Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அருணகிரி வாத்தியார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேவகியையும் கணவரையும் அவர்களது இரண்டு பிள்ளைகளோடு மற்றையவர்களையும் சுமந்தபடி சிட்னியிலிருந்து சிங்கப்பூர் விமானசேவை சிங்கப்பூரை நோக்கி கிழம்புகின்றது சிங்கப்பூரில் இரண்டு நாட்கள் தங்கி அங்கு சுற்றி பார்த்து விட்டு பரிசு பொருட்கள் சிலவற்றை அங்கு வாங்கிக் கொண்டு சிறீலங்கா செல்வதுதான் அவர்களது திட்டம். தேவகி மட்டுமல்ல அவளது கணவரும் 23 ஆண்டுகளிற்கு பிறகு முதல் முதலாக ஊருக்கு போகிறார்கள். இந்த 23 வருடங்களில் என்னவெல்லாமோ நடந்துவிட்டது ஊரில் தேவகியின் தாயை தவிர அவளின் சொந்தமென்று யாரும் இல்லை அவளது கணவனின் குடும்பம் மொத்தமாகவே அவுஸ்ரேலியாவில் குடியேறி விட்டிருந்தனர். தேவகியின் தாய் பல தரம் அவுஸ்ரேலியா வந்து போனாலும் தன்ரை உயிர் மனிசன் கட்டின வீட்டிலை என்ரை ஊரிலைதான் போகவேணும் எண்டு அடம் பிடித்து ஊரிலையே தங்கி விட்டார்

தேவகியின் தவிப்பெல்லாம் 23 வருடங்களின் பின்னர் முதன் முதலாய் ஊரை பாரக்க போகிறாள் என்பதை விட அருணகிரி வாத்தியாரை பார்க்கப்போறாள் என்பதுதான். அவ்வப்போது அவர் பற்றிய செய்திகள் மட்டும் தொலைபேசியில் அம்மா சொல்லுவார்.

வாத்தியாரை இந்தியனாமி கொண்டு போய் சப்பல் அடி. ஒரு கிழைமைக்கு பிறகுதான் விட்டவங்களாம்.

வாத்தியார் ஒரு பெடியனை தத்தெடுத்திருக்கிறாராம்.

அவர்தான் இப்ப அந்த பள்ளிக்கூடத்திலை பிரின்சிப்பலாம்.

அவர் பிறகு கலியாணமே கட்டேல்லை அப்பிடியேதான் இருக்கிறார்.

ஊர் முழுக்க இடம்பெயர்ந்து போன நேரம் வாத்தியார் தான் ஊரை விட்டு வரமாட்டன் எண்டு எலிம்கௌஸ் சிறுவர் இல்லத்திலை போய் பாதிரி மாரோடை இருந்திட்டார்.

வாத்தியார் பென்சன் எடுத்திட்டார் வீட்டிலை இப்ப பிள்ளையளிற்கு ரியூசன் குடுக்கிறார்.

இப்படியான செய்திகளிற்கிடையில் பலதடைவை அவருடன் தொலைபேசியில் கதைக்க மனது எத்தனித்தாலும் தவிர்த்தே வந்திருந்தாள். இப்ப வாத்தியார் எப்பிடியிருப்பார்.

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

எப்பொழுதும் வெள்ளை பெல்பொட்டம் வெள்ளை சேட் அதுவும் உந்த யானைக்கால் நீள காற்சட்டை பிரபல்யமான வருடங்கள். தமிழ் சினிமாவிலை. சுதாகர். விஜயன். கமல் .ரஜனி. பிறகு மோகன். எல்லாரும் அதே ஸ்ரலிலை வந்த காலம். அருணகிரி வாத்தியாரும் அதே ஸ்ரைல்தான். பெல்பொட்டம் நிலம் கூட்டும். காவடி எடுக்கிறவைக்கு முதுகிலை செடில் குத்தினமாதிரி பின்பக்கம் பிடிச்சு தைச்சு இறுக்கமான சேட்டின்ரை கொலர் தோழையும் தாண்டி முழங்கையை தொடுகின்ற நீளம். பள்ளிக்கூட வாசல்லை ஒரு தடியோடை நிப்பார். ஏனெண்டால் அவரின்ரை இரண்டாவது வேலை டிசிப்பிளின் வாத்தி(ஒழுக்க கவனிப்பு) ஆனால் அவரின்ரை முதலாவது தொழில் தமிழ் வாத்தி.

சீருடை சப்பாத்து தலை இழுப்பு ஒழுங்கா இருக்கவேணும் அது கலவன் பாடசாலை எண்டபடியால் பெடியள் மட்டுமில்லை பெட்டையளும் இவரிட்டை இருந்து தப்ப ஏலாது .

