Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளைகளை இறுக்கும் குருவிச்சைக் கொடிகள் - இறுதிப் பாகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அன்றைக்குச் சந்திரனுக்கு மகளின் பள்ளிக்கூடத்திலிருந்து, ஒரு தொலைபேசி அழைப்பொன்று வந்தது. அவனது மகளின்,பள்ளிக்கூட அதிபர் தான் ஏன் மகள் ஒரு கிழமையாப் பள்ளிக்கூடம் வரவில்லை என விசாரித்தார். அவள், வயசுக்கு வந்து விட்டதால், மூன்று நாட்கள் பாடசாலைக்குப் போகாமல் தாய்க்காரி நிப்பாட்டியிருந்தா. வாற திங்கட்கிழமை, கட்டாயம் மகளைப் பள்ளிக்கூடம் அனுப்புகின்றேன் என்று அதிபருக்குச் சொல்லி வைத்தான்.

பிள்ளையின்ர சாமத்திய வீட்டைப் பெருசாச் செய்து போட வேணும், எண்டு மாமி சொன்னது கேட்டது.

சரி, உங்கட விருப்பப் படி,செய்யுங்கோ! ஆனால்,ஆகப்பெரிய ஆரவாரமெல்லாம், செய்யக் கூடாது. இப்பவே சொல்லிப் போட்டன். முதல்ல, அவளைப் பள்ளிகூடத்துக்கு, அனுப்பி விடுங்கோ. பிரின்சிப்பல், ஏன் வரேல்லை எண்டு அடிச்சுக் கேட்டவர். நானும் திங்கட்கிழமையில இருந்து அனுப்புறன் எண்டு சொல்லிப் போட்டன்.

நீங்க சொன்னாப் போல சரியே! ஊர் வழக்கப் படி, ஒரு மாதமெண்டாலும், அவள் வீட்டை நிண்டாத் தான், அவளின்ர உடம்பு, கொஞ்சமெண்டாலும் தேறும். பெரியாக்கள், சொல்லுறம், கேளுங்கோவன்,

இஞ்சை பாருங்கோ, நீங்களா சோதினை எழுதப் போறியள்? இங்க வெள்ளைக் காறப் பிள்ளையள் ஒண்டும் பெருசாகிறதில்லையே?

அவளவை, மாட்டைத் திண்டு போட்டுத் திரிவாளுகள். எங்கட பிள்ளையளைப் போய் அதுகளோட ஒப்பிடுறியள்? அதோட அவளின்ர மாமாவுமெல்லே, கனடாவிலையிருந்து வாறார்! எல்லாரும் ஒண்டா இருக்கிறதில எவ்வளவு சந்தோசம் இருக்கெண்டு தெரியுமே. பள்ளிக்கூடம் என்ன ஓடியா போகப் போகுது?

சரி, செயிறதெல்லாத்தையும் செய்து முடியுங்கோ, என்ர சொல்லை இஞ்சை ஆரு கேக்கினம்.என்ற படி கோபத்துடன் வெளியே போக வெளிக்கிட்டான்!.

வர வர, எல்லாத்துக்கும் சத்தம் போடுறியள்? இந்த நாட்டில, அப்பிடிச் செய்யக்

கூடாதெண்டு சட்டம் இருக்காம்.

இஞ்சை பாருங்கோ, இந்த நாட்டில எவ்வளவோ, நல்லதுகள் இருக்கு! அதெல்லாத்தையும் விட்டிட்டு, உங்களுக்குத் தேவையானதை மட்டும் இறுக்கிப் பிடிச்சுக் கொள்ளுங்கோ! அதே மாதிரி ஊரில உள்ளதுகள்ளையும் உங்களுக்கு வசதியானதெல்லாம், வச்சுக் கொண்டு மிச்சமெல்லாத்தையும் விட்டிருங்கோ!

தம்பி ஒருக்கா விளக்கமாச் சொல்லுங்களன்!

