Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அம்மாவின் இறுதிக்கவிதை

Featured Replies

முதுமை இரவுகள்

களைப்பின் முடிவில் அடைபட்ட பின்னாலும்

காத்திருந்து கனவை துணைக்கழைத்து

பதறி விழிக்க வைத்துப்

பறந்து விடுகின்றது பாதி இரவுகள்

திறந்த கூடைக்குள் மாலை வந்தடையும் கோழிகள் போல்

இனி என்றுதான் வசப்படுமோ இந்த உறக்கம்

உயிரினும் மேலான சுகதையல்லவா

இந்த முதுமை எடுத்து கொள்கின்றது

வேண்டியபடி செல்லும் உடல் கேளாத செவிகள்

பாராத விழிகளும் உடன்வராத கால்களும்

ஒலிகாணாத குரல்களும் ஒடுங்கி சுமையாகும் எனில்

முதுமை சுமைதனே .

post-3687-0-26086500-1343495041_thumb.jp

Edited by arjun

  • தொடங்கியவர்

அம்மாவின் உடமைகளை எல்லோருமாக எடுத்துப் பார்தோம் .ஒரே புத்தகமயம்.

அவற்றில் இருந்து தானே குறிப்புகள் எடுத்து,

தனது கவிதைகள்,பிறர கவிதைகள் ,படங்கள் , படித்ததில் பிடித்தது ,சமையல் குறிப்புகள் ,கட்டுரைகள் ,வாழ்க்கை குறிப்புகள் என பல பதிவுகள் தனது கையாலேயே எழுதிவைத்திருக்கின்றார் .எல்லாம் மிக நேர்த்தியாக ஒழுங்காக திகதி போட்டு வைத்திருக்கின்றார்கள் .

மேலே உள்ளது கடைசியாக எழுதிய கவிதை .

உங்கள் தாயார் பல நாட்கள் தூக்கமில்லாமல் தவித்திருக்கிறார். பார்ப்பதற்கு, கேட்பதற்கு, நடப்பதற்கு, கதைப்பதற்கு எல்லாம் சிரமப்பட்டிருக்கிறார். முதுமை அவருக்கு சுமையாக இருந்திருக்கிறது. தன்னுடைய கவலைகளை உங்களிடம் கூறாமல் கவிதையில் எழுதி வைத்து விட்டார் போலிருக்கிறது.

இப்பொழுது நிரந்தரமாக தூங்கி விட்டார். அவரின் ஆத்மா சாந்தியடையட்டும். தாயை இழந்து தவிக்கும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

வேண்டியபடி செல்லும்

உடல் கேளாத செவிகள்

பாராத விழிகளும்

உடன்வராத கால்களும்

ஒலிகாணாத குரல்களும்

ஒடுங்கி சுமையாகும்

எனில்

முதுமை சுமைதனே .............

வார்த்தைகள் இல்லை அர்ஜுன் . இப்படியொரு முதல்மொழுக்கு நீங்கள் மகனாக கிடைத்தது உங்கள் பூர்வ புண்ணியமே.

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜீன் அண்ணா உங்கட அம்மா நல்ல கவிதை எழுதியிருக்கிறார்...கடைசி நேரத்தில் உங்கட பெற்றோரைப் போய் பார்ப்பதில்லை போல தனிமையையும்,முதுமையும் உங்கட அம்மாவை வாட்டியுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

வார்த்தை இல்லை உங்கள் அம்மாவின் கவிதையை பாராட்ட , ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை பிராத்திக்கிறேன்.

ஆழ்ந்த அனுதாபங்கள்

...கறுப்பி என அறியப்பட்ட சுமதி ரூபனின் தாயார் பற்றிய செய்தியும் எங்கையோ பார்த்த மாதிரி இருக்கு இத்தருணத்தில் ..இரண்டு அறிவுப்பு ஒன்றானால் ...அர்ஜுன் அவரின் சகோதரியா ...பிழையான எனது அனுமானமாக இருந்தால் எனது கருத்தை மறந்து விடுங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அர்ஜுன் அண்ணா என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

முதுமை இனிமையா,கொடுமையா என்று பட்டிமன்றம் வைக்கத்தெரியவில்லை.

ஆழ்ந்த அனுதாபங்கள் அண்ணா அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறவனை வேண்டுகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதுமை இரவுகள்

களைப்பின் முடிவில் அடைபட்ட பின்னாலும்

காத்திருந்து கனவை துணைக்கழைத்து

பதறி விழிக்க வைத்துப்

பறந்து விடுகின்றது பாதி இரவுகள்

திறந்த கூடைக்குள் மாலை வந்தடையும் கோழிகள் போல்

இனி என்றுதான் வசப்படுமோ இந்த உறக்கம்

உயிரினும் மேலான சுகதையல்லவா

இந்த முதுமை எடுத்து கொள்கின்றது

வேண்டியபடி செல்லும் உடல் கேளாத செவிகள்

பாராத விழிகளும் உடன்வராத கால்களும்

ஒலிகாணாத குரல்களும் ஒடுங்கி சுமையாகும் எனில்

முதுமை சுமைதனே .

