்மோடு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

"எல்லாரையும் எடுத்த மாத்திரத்தில் துரோகி" என்கிறாங்கள் என்று குமுறும் மாற்றுக் கருத்து மாணிக்கங்களுக்கு: சம்பந்தர் இப்ப "துரோகி" பதத்தின் gold standard ஆக மாறி விட்டார். மிச்ச எல்லாரையும் இவரோட தான் ஒப்பிட்டுப் பார்க்க வேணும் இனி!

சொன்னா கன பேருக்கு கோபம் வரும்...

சம்பந்தன் 2 வருடங்களுக்கு முன்னம் தூக்கி எறியப்பட்டு இருக்க வேண்டும்... தேவையான சேதத்தை சம்பந்தன் ஏற்படுத்தியாச்சு... இனி தூக்கி எறிஞ்சாலும் சம்பந்தனால் ஏற்படுத்த பட்டு இருக்கும் illusion ( மாய பிம்பம்) மழுங்கடிக்கப்பட இன்னும் 10 வருடம் ஆனாலும் ஆச்சரியம் இல்லை...

சுஸ்மா சுவராஜ் இந்தியாவில் இருந்து சொல்கிறார் தமிழர்கள் தனி நாட்டை விரும்பவில்லை எண்று... இது சுஸ்மாவுக்கு ஏற்பட்டு இருக்கும் உண்மையான உணர்வாகவும் கூட இருக்கலாம்... காரணம் இலங்கையில் கூட்டமைப்பின் தலைமையை சந்தித்து போன அவருக்கு சம்பந்தர் கூட்டத்தால் அப்படியான உணர்வை தான் காட்டப்பட்டது... இது அவருக்கு ஏற்பட்டு இருக்கும் ஒருவகையான illusion... சுஸ்மாவை இதுக்காக குற்றம் சொல்ல கூட முடியவில்லை..

ஆக கூட்டமைப்பு ஒரு திசையிலும், மற்றய தமிழர் அமைப்புக்கள் வேறு திசையிலும் அரசியல் களத்தை அமைத்து இருக்கின்றன... ஆனால் கூட்டமைப்பின் அரசியல் தமிழ் மக்களின் விடிவை மிக தூரத்துக்கு கொண்டு போய் இருக்கிறது...

( அரசியல் எழுத கூட்டாது என்பதுதான் எனது நிலைப்பாடாக இருக்கு... ஆனாலும் இயலாமையால் ஏற்பட்ட வெறுப்பு எழுத தூண்டியது) தூர நோக்கில் எடை போடுவதில் எனக்கு என் தலைவர் இருந்ததை விட மிகவும் உயர்ந்து தெரிகின்றார்...

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் தயா வந்தது மிக்க மகிழ்ச்சி

  • கருத்துக்கள உறவுகள்

தாயா மீண்டும் வந்தது மகிழ்ச்சி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.