இல்லை, இவள் பிள்ளையைப் பள்ளிக்கூடம் போகாம மறிச்சு வைச்சிருக்கிறது, என்ன மாதிரி? அண்டைக்குச் சந்தையில, உங்கட மகளைப் பையைத் தூக்க விடாம மறிச்சது, என்ன மாதிரி, என்று கூறிய படி வெளியே போய் விட்டான்.

மகளின்ர சாமத்திய வீட்டுக்கென்று மாமன் காரன், வந்து நிற்க வீடே கல கலவென்று மாறி விட்டிருந்தது! மச்சானைக் கூட்டிக் கொண்டு, ஊரைக் காட்டிறதை விட்டுட்டு, வேலை வேலையென்று திரியுது சனம் ,என்று ஒரு குத்தல் பேச்சும் மாமியிடம் இருந்த வந்ததையும் அவன் கவனிக்காமல் விடவில்லை.

ஏன், கனடாவில் இருந்து வந்தவருக்குச், சிட்னியில திரியத் தெரியாதே. அவர் சாமத்திய வீட்டுக்குத் தானே வந்தவர். என்ற அவனது பதில்கள், திருப்தி கரமாக, உள் வாங்கப் பட மாட்டாது, என்பதும், சந்திரனுக்குத் தெரிந்திருந்தது!

அடுத்த நாள், வேலைக்குப் புறப்படும் போது, மாமிக்காறி தேத்தண்ணிக் கோப்பயோட வர, அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. தன்னையறியாமலே, பின்னால் திரும்பிப் பார்த்தவனை, மாமியின் குரல் தான், இந்த உலகத்துக்குக் கொண்டு வந்தது.

இல்லை, இது உங்களுக்குத் தான் தம்பி. நேற்றுச் சரியான வேலை போலக்கிடக்கு!

தொடரும், நல விசாரிப்புக்களால், கொஞ்சம் குழம்பிப்போன சந்திரன், சரி மாமி, என்ன விசயம் எண்டு சொல்லுங்கோவன், என்று கேட்டான்.

இல்லைத் தம்பி, இவன் தம்பிக்குக் கனடா அவ்வளவு பிடிகேல்லயாம். அங்க அவன், ஒரு சொந்தம்பந்தமேண்டு ஒண்டும் இல்லாமல், தனிய தானே இருக்கிறான்.அதால, இஞ்ச வந்து தங்கச்சியோட ஒண்டா இருக்கலாம் என்று யோசிக்கிறான்.

ம்...ம்... என்றான் மிகுதியைக் கேட்பதற்காக!

'குடும்பத்தில, கடைசி உறுப்பினரை அழைக்கிறதுக்கெண்டு சொல்லி ஒரு விசா இருக்காம், தம்பி. ஆனபடியால், அவர் இஞ்ச வாறதுக்கு, ஒரு பிரச்சனையும் இருக்காதாம். நீங்கள், ஒரு ஸ்பொன்சர் லெட்டர் ஒன்று குடுத்தாக் காணுமாம்!

சந்திரன், ஒன்றும் பேசவில்லை.

ஏனோ, அவனது தாயின் நினைவும், அவனுக்கு வந்து போனது. அதற்காகத் தான், தனது ஸ்பொன்சரையும், உபயோகிக்காது வைத்திருக்கிறான்..தனது தாயை, ஒரு முறை இங்கு கூட்டி வந்து, ஒரு ஆறு மாதமாவது தன்னுடன் வைத்திருக்க வேண்டும் என்று ஒரு அடி மனத்து ஆசையொன்று, அவனுக்கு இருந்தது. ஆனால், அதை வெளியில் சொல்லுவதில், வீண் மனத்தாங்கல்கள் தான் மிஞ்சுமென்பதால், அவன் அதை ஒருவருக்கும் சொல்வதில்லை.

மாமியாரின், வேண்டுகோளுக்கு, அவன் சாதகமான பதில் சொல்லாததால், வீட்டில் பல மாறுதல்கள் வெளிப்படையாகத் தெரிந்தன.