எனக்கு என்னவென்று சொல்லத்தெரியவில்லை...

எங்களுக்கு படிப்பித்த பேராசியர் ஒருவர், COPD வருத்தத்தை ( சிகரட் பிடிப்பவர்களுக்கு வரும் வருத்தm, சுவாசிக்க கஸ்ரபடுவார்கள், நோய் முற்றிய நிலையால் 24 மணித்தியாலமும் ஒசிசன் தேவைப்படும், பலரும் வீதிகளில் ஒரு சிறிய ஒசிசன் சிலிண்டருடன் திரிவார்கள்) பற்றி படிப்பிக்கும் pothu sonna வார்த்தைகளே இவை. அவர்களால் சாதரனமானவர்களைப்போல் சிந்திக்க முடியும் ஆனால், உடம்பு ஒத்துழைக்காது. அவர்கள் தங்கள் பேரப்பிள்ளைகளுடன் விளையாட விரும்புவார்கள் ஆனால், அவர்களால் ஒரு அடி வைக்கவே ஏலாமல் இருக்கும். அவர்களது மனமோ ஒரு புத்தம் புதிய ஜெட் பிளான் இன் வேகத்துடன் இயங்கும், ஆனால் அவர்களின் உடலோ ஒரு அடி கூட வைக்க முடியாமல் இருக்கும்.

அர்ஜுன் பிணியையும் முதுமையையும் அழகாக, அதன் வலி குறையாமல் சொல்லியிருக்கிறார் உங்கள் தாய்.. ஏனையவற்றையும் அலுவல்கள் எல்லாம் முடிந்தவுண்டன் பதியுங்கள்...

முதுமைத் தாயின் வரிகள், நெஞ்சைக் கனக்கின்றது.

நல்லதொரு படைப்பாளி.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த அம்மாவின் ஆத்மா சாந்திடைய ஆண்டவனை வேண்டுகிறேன்..

முதுமையை அனுபவித்துக் கொண்டே முதுமை பற்றி கவிதையில் எழுதி வைச்சு இருக்கிறார் அந்த அம்மா...முதுமை பற்றி எழுதி இருக்கும் இந்த கவிதை தான் தன்னுடைய கடசியானது என்று நினைத்து எழுதி இருக்க வாய்ப்பில்லை..அப்படி அமைந்து விட்டது..அர்ஜுன் அண்ணாவின் அப்பாவையும்,அம்மாவையும் அடிக்கடி காணுறனான்...பழகுவதற்கு ரொம்ப நல்ல அய்யா,அம்மா..எனது தந்தையாருக்கு ரொம்ப பழக்கபட்டவர்கள்..எது எப்படி இருப்பினும் சொல்கிறன் என்று தவறாக எடுத்துக் கொள்ளாமல் அய்யாவையும் முதுமை,தனிமை தாக்காமல் பாது காத்து கொள்ளுங்கள்...நான் நெடுகலும் அர்ஜுன் அண்ணாவுடன் யாழில் தர்க்கப்படுகிறான்...காரணம் அப்பா,அம்மா தாங்கள் சொல்வதை கேட்காமல் தனிமையாக இருக்கிறார்கள் என்று எழுதும் போது அது அவர்களின சுதந்திரம் என்று சொல்கிறனான்..ஆனால் தனிமை,முதுமை எவ்வளவு மனத் தாக்கதை கொடுக்கிறது என்பதை ஒவ்வொரு பிள்ளைகளும் உணர்ந்து கொள்ளவேணும்...

  • கருத்துக்கள உறவுகள்

அந்தத் தாயை, இழந்து தவிக்கும் உங்களுக்கும், உங்கள் உறவுகளுக்கும், மீண்டும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவின் ஆத்மா சாந்தியடையட்டும்.....

அனுபவரிகள் .....

வேண்டியபடி செல்லும் உடல் கேளாத செவிகள்

பாராத விழிகளும் உடன்வராத கால்களும்

ஒலிகாணாத குரல்களும் ஒடுங்கி சுமையாகும் எனில்

முதுமை சுமைதனே .

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண்ணின் நித்திய ஆசை தன் உயிர் உடலை விட்டு அகலும் போது

தன் கணவன் தன் அருகே இருக்க வேண்டும் என்பதே.

பூவுடனும் பொட்டுடனும் இந்த உலகை விட்டுப் பிரிந்த தாயார் மிகவும்

கொடுத்து வைத்தவர் என நினைத்து ஆறுதல் அடையுங்கள் அர்ஜுன் அண்ணா.