டேய் இஞ்சை வா தலையை என்ன சிலுப்பி விட்டிருக்கிறாய்

சேர் சீப்பை காணேல்லை அவசரத்திலை வந்திட்டன்

இந்தா சீப்பு ஒழுங்கா தலையை இழு.

டேய் ஏன் கொலரை சப்பி வைச்சிருக்கிறாய் வீட்டிலை சாப்பாடு தாறேல்லையோ??

டேய் இஞ்சை வா உது என்ன கலர் பட்டின்

சேர் சேட்டு வெள்ளைதானே ??

அது எனக்கும் தெரியும் பட்டினும் வெள்ளையா இருக்கவேணும் போய் மாத்திக்கொண்டுவா

பிள்ளை உது என்ன சொக்ஸ் போடாமல் சப்பாத்து போட்டு கொண்டு வந்திருக்கிறாய் ஓடிப்போய் சொக்சை போட்டுக்கொண்டுவா.

முகுந்தன் உதென்ன சப்பாத்திலை ஓட்டை

சேர் பெரு விரல்லை காயம் அதுதான் ஓட்டையை போட்டு விரலை வெளியிலை விட்டிருக்கிறன்.

சரி சரி ஓடு

அப்பொழுது தேவகி வருகிறாள்....(இந்த இடத்திலை தேவகியை பற்றி ஒரு விவரணத்தையும் (விபரம்) சொல்லிட்டு பிறகு தொடருறன். தேவகி பத்தாம் வகுப்பு படிக்கிறாள். போன வருசம் வயதுக்கு வந்ததிலை நாட்டுக்கோழி முட்டை நல்லெண்ணையையும் பருக்கி முட்டைமா உழுத்தம்மா எண்டு ஊட்டி வளத்ததாலை அவளின் அங்கங்கள் அனைத்துமே அவள் வயதை மீறியதாகவே வளர்ந்திருந்தது மிகுதியை உங்கள் கற்பனைகளிலேயே விட்டு விட்டு தெடர்கிறேன்.)

தேவகி ஏன் இண்டைக்கு கலர் சட்டை

சேர் எனக்கு இண்டைக்கு பிறந்தநாள் இந்தாங்கோ சொக்லேற் எடுங்கோ

சரி.. ஆனால் உம்மடை வீடு பக்கத்திலைதானே இன்ரேவலுக்கு போய் யூனி போமை போட்டுக்கொண்டு வாரும்.

அடிக்கடி தன் கொலரிற்கு பின்னால் இருக்கும் கைலேஞ்சியை எடுத்து வியர்வையை துடைத்து மீண்டும் மடித்து கொலரிற்கும் கழுத்திற்கும் இடையில் வைத்துவிட்டு காலைநேரம் அவரது வழைமையான வேலை இதுததான்.

உண்மையிலையே இவர் கனக்க வெள்ளை உடுப்பு வைச்சிருக்கிறாரா இல்லை ஒண்டையேதான் ஒவ்வொரு நாளும் தோச்சு போட்டுக்கொண்ட வாறாரா என்பது அந்த பள்ளிக்கூடத்திலை எல்லாருக்குமே கேள்விக்குறிதான். ஆனால் சில நேரம் சிவப்பு ஜட்டியை போட்டு தொலைச்சிடுவார். அது வெள்ளையையும் தாண்டி வெளியே தெரியேக்கை பள்ளிக்கூட பிள்ளையள் மட்டுமில்லை மற்ற ரீச்சர் வாத்திமாரும் கொடுப்புக்கை சிரிப்பினம்.ஆனால் ஆளை பாத்தால் நடிகர் சுதாகர் மாதிரித்தான் இருப்பார். சுதாகரின்ரை அண்ணன் தம்பி எண்டே சொல்லாம்.

ஓ எல் (சாதாரணம்) ஏ எல் (உயர்தரம்) படிச்ச மாணவியள் மட்டுமில்லை அங்கை படிப்பிச்ச சில ரீச்சர் மாருக்கும் அவரிலை ஒரு கண் இருந்தது எண்டது உண்மை. அது மட்டுமில்லை அந்த வருசம்தான் பட்டதாரி படிப்பு முடிச்சு வந்திருந்த விஞ்ஞான ரீச்சருக்கும் இவருக்கும் கிசு கிசு வேறை பள்ளிக்கூடத்திலை பரவியிருந்தது.எண்பதுகளின்ரை ஆரம்பம் ஊருக்கொரு இயக்ககங்களும் ஆரம்பித்த நேரம். ஒவ்வொரு இயக்கங்களும் போராட்ட விழிப்புணர்வு ஆட்சேர்ப்பு என்று பள்ளிக்கூடங்களை குறிவைத்து கூட்டங்கள் நடத்தத் தொடங்கியிருந்தனர். ஆனால் அருணகிரி வாத்தியார் அந்த விசயத்திலை கண்டிப்பாய் சொல்லிட்டார் .எந்த வளமும் இல்லாத யாழ்ப்பாணத்துக்கு கல்வி மட்டும்தான் ஆயுதம்.