அன்று இரவு வேலை முடிந்து வந்தவன், குளித்துவிட்டுக் குசினிக்குள் வந்த போது, அவனுக்குச் சாப்பாடு இருக்கவில்லை.டி.வி. யில் ஏதோ படம் பார்த்துக் கொண்டிருந்த மனுசியிடம், என்னப்பா, இண்டைக்குச் சாப்பாடு ஒண்டும், இல்லையா, என்று சாதாரணமாகத் தான் கேட்டான்.

வெளிநாடுகள்ள, ஆம்பிளையளும் தான் சமைக்கிறதாம், எண்டு மாமியாரின் அறைக்குள் இருந்து பதில் வந்தது!

உடுப்பைப் போட்டு, வெளிக்கிட்டவன், ஏதாவது கடையில் சாப்பிடுவமோ, என்று யோசித்துக் கொண்டு, பார்க் பக்கமாக நடந்து போகத் துவங்கினான்.

சீ, கடையில சாப்பிடக் கூடாது. இதே பழக்கமா, வந்திட்டுதென்டால், பிறகு என்னத்துக்குக் குடும்பம், பிள்ளை குட்டு என்று நினைத்துத் திரும்பவும், வீட்டை நோக்கி நடந்து வந்தான்.

வீட்டினுள் இருந்து வந்த 'உரையாடல்' கொஞ்சம் வித்தியாசமாக இருக்கவே, வீட்டின் உள்ளே போகாமல், கதவடியில் நின்று கூர்மையாகக் காதைக் கொடுத்துக் கேட்டான்.

தாயும் மகளும் தங்களுக்குள் பேசிக்கொண்டது இது தான்!

அம்மா, நீங்க செய்யச் சொன்ன வேலை, கொஞ்சமும் சரியில்லை. இரவு முழுக்க வேலை செய்த மனிசன், சாப்பிடாம வெளியால போகுது. இனி வந்தவுடன, விசரில சத்தம் போடவெல்லோ போறார்.

அது தான் பிள்ளை நடக்க வேணுமெண்டு சிதம்பரத்தார் சொன்னவர். அவற்றை மகள், போலீஸ் டிப்பார்ட்மென்டில, கிளார்க்கா வேலை செய்யுதெல்லே. அதோட அவர் கதைச்சவராம். நான் அவரிட்ட, இப்பிடி உன்ர மனுசன் வீட்டில சத்தம் போடுறதைப் பற்றிக் கதைச்சனான். அவர் தான் சொன்னார், இப்பிடிச் சத்தம் போடேக்க, பொலிசுக்கு அடிகட்டாம். அவங்க, வந்த உடன, இப்பிடித்தான் இரவில வேலையால வந்து தினமும் சத்தம் போடுறவர், எண்டு ஒரு என்றி போடட்டாம். மிச்சத்தை அவற்றை மகள் பாத்துக் கொள்ளுவாவாம். சிதம்பரத்தார் சொன்னாப், போலிஸ் கேட்குமாம். அதுக்குப் பிறகு, இந்த வீடும் உனக்குத் தானாம் வரும், அது தான் இங்க சட்டம் எண்டு சொன்னவர். எண்டா நாங்க, அண்ணனையும் கூப்பிட்டிடலாம் தானே. இவர் குரைக்கிற நாய் கண்டியோ. இது ஒரு நாளும் கடிக்காது. இவர் இங்கே எங்க போகப் போறார். வழக்கம் போலக் கொஞ்ச நாளைக்கு, மூஞ்சியை நீட்டிக் கொண்டு திரிவார். பிறகு தன்ர பாட்டில அடங்கிப் போவார்.

அம்மா, நீங்க செய்யுறது உங்களுக்கே நல்லாயிருக்கா? நீங்க, இந்தக் கூத்தெல்லாம் ஆடியும்,அந்த மனுசன் தானே உங்களுக்கு விசா எடுத்துத் தந்தது? நான் உங்களை நம்பி, இருந்த வேலையையும் விட்டிட்டு இருக்கிறன். நீங்க வரமுந்தி, இஞ்ச எல்லாம் நல்லாத் தானே இருந்தது? மனுசன் உங்களை, ஒரு நாளாவது. பேசியிருக்குமா? நீங்க கடைசியா, எங்கட குடும்பத்தைப் பிரிக்கிறதுக்கு, வழி பாக்கிறீங்களே? நீங்களும், உங்கட ஊத்தவாளிச் சிதம்பரத்தாரும்! அது தான் அவற்றை மகள், மனுசனை விட்டுப் போட்டு, வேற ஆரோடையோ போய்க் குந்திக் கொண்டிருக்கிறா. அவ, தன்னை மாதிரியே எல்லாரையும் நினைச்சிட்டாவோ?

