Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடலுக்கு.... எந்த சோப் போட்டு, குளிக்கலாம்?

Featured Replies

நீங்கள் சோப்பைப் பற்றிச் சொல்ல எனக்கு யாழ் யூனியிலை ராக்கிங் கால எண்ணம் தான் வந்து தொலையுது. ஒரு நாள் ஒருவன் (சீனியர்) கேட்டான் நீ சண்லைற் சோப்பா பாவிக்கிறனீ என்று. கேட்டவர் நல்ல காகக் கறுப்பு :lol:

தமிழ்ப் பைத்தியம்,

கடலை மாவும், பயத்தம் மாவும்... தேய்த்துக் குளித்தால்...animierte-smilies-badwc-025.gif

வெள்ளைக்காரன் பின்னாலை வாறானோ, இல்லையோ....

பாத் ரூம் குழாய் அடைத்ததுக்கு,smileys-badewanne-973362.gif வீட்டுக்காரன் பின்னாலை... திரத்திக் கொண்டு வருவான்.

:lol: :lol: :lol:

Edited by அலைமகள்

  • கருத்துக்கள உறவுகள்

அழகுக்கு அழகூட்ட

உங்கள் சருமத்தில் மென்மை தங்க

இன்றே வாங்கிப் பாவியுங்கள்

மில்க்வைற் :D :lol

கடினமான நீரில் சவர்க்காரம் கரையும் போது அதிலுள்ள இரசாயனப் பொருட்கள், நீரில் உள்ள கல்சியம், மக்னீசியம் அயன்களோடு சேர்ந்து உருவாக்கும் scum என்பது சவர்க்காரத்தின் உபயோகத்தை குறைக்கும்.

கல்சியம் மற்றும் மக்னீசியம் போன்றன உருவாக்கும் இரசாயனப்பொருட்கள் நீரில் இலகுவில் கரையாது.

மென் நீரில் சவர்க்காரம் இலகுவாக சேர்ந்து பயனை கொடுக்கும். மென் நீரில் தான் நுரை அதிகம் இருப்பதோடு, சவர்க்காரத்தை இலகுவாக உடலில் இருந்து கழுவமுடியாமல் இருக்கும்.

வன் நீரில் உள்ள கல்சியம் மக்னிசியம் அயன்கள் சவர்கரத்துடன் தக்கமடைந்து சவர்கரத்தின் நுரைக்கும் திறன் , மற்றும் அழுக்கு அகற்றும் திறனை குறைக்கிறது.

மென் நீரில் சவர்காரம் நல்ல பயனை கொடுக்கும்.

அதேநேரம் குளோரின் ஏற்றிய நீரில் அல்லது அமில தனமையான நீரில் சவர்காரம்

அமிலத்துடன் தக்கமடைந்து சவர்காரத்தின் செயற்திறனை இழக்கலாம்.

உதாரணமாக

குளோரின் ஏற்றிய நீரில் குளோரின் மிகுதியாக இருந்தால்.

அது HCl மற்றும் HOCl அமிலங்களை உருவாக்கும்.

இவை சவர்க்கரத்துடன் தாக்கமடையும்

RCOONa + HCl -------------> RCOOH + NaCl

இந்த தாக்கம் கொழுப்பமிலங்களை கொடுக்கும். இவை நீரில் கரையும் திறனற்றவை. எனவே வழுவழுப்பாக இருக்கும்.

1. http://homepages.ius...c/c122/soap.htm

2. http://chemlife-mala...gents-work.html

Edited by KULAKADDAN

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய கடை விலாசத்தை தரவா? :rolleyes:

லக்ஸ்,ராணி,பேபிசோப்,ஹமாம்,டெற்றோல்,லைவ்போய்(சிவப்பு,நீலம்,மஞ்சள்,)

மெடிமிக்ஸ் எல்லாம் இருக்கு வாங்கோ :D:lol:

தபாலில் வேணும் என்றாலும் அனுப்பிவிடலாம் தபால் செலவையும் தந்திங்கள் என்றால்.. :rolleyes::icon_idea:

ஜீவா..என்னப்பா இது..? வாங்கோ..வாங்கோ எண்டு கூவி அழைக்கிறீர்கள்..? கல்லாவில இருந்து கொண்டே எழுதினியள்...? :lol:

உங்கட கன்னத்தில என்ன கறுப்பா ஒரு கோடு கிடக்கு, எண்டு சொல்லிப் பாருங்கோ தப்பிலி!