ஆயுதப்போராட்டம் எல்லாம் ஒண்டுக்கும் உதவாது எந்தபெரிய இயக்கமெண்டாலும் பள்ளிக்கூட நேரங்களிலை அந்தப் பக்கம் வரக்கூடாது கூட்டமும் வைக்கிறதுக்கு அனுமதியில்லை. வேணுமெண்டால் உங்கடை தொடர்புகளை வெளியிலை வைச்சுக்கொள்ளுங்கோ கூட்டங்கள் போட்டு பிள்ளையளின்ரை படிப்பை கெடுக்கக்கூடாது. எண்டது மட்டுமில்லை எந்த இயக்கத்தின்ரை பிரசுரமோ புத்தகங்களோ பள்ளிக்கூடத்துக்குள்ளை கொண்டுவரவும் கூடாது எண்டு படிக்கிறவையளிட்டையும் கண்டிப்பாய் சொல்லிவைச்சது மட்டுமில்லை இயக்கங்களோடை தொடர்பு இருக்கிறவையின்ரை புத்தகங்களை வாங்கி பாத்துதான் உள்ளை விடுவார். இதாலை எல்லா இயக்க காரருக்கும் அவரிலை கடுப்பு ஆனால். அனேகமான பெடியள் அவரிட்டை படிச்ச பெடியள் எண்டதாலையும் அவருக்கு ஊருக்குள்ளை இருந்த மரியாதையாலும் அவரின்ரை ஆலோசனை அறுவைகள் தாங்கமுடியாமலும்.பேசாமல் இருந்திட்டினம்.அதே நேரம் அவர் தமிழ் படிப்பிக்க புத்தகத்தை தூக்கினால் சிலேடை எதுகை மோனை என்று புகுந்து விழையாடுவார். அதனாலேயே அவரது வகுப்பு அலுப்படிக்காமல் எப்பவும் கலகலப்பாய் இருக்கும். அன்று தேவகியின் வகுப்பில் வாத்தியார் வந்து ராமாயண புத்தகத்தை விரித்தவர் ..

பிள்ளையள் மிதிலையை நகரை விஸ்வாமித்திரர் தசரத குமாரர்களுடன் வந்தடைகின்றார். ஜனகர் விஸ்வாமித்திரரையும், அவருடன் வந்த தசரத குமாரர்களையும் அன்புடன் வரவேற்றார். தன் புத்ரிகள் சீதைக்கும், ஊர்மிளாவுக்கும் திருமணம் செய்ய வேண்டிய மாபெரும் கடமை தம்முன் இருப்பதை விஸ்வாமித்திரரிடம் தெரிவித்தார். .....

தேவகியின் கையிலிருந்த ராமாயண புத்தகத்தில் எழுத்துக்கள் மறைகின்றன. ..... மாளிகையின் மாடத்தில் தேவகி தோழியள் சூழ நிற்கிறாள்.விஸ்வாமித்திரருடன் உள்ளே வந்த அருணகிரி வாத்தியாரின் அந்த அழகு மேனியை அங்கம் அங்கமாக அவள் விழிகள் அளவெடுக்கின்றது. அளவெடுக்கும் அந்த ஒருசோடி அழகு விழிகளை அருணகிரி வாத்தியாரும் சந்திக்கத் தவறவில்லை. அவளும் நோக்கினாள் அவனும் நோக்கினான். அவள் நீழ விழிகள்வெட்கத்துடன் தரை நோக்கி தாழ்ந்து தவழ்ந்து மீண்டும் மேலெழுந்து அவன் கண்களுடன் கலந்து கொள்கின்றது. ஆண்டவா நான் கலப்பதென்றால் இவனுடன்தான் கலக்கவேண்டும் இல்லையேல் காலம் முழுதும் கன்னியாகவே கழிக்கவேண்டும் கலங்கிய கண்களை மூடுகிறாள் கண்ணீர்த்துளியொன்று கழுத்துவழி வழிந்தோடி மார்பின் மேற்பரப்பில் மாயமாகிப் போகின்றது உஸ்ணமூச்சுகாற்று உடலின் சமநிலையை சரியாக்முடியாமல் தோழியின் தோழில் சாய்ந்து கொள்கிறாள்.