சந்திரனுக்கு, மாமியின் திட்டங்கள் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தன. அவனால் நம்ப முடியவில்லை.

ஒருவேளை, இதுதான் சராசரித் தமிழனின் குணமோ? கேள்விகளின் கலங்கிப் போனவன், திரும்பவும் 'பார்க்குக்கு' நடந்து போய், அங்கிருந்த வாங்கில் ஒன்றில் அமர்ந்து கொண்டான். வானத்தில் சந்திரனை, முகில் கூட்டம் மறைத்துக் கொண்டிருந்தது. பக்கத்து வாங்கிலில் படுத்திருந்தவன், இவனை, கொஞ்சம் ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டு, ஒரு சிகரட்டை, எடுத்து நீட்டினான்.

அவனுக்குப் பழக்கமில்லை, எனினும் அதை வாங்கிக் கொண்டான். பக்கத்தில் இருந்தவனும், போர்த்து மூடிக் கொண்டு, படுத்து விட்டான். அப்படி எவ்வளவு நேரம் அங்கு உட்கார்ந்து வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தானோ என்பது அவனுக்குத் தெரியாது. வானம் இப்போது, மிகவும் தெளிவாக இருந்தது, அவனது மனத்தைப் போலவே.

எழுந்து வீட்டை நோக்கி, நடக்கத் துவங்கினான். வீடு மயான அமைதியுடன் இருந்தது. இண்டைக்கு, நல்ல நித்திரை கொள்ளவேணும். நாளைக்கு, நிறைய வேலைகள் இருக்கு, என்று நினைத்தபடி நன்றாகத் தூங்கிப் போனான்.

அடுத்த நாள், மிகவும் வித்தியாசமானதாக இருக்கப் போகின்றது!

  • கருத்துக்கள உறவுகள்

வானம் இப்போது, மிகவும் தெளிவாக இருந்தது, அவனது மனத்தைப் போலவே.

"வெள்ளி"பார்த்தால் வாழ்க்கை நல்லாய் இருக்கும் எண்டு சொல்லுறீயள் :D

புங்கையூரான் உங்கள் கதை கருவும் அதை சொல்லிய விதமும் மிகவும் அருமை. விறுவிறுப்பாக போகிறது. கதை முடியவிட்டு தான் கருத்தை பதிவம் என்று இருந்தேன் இருந்தாலும் இருப்பு கொள்ள முடியவில்லை. உங்கள் அடுத்த நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொறுத்த கட்டத்திலை முடிச்சிட்டிங்களே அண்ணா, :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்

தொடருங்கோ

நன்றாக எழுதியிருக்கிறீர்கள் புன்கையூரான்.

பொறுத்த கட்டத்தில் தொடரும் போட்டு வாசகர்களை காக்க வைக்கிறீர்கள்- தேர்ந்த ஒரு கதாசிரியரைப் போலவே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]புங்கையூரான் உங்கள் கதை அருமை.[/size]

கதை நன்றாக போகின்றது புங்கையூரான் அண்ணா. பொறுத்தகட்டத்தில் தொடரும் போடுவதை யாழில் தடை செய்யவேண்டும் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சொன்னால் யாரும் கோவிக்க கூடாது...எழுதிறவர்கள் தொடர்ச்சியாக எழுதி முடிக்காமல் அடிக்கடி தொடரும் வார்த்தையை போட்டுட்டு எஸ்கேப் ஆகிறதால தொடர்கள் பக்கம் வரவே விருப்பம் இல்லாமல் வந்துட்டு..யாரையும் குறை சொல்ல வரல்ல.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் தொடருங்கோ புங்கை...மாமியை திரும்ப ஊருக்கு பைக் பண்ணியாச்சோ :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த நாள், மிகவும் வித்தியாசமானதாக இருக்கப் போகின்றது!