உங்கள் முகத்தை, ஒரு 'அப்பாவி' தோற்றத்திற்கு மாற்றி கொள்ள மறக்க வேண்டாம்!

சந்தர்ப்பம் கிடைத்தால் பதியுங்கள்! :D

தப்பிலி அண்ணா...எதுக்கும் மனைவி என்னப்பா கன்னத்தில் சிவப்பாய் ஒரு கோடு கிடக்கெண்டு கேட்காதமாதிரி தற்காப்புகளோட இறங்குங்கோ.... :D

  • கருத்துக்கள உறவுகள்

கடினமான நீரில் சவர்க்காரம் கரையும் போது அதிலுள்ள இரசாயனப் பொருட்கள், நீரில் உள்ள கல்சியம், மக்னீசியம் அயன்களோடு சேர்ந்து உருவாக்கும் scum என்பது சவர்க்காரத்தின் உபயோகத்தை குறைக்கும்.

கல்சியம் மற்றும் மக்னீசியம் போன்றன உருவாக்கும் இரசாயனப்பொருட்கள் நீரில் இலகுவில் கரையாது.

மென் நீரில் சவர்க்காரம் இலகுவாக சேர்ந்து பயனை கொடுக்கும். மென் நீரில் தான் நுரை அதிகம் இருப்பதோடு, சவர்க்காரத்தை இலகுவாக உடலில் இருந்து கழுவமுடியாமல் இருக்கும்.

நிலத்தடி.. வன்னீரில்.. கல்சியம் மக்னீசியம் மட்டுமல்ல.. சோடியம் அயன்களின் அளவும் அதிகம் உண்டு. அந்த வகையில் தான்.. அவற்றில் சோப்பின் நுரையும் அளவு தங்கியுள்ளது.

மேற்கு நாடுகளில் மென்னீரில் சோடியத்தின் அளவு ஒப்பீட்டளவில் அதிகம் இருப்பினும்... நீர் குளோரின் ஏற்றப்பட்டு.. கூடிய அமிலத்தன்மையாக இருப்பதால்.. சவர்காரம் அதில் நுரைய எழுப்புவது குறைவு..! எப்படித்தான் சவர்க்காரத்தைப் போட்டாலும் நுரை வாறது குறைவு..!

மேற்குலகில் வன்னீரை மென்னீராக்கி.. குழாய்களில் scale உருவாவதை தடுப்பதோடு.. குளோரீன் ஏற்றம் செய்து.. சுத்திகரிப்பும் செய்வதனால்.. அந்த குளோரின் அயன்களின் அளவிற்கு ஏற்ப அமில விளைவு சோப்பின் கரைதிறனை பாதிக்க செய்கிறது..!

அந்த வகையில் வன்னீரில் கரைந்து நுரையை எழுப்பும் சோப்பின் அளவு ஒப்பீட்டளவில் அதிகமாகும். இது மென்னீரில் சோப் நுரையை எழுப்புதலில் இருந்து மாறியேயுள்ளது. வன்னீரில் (நிலத்தடி நீரில்) உள்ள சோடியத்தின் அளவும் அதில் சோப் நுரை எழுப்புதலை தீர்மானிக்கிறது..! வெறுமனவே கல்சியம்.. மக்னீசியம் சார்ந்து மட்டும் வன்னீர் உருவாவதில்லை. அதில் வன்னீர் என்ற கருதலுக்கு இடமளிக்காத மற்ற அயன்களும் (சோடியம் போன்றவை) உண்டு..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் மேனியின் பளபளப்பிற்கு காரணம் லாலா சோப். வாங்குவீர்.....பாவிப்பீர்...பயனடைவீர். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அடக்கடவுளே யாழ் நிர்வாகத்தையே பேய்க்காட்டி சோப்பு விளம்பரங்களை போட்டுட்டாங்களே!!!! :lol: :lol:

எந்த 'சோப்' போட்டுக் குளிப்பதல்ல, அதை யார் போட்டு விடுகிறார்கள் என்பதுதான் முக்கியம்.

தப்பிலி அண்ணா...எதுக்கும் மனைவி என்னப்பா கன்னத்தில் சிவப்பாய் ஒரு கோடு கிடக்கெண்டு கேட்காதமாதிரி தற்காப்புகளோட இறங்குங்கோ.... :D

அது 'ராணி சந்தன சோப்' என்றால் போயிட்டு. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மேனி பழபழக்க வேண்டுமா

இன்றே வாங்கிப் பாவியுங்கள்

பேபி சோப்

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இது ஆளாளுக்கு விளம்பரம் போடுறியள்.....

என்ர பங்கிற்க்கு இதோ...

ஊத்தை போகப் போடுங்கள்...மில்க்வைற்..

சுத்தமானது..சுகாதாரமானது...

நாட்டுச்சரக்கு....

உள்ளூர் தாயரிப்பை வாங்கி ஊக்கப் படுத்துங்கள்...

வெளியூர்க்காறியின் மேனி பளபளப்புக்கு மயங்கி நோயை வாங்கிவிடாதீர்கள்.... :icon_idea: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஊரிலே எப்பவுமே நான், அண்ணா, அப்பா லவ் போய். அம்மா, தம்பி லக்ஸ். இங்கு வந்ததுக்கு பிறகு சோப் தொடுவதே இல்லை. காரணம் தோல் சரியாக வறண்டு விடும். குறிப்பாக அவுஸ் போல காஞ்சு வறண்ட நாடுகளில் தோல் வெள்ளையாகி பார்க்கவே அரியண்டமாக இருக்கும். நான் bath lotions மட்டுமே பாவிப்பேன். குறிப்பாக Palmolive தயாரிப்புக்கள் பிடிக்கும். அதிலும் Moisturising butter milk வகையே பிடித்தது.

பொதுவாக மேற்கத்தேய நாடுகளில் உள்ள நீரில் உள்ள குளோரின் அளவு 0.5 - 1 mg/l ஆகும் . இந்த அளவு குளோரினால் அமிலம் உண்டாகி அது சவர்கரத்துடன் தக்கம்டைந்து உருவாகும் கொழுப்பமிலம் (RCOOH ) சவர்கரத்தின் நுரைக்கும் தன்மையை பாதிக்க போதுமானதாக இருக்காது.

மென் நீரில் சவர்காரம் போட்ட பின் வழுவழுப்பாக இருப்பதற்கு பிரதான காரணங்கள்

1. மென் நீரில் சவர்காரம் அதிகம் கரைவதால், அதை கழுவி அகற்ற அதிக நீர் தேவைப்படும்

2. மென் நீரின் மேற்பரப்பு இழுவிசை (surface tension) வன் நீரிலும் வேறுபடுவதால் அது உடலை ஈரமாகும் தன்மையும் வேறுபடுகிறது. இது உடல் வழுவழுப்பாக இருப்பது போல் உணர செய்கிறது.

3. மென் நீரின் சவர்கார மூலக்கூறுகளுடன் சேர்ந்து அவற்றை நீக்க்கும் ஆற்றல் குறைகிறது.