மாளிகையின் மண்டபத்து மத்தியில் சிவதனுசு வில் சாத்திவைக்கப்பட்டிருந்தது அதற்கு முன்னால் அனைத்து ஆண்மக்களும் வரிசைகட்டி நிற்கிறார்கள். அனைவரையும் ஒருதடைவை தேவகி ஆதங்கத்துடன் நோக்குகிறாள். சந்தியில் சைக்கிள் கடை வைத்திருக்கும் சந்திரன் சங்கக்கடை சேல்ஸ்மேன் மோகன். ஏ.எல். வகுப்பில் படிக்கும் ரதீசன். அவளிற்கு ஏற்கனவே கடிதம் குடுத்த அவளது வகுப்பு சுபேஸ் அடுத்தாக அருணகிரி வாத்தியார். சந்தி சைக்கிள் கடை சந்திரன் முதலாவதாக வந்து வில்லை தூக்கி நிறுத்துகிறான். அவள் மனதோ கடவுளே கடவுளே என படபடக்கின்றது. அதற்கு மேல் அவனால் முடியவில்லை அடுத்தடுத்தடுத்தாக வந்தவர்களால் வில்லை அசைக்கவே முடியவில்லை இப்பொழுது அருணகிரி வாத்தியாரின் முறை அவர் வருகிறார். அனாசயமாக வில்லை தூக்கி நிறுத்துகிறார். அவர் அம்பறாந் துணியிலிருந்து ஒரு அம்பை நாணேற்றி இழுக்கிறார் . அவளின் மேல் உதடுகளைப்போலவிருந்த வில் அவளின் புருவங்களைப்போல வழைகின்றது மேலும் இழுக்கிறார் அவள் கண்களை மூடிக்கொண்கிறாள் வில் உடைந்த சத்தம் அவள் காதுகளில் விழுகின்றது .தோழியொருத்தி அவளது கைகளில் மலர் மாலை ஒன்றை திணிக்கிறாள். பாதி திறந்த விழிகளுடன் அருணகிரி வாத்தியாரை நோக்கி நடக்கிறாள் தேவர்கள் பூ மாரி பொழிய அந்தணர்கள் வேதங்கள் ஓத அவள் பாதங்களோ பின்ன நடக்கமுடியாமல் தவித்தபொழுது யாரோ எறிந்த தாமரைப் பூவொன்று அவள் முகத்தில் மோதி விழுகின்றது திடுக்கிட்டு நிமிர்கிறாள் தேவகி. அவள் மேசையில் வாத்தியார் எறிந்த டஸ்ரர் கிடக்கின்றது. கன்னத்தில் இருந்த சோக்கட்டி தூசை துடைத்துக் கொள்கிறாள்.

என்ன பகல்லையே கனவோ நான் கேட்ட கேள்வி விழங்கினதோ??

வகுப்பில் சிரிப்பொலி எழுந்து அடங்குகின்றது

தட்டுத்தடுமாறிய தேவகி ..இல்லைசேர்..என்ன கேள்வி??

வில்லை முதலில் தூக்கியது யார்??

அது வந்து..வந்து சந்திக்கடை சந்திரன் சேர்.

மீண்டும் வகுப்பில் சிரிப்பொலி.

வகுப்பு முடிஞ்சதும் ஸ்ராவ் றூமிற்கு (ஒய்வு அறை) வாரும் .

மணியடித்ததும் பாடத்தை முடித்த வாத்தியார் தேவகியை பார்த்துவிட்டு ஒய்வு அறை நோக்கி நடக்கிறார்.

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

ஓய்வு அறையில் அமர்ந்திருந்த அருணகிரி வாத்தியாரிற்கு முன்னால் தேவகி குனிந்த தலையுடன் இடக்கையில் இருந்த கைலேஞ்சியை வலக்கை விரல்களால் முறுக்கியபடி நிற்கின்றாள்.

சொல்லும் உமக்கு என்ன நடந்தது கொஞ்ச நாளாய் உம்மடை போக்கு சரியில்லை என்ன பிரச்சனையெண்டாலும் சொல்லலாம்.

அப்பிடியொண்டும் இல்லை சேர்.

நல்லா படிக்கிற பிள்ளை நீர் படிப்பிலை கவனத்தை வைக்கவேணும் நேராவே கேக்கிறன் யாரையாவது ?? காதல் கீதல் எண்டு ஏதாவது??

எந்த பதிலும் சொல்லாமல் குனிந்தபடியே நின்றவளிடம்... நான் நினைச்சனான் யாரந்த பெடியன்.??