காலில் குத்திய முள்ளை வீசி எறிந்தால் சரிதானே.:D

  • கருத்துக்கள உறவுகள்

அடடா.. :D இப்பிடி ஒரு கதையை வாசிச்சு கனகாலம்.. :rolleyes: புங்கை.. உங்களுக்கு எழுத்தாளர் விருது எல்லாம் கம்மி.. :wub: அடிக்கடி படையுங்கோ.. சஸ்பென்ஸ் தாங்கலை.. :D

இஞ்சை பாருங்கோ, இந்த நாட்டில எவ்வளவோ, நல்லதுகள் இருக்கு! அதெல்லாத்தையும் விட்டிட்டு, உங்களுக்குத் தேவையானதை மட்டும் இறுக்கிப் பிடிச்சுக் கொள்ளுங்கோ! அதே மாதிரி ஊரில உள்ளதுகள்ளையும் உங்களுக்கு வசதியானதெல்லாம், வச்சுக் கொண்டு மிச்சமெல்லாத்தையும் விட்டிருங்கோ!

இந்தப் " பன்னாடைக் " குணாம்சமும் ஒரு காரணம் டமிழ்ஸ்சின் இழிநிலைக்கு . ஒரு பெரிய விடயத்தை தேன்தடவிச் சொன்ன போக்கு உண்மையிலேயே பாராட்டப்படவேண்டியதொன்று . கதையின் முடிவையும் தொங்குபொறியில் வைத்ததும் நல்லதே . இப்படியான விடையங்களுக்கு எமது கருத்தை வாசகரில் திணிக்காது அவர்களையே நீதிபதிகளாக்குவது நல்லது . தொடர்ந்து படையுங்கள் அதுவும் யாழுக்கு நல்லது :) :) :D :D .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

அட மனுசிக்காறி ஒண்டும் தெரியாத பாப்பா! மாமிக்காறிதான் பெத்த மகளின் குடும்பத்தையே பிரிக்கிற விகாரமான மனம் படைச்சவா!

எனக்கெண்டால் சந்திரன் மாதிரி ஆக்கள் ஒரு வல்லமையில்லாத சோணையள் மாதிரித்தான் கிடக்கு!

  • கருத்துக்கள உறவுகள்

மாமியாரை பார்சல் பண்ணிட்டானா சந்திரன்??

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கெண்டால் சந்திரன் மாதிரி ஆக்கள் ஒரு வல்லமையில்லாத சோணையள் மாதிரித்தான் கிடக்கு!

சந்திரன் அதில கொஞ்சம் வீக் போல:D அதுதான் மாமியை பகைச்சால் மகளையும் பகைக்க வேண்டும் என்று எண்ணிவிட்டார் போலும்

  • கருத்துக்கள உறவுகள்

தொலைக்காட்சி இல்லாத காலங்களில்.... வாழ்ந்த ஈழத்து மாமிமார் குடும்பத்தின் ஒற்றுமைக்கு முன்னோடியாகவும், மருமக்களை தங்கள் பிள்ளைக்கும் மேலாக... மதித்தார்கள். என்று... தமிழக தொலைக்காட்சியில் வரும் நாடகங்களைப் பார்த்தார்களோ... அன்றே.. இவர்கள் குடும்பத்தை, குட்டிச்சுவராக்க முன் நிற்கும் வில்லிகளாக மாறிவிட்டார்கள்.

கதை, நல்லாய்ப் போகுது... புங்கையூரான்.

சந்திரன் அதில கொஞ்சம் வீக் போல :D அதுதான் மாமியை பகைச்சால் மகளையும் பகைக்க வேண்டும் என்று எண்ணிவிட்டார் போலும்

உண்மைதான்... புத்தன். சில வீடுகளில் அவர்களின், அட்டகாசம் அதிகரிப்பதற்கு.... அதுவும் முக்கிய காரணம். :D

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக எழுதுகின்றீர்கள் [size=4]புங்கையூரான். ம்..ம்..தொடருங்கள்[/size]

இறுதிப்பாகம் என்று போட்டு முடிக்கவில்லையே, ஏன்? மற்ற திரி இணைப்புகளையும் இதில் இணைத்துவிடுங்கள்

அடுத்த நாள், மிகவும் வித்தியாசமானதாக இருக்கப் போகின்றது!