மழை நீரில் சவர்காரம் போட்டு பார்த்தாலும் இதே உடல் வழுவழுப்பாக இருப்பது போலும், சவர்க்காரம் கழுவ கழுவ போகாதது போல இருப்பதற்கும் இதுவே காரணம். மழை நீருக்கு யாரும் குளோரின் சேர்ப்பதில்லை.

http://www.who.int/w...wq/chlorine.pdf

மேலும் ஒரு முக்கிய விடயம் எல்லா மேலைத்தேய நாடுகளிலும் வன் நீரை மென் நீராக்கி விநியோகிப்பதில்லை.

நிலக்கீழ் நீரை விநியோக்கிக்கும் பொது வன் நீரை அப்படியே விநியோக்கிக்கும் வழக்கம் இருக்கிறது.

உதரணத்துக்கு ஐக்கிய இராச்சியத்தில் 2 % க்கு குறைவான நீரே மென் நீராக்கப்பட்டு விநியோகிக்க படுகிறது.

http://www.anglianwa...6-3-09_12PP.pdf

குளிரான நாடுகளில் வியர்வை வெளியேறுவது குறைவு, காற்று ஈரப்பதம் குறைந்தது. உடலால் தொலை உலர்தலில் இருந்து போதுமான அளவில் பாதுகாக்க முடிவதில்லை. சாதாரண சவர்க்காரம் உடலில் பாதுகாப்பு படையாக இருக்கும் எண்ணெயை நீக்குவதால் தோ ல் உலர்வது அதிகம். எனவே தோ லை ஈரலிப்பாக வைத்திருக்க கூ டிய சவர்கார வகையை வாங்கி பாவிப்பது நல்லது.

Edited by KULAKADDAN

கடினமான நீரில் சவர்க்காரம் கரையும் போது அதிலுள்ள இரசாயனப் பொருட்கள், நீரில் உள்ள கல்சியம், மக்னீசியம் அயன்களோடு சேர்ந்து உருவாக்கும் scum என்பது சவர்க்காரத்தின் உபயோகத்தை குறைக்கும்.

கல்சியம் மற்றும் மக்னீசியம் போன்றன உருவாக்கும் இரசாயனப்பொருட்கள் நீரில் இலகுவில் கரையாது.

மென் நீரில் சவர்க்காரம் இலகுவாக சேர்ந்து பயனை கொடுக்கும். மென் நீரில் தான் நுரை அதிகம் இருப்பதோடு, சவர்க்காரத்தை இலகுவாக உடலில் இருந்து கழுவமுடியாமல் இருக்கும்.

இதைதான் S.S.C யில் சவர்க்காரம் செய்வது எப்படி என்று சோடாத்தூளையும், தேங்காய் எண்ணையும் மதுசார விளக்கில் வைத்து சுடாக்கிவிட்டு எங்கள் ரசாயன வாத்தியார் சொன்ன மாதிரி இருக்கு. அதாவது கிணற்று தண்ணீருக்கு மில்க்வைட் போன்ற கடின சோப்புகளுக்கும் பைப் தண்ணீருக்கு டவ், கெமி போன்ற மென்மையான சோப்புகளயும் பாவிக்க வேண்டும். வியர்வை அதிகம் வெளிவரும் ஸ்ம்மர் காலத்தில் ஐரிஸ் ஸ்பிரிங்கை பாவிக்கலாம் என்று தான் இங்கே கேள்வி பட்டிருக்கிறேன்.

மில்க்வைட் பாவித்து சாரம் தோய்த்தபின் புறங்கை வெள்ளையாகிப்போயிருக்கும். இது வன்னீரில் உள்ள கல்சியத்தை சவர்க்காரத்தில் உள்ள சோடியம் வீழ்படிய செய்வதினால் ஏற்படுவது என்று கேள்வி பட்டிருக்கிறேன். தோலை மூடி ஏற்படும் இந்த கல்சியம் படிவு சருமத்தின் வியர்வைத்துளைகளை அடைத்து வியர்வையை தடுத்து வியாதிகளை உண்டாகும் என்பதும் அங்கே கேள்விபட்ட செய்திகள்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

சுத்திகரிக்கப்படும்.. நீரில் உள்ள குளோரினின் அளவு.. நீரின் இயல்பை மாற்றி அமைக்கும்..! அது சோப் நுரைதலில் தாக்கத்தை உண்டு பண்ணுவது அவதானிக்கப்பட்டே உள்ளது. அதற்கு குளோரினின் நீருடனான.. அமில இயல்பும் ஒரு காரணம்..!