அது வந்து..அவள் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்தது.

இந்த வயது உப்பிடித்தான் ஏதாவது குழப்பும் அதாலை மனசை அலையவிடாமல் படிப்பிலை கவனத்தை செலுத்தும் சரிதானே ஏனெண்டால் எந்த வளமும் இல்லாத எங்கடை மண்ணுக்கு கல்விதான் வளம்.அதுதான் எங்கடை ஆயுதம். அதுவுமில்லாட்டி நாங்கள் அழிஞசு போவம். என்று ஒரு குட்டி பிரசங்கத்தை நடத்தி முடித்தவர். சரி யாரந்த பெடியன் எண்டு சொல்லும் நானும் அவனை கொஞ்சம் கண்டிச்சு வைக்கிறன் என்றதும். தேவகி வாத்தியாரை நோக்கி கையை காட்டி விட்டு அங்கிருந்து ஓடிவிடுகிறாள்.அதிர்ச்சிடைந்த வாத்தியரும் தன்னை சுதாகரித்தக்கொண்டு மீண்டும் கதைக்க முற்பட்டபொழுது தேவகி அங்கிருக்கவில்லை

ம்....ரும்......டரும்...........தொடரும்................................

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

இவ்ளோ பெரிய உலகத்தில, தேவகிக்குச் சிட்னி தானா, கிடைச்சுது சாத்திரியார்?

ஆனால் சில நேரம் சிவப்பு ஜட்டியை போட்டு தொலைச்சிடுவார். அது வெள்ளையையும் தாண்டி வெளியே தெரியேக்கை

சாத்திரியாரின் முத்திரை, மேலே தெரிகின்றது!

தொடருங்கள், சாத்திரியார்!

டிஸ்கி: நீங்களோ அல்லது உங்கள் புல நாயோ சிட்னிப் பக்கம் தலைவைத்துப் படுத்தால், குவாரண்டைனில் (Quarantine) கால வரையரையின்றிப் போடும் படி, சுங்கத் தடுப்புப் பிரிவினரிடம், பூகோளத்தின் தென் பாதி, யாழ் கள உறவுகள், அன்பு வேண்டுகோள் விட்டிருக்கின்றோம்!

உங்கள் புல நாயின் நடவடிக்கைகள், அவுஸ்திரேலியாவின் நீண்ட கால நலனைப் பாதிக்கும் என்றும் நாங்களும், அவுஸ்திரேலிய அரசும் கருதுகின்றோம்! :D

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

நம்மட சுபேசும் தேவகிக்கு அந்தக் காலத்திலேயே லவ் லெட்டர் குடுத்திருக்கிறார் :lol:

நம்மட சுபேசும் தேவகிக்கு அந்தக் காலத்திலேயே லவ் லெட்டர் குடுத்திருக்கிறார் :lol:

என்னது சுபேஸ் உங்கடையா? :o:mellow::blink: சொல்லவே இல்லை!!!!! :lol::D:icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார் கலவன் பாடசாலையில் படித்தது குறைவு.

அங்கே இப்படிப் பல சம்பவங்கள் நடந்ததைக் கேள்விப்பட்டிருக்கின்றேன்.

உங்கள் எழுத்தில் வாசிப்பது ஒரு தனிச்சுவை

தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னது சுபேஸ் உங்கடையா? :o:mellow::blink: சொல்லவே இல்லை!!!!! :lol::D:icon_mrgreen:

ஓம் சுபேஸ் என்ட தம்பி தானே :D

  • கருத்துக்கள உறவுகள்

மாளிகையின் மண்டபத்து மத்தியில் சிவதனுசு வில் சாத்திவைக்கப்பட்டிருந்தது அதற்கு முன்னால் அனைத்து ஆண்மக்களும் வரிசைகட்டி நிற்கிறார்கள். அனைவரையும் ஒருதடைவை தேவகி ஆதங்கத்துடன் நோக்குகிறாள். சந்தியில் சைக்கிள் கடை வைத்திருக்கும் சந்திரன் சங்கக்கடை சேல்ஸ்மேன் மோகன். ஏ.எல். வகுப்பில் படிக்கும் ரதீசன். அவளிற்கு ஏற்கனவே கடிதம் குடுத்த அவளது வகுப்பு சுபேஸ் அடுத்தாக அருணகிரி வாத்தியார். சந்தி சைக்கிள் கடை சந்திரன் முதலாவதாக வந்து வில்லை தூக்கி நிறுத்துகிறான். அவள் மனதோ கடவுளே கடவுளே என படபடக்கின்றது. அதற்கு மேல் அவனால் முடியவில்லை அடுத்தடுத்தடுத்தாக வந்தவர்களால் வில்லை அசைக்கவே முடியவில்லை இப்பொழுது அருணகிரி வாத்தியாரின் முறை அவர் வருகிறார். அனாசயமாக வில்லை தூக்கி நிறுத்துகிறார். அவர் அம்பறாந் துணியிலிருந்து ஒரு அம்பை நாணேற்றி இழுக்கிறார் . அவளின் மேல் உதடுகளைப்போலவிருந்த வில் அவளின் புருவங்களைப்போல வழைகின்றது மேலும் இழுக்கிறார் அவள் கண்களை மூடிக்கொண்கிறாள் வில் உடைந்த சத்தம் அவள் காதுகளில் விழுகின்றது .தோழியொருத்தி அவளது கைகளில் மலர் மாலை ஒன்றை திணிக்கிறாள். பாதி திறந்த விழிகளுடன் அருணகிரி வாத்தியாரை நோக்கி நடக்கிறாள் தேவர்கள் பூ மாரி பொழிய அந்தணர்கள் வேதங்கள் ஓத அவள் பாதங்களோ பின்ன நடக்கமுடியாமல் தவித்தபொழுது யாரோ எறிந்த தாமரைப் பூவொன்று அவள் முகத்தில் மோதி விழுகின்றது திடுக்கிட்டு நிமிர்கிறாள் தேவகி. அவள் மேசையில் வாத்தியார் எறிந்த டஸ்ரர் கிடக்கின்றது. கன்னத்தில் இருந்த சோக்கட்டி தூசை துடைத்துக் கொள்கிறாள்.

வழமையான சாத்திரியாரின் நகைச்சுவை இழையோடும் எழுத்து வரிகள் இங்கும் தென்படுகிறது.தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்

தொடருங்கள் சாத்திரி, ஆர்வமாக உள்ளது ..............

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ் மேடைக்கு வரவும். அல்லது சிவப்பு உள்ளாடைக்கும் உங்களுக்கும் போட்டி வந்துவிடும். :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவ்ளோ பெரிய உலகத்தில, தேவகிக்குச் சிட்னி தானா, கிடைச்சுது சாத்திரியார்?

சாத்திரியாரின் முத்திரை, மேலே தெரிகின்றது!

தொடருங்கள், சாத்திரியார்!

டிஸ்கி: நீங்களோ அல்லது உங்கள் புல நாயோ சிட்னிப் பக்கம் தலைவைத்துப் படுத்தால், குவாரண்டைனில் (Quarantine) கால வரையரையின்றிப் போடும் படி, சுங்கத் தடுப்புப் பிரிவினரிடம், பூகோளத்தின் தென் பாதி, யாழ் கள உறவுகள், அன்பு வேண்டுகோள் விட்டிருக்கின்றோம்!

உங்கள் புல நாயின் நடவடிக்கைகள், அவுஸ்திரேலியாவின் நீண்ட கால நலனைப் பாதிக்கும் என்றும் நாங்களும், அவுஸ்திரேலிய அரசும் கருதுகின்றோம்! :D

புங்கையூரான் புலநாய் தான் அடுத்ததாய் லண்டனுக்கு போகப் போறதாய் அடம் பிடிக்கிது இப்பதான் குட்டி போட்டதாலை பத்திய சாப்பாடு குடுக்கிறன். :icon_mrgreen: கொஞ்நாளிலை லண்டன் அனுப்பிட்டு பிறகு அங்கையிருந்து அவுசிற்கு வரும்... :lol: அடுத்ததாக இந்தக் கதையில் வரும் அருணகிரி வாத்தியாரை மானிப்பாயும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ளவர்களும் நன்கு பழக்கமானவர்கள். இது உண்மை சம்பவத்தை தழுவிய கதை என்பதால் குறுங்கதையாக எழுதி முடிக்க இருந்த கதை தொடராக்கவேண்டி வந்து விட்டது.. ஆனால் இழுக்காமல் 3 அல்லது 4 பகுதியில் முடித்துவிடுவேன். கதையில் வரும் தேவகி பாத்திரம் அவுசிலைதான் இருக்கிறா ஆனால் எந்த இடம் எண்டு தெரியாது அதாலை சும்மா சிட்னி எண்டு போட்டுவிட்டன்..எண்டாலும் சிவப்பு ஜட்டியிலை என்ரை முத்திரை தெரியிது எண்டது எனக்கு வெக்கமாயிருக்கு.கி கி கி கி கி.................