??

  • கருத்துக்கள உறவுகள்

ஏனோ, அவனது தாயின் நினைவும், அவனுக்கு வந்து போனது. அதற்காகத் தான், தனது ஸ்பொன்சரையும், உபயோகிக்காது வைத்திருக்கிறான்..தனது தாயை, ஒரு முறை இங்கு கூட்டி வந்து, ஒரு ஆறு மாதமாவது தன்னுடன் வைத்திருக்க வேண்டும் என்று ஒரு அடி மனத்து ஆசையொன்று, அவனுக்கு இருந்தது. ஆனால், அதை வெளியில் சொல்லுவதில், வீண் மனத்தாங்கல்கள் தான் மிஞ்சுமென்பதால், அவன் அதை ஒருவருக்கும் சொல்வதில்லை.

போன தொடரில் இதைத்தான் கேடிருந்தன்..பதில் கிடைச்சிட்டு..அதென்ன ஆம்பிளைக்கு ஒரு நீதி பொம்பிளைக்கு ஒரு நீதி..?

நல்லாயிருக்கு புங்கை அண்ணா...உங்கள் எழுத்துக்கள் எல்லாமும் அப்படித்தான் இருக்கும் சிறப்பாக..விரைவில் முடிவைதாங்கோ..ரொம்ப பொறுமையை சோதிக்காதைங்கோ அண்ணா.. :)

அது சரி சந்திரனுக்கு தனக்கென்றொரு அம்மா இருக்கிறா என்பது ஞாபகமிருந்ததா..?

புங்கை அண்ணாவின் எழுத்தே ஒரு சுகமாய் இருக்கும் வாசிக்க...நன்றி அண்ணா..

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]குடும்பங்களில் நடப்பதை நன்றாக் சொல்லி உள்ளீர்கள் பாராட்டுக்கள் [/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"வெள்ளி"பார்த்தால் வாழ்க்கை நல்லாய் இருக்கும் எண்டு சொல்லுறீயள் :D

அடிக்கடி வெள்ளி பார்ப்பதைப் பழக்கப் படுத்திக் கொண்டால், அது உங்களை ஒரு முனிவரின் நிலைக்குக் கொண்டு சென்று விடும்!

அந்த நிலைக்கு நீங்கள் வந்து விட்டால், வாழ்கையின் 'நிலையாமை' புரிந்து விடும், புத்தன்!

அதன் பின்பு, நல்லதுக்கும், கெட்டதுக்கும், வித்தியாசமே இல்லை, என்பது புரிந்து விடும்! :icon_idea:

புங்கையூரான் உங்கள் கதை கருவும் அதை சொல்லிய விதமும் மிகவும் அருமை. விறுவிறுப்பாக போகிறது. கதை முடியவிட்டு தான் கருத்தை பதிவம் என்று இருந்தேன் இருந்தாலும் இருப்பு கொள்ள முடியவில்லை. உங்கள் அடுத்த நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

நன்றிகள், பகலவன்.

நான் நினைத்தேன், இது இறுதிப் பாகம் என்று!

நீங்கள், சொன்ன பிறகு தான், கவனித்தேன்! நாங்கள் தமிழர்கள், என்று!

வசந்தமாளிகை, படத்தின் மூலக்கதையில், சிவாஜிகணேசன் சாகின்றார். ஆனால், தமிழ்நாட்டு ரசிகர்களுக்காக, அவர் இறப்பதாகக் காட்டவில்லை! ஏனெனில், ரசிகர்கள், தாங்க மாட்டார்கள். அதனால் தான், முடிவைத் தொங்கு நிலையில் விட்டு விட்டேன்!