மேலும்.. 0.5 - 1 மில்லிகிராம்/லீற்றர் குளோரின் நீரின் இயல்பை மாற்றி அமைத்து சோப் நுரைத்தலில் தாக்கத்தை உண்டு பண்ணாது என்று சொல்லவும் முடியாது..! இதற்கான சரியான விளக்கங்கள் தேவைப்படுகின்றன..!

மேலும்..

UK இல் நிலத்தடி.. உள்ளபடிக்கு.. வன்னீர் அப்படியே விநியோகிக்கப்படுவதில்லை. பிராந்தியத்திற்கு ஏற்ப வன்னீரின் வன்மைத் தன்மை அறியப்பட்டு அதற்குரிய water treatment செய்யப்பட்டே குழாய் வழி நீர் விநியோகம் செய்யப்படுகிறது..!

Is there a standard for the hardness of drinking water?

No maximum standard, but where water companies soften water before they put it into the supply, there is a minimum value for total hardness that all the softened supplies meet.

http://www.deevalleywater.co.uk/article.php?id=81

நீரின் viscosity... foam (நுரை - வளி நீரில் சிறைபட்டு..உருவாவது) தோன்றுவதில் பங்களிக்கிறது.

கூடிய அளவு மென்னீரான மழை நீரில் சோப் அதிகம்..கரையும் ஆனால்... நுரை தருவதில்லை. சோப் கரைதலுக்கும் நுரைதலுக்கும் இடையில் வேறுபாடுண்டு.

சோப் நுரைத்தலையே மக்கள் அதிகம் விரும்புகின்றனர். சோப் போட்டு தோலின் ஈரலிப்பை.. எண்ணொய் தன்மையை அகற்றி.. உலர வைச்சு.. குளிப்பதிலும்.. foam bath.. சருமத்தின் ஈரலிப்புக்கு நல்லது..!

ஊரில் குளோரின் ஏற்றப்பட்ட பைப் தண்ணியை விட கிணற்றுத் தண்ணியில் சோப் அதிகம் நுரைக்கும்..!

.

"பாடி" யில் நாற்றமா...?

அங்கங்கே கடி சொறியா ..?

கறுப்பா, சிவப்பா, பொது நிறமா.. ?

டோண்டு ஒறி...

வாங்கிடுவீர், பூசிடுவீர், கம கமத்திடுவீர்..

சந்தன சோப் :D

அன்றும், இன்றும், என்றும்...

"பாடி" வாசம் ஆளைத்தூக்கும்..

புத்துணர்வு புல்லரிக்க வைக்கும்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா..என்னப்பா இது..? வாங்கோ..வாங்கோ எண்டு கூவி அழைக்கிறீர்கள்..? கல்லாவில இருந்து கொண்டே எழுதினியள்...? :lol:

இப்படியாச்சும் ஓசியிலை என்ரை கடைக்கு விளம்பரம் குடுப்பம் என்றால் விடமாட்டியள் போல.. :unsure::D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மென்னீரு.. சுடுநீரு... கண்ணீரு .. தண்ணீரு.. அடபோங்கப்பா..

எல்லா தண்ணீரிலும் நுரைக்கிற சோப்பு இதான்... அனைவரும் பாவித்து பயன் அடையுங்கோ..