Edited by sathiri

முதல் அருணகிரி வாயில வராத வார்த்தையளை சொன்னார் , திருப்புகழ் எண்டு பாடிக்கொண்டிருக்கிறம் . இப்ப இந்த அருணகிரி வாத்தியார் என்ன சொல்லுறார் எண்டு பாப்பம் . இந்தக் கதையில சாத்திரி ஒரு புதுப்பாணியைப் போட்டிருக்கிறார் . அதாவது புராணக் கதையையும் , நிஜமான கதையையும் சேர்த்து எழுதுவது இதில் சாத்திரி வெண்டிருக்கிறார் . சாத்திரியின்ரை கதையளை பாக்கேக்கை நான் எப்பிடி எழுதப்போறன் எண்டபயமும் இடைக்கிடை வருகுது . வாழ்த்துக்கள் சாத்திரி .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

.(இந்த இடத்திலை தேவகியை பற்றி ஒரு விவரணத்தையும் (விபரம்) சொல்லிட்டு பிறகு தொடருறன். தேவகி பத்தாம் வகுப்பு படிக்கிறாள். போன வருசம் வயதுக்கு வந்ததிலை நாட்டுக்கோழி முட்டை நல்லெண்ணையையும் பருக்கி முட்டைமா உழுத்தம்மா எண்டு ஊட்டி வளத்ததாலை அவளின் அங்கங்கள் அனைத்துமே அவள் வயதை மீறியதாகவே வளர்ந்திருந்தது மிகுதியை உங்கள் கற்பனைகளிலேயே விட்டு விட்டு தெதடர்கிறேன்.)

எனக்கொரு சந்தேகம்...யாராவது தீர்த்துவையுங்கப்பா...வெள்ளைகள் என்னத்தைக் கொடுத்து வளர்க்கிறார்கள்..?

அவளிற்கு ஏற்கனவே கடிதம் குடுத்த அவளது வகுப்பு சுபேஸ்

நம்மட சுபேசும் தேவகிக்கு அந்தக் காலத்திலேயே லவ் லெட்டர் குடுத்திருக்கிறார் :lol:

எண்டகுருவாயூரப்பா...அபச்சாரம் அபச்சாரம்.....தேவகி எனக்கு அக்காமாதிரி..... என் வயதென்ன தேவகி அக்காவின் வயதென்ன....நான் அம்மாவின் வயிற்றில் இருக்கும்போதே என் பெயரைக் கெடுக்க யாரோ செய்த சூழ்ச்சி இது.... :D

அதிர்ச்சிடைந்த வாத்தியரும் தன்னை சுதாகரித்தக்கொண்டு மீண்டும் கதைக்க முற்பட்டபொழுது தேவகி அங்கிருக்கவில்லை

ஓ..வாத்தியார் அந்த அதிர்ச்சியில் இருந்து சுதாகரித்துவிட்டாரா...? நான் நினைத்தேன் அடுத்த நாள் ஆஸ்பத்திரி வாட்டில் இருந்து கதை நகரும் என்று... :lol: :lol:

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார் கலவன் பாடசாலையில் படித்தது குறைவு.

அங்கே இப்படிப் பல சம்பவங்கள் நடந்ததைக் கேள்விப்பட்டிருக்கின்றேன்.

உங்கள் எழுத்தில் வாசிப்பது ஒரு தனிச்சுவை

தொடருங்கள்.

வாத்தியார் நான் இரண்டிலையும் படிச்சிருக்கிறன். அதிலை சண்டிலிப்பாய் இந்து மானிப்பாய் மெமோறியல் கலவன். மானிப்பாய் இந்து யாழ் கல்லூரி(வட்டுக்கோட்டை) என்பன ஆண்கள் பாடசாலை. இதுக்கை ஸ்கந்தாவரதோயா வேறை .. என்னடா இத்தனை பள்ளிக் கூடத்திலை ஓடி ஓடி படிச்சிருக்கிறானே பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்கிறான் எண்டு நினைப்பியள்..; ஆனால் உண்மை அதில்லை எல்லா பள்ளிக்கூடத்தாலையும் கலைச்சு விட்டிட்டாங்கள். :lol: :lol:

சாத்திரியின் கதைஎன்றால் எம்.ஜி .ஆர் படம் பார்கின்றமாதிரி நுனிக்கதிரையில் இருந்து தான் வாசிப்பேன் .எது தேவையோ அத்தனையும் இருக்கும் .

விலங்கியல் படிப்பித்த ஆசிரியை படிப்பித்துக்கொண்டு இருக்கும்போது உள்ளுக்க போட்டிருக்கின்ற கறுப்பு நல்லாஇருக்கு என்று நண்பன் சொல்ல புத்தகத்தை மூடி அன்றைய வகுப்பிற்கு முற்றுபுள்ளி வைத்தார் .அதன் பின் அப்படியான கொமான்ஸ் எவரும் அடிப்பதில்லை.