உங்கள் பதிவைப் பார்த்தபின்பு, மாமியை என்ன செய்யலாம் என்று கடுமையாகச் சிந்தித்துக் கொண்டு இருக்கிறேன்!

விரைவில், மாமிக்கு ஒரு வழி பண்ணி விடுவோம்! :icon_idea:

பொறுத்த கட்டத்திலை முடிச்சிட்டிங்களே அண்ணா, :unsure:

ஜீவாத் தம்பி, நீங்கள் வயசில் சின்னப் பெடியன் எண்டாலும்,அனுபவத்தில் முதிர்ந்தவர் போல இருக்கின்றது! :D

கதை முடிந்ததை, டக்கெண்டு பிடிச்சிட்டீங்கள்!

மாமியுடன், மீண்டும் விரைவில் சந்திக்கிறேன்! :icon_idea:

ம்ம்ம்

தொடருங்கோ

விசுகர், இது ஒரு உண்மை கலந்த கதை!

எனக்குத் தெரிய சிட்னியில் மட்டும், ஐந்து குடும்பங்கள், மாமா அல்லது மாமியின், தலையீட்டால், உடைந்து போய் இருக்கின்றன!

குழந்தைகள், பேரனின் பெயரைத் தந்தையின் பெயருள்ள இடத்தில் போடுகின்றார்கள்!

இதில், தனியாக வாழும் தாய் (single Mother) மாருக்குக் கொடுக்கப் படும், மேலதிகப் பணம் தான் முக்கிய பங்கு வகிக்கின்றது!

அதை எழுதினால், நீங்களும் நானும், எமது யாழ்ப்பாணக் கலாச்சாரத்தைப் பற்றிப் பெருமைப் படுவதற்கு, எதுவுமே மிஞ்சாது! :o

நன்றாக எழுதியிருக்கிறீர்கள் புன்கையூரான்.

பொறுத்த கட்டத்தில் தொடரும் போட்டு வாசகர்களை காக்க வைக்கிறீர்கள்- தேர்ந்த ஒரு கதாசிரியரைப் போலவே.

நன்றிகள், ஈஸ்!

நான், 'தொடரும்' போட நினைக்கவில்லை!

உங்கள் கருத்துக்களைப் பார்த்த பின்பு, தொடரலாம் என்று தான் நினைக்கின்றேன்! :icon_idea:

[size=4]புங்கையூரான் உங்கள் கதை அருமை.[/size]

நன்றிகள், லியோ!

தங்கள் கருத்துக்கள், எமது சமூகத்தில், நான் கண்டவைகளை, வெளியில் கொண்டு வர ஊக்கமளிக்கும்!

கதை நன்றாக போகின்றது புங்கையூரான் அண்ணா. பொறுத்தகட்டத்தில் தொடரும் போடுவதை யாழில் தடை செய்யவேண்டும் :lol:

நன்றிகள், தமிழினி!

நான் எங்கே 'தொடரும்' போட்டேன், என்னைத் தடை செய்வதற்கு? :D

சென்ற கிழமையிலிருந்து இந்தக் கதை அடிக்கடி 'யாழ்' திரையரங்கில் ஓடிக் கொண்டிருந்தது. கதை முடிந்ததும் இன்றுதான் முழுதாக வாசிக்க முடிந்தது.

புலம்பெயர்ந்த பல அன்றாடம் காய்ச்சிகளின் வாழ்க்கையை நன்றாக எழுதியுள்ளீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சொன்னால் யாரும் கோவிக்க கூடாது...எழுதிறவர்கள் தொடர்ச்சியாக எழுதி முடிக்காமல் அடிக்கடி தொடரும் வார்த்தையை போட்டுட்டு எஸ்கேப் ஆகிறதால தொடர்கள் பக்கம் வரவே விருப்பம் இல்லாமல் வந்துட்டு..யாரையும் குறை சொல்ல வரல்ல.

இதுக்கெல்லாம் கோவிக்கிறதா, யாயினி?