Rin%20250%20gm-500x500.jpg

  • கருத்துக்கள உறவுகள்

Rin%20250%20gm-500x500.jpg

என்னப்பா புரட்ச்சி தள்ளுபடியைப் பார்த்தால் வீட்டிலை ஆத்துக்காறிண்ட பட்ஜெட்போல.... :D

இப்படியாச்சும் ஓசியிலை என்ரை கடைக்கு விளம்பரம் குடுப்பம் என்றால் விடமாட்டியள் போல.. :unsure::D:icon_idea:

சரி சரி கதையோடை கதையாய் அந்த சோப்புப் பார்சலில ஒண்டை அனுப்பி விடுங்கோ.... :lol:

உடலுக்கு.... எந்த சோப் போட்டு, குளிக்கலாம்? :icon_mrgreen:

20110802-110318.jpg

எந்தக் குளியல் சோப் நல்லது ?

date.png 8:40 PM user.png மானிடன்

toilet-soap-250x250.jpg

எவ்வளவு சிக்கலான விசயங்களுக்கும் தீர்வு கண்டுபிடித்துவிடும் நமக்கு இந்தக் கேள்விக்கு விடை தெரிவதில்லை . அந்த அளவிற்கு வணிக நிறுவனங்களால் மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளோம் . ஒருத்தன் என்னடனா " எங்கள் சோப் உங்களை வெள்ளையாக்கும் " என்கிறான் . இன்னொருத்தன் " எங்கள் சோப்பை 99.9 % மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள் " என்கிறான் ( அப்ப 0.1% மருத்துவர்கள் எந்த சோப்பைப் பரிந்துரைப்பார்கள் ?) . இப்படிப் பலவிதமாக , பலவிதமான சோப்புகளை வாங்கச்சொல்லி நம்மை இம்சை செய்கிறார்கள் . உண்மையில் எது நல்ல சோப் ?

TOILET SOAP :

முதலில் நீங்கள் பயன்படுத்துவது சோப் தானா என்று பாருங்கள் . ஆமாம் , சோப்பின் மேலுறையில் " Toilet Soap "என்று போட்டிருக்க வேண்டும் . நிறைய சோப்களில் " Bathing Bar " என்றோ அல்லது வேறு பெயரோ இருக்கும் . அவை நல்ல சோப் அல்ல . Bathing Bar என்று போட்டிருக்கும் சோப் தான் அதிகம் விளம்பரப் படுத்தப்படுகிறது .

TFM :

இரண்டாவதாக நாம் பார்க்க வேண்டியது TFM % அதாவது "Total Fatty Matter " . எல்லா Toilet சோப்களிலும் TFM % இருக்கும் . Bathing Bar என்று போட்டிருக்கும் சோப்களில் TFM % இருந்தாலும் இருக்கும் , இல்லாமலும் இருக்கும் . TFM % அதிகமாக இருக்கும் சோப் தான் நமது தோலுக்கு நல்லது . TFM % யை வைத்து சோப் மூன்று வகையாக பிரிக்கப் படுகிறது . TFM % , 75 முதல் 80 வரை இருந்தால் அது Grade 1 சோப் என்று சோப்பின் மேலுறையில் குறிப்பிடப்படுகிறது . இந்த வகையான சோப்கள் எல்லோருக்கும் நல்லது . TFM % , 70 முதல் 75 வரை இருந்தால் Grade 2 எனவும் 65 முதல் 70 வரை இருந்தால் Grade 2 எனவும் குறிப்பிடப்படுகிறது . இந்த வகையான சோப்கள் எல்லோருக்கும் பொருந்தாது . ஒரு சிலருக்கு பொருந்தும் ஒரு சிலருக்கு பொருந்தாது .

Grade 2 மற்றும் Grade 3 சோப்களே அதிகம் விளம்பரப் படுத்தப்படுகின்றன . Grade 1 சோப் அதிகம் விளம்பரப் படுத்தப்படுவதில்லை . அதனால், சோப் வாங்கும் போது இந்த இரண்டு விசயங்களையும் ( Toilet Soap , TFM %) கவனத்தில் கொள்ளவும் .