கவிதை வாசிக்கும் போது மனம் கனக்கின்றது.

ஒவ்வொரு வரியும் உண்மையான உணர்வில் ஊறி எழுதி இருக்கின்றா. தான் உணரும் வலிகளை வரிகளாக்கி தன்னை விடுவித்துக் கொண்டு போய்விட்டா. கவிதை மட்டும் இப்ப அம்மா அனுபவித்த தனிமையில் உறைந்து அம்மாவை தேடுகின்றன

நெஞ்சை விம்ம வைக்கும் வரிகள்.

சாவு என்பதே ஒருவரை அனுப்பி விட்டு நாமும் போகக் காத்திருக்கும் ஒரு பயணம். முன்னே சென்றவரின் நினைவுகளுடன் பின்னே செல்லக் காத்திருக்கும் தரிப்பிடம் தானே வாழ்க்கை

"ஆத்மா சாந்தியடையட்டும்" என்ற சொற்றொடர் ஏன் உருவானது என்று இப்போது தான் அம்மாவின் கவிதை மூலம் அறிந்து கொண்டேன்.

ஆத்மா விழித்திருக்க.. ஊன் உடல் விடைபெறும் அனுபவத்தையல்லவா அவர் கவிதை மூலம் பகிர்ந்திருக்கிறார்.

அம்மாவிற்கு நன்றிகள்.

அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.

.

Edited by esan

அம்மாவுக்கு இன்று என் மனைவியினுடனும் யாழின் இன்னொரு தோழி உறவுடனும் போய் அஞ்சலி செலுத்தினேன். ஏதோ இந்தா எழும்பப் போறன் என்ற மாதிரி அம்மா படுத்துக் கிடந்தா. இரண்டு வாரம் கோமாவில் இருந்த களைப்புக் கூட அவாவில் இல்லாதது ஆச்சரியமானது.

அர்ஜுனுடன் கதைத்துக் கொண்டிருந்தோம். அம்மா எழுதிய இந்தக் கடைசிக் கவிதை அவா தன்னைப் பற்றி எழுதியதில்லை என்று சொன்னார். அம்மா வாராந்தம் திங்கள் கிழமையில் ஒரு முதியவர் ஒன்று கூடலுக்குச் செல்பவர் என்றும், இந்த வார திங்களுக்காக மற்ற முதியோரின் துன்பங்களைக் கேட்டு எழுதிய கவிதை என்றும் சொன்னார்.

அம்மாவும் அப்பாவும் பிள்ளைகள் வாழும் வீடுகளில் இருந்து ஒரு சில காலடிகள் தூரத்தில் தமக்கான ஒரு வீட்டில் தம் வயோதிப வாழ்வை முழுமையாக வாழ்ந்தவர்கள் என்று புரிந்தது. யாயினி சொன்ன மாதிரி அவர்கள் தனிமையில் வாடவில்லை. மாறாக தம்பதிகளாக இனிமையாக வாழ்ந்தவர்கள். தம் நேரங்களை பல விடயங்களில் செலுத்தியவர்கள். அம்மாவை தெரிந்த ஏனைய யாழ் உறவுகளுக்கும் தெரியும் அவா எந்தளவுக்கு தான் சார்ந்த சமூகத்துடன் நெருக்கமாக உறவை பேணியவர் என. என்னைப் பொறுத்தவரைக்கும் வயோதிப தம்பதிகளை ஒன்றாக வாழ விடும்போதுதான் அவர்கள் திருமண உறவின் மிக உச்ச சிநேகிதத்தை காணுகின்றார்கள். அந்த சிநேகிதிதத்தின் உன்னதத்தைத் தான் அம்மா படுத்துக்கிடக்கும் போதும் அவாவின் முகத்தில் இருந்த புன்னகை சொல்லியது

------------------

அங்கு அமர்ந்து இருந்த நேரங்களில் என் மனைவிக்கு நான் சொன்னேன். "என்னால அர்ஜுன் அப்பாவைப் போல நீ செத்தால் அமர்ந்து இருக்க முடியாது. உனக்கு முதல் நான் தான் போகவேண்டும்" என

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவின் ஒவ்வொரு வரிகளும் கனமாக இருக்கிறது. ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

அங்கு அமர்ந்து இருந்த நேரங்களில் என் மனைவிக்கு நான் சொன்னேன். "என்னால அர்ஜுன் அப்பாவைப் போல நீ செத்தால் அமர்ந்து இருக்க முடியாது. உனக்கு முதல் நான் தான் போகவேண்டும்" என

நன்றி

உனக்கு முதல் நான்தான் போவேன் எண்டு நான் சொல்லுறதும் இல்லை நான் தான் போவன் எண்டு மனிசி சொல்லுறதும் என் வீட்டிலும் நடந்திருக்கு. நினைத்தே பார்க்க முடியாத ஒரு சூனியமான வெளி அது.