அது சரி, படம் முடிஞ்ச பிறகும், தியேட்டருக்குள்ள குந்திக் கொண்டிருக்கிற ஆக்களை, என்ன செய்யலாம்? :D

சூப்பர் தொடருங்கோ புங்கை...மாமியை திரும்ப ஊருக்கு பைக் பண்ணியாச்சோ :lol:

நன்றிகள், ரதி!

மாமிக்குத் தனிய ஒரு வீடெடுத்து, அவவைத் தனிய விட்டாச்சு! :D

காலில் குத்திய முள்ளை வீசி எறிந்தால் சரிதானே. :D

நன்றிகள், நுணா!

முள்ளு என்றால், வீசி எறிந்து விடலாம்!

ஆனால், அது பிரச்சனைகளுக்குத் தீர்வாகாது! :o

அடடா.. :D இப்பிடி ஒரு கதையை வாசிச்சு கனகாலம்.. :rolleyes: புங்கை.. உங்களுக்கு எழுத்தாளர் விருது எல்லாம் கம்மி.. :wub: அடிக்கடி படையுங்கோ.. சஸ்பென்ஸ் தாங்கலை.. :D

இது கதையில்லை, இசை!

ஒரு உண்மைச் சம்பவத்திற்குக், கொஞ்சம் இனிப்புத் தடவி இருக்கு!

தங்கள் ஊக்குவிப்புக்கு, மீண்டும் நன்றிகள், இசை!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சை பாருங்கோ, இந்த நாட்டில எவ்வளவோ, நல்லதுகள் இருக்கு! அதெல்லாத்தையும் விட்டிட்டு, உங்களுக்குத் தேவையானதை மட்டும் இறுக்கிப் பிடிச்சுக் கொள்ளுங்கோ! அதே மாதிரி ஊரில உள்ளதுகள்ளையும் உங்களுக்கு வசதியானதெல்லாம், வச்சுக் கொண்டு மிச்சமெல்லாத்தையும் விட்டிருங்கோ!

இந்தப் " பன்னாடைக் " குணாம்சமும் ஒரு காரணம் டமிழ்ஸ்சின் இழிநிலைக்கு . ஒரு பெரிய விடயத்தை தேன்தடவிச் சொன்ன போக்கு உண்மையிலேயே பாராட்டப்படவேண்டியதொன்று . கதையின் முடிவையும் தொங்குபொறியில் வைத்ததும் நல்லதே . இப்படியான விடையங்களுக்கு எமது கருத்தை வாசகரில் திணிக்காது அவர்களையே நீதிபதிகளாக்குவது நல்லது . தொடர்ந்து படையுங்கள் அதுவும் யாழுக்கு நல்லது :) :) :D :D .

நன்றிகள், கோமகன்!

உங்களுக்குத் தான் ஓரளவுக்கு, முடிவு ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது போலும்! :D

அட மனுசிக்காறி ஒண்டும் தெரியாத பாப்பா! மாமிக்காறிதான் பெத்த மகளின் குடும்பத்தையே பிரிக்கிற விகாரமான மனம் படைச்சவா!

எனக்கெண்டால் சந்திரன் மாதிரி ஆக்கள் ஒரு வல்லமையில்லாத சோணையள் மாதிரித்தான் கிடக்கு!

நானும் அதைத் தான் நினைக்கிறேன், கிருபன்!

சந்திரன் ஒருவேளை, 'கண்ணுக்குப் பதில் கண்" (Eye for an eye) என்பதில் நம்பிக்கை இல்லாதவராய் இருக்கலாம்!

இறுதியில் இருவரும் குருடாவதே முடிவாகும் என்பதால், கொஞ்சம் வேறு ஒரு வழியைத் தேர்ந்தெடுக்க நினைத்திருக்கலாம்!

கருத்துக்கு நன்றிகள், கிருபன்! :D

மாமியாரை பார்சல் பண்ணிட்டானா சந்திரன்??

நன்றிகள், சாத்திரி!

மாமியாரைப் பாசல், பண்ணிப் போட்டு, மனுசியை என்ன செய்வது என்று யோசிக்கிறானாம்!

ஆலோசனைக்கு உங்கட நம்பரைக் கொடுத்திருக்கிறேன்! :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.