துணி துவைக்கும் சோப் :

துணி துவைக்கும் சோப்பை பொருத்தவரை எந்த சோப் துணி துவைக்கும் கையை அரிக்காமல் இருக்கிறதோ அதுவே நல்ல சோப் . உப்புத் தண்ணீரிலும் அழுக்கை நீக்க வேண்டும் .

சோப்பின் வரலாறு :

கி .மு .2800 ஆம் வருடத்திலேயே சோப் போன்ற பொருள் பாபிலோனியாவில் பயன்படுத்தப்பட்டுள்ளது . ஆனால் , அது குளியலுக்குப் பயன்படுத்தப்படவில்லை . கி .மு 1550 இல் எகிப்தில் சோப் போன்ற பொருளை தயாரித்து தினமும் குளியலுக்கு பயன்படுத்தியுள்ளனர் . இப்படியாக தொடர்ந்த சோப்பின் பயணம் வேகம் பிடித்தது 19 மற்றும் 20 நூற்றாண்டுகளில் தான் . முதலில் கைகளால் தயாரிக்கப்பட்ட சோப் பிறகு இயந்திரங்களால் தயாரிக்கப்பட்டது .

சோப் என்பது :

சோப் என்பது ஒரு வகை உப்பு தான் . கொழுப்பும் (Fat) , காரமும் ( Alkaline ) சேர்ந்த கலவையாகும் . சோப்புக்கான சூத்திரம் ,

Fatty acid (oil) + Base (lye) = "A Salt" (soap)

கொழுப்பு + காரம் = உப்பு (சோப் )

சோப் தயாரிப்பதற்கு தாவர மற்றும் விலங்கு கொழுப்புகள் பயன்படுத்தப்படுகின்றன .

சோப்பின் வணிக சந்தை :

இன்று சோப்பின் வணிக சந்தை மிகப்பெரியது . வணிக நிறுவங்களுக்கு, சோப் விற்பனை மூலம் கோடிக்கணக்கான ரூபாய் இலாபம் கிடைக்கிறது . சந்தையில் பல்வேறு விதமான நிறுவங்களின் பல்வேறு விதமான சோப்கள் ( Ayurvedic Soap , Antiseptic Soap ,etc) கிடைக்கின்றன . எப்படிப் பார்த்தாலும் சோப்பும் ஒரு வேதியல் பொருள் தானே , இயற்கையானது அல்லவே . பாதிப்புகள் குறைவான சோப் குழந்தைகள் சோப் ( Baby Soap ) தான் . ஒரு சிலர் இதையும் பயன்படுத்துகின்றனர் .African anti-ageing beauty soap என்று ஒன்று உள்ளதாம் . இதைப் பயன்படுத்தினால் வயதாவதைக் குறைக்குமாம் . என்ன கொடுமை இது ? நாம் எதற்காக கவலைப்படுகிறோமோ அது சார்ந்த பொருள் (முக அழகு முதல் மூட்டுவலி வரை ) நம் தலையில் கட்டப்படுகிறது .

சோப் பற்றியும் ஒரு கட்டுரையா ?!

  • 2 years later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

visual_historie_2008.jpg

 

நான்..... இப்போ பாவிப்பது, "டுஷ் டஸ்"
ஊத்தையும்.... அந்த மாதிரி போகுது. சருமமும் பள பளப்பாக... இருக்கின்றது. :D

  • கருத்துக்கள உறவுகள்

mySOq0UuXYc81B-TAFjrQ6g.jpg

 

 

தண்ணீருடன் தும்பும் சேர்ந்தால் அழுக்கும் போகும், உங்களின் கருமம் பிடித்த சருமம் எல்லாம் இயற்கையான நிறத்துடன்  பள பள வென மின்னும். பக்க விளைவுகள் சிறிதும் கிடையாது , நீரில் சோப் , சம்பூ  மாதிரி கரைந்து போகாது... ஆதலினால் பாவித்திடுவீர் ...! :lol::)

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவையளுக்கு சோப்பு போடாமல் சரி.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

08-1407501996-11copy.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.