[size=5]ம்....... யார் முதல் போவது என்பது எமது கையில் இல்லையே. எனது அம்மா இறந்து 22 வருடங்கள் :( எனது அப்பா இறந்து 3 மாதங்கள் தான் :( [/size]

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட அர்ஜுன் அண்ணாவின் அப்பாவைக் கண்டு கதைக்கும் போது மிகவும் திடகாத்திரமாக பேசிக் கொண்டு நின்றார்..துணையின் நிலைமை புரிந்து கொண்டு விட்டார் என்றதை மட்டும் என்னால் ஊகிக்க முடிந்தது..தன் துணைவியார் படுக்கையில் கிடந்து கஸ்ரப்படக் கூடாது என்ற ஒரு மன நிலை மட்டும் அவர் மனதில் இருந்தை கதைக்கும் போது உணரக் கூடியதாக இருந்தது..கையைப் பிடிச்சு போய்ட்டு வாறன் என்று சொல்ல ஓம் நீ போய்ட்டு வாம்மா என்று அனுப்பினார்...வெளியில் வந்து ரொம்ப கவலையாக போய்ட்டு வயசு போன நேரத்தில் பாவம் தனிச்சு போய்ட போறாரே என்று..

நான் அர்ஜுண் அண்ணாவின் அப்பா,அம்மா இருவரையும் காணும் இடம் மல்வேர்ண் பகுதி..அந்தப் பகுதியில் முது தமிழர் மன்றம் ஒன்று இற்றைக்கு பல ஆண்டுகளாக இயங்கிக் கொண்டு இருக்கிறது.அதில் தமிழ் முதிய உறவுகள் பலர் சென்று தங்கள் நேரத்தை பயன் உள்ளதாக்கி கொள்வது வளமை..ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் அங்கே அனைத்து உறுப்பினர்களும் ஒன்று கூடுவது வளமை..நானும் பல ஆண்டுகளாக அந்த பகுதியில் சுற்றித் திரிபவள் என்றவகையில் பல விடையங்களை அறிந்து இருக்கிறன்..இந்தக் கவிதை கூட முது தமிழர் மன்றத்தில் வாசிக்கபட்டதாகவோ இல்லை ஏதோ ஒரு நிகழ்வில் அம்மாவினால் எழுதி வாசிக்கப்பட்டதாகவே இருக்கும் என்பது எண்ணம்..தொலைக் காட்சிகளில் கூட பழமுதிர்ச்சோலை நிகழ்ச்சியில் நிறைய முதியவர்களின் சுய படைப்புக்கள் வருவதை பார்த்திருக்கிறேன்..

  • கருத்துக்கள உறவுகள்

முதுமை வலியானது.கனவுகளால் நித்திரை இன்றி வாழ்ந்த இரவுகளையும் உடலின் ஒவ்வொரு உறுப்பும் தினம் செயலிழந்து செல்வது எவ்வலவு கொடுமையானது என்பதையும் அழகாக கவிதையில் சொல்லி விட்டு என்று விட்டார் அந்த அம்மா.மனித வாழ்வு எவ்வளவு குறுகியது. அம்மாவின் ஆத்மா சாந்தியடையட்டும்.

அர்ஜுன் அப்பாவை தனிமையில் விடாமல் பார்த்து கொள்ளுங்கள்.தனிமை கொடுமையானது.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜூனின் அம்மா எழுதிய கவிதை, முதுமையை... இட்டு ஒரு பயத்தை ஏற்படுத்தியது.

நாம் வாழ்வில் எத்தனையோ... இன்பங்கங்களை, சுகங்களை அனுபவித்தாலும்... முதுமை என்பது சுமை போல் உள்ளதை நினைக்க... ஒருவித அச்சமே ஏற்படுகின்றது.

------------------

அங்கு அமர்ந்து இருந்த நேரங்களில் என் மனைவிக்கு நான் சொன்னேன். "என்னால அர்ஜுன் அப்பாவைப் போல நீ செத்தால் அமர்ந்து இருக்க முடியாது. உனக்கு முதல் நான் தான் போகவேண்டும்" என

நன்றி

நிழலி, உங்களைப்போல்... எனது மனைவிடம் சொல்லாவிட்டாலும்,

மனைவி என்னும் துணை இல்லாத வாழ்வை... என்னால் ஒரு நிமிடமும் வாழ முடியாது.

நீண்ட காலம் தம்பதிகளாக இருந்த, எனது அம்மா இறந்து மூன்று மாதத்தில்... அப்பாவும் இறந்து விட்டார்.

நல்ல சுகதேகியாக இருந்தவர். அப்பா பட்ட வேதனையை எழுத்தில் வடிக்க முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.