எனக்கொரு சந்தேகம்...யாராவது தீர்த்துவையுங்கப்பா...வெள்ளைகள் என்னத்தைக் கொடுத்து வளர்க்கிறார்கள்..?

Silicone

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி எழுத்துநடை அபாரம்.தொடருங்கள்.

இது சண்டிலிப்பாய் இந்து மகாவித்தியாலயம்

போல கிடக்கு.கல்வளையும் வருகிறமாதிரிக்கிடக்கு.

பள்ளிக்கூடத்திற்கு முன் சங்கக்கடையும் இருந்தது.

இப்ப என்னென்று தெரியயில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நுனாவிலான். சுபேஸ் விசுகு கோமகன் ஆகியோர் உங்களின் கருத்துக்களிற்கு நன்றிகள்

சாத்திரியின் கதைஎன்றால் எம்.ஜி .ஆர் படம் பார்கின்றமாதிரி நுனிக்கதிரையில் இருந்து தான் வாசிப்பேன் .எது தேவையோ அத்தனையும் இருக்கும் .

விலங்கியல் படிப்பித்த ஆசிரியை படிப்பித்துக்கொண்டு இருக்கும்போது உள்ளுக்க போட்டிருக்கின்ற கறுப்பு நல்லாஇருக்கு என்று நண்பன் சொல்ல புத்தகத்தை மூடி அன்றைய வகுப்பிற்கு முற்றுபுள்ளி வைத்தார் .அதன் பின் அப்படியான கொமான்ஸ் எவரும் அடிப்பதில்லை.

கருத்திற்கு நன்றிகள் அர்ஜீன் நல்லகாலம் அந்தநேரம் கறுப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு பாட்டு வெளிவந்திருக்கேல்லை. இல்லாட்டி நிலைமையை நினைச்சு பாருங்கோ

தொடருங்கள் சாத்திரி.

எனது நண்பர்கள் சிலருக்கும் இதுதான் நடந்தது. அவர்கள் கஷ்டப்பட்டு சுத்திச் சுழட்டி கடிதம் கொடுக்க, சும்மாயிருந்த வாத்தியார் பெட்டையைச் சுழற்றிக் கொண்டு போயிட்டார். அருணகிரி வாத்திக்கு ஆள் வைத்து அடிக்க வேண்டும். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கதை அருமை சாத்திரி அண்ணோய், கெதி எண்டு எழுதுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

கதையில் வரும் அருணகிரி வாத்தியாரை மானிப்பாயும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ளவர்களும் நன்கு பழக்கமானவர்கள்

மானிப்பாய் வாத்தியா இப்பவும் கட்டாமல் இருக்கா யாரப்பா அது ?டமிழ் வாத்தி?who is the black sheep...? red undi?

ஆனால் வாத்தி சொன்ன {எந்த வளமும் இல்லாத எங்கடை மண்ணுக்கு கல்விதான் வளம்.அதுதான் எங்கடை ஆயுதம். அதுவுமில்லாட்டி நாங்கள் அழிஞசு போவம்.} ஒரு வார்த்தை இப்பவும் யாழ்ப்பாணத்தானுக்கு பொருந்தும்

தொடருங்கள் சாத்திரி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மானிப்பாய் வாத்தியா இப்பவும் கட்டாமல் இருக்கா யாரப்பா அது ?டமிழ் வாத்தி?who is the black sheep...? red undi?

ஆனால் வாத்தி சொன்ன {எந்த வளமும் இல்லாத எங்கடை மண்ணுக்கு கல்விதான் வளம்.அதுதான் எங்கடை ஆயுதம். அதுவுமில்லாட்டி நாங்கள் அழிஞசு போவம்.} ஒரு வார்த்தை இப்பவும் யாழ்ப்பாணத்தானுக்கு பொருந்தும்

தொடருங்கள் சாத்திரி.

புத்தன் ஏற்கனவேஆளை யாரெண்டு பிடிச்சிருப்பியள் எண்டு நினைச்சன் கதையை தொடர்ந்து படித்தால் யாரெண்டு பிடிபடும் உங்களிற்கு பக்கம்தான். கருத்திட்ட தப்பிலி மற்றும் தும்பளையானிற்கும் நன்றிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்

........ம்

ம்ம்ம்

....................ம்

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த பகுதி எப்போது வரும் சாத்திரியார்

கனக்க ம்... போட்டால் வாய் ஒட்டப்போகின்றது :D:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.